விதைத்த 3 முதல் 5 மாதத்தில் இரகம், பருவம் மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து கதிர்கள்முதிர்கின்றன.
கதிர்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் பயிரை அறுவடை செய்யவேண்டும்.
அறுவடை செய்த கதிர்களை குவித்து வைத்து, கதிரடிப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன், ராகி வைக்கோல் கொண்டு மூடவேண்டும்.
உலர்ந்த கதிர்களை குச்சி (அ) கம்பு வைத்து அடித்து, மாடுகளை விட்டு மிதிக்கவிட்டு கல் உருளைகளை ஏற்றி தானியங்களை பிரிக்கவேண்டும். பிரித்த தானியங்களை துாற்றி சுத்தம் செய்யவேண்டும்.
பாசனப்பயிரின் வைக்கோல் பெரிதாக, தடிமனாக இருப்பதால் அதை வெட்டுவதில்லை. அப்படியே மேய விடப்படுகிறது (அ) அடுத்த பயிருக்கு பசுந்தாள் உரமாக இடப்படுகிறது
நெல், மக்காச்சோளம் மற்றும் சோளத்தைவிட ராகியில் அதிகமான புரதம், கொழுப்பு சத்து மற்று தாதுக்கள் உள்ளது.
ராகி மாவு, கேக், புட்டு மற்றும் கஞ்சி செய்யப் பயன்படுகிறது.
ராகி தோசை, உருண்டை, பான்கேக், சேமியா, மால்ட், பிஸ்கட், பீர், அப்பளம், தானியக் கலவை, பிரெட், ரொட்டி ஆகியன ராகியில் தயாரிக்கப்படுகிறது.
|
பழுப்பு நிறத்திற்கு மாறிய அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும்.
உலர்த்தி, கதிரடித்து, துாற்றி, சுத்தமான தானியங்களைப் பெறலாம்.
முதல் அறுவடை செய்த ஏழு நாட்களுக்கு பிறகு அனைத்து கதிர்களையும், பச்சையாக இருப்பவைகளையும் சேரித்துஅறுவடை செய்யவேண்டும்.
கதிர்களை ஒரு நாள் முழுவதும் நிழலில் குவித்து வைத்து தானியங்களை பதப்படுத்த வேண்டும். ஈரப்பதமும், வெப்பமும் அதிகரிப்பதால் தானியம் சீராக பதப்படுத்தப்படுகிறது.
பின் தானியங்களை உலர்த்தி, கதிரடித்து, சுத்தம் செய்து துாற்றி, கோணிப்பையில் சேகரிக்கவேண்டும்.
|
மானாவாரி கேழ்வரகுப் பயிரில், 1.0-1.5 டன் தானியம்/எக்டர் மற்றும் பாசனப்பயிரில் 5.0 டன்/எக்டர் வரையிலும், சராசரி மகசூல் கிடைக்கிறது.
மகசூல் இரகத்தைப் பொருத்தும், நேரடியாக வயது, உயரம், துார்கள் எண்ணிக்கையை பொருத்தும் சார்ந்து இருக்கும்.
வளைந்த கதிர்கிளைகளை விட, நேரான கதிர் அதிக மகசூல் தருகிறது. தீவன மகசூல், குறுகிய கால பயிரில் 3.0-9.0 டன்/எக்டர் ஆகும். நீண்ட நாள் பயிரில், 9.5-10.0 டன்/எக்டர் ஆகும்.
கேழ்வரகு தட்டு, ஒரு நல்ல சத்தான தீவனமாகும். நன்றாக கட்டி வைத்து, சேமித்து வைக்கலாம்.
காரணிகள் | அளவு |
திறன் மிக்க துார்கள் (எண்ணிக்கை) |
2-4.5 |
கதிர் கிளைகள் எண்ணிக்கை |
5.12 |
கதிர் கிளை நீளம் (செ.மீ) |
3-14 செ.மீ |
தானியம்/கதிர் கிளை |
22-81 |
1000 தானிய எடை (கிராம்) |
1.0-4.5 |
விதைத்த 40 மற்றும் 50 ஆம் நாளில், 10 பி.பி.எம் சைடோகைனின் கரைசல் தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.
