|
நடவு வயல் தயாரித்தல்
|
தேவையான மண் பாங்கு |
|
- அதிக நீர் கொள்ளும் திறன் மற்றும் அதிக அளவிலான களிமண் வளம் பெற்ற மண் வகையே நெற்பயிர் சாகுபடிக்கு ஏற்றது. கரிமப்பொருள் நிறைந்த மண்ணாகவும் இருத்தல் சிறந்தது.
- களி மண் அல்லது களிகலப்பு மண் மிகச் சிறந்தது.
- இவ்வகையான மண்ணே நீர் கொள்ளும் திறன் பெற்று நிலையான பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- நெற்பயிர் பகுதிநீர்வாழ் தாவரமாய் இருப்பினும் நீர் மூழ்கிய நிலையிலும் நன்கு வளரும்.
- வேறுபட்ட உற்பத்தித் திறன் கொண்ட நெல்லை எல்லா வகையான மண்ணிலும் பயிரிட்டு பயன் பெறலாம்.
- ஆற்றோர வண்டல் மண், சிகப்பு-மஞ்சள், சிவப்பு வண்டல் மண், மலைமண், குன்று மண், சரிவு மண், செம்பொறை மண், கரையோர வண்டல் மண், சிகப்பு மற்றும் கருப்பு மண் கலவை, நடுநிலை மற்றும் ஆழம் குறைவான மண் போன்ற முதன்மையான மண் வகைகளில் நன்கு வளரும்.
- மண்ணின் கார அமில அளவு (5.5-6.5) நெற்பயிர் வளர்ச்சிக்கு உகந்தது
|
|
பிரச்சனைக்குரிய மண்ணுக்கு ஏற்ற சிறப்பு தொழிற்நுட்பங்கள்
- பொல பொலப்பான மண்ணுக்கு:
400 கிலோ கல் உருளை வண்டி (அ) கல் நிரப்பிய உருளைப் பெட்டியை வயலில் சரியான ஈரப்பதம் (ஈரப்பதம் 13-18 சதவிகிதம்) இருக்கும்போது எட்டு முறை ஓட்டி மண்ணை நெருக்கமாக ஆக்க வேண்டும். இவ்வாறு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை செய்வதால் சேற்றுழவின் போது சுமை இழுக்கும் விலங்கினமோ, தொழிலாளர்களோ மூழ்காமல் பாதுகாக்க உதவுகின்றது.
- களர் நில மண்ணுக்கு:
களர்நில மண்ணுக்கு காரஅமிலநிலை 8.5 க்கும் அதிகமாக இருக்கும்போது போதுமான ஈரப்பதத்தில் நிலத்தை நன்கு உழ வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட ஜிப்சத்தில் 50 சதவிகிதம் முழுவதையும் சீராக அளிக்க வேண்டும். நிலத்தின் கீழ்வடிகால் அமைத்தல் அவசியம். இவ்வாறு செய்வதால் கரையும் உப்புகள் வெளியே தள்ள உதவுகிறது. பசுந்தாள் உரம் 5 டன்/எக்டர் என்ற அளவில் நடவுக்கு 10-15 நாட்கள் முன்னரே இட வேண்டும். 37.5 கிலோ ஜிங்க்சல்ஃபேட்டை மொத்த எடை 75 கிலோ வரும் வரை மணலுடன் கலந்து சமப்படுத்திய 1 எக்டர் நிலத்தில் சீராகப் பரப்ப வேண்டும். இக்கலவையை மண்ணில் அப்படியே அளிக்கக் கூடாது. களர் நிலமண்ணில் வளரும் நெல்லுக்கு இம்முறை ஏற்றது.
- உவர் மண்ணுக்கு:
மின் கடத்தும் திறன் 4 ds/மீ EC மதிப்பீடுகள் கொண்ட உவர் மண்ணுக்கு, பக்கவாட்டில் முதன்மையான வாய்க்கால் (60 செ.மீ ஆழம் மற்றும் 45 செ.மீ அகலம்) அமைக்க வேண்டும். பசுந்தாள் உரம் 5 டன்/எக்டர் என்ற அளவில் நாற்று நடுவதற்கு 10-15 நாட்கள் முன்னரே அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் ஜிங்க்சல்பேட் 37.5 கிலோ/எக்டருடன் 25 சதவிகிதம் தழைச்சத்தை கலந்து நடவின்போது அளிக்க வேண்டும்.
