கேள்வி - பதில்
பருவம்
|
தமிழ்நாட்டில் கரும்பு பயிரிட ஏற்ற பருவம் எது?
அ ) முன்பட்டம்: டிசம்பர்-ஜனவரி ஆ) நடுப்பட்டம்: பிப்ரவரி-மார்ச்
இ) பின்பட்டம்: ஏப்ரல்-மே ஈ) சிறப்புப் பருவம்: ஜூன்-ஜூலை
கேரளாவில் கரும்பு பயிரிட ஏற்ற பருவம் எது?
சாதாரணமாக அக்டோபர்-நவம்பரில் பயிரிடப்படுகிறன்து. தாமதமாக பயிரிடுவதால் மகசூல் குறையும். சமவெளி நிலங்களில் ஃபிப்ரவரிக்குமேல் தாமதமாக பயிரிடக் கூடாது. மலைப்பகுதிகளில் கன மழை குறையத் தொடங்கியப்பின் பயிரிடலாம் .
கர்நாடகாவில் கரும்பு பயிரிட உகந்த பருவம் எது?
எக்சாலி = டிசம்பர்-பிப்ரவரி 12 மாத கரும்பிற்கு
முன்பட்டம் = அக்டோபர்-நவம்பர் 15 முதல் 16 மாத கரும்பிற்கு
அட்சாலி= ஜுன்-ஆகஸ்ட் 18 மாத பயிருக்கு
கரும்பு பயிரிடத் தேவையான மழை அளவு என்ன?
1100 மற்றும் 1500 மி.மீ க்கு இடைப்பட்ட பரவலான மழை சிறந்தது. கரும்பின் வளர்ச்சிப் பருவத்தில் சிறிய இடைவெளிக்கு (வறட்சிக்குப்) பிறகு பெய்யும் நல்ல மழைப் பொழிவினால் கரும்பு நன்கு முதிர்ச்சி அடைகிறது.
கரும்பு கரணைகள் முளைப்பதற்கு ஏற்ற வெப்பநிலை என்ன?
32° முதல் 38° செல்சியஸ்.
இரகங்கள்
செவ்வழுகல் நோய்க்கு எதிர்ப்பு இரகங்கள் என்ன?
கோ 85019, கோ 86249.
தமிழ்நாட்டில் வறட்சி தாங்கி வளரக் கூடிய கரும்பு இரகங்கள் யாவை?
கோ வி 92102, கோ.சி 90063, கோ.எஸ்.ஐ (எஸ்சி) 6, கோ.ஜி. (எஸ்.சி) 5, கோ.சி (எஸ்.சி) 22, கோ 86032, கோ எஸ்.ஐ 95071, கோ 86249, கோ ஜி 93076, கோ வி 94102, கோ 85019, கோ.எஸ்.ஐ (எஸ்.சி)6, கோ.ஜி (எஸ்.சி) 5, கோ.சி (எஸ்.சி) 22, கோ 86032, கோ 86027, கோ 97009, கோ எஸ்.ஐ (எஸ்.சி) 6, கோ ஜி (எஸ்.சி) 5, கோ சி (எஸ்.சி) 22, கோ.ஜி 94077, கோ.சி 671.
கரும்பில் தற்போது புதிதாக வெளிவந்த இரகங்கள் யாவை?
முன் பருவ இரகமான கோ.98014 (கரண்), வடமேற்கு பகுதியளுக்கு ஏற்றது மற்றும் கோ.99004 (தாமோதர்) நடுத்தர பருவத்துக்கு ஏற்ற குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளுக்கு ஏற்ற இரகமாகும்.
கோ 98014 (கரன் 1) வகை கரும்பின் முக்கிய பண்புகள் யாவை?
சராசரி கரும்பு மகசூல் 116.69 டன்/ஹெ, சராசரி சர்க்கரை மகசூல் 16.83 டன்/ஹெ செவ்வழுகல், வாடல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் மிக்கது. மற்றவை: வறட்சி,காரத்தன்மை, இடைக்கணுப்புழு, போன்றவற்றிற்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. பூக்கள் அதிகம் பூப்பதில்லை. தங்க மஞ்சள் நிற தர வெள்ளம்: அதோடு நேராக வளர்வது, விரைவில் செழிப்புடன் வளர்தல் அடர்பச்சை நிற இலைகள், முடிகள்/வெடிப்புகள் அற்று 14% நார்த்தன்மை கொண்டவை. அதிக உயரம் வளரக்கூடியவை போன்ற பல சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் விதைக்கரணை கிடைக்கும் பகுதிகள் யாவை?
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட இரகங்களின் விதைக் கரணைகள் கடலுார், சிறுகமணி மற்றும் மேலாலத்துார் கரும்பு ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும். பிற ஆலைகளால் பயன்படுத்தப்படும் இரகங்களுக்கு அந்தந்த ஆலைகளைத் தொடர்பு கொள்ளவும்.
என்ன வகை இரகங்கள் கேரளாவிற்கு ஏற்றது?
கோ டிஐ 88322(மாதுரி), கோ 92175, கோ 92175, கோ 740, கோ 6907, கோ 7405, மற்றும் குல் 57/84, (திருமதுரம்), குல் 527/85 (மதுரிமா) கோ 88017 (மதுமதி)
கேரளாவில் வறட்சி தாங்கக் கூடிய இரகங்கள் யாவை?
கோ 92175, குல் 527/85 (மதுரிமா), கோ 88017, (மதுமதி) ஆகியவை வறட்சியை தாங்கக் கூடியவை. குல் 527/85 மற்றும் கோ 88017 ஆகியவை செவ்வழுகளை தாங்கக்கூடியது.
கேரளாவில் செவ்வழுகளை தாங்கக் கூடிய இரகங்கள் யாவை?
குல் 527/85 மற்றும் கோ 88017, கோ டி1 88322 (மதுரி), கோ 6907, கோ 7405 மற்றும் குல் 57/84, (திருமதுரம்) ஆகியவை செவ்வழுகளை தாங்கக் கூடியவை.
கேரளாவிற்கு ஏற்றதும் மற்றும் அதிக சர்க்கரை அளவும் கொண்ட கரும்பு இரகம் எது?
கோ 6907, கோ 7405, மற்றும் குல் 57/84 (திருமதுரம்).
என்ன வகை கரும்பு இரகங்கள் கர்நாடகாவிற்கு ஏற்றது?
அ) முன்பட்டம் ரகங்கள் : கோ 6415, கோ 7704, கோசி 671, கோ 85002 ஆ) நடுப்பட்டம் மற்றும் பின்பட்ட இரகங்கள் : கோ 62175, கோ 740, கோ 8014, கோ 8021, கோ 8011, கோ 837, கோ 7804, கோ 86032.
விரைவில் அறுவடைக்கு வரும் இரகங்கள் யாவை?
விரைவில் அறுவடைக்கு வரும் இரகங்கள் கோ 658, கோ 62174, கோ 62198, கோசி 671, கோசி 771, கோசி 772, கோசி 8001, கோசி 85061, கோசி 86062, கோ எஸ்.ஐ 86071, கோசி 90063, கோசி 91061, கோ.ஜி 94077, கோ.எஸ் ஐ 95071, கோசி 98061, கோ 86010, கோ 86249 ஆகியவையாகும்.
தாமதமாக அறுவடைக்கு வரும் இரகங்கள் யாவை?
தாமதமாக அறுவடைக்கு வரும் இரகங்கள் கோ 6304, கோசி 8201, கோசி 771, கோசி 778, கோசி 779, கோ 419, கோ 740,கோ 658, கோஜி 93076, கோ 85019, கோசி 99061, கோ 86032, கோசி(எஸ்.ஐ) 22.
சாகுபடி முறைகள்
நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது?
நன்செய் நிலங்களில் மண்ணினை உழவு செய்து நல்ல மென் தன்மையைக்கொண்டு வர இயலாது. அ) நெல் அறுவடை செய்தபின் 40 செ.மீ ஆழமும், 30 செ.மீ அகலமும் கொண்ட பாசன வாய்க்கால் - வடிகால்வாய் அமைக்கவும். ஆ) மமுட்டி கொண்டு 80 செ.மீ இடைவெளியில் பார் மற்றும் பாத்தி அமைக்கவும். இ) கைக்கொத்து மூலம் பாத்திகளை நன்கு கொத்தி கலக்கி விட்டு, 4-5 நாட்களுக்கு மண்ணினைக் காயவிட வேண்டும்.
எவ்வகை மண் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது?
மணல் கலந்த வண்டல் மண்ணிலிருந்து, களி வண்டல் மண் வரை அனைத்து மண் வகையும் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது.
மண் வளத்தை பாதுகாப்பது எப்படி?
இயற்கை தொழு உரங்கள் மற்றும் இரசாயண உரங்கள் கலந்த ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் மண் வளத்தை பாதுகாக்கலாம்.
எந்த அளவு இயற்கை தொழு உரங்கள் அதிக கரும்பு உற்பத்திக்கு தேவை?
2-3% இயற்கை தொழு உரங்கள்/அங்கக உரங்கள்.
அங்கத் தன்மை குறைந்த காரத்தன்மை மிகுந்த மண் வகைகளில் கரும்பு பயிரிட (வேண்டுமாயின்) பார்பிடிக்குமுன் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?
அதிக ஈரத்தன்மை கொண்ட மண் வகைகளில் நீரினை வடிப்பது சிரமம். எனவே 30 செ.மீ இடைவெளியில் 5மீ நீளமும், 80 செ.மீ அகலமும், 15 செ.மீ உயரமும் கொண்ட உயர் படுகைகள் அமைக்கலாம்.
கரும்பு பயிரிடுமுன் வயலில் அங்கக உரங்கள் எவ்வளவு இடலாம்?
தொழு உரம் 12.5 டன்/ஹெ அல்லது சாறு வடிகட்டிய கரும்புச் சக்கை 37.5 டன்/ஹெ என்ற அளவில் தோட்ட நிலங்களில் கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும். நன்செய் நிலங்களில் இவற்றை பாத்திகளில் இட்டு நன்கு மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். மண்ணிணைப் பரிசோதித்து அதற்கேற்ற அளவு பாஸ்பரஸ் உரங்களை இடலாம். அல்லது சூப்பர் பாஸ்பேட் (375 கி.கி/ஹெ) உரத்தினை பாத்திகளில் இட்டு மண்ணில் நன்கு கலக்கச் செய்யவும். 37.5 கி.கி ஜிங்க் சல்பேட் மற்றும் 100 கி.கி பெர்ரஸ் சல்பேட்/ஹெ உரங்களை இரும்புச் சத்து குறைவாக உள்ள மண் வகைகளில் இடலாம்.
குழி நடவு முறையில் நடும்போது என்ன உரமிடலாம்?
பரிந்துரைக்கப்பட்ட உர அளவு 275:62.5:112.5 கி.கி (தழை:மணி:சாம்பல்) நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ். இதில் பாஸ்பரஸ் முழுவதும் அடி உரமாகவும். யூரியா மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஸ் (வெள்ளை) உரங்கள் உரப்பாசனம் வழியே 14 சம பாகங்களாகப் பிரித்து நடவு செய்த 15 ஆம் நாளிலிருந்து 210 ம் நாள் வரை அளிப்பது சிறந்தது.
கரும்பிற்குத் தேவைப்படும் அதிகப்படியான ஊட்டச்சத்துத் தேவையை எவ்வாறு ஈடுகட்டுவது (அளிப்பது)?
பரிந்துரைக்கப்பட்ட அளவு உரத்தினை சரியான அளவில் சரியான நேரத்தில் அளிப்பதே போதுமானது.
இரட்டை பார் முறை என்பது என்ன? அதன் பயன் யாது?
இயந்திரமயமாக்கலை செயல்படுத்தவும், அகண்ட பார் முறை மூலம் நல்ல மகசூல் காணவும் கரும்பில் இப்புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் 150 செ.மீ அளவு கொண்ட அகண்ட பாரின் நடுவே 30 செ.மீ இடைவெளியில் இரு வரிசையில் கரும்புப் பயிர் நடவு செய்யப்படும். இம்முறையில் 136.3 டன்/ஹெக்டருக்கு அதிகபட்சமாக மகசூல் கிடைக்கும். கோ 94005 என்ற இரகம் இம்முறையில் அதிக மகசூல்தரும் ஒன்றாகும்.
இரட்டைப் பார் நடவு முறையின் பயன்கள் யாவை?
ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடுபயிரை பயிரிடலாம், குறைந்த இடத்தில் அதிக வருமானம் பெறலாம். மேலும் ஆட்தேவை குறைவு.
இடைவிடப்பட்ட நடவு முறை என்பது என்ன?
ஒரு பருக் கரணை மூலம் இந்த இடைவிடப்பட்ட முறை தற்போது பின்பற்றப்பட்டுவருகின்றது. கரணை நேரடியாகவோ, அல்லது நாற்றாகவோ பாலிதீன் பையில் ஊன்றி வளர்க்கப்பட்டு 50-55 நாட்களுக்குப் பிறகு வயலில் நடப்படுகிறது. இதற்கு ஒரு பரு கொண்ட 750-1MT கரணைகள் ஏக்கருக்குத் தேவைப்படுகின்றன. இம்முறையின் மூலம் விதைக் கரணை செலவு 60-70% சேமிக்கப்படுகின்றது. இம்முறையில் இரு கரணைகளுக்கு இடையே இடைவெளி 30 செ.மீ விட்டு நடப்படுகின்றது.
பரு வெட்டும் தொழில் நுட்பம் என்பது யாது?
இம்முறையில் கணுக்கள் உள்ள பகுதி மட்டும் தனியே இயந்திரத்தின் மூலம் நறுக்கப்படுகிறது. இந்தப் பரு உள்ள பகுதி பின்பு விதைக் கரணையாக நடப்படுகின்றது.
கரும்பில் திசு வளர்ப்பு முறை செய்வதன் பயன் யாது?
உடல் இனப்பெருக்க முறை நாற்றுகள் உருவாக்க முடியும். விரைவான இனப்பெருக்கம் சூழ்நிலை மாற்றங்களால் பாதிக்கப்படுவதில்லை. நல்ல தன்மைகள் கொண்ட இரகங்களின் பண்புகளை மேம்படுத்துதல். மேல்பாக வளர்திசு வழியே நோயற்ற இரகங்களை உற்பத்தி செய்ய முடியும்.
எத்தனை நாட்களில் இடைவெளியான (சொட்டை) இடங்களை நிரப்பலாம்?
நடவு செய்த 30 நாட்களுக்குள் முளைவிட்ட கரணைகளைக் கொண்டு இடைவெளியான இடங்களில் நிரப்ப வேண்டும்.
ஊட்டச்சத்து மேலாண்மை
கரும்பு நாற்றங்காலில் இடவேண்டிய உர அளவு என்ன?
125 கி.கி யூரியா + 125 கி.கி மியூரேட் ஆப் பொட்டாஷ் உரத்தினை ஹெக்டருக்கு இடவேண்டும்.
தமிழ்நாட்டு தட்பவெப்பநிலையில் கரும்பு பயிரிடுவதற்கான உர அட்டவணை யாது?
கரும்பு பயிர் (ஆலைக் கரும்பு) 275: 62.5: 112.5 கி.கி/ஹெ நைட்ரஜன், பாஸ்பரஸ் & பொட்டாசியம்
பயிருக்கான உரப் பரிந்துரை |
அடி உரம் கி.கி/ஹெ |
நேரடி உரம் கி.கி/ஹெ |
||||
|
நைட்ரஜன் (தழை) |
பாஸ்பரஸ் (மணி) |
பொட்டாஸ் (சாம்பல் சத்து) |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆப் பொட்டாஸ் |
அடி உரம் |
- |
62.5 |
- |
- |
390 |
- |
30-45 நாட்கள் |
90 |
- |
37.5 |
200 |
- |
62.5 |
75-90 நாட்கள் |
92.5 |
- |
37.5 |
205 |
- |
62.5 |
நட்ட 120-135 நாட்களுக்குப் பிறகு |
92.5 |
- |
37.5 |
205 |
- |
62.5 |
மொத்தம் |
275 |
62.5 |
112.5 |
610 |
390 |
187.5 |
கரும்பு – மறுதாம்புப் பயிர் (ஆலைகளுக்கு) 275 + 25% அதிக நைட்ரஜன்: 62.5: 112.5 கி.கி/ஹெ பாஸ்பரஸ் & பொட்டாசியம்
பயிருக்கான உரப் பரிந்துரை |
அடிஉரம் கி.கி/ஹெ |
நேரடி உரம் கி.கி/ஹெ |
||||
|
நைட்ரஜன் |
பாஸ்பரஸ் |
பொட்டாஸ் |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆப் பொட்டாஸ் |
அடி உரம் |
68.5 |
62.5 |
- |
148 |
390 |
- |
30-45 நாட்கள் |
90 |
- |
37.5 |
200 |
- |
62.5 |
75-90 நாட்கள் |
92.5 |
- |
37.5 |
205 |
- |
62.5 |
மறுதாம்பு விட்ட 120-135 நாட்களுக்குப் பிறகு |
92.5 |
- |
37.5 |
205 |
- |
62.5 |
மொத்தம் |
343.5 |
62.5 |
112.5 |
758 |
390 |
187.5 |
கரும்பு வெல்லக்கட்டி தயாரிப்பு (முதல் மற்றும் மறுதாம்புப் பயிர்)
225: 62.5: 112.5 கி.கி நைட்ரஜன், பாஸ்பரஸ் & பொட்டாசியம்/ஹெ
பயிருக்கான உரப் பரிந்துரை (வெல்லத் தயாரிப்பு) |
அடிஉரம் கி.கி/ஹெ |
நேரடி உரம் கி.கி/ஹெ |
||||
|
நைட்ரஜன் |
பாஸ்பரஸ் |
பொட்டாஸ் |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆப் பொட்டாஸ் |
அடி உரம் |
- |
62.5 |
- |
- |
390 |
- |
30-45 நாட்கள் |
75 |
- |
37.5 |
162 |
- |
62.5 |
75-90 நாட்கள் |
75 |
- |
37.5 |
162 |
- |
62.5 |
120-135 டிஏபி அல்லது டிஏஆர். |
75 |
- |
37.5 |
162 |
- |
62.5 |
மொத்தம் |
225 |
62.5 |
112.5 |
486 |
390 |
187.5 |
கேரள மாநிலத்தின் கரும்பு பயிருக்கான உர அட்டவணை யாது?
165: 82.5: 82.5 கி.கி நைட்ரஜன், பாஸ்பரஸ் & பொட்டாசியம்/ஹெ
பண்டாலம் மற்றும் திருவல்லா பகுதிகளுக்கான உரப் பரிந்துரை |
அடிஉரம் கி.கி/ஹெ |
நேரடி உரம் கி.கி/ஹெ |
||||
|
நைட்ரஜன் |
பாஸ்பரஸ் |
பொட்டாஸ் |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆப் பொட்டாஸ் |
அடி உரம் |
- |
82.5 |
- |
- |
515 |
- |
45 நாட்கள் |
82.5 |
- |
41.5 |
179 |
- |
69 |
90 நாட்கள் |
82.5 |
- |
41 |
179 |
- |
68 |
மொத்தம் |
165 |
82.5 |
82.5 |
358 |
515 |
137 |
சித்தூர் பகுதி
225: 75: 75 கி.கி நைட்ரஜன், பாஸ்பரஸ் & பொட்டாசியம்/ஹெ
சித்தூர் பகுதிக்கான உரப் பரிந்துரை |
அடி உரம் கி.கி/ஹெ |
நேரடி உரம் கி.கி/ஹெ |
||||
|
நைட்ரஜன் |
பாஸ்பரஸ் |
பொட்டாஸ் |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆப் பொட்டாஸ் |
அடி உரம் |
- |
75 |
- |
- |
468 |
- |
45 நாட்கள் |
112.5 |
- |
37.5 |
244 |
- |
62 |
90 நாட்கள் |
112.5 |
- |
37.5 |
244 |
- |
62 |
மொத்தம் |
225 |
75 |
75 |
488 |
468 |
124 |
புதிதாக தயார் செய்யப்பட்ட வனப்பகுதிகள்
115: 75: 90 கி.கி நைட்ரஜன், பாஸ்பரஸ் & பொட்டாசியம்/ஹெ
புதிதாக தயார் செய்யப்பட்ட வனப்பகுதிகளுக்கான உரப் பரிந்துரை |
அடி உரம் கி.கி/ஹெ |
நேரடி உரம் கி.கி/ஹெ |
||||
|
நைட்ரஜன் |
பாஸ்பரஸ் |
பொட்டாஸ் |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆப் பொட்டாஸ் |
அடி உரம் |
- |
75 |
- |
- |
468 |
- |
45 நாட்கள் |
57.5 |
- |
45 |
124 |
- |
74 |
90 நாட்கள் |
57.5 |
- |
45 |
124 |
- |
74 |
மொத்தம் |
115 |
75 |
90 |
248 |
468 |
148 |
கர்நாடக மாநிலத்தின் கரும்பு பயிருக்கான உர அட்டவணை யாது?