விதைத்த 40 மற்றும் 50 ஆம் நாளில், 2% யூரியா கரைசலை, இலை வழியாக தெளித்து தானிய மகசூலை அதிகரிக்கலாம்.
1% பொட்டாசியம் குளோரைடு + 1% கால்சியம் குளோரைடு பயன்படுத்தி, விதையை கடினப்படுத்தி, மானாவாரி பயிரில் மகசூலை அதிகரிக்கலாம்.
தனிப்பயிராக கேழ்வரகு சாகுபடி செய்வதைவிட, 4:1 விகிதத்தில் பச்சைப் பயறுடன் ஊடுபயிர் செய்ததில் அதிக வருமானம் கிடைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து 6:1 விகிதம் (ரூ 2239//எக்டர்) மற்றும் 8:1 விகிதத்திலும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.
அசோஸ்பைரில்லத்தை விதை நேர்த்தி (அ) விதைப்பிற்கு பின் சால்களில் இட்டு, தழைச்சத்து உரத்தை சேமித்து, தானிய மகசூலை அதிகரிக்கலாம்.
கேழ்வரகு விதைகளை 5 பிபிஎம் 'CCC இல் (அ) 10% மாட்டு சிறுநீரில் ஊற வைத்து (விதை கடினப்படுத்துதல்), உலர் விதைகளை விட 12-15% அதிக மகசூல் பெறலாம். CCC கெமிக்கலின் விலை ரூ.1, ஆனால் அதனால் கிடைக்க கூடிய தானிய அதிகரிப்பு லாபம் ரூ.150 ஆகும்.
ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஆய்வில், பையூர் 1, கேழ்வரகு, 80 டன்/எக்டர் ஏரி வண்டல் (அ) களிமண் இட்டதில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. மேலும் இதனால் இதனை அடுத்த கொள்ளு பயிருக்கு நல்ல எஞ்சிய பலன் கிடைத்தது. இது தவிர, இதனால் மண்ணின் இயற்கை அங்ககப்பொருள் வளம், அணு மாற்றுத் திறன், மற்றும் வளம் அதிகரிக்கிறது.
ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தில், மானாவாரி கேழ்வரகு சாகுபடிக்கு, முளைத்த பின் களைக் கொல்லிகளான 2.4 D சோடியம் உப்பு (அ) 2.4 D ஈதைல்எஸ்டர் @ 0.5 கிலோ/எக்டர் தெளித்ததில் அதிக மகசூல் கிடைத்துள்ளது.
மானாவாரி பயிரில் 50 கிலோ/எக்டர் தழைச்சத்து உரத்தை, இருமுறை, விதைப்பு மற்றும் நடவு செய்த 20-30 நாட்களில் 20 கிலோ மணிச்சத்தாக ஊட்டமேற்றப்பட்ட தொழு உரமாக இட்டதில், 25-30 கிலோ, மேலுரமாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை அடியுரமாக இட்டதைவிட அதிக மகசூல் கொடுத்துள்ளது.
பருவமழை தாமதமாகும் பொழுது, குறுகிய கால இரகங்களான டிபிமி 2011 (95 நாட்கள்) இரகத்தை சாகுபடி செய்யவும். பருவமழை முறையாக இருக்கும் பொழுது, பையூர் 1 (110 நாட்கள்) இரகத்தை சாகுபடி செய்யவும். இடையில் மழையில்லாமல் போனால், மக்கிய தென்னை நார்க் கழிவு (5 டன்/எக்டர்) இடவும். Êகத்த பலுகு கொண்டு நிலப்போர்வை அமைக்கவும்.