- அமில மண்ணுக்கு:
அதிக நெல் மகசூல் கிடைக்க, அமில மண்ணுக்கு மண் ஆய்வுக்குப் பின் சுண்ணாம்பு சத்து அளிக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன் 2.5 டன்/எக்டர் என்ற அளவில் ஒவ்வொரு பயிருக்கும் 5 வது பயிர் வரை சுண்ணாம்பு சத்து அளிக்க வேண்டும்.
|
|
மேலே செல்க |
|
நிலம் பண்படுத்துதல்: |
|
முதல்நிலை உழவு:
உழுதல்
உழுதல், நிலத்தை பண்படுத்தலின் முதன்மை செயலாகும். இவ்வாறு உழுவதால் மண்ணை பகுதியாகவோ/முழுமையாகவோ துண்டாக்க, உடைக்க புரட்டிப் போட உதவுகிறது. இதனால் விதைப்பிற்கு ஏற்றநிலமாக மண் மாறுகிறது.
உழுவதன் குறிக்கோள்:
- நல்லநயம் கொண்ட மண் மற்றும் ஆழமான பாத்தி அமைக்க உதவுகிறது.
- மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை உயர்த்துகிறது.
- மண்ணின் காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது.
- களைகள், பூச்சிகள் ,நோய்களை அழிக்கின்றது.
- மண் வளத்தை மேம்படுத்துகிறது
|
|
இரண்டாம்நிலை உழவு
மண் கிளர்வு செய்தல்
மண் கிளர்வு இரண்டாம் நிலை பண்படுத்துதல் செயல். மேலோட்டமான ஆழம் வரை உழுவதால் மண்ணை பொல பொலப்பாகவும், பொடியாகவும் ஆக்குகிறது. மேலும் களைகளை துண்டாக்கி மண்ணோடு கலக்குகிறது.
மண் கிளர்வின் குறிக்கோள்:
- வயலில் உள்ள மண் கட்டிகளை பொடியாக்குகிறது.
- வயலில் உள்ள புல் மற்றும் இதர விதைகளை அழிக்கிறது.
- பயிர் கழிவுகளை துண்டாக்கி வயலின் மேல்பரப்பு மண்ணோடு கலக்கிறது.
- பெரிய மண் கட்டிகளை உடைத்து, மேல்பரப்பை சீராகவும், சமமாகவும் வைக்கிறது.
- மண் கட்டிகளின் ஈரத்தன்மை குறைந்த பின் தான் மண் கிளர்வு செய்ய முடியும்.
சேற்றுழவு:
சேற்றுழவு என்பது மண்ணை நீருடன் நன்கு கலக்கும் அளவு நிலத்தை உழுவது. நாட்டுக் கலப்பை கொண்டு முதல் உழவு முடித்த பின் 5-10 செ.மீ ஆழம் நிலையான நீர் நிற்கும் வயலில் சேற்றுழவு செய்ய வேண்டும். மண் கட்டிகளை உடைத்து , மண்ணை நீருடன் நன்கு கலக்க வைக்கிறது.
சேற்றுழவின் குறிக்கோள்:
- நீர் கசிவு மற்றும் நீர் ஊடுருவுதலை குறைக்கிறது.
- மண் சிதைவுறுதலின் மூலம் களைகளை அழிக்கிறது.
- மண்ணை மென்மையாக ஆக்குவதால் நாற்றுகளை நடுவது எளிதாக இருக்கும்.
- நீரில் கடத்தும் திறன் குறைவதால் நீர் மற்றும் ஊட்டச்சத்து இழப்பு குறைகிறது.
|
|
நிலத்தை சமன்படுத்துதல்:
நிலத்தின் மதிப்பு நிலையான திருத்தம் கொண்டதாக உருவாக்க சமன்படுத்துதல் அவசியம். இருக்கிற நிலமட்ட நிலத்தை சிறப்பான வேளாண் உற்பத்தித்திறன் கொண்ட நிலமாக மாற்றுவதே சமன்படுத்தலின் நோக்கம்.
சமன்படுத்தலின் குறிக்கோள்:
- சிறப்பான நீர்ப்பாசனம் அளிக்க மற்றும் அதிக அளவில் மழைநீரை சேமிக்க உதவுகின்றது .
- மேற்பரப்பு வடிகாலை செம்மைப்படுத்தி, மண் அரிப்பைக் குறைக்கிறது.
- போதுமானளவு நிலஅளவு மற்றும் சிறப்பான எந்திரமயமாக்குதலுக்கு நிலஅமைப்பை மேம்படுத்துகிறது.