கர்நாடக மாநிலத்தின் கரும்பு பயிருக்கான உர அட்டவணை
உரப் பரிந்துரை i) 250 : 75 :150 கி.கி நைட்ரஜன், பாஸ்பரஸ் & பொட்டாசியம்/ஹெ (முதல் பயிர்)
பயிருக்கான உரப் பரிந்துரை |
அடி உரம் கி.கி/ஹெ |
நேரடி உரம் கி.கி/ஹெ |
||||
|
நைட்ரஜன் |
பாஸ்பரஸ் |
பொட்டாஸ் |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆப் பொட்டாஸ் |
அடி உரம் |
- |
75 |
- |
- |
468 |
- |
60 நாட்கள் |
125 |
- |
75 |
271 |
- |
124.5 |
90 நாட்கள் |
125 |
- |
75 |
271 |
- |
124.5 |
மொத்தம் |
250 |
75 |
150 |
542 |
468 |
249 |
315 : 75 : 190 கி.கி/ஹெ (மறுதாம்புப் பயிர்).
மறுதாம்புப் பயிருக்கான உரப் பரிந்துரை |
அடி உரம் கி.கி/ஹெ |
நேரடி உரம் கி.கி/ஹெ |
||||
|
நைட்ரஜன் |
பாஸ்பரஸ் |
பொட்டாஸ் |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆப் பொட்டாஸ் |
அடி உரம் |
- |
75 |
- |
- |
468 |
- |
60 நாட்கள் |
157.5 |
- |
95 |
341 |
- |
157 |
90 நாட்கள் |
157.5 |
- |
95 |
341 |
- |
157 |
மொத்தம் |
315 |
75 |
190 |
682 |
468 |
314 |
பாசன மேலாண்மை
கரும்பு பயிருக்கு எத்தனை நீர்ப்பாசனங்கள் தேவைப்படும்?
13 லிருந்து 15 நீர்ப்பாசனங்கள்.
கரும்பு பயிரின் ஒவ்வொரு நிலையிலும் கொடுக்கப்பட வேண்டிய நீர்ப்பாசன இடைவெளிகள் யாவை?
கரும்பு பயிரின் ஒவ்வொரு நிலையிலும் கொடுக்கப்பட வேண்டிய நீர்ப்பாசன இடைவெளிகள் கீழே தரப்பட்டுள்ளன:
நிலைகள் |
நீர்ப்பாசன இடைவெளி நாட்கள் |
|
மணற் பகுதி |
களி மண் பகுதி |
|
தூர் விடும் நிலை (36 முதல் 100 நாட்கள்) |
8 |
10 |
வீரிய வளர்ச்சி நிலை (101 - 270 நாட்கள்) |
8 |
10 |
முதிர்ச்சி நிலை (271 – அறுவடை) |
10 |
14 |
நீர் வழி உரமிடுதல் முறை என்றால் என்ன?
-
பாசன நீரோடு இணைத்து நிலையான முறையில் உரங்களை அளிப்பதே நீர்வழி உரமிடுதல் எனப்படும்.
-
உரத்தொட்டி குவிரி அமைப்பு, உட்புகுத்தும்குழாய், மின்சாரமற்ற விகித நீர்மக் கரைப்பான் மற்றும் தன்னியக்க அமைப்பு முறைகளின் மூலம் நீர்வழி உரமிடுதல் மேற்கொள்ளலாம்.
-
கரும்பு பயிருக்கு நீர்வழி உரமிடுதலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து, மணிச்சத்து, மற்றும் சாம்பல்சத்து விகிதம் 275:15:112.5/எக்டர் ஆகும்.
எந்த வழியில் மணிச்சத்து கரும்பு வளர்ச்சிக்கு பயன்படுகின்றன?
-
கரையும் தன்மை மற்றும் பயிர் உறிஞ்சும் முறையைப் பொருத்து உட்கொள்ளும் திறன் அமைந்திருக்கும்.
-
தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து தேவையைவிட மணிச்சத்து தேவை குறைவானது. உயிரணுப்பிரிவுக்கு முக்கியமானது. இதனால் பயிர்வளம் ஏற்படும். வேர் வளர்ச்சியைத் துாண்டுகின்றது.
-
பயிர் வளர்சிதை மாற்றத்திற்கும், ஒளிச்சேர்க்கைக்கும் மணிச்சத்து தேவைப்படுகிறது.
-
அதிகமாக துார் வைப்பதற்கும் தேவைப்படுகிறது.
-
தழைச்சத்துடன் இணைந்து, பயிர் முதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கரும்பு சாகுபடியில் சாம்பல் சத்தின் பங்கு என்ன?
-
தழைச்சத்து, மணிச்சத்தைவிட சாம்பல் சத்து தேவை அதிகமாய் உள்ளது.
-
கரிமம் தன்மயமாதலுக்கும், ஒளிச்சேர்க்கைக்கும், மாவுச்சத்து இடமாற்றத்திற்கும் சாம்பல்சத்து தேவைப்படுகிறது.
-
பல்வேறு நொதிச் செயற்பாட்டில் பங்களிக்கிறது.
-
சர்க்கரைச் சேர்க்கைக்கும், சேமிப்பு உறுப்புகளுக்கு இடமாற்றம் செய்வதற்கும் சாம்பல் சத்து முக்கியமானதாகும்.
-
பயிரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், தண்டு சாய்தல் ஆகியவற்றை எதிர்க்கும் ஆற்றலை வளர்கிறது.
-
ஈர அழுத்த நிலைகளில் உயிரணு விரிவடைதலைப் பாதுகாக்கிறது.
-
தழைச்சத்து மற்றும் மணிச்சத்து விளைவுகளை சமநிலையில் வைக்கிறது.
நிலமட்ட சொட்டுநீர்ப் பாசனம் என்றால் என்ன?
சொட்டு நீர் சிறு குழாயினைச் சுற்றி முன் தீர்மானிக்கப்பட்ட தொலைவில் பொருத்தப்பட்டிருக்கும் உமிழி வழியாக நீரை சொட்டுக்களாக அல்லது சிறிய நீரோட்டமாக மண் நிலப்பரப்புக்கு அளிப்பதே நிலமட்ட சொட்டுநீர் பாசனம் ஆகும். இவை இரு வகைப்படும். (i) இணைய சொட்டு நீர்ப் பாசனம் (ii) ஒருங்கிணைந்த சொட்டு நீர்ப் பாசன வகை. ஒருங்கிணைந்த சொட்டுநீர் வரிசையே கரும்புப் பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
கீழ்மட்ட சொட்டு நீர்ப் பாசனம் என்றால் என்ன?
சொட்டு நீர் வரிசையின் உட்சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் உமிழி வழியாக மண் பரப்புக்கு நீர் அளிக்கப்படுகிறது. இதன் வெளிவிடும் அளவு (1.0-3.0 எல்பீஹச்(LPH). பொதுவாக ஒருங்கிணைந்த மேற்றல சொட்டுநீர்ப் பாசன அளவைப் போன்றதே. இம்முறைப் பாசனம் சற்று வித்தியாசமானது, மேலும் துணைப்பாசன முறையில், நிலநீர்மட்ட கட்டுப்பாட்டினால் வேர்மண்டலத்திற்கு பாசனம் அளிக்கும் இம்முறையோடு குழம்பத் தேவையில்லை. ஒருங்கிணைந்த சொட்டு நீர் வரிசையை (மெல்லிய அல்லது தடிப்பான சுவருடைய) மண் வகை மற்றும் பயிர் தேவைகளின் அடிப்படையில் முன்னரே தீர்மானித்த மண் ஆழத்தில் பொருத்த வேண்டும். இரண்டு முக்கியமான கீழ்மட்ட சொட்டு நீர்ப் பாசனத்தின் வகைகள் (i) "ஒரு பயிர்" (ii) "பல பயிர்" எனப்படும்.
களை மேலாண்மை
கரும்பு வயலை எவ்வளவு நாட்கள் களையில்லாமல் பராமரிக்க வேண்டும்?
120-135 நாட்கள்
கரும்பு வயலில் ஒட்டுண்ணிக் களைச்செடி "சுடுமல்லி" யை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
களைச்செடி சுடுமல்லியைக் கட்டுப்படுத்த களை முளைத்தபின், அளிக்கும் களைக்கொல்லியான 2,4 டீ சோடியம் உப்பு (வெடியம் உப்பு) ஒரு எக்டருக்கு 1.25 கிலோவை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து அளிக்க வேண்டும். அருகில் பருத்தி அல்லது வெண்டைக்காய் பயிர் இருப்பின் 2,4 டீ தெளிக்க கூடாது. நேரடித் தெளிப்பாக 20 சதவிகிதம் யூரியாவை பயன்படுத்தியும் சுடுமல்லியக் கட்டுப்படுத்தலாம்.
ஊடுபயிர் சாகுபடி முறையைப் பயன்படுத்தி எவ்வாறு களைகளை மேலாண்மை செய்வது?
ஊடுபயிர்களாக சோயாமொச்சை, உளுந்து, நிலக்கடலை ஆகியவை பயிரிடும்போது களை முளைக்கும் முன் அளிக்கும் களைக்கொல்லியான தினோபென்கார்ப் 1.25 கிலோ ai /எக்டர் என்ற அளவில் அளிப்பது சிறப்பான களைக்கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது. ஊடுபயிர் சாகுபடியில் கரும்பின் தரமும், மகசூலும் பாதிக்கப்படாது.
கரும்பில் ஏற்படும் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தகுந்த களைக்கொல்லிகளை பரிந்துரைத்தல்?
களை முளைக்கும் முன் அளிப்பதற்காக, அட்ரசின் (2 கிலோ ai /ஏக்கர்) களைக்கொல்லியை, 80-100 லிட்டர் நீரில் கலந்து நடவு செய்து 3 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். களைக்கொல்லியைத் தெளிக்கும்போது மண் உகந்த ஈரத்தன்மையுடையதாக இருக்க வேண்டும். கரும்பு பயிர் முளைக்கும்முன், அதாவது நடவு செய்து 8-12 நாட்களுக்குள் கிராமோக்சோன் 1 லிட்டர்/ஏக்கர் என்ற அளவை 80-100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். கோரைகள் மற்றும் அகன்ற இலையுடைய களைகளைக் கட்டுப்படுத்த, கிராமோக்சோன் 1 லிட்டர் + பெர்னோக்சோன் 1 கிலோ/ஏக்கர் என்ற அளவில் கலந்து அளிக்க வேண்டும். இவ்விரண்டு களைக்கொல்லிகளையும் தனித்தனியாக நீரில் கலந்து அதன் வீரியங்குறைத்து பின் தெளிக்க வேண்டும்.
முளைக்கும் முன் களை மேலாண்மை என்றால் என்ன?
நடவு செய்ததிலிருந்து 90 நாட்களுக்கு களையில்லாமல் கரும்பு பயிரை பாதுகாக்க வேண்டும். நடவு செய்து 3 அல்லது 4 வது நாளில் களை முளைப்பதற்கு முன் அட்ரசின் 2.5 கிலோ/எக்டர் என்ற அளவில் நிலத்தின் மேற்பரப்பில் சீராக அளிக்க வேண்டும். களைக்கொல்லியை 1000 லிட்டர் நீரில் கலந்து அதன் வீரியங்குறைத்து பின் கைத்தெளிப்பான் மூலம் அளிக்க வேண்டும். களைக்கொல்லியிடுதலுக்கு தனித்தனி தெளிப்பான் மற்றும் நுனிப்பகுதி (வெளிவரும் இடம்) பயன்படுத்த வேண்டும். களைக்கொல்லியால் கட்டுப்படுத்த முடியாத களைகளை கைக்களை மூலம் ஊட்டச்சத்து இடுவதற்கு முன் வேரோடு அகற்றிவிட வேண்டும். இம்முறை மூலம், அதிக அளவிலான பயிர் சேதத்தைக் குறைக்க முடிகிறது.
களை முளைத்தப்பின் களை மேலாண்மை என்றால் என்ன?
களைகள் முளைத்தபின், அகன்ற இலைகளுடைய களைச்செடிகளைக் கட்டுப்படுத்த 2-4-டீ @ 2.5 கிலோ/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். புல்வகை சிற்றினங்களை கைக்களை மூலம் கட்டுப்படுத்தலாம். சைப்ரஸ் புல் வகையைக் கட்டுப்படுத்த ஈத்தாக்ஸி சல்ஃப்யூரான் @ 13 கிலோவை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சருகு நிலப்போர்வையிடுதல் என்றால் என்ன?
கரும்புப்பயிர் சருகினைக் கொண்டு 10 செ.மீ தடிப்பிற்கு பார்களை சீராக மூட வேண்டும். நடவு செய்து ஒரு வாரத்திற்குள் சருகு போர்வையிடுதல் மேற்கொள்ள வேண்டும். இதனால் வறட்சி ஏற்படாமல் தடுக்க முடிகிறது. மேலும் ஈரத்தன்மையைப் பாதுகாத்து, களைத்தொகையை குறைத்து, நுனித்தண்டு துளைப்பான் தாக்குதலையும் குறைக்க முடிகிறது. கடின மண் மற்றும் நன்செய் நிலத்தில் நடவு செய்து 21 நாட்களுக்குப் பின் சருகைக் கொண்டு நிலப்போர்வையிடுதல் வேண்டும். கரையான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் சருகு நிலப் போர்வையிடுதல் கூடாது.
கரும்புக்கு ஏற்ற ஊடுசாகுபடி பயிர்கள் என்ன?
போதுமான பாசன வசதி இருக்கும் இடங்களில், ஒரு வரிசையில் சோயாமொச்சை (அ) உளுந்து (அ) பச்சைப்பயிறு ஆகிய ஏதோ ஒன்றைப் பயன்படுத்தலாம். ஊடுபயிராக தக்கைப்பூண்டு அல்லது சணப்பையை பார்களில் பயிரிட்டு பின் 45 வது நாளில் பகுதி மண் அணைத்தலின் பொழுது மண்ணுக்குள் செலுத்த வேண்டும். இம்முறையினால் மண்வளத்தை அதிகரித்து, அதிக கரும்பு மகசூல் பெற முடிகிறது. குறிப்பாக கோ - 1 சோயாமொச்சை ஊடுபயிராக வளர்ப்பதன்மூலம், கரும்பு மகசூலில் எந்த ஒரு விளைவும் ஏற்படுத்தாமல், சோயா மட்டும் 800 கிலோ/எக்டர் மகசூலைத் தருகிறது.
கரும்பின் பூ பூக்காத இரகங்கள் யாவை?
கோ 8021, கோ 86032, கோ 87025, கோ 91010, கோ 94005 மற்றும் கோ 94008 ஆகியவை பூ பூக்காத இரகங்கள் ஆகும்.
கரும்பில் பூ பூத்தலை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
-
அதிகமாய் பூ பூக்கும் இரகங்களில் பூத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எத்திஃபான் (எத்ரெல்) 500 பிபிஎம் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
-
பயிர் நடும் தினத்தை மாற்றுவதால், அதிக பரப்புகளில் பூத்தலைக் கட்டுப்படுத்த முடிகிறது. அட்சாலி நடவு (அல்லது) சிறப்பான பருவத்தில் நடவு செய்தல் (ஜூலை-செப்டம்பர்) பூ பூத்தலைத் தடுத்து, அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்த முடிகிறது.
கரும்புப் பயிரில் சருகு உரித்தலின் நன்மைகள் என்ன?
பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதலைக் குறைத்து அதிக சர்க்கரை மீட்புத் தன்மையை அளிக்கிறது.
கரும்புக்கு ஏற்ற ஊடு சாகுபடி பயிர்களைப் பரிந்துறை செய்க?
சோயாமொச்சை, உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு, ஆகிய பயிர்கள் ஊடுபயிருக்கு ஏற்றது.
கரும்பில் பயிர்ச்சுழற்சி எவ்வாறு செய்வது?
பொதுவாக பருத்தி, நெல், மக்காச்சோளம், கடுகு, உருளைக்கிழங்கு, கோதுமை போன்ற பயிர்களின் அறுவடைக்குப்பின் கரும்புபயிரிடுதல் 2-3 வருட பயிர்ச்சுழற்சியில் தொடர்ந்து செய்தல்.
கரும்பில் மண் அணைத்தல் எப்பொழுது செய்யப்படுகிறது?
மண் அணைத்தலை "மண் குவித்தல்" என்றும் கூறுவர். இச்செயலை 2 அல்லது 3 நிலைகளில் செயல்படுத்தலாம். முதல் நிலை மண் அணைத்தலை "ஒரு பகுதி மண் அணைத்தல் " என்றும் இரண்டு/மூன்றாம் நிலை மண் அணைத்தலை "முழு மண் அணைத்தல்" என்று கூறுவர். பயிர் நடவு செய்து 45 நாட்களில் "பகுதி மண் அணைத்தல் மேற்கொள்ளப்படும். இம்முறையில் சால்களின் இருபுறத்திலிருந்தும் கொஞ்ச அளவு மண் எடுத்து தண்டுகளின் அடிப்பகுதியைச் சுற்றி போட வேண்டும். பகுதி மண் அணைத்தலின் போது சால்களில் அமைந்திருக்கும் கரும்பு பயிர் வரிசை பகுதியளவு மண்ணால் நிரப்பப்பட்டிருக்கும். பயிர் நடவு செய்து 120 நாட்களுக்குப் பிறகு "முழு மண் அணைத்தல் மேற்கொள்ள வேண்டும். அதாவது மிகுந்த துார்கள் உற்பத்தித் தொகை உடைய நிலையில் செய்ய வேண்டும். "முழு மண் அணைத்தலின்" போது பார்களுக்கிடையே உள்ள மண்ணை முழுவதுமாக அகற்றி, பின் பயிரின் இரு பக்கங்களிலும் போட வேண்டும். இம்முறையானது, சால்களை பார்களாகவும், பார்களை சால்களாகவும் மாற்றுகின்றன. ஏற்படுத்திய இடைவெளியைப் பொருத்து, இம்முறையினை மனிதரீதியாகவும் அல்லது மாட்டினால் இழுக்கப்படும்/டிராக்டரால் இயக்கப்படும் சால் அமைக்கும் கருவியை பயன்படுத்தியும் "முழு மண் அணைத்தல் மேற்கொள்ளலாம். 3 வது அளவு உரத்தை (90 நாட்கள்) அளித்த பின், வெற்றிக் கலப்பையைப் பார்களின் வழியே பயன்படுத்துவதன் மூலம், சிறந்த பயனுள்ள மற்றும் பொருளாதார மண் அணைத்தல் மேற்கொள்ள முடிகிறது. நடவு செய்து 150 நாட்களில், மண்வெட்டியைப் பயன்படுத்தி "மண் அணைத்தல் மேற்கொள்ளலாம்.
முட்டுக் கொடுத்தல் என்றால் என்ன?
வறண்ட மற்றும் பச்சையான அடிப்புற இலைகளைப் பயன்படுத்தி பயிர் இலைகளைக் கட்டுதல் "முட்டு' கொடுத்தல்" எனப்படுகிறது. பொதுவாக "தண்டு சாய்தலை" சரிபார்க்கவே இம்முறை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வரிசைக்கும் தனித்தனியாகவோ அல்லது 2 வரிசைகளை ஒன்றாக இணைத்தோ முட்டுக் கொடுத்தல் மேற்கொள்ளலாம். பயிரின் 210 வது நாளில் முட்டுக் கொடுத்தல் முறை செய்யப்படுகிறது
கரும்புப் பயிரில் அதிக மகசூல் பெறுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை?