கேழ்வரகு கொள்ளு/காராமணி பயிர் முறைக்கு ஆர்.ஐ.எப் + ஊட்டமேற்றப்பட்ட தொழு உரம் இட்டதில் அதிக மகசூல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
விதைகளை உலர்த்தி, 10 சதவீத ஈரப்பதத்திற்கு கொண்டு வரவேண்டும்
ஒவ்வொரு 100 கிலோ விதைக்கும், 1 கிலோ செயலேற்றப்பட்ட கயோலின் (அ) மாலத்தியான் 5 சதவீத துாள் கலந்து வைக்கவேண்டும். சேமிப்பிற்கு கோணிப்பை (அ) பாலித்தின் கோனிப்பைகளை பயன்படுத்தவேண்டும். (குறிப்பு: திடமான, நோய் இல்லாத முதல் அறுவடை கதிர்களை சேகரித்து, உலர்த்தி, கையால் கசக்கி, கதிர் மணிகளை பிரிக்கவேண்டும். விதைக்காக பயன்படுத்துவதற்கு கதிர் (அ) மணிகளை பயன்படுத்தலாம்
கேழ்வரகு விதையின் சிறிய அளவு மற்றும் விதை உறை உண்ணக்கூடிய எண்டோஸ்பெர்ம் பகுதியுடன் நன்கு ஒட்டிக்கொண்டு இருப்பதால், உமி நீக்குவது கடினம். எனினும் தானியம் மென்மையாக இருப்பதால், மரபு வழியான உமி நீக்கும் வழியில் விதையின் உட்புறம் சேதமடைந்து விடுகிறது. எனவே விவசாயிகள், 30 நிமிடம் வரை கேழ்வரகை ஈரப்படுத்தி, உமியின் கடினத்தை குறைத்து, உமி நீக்கம் செய்கின்றனர். கேழ்வரகு விதைகளை ஈரப்படுத்தி, உமி நீக்கம் செய்யலாம். ஹேமர் (அ) பிளேட் மில் (அ) சுழல் மாவு மில்லில் செலுத்தி, ஆவியேற்றப்படுகிறது.
ராகியை மாவாக்கும் வழிமுறைகளை காண இங்கே "கிளிக்" செய்யவும் |
உடைக்கப்பட்ட தானியங்களை தயார் செய்வதற்கான வழிமுறைகளை காண இங்கே "கிளிக்" செய்யவும் |
|
|
|
பிற தானியங்களுடன் ஒப்பிடும் போது ராகியை முளைக்கட்டி, உலர்த்தி மாவு ஆக்கி, "மால்ட்" தயார் செய்வதற்கு ஏற்ற நல்ல தரத்துடனும், நொதிகளுடனும் உள்ளது. ராகி மால்ட் மாவுடன் முளைத்த பச்சை பயறு மாவைக் கலந்து, பால் குடிக்கும் குழந்தைகளுக்கான சத்துள்ள இதர உணவாகப் பயன்படுத்தலாம். ராகி மாவை பாலில் கலந்தும் குடிக்கலாம்.
ராகியை புழுங்க வைப்பதால் நல்ல தரமான பதம் கிடைக்கிறது. வறுத்த ராகி மாவு நல்ல மணமுடன் இருப்பதால் திண்பன்டங்கள் தயாரிக்கவும், பிற இதர உணவுகள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். தென்னிந்தியாவில் ராகி கூழ், ரொட்டி, தோசை மற்றும் கஞ்சி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
அரிசி மற்றும் பிற தானியங்களை விட ராகியில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. மாவுச் சத்து உணவுகளான மரவள்ளி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை உட்கொள்ளும் ஏழை மக்களிடையே உள்ள மித்தியோனைன் அமினோ அமிலக் குறைபாட்டை சரிசெய்யக் கூடிய உணவு ராகி எனலாம்.
ராகி தானியத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மற்ற பிற தானியங்களை விட ராகியில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து உள்ளது. புரோளமின் மற்றும் குளுட்டின் ராகிப் புரதத்தில் அதிகம் உள்ளன. பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பாலுடன் சேர்த்து கொடுக்கக் கூடிய உணவு தயாரிக்க முளைக்கட்டிய ராகி பயன்படுகிறது.
சத்து | கிராம் |
புரதம் |
7.30 |
கொழுப்புச் சத்து |
1.30 |
மாவுச் சத்து |
72.00 |
தாது உப்புக்கள் |
2.70 |
சுண்ணாம்பு சத்து (கால்சியம்) |
3.44 |
பாஸ்பரஸ் |
2.83 |
நார்ச்சத்து |
3.66 |
சாம்பல் |
2.60 |
ஈரப்பதம் |
13.2 |
சக்தி |
328 கிலோ கேலாரி |
இரும்புச் சத்து |
4 மில்லி கிராம் |
பீட்டா கரோடின் |
4 (மைக்ரோகிராம்/100 கிராம்) |
ராகியில் மற்ற தானியங்களைவிட அதிகமான சுண்ணாம்புச்சத்தும் இரும்புச் சத்தும் உள்ளது. எனவே, கால்சியம் சத்து அவசியமாகத் தேவைப்படும் வளரும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ராகி உணவு வகைகளை கொடுக்கலாம்.
