நன்கு தயார் செய்யப்பட்ட நாற்றங்கால் பாத்திகளில், மே-ஜுன் மாதங்களில், நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாற்றுகள் 3-4 வாரங்களில், நடவிற்கு தயார் ஆகிவிடுகிறது.
|
|
|
|
|
பயிருக்கான உயிர் உர ஊடகத்தை @ 25 கிராம்/கிலோ விதை என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
நல்ல விதை நுன்ணுயிரேற்றலுக்கு, ஒட்டும் திரவம் தேவை. 25 கிராம் வெல்லம் அல்லது சக்கரையை 250 மில்லி தண்ணீரில் கலந்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இந்த கரைசலை குளிர வைக்கவும்.
தயார் செய்யப்பட்ட ஒட்டும் திரவத்தை விதையுடன் நன்கு பூசவும். பிறகு, நுண்ணுயிர் ஊடகம் படியுமாறு நன்றாக கலக்கவும்.
நுண்ணுயிர் ஏற்றப்பட்ட விதைகளை கட்டியாகாமல் இருக்கும் நிழலில் உலர்த்தவும்.
நுண்ணுயிர் ஏற்றப்பட்ட விதைகளை விதைக்கவும்.
|
|
|
ஒவ்வொரு நாற்றங்கால் பகுதிக்கும், ஒரு உள்வாயில் அமைக்கவும். உள்வாயில் மூலம் தண்ணீர் விட்டு வாய்க்காலைச் சுற்றி தண்ணீர் விடவும். மேட்டுப் பாத்திகள் ஈரமடையும் வரை, வாய்க்காலில் தண்ணீர் விட்டு பின் நிறுத்திவிடவும். மண்ணின் வகையைப் பொருத்து, நீர் பாசன இடைவெளி வேறுபடும்.
பாசன எண்ணிக்கை |
செம்மண் |
கடின மண் |
---|---|---|
முதல் முறை |
விதைத்தவுடன் |
விதைத்தவுடன் |
இரண்டாவது |
விதைத்த பின் 3 ஆம் நாள் |
விதைத்த பின் 4 ஆம் நாள் |
மூன்றாவது |
விதைத்த பின் 7 வது நாள் |
விதைத்த பின் 9 வது நாள் |
நான்காவது |
விதைத்த பின் 12 வது நாள் |
விதைத்த பின் 16 வது நாள் |
ஐந்தாவது |
விதைத்த பின் 17 வது நாள் |
----- |
|
புழு பொதுவாக நாற்றங்காலில் உண்கிறது. புழு, பகலில் மண்ணில் மறைந்து கொண்டு, இரவில் இலைகளை உண்ணும். இளம் புழுக்கள், நாற்றுக்களின் அடிப்பாகத்தை வெட்டும். இறுதியாக செடி முழுவதையும் உண்டுவிடும். எண்டோசல்பான் 35 EC @ 0.75 லிட்டர்/எக்டர் (அ) கார்பரில் 50 WP 2.5 கிலோ/எக்டர் (அ) குளோர்பைரிபாஸ் 20 EC 2 லிட்டர்/எக்டர் (அ) பேசலோன் 35 EC @ 1.25 லிட்டர்/எக்டர் தெளித்து பூச்சியைக் கட்டுப்படுத்தவும். களை மற்றும் எஞ்சிய பயிர் கழிவுகளை அகற்றவும். கோதுமைத் தவிடு 1 கிலோ + மோனோகுரோட்டோபாஸ் (10 மில்லி) 100 கிராம் வெல்லம் ஈரப்படுத்த தண்ணீர் கலந்து நச்சுப் பொறி வைக்கவும். |
வெட்டுக்கிளி பல தாவர உண்ணும் பூச்சியாகும். இது கேழ்வரகின் இளம் இலை மற்றும் தண்டுகளை உண்கிறது. இளம் குஞ்சுகளும், முதிர் பூச்சிகளும் இலை உண்டு, இலைகளின் ஓரத்தில் உண்ட குறிகளை ஏற்படுத்தும். கைவினை முறைகளான, உழுதல், சுத்தமாக வைத்தல், கவர்ச்சி பயிரிடுதல், முன் விதைப்பு, முன் அறுவடை போன்றவற்றை பின்பற்றி நீண்ட கால அளவில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். எண்டோசல்பான் 35 EC 400 மில்லி/லிட்டர் (அ) கார்பரில் WP 400 கிராம்/லிட்டர் தண்ணீர் தெளிக்கவும். |