மேட்டு நிலத்தில் பயிரிடுவது, பரிந்துரைக்கப்பட்ட இரகத்தை உபயோகிப்பது; முன்னரே நடவு செய்தல்; பரிந்துரைக்கப்பட்ட அளவு உரத்தை உபயோகிப்பது; பாசனம் அளிப்பது; போதுமான அளவு பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை.
அரும்பு/மொட்டு துண்டு வெட்டும் இயந்திரத்தின் விலை என்ன?
அரும்பு/மொட்டு துண்டு வெட்டு (சீவல்) இயந்திரத்தின் விலை டிகே (ஜிரி) 4000.00
ஒரு எக்டர் அரும்பு துண்டு வெட்டுவதற்கு எவ்வளவு வேலையாட்கள் தேவைப்படுகின்றனர்?
ஒரு எக்டருக்கு விதை பொருளான அரும்பு துண்டு வெட்டுவதற்கு 3-5 ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
பூச்சி மற்றும் நோய்
கரும்புப் பயிரில் பெரும்பாலான நன்மை விளைவிக்கும் பூச்சிகள் என்ன?
-
டிரைக்கோகிராமா சிலோனிஸ் இஸ்ஸீ
-
டெலினோமஸ டிக்னாய்டெஸ் னிக்ஸான்
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவியுள்ள கரும்புப் பயிரைத் தாக்கும் உறிஞ்சும் பூச்சிகள் யாவை?
வெள்ளை ஈ, செதில் பூச்சிகள், கம்பளி அசுவுணி, மாவுப் பூச்சி, இலைத்தத்துப் பூச்சிகள், ஆகியவை தமிழ்நாட்டின் குறித்த இடங்களில் கொள்ளை நோய் மற்றும் குறித்த இடத்தில் பரவுகின்ற நோயாகவும் பெரும் அளவில் பரவியுள்ளன.
தமிழ்நாட்டு பரப்பில் கரும்புப் பயிரைத் தாக்கும் தீவிரமான பூச்சி எது?
தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வெள்ளை வேர்ப்புழு முதன்மை பூச்சியாக விளங்குகின்றது. முதன்மை பயிரை விட கட்டைப்பயிரில் இப்பூச்சியின் சேதம் பெருமளவில் காணப்படுகின்றது. வேர்ப்புழுவானது மண்ணுக்குள் வாழ்ந்து, பயிரின் வேர்ப்பகுதியினை உட்கொண்டு, விரைவில் கரும்பு அழுகல் மற்றும் காய்தல் நோய் ஏற்படுகிறது. தீவிர தாக்குதல் இருப்பின், மொத்த பயிர் சேதம்/இறப்பு ஏற்பட நேரிடலாம்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவியுள்ள கரும்புப் பயிரைத் தாக்கும் முக்கிய நோய்கள் யாவை?
கரும்புப் பயிரைத் தாக்கும் தீவிரமான நோய் "செவ்வழுகல் நோய்" இந்நோயை அடுத்து, தமிழ்நாட்டில் கரும்புப்பயிரைத் தாக்கும் அடுத்த முக்கியமான நோய் "கரிப்பூட்டை நோய்" ஆகும்.
கரும்பு முதிர்ச்சி அடைய என்ன தேவை? அதனை எப்பொழுது தெளிக்க வேண்டும்?
சோடியம் மெட்டாசிலிகேட் 4 கிலோ/எக்டர் அளவை 750 லிட்டர் நீருடன் கலந்துநடவு செய்து 6 மாதத்தில் பயிரின் இலைத் பகுதியில் தெளிக்க வேண்டும். மீண்டும் பயிரின் 8 வது மற்றும் 10 வது மாதங்களில் இதனையே தெளிக்க வேண்டும். இதனால் அதிக கரும்பு மகசூல் மற்றும் அதிக சர்க்கரை சதவிகிதம் கிடைக்கின்றது.
கரும்புப் பயிர் அறுவடைக்குப்பின் வயலில் மேற்கொள்ளப்படும் மேலாண்மை முறைகள் என்ன?
சிறந்த கரும்புப் பயிர் நிலைநாட்டத்திற்கும், சீரான தண்டு முளைப்பிற்கும், முதன்மை பயிர் அறுவடை செய்து 10 நாட்களுக்குள், கீழ்வரும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்
-
வயலிலிருந்து சருகுகளை அகற்ற வேண்டும். அதனை எரிக்கக் கூடாது. முறையான பாசனம் செலுத்த வேண்டும்.
-
தகுந்த ஈரத்தன்மையுடைய பார்களைச் சுற்றி 4-6 செ.மீ ஆழத்திற்கு கூர்மையான மண்வெட்டியைக் கொண்டு தாள் சீவுதல் மேற்கொள்ள வேண்டும்.
-
கெட்டியான மண்ணை உடைப்பதற்கு, கூடை போன்ற கலப்பையைப் பார்களின் இருப்பக்கங்களில் பயன்படுத்தலாம்.
-
தாள் சீவுதல் செய்து 30 நாட்களுக்குள் கட்டைப் பயிரில் உள்ள சந்துகளை நிரப்புதல் வேண்டும். ஒரே வயலிலிருந்து எடுக்கப்படும் முளைவிட்ட (கரும்புத் தாள்களே முழு பயிர் நிலைநாட்டத்திற்கு ஏற்ற சிறப்பான பொருளாகும். பாலித்தீன் பைகளில் வளர்க்கப்பட்ட நாற்றுக்கள் சந்து நிரப்புதலுக்கு ஏற்ற அடுத்த சிறந்த முறையாகும்.
-
முதன்மை கரும்புப் பயிருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அதே கரிம எரு மற்றும் சூப்பர் பாஸ்பேட் (உயர் எரிகை) இரண்டையும் அடியுரமாக அளிக்க வேண்டும்.
நுனித்தண்டு துளைப்பான்(குருத்துப் புழு)
இளங்குருத்துப் புழுவை கட்டுப்படுத்துவதற்கான வேதியியல் முறைகள் என்ன?
15 சதவிகிதம் அழுகிய குருத்தின் பொருளாதார மாறுநிலை அளவை அடைந்தபின் கீழ்காணும் ஏதோ ஒரு பூச்சிக் கொல்லியினை பயன்படுத்த வேண்டும்.
-
மண்ணில் இடுதல்: லின்டேன் 10 ஜி 12.5 கிலோ (அ) கார்போஃப்யூரான் 3 ஜி 33 கிலோ (அ) கலோர்பைரிபாஸ் 10 ஜி 12.5 கிலோ /எக்டர் என்ற அளவில் மண்ணில் அளிக்க வேண்டும்.
-
தெளித்தல்: மோனோக்ரோபாஸ் 36 WSC 1000 மிலி (அல்லது) என்டோசல்பான் 35 EC 1000 மிலி (அ) கலோர்பைரிபாஸ் 20 EC 1000 மிலி (அ) பாஸலோன் 35 EC 1000 மிலி ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
-
கரும்பு நுனித்தண்டு துளைப்பானுக்கு புதிய இரசாயணம்: ரீஜென்ட் 3 ஜி @ 75 கிராம் எ.ஐ/எக்டர் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு, விசைத் தெளிப்பானைப் பயன்படுத்தி அரை லிட்டர் என்டோசல்பான் தெளித்தும், நுனித்தண்டு துளைப்பானை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?
கொல்லும் தன்மையுடைய அளவு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தல் மற்றும் விசைத்தெளிப்பானை பயன்படுத்தக் கூடாது. நுனித்தண்டு துளைப்பானுக்கு என்டோசல்பானை விட கலோர்பைரிபாஸ் 20 இசி சிறந்த பூச்சிக்கொல்லியாகக் கருதப்படுகிறது. ஏக்கருக்கு 2 லிட்டர் என்ற அளவில், (50 மிலி + 10 லிட்டர் நீருடன்) கலந்து தெளிக்க வேண்டும். 10 லிட்டர் பூச்சிக்கொல்லிக் கரைசலை 100 மீட்டர் வரிசை நீளத்தில் தழை (இலைத்தொகுதிகளில்) தெளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் பூச்சிக்கொல்லி மற்றும் 400 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதிகக் கொள்ளளவு மருந்து தெளிப்பான்களான முதுகில் சுமக்கும் காற்றழுத்த முறையில் இயங்கும் தெளிப்பான் அல்லது கையால் அசைத்து இயக்கும் தெளிப்பானைக் கொண்டு இலை வட்டமைப்பு மற்றும் கழுத்துப் பகுதிகள் அனைத்தும் நனையுமாறு தெளிக்க வேண்டும்.
நுனித்தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதற்கு விசைத் தெளிப்பானைக் கொண்டு ஏன் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கக் கூடாது?
இலையுறையின் உட்பகுதி மற்றும் தண்டுகளின் கழுத்துப் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தினை நன்கு தெளிப்பின், பயிரினை வெகுவாகத் தாக்கும் நுனித்தண்டுத் துளைப்பானை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும். பயிரின் ஒவ்வொரு தண்டின் பகுதிகளை மருந்து அடைவதற்காக, அதிகக் கொள்ளளவு மருந்து தெளிப்பானை பயன்படுத்துவதே சிறந்தது. இந்த தெளிப்பான் மூலம், பயிர் தண்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் மருந்து சென்றடைய முடிகிறது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள வரிசையின் நீளத்திற்கு பயன்படுத்தும் தெளிப்பு மருந்தின் அளவு ஏற்றதாக உள்ளது. இலைத் தொகுதியை உட்கொள்ளும் பூச்சிகளைத் தடுப்பதற்கு விசைத்தெளிப்பான் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
நுனித்தண்டு துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு "செவிடால் 8 ஜி" பயனுள்ளதாக இல்லையா?
பொதுவாக குறுணை உருவக பூச்சிக்கொல்லிகள் பயிரின் இலக்கானப் பகுதிகளை முழுவதுமாக அடைய முடியாது. ஆனால் குழம்புத் திரண்டு (திரவ மருந்து பால்மமாகும் செறிவு) உருவகம் தொடர்புச் செயலுக்கு ஏற்றது. இருப்பினும் குருணைகளை மிகச் சிறிய தண்டுகளின் இலை வட்டமைப் பகுதியில் அளிக்கப்பட்டும் அதன் எண்ணிக்கை ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சம் என்பதே சற்று சிரமமானது. குருணைகளின் செறிவுத் தன்மையைக் குறைக்க அதனுடன் மணல் கலக்க வேண்டும். மணலும், குருணைகளும் நன்றாக கலக்காததால், நிறைய தண்டுப்பகுதிகளுக்கு பூச்சிக்கொல்லி குறுணைகளை பெற முடியாமலும்/மிகக் குறைந்த அளவிலுமே சென்றடைகிறது. மேலும் புகைமூடிப்பொருளான "கார்பரைலின்" சிறிதளவு புகைமூட்டித் தன்மை திறந்த வெளியில் விளைவினை ஏற்படுத்தாது. "செவிடால்" பூச்சிக்கொல்லியின் "காமா - பிஹச்சி (BHC) செயலின் சற்று ஊடுருவும் தன்மையாலும் கட்டுப்படுத்த முடியாது. முழுவதும் ஊடுருவும் தன்மை கொண்ட ஃப்யூரான்" அல்லது "டெமிக்" ஆகியவற்றாலும் நுனித்தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், கலப்புப் பூச்சிக்கொல்லிகளான "செவிடால்" ஆய்வறிவு சாராத ஒன்றாகும். ஏனெனில் இரண்டு பூச்சிக்கொல்லிகளையும் குறுக்கு எதிர்ப்புத் திறனால் பயனற்றதாகி விட்டது. மேலும், "செவிடாலின்" ஒரு கூறான, "காமா பிஹச்சி" (BHC) ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
"லிண்டேன்", "க்லோரோபைரிபாஸ்" அளிப்பிற்குப் பின்னும் நுனித்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் என்ன?
முன்னர் கூறியவாரே, பூச்சிக்கொல்லி மருந்து அளிக்கும் செயல்முறையைப் பின்பற்றினால், நுனித்தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் இப்பூச்சியினால் உருவாகும் குறுத்து அழுகல் நோய் ஏற்படுவதற்கு சில நாட்களிலிருந்து சில வாரங்கள் எடுத்துக் கொள்ளும். தண்டின், வளர்நிலை, அதன் வயது, பரவியுள்ள வானிலை இரகத்தன்மையைப் பொருத்து அழுகல் நோய் ஏற்படும். பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்த பின்னும், குறுத்து அழுகல் நோய் காணப்பட்டால், முன்னரே அவை நுனித்தண்டு துளைப்பானால் தாக்கப்பட்டவை என்றும் பூச்சிக்கொல்லி மருந்து அளிக்கும் தருணத்தில் காய்தல் ஏற்படத் துவங்கியுள்ளது என்றும் கண்டறியப்படுகிறது.
பூச்சிக்கொல்லி மருந்தினைத் தவிர நுனித்தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதற்கான மற்ற முறைகள் என்ன?
தொடர்ச்சியான பாசனம் மற்றும் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்தல், புதிய ஈடுசெய்யும் தண்டுகளை இயற்கையாக உருவாகத் துாண்டும் தண்டுகளையே நுனித்தண்டு துளைப்பான் தாக்குதல் அழித்து விடுகிறது. பாசனம் அளிப்பதால், ஈடுசெய்யும் தண்டுகள் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி மேம்படுகின்றது. தொடர்ச்சியான பாசனம் இல்லாத வயலில், ஈடுசெய்யும் தண்டுகள் உருவாகாது. மேலும் வயலில் தாக்குதல் ஏற்பட்ட இடங்கள் இடைவெளி/சந்துடையதாகக் காணப்படும். 'கிரானுலோஸிஸ் நச்சுயிரி' 1.5 x 1012 பிஐபீ/எக்டர் என்ற அளவில் நடவு செய்து 35 வது மற்றும் 50 வது நாளில் இரு முறை தெளிக்க வேண்டும். அல்லது "ஸ்டர்மியோப்சிஸ் இன்ஃப்ரன்ஸ்", 125 பெண் பூச்சிகள்/எக்டர் என்ற எண்ணிக்கையில் நடவு செய்து 30 மற்றும் 45 வது நாளில் விட வேண்டும்.
இனக்கவர்ச்சிப் பொறிகள் என்றால் என்ன?
பூச்சி முன் எச்சரிக்கைத் திட்டத்தின் மூலமாக வயலில் உள்ள பூச்சிகளின் இருப்பைக் கண்டுபிடிப்பதற்கும், தகுந்த பூச்சிக்கொல்லிகள் அல்லது உயிரி கட்டுப்பாட்டு இயக்கிகளைப் பயன்படுத்தி தகுந்த நேரத்தில் தோன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்பைத் தருவதற்கும் "இனக்கவர்ச்சிப் பொறிகள்" முக்கியமான சாதனமாய் விளங்குகின்றது. இனக்கவர்ச்சிப் பொறிகள் என்பது வஞ்சக்கவர்ச்சிப் பொருள் இதில் பெண் இன வளர்ச்சிப் பொருள்கள் உள்ளதால் ஆண் இனப் பூச்சிகளை எளிதில் கவரக்கூடிய தன்மை கொண்டது. கவர்ச்சி ஊக்கிப் பொருளை மருந்து வைக்கும் தட்டில் வைத்து பின் பொறியில் வைக்க வேண்டும். தட்டில் வைக்கப்பட்டு இருக்கும் கவர்ச்சி ஊக்கிப் பொருளானது படிப்படியாக ஆவியாகி பின் ஊடுபரவல் செயற்முறையின் மூலம் காற்றில் கலக்கிறது. ஆண் இனப் பூச்சிகள் கவர்ச்சி ஊக்கப்பொருளின் வாசனையைப் பெற்று அதனுள் செல்கிறது. பின் இவை பெண் இனக்கவர்ச்சிப் பொறியாய் இயங்கி, ஆண் இனப்பூச்சிகளைக் கவர்கிறது. சாகடிக்கும் தன்மை மற்றும் புகைமூடு விளைவுடைய பூச்சிக் கொல்லிகளான டைக்லோர்வாஸ்/மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிடிபட்ட ஆண் இனப் பூச்சிகளைக் கொல்ல முடிகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் ஆண் இனப் பூச்சிகள் பெண் இனத்துடன் இணைந்து (உறவு கொண்டு) அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை உற்பத்தி செய்துவிடும். ஒருமுறை பூச்சிகள் பொறியினுள் சென்றுவிட்டால், பின் அது வெளியில் வர இயலாது.
இனக்கவர்ச்சி பொறிகள் எங்கிருந்து கிடைக்கும்?
"தி ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் மறறும் கெமிக்கல்ஸ் லிமிடெட்" (ராஜ்ஸ்ரீ சர்க்கரை மற்றும் இராசாயணம் உற்பத்தி நிறுவனம்) வரதராஜ் நகர், வைகை அணை, 625 562 மற்றும் "தேனீ மற்றும் பூச்சிக்கட்டுப்பாடு இந்தியா நிறுவனம்", பெங்களூரு ஆகியவை இனக்கவர்ச்சி ஊக்கப் பொருளை உற்பத்தி செய்கிறது. முன்னர் கூறிய நிறுவனம் ஒரு ஏக்கருக்கு எட்டு பொறிகளைப் பரிந்துரைக்கிறது. பின் கூறிய பெங்களூரு நிறுவனம் ஏக்கருக்கு நான்கு பொறிகளைப் பரிந்துரை செய்கிறது. ஆனால் நுனித்தண்டு துளைப்பானின் சிறப்பான கட்டுப்பாட்டு முறைக்கு, ஒரு ஏக்கருக்கு 10 பொறிகள், பொறியின் உயரம் 45 செ.மீ மற்றும் வாரந்தோறும் நீர் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்புதல் ஆகியவை மேற்கொள்வது அவசியம்.
ஒரே இனக்கவர்ச்சி ஊக்கியை அனைத்து பூச்சிக்களுக்கும் பயன்படுத்தலாமா?
ஒரே பொறியை எல்லா பூச்கிளுக்கும் உபயோகிக்கலாம் ஆனால் ஒரே கவர்ச்சி ஊக்கப் பொருளை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு சிற்றினத்திற்கும் வேறுபட்ட கவர்ச்சி ஊக்கிகள் இருக்கும் அதனால் குறிப்பிட்ட ஒன்றையே பயன்படுத்த வேண்டும்.
நிறுவனங்களால் வழங்கப்பட்ட இழுவை இடைபொருளில் எந்தவிதமான சிறப்பு வாசனையும் இல்லை? அவை மெய்யானவை என்று எவ்வாறு கண்டறிவது?
குறிப்பிட்ட பூச்சி சிற்றினத்திற்கு மட்டுமே அதன் வாசனையை உணர முடியும், மேலும் மற்ற எந்த ஒரு பூச்சி இனத்தாலும் அந்த வாசனையை கண்டுபிடிக்க முடியாது. பொறிகளிலிருந்து பல மாத சேகரிப்புகளை வைத்து, அதில் அந்திப்பூச்சி உருவாக்கத்தின் மூலமாக, இடைப்பொருள் மெய்யானவை என்பதை உறுதி செய்ய முடிகிறது.
இனக்கவர்ச்சி ஊக்கியின் பக்க விளைவுகள் யாது?
வஞ்சக் கவர்ச்சிப் பொருளில் பயன்படுத்தும் அளவு 3 மி.கிராம் அளவில் இருப்பின், எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் அல்லது எதிர்க்கும் திறனுடைய இரகங்களின் மூலம் கிடைக்காத சில நன்மைகளை இதன்மூலம் பெற முடியும்.
இடைக்கணுப்புழு கட்டுபாட்டிற்காக இனக்கவர்ச்சி பொறிகள் வைக்கப்பட்டிருக்கும் வயலில் அதன் தாக்குதல் அதிகமாய் உள்ளது. ஆனால் அடுத்தாற்போல் உள்ள வயலில் இனக்கவர்ச்சிப் பொறிகள் வைக்கவில்லை இடைக்கணுப்புழுவின் தாக்குதலும் குறைவாக உள்ளது. இதன் காரணம் என்ன? ஒருவேளை அந்த வயலில் இருக்கும் அந்திப்பூச்சிகள் நம்முடைய வயலுக்கு கவரப்பட்டிருக்குமோ?