கூழ்/கஞ்சி:சிறிய, பழுப்பு மற்றும் வெள்ளை நிற தானியங்களை காய்ச்சி கூழ் தயாரிக்கப்படுகிறது.
ரொட்டி:ராகி மாவை அரைத்து ரொட்டி, பிரெட் மற்றும் பிற பதார்த்தங்கள் செய்ய பயன்படுத்தலாம். இதன் சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.
மால்ட்:முளைக்கட்டிய ராகிப் பொடி உணவாக பயன்படுத்தப்படுகிறது. சத்துமிக்க, எளிதில் ஜீரணமாக கூடிய ராகி மால்டை குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு கொடுக்கலாம்.
பானங்கள்:ஆப்ரிக்காவில் பீர் தயாரிக்க ராகி பயன்படுத்தப்படுகிறது. இதன் அமைலேஸ் நொதி, எளிதாக மாவைச் சர்க்கரையாக மாற்றுகிறது. சோளம் மற்றும் மக்காச்சோளத்தைவிட, "சேக்கரிபையிங்" சக்தி இதில் அதிகம் உள்ளது. உலகத்தின் முதன்மை பீர் தானியம் பார்லி மட்டும், இதைவிட அதிகம் பெற்றுள்ளது.
தீவனம்:ராகி வைகோல் நல்ல தீவனம் ஆகும். கம்பு, கோதுமை மற்றும் சோளத்தைவிட நல்ல தீவனம் ஆகும். இதில் 61% எளிதில் ஜீரணிக்கக்கூடிய சத்துக்கள் உள்ளன.
பொறித்த பொருட்கள்:ராகியில் பொறித்த பொருட்கள் தயாரிக்கலாம். இந்திய மக்கள் இதன் சுவையை அதிகம் விரும்புகிறார்கள்.
மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இலைச் சாறு கொடுக்கப்படுகிறது.
தொழு நோய், கல்லீரல் நோய், அம்மை, நிமோனியா, பெரிய அம்மை நோயாளிகளுக்கு கிராம மக்கள் ராகி உணவுகளை கொடுக்கின்றனர்.
உடல் எடை பற்றி அக்கறை உள்ளவர்கள் ராகி உணவு வகைகளை பயன்படுத்தலாம். உணவு உட்கொள்ளும் ஆசையைக் குறைத்து அன்றாடம் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்கிறது.
உணவு பொருள் பதப்படுத்தும் துறையில் குறைந்த செலவு மற்றும் தொடர்ச்சியாக பதப்படுத்தும் திறனாலும், முறுக்கிப் பிழிந்த உணவுகளை உண்ணும் பழக்கவழக்கம் தற்போதைய வருடங்களில் பெருகி வருகிறது.
சுத்தமான கோதுமை மாவு – 70 கிராம்
கேழ்வரகு – 30 கிராம்
தண்ணீர் – 30 மில்லி
உப்பு – 2 கிராம்
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
சுத்தம் செய்யப்பட்ட கோதுமை மாவு – 30 கிராம்
முழு கோதுமை மாவு – 40 கிராம்
கேழ்வரகு மாவு – 30 கிராம்
தண்ணீர் – 30 மில்லி
உப்பு – 2 கிராம்
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
அரிசி மாவு – 80 கிராம்
கேழ்வரகு – 30 கிராம்
தண்ணீர் – 30 மில்லி
உப்பு – 2 கிராம்
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
கேழ்வரகு மாவு
பால் பவுடர்
வெல்லம்
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
கேழ்வரகு
வாழைப்பழம் மற்றும் உருளைக் கிழங்கு பொடி
கருவேற்பிலை
முந்திரி
எள்ளு விதைகள்
ஏலக்காய்
பால் பவுடர்
சர்க்கரை
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
ராகி மாவு – 2 கப்
சர்க்கரை – அரை கப் (தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்)
தேங்காய்– அரை மூடி
கருப்பு எள்ளு விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 4
நல்லெண்ணெய்/நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
இது கர்நாடக மாநிலத்தின் கிராம மக்கள் பயன்படுத்தும் உணவு வகை ஆகும்.
