Agriculture Engineering
| | | | | | | | | |
நீர் வடிப்பகுதி அபிவிருத்தி மற்றும் நீர் அறுவடை அமைப்புகள்


மண்ணில் நீரைத் தக்க வைக்கும் முறைகள்

ஈரம் காக்கும் தொழில்நுட்பங்கள்
குறு நீர்பிடிப்புகள்

செயல்பாடு

  • இவை நிலத்தில் ஈரத்தன்மையை பாதுகாப்பதுடன் மண் அரிமாத்தையும் தடுக்கிறது.
  • சம நிலப்பகுதியில் 1 மீ விட்டமுள்ள வட்டப் பாத்திகள் மழை அளவு மற்றும் நிலத்தில் ஊடுருவுதலைப் பொறுத்து அமைக்கப்படுகிறது.
  • சரிவுப்பகுதிகளில் வி வடிவ வரப்புகள் 5 மீ - 5  என்றஅளவில் அமைத்து மரங்கள் அதன் நடுவில் நடப்படுகிறது. வரப்புகளின் உயரம் மழை அளவு, சரிவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
  • சரிவுக்கு குறுக்கே அரை வட்ட வடிவ வரப்புகள் 2 மீ விட்டத்தில் 15.20 செ.மீ உயரத்தில் அமைக்கப்படுகிறது.
  • ஒரு எக்டருக்கு ரூ. 2000 - 25000 வரை செலவாகும்.

ஆழச்சால் அகலப்பாத்தி

Moisture

செயல்பாடு : மழைக்காலங்களில் மண் அரிமானத்தைத் தடுத்து மண்ணின் ஈரத்தைக் காக்கிறது.
அமைக்கும் முறை : நிலத்தை சமன் செய்து பின்னர் ஆழச்சால் அகலப்பாத்தி அமைக்கப்படுகிறது.
செலவு : ஒரு எக்டருக்கு ரூ. 1000 வரை செலவாகும்.
பயன்கள் : வறட்சிப் பகுதிகளில் மண் ஈரத்தைப் பாதுகாக்கிறது.
  • மண் அரிமானத்தைத் தடுக்கிறது.
  • அதிகப்படியான மழைக்காலங்களில் நீர்வடி வாய்க்காலாக செயல்படுகிறது.
  • பயிரின் விளைச்சல் மானாவாரி நிலங்களில் கூடுகிறது.
  • சம உயர வரப்பு

    செயல்பாடு : சரிவின் குறுக்கோ வரப்பு கட்டப்படுவதால் சரிவில் ஓடும் மழை நீரின் வேகம் குறைக்கப்படுகிறது.
    குறிப்புகள் : இரு சரிவில் ஓடும் மழைநீரின் வேகத்தைக் குறைக்கிறது. சரிவின் குறுக்கே அமைக்கப்படும் கரை மூடியதாகவோ, திறந்ததாகவோ இருக்கும்.
    பயன்கள் : இதனை சேத சரிவுள்ள நிலங்கள் வரைக்கும் அமைக்கலாம்.
  • நிலங்களில் நீரைத் தக்க வைக்க உதவுகிறது.
  • சம உயர வரப்புகளின் குறுக்கு அளவுகள்

    மண்ணின் ஆழம் (மீ) வரப்பின் அடி அகலம் (மீ) மேல் அகலம் (மீ) உயரம் (மீ) பக்க சரிவு (மீ) குறுக்கு பரப்பளவு (ச.மீ)
    குறைந்த ஆழம் கொண்ட மண் 7.5 - 22.5 செ.மீ 2.67 0.38 0.75 1.5 1.14
    22.5 - 45 செ.மீ 3.12 0.60 0.85 1.5 1.56
    ஆழமான மண் (45 செ.மீட்டருக்கு மேல்) 4.25 0.60 0.90 2 2.18