வங்கி மற்றும் கடன் :: நில மேம்பாட்டு வங்கி
நில மேம்பாட்டு வங்கி (LDB)
நீண்ட தவணை கடன்கள் வழங்கும் சிறப்பு வங்கிகள் நில மேம்பாட்டு வங்கிகள் எனப்படும். இதன் வரலாறு மிகவும் பழமையானது. முதன் முதலில் பஞ்சாப் மாநிலம் ஜாங் என்ற ஊரில் 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இவ்வங்கியின் உண்மையான உத்வேகம் “நில அடமானம் வங்கிகள் விதி 1930 ஆம் ஆண்டு அமல் செய்த பின்பு தான் ஆரம்பமானது (எல்.டி.பி உண்மையாக நில அடமான வங்கிகள் என்று அழைப்பர். இந்த விதியை அமல் செய்தபின், எல்.டி.பி வங்கிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது.

விவசாய கடன் மறு ஆய்வுக்குழு (ACRC) 1989 ஆம் ஆண்டு எல்.டி.பி முக்கியப் பங்கினை எடுத்துரைத்து, வேளாண்மை வளர்ச்சி மற்றும் இதர துறைகளான தரிசு நிலம், பண்ணை சாரா துறை வளர்ச்சி ஆகியவற்றை அடைய பரிந்துரை செய்தது. வங்கி மேலும் நாட்களில், அதன் பணிகளை விரிவுபடுத்திய அதே சமயம் நபார்டு வங்கி 1982 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாடு மற்றும் தரிசு நிலங்கள் ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்க ஆவண செய்துள்ளது. 80 - களின் இறுதியிலும், 90 - களின் தொடக்கத்திலும், எல்.டி.பி வங்கி நீண்ட தவணை கடன்களை கிராம மேம்பாட்டு செயல்களான சிறு மற்றும் குடிசைத் தொழில்கள், கிராம கைவினைஞர்கள் ஆகியவற்றிற்கு வழங்கியது. கிராம வீட்டுத் திட்டங்களுக்கு தேசிய வீட்டு வசதி  வாரியத்தின் மூலம் மறுநிதியளிப்புகள் ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகியவற்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அகன்ற பங்குகளில் தற்போது எல்.டி.பி வங்கிகள் மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் (SCARDB) என்று வழங்கப்படுகிறது. ஆதாரம்
http://www.agriculture.tn.nic.in/IS_District.asp?Ino=29&Inm=Land%20Development%20Bank 
http://www.nafcard.org/functions.htm
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016