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
முழு ராகி தானியம்- 1 கப்
இட்லி அரிசி (புழுங்கல்)– 1 கப்
முழு உளுத்தம் பருப்பு – ¾ கப்
வெந்தயம் -1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய்- இட்லி தட்டில் தடவுவதற்கு
படி 1: ராகியை 2-5 முறை நன்றாகக் கழுவி அரிசியை விட 3-4 மணி நேரம் அதிகமாக ஊற வைக்கவும்..
படி 2 : மற்றொரு பாத்திரத்தில் அரிசி, முழு உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 4-6 மணி நேரத்திற்கோ (அ) இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
படி 3 : கிரைண்டரில் உளுந்தைப் போட்டு அரைக்கவும். அது மெது மெதுவென ஆனவுடன் தண்ணீரில் போட்டுப் பார்த்தால் மிதக்கும். இந்த பதம் வரை ஆட்டி கொள்ளவும்.
படி 4 : பிறகு ராகி சேர்த்து ஆட்டவும். அதன் பின் வெந்தயம் போடவும். கடைசியாக அரிசி போடவும். ரொம்பவும் அரிசியை ஆட்டிவிடாமல் ரவை பதத்திற்கு ஆட்டவும். இல்லையெனில், அரிசி ரவையைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
படி 5 : மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு போட்டு, புளிக்க வைக்கவும். புளித்த மாவை அடுத்த நாள் காலையில் கலக்கிவிட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி, ஆவியில் வேக வைக்கவும்.
கேழ்வரகு அல்லது ராகி தோசை கொங்கு மண்டலத்தின் சிறந்த உணவு பொருளாகும். கோயமுத்தூர், நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி பகுதி வரை உள்ள கொங்கு மண்டலத்தில் ராகி தோசை பிரபலமான ஒன்று.
ராகி மாவு – 2 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
சீரகம்– 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்–4 ½ கப்
படி 1: ராகி மாவை சுடுநீரில் 15 – 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்
படி 2: தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலவையாக்கவும்
படி 3: இந்த கலவையுடன் ராகி மாவை கலக்கவும். நீர் சேர்த்து ரவா தோசை பதத்திற்கு கரைக்கவும்
படி4: தவாவை அடுப்பில் வைத்து 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 30 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும். கரைத்த வைத்த மாவை ஊற்றி அதிக சூட்டில் வேக வைக்கவும். பின் திருப்பி போட்டு வேக வைக்கவும். சூட்டை தணித்து ஒரு நிமிடத்திற்கு வைத்திருக்கவும். வேக வைத்த தோசையை தட்டில் வைத்து பரிமாறவும்.
படி 5: மீதமுள்ள மாவையும் இதே போல் செய்யவும்
ராகி குடுமுலு ஆந்திர மக்களின் பழமை வாய்ந்த பதார்த்தமாகும். இதனை ஆவியில் வேக வைத்த ராகி மாவு மற்றும் குருமா கொண்டு தயார் செய்கிறார்கள். ராகி குடுமுலுவில் சேர்க்கப்படும் பொருட்கள் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும். சில நேரங்களில் காய்கறிகள், சில நேரங்களில் மாமிசக்கறி, சில நேரங்களில் கலந்து ராகி குடுமுலு தயாரிக்கப்படுகிறது. சமைப்பவரின் மனநிலை மற்றும் அன்றைய சந்தை விலை நிலவரத்தை பொறுத்து மாறும். இது விவசாய சமூக மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. ராகி புரதச்சத்து மிகுந்த, தசைகள் மற்றும் எலும்புகளுக்கு ஊட்டமளிக்கக் கூடிய உணவாகும்.
பதார்த்தம் செய்யும் முறை:
3 படிகளில் ராகி குடுமுலு தயாரிக்கப்படுகிறது.
குடுமுலுக்கான மாவை பிசைந்து தயார் செய்தல்.
குருமா தயார் செய்தல்.
குடுமுலு தயார் செய்து ஆவியில் சமைத்தல்
படி 1:
ஒரு கப் ராகி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் பூண்டு-நெய் சேர்க்கவும். நன்றாக சேர்த்து கலக்கிவிடவும். சிறிதளவு சுடுதண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும். பிறகு 15-30 நிமிடத்திற்கு பிசைந்த மாவை மூடி வைக்கவும். மாவு நன்றாக இறுக்கமாகி விடும்.
