பசுமைக் கூடாரத்தில் பயிர் சாகுபடி |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்திய பொரளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்வது வேளாண்மை கடந்த ஐம்பது ஆண்டுகளை உற்ற நோக்கினோமோயானால் இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்கு வேளாண்மைத் தொழில் முக்கிய பங்காற்றியுள்ளது. உலகில் ஒரு பொருளாதார சக்தியாக இந்தியா உருவாக வேண்டுமெனில், தற்போது உலகின் பொருளாதார சக்திகளாக கணிக்கப்படுகின்ற நாடுகளின் வேளாண் உற்பத்தியோடு நமது உற்பத்தியும் இணையானதாக இருக்கவேண்டும். முக்கிய வேளாண் முறைகளின் உற்பத்தி, லாபம், நிலையான தன்மை ஆகியவற்றைத் தொடர்ந்து உயர்த்துவதற்கு ஒரு புதிய திறன் வாய்ந்த தொழில்நுட்பம் நமக்குத்தேவை. அத்தகைய தொழில்நுட்பங்களுள் ஒன்று தான் பசுமைக்கூடார தொழில்நுட்பமாகும். இரு நூற்றாண்டுகள் பழமையானதாக இருந்தாலும் இந்தியாவிற்கு புதியதுதான். பசுமைக்கூடார தொழில்நுட்பம் ஏறக்குறைய 95 சதவிகித பயிர்கள் உணவுப் பயிர்களாகட்டும், பணப்பயிர்களாகட்டும் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. இயற்கையான சுற்றுப்புறச்சூழலில் பயிர்கள் வளர்வதையே மனிதன் தொன்று தொட்டு கற்றுக் கொண்டுள்ளார்கள். சிலவகையான பயிர்களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. அப்பயிர்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கினோமேயானால் அனைத்து இடங்களிலும் அனைத்து வகைப் பயிர்களையும் சிறப்பாக விளைவிக்க இயலும். இவ்வாறு தகுந்த சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு பசுமைக்கூடாரம் பயன்படுத்தப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் அதிகப்படியாக குளிரிலிருந்து தொடர்ச்சியாக பாதுகாப்பை வழங்கி உயர் மதிப்பு பயிர்களை வளர்ப்பதற்கான பசுமைக்கூடார தொழில்நுட்பம் என்பது செடிகளுக்கு சாதகமாக சுற்றுப்புறச்சூழலை வழங்குவது எனவே பசுமைக்கூடார தொழில்நுட்பம் என்பது செடிகளுக்கு சாதகமாக சுற்றுப்புறச்சூழலை வழங்குவது ஆகும். மேலும் பாதகமாக தட்பவெப்பநிலைகளான காற்று, குளிர், மழை அதிகப்படியான சூரிய ஒளி, அதிக வெப்பநிலை மற்றும் பூச்சி நோய்களிலிருந்து செடிகளை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பொருத்தமான சுற்றுச்சூழலும் வளர்ப்பதற்கு ஏற்றாற்போல் பயிரிட பசுமைக்கூடாரம் பயன்படுகிறது. பசுமைக்கூடாரம் என்பது ஒளி ஊடுருவக்கூடிய அல்லது பிளாஸ்டிக் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். பசுமைக்கூடாரத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான தட்பவெப்பநிலை கரியமிலவாயு உட்புறத்திலேயே தங்கி விடுவதால் பகல் நேரத்தில் தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமில வாயு கிடைக்கின்றது. அதனால் ஐந்து முதல் பத்து மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகின்றது. ஒளிச்சேர்க்கை அதிகமாவதால் விளைச்சல் அதிகமாகவும், தரமாகவும் உள்ளது. அதைத் தவிர மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உட்புறத்திலேயே தங்கிவிடுவதால் ஈரப்பதம் அதிகமாகின்றது. அதனால் குறைந்த நீர்ப்பாசனமே தேவைப்படுகிறது. பசுமைக்கூடாரத்தின் மற்ற பயன்கள் - நன்மைகள்