- நிறைவான நில சமன்படுத்தலினால் களை மற்றும் நீர் மேலாண்மை சிறப்படைகிறது.
- சிறப்பானபயிர் நிறுவுதல் மற்றும் பயிர்நிறுத்தத்தை உயர்த்தி எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.
|
|
|
மேலே செல்க |
தமிழ்நாட்டின் நடவு வயல் தயாரிப்பு முறை: |
|
நடவு நெல்
- கோடையுழவு செய்வதன் மூலம் வயல்களுக்கு ஆரம்ப உழவுக்கான நீர்த்தேவை குறைகிறது.
- நன்கு உழவு ஆழம் கிடைக்கும் வரை வயலை ஒன்று அல்லது இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
- உழுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பே நிலத்தில் நீர் பாய்ச்சி ஊறவிட வேண்டும். நிலத்தின் மேற்பரப்பு நீரால் நிரம்பியிருக்க வேண்டும்.
- சேற்றுழவின் போது 2.5 செ.மீ ஆழம் வரை நீர் இருக்க வேண்டும்.
- ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் (அ) இயற்கைஉரம் அல்லது 6.25 டன் பசுந்தாள் உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை உழவு செய்யும்போது அளிக்க வேண்டும்.
- பசுந்தாள் உரப்பயிர் விதை 20 கிலோ/எக்டர் என்ற அளவில் விதைத்ததை ,இழுவை இயந்திரம் அல்லது பசுந்தாள் இடும் இயந்திரம் மூலமாக பசுந்தாளை 15 செ.மீ ஆழத்தில் மண்ணில் கலக்கி விடுதல் வேண்டும்.
- முதல் சேற்றுழவு செய்யும்பொழுது முன் பயிர்கட்டையையும் சேற்றோடு சேர்ந்து உழவு செய்ய வேண்டும். இதனால் கட்டைத் தூர்களால் தழைச்சத்து பெயர்ச்சி முடக்கம் ஏற்படுவதை சரிசெய்யலாம். இவ்வுழவின் போது 22 கிலோ யூரியா/எக்டர் அளிக்க வேண்டும். பயிர் நடுவதற்கு 10 நாட்கள் முன்னதாகவே இதனை செய்ய வேண்டும்.
- திருந்தியநெல்சாகுபடிமுறைக்கு 6 அங்குலம் ஆழம் வரும் வரை, நிலத்தை 4-5 முறை நன்கு உழ வேண்டும்.
- திருந்தியநெல்சாகுபடிமுறையில் முறையான நிலசமன்படுத்தல் நீர் மேலாண்மைக்கு முக்கியமானது. வயல் வடிகாலும் முக்கியமானதாகும்.
|
|
நேரடி விதைப்பு நெல்:
சேற்று விதைப்பு நெல்:
- நிலத்தை பலமுறை உழ வேண்டும். இவ்வாறு செய்வதினால் ஈரத்தன்மையை பாதுகாத்தல், களைகளை அழித்தல், மண் கட்டிகளை உடைத்தல் ஆகியவை ஏற்படுகிறது.
- நன்கு நீர் பாய்ச்சிய பிறகு நடவு செய்வதைப் பொறுத்து சேற்றுழவு மேற்கொள்ள வேண்டும். நிலத்தை சமன்படுத்தும் போது அதிக கவனம் கொள்ள வேண்டும்.
- முளைக்கும் போது வயலில் நீர் தேக்கம் திட்டுதிட்டாக இருந்தால் , பயிர் முன் முளைப்பு ஏற்பட்டு, ஒழுங்கற்ற பயிர் நிறுத்தத்தை ஏற்படுத்தும்.
- சிறந்த களை மற்றும் நீர் மேலாண்மைக்கு நிலம் சமன்படுத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஆழமில்லாத வாய்க்கால் (15 செ.மீஅகலம்) 3 மீ இடைவெளியில் வயலைச் சுற்றியும் அமைப்பது, பயிரின்முன் வளர்ச்சி நிலையில், அதிகப்படியான நீரை வடிக்க உதவுகிறது.
|
|
உலர் விதைப்பு நெல்:
- நன்கு ஆழம் கிடைக்கும் வரை புழுதி உழவு செய்வது மழைநீரை எடுத்துக் கொள்ளவும், மண்ணுக்கு ஈரப்பதம் கிடைக்கும் தன்மையும் பெற உதவுகிறது .