நிகழ முடியாதவை. ஏனெனில் பக்கத்து வயலில் இருந்து அந்திப்பூச்சிகள் நம் வயலில் உள்ள கவர்ச்சி ஊக்கியால் கவரப்பட்டிருந்தால், நம்முடைய வயலில் இருக்கும் பூச்சிகள் தான் அதிகமாய் இனக்கவர்ச்சி ஊக்கியுடைய பொருளில் கவரப்பட்டிருக்க வேண்டும்.
இனக்கவர்ச்சிப் பொறி வைக்கப்பட்டிருக்கும் வயலில், இந்த சாதனத்தை நன்றாக பராமரிக்கவில்லை எனில், அருகிலுள்ள வயலிலிருந்து கவரப்பட்டிருக்கும், அந்திப்பூச்சிகளைக் கொல்ல முடியாது. இதனால் பொறி வைக்கப்பட்டிருக்கும் வயலில் அந்திப்பூச்சியின் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுதான் தாக்குதலை அதிகப்படுத்தியிருக்குமா?
இல்லை. கவரப்பட்ட அந்திப்பூச்சிகள் ஆண் இனம் மற்றும் பெண் இனப் பூச்சிகளே. எனவே அவற்றை சாகடிக்கவில்லை என்றாலும் கூட அவற்றால் முட்டைகளே இடமுடியாது. மேலும் உள்ளூர் வாசி ஆண் இனப் பூச்சிளுடன் இணைந்த பெண் இனப் பூச்சிகள் மறுபடியும் இணையது (உறவு கொள்ளாது). அதனால் பூச்சித்தாக்குதல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
சருகு நிலப்போர்வையிடுதல் மூலுமாக நுனித்தண்டுத் துளைப்பானின் தாக்குதலைக் குறைக்க முடியுமா?
முடியும். சிறிய மற்றும் சற்றே வெளிவந்த நுனித்தண்டு துளைப்பான் புழுக்களுக்கு சருகுகள் எந்திர தடையாக விளங்குகின்றது. அந்த பயிர் வயதின் பொழுது, ஒரு கொத்துலிருந்து மற்றொரு கொத்துக்கு மண் மேற்பரப்பு வழியாகத் தான் புழுக்கள் சென்றடைய முடியும். அருகிலுள்ள கொத்துக்களின் இலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது . மேலும் பொதுவான கொன்றுண்ணிகளான, சிலந்திகள், தரைவண்டுகள் ஆகியவற்றுள் வளர்ச்சியை மேம்படுத்துகின்றது. இதனால் அந்திப்பூச்சி மற்றும் வெளிவரும் புழுக்களை அவை கொன்று உண்ண முடிகிறது. இருப்பினும் வெட்டுப்புழு மற்றும் எலிகளால் ஏற்படும் சேதம் நிலம் போர்த்திய வயலில் அதிகமாய் காணப்படுகின்றது.
35 வது நாளில் மேற்கொள்ளப்படும் கனமில்லாத "மண் அணைத்தல்" முறை நுனித்தண்டு துளைப்பான் தாக்குதலைக் குறைக்குமா?
இல்லை, ஏனெனில், எவ்வளவு அதிகமான மண் அணைத்தலின் மூலமாகவும் மூட முடியாத இலையுறை மற்றும் தண்டுகளுக்குக் கிடையே அமைந்த இடைவெளியில், மண்ணுக்கு கீழேயுள்ள தண்டின் அடிப்பகுதியில் வழிதேடி உள்சென்று விடுகின்றன. மிகச்சிறிய புழுக்கள். அதனால் இதனின் தாக்குதலை 35 வது நாளில் மேற்கொள்ளப்படும், மண் அணைத்தலின் மூலம் குறைக்க முடியாது.
பயிரின் அழுகிய தண்டுகளில் அதிக அளவு சிறிய வெண்புழுக்கள் காணப்படுகின்றது. அவை துாண்டு காரணிகளாக செயல்படுமா?
இல்லை. நுனித்தண்டு துளைப்பான் புழு மிகப் பெரியதாகவும், ஒன்று அல்லது அரிதாக இரண்டு மட்டும் தண்டுகளில் இருக்கும். அழுகிய தண்டுகளில் இருக்கும் சில சிறிய புழுக்கள் சாறுண்ணியின் புழுக்களாகும். அவை அழுகிக் கொண்டிருக்கும். பயிரில் வளர்வதால், வளரும் பயிரினைத் தாக்காது. நுனித்தண்டு துளைப்பான் புழுக்களை சேகரிக்க வேண்டுமெனில், நுார்பு கதிர் வாடல் ஏற்பட்டிருக்கும். தண்டுகளில் (காயாத தண்டுகள்) நுனித்தண்டு துளைப்பான் புழுக்கள் காணப்படும். அவற்றினை சேகரித்து அழிக்கலாம்.
இடைக்கணுப்புழு
கரும்பின் தரத்தை இறுதிவரை குறைக்கும் இடைக்கணுப்பகுதியை தாக்கும் பூச்சி என்ன?
இடைக்கணுப் புழுவானது பயிரின் 4 வது மாதத்திலிருந்து பயிரைத் தாக்கத் தொடங்கி அறுவடை வரை நிலைத்திருக்கும். இப்புழுவானது பயிரின் கணுப்பகுதிகளைத் தாக்கி கண்ணுக்குத் தெரியும் அளவு துளைக் குழியை ஏற்படுத்துகிறது. தாக்கப்பட்ட பயிர்களில் கணு முளைப்பு மற்றும் ஓட்டையில் பூச்சிக் கழிவு பொருட்களோடு காட்சியளிக்கும்.
இடைக்கணுப் புழு எவ்வாறு கரும்புப் பயிரில் நுழைந்து விளைவை ஏற்படுத்துகிறது?
புழுக்கள் பயிரின் கணுப்பகுதியில் துளைவிட்டு, தண்டுகளுக்குள் சென்றடைகிறது. அதன் உட்கொள்ளுதல், உயிரணுத் தொகுப்பினை சிகப்பாக மாற்றுகிறது. நுழைவு ஓட்டை பெரும்பாலும் புழுக்களின் கழிவுப் பொருளால் அடைக்கப்பட்டிருக்கும். ஒரு புழு அதிக எண்ணிக்கையிலான கணுக்களை தாக்குகின்றது.
கரும்பில் இடைக்கணுப் புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
முட்டை ஒட்டுண்ணியான, டிரைக்கோகிரம்மா சிலோனிஸ்யை ஒரு எக்டருக்கு ஒரு முறைக்கு 2.5 சி.சி என்ற அளவில் விடுவிக்க வேண்டும். 4வது மாதத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை முட்டை ஒட்டுண்ணியை விடுவித்தல் முக்கியமானது. மழைக்கால பருவத்திலும், எறும்புகள் இருக்கும் நேரத்திலும், கொசுவலையால் மூடப்பட்ட துாக்கி எரியும் குழைமப் கோப்பையில் (பிளாஸ்டிக் கோப்பை) ஒட்டுண்ணியை விடுவிக்க வேண்டும்.
பயிர் செய்து 150 மற்றும் 210 வது நாளில் தோகை உரித்தல் மேற்கொள்ள வேண்டும்.
கரும்பில் குருத்து அழுகல் நோய் ஏற்படுவதற்கான தகுந்த காரணம் என்ன?
மேல் குருத்துப் புழு கரும்புப் பயிரின் தீவிரமான பூச்சியாதலால், குருத்து அழுகல் நோயை உருவாக்குகிறது. பயிரின் 6 வது மாத நிலையிலிருந்துதான் இதன் தாக்கத்தைக் காண முடியும். பாதிக்கப்பட்ட கரும்பில், மத்திய இலைவட்டமைப்புப் பகுதியில்தான் குருத்து அழுகல் காணப்படும். இவை எளிதாக இழுத்து பிடுங்க முடியாது. மேல் அரும்புகள் கொத்தாய் முளைத்திருப்பது பயிருக்கு முடிக் கொத்துத் தோற்றத்தை அளிக்கிறது. மேல் குருத்துப் புழுவால் சிதைவடைந்த பயிர், குறைந்த மகசூலைத் தருவதோடு அதன் சர்க்கரை தன்மை இழப்பும் ஏற்படுகிறது.
“டிரைக்கோகிரேம்மா சிலோனிஸ்” ஒட்டுண்ணியை விடுவித்த பின்னரு இடைக்கணுப் புழுவால் ஏற்பட்ட குருத்து அழுகல் நோய் குறையாததற்கு காரணம் என்ன?
இடைக்கணுப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு “டிரைக்கோகிரேம்மா சிலோனிஸ்”, பயனுள்ள/ஏற்றதான ஒட்டுண்ணி அல்ல. எனவே, இந்த ஒட்டுண்ணி விடுவிப்பு இடைக்கணுப்புழு மேலாண்மைக்கு உதவாது.
இடைக்கணுப்புழு மேலாண்மைக்கு சருகு உரித்தல் பயனுள்ளதான முறையா?
இது மட்டுமே தனிமுறை மேலாண்மை அல்ல. சருகு உரித்தல் முறையானது புழு தாக்குதலை 2-4 சதவிகிதம் வரை மட்டுமே குறைக்கிறது.
இடைக்கணுப் புழு மேலாண்மைக்கு இனக்கவர்ச்சி ஊக்கிப் பொருள் பயனுள்ளதா?
கிடைத்திருக்கும் முறையில் இனக்கவர்ச்சி ஊக்கிப் பொருள் சிறந்த முடிவை அளிக்கிறது. அதாவது ஒரு எக்டருக்கு 25 பொறிகள் வைப்பது. மேலும் அதன் உயரம் 90-120 செ.மீ ஆக பொருத்தி வைத்தல் .வேண்டும். இனக்கவர்ச்சி பொறியினை பயிரின் 5 வது மாதத்தில் வைப்பதோடு தவறாமல் வாரந்தோறும் நீர் மற்றும் மண்ணெண்ணெய் அளவு பராமரிக்கப்பட வேண்டும். 45-50 நாட்களுக்கு ஒரு முறை கவர்ச்சிப் பொருளை மாற்ற வேண்டும். கூடுதலாக, கவர்ச்சிப் பொருளின் தரம் மற்றும் கூடுதல் பொருளை சேமிக்கும் முறை ஆகியவை விவசாயின் திறமையை வெளிபடுத்துகிறது. இவற்றில் ஏதோ ஒரு நோக்கினை செயல்படுத்த வில்லையெனில், இடைக்கணுப்புழுவைக் கட்டுப்படுத்த முடியாது.
எந்த பயனும் தராத ஆண் இனப்பூச்சிகள் மட்டும் இனக்கவர்ச்சி பொறிகள் கவர்கின்றன ஏன் பெண் இனப் பூச்சிகளையும் கவரச் செய்தல் கூடாது?
ஆண் மற்றும் பெண் அந்திப் பூச்சிகள் இணைவதன் மூலமாகத் தான் பூச்சிகளில் இனப்பெருக்கம் ஏற்படுகிறது. இயற்கையில் இடைக்கணுப்புழுவிற்கு, ஆண் மற்றும் பெண் இனப் பூச்சி விகிதம் 50:50. மேலும் பெண் இனப் பூச்சிகள் அதன் வாழ்நாளில் ஒரு முறை (8-10 நாட்கள்) மட்டுமே இணையும். அதனால் ஏதாவது ஒரு இனம் அழிந்துவிடும் பொதுவாக பெண் இனப் அந்திப்பூச்சிகள் தான் இனக்கவர்ச்சிப் பொருளை உருவாக்கும். நம் நன்மைக்கு ஏற்ப அதனை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முன்னரே இணைந்த (உறவு கொண்ட) ஆண் இனப் பூச்சிகள் இனக்கவர்ச்சி பொறியால் கவரப்படுகின்றன. பின் பொறி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
இடைக்கணுப்புழுவின், பெண் இன அந்திப் பூச்சிகளை போல அல்லாது, ஆண் அந்திப் பூச்சி அதன் வாழ்நாளான 7 நாட்களில், 4-6 நாட்கள் வரை, தினமும் ஒரு புதிய பெண் பூச்சியை கற்பமடைச் செய்ய முடிகிறது. இதனால், பிடிபட்டிருக்கும் ஆண் பூச்சி புது பெண் பூச்சியோடு தொடர்ந்து இணைவதைத் தடுக்கிறது.
எனவே விரைவாக பூச்சிகளைப் பிடிப்பதால் சிறப்பான கட்டுப்பாடு மற்றும் நேரத்திற்கு பொறியை இயக்கச் செய்தல், முறையான பொறியை பராமரித்தல் ஆகியவை மிகவும் முக்கியமானது.
இடைக்கணுப்புழு தாக்குதல் தற்காலத்தில் அதிகரிப்பதற்கான காரணம் யாது?
இடைக்கணுப்புழு இடைக்கணுவில் தாக்குதல் ஏற்படுத்துவதை முன்பே செய்தது, ஆனால் குருத்து அழுகல் நோயை ஏற்படுத்தாது. எனவே சருகு உரிக்கும் வரை விவசாயிகளுக்கு இடைக்கணுப் புழுவின் தாக்குதல் பற்றி தெரியாது. இருப்பினும் 1989-லிருந்து இடைக்கணுப்புழுவின் தாக்கும் தன்மை மாறிவிட்டது. வளர்திசுக்களை அழித்து, குருத்து அழுகல் நோய் ஏற்படும். அதேபோன்று மேற்குருத்து புழு சிதைவுப் போலவே முடிக்கொத்து நோய் போன்ற தோற்றம் அளிக்கும். இதன் அறிகுறி மிகவும் கண் கூசக்கூடிய ஒளித் தன்மையுடனும், கண்ணால் காணக்கூடியதாகவும் இருக்கும். தவிர கோ 86032 இரகம் எளிதில் நோய் ஏற்கும் தன்மையுடையது. குறிப்பாக, பயிரின் 7 வது மாதத்திலிருந்து வளர்திசு சேதம் ஏற்படும். தமிழ்நாட்டில் 80 சதவிகிதம் இந்த இரகத்தினைப் பயிரிடுவதால் பெரும்பாலும் இந்நோயினைப் பற்றியும் அதன் சிதைவுகளையும் அனைத்து விவசாயிகளும் அறிவர்.
மேல் குருத்துப் புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
ஐசோடிமா ஜோவன்சிஸ் 100 ஜோடி/எக்டர் (அல்லது டிரைகோகிராம்மா ஜபோனிகம் @ 2.5 சிசி / எக்டர் ஆகிய ஏதோ ஒட்டுண்ணியை புழு தோன்றிய அறிகுறிகள் ஆரம்பமானதிலிருந்து இரண்டு வார இடைவெளிகளில் 4-6 முறை விடுவிக்க வேண்டும்.
மேல்தண்டு துளைப்பான் எவ்வாறு கரும்புப் பயிரில் நுழைந்து விளைவை ஏற்படுத்துகிறது?
கரும்பின் 3 வது மாதத்திலிருந்து புழுக்கள் பயிரினை சேதப்படுத்துகின்றன. முதலில் இலைகளின் மைய நரம்புப் பகுதியைத் துளையிட்டு சிகப்புநிற அடையாளத்தை விட்டுச் செல்கிறது. பொதுவாக மேலிருந்து இரண்டு-ஐந்து இலைகளையே அதிகமாய் தாக்குகிறது. நுாற்புக்கதிர் தாக்குதலின் முடிவாக இலையில் துப்பாக்கிக் குண்டு போன்ற துளைகள் உருவாகிறது. பின் புழுக்கள் கரும்புக்குள் நுழைந்து பின் வளரும் பகுதியை சேதப்படுத்தி, உட்புற வளர்ச்சி திசுக்களை உண்டு, பக்கத்தண்டு வளர்வதை சேதப்படுத்தி இறுதியில் "தலைக் கொத்து நோய் ஏற்படுகிறது. உருவான குருத்து அழுகல் நோய் சிவப்பு பழுப்பு நிறமாக மாறுகிறது. பின் கருகிய நிலையில் தோற்றமளிக்கும் இதனை இழுத்துப் பிடுங்குவது சிரமம்.
எந்தப் பருவங்களில் மேல்தண்டு துளைப்பான் பயிரினை தாக்குகிறது?
பருவமழைப் பொழிவு ஆரம்பமாதலிலிருந்து மேல்தண்டு, துளைப்பானின் செயல்கள் தொடங்குகின்றன.
இடைக்கணுப் புழு மற்றும் மேல் குருத்து புழுவால் ஏற்படும் குருத்து அழுகல் நோயினை எவ்வாறு வேறுபடுத்துவது?
இடைக்கணுப்புழு தாக்குதலால், நுாற்புழுக் கதிர் இலைகள் அழுகி, மேலும் கீழிருக்கும் ஒன்று அல்லது இரண்டு இலைகளும் காய்ந்துவிடும். ஆனால் மேல் குருத்துப் புழுவின் "குருத்து அழுகல்" நோயால் உட்பகுதி இலைகள் மட்டும் காய்ந்துவிடும். இடைக்கணுப் புழுவின் குருத்து அழுகல் நோய் மிகவும் முதன்மையானது. மற்றும் வைக்கோல் நிறத்துடன் காட்சியளிக்கும். இழுக்கும்போது நுாற்புக் கதிரிலிருந்து சாய்ந்து, வெளியே வந்துவிடும். கீழ்ப்புறப்பகுதி காய்ந்த அறிகுறிகளோடு நிறமின்றியும், சில சமயத்தில் உயிரற்ற நுண்ணுயிரி ஈ போலவும் காட்சியளிக்கும். மேல் குருத்துப் புழுவின், "குருத்து அழுகல்" நன்கு பழுப்பு நிறத்துடனும், சிறிய அளவிலும், துளைவிட்ட ஓட்டை இருந்தும் இல்லாமலும் காணப்படும். மேலும் இழுக்கும் பொழுது, அறுந்து காய்ந்த இலையின் பகுதி வெளிவரும். அடுத்தாற்போல் இருக்கும் பச்சை இலைகளில் ஒன்று அல்லது இரண்டு வரிசைகளில் துளைகள் காணப்படும். மேலும் கீழ்ப்புற பச்சை இலையில் மையத்துளைகள் ஏற்படும். இவை தான் இரண்டிற்கும் உள்ள முக்கியமான வேறுபாட்டு அறிகுறிகள்.
கரையான்கள்
இளக்க மண்ணில் கரையான் தாக்குதல் அதிகமாய் இருக்குமா?
அவ்வாறு இல்லை, கரும்பில், மொத்தம் 13 வகையான கரையான் சிற்றினங்கள் உள்ளன. அவற்றுள் சில இளக்க மண்ணிலும் சில வகைகள் கடின மண்ணிலும் காணப்படுகின்றன. எனவே கரையான் தாக்குதல் எல்லா வகை மண்ணிலும் காணப்படும்.
பாசனம் செய்வதால் கரையான்களைக் கட்டுப்படுத்த முடியுமா?
இல்லை. பாசனம் செய்வதால், அதிக ஈரத்தன்மை ஏற்பட்டு அதனால் கரையான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துகிறது. மீண்டும் உகந்த ஈரத்தன்மை அளவை அடைந்ததும், தாக்குதல் மறுபடியும் ஏற்படுகிறது.
கரையான் தாக்குதலில் இருந்து கரும்புப் பயிரை பாதுகாப்பது எப்படி?
"க்லோர்பைரிபாஸ்" 5 லிட்டர்/எக்டர் என்ற அளவை 1500-1800 லிட்டர் நீருடன் கலந்து, நடவு செய்யும்போது, சால்களில் தெளிக்க வேண்டும். இம்முறையால் கரையான்களைக் கட்டுப்படுத்த முடிகிறது.
வயலின் அருகில் கரையான் புற்று இல்லையென்றாலும்கூட வயலில் கரையான் காணப்படுவதற்கான காணரம் என்ன?
கரும்பில் உள்ள 13 வகையான கரையான் சிற்றினங்களில், அனைத்தும் நிலத்திற்குமேல் புற்றுகளை உருவாக்குவதில்லை. அவற்றில் 5 சிற்றினங்கள் நிலத்திற்கு கீழ் புற்றுகளை வைக்கின்றன. எனவே அவை கண்ணுக்குப் புலப்படாது.