படி 2:
மாவு இறுகும் நேரத்தில் குருமா தயார் செய்யவும். காய்கறிகள் கொண்டு குருமா வைக்கலாம்.
காய்கறிகள் : பெரிய பீன்ஸ், பீர்கங்காய், மற்றும் சீமைப் பூசணி) ½ இஞ்ச் அளவில் பீர்கங்காய் : தோல் சீவி வெட்டவும்
2 தக்காளி, ஒரு வெங்காயம் - சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
குறிப்பு: குடுமுலுவை, காய்கறி அல்லது மாமிசக் கறி (கோழி (அ) ஆட்டுக்கறி) கொண்டு தயார் செய்யலாம்..
ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு நெய்யை அகன்ற வாணலியில் போட்டு சூடேற்றவும், சிறிதளவு சீரகம் மற்றும் கடுகு போட்டு வறுக்கவும். கடுகு பொறிந்தவுடன், வெங்காயம் போட்டு வதக்கி எடுக்கவும். 1 கப் தண்ணீர் விட்டு தக்காளி மசியும் வரை சூடேற்றவும்
தக்காளி வேகும் சமயத்தில் குர்ரா மசாலா தயார் செய்யவும்: 2 டேபிள் ஸ்பூன் தேங்காய், 4 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்ச், 2 கிராம்பு, 1 இஞ்ச் பட்டை, கொத்தமல்லி மற்றும் சீரகம் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து சிறிது உப்பு போட்டு மிக்சியில் பொடி ஆக்கி கொள்ளவும்.
தக்காளி வெந்தவுடன் கரண்டி வைத்து மசித்து விடவும். பிறகு, பீர்க்கங்காய் மற்றும் மசாலா சேர்க்கவும். 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் துாள் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர்விட்டு கலக்கிவிடவும். மூடி வைத்து மிதமான சூட்டில் வைக்கவும்.
படி 3:
குருமா வேகும் போது ராகி குடுமுலுவை தயார் செய்யவும்.
பிசைந்து வைத்துள்ள ராகி மாவை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழம் அளவிற்கு உருண்டை பிடிக்கவும். பிறகு உள்ளங்கையில் வைத்து விரல்களை மூடி பிடிக்கவும். உருண்டை வடிவத்தை விட குடுமு வடிவம், மாவு பிடிக்க ஏதுவாக இருக்கும். இதே போல் எல்லா உருண்டைகளையும் குடுமு பிடித்துக் கொள்ளவும். 2-3 நிமிடத்திற்குள் முடித்துவிடவும்
இதனை குராவில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து மூடி வைக்கவும். 10-20 நிமிடத்திற்கு மிதமான இளம் சூட்டில், சூடேற்றி 10-20 நிமிடம் வைக்கவும். ராகி குடுமுலுவை நன்றாக வேக வைக்கவும். வெந்ததை அறிவதற்கு ஒன்றை எடுத்து இரண்டாக வெட்டவும். நன்றாக ஆவிபட்டு வெந்த குடுமுலு செம்மண் போன்று இருக்கும். (சுவைத்தால், நன்கு மென்ற பபுள் கம், (சுவிங்க மிட்டாய்) போன்ற பதத்தில் இருக்கும்.
கொத்துமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு அலங்கரித்து, சூடாக பரிமாறவும். பரிமாறும் வரை மூடியை இறுக்கமாக மூடி சூடாகவோ, இளம் சூடாகவோ வைக்கவும். ராகி குடுமுலுவை காய்கறி/கறியுடன் ஒரு தட்டில் வைக்கவும். அதனைச் சுற்றி தக்காளி மசாலாவை ஊற்றவும்.
ராகி மாவு – 1 கப்
வெங்காயம் - ½
பச்சை மிளகாய் – 2 (அ) 3
பூண்டு – 3
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் - ½ - ¾ கப்
எண்ணெய் – சிறிதளவு
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கி வைத்து கொள்ளவும்
ராகி மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
அனைத்து பொருட்களையும் ( வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் உப்பு) சேர்த்து கலக்கவும்.