இந்தியாவில் நிலைப்பாடு உலகின் பல பகதிகளில் நூற்றாண்டுகாலமாக பசுமைக்கூடாரங்கள் இருந்தாலும் இந்தியாவில் 1980 ஆம் ஆண்டுதான் பசுமைக்கூடார தொழில்நுட்பம் துவங்கப்பட்டு முக்கியமாக ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சமீப ஆண்டுகளாக உலக சந்தை உலகமயமாக்கல் மற்றும் வேளாண் விலை பொருட்கள் ஏற்றுமதிக்கு தரப்பட்டுள்ள ஏராளமான முக்கியத்துவம், ஊக்கம் ஆகியவற்றால் பசுமைக்கூடார தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது. தோட்டக்கலையில் நெகிழி ஆகியவற்றால் பசுமைக்கூடார தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது. தோட்டக்கலையில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டிற்கான தேசிய கமிட்டி (என்.சி.பி.ஏ 1982) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசுமைக்கூடார தொழில்நுட்ப பயிற்சியை பரிந்துரைத்துள்ளது. வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில்நுட்பத்துடன் பெரிய நிறுவனங்கள் முதலில் கொய்மலர்க்ள உற்பத்தியில் ஈடுபட்டன. ஆனால், தற்போது நம் இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டு பொருட்களைக் கொண்டு பசுமையகங்கள் அமைப்பதற்குரிய பசுமையகக் கட்டமைப்பு மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்களை கண்டறிந்துள்ளனர். எனவே உள்ளூர் சூழ்நிலைக்கேற்ற பயிர் வகைகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட சிறு உழவர்களும் பன்மடங்கு இலாபம் ஈட்டவும் ஏற்றுமதி தரத்துடன் மலர்கள் உற்பத்தி செய்யவும் பசுமையகங்களை ஏற்படுத்தலாம். பசுமைக்கூடாரத்தின் வகைகள் குறு நுட்ப பசுமைக்கூடாரம் காலநிலைக் காரணிகள் இவ்வகைக் கூடாரங்களில் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்காது. இவை மூங்கில் கட்டைகள் ஆகியவற்றுடன், மொத்தமான பாலீத்தீனை உபயோகித்து கட்டப்பட்டவை. வெளிச்சந்மை கட்டுப்படுத்த நிழல் வகைகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த நைலான் வலைகள் ஆகியவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். வெயில் காலங்களில், பக்கச் சுவர்களை திறந்து வைப்பதால் வெப்பநிலையைக் குறைக்கலாம். இவை குளிர்ப் பிரதேசங்களுக்கு ஏற்ற பசுமைக்கூடாரங்கள் ஆகும். மித நுட்ப பசுமைக்கூடாரம் நமது கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இயந்திரங்களைக் கொண்ட இவ்வகையான பசுமைக்கூடாரங்கள் இரும்புக் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கூமாரங்கள் வேகமான காற்றை எதிர்த்து நிற்கக்கூடியது. காற்று வெளியேற்று விசிறிகள், பனிப்புகை குழாய்கள். குளிர்விக்கும் பட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு தேவையான அளவு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை பராமரிக்க இயலும். பயிர் பருவம் முழுவதும் இந்த சூழ்நிலையை மேற்கொள்வது அதிக மகசூல் மற்றும் தரமான மலர்களைப் பெற இன்றியமையாதத் தேவையாகும். இதை