கரையான் புற்றுகளை எவ்வாறு அடியோடு அழிப்பது?
ஒரு "செல்பாஸ்" மாத்திரையை எடுத்து புற்றின் ஓட்டைக்குள் போட்டு, அனைத்து துளைகளையும் சேற்றைக் கொண்டு அடைத்து விட வேண்டும். புற்களில் புகைப்போக்கித் துளை இல்லையெனில், ஒரு துளை அமைத்து, அதில் "செல்பாஸ்" மாத்திரை ஒன்றை உள்ளே போட்டு துளையினை அடைத்துவிட வேண்டும்.
உபயோகித்த இயந்திர எண்ணெய் அல்லது மண்ணெண்ணையை பாசன நீருடன் கலப்பது கரையான் தாக்குதலைக் குறைக்குமா?
இல்லை. கரையான் தாக்குதல் இங்கேயும் அங்கேயும் பத்தையாக காணப்படும். பாசன நீருடன் கலக்கப்பட்ட எண்ணெய் அனைத்து இடங்களிலும் சீராகப் பரவாது. மேலும் அதிக பரப்புகளை அடைவதற்கு, தேவைப்பட்ட அளவு எண்ணெயை கலக்க முடியாது. ஆனால், கரையானால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயந்திர எண்ணெயை அளிப்பதினால், தற்காலிகமாக கரையானைக் கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால், கரையான் தாக்குதலால் சேதம் அடைந்ததை விட எண்ணெய் உபயோகிப்பதால், அதன் வடிவமே நாசமாகி விடுகின்றது.
செதில் பூச்சி
செதில் பூச்சிக்கான கட்டுப்பாட்டு முறைகள் என்ன?
கட்டுப்பாட்டு முறைகள் மேற்கொள்ளும் அளவிற்கு செதில் ஒரு தீவிரமான பூச்சி இல்லை. சர்க்கரைத் தன்மையைக் கொண்டிருக்கும் சேமிப்பு உயிரணுவிலிருந்துதான் செதில் பூச்சி உணவை எடுத்துக் கொள்கிறது. மிகக் குறைந்த அளவு சர்க்கரையை மட்டுமே அதன் வளர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளுவதால், பெரிய அளவிலான சேதம் ஏற்படாது. ஏனெனில், இறந்துபோன செதில் பூச்சிகள் பயிர் அறுவடை அதன் இடைக்கணுவிலேயே ஒட்டிக்கொண்டு முழு பயிரில் தீவிர தாக்குதல் ஏற்பட்டதை போல தவறான தோற்றம் அளிக்கும். ஆனால் உண்மையில், பல மாதங்களில் இறந்த பூச்சிகள் அனைத்தும் கெட்டியாக உருவான தோற்றம் அளிக்கிறது. தொடு பூச்சிக் கொல்லிகளான "என்டோசல்பான்" அல்லது "டைக்லோர்வாஸ்" ஆகியவற்றை பூச்சி தாக்கப்பட்ட கரும்பு தண்டில் சருகு உரித்தலுக்குப் பின் அளித்தல் வேண்டும். இதனால் நன்கு முதிர்ச்சி அடைந்த செதில்களை மட்டுமே கொல்ல முடிகிறது. இளம்பூச்சிகள் அனைத்தும் இளம் இடைக்கணுக்களில் முன்னரே சென்றடைந்து விடுகிறது. இவ்விடைக்கணுக்கள் இலை உறைகளால் மூடப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து தாக்குதல் தொடர்கின்றது.
செதில் பூச்சி தாக்குதலுக்கு எதிராக எந்த பூச்சிக்கொல்லி மருந்தோடு கரணை நேர்த்தி செய்ய வேண்டும்?
கரணைகளை சற்று ஆழமாக நடவு செய்தால், கரணைகளை எந்தவிதமான பூச்சிக் கொல்லியோடும் நேர்த்தி செய்ய தேவையில்லை. ஏனெனில் நான்கு மாதங்களுக்கு, இடைக்கணு உருவாக்கம் வரை மண்ணுக்குக் கீழ் உள்ள கரணைகளில் செதில்கள் உருவாகாது. தாக்குதல் ஏற்பட்ட இடத்திலிருந்து புதிய பரப்பில் நடுவதற்காக கரணைகளை எடுக்கும்போது, அவற்றை "டைக்லோவாஸ்" 1 மில்லி/லிட்டர் தண்ணீரில் முக்கி பின் சிமெண்ட் பைகளில் வைத்துக்கட்டி எடுத்துக் செல்ல வேண்டும். விரைந்து செயல்படும் "நுயூவான்" -ல் புகை உண்டாக்கும் செயல் திறன் உள்ளதால் கரணைகளிலுள்ள செதில் பூச்சித் தொகையை விரைவாக அழிக்கிறது.
மாவு பூச்சிகள்
கரும்புப் பயிரில் மாவுப் பூச்சித் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
மாவுப் பூச்சி மற்றொரு சிறுபூச்சி ஆகும். இதன் தாக்குதல் எந்த ஒரு மதிப்பீட்டு இழப்பையும் விளைவிக்காது. சருகு/தோகை உரித்தல் மாவுப்பூச்சி தாக்குதலைக் குறைக்க உதவுகிறது. தாக்குதல் கண்டறியப்பட்டால் கீழ்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி அதன் தண்டுகளின் மட்டும் தெளிக்க வேண்டும். அவை மீத்தைல் பேரத்தியான் 50 இசி திரவமாற்றுத் திரட்டு 1000 மிலி (அ) "மேலத்தியான்" 50 இசி 1000 மிலி.
மாவுப் பூச்சி எவ்வாறு கரும்புச்சாற்றில் அதன் விளைவை ஏற்படுத்துகிறது?
இளம் உயிரிகள் மற்றும் முதிர் உயிரிகள் இரண்டும் கரும்பின் சாறை உறிஞ்சி பயிரின் உயிர் வீரியத்தைக் குறைக்கிறது. கரும்புகைத் பூசணம் வளருமிடத்தில், தேன் துளி தத்துப் பூச்சிகளின் கழிவுப் பொருளை கழிக்கிறது. இதனால் இடைக்கணுப் பகுதி கருப்பு நிறத்தில் தோன்றும். மேலும் கரும்பு வளர்ச்சியும் குன்றிவிடும்.
கரும்பு கம்பளி அசுவுணி
கம்பளி அசுவுணிப் பூச்சி உடம்பில் அரிப்பை ஏற்படுத்துமா?
இல்லை. அசுவுணிப் பூச்சி மனிதனின் உடலில் ஊறிக் கொண்டு கூச்ச உணர்வை ஏற்படுத்தும். ஆனால் எந்தவிதமான தடிப்பு ஏற்படுத்தும் (தீங்கு விளையும்) உறுத்தலை விளைக்காது.
கரும்பு கம்பளி அசுவுணி 10 நாட்களில் முழு வயலிலும் பரவி விடுமா?
உண்மை இல்லை. வானிலை ஏற்றதாக இருப்பினும் கூட குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, முழு வயலிலும் பரவுவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்.
கரும்பு கம்பளி அசுவுணியை "திமெட்" குருணை இடுதல் மூலமாக கட்டுபடுத்த முடியுமா?
இல்லை. "திமெட்" குருணை மூலம் 50 சதவிகிதம் தான் கட்டுப்படுத்த முடியும். கரும்பு கம்பளி அசுவுணித் தொகையைக் குறைக்க இவை போதுமானதல்ல.
"திமெட் குருணைகள்" வெறுக்கத்தக்க ஆற்றலுடைய வாசனையைக் கொண்டுள்ளதால் கரும்பு கம்பளி அசுவுணி முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படுகிறது? துளையிட்ட பாலிதீன் பைகளில் வைத்து கரும்பு வயலின் பல்வேறு இடங்களில் தொங்கப்பட்டிலிருந்தாலும் கூட மிகச் சிறப்பாய் கட்டுப்படுத்த முடிகிறதா? விளக்குக?
உண்மையல்ல. மனிதனுக்கும், பூச்சிகளுக்கும் இருக்கிற சுவாசமண்டலம் முற்றிலும் வேறுபட்டவை. திமெட் இராசாயணத்தில் குறிப்பிட்ட புகைமூட்டிச் செயல் இல்லையெனில், காற்று அடைக்கப்பட்ட இடங்களில் அதனைப் பயன்படுத்தினால் மட்டும்தான் அதன் புகைமூட்டும் செயல் ஏற்படும். "திமெட்" புகை உண்டாக்கும் பொருள் இல்லை. எனவே கரும்பு கம்பளி அசுவுணியைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும் "திமெட்" புகை உண்டாக்கும் இராசாயமாக இருப்பினும் கூட திறந்தவெளியில் அவை செயல்படாது.
கரும்பு கம்பளி அசுவுணிக்கு "மீதைல் பேராத்தியான்" துகள் பயனுள்ள விளைவை ஏற்படுத்துகிறதா?
இல்லை. பொதுவாக திரவமாற்று திரட்டு முறையை விட துகள்கள் குறைந்த செயல்திறன் கொண்டவை. ஏனெனில் துகள்கள் இலைகளின் அடிப்பரப்புகளை முழுவதுமாக சென்றடைவதில்லை. மேலும் ஊடுருவும் தன்மையற்றவை.
கரும்பு கம்பளி அசுவுணியைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் நுண்ணுயிரி செயலி உள்ளதா?
இல்லை. கரும்பு கம்பளி அசுவுணிக்கு எந்த நுண்ணுயிரி செயலியும் இல்லை. மற்ற பூச்சிகளின் நோய்க்காரணிகளும் சிறப்பான செயலுக்கும் அற்றவை. மேலும் நோய்க்கிருமிகளை கரும்பு வயலில் தெளிப்பது மிகவும் கடினமானது. நோய்க்கிருமிகள் பூச்சிகளோடு தொடர்பு கொள்வதற்கு இலைகளின் அடிப்பகுதியில் தான் அதனைத் தெளிக்க வேண்டும்.
கரும்பு கம்பளி அசுவுணி கொன்றுண்ணிகளை எங்கே பெறுவது?
கரும்பு கம்பளி அசுவுணி தாக்கப்பட்ட வயலிலேயே கொன்றுண்ணிகள் இடம் பெற்றிருக்கும். அதனை எங்கும் வியாபாரம் செய்வதில்லை. இருப்பினும் விவசாயிகளால் தாமே தட்டில் வளர்க்கும் முறையை இந்தியா கரும்பு வாரியம் செயல்படுத்தியுள்ளது (எஸ்பீஐ).
கரும்பு கம்பளி அசுவுணி மற்ற பயிர்களை தாக்குமா?
இப்பூச்சியானது மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்ற பயிரில் காணப்படுகிறது என்ற கருத்து இருப்பினும், பெரும் அளவில் இவை பதிவு செய்யப்படவில்லை. மேலும், கரும்பு நீண்டகாலப் பயிர் மற்றும் தொடர்ச்சியாகப் பயிரிடப்படுவதாலும், கரும்பு கம்பளி அசுவுணி பயிரின் எல்லா நிலைகளிலும் தாக்க கூடியவை . அதனால் அசுவுணிக்கு மற்ற மாற்று ஊனுட்டிக்கு மாறுவதற்கான அவசியமோ கண்டிப்போ இல்லை.
கரும்பைத் தாக்கும் கம்பளி அசுவுணிப் பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
ஊடுருவும் பூச்சிக் கொல்லிகளை குருணையான வடிவத்தில் பாசனம் செய்து இரண்டு நாட்களுக்குப் பின் அளிப்பதால், 30 நாட்களுக்கு கம்பளி அசுவுணியின் தாக்குதலைக் குறைக்க முடிகிறது. அதிக தாக்குதலின் போது கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பாதிக்கப்பட்ட இடத்தில் ஒன்று அல்லது இருமுறை தெளிக்க வேண்டும். அசிஃபேட் 75 எஸ்பி (SP) 2 கிராம்/லிட்டர் (அல்லது) கலோர்பைரிபாஸ் 25 திரவமாற்று திரட்டு (25 EC) 2 மிலி/லிட்டர் (அல்லது) மோனோக்ரோடோபாஸ் 36 நீரில் கரையும் இராசயனம் (WSC) 2 மிலி/லிட்டர் (அல்லது) என்டோசல்ஃபான் 35 திரவமாற்று திரட்டு (35 EC) 2 மிலி/லிட்டர்.
கரும்பைத் தாக்கும் கம்பளி அசுவுணிக்கான உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் என்ன?
வண்ணத்துப்பூச்சி வகை கொன்றுண்ணிகளை (இரை விழுங்கி) பாதுகாத்தல். டிஃபா எபிடிவோரா கொன்றுண்ணியின் தொகை கரும்புப்பயிர் உள்ள பரப்புகளில் குறைவாகக் காணப்படுகிறது. எனவே, அவை மேலும் பெருகுவதற்கும் கட்டுப்பாட்டிற்கும் அப்பூச்சியை பாதுகாத்தல் அவசியம். கரும்பு கம்பளி அசுவுணியை முறையாக கண்காணித்து, மேற்பார்வையிடுதலின் மூலமாக முன் எச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை மேற்கொள்ள முடிகிறது. முறையான கண்காணிப்பு செய்வதால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகள் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை தகுந்த அளவு பயன்படுத்த உதவுகிறது. (மெட்டார்ஹிஜியம் அனிசோஃப்லியே, ப்யூவேரியா பேசியானா, வெர்டிசில்லியம் லிகானீ).
பைரில்லா (ஏரோப்பிளேன் பூச்சி)
இலை தத்துப் பூச்சி/கரும்பு ஈ எவ்வாறு காணப்படும்?
இந்தியா முழுவதும் பரவப்பட்டிருக்கும் முதன்மையான பூச்சி வகை வயதான பூச்சிகள் பழுப்பு நிறத்துடனும், அதன் இறக்கைகளின் பின்பகுதி கருமை நிறத்துடன் காணப்படும். அதன் இறக்கைகள் பின்நோக்கி கூரை போன்ற வடிவத்தில் காட்சி தரும். தலைப்பகுதி முன் நோக்கி பிதுக்கம் ஏற்பட்டிருப்பது தான் நெற்றியலகு. இலைகளின் அடிப்பகுதியில் 20-25 முட்டைகள் என கூட்டமாய் இடப்பட்டிருக்கும். இடப்பட்ட முட்டைகள் வெண்மையபன மெல்லிய பொருளால் மூடப்பட்டிருக்கும். இளம் உயிரிகள் வெளுத்த காவி நிறத்திலும் ஒரு ஜோடி மெழுகு போன்ற பகுதியுடனும் காணப்படும். மூடப்பட்ட மலப்புழைக் கொண்டிருக்கும்.
கரும்பில் "ஏரோப்பிளேன்" பூச்சி எப்பொழுது தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது?
பொதுவாக "ஏரோப்பினேள்" பூச்சி முன் பருவமழைக்காலத்தில் தான் பயிரைத்தாக்கும். குறிப்பாக தமிழ்நாட்டின் கரையோரப் பகுதியில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதங்களில் தாக்குதல் ஏற்படுகிறது.
"ஏரோப்பிளேன் பூச்சியை" எவ்வாறு கட்டுப்படுத்துவது?
தீபகற்பம் இந்தியாவில், ஏரோப்பிளேன் பூச்சி பூச்சித்தாக்குதலை நிலையை அடைந்ததில்லை. இளம் உயிரிகள் ஐந்து வளர்நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையிலும் தோல் உரிதல் ஏற்பட்டு, தோல்கள் இலைகளோடு நிலையாக ஒட்டிக்கொள்கிறது. இவை ஏரோப்பிளேன் பூச்சி அதிக தொகையில் உள்ளது போல் தவறான தோற்றம் அளிக்கிறது. மேலும் இந்தியாவில் அனைத்து தீபகற்பம் பகுதிகளிலும் அதன் கொன்றுண்ணியான "எபிரிகேனியா மெலனோலியூக்கள்" பரவியுள்ளது. இதனால் பூச்சிகளை (தானாக) இயற்கையாகக் கட்டுப்படுத்த முடிகிறது. ஏரோப்பிளான் பூச்சி தாக்கப்பட்ட வயல்களில் எபிரிகேனியா இடம் பெற்றுள்ளதால் எந்த விதமான பூச்சிக் கொல்லிகளையும் தெளிக்கக் கூடாது என்பது முக்கியமானதொன்றாகும்.
இலைத்தத்துப்பூச்சி/கரும்புகள் ஈ கரும்பு சாற்றின் தரத்தை எவ்வாறு பாதிக்கின்றது?
இளம் உயிரி மற்றும் வயதான பூச்சிகள் இலைகளிலிருந்து சாறை உறிஞ்சுகின்றன. தீவிரமான தாக்குதலின் போது, இலைகள் மங்கி காய்ந்துவிடும். எனவே பயிர்களை நோயுற்றதாகவும் காய்ந்த தோற்றத்துடனும் காட்சி தரும். பூச்சிகள் கழிவுப் பொருள்களை கழிப்பதால் பின் கரும்புகைப் பூசணம் ஏற்படுகிறது. சர்க்கரை அளவு குறைவு ஏற்பட்டு வெல்லத்தின் திரமும் முழுவதுமாய் பாதிக்கப்படுகிறது.
வெள்ளை ஈ
கரும்பைத் தாக்கும் வெள்ளை ஈ பூச்சியினால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?
இப்பூச்சிகள் இலைகளின்மேல் அடைவற்ற வெள்ளை மற்றும் கரும்பு புள்ளிகளுடன் காணப்படும். கருப்பு நிறம் உடையது. இளம்பூச்சிகளின் வளர்நிலை மற்றும் வெண்மையான ஒன்று கூண்டுப்புழு, பூச்சிகள் இலைகளின் அடிப்பரப்பில் ஒட்டிக் கொண்டு தாவர (சாறினை) உறிஞ்சுகிறது. பாதிக்கப்பட்ட பயிர் வெளுத்து, மஞ்சள் நிறமாகி பின்நிலையில் பழுப்பு சிவப்பு நிறமாகி இறுதியில் இலைகள் காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட வயலில் கரும்பு மகசூல் குறைந்து, அதன் சர்க்கரை அளவும் குறைகிறது.
வெள்ளை ஈ சேதத்தினை எவ்வாறு மேலாண்மை செய்வது?
தாக்குதல் கண்டறியப்பட்டால், "ஃபெனிட்ரோதியான்" 50 திரவமாற்று திரட்டு (50 ணிசி) 2000 மிலி (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 WSC 2000 மிலி ஆகிய ஏதோ ஒன்றினை தெளிக்க வேண்டும். "அசிஃபேட்" 2 கிராம்/லிட்டம் தண்ணீருடன் தெளிப்பது வெள்ளை பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு மாதத்திற்குப் பிறகு மறுபடியும் இதனைத் தெளிப்பதால் முட்டைகளிலிருந்து வெளிவரும் இளம் உயிரிகளைக் கொல்ல முடிகிறது. சாறு உறிஞ்சும் பூச்சியான வெள்ளை ஈ, பிரச்சினைகுரிய மண் பரப்புகளில் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக உவர் மண், களர் மண், தரமில்லா வடிகால் அமைப்பு, நுண் ஊட்டச் சத்துக் குறைவான மண், வறண்ட நிலை கொண்ட இடங்கள் ஆகியவற்றில் மிகுதியாய் காணப்படும். வடிகட்டாத வயல்கள் அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகும்.
வெள்ளை வேர்ப்புழு
கரும்பில் ஏற்படும் வெள்ளை வேர்புழு தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
தாக்கப்பட்ட வயலில் கட்டைப் பயிர் செய்வதை தடுக்க வேண்டும். மண் ஈரத்தன்மையற்ற நிலைகளில் போதுமான அளவு பாசனம் செய்ய வேண்டும். அப்பொழுது வேர் மண்டலத்தில் பூச்சிகள் காணப்படும் "லிண்டேன்" 1.3 டீ 125 கிலோ/எக்டர் அளவை வேர் மண்டலத்தில் அளிக்க வேண்டும். அளித்து 30 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை "லிண்டேன்" அளித்தல் சிறந்தது.