தவாவை சிறிது எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.
சூடானவுடன் மாவை இட்டு ரொட்டி போல் தட்டவும். சூட்டை தணித்து கொள்ளவும்
எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு வேகவைக்கவும்
ராகி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 3-4
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
நிலக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் (பொடி செய்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வறுப்பதற்கு எண்ணெய்
உப்பு - 1 டீஸ்பூன்
கருவேற்பிலை - சிறிதளவு
பெரிய பாத்திரத்தில், ராகி மாவைப் போடவும். உப்பு, நறுக்கிய வெங்காயம், சிறிய துண்டுகளாக கிள்ளிய மிளகாய், சீரகம், நிலக்கடலை, (பொடி செய்த) ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விடவும். அது சூடேறியவுடன் கடுகு போட்டு, பொறிந்தவுடன், உளுந்து போடவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பெருங்காயத்தையும், கருவேற்பிலையையும் சேர்க்கவும். அதனை மாவில் போட்டு கலக்கவும்.
சிறிதளவு தண்ணீர் விட்டு மாவு போல் பிசைந்து கொள்ளவும். (அடை மாவை விட கெட்டியாகவும், சப்பாத்தி மாவை விட லேசாகவும் இருக்க வேண்டும்)
வாணலியை சூடேற்றி எண்ணெய் விடவும். அடுப்பை மிதமாக வைத்துக் கொள்ளவும்.
ஆரஞ்சு அளவிற்கு மாவை எடுத்து, வாணலியில் போடவம்.
கையை நனைத்துக் கொண்டு, மாவை அழுத்திவிட்டு வட்டமாகப் பரப்பவும்.
எல்லா ஓரத்திலும் 1 டீஸ்பூன் எண்ணெய் விடவும். நிறம் மாறும் வரை மிதமான சூட்டில் வைத்து சமைக்கவும். பிறகு திருப்பி போடவும். இரு பக்கத்திலும் நன்றாக வேக வைக்கவும்.
Ingredients
Ragi flour – 100g
Powdered sugar – 100g
Ghee – 100g
Cardamom powder – 1 pinch
Cashew nuts – 10g
Method of preparation
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
ராகி மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 3 துண்டு
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1/2 - 1 கப் (பொறித்தெடுப்பதற்கு
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
2 கப் ராகி மாவு
1 கப் பொடி செய்த சர்க்கரை
1 கப் வெண்ணெய்
1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
1 டீஸ்பூன் பேகிங் பெளடர்
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
ராகி மாவு - 1 கப்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுப்பொடி, மிளகாய்பொடி உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொறித்து எடுக்கும் அளவு
ராகி மாவு - 2 கப்
கருவேற்பிலை - 1 கொத்து
வெங்காயம் - 1 பெரியது, பொடியாக நறுக்கவும்
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
நிலக்கடலை - ½ கப்
எண்ணெய் - பொறிக்கும் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
பொறித்த மிளகாய் - சுவைக்கேற்ப
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
இந்த பதார்த்தம் திண்பண்டங்களின் சத்து அளவை அதிகரிக்கிறது. ராகி கேக், இதமாகவும், சுவையாகவும் இருக்கும்.
1 கப் ரிபைன்ட் மாவு
1/2 கப் ராகி மாவு
1/2 கப் சர்க்கரை
1 டீஸ்பூன் பேக்கிங் பெளடர்
1/2 டீஸ்பூன் சோடா
5 டீஸ்பூன் தயிர்
1/4 கப் எண்ணெய்
1 சிட்டிகை உப்பு
1 டீஸ்பூன் பட்டை பவுடர்
3-4 டீஸ்பூன் சாக்லேட் சிரப்
தேவைப்பட்ட பருப்பு
படி 1: இரண்டு மாவையும் சேர்த்து, பேக்கிங் தூள், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் பட்டை கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் எண்ணெய் எடுத்து நன்றாக கலக்கவும்.
படி 2: தயிர் மற்றும் சாக்லேட் சிரப் ஊற்றி லேசாக கலக்கவும். தேவையான பருப்பு வகைகளை சேர்க்கவும்
படி 3: இந்த திரவ கரைசலை உலர்ந்த கலவையில் ஊற்றி, கையால் 7-8 நிமிடம் கலக்கவும். சூடேற்றும் டின்னில் மாவை ஊற்றவும். சிறிது சர்க்கரையை மாவின் மேல் துாவி விடவும்.