- மண் கடினமாகுதல் மற்றும் மண் மேலோடுஉருவாதல் ஆகிய பிரச்சினைகள் மண்ணில் இரு ந்தால் ஜிப்சம் 1 டன்/எக்டர் அளிக்க வேண்டும்.
- சிறந்த களை மற்றும் நீர் மேலாண்மைக்கு நிலம் சமன்படுத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஆழமில்லாத வாய்க்கால் (15 செ.மீஅகலம்) 3 மீ இடைவெளியில் வயலைச் சுற்றியும் அமைப்பது, பயிரின்முன் வளர்ச்சி நிலையில், அதிகப்படியான நீரை வடிக்க உதவுகிறது.
|
|
|
|
மேலே செல்க |
|
கேரளாவில் நடவு வயல் தயாரிக்கும் முறை |
பொதுவான முறை:
- களைகள் மற்றும் வைக்கோலை மண்ணில் கலக்கும் அளவு வயலை நன்கு உழ வேண்டும். வழவழப்பான, சமமான நிலமாக நடவுக்கு ஏற்றதாக உருவாக்க வேண்டும்.
- கரிம உரத்தை தொழு உரம் அல்லது மக்கிய உரம் அல்லது பசுந்தாள் உரமாக 5 டன்/எக்டர்என்ற அளவில் உழவின் போது அளித்து மண்ணோடு கலக்க வேண்டும்.
- மணிச்சத்து உரம், முழு அளவையும் கரிம உரத்தோடு அடி உரமாக அளிக்க வேண்டும்.
|
|
குட்டநாடு:
- இப்பகுதியில் கடல் மட்டத்திற்கு கீழ் நிலங்கள் அமைந்திருப்பதால் நீர் வழியைச் சுற்றியிருக்கும் நெல் வயல்களைப் பாதுகாக்க பலமான வளைய வடிவகரைகளை கவனமாக அமைக்க வேண்டும்.
- வளைய வடிவக்கரை எனப்படும் வெளிச்சுவர் (புரவரம்பு) அமைப்பதினால், சற்று ஆழம் குறைவான நீர் சூழ்ந்த பகுதியிலுள்ள நீரைவடிகட்டி வெளியேற்ற உதவுகிறது.
- களைகளை மண்ணில் நன்கு கலக்குவதற்கு நிலத்தை நன்கு உழ வேண்டும். வழவழப்பான, சமமான நிலமாக நடவு வயல் தயாரிக்க வேண்டும்.
- மெல்லிய நீர் படலம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் முளைத்த விதைகள் மண்ணால் மூடி, நாற்றுகள் வெளி வர முடியாமல் போய் பாதிக்கப்பட்டு விடும்.
|
கோல்:
- பலமான பருவ மழை ஓய்ந்த பின், கோல் பகுதியில் முதல் பயிரின்போது, பெட்டி அல்லது பரா அல்லது மைய விலக்கு எக்கி அல்லது சக்கரம் மூலம் நீரை வெளியேற்ற வேண்டும். பின் நிலத்தை நன்கு உழுது நாற்று நடவு செய்ய வேண்டும்.
- இரண்டாம் பயிருக்கு, நிலத்தை நன்கு தயார்படுத்தி முளைத்த விதைகள் நேரடி விதைப்போ/ நாற்றுகளை நடுவதோ மேற்கொள்ளலாம்.
|
ஓன்னாட்டுக்கரா:
- முன் பருவ மழை தொடங்கிய பின் நிலத்தை நன்கு உழ வேண்டும்.
- நாட்டுக் கலப்பைக்குப் பின் முளைவிடாத விதைகளை ஊன்றுவதே, இப்பகுதியில் செய்யும் பொதுவான முறையாகும்.
|
|
பொக்காலி:
- வயல் நீரின் உவர்த்தன்மை குறைவாக காணப்படும், ஜூன்-முன் நவம்பர் மாதங்கள் நெல் சாகுபடி மேற்கொள்ள ஏற்ற பருவமாகும்.
- நவம்பர் மாத இடையிலிருந்து ஏப்ரல் மாத இடைவரை நீரின் உவர்த்தன்மை அதிகமாக காணப்படும். நெல் அறுவடைக்குப் பிறகு இறால் பண்ணையம் செய்யலாம். இவ்வாறு இறால் வளர்ப்பதினால் அறுவடைக்குப் பின் எஞ்சிய பயிர்களை அவை உட்கொண்டு வளர முடிகிறது.