நிற்கும் கரும்புப்பயிரில், வெள்ளை வேர்ப் புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
நிலைத்திருக்கும் (நிற்கும்) கரும்புப் பயிரில் வெள்ளை வேர்ப்புழுவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமானதும் மற்றும் அதிக செலவு தரும் செயலும் கூட. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த எந்த ஒரு பூச்சிக்கொல்லிகளும் கிடையாது. 24 மணி நேரத்திற்கு வயலில் நீரை தேக்கி வைப்பதால், புழுக்கள் நிலமட்டத்திற்கு மேல் வந்துவிடும். பின்பு அதனை கையால் பிடித்து அழித்துவிடலாம். நீர் தேக்கத்தின்போது, பயிர் சாய்தல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
எலி
எலிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
முதலில் எலிகள் வயலுக்கு வெளியில் இருந்து வருகிறதா அல்லது கரும்பு வயலுக்குள்ளேயே வாழ்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுவாக, கரும்பு வயலில் வெளியிலிருந்து வரும் எலிகள் என்றால், அதன் தாக்குதல் வயலின் எல்லைப்பரப்பிலிருந்து ஆரம்பிக்கும் வயலுக்குள்ளேயே எலிப்பொந்து இருப்பின், அதன் தாக்குதல் ஆரம்பத்திலிருந்தே காணப்படும். கரும்புப் பயிர் அறுவடைக்குப் பின்னர், எலிப்பொந்துகள் வயலுக்கு உள்ளே மற்றும் வெளியே இருப்பதை அறியமுடிகிறது. எலிகள் வயலுக்குள் புகுவதை எவ்வாறு கண்டுபிடிப்பதென்றால், முதலில் எலி வங்குகளை சேற்றைக் கொண்டு அடைத்து விடவேண்டும். பின் அடுத்த நாள் வங்கு திறக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து எலி நுழைவதை கண்டறியலாம். பின் ஒவ்வொரு வங்கிலும் அரை அளவு "செல்பாஸ்" மாத்திரையைப் போட்டு அதன் துளையை சேற்றைக் கொண்டு அடைத்துவிட வேண்டும். "செல்பாஸ்" மாத்திரை வாசனையற்ற புகை உண்டாக்கும் வாயு அதனால் நன்கு அனுபவமுள்ள நபர்கள் அல்லது இரு நபர்களே கையாள வேண்டும். எனவே எலி தாக்குதல் உள்ள இடங்களில் மெல்லிய தோல் கொண்ட இரகங்களான கோ 86032 போன்ற இரகத்தைத் தவிர்த்து, கடினமான தோலுடைய இரகங்களை வளர்க்க வேண்டும்.
எலிகள் நச்சுப் பொறியாக எந்த இராசயனம் சிறப்பாக விளங்குகிறது?
பொதுவாக அதிக அளவு உணவு வழங்குதல் இருக்கும் வயல்களில் நச்சுப்பொறி பயனற்றது. எலிப்பொறியில் "ஜின்க் பாஸ்பைட்" வைக்கப்பட்டால், கொஞ்சம் உண்ட பிறகு எலிகள் துாண்டில் இரையை நெருங்காமல், அவை செயலற்றதாகி விடுகின்றன. மேலும் இதுபோன்ற நச்சுணவைப் பயன்படுத்தி, மயில், குயில், கெளதாரி போன்ற பறவைகளைக் கொல்ல முடிகிறது.
எலிகளுக்கு எதிராக ஏதேனும் (கொன்றுயிரி) இரை விழுங்கி உள்ளதா?
உள்ளது. ஆனால் செயல்முறைக்கு ஏற்றதல்ல. காட்டுப் பூனைகள், பாம்புகள், ஆந்தைகள், கீரிப்பிள்ளை, குள்ளநரிகள் போன்ற விலங்குகள் ஏற்றவை ஆனால் இவற்றை கரும்பு வயல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. வளர்ப்புப் பூனைகள் (வீட்டுப் பூனை) மிகுந்த செயல்திறன் அற்றதாக இருப்பினும், மனிதர்களால் அவை எலிகளை பிடிப்பதற்கு விடப்படுகிறது. ஆனால் அவை எளிதில் கிடைக்கும் உணவான பல்லி போன்றவற்றை வேட்டையிடுவதால் எலிகளை அவை அதிகமாக உட்கொள்ளுவதில்லை.
பூனைகள், பாம்புகள், ஆந்தைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எலிகளைக் கட்டுப்படுத்த முடியுமா?
இவை அனைத்தும் எலிகளின் இயற்கையான இரைவிழுங்கிகள் (கொன்றுயிரிகள்). இருப்பினும் அவற்றை, கரும்பு வயலுக்கு எடுத்துச் செல்வது என்பது கடினமான செயல்முறை, வயலில் விடப்பட்டாலும் கூட பாம்புக்கடியின் ஆபத்து மற்றும் ஆந்தையின் வெறுப்பொலி ஆகியவை கருத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். காட்டுப் பூனை, வீட்டுப்பூனைகள் இரண்டும் எலிகளின் தீவிர வேட்டை விலங்குகளாக இல்லையென்றாலும், வீட்டுகுரிய பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். பொதுவாக இரை விழுங்கிகளுக்கு சக்திக் கொண்ட குறிப்பிட்ட இலக்கு குணம் உள்ளதால், குறித்த பரப்பிலுள்ள குறிப்பிட்ட உயிரிகளைத் தவிர அதிக அளவில் இரையைப் பிடிக்காது. இதனால் குறிப்பிட்ட கால அளவில் போதுமான இலக்கை அடைய முடியாது. மேலும் எலிகள் கொல்லப்பட்டு அதன் பிரச்சினைகள் முடிந்தால், பின்பு இரை விழுங்கிகளான இந்த உயிரினங்கள் தீங்குகள் / ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
பூச்சிக்கொல்லிகள் தழைப்பகுதியில் நன்கு ஒட்டுவதற்கு அதனுடன் அதிக ஒட்டும் தன்மை கொண்ட செயலி (பொருள்) யை சேர்ப்பது சிறந்ததா?
இல்லை. பூச்சிக் கொல்லிகள் அதுவே ஒட்டும் செயலி (தன்மை) யைப் பெற்றவை. எடுத்துக்காட்டாக "க்லோர்பைரிபாஸ்" 20 (ணிசி) திரவமாற்று திரட்டு 1 லிட்டர் வாங்கினால் அதில் வெறும் 200 மிலி மட்டும் தான் பூச்சிக்கொல்லி மருந்து, மீதமுள்ள 80 சதவிகிதம் நனைத்தல், ஒட்டுதல், பரவுதல், குழம்பாக்கி பால்மமாக்குதல் ஆகிய செயல்திறனைக் கொண்டு பூச்சிக்கொல்லியைப் பயனுள்ளதாக (சிறப்பாக) செயல்பட வைக்கிறது. இதே போன்று தான் "மேலத்தியான் 50 ணிசி" மற்றும் "நியூவான் 76 ணிசி" போன்ற பூச்சிக்கொல்லிகளும்.
எந்த மண்ணில், நுாற்புழு தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது?
இருபொறை மண்/ பசளை மண்ணில் ஈரமுள்ள களிமண்ணை விட அதிக நுாற்புழு பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
கரும்பு நுாற்புழுக்களின் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
பயிர் நடவு செய்யும் பொழுதோ அல்லது நடவு செய்து 2 மாதங்களுக்கு பிறகோ "கார்போஃப்யூரான்" 3 ஜி @ 33 கிலோ/எக்டர் என்ற அளவில் அளிக்க வேண்டும். அல்லது இறைவை நிலத்தில் கடைசி உழவிற்கு முன், கார்டப் 1.5 கிலோ எ.ஐ/எக்டர் அல்லது கரும்பாலைக்கழிவு 15 டன்/எக்டர் அல்லது கோழி எரு 2 டன்/எக்டர் அல்லது வேப்பம்புண்ணாக்கு 2 டன்/எக்டர் ஆகிய ஏதேனும் ஒன்றை இடவேண்டும். நஞ்சை நிலத்தில், ஊடுபயிராக சணப்பை (அ) செண்டுப்பூ (அ) தக்கைப்பூண்டு பயிரிடும்போது கரும்பாலைக்கழிவு 24 டன்/எக்டர் அல்லது வேப்பம்புண்ணாக்கு 2 டன்/எக்டர் உடன் கலந்து பின் பயிரிட வேண்டும்.
கரும்பு நோய்கள் மேலாண்மை
செவ்வழுகல் நோய்
கரும்புப் பயிரில் செவ்வழுகல் நோய் எவ்வாறு பரவுகிறது?
நோயான கரும்பிலிருந்து கரணைகளை வெட்டுவது மூலமாகவே இந்நோய் பரவுகிறது. கரும்பு வெட்டியபிறகு (அறுவடைக்குப் பின்) மீதமுள்ள அடிப்பகுதியை அப்படியே வயலில் விட்டுவிடுவதால், பாசனம், மழை மற்றும் காற்றின் மூலமாகவும் நோய் பரவி பூஞ்சான் ஏற்பட்டுவிடும். பாதிக்கப்பட்ட பயிரிலிருந்து பின் கட்டைப் பயிர் வளர்ப்பதன் மூலமாகவும் நோய்கள் மீண்டும் பரவுகிறது.
செவ்வழுகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விதை (கரணை) நேர்த்தி என்ன?
நடவு செய்வதற்கு முன் 'கார்பன்டஜிம்' உடன் கரணை நேர்த்தி செய்ய வேண்டும். (கார்பன்டஜிம் நனையும் துாள் 0.5 கிராம் அளவை 1 லிட்டர் நீருடன் கலத்தல்) அல்லது கார்பன்டஜிம் 25 டீஎஸ்(DS) ( 1 கிராம் 1 லிட்டர் நீருடன் கலத்தல்) யூரியாவுடன் கலந்து (10 கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீருடன் கலத்தல்) 5 நிமிடங்கள் வைத்து பின் தெளிப்பதால் செவ்வழுகல் நோயைத் தடுக்கலாம்.
பயிரின் எந்த நிலையில் நோய் தாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
பயிர் முளைப்பிலிருந்து அறுவடை வரை அனைத்து பயிர் நிலைகளிலும் நோய் தாக்குதல் ஏற்படும்.
இந்நோய்க்கான குறிப்பான அறிகுறிகள் என்ன?
ஆரஞ்சு/மஞ்சள் நிறமாற்றமுடைய இலைகள், அதனைத் தொடர்ந்து கரும்பு கொத்தாக காய்ந்துவிடும் விடும். கணுக்கள் மற்றும் இடைக்கணுக்களின் வெளிப்புறத் தோல் வெளுத்த பழுப்பு நிறமுள்ள பத்தாக மாற்றம் அடைதல். கரும்பில் பிளப்பு ஏற்பட்டு இடைக்கணுக்களின் திசுக்கள் சிவப்பு நிறத்தில் இடைவிட்ட வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும். அடுத்த நிலைகளில், உட்பகுதியில் பூசண இலை வளர்ச்சி ஏற்படும்.
கரும்பு இலைகளில் எவ்வகையான அறிகுறிகள் காணப்படும்?
பாதிக்கப்பட்ட கரும்பில் உள்ள இலைகள், காய்வதற்கு முன் பொதுவாக ஆரஞ்சு-மஞ்சள் நிறமாற்றத்துடன் காணப்படும். மேலும் அதிகமாய் நோய் தாக்குதலுக்கு இலக்காகும் இரகங்களில் இலை நடுநரம்பின் மேல் சிவப்பான பழுப்பு நிற புண்/தழுப்பு போல் காணப்படும்.
பயிர் மகசூலை செவ்வழுகல் நோய் எவ்வாறு பாதிக்கிறது?
பாதிக்கப்பட்ட தண்டுகள்/கரும்புகள் இறப்புக்கு உள்ளாகி, கரும்பு மகசூலைக் குறைக்கிறது. நோய் விளைவிக்கும் மாற்றுப் பொருளால் சர்க்கரை மாவுச் சர்க்கரையாக மாறுகிறது. இதனால் சர்க்கரை மீட்பு இழப்பு ஏற்படுகிறது.
விதைக் காணைகைளில் உள்ள நோய் தாக்குதலை எவ்வாறு கண்டுபிடிப்பது?
பகுதி தாக்கப்பட்ட கரும்பினை வெட்டும் போது, வெட்டப்பட்ட நுனி சிவப்பாகத் தெரியும். கணுப்பகுதிகளில் வட்டமான பத்துக்கள் (புண்) செதில்போல் காணப்படும்.
செவ்வழுகல் நோய் கட்டைப்பயிரில் அதிக சேதத்தை ஏற்படுத்துமா?
ஆம். நோயை ஏற்படுத்தும் ஆரம்ப நோய்க்காரணிப் பொருள் அதிகமாய் உள்ளதால், முதன்மை கரும்புப் பயிரை விட கட்டைப்பயிரில் சேதம் அதிகமாய்க் காணப்படுகிறது. இருப்பினும் அதிக அளவிலான நிலைகளில் முதன்மை கரும்புப் பயிரும் அதிகமாய் சேதத்திற்கு உள்ளாகிறது.
கொன்றுண்ணிகள் (இரைவிழுங்கிகள்) மண்ணில் வாழ்கின்றதா?
ஆம், மண்ணில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வாழும், ஆனால் நோய் தாக்கப்பட்ட பயிர் துார்களில் பல மாதங்கள் வாழ்கின்றன.
எந்த பருவத்தில் நோய் அதிகமாய் பரவுகின்றன?
பருவம் மழைக் காலங்களில் நோய்கள் அதிகமாய் பரவுகின்றன.
நோய் கடுமையை துாண்டும் காரணிகள் யாவை?
சூறாவளிக் காற்றுடன் கொண்ட பருவமழை மாதங்கள் நோய்கள் வேகமாய் பரவுவதற்கு துணைபுரிகின்றன. அதிக பரப்புகள் கொண்ட கரும்பு வயலை வெள்ளப்பாசனம் செய்வதன் மூலம், நோய்க்காரணிப் பொருள்கள் வெள்ள நீரில் வழியாக வெளியேற்றப்படுகின்றன. குறைந்த தாக்குதல் கொண்ட கரணைகள் கூட கரும்பு மற்றும் கட்டைப் பயிர்களில் நோயை வளர்த்துவிடும்.
பயிர் சாகுபடிக்கான இரகங்கள்.என்ன?
கோ 86032, கோ 86249, கோ 93009, கோ 97008, கோ 99004, கோ 99006.
செவ்வழுகல் நோய் தாக்கப்பட்ட வயல்களில் கரும்புப் பயிரை பயிரிடலாமா?
கூடாது. ஒருமுறை செவ்வழுகல் நோய் தாக்குதல் கண்டறியப்பட்டால், நோய் தாக்குதலுக்கு இலக்கான கரும்பு இரகங்களை பயிர் செய்யக் கூடாது. இந்நோயை எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்கள் என்றால் பயிர் செய்யலாம்.
முதல் அறிகுறிகள் கண்டறியப்பட்டபின் என்ன செய்ய வேண்டும்?
பாதிக்கப்பட்ட பயிர் கொத்துக்களை வேரோடு பிடுங்கி நோய்க்காரணிப் பொருள்கள் பரவாதவாறு தீயில் எரித்துவிட வேண்டும். பயிர் வேரோடு பிடுங்கப்பட்ட இடங்களை 0.05 சதவிகிதம் "கார்பன்டஜிம்" பயன்படுத்தி நன்கு நனைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நோய்க்காரணிப் பொருள்கள் பரவாதவாறு தடுக்க முடிகிறது.
பூசணக் கொல்லி கட்டுப்பாட்டின் செயலுாக்கத் திறன்?
நோய்க்கான உயிரிகள் கரும்பில் நன்கு ஆழமாக இடம்பிடித்திருப்பதால், பூசணக் கொல்லி தெளிப்பு செயலுள்ளதாக இருக்காது. பயிர் நடுவதற்கு முன்பாக, கரணைகளை ஊடுருவும் பூசணக் கொல்லியுடன் நனைத்து பின் நடுவதால், மண்ணின் மூலமாக பயிர் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் நோயைத் தடுக்க முடிகிறது.
முறையான பயிர் பாதுகாப்பு முறைகளின் மூலமாக செவ்வழுகல் நோய்க்கு இலக்காகும் இரகங்களை சாகுபடி செய்யலாமா?
ஆம். செவ்வழுகல் நோய் இல்லாத இடங்களில் பயிரிடலாம். ஒருங்கிணைந்த செயல்களாளான சுத்தமான விதைக்கரணை, வயல் ஆரோக்கியம், நோய் கண்காணிப்பு, மற்றும் நீர் மேலாண்மையின் மூலமாக செவ்வழுகல் நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடிகிறது. இருப்பினும் அதிக அளவிலான நோய் நிலைகளில் (வெளிப்பரவல்) நோய்க்கு இலக்காகும் இரங்களை தவிர்ப்பது நல்லது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
விதை (கரணை) நாற்றங்காலில் என்னென்ன கவனங்கள் மேற்கொள்ள வேண்டும்?
செவ்வழுகல் நோய் இல்லாத இடங்களில் நாற்றங்கால் பயிர் வளர்க்க வேண்டும். எந்த நிலையிலும் செவ்வழுகல் நோய் தாக்கப்பட்ட வயலிலிருந்து விதைக் கரணைகள் எடுக்கக் கூடாது. கரணை (விதை) பயிர்களில் நோய் ஏற்படாமல் இருக்கின்றதா எனக் கண்டறிய வயலை முறையாக மேற்பார்வையிடுதல் வேண்டும்.
கரிப்பூட்டை (நோய்)
கரும்பு கரிப்பூட்டை என்றால் என்ன?
கரும்பு கரிப்பூட்டை என்பது கரும்புப் பயிரின் ஒரு கொடிய நோய். இதனால் 30-100 சதவிகிதம் வரை மகசூல் குறைவு ஏற்படுகிறது. "உஸ்டிலாகோ சிட்டேமினியா" என்ற பூசணத்தால்தான் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோய் காற்று அல்லது துணி மற்றும் இயந்திரம் மூலமாக பரவி அதிக தாக்குதலை ஏற்படுத்துகிறது.
வயலில் நோயுறுதி செய்கிற அறிகுறிகள் யாவை?
வளரும் நுனிப்பகுதியை (பூட்டை) கருப்பான சாட்டை வடிவத்தில் மாற்றுகிறது. இவற்றில் வெள்ளையான மெல்லியத் தோலால் போர்த்தப்பட்ட மில்லியன் பத்து லட்சக்கணக்கு அளவிலான கரும்பு பூசணவித்து துாள்களைக் கொண்டிருக்கும்.
நோய் அறிகுறிகள் எப்பொழுது தெளிவாகக் காட்டும்?
அனைத்து நிலைகளிலும் நோய் அறிகுறிகளைக் காண முடியும். கரும்பு உருவாக்கத்தின்போது அதிக அளவிலான அறிகுறிகள் தோன்றும். கட்டைப்பயிரில் அறிகுறிகள் முன்னதாகவே தோன்றிவிடும். தீவிர தாக்குதல் நிலையில் கட்டைப்பயிரிலிருந்து வரும் இளந்தண்டு (தளிர்) சாட்டை போல் காணப்படும்.
கரிப்பூட்டை தாக்கப்பட்ட கரும்புகள் சாட்டைபோல உருவத்தில் தோன்றுவது ஏன்?
கரிப்பூட்டை பூசணமானது பயிரின் மேல் வளர் முனையுடன் சேர்த்து கரும்புப் பயிரை முறையாக தாக்குகிறது. பூசணம் மேல் வளர்முனையைத் தாக்கியபின் வளர்கின்ற தண்டுப்பகுதியை சாட்டை போன்ற வடிவமாக மாற்றுகின்றது. அதில் வெள்ளித்தோலால் (உறை) போர்த்தப்பட்ட சாட்டை போன்ற பூட்டையிலிருந்து பத்து லட்சக்கணக்கிலான (மில்லியன்) கரும்பு பூசணவித்துத் துாள்களை கொண்டிருக்கும்.
நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
நோய் தாக்கப்பட்ட விதைக் கரும்பிலிருந்துதான் முதன்மையாகப் பரவுகிறது. சாட்டை போன்ற பூட்டையிலிருந்து பூசணவித்துக்கள் காற்றின் மூலமாக ஒரு கரும்பிலிருந்து மற்றொரு கரும்புக்கு பரவுகிறது.