படி 4: இந்த கேக்கிற்கு ஜெல்லி தடவி, பேக்கிங் டின்னை பசையாக்கி கொள்ளவும். பேக்கிங் பாத்திரத்தை சூட்டடுப்பில் வைத்து, 180° சி க்கு சூடேற்றவும். பிறகு பேக்கிங் பாத்திரத்தை கவனமாக வெளியே எடுத்து, கேக் மாவை ஊற்றவும்.
படி 5: ராகி கேக்கை 30 நிமிடம், 180° சி இல் சுட்டெடுக்கவும். சூட்டடுப்பில் இருந்து வெளியே எடுத்து, கத்தி/பல் குத்தியால் குத்தி பார்க்கவும். கத்தி சுத்தமாக வெளியே வந்தால் நன்றாக சூடேறி வெந்துவிட்டது என்று அர்த்தம். கேக்கை வெளியே 10-15 நிமிடம் வைத்து பிறகு துண்டு துண்டாக வெட்டவும்.
1 கப் ராகி மாவு
1/2 டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்
1/2 டேபிள் ஸ்பூன் உருக்கிய நெய்
3 பால்/கிரீம்
1 கப் பொடி செய்த சர்க்கரை
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
ராகி மால்ட், ஏழை மக்களின் ஊட்டச்சத்து பானம் ஆகும். இது எளிதில் கிடைக்கக் கூடியதாவும், குறைந்த விலையுள்ளதாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும், வயிற்றை நிரப்பக் கூடியதாகவும் உள்ளது.
1 டேபிள் ஸ்பூன் ராகி மாவு
1 கிளாஸ் தண்ணீர்/பால்
2 டீஸ்பூன் சர்க்கரை (அ) பொடியாக்கிய வெல்லம்
1/2 டீஸ்பூன் ஏலக்காய்ப் பொடி
படி 1: 1 கப் ராகி மாவு எடுத்துக் கொள்ளவும். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். நன்றாக கட்டியில்லாமல் கலக்கிவிட்டு, பேஸ்ட் ஆக்கவும். மாவை நேரடியாக கொதிக்கும் போது போடக்கூடாது. அப்படி செய்தால் கட்டியாகிவிடும்.
படி 2: ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் (அ) பால் எடுத்துக் கொள்ளவும். தனியாக பாலில் மட்டும் இந்த பானத்தை தயார் செய்யாமல், தண்ணீர் கலந்து கொள்ளலாம்.
படி 3: தண்ணீர் கொதிக்கும் வரை சூடேற்றவும். கரைத்து வைத்துள்ள ராகி மாவை கொதிக்கும் தண்ணீர்/பாலில் கலக்கவும். கொதிக்கும் முன் மாவை சேர்த்தால் மாவு தனியாக பிரிந்துவிடும். குடிப்பதற்கு நன்றாக இருக்காது. எனவே, தண்ணீர் கொதித்தவுடன் கலக்கவும். நல்ல சுவையான ராகி மால்ட் தயார் செய்வதற்கு, இந்த கொதி தண்ணீரில் மாவு கலக்கும் தருணம் அவசியம்.
படி4: சுவைக்கேற்ப சர்க்கரை (அ) வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்
படி 5: அடுப்பை மிதமான சூட்டில், சிம்மில் 5 நிமிடம் வைத்து கலக்கி விடவும். அடுப்பை நிறுத்தவும். சிறிது நேரம் குளிர வைத்து, டம்ளர் (அ) கப்பில் ஊற்றி பரிமாறவும்.
முளைத்த ராகி கூழ் குழந்தைகளுக்கான ஒரு சத்தான கூழ் ஆகும்.
ராகி - 1 கப்
கோதுமை தானியம்- 1 கப்
பச்சைப் பயறு - 1 கப்
பாதாம் - 2-3
1 சிட்டிகை ஏலக்காய் பொடி
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
ராகி மாவு - 2 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |
ராகி மாவு - 100 கிராம்
மோர் மிளகாய் - 2
புளித்த மோர் - 200 மில்லி
கடுகு - 1/2 டீஸ்பூன்-
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்" |