Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

பச்சைப்புல் ஒரு சிறந்த வைட்டமின் ஏ சத்து நிறைந்த தீவனமாகும். இது கரோட்டினாக உள்ளது. 1 கிலோ பசும்புல் 50 மி.கி. வைட்டமின் ஏ சத்தும் 15 +0 20 கி. புரதச்சத்தையும் விலங்குகளுக்கு அளிக்கிறது. தட்டைப்பயிர், பீன்ஸ், சூபாபுல் இலைகளுக்கு 30 +0 40 கிராம் புரதச்சத்தை அளிக்கவல்லது. தாவர உண்ணிகள் பசுந்தீவனத்திலிருந்து கார்போஹைட்ரேட்(சக்தி), புரதச்சத்து(உடல் கட்டமைப்புப்பொருள்) மற்றும் வைட்டமின்கள்(கரோட்டின்) அவைகள் உடல் சீராக இயங்குவதற்கு அவசியமானதாகும். பருவகாலத்தைப்பொறுத்து பசுந்தீவனங்களின் இருப்பு மற்றும் துணைப்பொருட்களைப்பொறுத்து பசுந்தீவனத்தை சேமித்து வருடம் முழுவதும் அளிக்கலாம். பருவ காலங்களில் அதிகப்படியான தீவனத்தைப்பாதுகாத்து வருடம் முழுவதும் அளிக்கலாம்.

இரண்டு வகையான தீவன சேமிப்பு மற்றும் பாதுகாத்தல் முறைகளை கடை பிடிக்கலாம். உலர் தீவனம் மற்றும் பசுந்தீவன தயாரிப்பு ஒவ்வொரு முறையும் அதற்குரிய நன்மைகள் மற்றும் தீமைகளைக்கொண்டுள்ளது. தரமான தீவனத்திற்கு பசுந்தீவன முறை உகந்ததாகும்.

பசுந்தீவன தயாரிப்பு முறைகள் உலர் தீவனம் தயாரிக்கும் முறைகள்
ஊறுகாய்ப்புல் உலர் தீவனம்
பசுந்தீவன தயாரிப்பிற்கு உகந்த பயிர்கள் மற்றும் அறுவடை தருணம் உலர் தீவனம் தயாரிக்கும் முறைகள்
ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறைகள் இயந்திர முறைகள்
உயிர்வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் நிகழ்வுகள் தீவன மதிப்பு இழப்புகள்
ஊட்டச்சத்து தரம் முன்னேற்றம்    
சைலோ குழி அளவு மற்றும் திறன்    
பசுந்தீவனத்தின் சிறப்பியல்புகள்    

ஆதாரம் :

தீவனபயிர்கள் துறை ,
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ,
கோயம்புத்தூர்-3.

 
Fodder Cholam