ஏன் தாக்கப்பட்ட கரும்புகள் புதர் போல் மாறுகின்றன?
மேல் வளர் முனையை நோய்க்காரணிகள் தாக்கி நுனி ஆதிக்கத்தை தடுப்பதால், கரிப்பூட்டை தாக்கப்பட்ட பயிரில் அதிகளவிலான பக்க தண்டுகள் உருவாகி, புதர்போன்று காட்சியளிக்கிறது.
பயிரின் எந்த நிலைகளில், கரிப்பூட்டை தீவிர மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது?
கட்டைப் பயிரின் முன் பருவ நிலையில் தீவிர கரிப்பூட்டை தாக்குதல் ஏற்படும்போது மகசூல் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
வெப்ப சிகிச்சை மூலம் இந்நோயை கட்டுப்படுத்த முடியுமா?
முடியும். பூசணக் கொல்லி (ட்ரிடிமீஃபன் 0.1 சதவிகிதம் 52 செ வெப்பநிலையில் சுடுநீருடன் கலந்தது 30 நிமிடங்கள் வைப்பது, கரணைகளில் நோய்க்காரணி தாக்குதலை கட்டுப்படுத்துகிறது.
தாக்கப்பட்ட பயிரை பங்கீடு செய்ய முடியுமா?
2 சதவிகிதத்திற்கு மேல் கரிப்பூட்டை தாக்குதல் காணப்பட்டால் பயிர் பங்கீட்டு முறை மேற்கொள்ளக் கூடாது.
நோயின் எந்த அளவு வரை விதைக் (கரணை) தேர்ந்தெடுப்பு மேற்கொள்ள முடியும்?
கரிப்பூட்டை தாக்குதலின் 1 சதவிகிதம் அளவு வரை மட்டுமே கரணை தேர்ந்தெடுத்தல் மேற்கொள்ள முடியும்.
மற்ற எந்த நோய்கள் கரிப்பூட்டை நோய் போல் தோற்றம் அளிக்கும்?
-
பொக்கா போயிங்
-
குருத்தழுகல்
-
கரும்புகைப் பூசணம்
-
களைக்கொல்லி சிதைவும் கூட கரிப்பூட்டைப்போல் தோன்றும்.
வாடல் நோய்
நோயின் அறிகுறிகள் என்ன?
வெளிப்புற அறிகுறிகள் - தழைப்பகுதி படிப்படியாக மஞ்சள் நிறமாகி பின் காய்ந்துவிடும் இலை சுருங்குதல் மற்றும் கரும்பு வாடுதல். உட்புற அறிகுறிகள் - தாக்கப்பட்ட கரும்புகளின் கீழ்ப்புற வளர் திசுக்கள் மங்கிய நிறத்திலிருந்து நன்கு கருமையான சிவப்பு பழுப்பு நிறமாக மாறுதல். இடைக்கணுவின் நடுபகுதியில் நெட்டியான மற்றும் படகு போன்ற குழியுடன் காணப்படும்.
தண்டு அறிகுறிகள் செவ்வழுகல் நோயோடு எவ்வாறு வேறுபடுத்துவது?
கீழ் வளர் திசுக்கள் சிவப்பு நிறமாகி மாறி குறிப்பிட்ட வெள்ளைப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். ஆனால் வாடல் நோயில் செவ்வழுகல் இருக்காது. மேலும் வாடல் நோய் தாக்கப்பட்ட கரும்பு சிவப்பு பழுப்பு நிற மாற்றத்துடன் கணுவின் நடுப்பகுதியில் நெட்டியான படகு போன்ற குழியுடனும் காணப்படும்.
ஒரே நேரத்தில் செவ்வழுகல் மற்றும் வாடல் நோய் கரும்புப் பயிரைத் தாக்குமா?
ஆம். நோய் தாக்கப்பட்ட கரும்புகள் இரு நோய்களின் அறிகுறிகளையும் காட்டும்.
வாடல் நோய் தீவிரத்தை மேலும் பெருக்குவது என்ன?
கோடைக்காலத்தில் விரிவடைந்த வறட்சி அதனைத் தொடர்ந்து பருவமழைக் காலத்தில் நீர் தேக்கம் ஏற்படுவது குறிப்பாக வேர் துளைப்பானால் வேர்களுக்கு சேதம் ஏற்படுத்துவது, மற்றும் மற்ற வேர் பூச்சிகள் வாடல் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது.
வாடல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
ஆரோக்கியமான விதைகள், பயிர் சுழற்சி, மண் ஈரத்தன்மையை முறைப்படுத்துவது, வேர் துளைப்பான் தாக்குதலை குறைத்தல் ஆகிய ஒருங்கிணைந்த செயல்முறைகளால் வாடல் நோயைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
கரணை அழுகல் நோய்
முளைத்தல் பருவம் நோய் தாக்குதலுக்கு அதிகமாய் உட்பட காரணம் என்ன?
மண்ணில் வாழும் நோய்க்காரணிகள் வெட்டப்பட்ட நுனிப்பகுதி கரணை வளர் திசுக்களில் நுழைந்து அழுகல் ஏற்படுகிறது. கரணைகளை பூசணக் கொல்லியால் நேர்த்தி செய்யவில்லையெனில் இந்நோய் ஏற்படும் ஆழமான நடவு அல்லது வயலில் நீர் தேக்கம் இருப்பின் பயிர் முளைத்தல் தாமதமாகி விடும். பின் கரணைக்குள் நுழைந்து நோய் ஏற்படுவதற்கான படிகளை உருவாக்குகிறது.
கரணை அழுகல் நோயை பூசணக் கொல்லியினால் கட்டுப்படுத்த முடியுமா?
முடியும். பூசணக்கொல்லி (கார்பன்டசிம் 0.05 சதவிகிதம்) கரைசலில் கரணைகளை நனைத்து நடுவதன் மூலம் வெட்டப்ட்ட பகுதியை மண்ணில் வாழும் பூசணம் தாக்குதலிருந்து பாதுகாக்க முடிகிறது.
அழுகல் நோயை தடுப்பது எப்படி?
பருவமழைக் காலத்தில் ஆழமாய் நடுவதை தவிர்க்க .வேண்டும். பயிர் முளைக்கும் கட்டத்தில், நீர் தேக்கம் இல்லாதவாறு பாதுகாக்க வேணடும். நடுவதற்கு முன் காப்பு முறையாக கரணைகளை பூசணக் கொல்லியுடன் நன்கு நனைத்து நடவேண்டும்.
கரும்பில் குருத்தழுகல் நோய்க்கு இலக்காகும் இரகங்கள் யாவை?
நோய்க்கு இலக்காகும் சில இரகங்கள், கோ.சி 671, கோ.சி.90063, கோ.சி 92061, ஆகியவை ஆகும்.
புல்தோகை நோய் (புற்றழை நோய்)
கரும்பு புல் தோகை நோய்க்கு எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்கள் என்ன?
கரும்பு புல் தோகை நோய்க்கு எதிர்க்கும் சக்தி கொண்ட இரகங்கள் கோ 86249, கோ ஜி 93076 மற்றும் கோ சி 22 ஆகும்.
கரும்பு புல்தோகை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டு முறைகள் என்ன?
கரணைகளை 50 செ காற்றுாட்ட நீராவியுடன் 1 மணி நேரம் வைப்பதன் மூலம் முதன்மை தாக்குதலை கட்டுப்படுத்த முடிகிறது. நோய் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு "டைமீதோயேட்" @ 1 மிலி லிட்டர் நீருடன் கலந்த தெளிக்கவேண்டும். புல்தோகை நோய் 15 சதவிகிதத்திற்கு மேல் முதன்மை கரும்புப் பயிரில் காணப்பட்டால் கட்டைப் பயிர் வளர்த்தலை தவிர்க்க வேண்டும்.
நோயை ஏற்படுத்துவதற்கான காரணி என்ன?
தாவர அறைக்குழம்பு
நோயின் குறிப்பிட்ட அறிகுறிகள் யாவை?
மெலிந்த, நீண்ட மற்றும் பசுமை மிகுந்த அதிக அளவிலான துார்கள் உற்பத்தி, நோய் தாக்கப்பட்ட கரும்புகள் வளர்ச்சி குன்றி (குட்டையாக) இலைக் கோன மொட்டு முளைப்புடனும் காணப்படும்.
நோயின் அறிகுறிகள் ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகளுடனும் எவ்வாறு வேறுபடுத்துவது?
பசுமை சோகையுடைய இலைகளுடன் கூடிய அதிக அளவிலான துார்கள் (பகுதி அல்லது முழுவதும்) வைப்பது தான் குறிப்பான அறிகுறி ஆனால் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் அதிக துார்கள் உற்பத்தி இருக்காது. புல்தோகை நோய் பாதிக்கப்பட்ட கரும்பில் தான் இலைக்கோண மொட்டு முளைப்புடன் காணப்படும். "பெர்ரஸ் சல்பேட்" (இரும்பு) உடன் கலந்து தெளிப்பதால் பசுமை சோகை ஏற்பட்டு நோயின் அறிகுறிகள் மறைந்து விடுகின்றன. ஆனால் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகளை இதன் மூலம் சரிசெய்ய முடியாது. மேலும் புல்தோகை நோயானது தனியாக உள்ள கொத்துக்களில் தோன்றும். ஆனால் பற்றாக்குறையால் ஏற்படும் பசுமை சோகை கூட்டம் கூட்டமாய் (பத்தை) தெரியும்.
புல்தோகை நோய் கட்டைப்பயிரில் அதிகமாய் காணப்படுவது ஏன்?
குறைந்த நோய்க்காரணிகள் உள்ள பயிர் ஆனதால், முதன்மை கரும்புப் பயிரில் குறைவாகத் தாக்குகிறது. ஒருமுறை கட்டைப்பயிர் வளர்ப்புக்கு எடுப்பதால் பயிர்த் துார்களில் உள்ள நோய்க்காரணிகள் புதிதாய் உருவாகும் குருத்து/தண்டுகளில் நோயை புதுப்பித்து விடுகிறது. பாதிக்கப்பட்ட பயிர் கொத்துக்கள் ஆலைக் கரும்புக்கு ஏற்றதல்ல.
நோய்க்காரணிகள் எவ்வாறு பரவுகின்றன?
பாதிக்கப்பட்ட விதைக்கரணைகள் கரும்புகள் தான் முதன்மையான நோய்க்காரணியை பரப்புகின்றன. நோய் உருவாக்கும் பூச்சிகள் ஒரு கரும்பிலிருந்து மற்றொரு கரும்புக்கு நோயைப் பரப்புகின்றது.
வெப்ப சிகிச்சை மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியுமா?
முடியும். காற்றுாட்டப்பட்ட நீராவி செயல்முறை விதைக் கரும்பில் உள்ள நோய்க்காரணிகளை அழிக்கிறது.
மஞ்சள் காமாலை நோய் (கூட்டு அறிகுறி)
இந்நோயின் குறிப்பிட்ட அறிகுறிகள் யாவை?
கரும்பு உருவாகும் கட்டம் மற்றும் உருவானதிற்குபின் 3-5 இலைகளுடைய கட்டத்தில் இலை நடு நரம்புப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல். நிறமாறிய இலை நடுநரம்புப் பகுதியைச் சுற்றி மஞ்சள் நிறமாக மாறுதல், மேலும் மேலிருந்து கீழ்நோக்கி நடு நரம்பு வழியாக இலை காய்தல் ஏற்படுதல்.
இந்நோய் பயிர் மகசூலைப் பாதிக்குமா? பாதித்தால் எந்த அளவிற்கு?
நோய்க்கு இலக்காகும் இரகங்கள் மற்றும் கவனம் செலுத்தாத வயலில் இந்நோய் மகசூலைப் பாதிக்கும், பயிர் முன் பருவத்தில் நோய் அறிகுறிகள் ஏற்பட்டால், பயிருக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட கரும்பில் இடைக்கணுக்கள் நீட்சி மெதுவாக குறைந்து, மேல் நுனியில் கொத்து (குலை) போல் காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட பயிரில் மகசூல் இழப்பு ஏற்படுவதோடு, சர்க்கரை மீட்பு அளவும் குறைகிறது.
மஞ்சள் இலை நோய் எவ்வாறு பரவுகிறது?
நோய் தாக்கப்பட்ட விதைக் கரணை கரும்புகள் மற்றும் நோய் ஏற்படுத்தும் பூச்சிகள்
மஞ்சள் இலை நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
வளர்நுனி வளர்ப்பு முறை மூலமாக கரும்பிலிருந்து நச்சுயிரியை அழிக்க முடிகிறது. பின், முறையான கரணை நாற்றங்கால் அமைப்பை செயல்படுத்தி, நோயில்லா விதைக் கரணைகளைப் பெற முடிகிறது.
மறுதாம்புக் குட்டை (நோய்) (கட்டைப் பயிர் குட்டை)
மறுதாம்புக் குட்டை நோய் கட்டைப் பயிரை மட்டும் தாக்கக் கூடியதா?
பயிர் இரக செயல்பாங்கு மெதுவாக குறைந்து, கரும்பு மெலிதாகவும், வீரியக் குறைவுடனும் காணப்படும்.
கரும்பு வயலில் இந்நோயை எவ்வாறு உறுதி செய்வது?
பயிர் இரக செயல்பாங்கு மெதுவாக குறைந்து, கரும்பு மெலிதாகவும், வீரியக் குறைவுடனும் காணப்படும்.
நோயின் அறிகுறிகள் உண்டா?
கணு வளர்திசு (உட்புறதிசு) (கோடுகளாய், புள்ளிகளாய், கம்மா) வடிவத்தில் சிவப்பாக மாறிவிடும். இடைக்கணுக்களில் அறிகுறிகள் காணப்படும்.
மறுதாம்புக் குட்டை நோயால் கரும்புகள் ஏன் மெலிதாகின்றன?
நோய்க்காரணி நுண்ணியிரிகள், காற்றுக்குழாய் பகுதியில் குடிபெயர்கின்றன. பல வருடங்களுக்கு ஒரே விதை மூலத்தைப் பயன்படுத்தினால் நோய்க்காரணிகளின் செயல்திறன் அதிகரித்து பயிர் இரக செயல்பாங்கு குறைவை ஏற்படுத்துகிறது.
மறுதாம்பு குட்டை நோய் எவ்வாறு பரவுகின்றது?
நோய் தாக்கப்பட்ட விதைக் கரும்புகள் மற்றும் வயலில் விடுபட்ட பயிர்துார்களின் மூலமாகப் பரவுகின்றன.
பரிந்துரைக்கப்பட்ட நோய்க்கட்டுப்பாடு முறைகள் என்ன?
காற்றுாட்டப்பட்ட நீராவி செயல்முறையின் மூலம் நோய் தாக்கப்பட்ட கரும்பிலிருந்து நோய்க்காரணிகளை அழிக்க முடிகிறது. நோய்க்கிருமி நீக்கிகளைப் பயன்படுத்தி விதைக்கரணை வெட்டும் கருவியை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் நோய் தாக்கப்பட்ட கரும்பிலிருந்து ஆரோக்கியமான கரணைகளுக்கு நோய் பரவுதல் ஏற்படுவதை குறைக்க முடிகிறது.
கரும்பு பதப்படுத்தல்
நல்ல தரமான கரும்பு/சாறு எவ்வாறு இருக்க வேண்டும்?
-
சாற்றில் அதிக சுக்ரோஸ் தன்மை இருக்க வேண்டும்.
-
சர்க்கரை அல்லாத பொருட்கள் குறைவாகவும் அதிக சுத்தத் தன்மையுடன், கலப்படமற்று இருக்க வேண்டும்.
-
ஓரளவு நார்த்தன்மை பெற்றிருக்க வேண்டும்.
-
தேவையற்ற (சோகை, இணைப்புப்பொருட்கள், சக்கைகள், உலர்ந்த கரும்புகள், மண்துகள்கள், நீர்த்தண்டுகள் போன்ற) பொருட்கள் மிகக் குறைந்தளவே இருக்க வேண்டும்.
-
அதிக சாற்றுத் தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
-
கரும்பின் திசுக்களில் பித் (இறந்த திசுக்களாக) இருக்கக் கூடாது.
கரும்புச் சாறின் தன்மையை (தரத்தினைப்) பாதிக்கும் காரணிகள் யாவை?
இரகங்கள், ஊட்டச்சத்து மேலாண்மை, முதிர்ச்சி நிலை, மண் தன்மை, வளரும் சூழ்நிலை, (சுண்ணாம்பு) காரத் தன்மை, அறுவடை செய்யும் முறை, ஆலைக்கு எடுத்துச் செல்லும் காலம், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் போன்ற காரணிகள் கரும்புச் சாறின் தன்மையினை அதாவது சுக்ரோஸ் மற்றும் சர்க்கரை அல்லாத பொருட்களின் விகிதத்தினை நிர்ணயிக்கக் கூடியவை.
மண் வகை மற்றும் பாசன நீரின் தன்மை கரும்பின் தரத்தினைப் பாதிக்குமா?
ஆம், பாசன நீரைப் பொறுத்து கரும்பின் தரம் வேறுபடும். அமில, காரத் தன்மை கொண்ட மண்ணில் வளரும் கரும்புகள் முறையே குளோரைடு மற்றும் சோடியம் சேமிக்கப்படுவதோடு தாதுக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. கிணத்துப் பாசன நீரில் வளரும் கரும்பை விட ஆற்று நீர்ப் பாசனத்தில் விளையும் கரும்புகள் அதிக தரமுள்ள சாற்றுத் தன்மை பெற்றுள்ளன. கரும்பு முதிர்ச்சியடையும் சமயத்தில் பாசன இடைவெளியை அதிகரிப்பது, சுக்ரோஸ் தண்மையினை அதிகரித்து தண்டின் ஈரப்பதத்தினை குறைக்கவும் உதவுகின்றது.
கரும்புச் சாறின் பகுதிப் பொருட்கள் யாவை?
கீழ்க்கண்ட அளவில் பகுதிப் பொருட்கள் கரும்புச் சாறில் சராசரியாகக் காணப்படுகின்றன.
நீர் : 75-88%
சுக்ரோஸ் : 10-21%
ஒடுக்கப்பட்ட சர்க்கரை : 0.3-3%
அங்ககப் பொருட்கள் (சர்க்கரை அல்லாதது) : 0.5-1%
அனங்ககக் கூட்டுப் பொருட்கள் : 0.2-0.6%
நைட்ரோ ஜீனஸ் பொருட்கள் : 0.5-1%
கரும்பு முதிர்ச்சியடைதல் என்றால் என்ன?
கரும்பில் முதிர்வு நிலை என்பது கரும்புச் சாறில் சுக்ரோஸின் அளவு அதிகரித்துள்ளதும், பயிர் வளர்ச்சி நிலையின் முற்றிய அதாவது இனப் பெருக்க நிலைக்கு முந்திய நிலையாகும். இந்த நிலையில் அதன் சர்க்கரைத் தன்மை இனப்பெருக்கத்திற்கு உகந்த அளவு சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதனை உறுதி செய்வது மிகக் கடினம். சுருக்கமாகச் சொல்வதானால் முதிர்வு நிலை என்பது அதிகப்படியான சுக்ரோஸின் சேமிப்பு நிலை. சாற்றுத் தன்மை மற்றும் சுத்தத் தன்மை அளவுகள் முறையே 16 - 85 க்கு இருந்தால் கரும்பு முற்றி உள்ளதாகக் கொள்ளலாம். மண்வளம், உர அளவு (இட்ட நேரம் மற்றும் அளவு), பூச்சி - நோய்த் தாக்குதல், இரகம் மற்றும் தட்பவெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்து கரும்பின் முதிர்ச்சி வேறுபடும்.
கரும்பு முற்றியுள்ளதை எவ்வாறு அறியலாம்?