பராமரிக்கத் தவறினால் மலர்கள் உற்பத்தி மற்றும் மரத்தில் ஏற்படும் கடும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும், இந்தப் பராமரிப்புக்கான உயர்நுட்ப பசுமைக்கூடாரங்களை ஒப்பிடும் பொழுது மித நுட்ப கூடாரங்களில் மனித சக்தியின் தேவை அதிகமாகும். வறண்ட வானிலை உள்ள பகுதிகளுக்கு இவ்வகையான பசுமைக்கூடாரங்கள் ஏற்றவையாகும். உயர்நுட்ப பசுமைக்கூடாரம் முழுமையான தானியங்கி காலநிலைக் கட்டுப்பாடு இயந்திரங்களைக் கொண்டது. இதன் முன் செலவு அதிகமாக இருந்தாலும், அதிக மற்றும் தரமான உற்பத்தியினால் அச்செலவை சமன் செய்திடலாம். மித நுட்ப பசுமைக்கூடாரத்தில் உள்ள குறைபாடுகளை, இந்த வகைக்கூடாரங்களில் எதிர்கொள்ளும் அவசியம் ஏற்படாது. இங்கு பசுமைக்கூடாரத்திலுள்ள வெப்பநிலை, ஈர்ப்பதம், வெளிச்சம் போன்ற காரணிகளின் அளவை ஓர் உணர் கருவி உள்வாங்கிக் கொள்ளும் அவற்றை சரிபார்த்து, தேவையான மாற்றங்களுக்கான செய்தி, தானியங்கி இயந்திரத்தில் உருவாகும் இதற்கேற்ப அந்தக் காரணிகளின் அளவுகள் மாற்றியமைக்கப்படும். சரியான இடத்தில் இந்த உணர் கருவிளை அமைப்பதே. சரியான காலநிலைக் காரணிகளை பராமரிக்க அடிப்படை ஆகும். சமமற்ற கூரைக் கொண்ட பசுமைக்கூடாரம் மலைச் சரிவுகளில் கட்டப்படும் இவ்வகையான பசுமைக்கூடாரங்கள் மலைச்சரிவுக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்படுகின்றன. தானியங்கி காலநிலைக் கட்டுப்பாடுகள் இவற்றில் பயன்படுத்தப்படுவதில்லை. க்வான்செட் பசுமைக்கூடாரம் க்வான்செட் பசுமைக்கூடாரம் குழாய் வளைவுகள் மீது நீண்ட பாலிஎத்திலீன் தாள்களைப் போத்தி ஏற்படுத்தப்படுகின்றன. தனி வடிவமாக அல்லது ஒரே மாதிரியான தொடர் வடிவங்களாகவும் இடத்திற்கேற்ப வீடுகளுக்கு நடுவிலுள்ள இடைவெளிகளை உபயோகிக்க இவ்வகை உதவுகிறது. பிளாஸ்டிக் பசுமைக்கூடாரம் வளையக்கூடிய ப்ளாஸ்டிக் தாள்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. குறைந்த முன் செலவு மற்றும் வெப்பப்படுத்தும் செலவு ஆகிய நன்மைகள் கொண்டது. புறு ஊதாக் கதிர்கள் கொண்டு மேம்படுத்தப்பட்ட தாள்கள் நான்கு வருடங்கள் வரை உபயோகிக்கலாம். ஜி.ஐ பைப்பினால் ஆன பசுமைக்கூடாரத்திற்குத் தேவையான பொருட்களில் அளவு (100 மீ 2)
தோராயமாக ஒரு சதுர ஆகும் செலவு 550 முதலில் 600 ரூபாய் விலை உயர்ந்த பசுமைக்கூடார விலை பகுப்பாய்வு
தோராயமாக விலையுயர்ந்த பசுமைக்கூடார அமைப்பின் விலை = ரூ. 2000 ஆகும். எளிய குழாய் அமைப்பான பசுமைக்கூடார நிலை பகுப்பாய்வு
ஒரு சதுரமீட்டருக்கு தோரயமாக ஆகும் செலவு ரூ. 175.00
ஒரு சதுர மீட்டருக்கு நடுத்தரமான பசுமைக்கூடாரம் அமைக்க - ரூ. 525.00
ஆகும் செலவு
பசுமைக்கூடார கூரைப் பொருட்கள்
நடுத்தர பசுமைக்கூடார கட்டுமானத்திற்கான தேவையானப் பொருள்களை பற்றிய கணக்கீடு
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல்பக்கம் | திட்டங்கள்| மானியம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | வாடகை இயந்திரங்கள் | பயிற்சி | தயாரிப்பாளர்கள்/ விற்பனையாளர்கள் | காட்சியகம் | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||