- ஏப்ரல் மாதத்தில், கரை/வரப்புகளை வலிமைப்படுத்த வேண்டும். கடல் ஓதம் குறைந்த நிலையில் வயல்களில் நீரைவடிகட்ட வேண்டும். மேலும் நீர் மட்ட அளவை முறைப்படுத்த மதகுகளை சரிசெய்ய வேண்டும்.
- இறால் கழிவுப்பொருள் மற்றும் மற்ற கழிவுப்பொருளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துப் பொருளே நெற்பயிருக்கு போதுமானதால் வேறு எந்த செயற்கை உரமோ, இயற்கை உரமோ அளிக்கத் தேவையில்லை.
- அக்டோபர் இறுதியில் அறுவடை மேற்கொள்ள வேண்டும். கதிர்ப் பகுதியை மட்டும் வெட்டி விட்டு, மீதமுள்ள தண்டுப் பகுதியை அப்படியே வயலில் விட்டு விட வேண்டும். எஞ்சியுள்ள தண்டுகள் தண்ணீரில் அழுகி நாளடைவில் (நவம்பர்- டிசம்பர் மாதத்தில்) இறால் வளர்ப்பு மேற்கொள்ளும் போது அதற்கு உணவாகப் பயன்படுகிறது.
|
|
|
மேலே செல்க |
கர்நாடகாவில் நடவு வயல் தயாரிக்கும் முறை: |
|
- நாற்று நடவுக்கு 3 வாரத்திற்கு முன்பே நடவு வயலை இருமுறை நன்கு புழுதியுழவு செய்ய வேண்டும்.
- பின்பு 5-10 செ.மீ நிலையான தேங்கியநீரில் 2 (அ) 3 முறை நன்கு உழவேண்டும். இதுவே சேற்றுழவு எனப்படுகிறது.
- ஒரு எக்டருக்கு 5-7 டன் தொழு உரம் (அ) இயற்கைஉரம் (அ) 1 டன் கோழி உரம் (அ) 10 டன் பசுந்தாள் உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நடவு செய்வதற்கு 3 வாரங்களுக்கு முன்பே உழவு செய்யும்போது அளிக்க வேண்டும்.
- அடியுரமாக பரிந்துரைக்கப்பட்ட செயற்கை உரங்களை கடைசி சேற்றுழவின் போது இட்டு உழவு செய்ய வேண்டும்.
- உரம் அளித்த பின் வயல் நீரை ஒரு வயலிலிருந்து மற்றொன்றிற்கு செல்லாமல் கவனித்து கொள்ள வேண்டும்.
- இதன் பின்பு நடவு செய்வதற்கு முன் முறையாக நிலத்தைச் சமப்படுத்துதல் வேண்டும். உழவின் போது விடுபட்ட வயல் மூலைகளில் மண்வெட்டியைப் பயன்படுத்தி கிளறிவிட வேண்டும்.
- மண்வெட்டியைக் கொண்டு வரப்பின் மேல்பகுதி மற்றும் இரு பக்கங்களிலிருந்தும் 2.5 செ.மீ மண்ணை வெட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால், களைசெடிகளை அதன் விதையோடு சேர்ந்து முழுவதுமாக நீக்க முடிகிறது. மேலும் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூச்சிகளின் முட்டைகளையும் அழிக்க முடிகிறது.
- வரப்புகள் மிகவும் அகன்றதாக இருந்தால் 15 செ.மீ அகலம் மற்றும் 15 செ.மீ உயரம் இருக்குமாறு நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் எலிகள் வரப்புகளில் நுழையாமல் தடுக்கலாம்.
- எலி பொந்துகள் காணப்பட்டால் 0.5 கிராம் (அ) 0.6 கிராம் அலுமினியம் பாஸ்பைடு உருண்டைகளை பொந்துக்குள் போட்டு வெளி ஓட்டையை அடைத்துவிட வேண்டும். மண்வெட்டியின் தட்டையான பகுதியை பயன்படுத்தி கரை/வரப்பின் மேற்பரப்பு மற்றும் இருபக்கங்களிலும் 2.5 செ.மீ தடிப்பு வரை சேற்றுப் பசையால் பூச்சு செய்ய வேண்டும்.
- கரைப்பூச்சு செய்வதால் களைகள் வளர்ச்சி குறைந்து, பூச்சிகள் உள்ளே நுழையாமலும் பாதுகாக்கிறது.
|
|
|
மேலே செல்க |
|