முளைத்த இரண்டாம் வாரத்தில் இருந்து குலைநோய் தாக்கம் நாற்றங்காலில் தோன்றும். துவக்க நிலையில், இலைகளில், நீள் உருண்டை வடிவப்புள்ளிகள், மஞ்சள் விளிம்புகளுடன் சாம்பல் நிற மைத்துடன் காணப்படும். பின்னர் புள்ளி சாம்பல் வெள்ளை நிறத்தில் மாறி, இறுதியாக இளம் இலைகள், நாற்றங்காலிலேயே காய்ந்து விடும். பூஞ்சாணக் கொல்லிகளை, கார்பன்டசீம் 0.1% (அ) எடிபென்பாஸ் (10 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து) போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, 3 சென்ட் நாற்றங்கால் பரப்பை கவரக்கூடிய, அதிக அளவு தெளிப்பான் பயன்படுத்தி, விதைத்த 10-12 நாட்களுக்கு பின் தெளிக்கவும். கார்பன்டசீம் 1 கிராம்/ 1 கிலோ விதை உபயோகப்படுத்தி விதை நேர்த்தி செய்யவும். சூடோமோனாஸ் (2 கிராம்/லிட்டர் தண்ணீர்) உயிர் பூஞ்சாணக் கொல்லியை நோய் அறிகுறி கண்டவுடன் தெளிக்கவும். நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட கோ (ஆர்.ஏ) 14, பையூர் (ஆர்,ஏ) -2, ஜி.பி.யு- 28, ஜி.பி.யு- 45, ஜி.பி.யு- 48, எல்-5, இரகங்களை பயிர் செய்யவும். வளமான விதைகளை பயன்படுத்தி குலைநோயை தவிர்க்கவும். |
நோய்க் கிருமி, நாற்றுகளையும், பெரிய செடிகளையும் தாக்குகிறது. முதல் அறிகுறி இளம் இலைகளில், லேசான காப்பி நிற புள்ளிகளாகத் தோன்றி பின்னர் அடர் காப்பி நிறத்திற்கு மாறிவிடும். நாற்றுகள் வளர வளர, இப்புள்ளிகள் நீண்டு 1 செ.மீ நீளம் , 1-2 மி.மீ அகலத்திற்கு மாறி அடர் காப்பி நிறத்திற்கு மாறிவிடும். இவ்வாறு உள்ள புள்ளிகள் இணைந்து இலைகளில் தழும்புகளாகத் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து, நாற்றுகள் செத்துவிடும். மான்கோசெப் 1.2 கிலோ/எக்டர் (அ) டைத்தேன் Z -78 (2கிராம்/லிட்டர் தண்ணீர்) (அ) 1% போர்டோ கலவை (அ) காப்பர் ஆக்சிகுளோரைடு தெளிக்கவும். நோய்வாய்ப்பட்ட செடிகளை கண்டவுடன், பிடுங்கி அழித்துவிட வேண்டும். |
விதைத்த 17-20 ஆம் நாளில் நாற்றுகளை, நடவுக்காக பிடுங்கலாம். இரகம் மற்றும் வயதைப் பொருத்து, நடவு நாற்றுக்களுக்கான வயது நிர்ணயம் செய்யப்படுகிறது. ஈரமான, இலகிய மண்ணில், நாற்றின் வேர்களை கட்டை விரலால் அழுத்தி நடவு செய்யவும். நடவு நாற்றின் வயது பயிரின் வளர்ச்சியையும், மகசூலையும் நிர்ணயிக்கிறது. மிகக் குறைந்த வயதான (அ) அதிக வயதான நாற்றுகளை நடும் போது மகசூல் பாதிக்கிறது. வயதான நாற்றுகள் நடுவதைத் தவிர்க்கவும். |
நடுவதற்கு முன் நாற்றுகளை உயிர் உரங்களுடன் நேர்த்தி செய்து மகசூலை அதிகரிக்கலாம். அதன் செய்முறை.
|
|