சிறு அறைவை சோதனை: பரிசோதனை நிலையங்களில் போலாரி மீட்டர் மற்றும் பிரிக்ஸ் நீர்மமானியின் கண்ணாடித் தன்டினைப் பயன்படுத்தி கரும்புச் சாறின் பிரிக்ஸ், சுக்ரோஸ், சுத்தத் தன்மை போன்றவற்றின் மதிப்பைக் கண்டறியலாம். குறைந்தது, 85% அளவு இருப்பின் அது அறுவடைக்கு உகந்தது. அடி/நுனி பிரிக்ஸ் விகிதம்: தண்டு முதிர்ச்சியடையும் போது அதன் அடிப்பகுதியில் பிரிக்ஸ் அதிகளவும், நுனிப்பகுதியில் பிரிக்ஸின் மதிப்பு குறைவாகவும் இருக்கும். எனவே ஒரு கரும்பின் அடி - நுனி பகுதிகளின் பிரிக்ஸ் மதிப்பினைக் கண்டறிந்து அதன் சராசரியைக் கணக்கிட்டால் அதுவே அடி/நுனி பிரிக்ஸ் மதிப்பு விகிதம் ஆகும். இந்த மதிப்பு ஒன்றைவிடக் குறைவாக இருக்கும்போது கரும்பு முதிர்ச்சி அடைந்திருக்காது. இது ஒன்றாக இருந்தால் கரும்பு முற்றிவிட்டதை அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரை ஆலையில் முன் அறுவடை முதிர்வு எவ்வாறு நடத்துவது?
• திட்டமிடப்பட்ட அறுவடைத் தேதிக்கு 4-6 வாரங்களுக்கு முன்பே முதிர்ச்சிக் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். • முதல் கரும்பிற்கும், மறுதாம்புப் பயிருக்கும் தனித்தனியாக நடத்துவது சிறந்தது. • வயல்களில் இரகங்கள், நடவு செய்த மாதத்(பட்டம்)தினைப் பொறுத்து தனித்தனிக் குழுவாகப் பிரிக்க வேண்டும். • ஒரு ஆலைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மொத்தப் பரப்பளவினை வசதிக்கேற்றவாறு 50-60 ஹெக்டர் அளவு கொண்ட மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். • ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கரும்பு உதவியாளர் மற்றும் இரு கூலி ஆட்களை அனுப்பி மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும். • ஒவ்வோர் குழுவும் நாளொன்றுக்கு 20-25 வயல்களிலிருந்து மாதிரிகளை சேகரிக்கலாம். ஆக 6 நாட்களுக்குள் ஒரு குழு 120-150 வயல்களில் வேலையை முடிக்க முடியும். • சுமார் 40 குழுக்கள் ஒரு ஆலைக்குரிய பரப்பளவில் (5000-7000 ஹெக்டரில்) ஒரு வாரத்தில் மாதிரி எடுக்கத் தேவைப்படுவர். • கையினால் செயல்படுத்தக்கூடிய ரிபிராக்டோ மீட்டர் மூலம் பிரிக்ஸ் மதிப்பினைக் கண்டறியலாம். • பின்பு பிரிக்ஸ் மதிப்பினைப் பொறுத்து மண்டலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தலாம். • பின்பு பிரிக்ஸ் மதிப்பு வரிசைப்பட்டியல் படி கரும்பினை வெட்டுவதற்கான உரிமத்தினை வழங்கலாம். இம்முறையில் கரும்பு அறுவடை செய்வதன் மூலம் ஆலைக்கு சீரான கரும்பு வரத்து இருக்கும். அதோடு முற்றாத கரும்பினை அறுவடை செய்வதைத் தவிர்க்கலாம். இதன் மூலம் தற்போதுள்ள கரும்பு வரத்தினை 0.2 முதல் 0.5 வரை மேம்படுத்தவும் முடியும்.
அறுவடை செய்த கரும்பினை எவ்வளவு நாட்கள் கெடாமல் வைத்திருக்கலாம்?
நன்கு முதிர்ச்சியடைந்த கரும்பு, வெட்டப்பட்ட சில நாட்களிலேயே அதன் சாறு, சர்க்கரைத் தன்மை குறையத் தொடங்கும். இது மேலும் அதிக வெப்பநிலை, அறுவடைக்கு முன் வயலில் தீமூட்டுதல், அறுவடை மற்றும் போக்குவரத்தினால் ஏற்படும் இழப்புகள், நுண்ணுயிர் தாக்குதல் போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றது. அறுவடை செய்த 24 மணி நேரத்திற்குள் ஆலைக்கு அனுப்பி விட்டால் எடை இழப்பு ஏதும் ஏற்படுவதில்லை. அதற்கு மேல் வைத்திருக்கும்போது கரும்பு எடை குறைதல் (ஈரப்பதம் குறைவதால்), சுக்ரோஸ் சாறு குறைதல் போன்ற இழப்புகள் ஏற்படும். அதோடு இந்தச் சாற்றினைப் பதப்படுத்துதலில் சிக்கல் ஏற்படும். வெட்டப்பட்ட கரும்பினை வைத்திருக்கும் நாட்கள் அதிகரிக்க, அதிகரிக்க அதனால் ஏற்படும் இழப்பும் அதிகமாகும்.
அறுவடைப் பின் இழப்புகளைத் தாங்கும் இரகங்கள் யாவை?
கோ.சி 671, கோ 7314, கோ 775, போன்ற இரகங்கள் கோஜே 64, கோ.எஸ் 510 கோ 7240, கோ.சி 8001, கோ 6907, கோ 62175, போன்றவற்றை விட அதிக எதிர்ப்புத்திறன் கொண்டவை. ஆராய்ச்சி முடிவுகளின் படி கோசி 671, எனும் இரகம் கோ 6304 ஐ விட அறுவடைக்குப் பின் நீண்டநாள் தாங்கக கூடியது. கோ.சி 671 இரகமானது 14-16 மாதங்கள் வரை கூட வெப்பநிலை மற்றும் டெக்ஸ்டிரான் பாதிப்புகளை தாங்கக் கூடியது.
கரும்பில் அறுவடைப் பின் இழப்புகளைக் குறைப்பது எவ்வாறு?
-
முற்றிய கரும்புகளை விட்டுவிட்டுப் பின் நட்ட கரும்பினை அறுவடை செய்வதைத் தவிர்த்தல்.
-
அறுவடைப் பின் சார் இழப்புக்களுக்கு எளிதில் உட்படக்கூடிய இரகங்களை விரைவில் ஆலைக்கு அனுப்பி விடுதல்.
-
அதிக வெப்பநிலை கொண்ட நேரங்களில் வெட்டப்பட்ட கரும்பினை முடிந்தவரை நிழலில் வைத்தல்.
-
வெட்டி வயலுக்குள் அடுக்கி வைக்கப்படும் கரும்புகளை சோகை கொண்டு மூடி, நீர் தெளித்து சற்று ஈரப்பதமாக வைத்தல்.
-
பாலிசைடு 2 மி.லி/லி அல்லது பாக்டிரினால் 100-100 பி.பி.எம் போன்ற ஏதேனும் ஒரு உயிர் மருந்தினைத் தெளிப்பதன் மூலம் மற்றும் வெட்டப்பட்ட முனையினை நனைத்து வைப்பதன் மூலம் 120 மணி நேரம் வரை பாதிக்காமல் வைத்திருக்கலாம்.
-
நுண்ணுயிர் இழப்புகளை 70 சதவிகிதம் வரை முதனிலைக் கரும்புச் சாறிலிருந்து குறைக்க இயலும். அதற்கு கரும்பின் இரு முனைகளையும் சுக்ரோகார்டு எனும் மருந்தில் நனைக்கவும். ேமலும் இதனால் 0.9% வரை சர்க்கரைத் தன்மையை அதிகரிக்கச் செய்யலாம்.
கரும்பு வெல்லத்தின் பகுதிப் பொருட்கள் யாவை?
வெல்லத்தில் 60-85% சுக்ரோஸ், 5-15% குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்றவையும், 0.4% புரதம், 0.1 கி கொழுப்பு 1,0 கி தாதுக்கள் (8மி.கி கால்சியம், 4 மி.கி பாஸ்பரஸ் மற்றும் 11.4 மி.கி இரும்பு) போன்றவையும் அடங்கி உள்ளன. இவை தவிர வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவையும் அடங்கும். 100 கி வெல்லமானது 383 கிலோ கலோரி ஆற்றலைக் கொடுக்கும் ஆயுர்வேத மருத்துவத்தின் மருந்து தயாரிப்பில் வெல்லம் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். வெள்ளைப் படிகச் சர்க்கரையால் 99.5% சுக்ரோஸ் மட்டுமே உள்ளது.
வெல்லத் தயாரிப்பில் முக்கியமான சாறு தெளிவிப்பான் எது?
ஒரு நல்ல தெளிவிப்பான் என்பது கீழ்கண்ட பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
-
சுக்ரோஸ், ஒடுக்கப்பட்ட சர்க்கரை, அனங்ககப் பொருட்கள் (பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம்) மற்றும் அங்ககத் தனிமங்கள் (புரதம், கொழுப்பு) போன்றவைகளைத் தவிர கரும்புச் சாற்றிலிருக்கும் பிற பகுதிப் பொருட்களை நீக்கிவிட வேண்டும்.
-
கொதிக்கவைத்துச் செறிவூட்டும்போது தேவையற்ற நிறம் உற்பத்தியாவதையும், சுக்ரோஸ் தன்மை கெடாமலும் கட்டுப்படுத்துதல்.
-
படிகமாக்கலை அதிகப்படுத்துதல்.
-
அதிகப்படியான சூட்டைத் தனித்தல் மற்றும் வெல்லம் கருப்பாகி விடாமல் தடுத்தல்.
-
வெல்லத்தின் தரம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுதல்.
-
அதிக நாள் கெடாமல் பாதுகாத்தல்.
-
எளிதில் கிடைக்குமாறு இருத்தல் வேண்டும்.
வெல்லத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் காய்கறித் தெளிவிப்பான்கள் யாவை?
டியோலா, வெண்டை செடிகளின் தண்டு மற்றும் வேர், ஆமணக்கு, நிலக்கடலை மற்றும் சோயாபீன் செடிகளின் விதை, மொடக்கமா, பாஸ்லா போன்ற மரங்களின் பட்டை மற்றும் சக்லாய் செடியின் வறண்ட பட்டை.
வெல்லத் தயாரிப்பில் பயன்படும் இரசாயணத் தெளிவிப்பான்கள் யாவை?
ஹைட்ரோஸ் (சோடியம் ஹைட்ரஜன் சல்ஃபைடு), சுண்ணாம்பு (கால்சியம் ஆக்ஸைடு), சோடியம் பைகார்பனேட், சோடியம் கார்பனேட் சாஜி (50% சோடியம் கார்பனேட், 6.4% சோடியம் சல்பேட், 4.5% சோடியம் குளோரைடு), சூப்பர் பாஸ்பேட் மற்றும் ஆலம் போன்ற இரசாயணத் தெளிவிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இரசாயணத் தெளிவிப்பான்களைப் பயன்படுத்துவதால் சல்ஃபர் டை ஆக்ஸைடு போன்ற ஊறு விளைவிக்கும் இரசாயணங்கள் வெல்லத்தில் படிகின்றன. இவை வெல்லத்தின் சுவையினையும், நீண்ட நாள் வைத்திருக்கும் தன்மையினையும் பாதிக்கின்றன.
வெல்லத் தயாரிப்பிற்கு ஏற்ற இரகங்கள் யாவை?
மாநிலம் |
இரகங்கள் |
ஆந்திரப்பிரதேசம் |
கோ 6907, கோ டி 8201, கோ 8013, கோ 62175, கோ 7219, கோ 8014, கோ ஆர் 8001, |
பீகார் |
கோ.எஸ். 767, போ 91, கோ 1148 |
குஜராத் |
கோ.சி 671, கோ 7527, கோ 62175, கோ 8041, கோ 740 |
ஹரியானா |
கோ 7717, கோ 1148, கோ 1158, கோ.எஸ் 767 |
கர்நாடகா |
கோ 7704, கோ 62175, கோ 8014, கோ 8011, கோசி 671, கோ 86032 |
மத்தியப்பிரதேசம் |
கோ 775, கோ 7314, கோ 6304, கோ 62175 |
மகாராஷ்டிரா |
கோ 775, கோ 7219, கோ.சி 671, கோ 740, கோ 7257, கோ 86032 |
ஒரிஸா |
கோ 7704, கோ 7219, கோ |
வெல்லத்தை நீண்ட நாள் கெடாமல் சேமித்து வைப்பது எவ்வாறு?
கீழ்கண்ட முறைகளின் மூலம் வெல்லம் கெடாமல் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கப்படுகின்றது.
-
கிடங்குகளில் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெல்லத்தில் கால்சியம் குளோரைடு அல்லது சுட்ட சுண்ணாம்புக் கரைசலைக் கலப்பதன் மூலம் அதிகப்படியான ஈரத்தை நீக்கலாம்.
-
வெல்ல அடுக்குகளுக்கு இடையே கரும்பு சோகை, சாம்பல் பால்மேரா இலைகள், நெல் உமி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
-
மழைக்காலங்களில் நெல் உமிகொண்டு கிடங்குகளில் புகை ஏற்படுத்தலாம்.
-
குறைந்த வெப்பநிலையில் வைத்திருப்பதன் மூலம் வெல்லத்தின் சுக்ரோஸ் தன்மை கெடாமலும், மணம் மாறாமலும் பாதுகாக்கலாம்.
-
வெல்லத்தினை சணல் நாரினால் இழைக்கப்பட்ட கருப்பு பாலிதீன் பைகளில் வைத்திருக்கலாம்.
-
கோடைக் காலங்களில் வெல்லத்தினை நிழலில் காயவைத்து அதன் ஈரப்பதம் 6% க்குக் குறைவான நிலையில் பாலிதீன் கலந்த சணல் நார்ப் பைகளில் சேமித்து வைப்பதால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
-
வீடுகளில் வெல்லத்தினை சேமித்து வைக்க பால்மேரா இலைக் கூடைகள், மரப்பெட்டிகள், உட்புறமும், வெளிப்புறமும் நிறமூட்டப்பட்ட மண் பானைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
வெல்லம் தரம் பிரிப்பதற்கான படியளவுப் பண்புகள் யாவை?
பண்புகள் |
தரம் 1 |
தரம் 2 |
சுக்ரோஸ்% (குறைந்தளவு) |
80 |
70 |
ஒடுக்கப்பட்ட சர்க்கரை % (குறைந்தளவு) |
10 |
20 |
ஈரப்பதம் % (குறைந்தளவு) |
5 |
7 |
நீரில் கரையாப் பொருட்கள் % (குறைந்தளவு) |
1.5 |
2.0 |
சல்பேட் சாம்பல் % (குறைந்தளவு) |
3.5 |
5.0 |
சல்ஃபர் டை ஆக்ஸைடு பி.பி.எம் (குறைந்தளவு) |
50 |
50 |
குறைந்த செறிவுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் கரையாத சாம்பல் |
0.3 |
0.3 |
இயற்கை வெல்லம் தயாரிப்பது எவ்வாறு?
தற்போது கடைகளில் விற்கப்படும் வெல்லங்களில் பல இரசாயண மருந்துகள் கலக்கப்படுவதால் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு போன்ற ஊறுவிளைவிக்கும் இரசாயணப் படிவுகள் வெல்லத்தில் காணப்படுகின்றது. இவை வெல்லத்தின் சுவை மற்றும் சேமிப்புக் காலத்தைக் குறைக்கின்றது. இந்நிலையில் கரும்பினை இயற்கை முறையில் சாகுபடி செய்து பெறப்படும் கரும்பிலிருந்து வெல்லம் தயாரிப்பதும், அதில் அங்ககத் தெளிவிப்பான்களைப் பயன்படுத்துவதும் நல்ல தரமான வெல்லத் தயாரிப்பிற்கு உதவும். உள்நாட்டிலும், ஏற்றுமதிச் சந்தையிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லத்திற்கு அதிகத் தேவை உள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வெல்லத்திற்கு அதிகத் தேவை உள்ளது. இவ்வாறு இயற்கை வெல்லத் தயாரிப்பில் பயன்படுத்தும் கரும்பினை எந்த ஒரு இரசாயண பூச்சிக் கொல்லி களைக்கொல்லி மற்றும் உரமோ முதல் கரும்பிலிருந்தோ இன்றி முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்ய வேண்டும். பூச்சி, களை மற்றும் அனைத்து நிர்வாக முறைகளுக்கும் அங்கக ஆதாரமான உயிர் வழிக் கட்டுப்பாட்டு முறைகளையே பின்பற்ற வேண்டும்.
வெல்லக் கரைசலை எவ்வாறு தயாரிப்பது?
வெல்லக் கரைசல் என்பது, வெல்லத் தயாரிப்பின்போது கிடைக்கும் ஒரு இடைப் பொருளாகும். இதில் நீர், சர்க்கரை, சர்க்கரை அல்லாத பொருட்களும், சமவிகிதத்தில் ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோசும் இடம் பெற்றுள்ளன. இதில் புரதம், அங்கக அமிலங்கள், தாதுக்களும் கலந்துள்ளன. கரும்பிலிருந்து பெறப்பட்ட சாறில் பொட்டாசியம் ஆலம் படிகங்கள் சேர்க்கப்படும்போது, சாற்றில் உள்ள திடப் பொருட்கள் வீழ்ப்படிவாகின்றன. பின்பெறப்பட்ட தெளிந்த சாறு கொதிக்கும் கொப்பரையில் ஊற்றப்பட்டு, அமில காரத் தன்மையினை 6.0 அளவிற்குக் கொண்டு வர 50 கி சுண்ணாம்பு சேர்க்கப்படுகின்றது. 85 செ வெப்பநிலையில் வெண்டை பசைப்பொருள் கலந்து முதலில் தோன்றும் கசடுநுரை போன்ற பகுதி நீக்கப்படுகின்றது. சூப்பர் பாஸ்பேட் பாஸ்பாரிக் அமிலம் போன்ற தெளிவிப்பான்கள் சேர்க்கப்படுகின்றது. 98 செ ல் இரண்டாவது முறை கசடு நுரை நீக்கப்படும் வரை கொதிக்க வைக்கப்படுகின்றது. 106 செ வெப்பநிலையில் கொப்பரை (தட்டு) நீக்கப்பட்டு 0.04% சிட்ரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. கரும்புச் சர்க்கரை மற்றும் வெல்லத்தினை விட வெல்லக் கரைசல் அதிக இனிப்புத் தன்மை வாய்ந்தது. வீழ்படிதல் முடிவடைந்த பின் வெல்லக் கரைசல் சுத்தம் செய்யப்பட்ட புட்டிகளில் அடைக்கப்படுகின்றது. இதனை 1-1½ ஆண்டுகள் வரை கெடாமல் பாதுகாக்கலாம். 0.1% சோடியம் மெட்டா சல்பைட் சேர்ப்பதன் மூலம் இதன் தன்மை பாதுகாக்கப்படுகின்றது.
புட்டிகளில் அடைக்கப்படும் கரும்புச் சாறு தயாரிப்பது எவ்வாறு?
-
அதிக சர்க்கரைத் தன்மை கொண்ட, வெளிர் நிறமும், குறைந்த நார்த்தன்மையும் கொண்ட (கோ.சி 671, கோ 62175, கோ 7717, கோ 86032, கோ 86249, மற்றும் கோ 94012) இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
-
சாதாரண மண்ணிலேயே, நல்ல தரமான பாசன நீர் கொண்ட பகுதிகளில் கரும்பினை வளர்க்க வேண்டும்
-
இரசாயண உரங்களுக்குப் பதில் தொழு உரம் போன்றவைகளைப் பயன்படுத்தலாம்.
-
சரியான சமயத்தில், சரியன அளவு நைட்ரஜன் உரத்தினை இடவேண்டும். அதிகமாக இடுதல் கூடாது.
-
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலற்ற கரும்புகளை சாறு பிழியத் தேர்வு செய்யவும்.
-
நன்கு முதிர்ச்சியடைந்த கரும்பினை அறுவடை செய்யலாம்.
-
அறுவடை செய்த 24 மணி நேரத்திற்குள், மேல் தோலை சீவிய பின் சாறு பிழியும் இயந்திரத்தினுள் விடவும்.
-
ஒவ்வொரு 3 கி.கி கரும்பிற்கும் ஒரு எலுமிச்சை மற்றும் 2.3 கி இஞ்சி சேர்க்கவும்.
-
60-70 செ வெப்பநிலையில் சாறினை சுட வைத்து , அதே வெப்பநிலையில் 15 நிமிடம் வைத்திருக்கவும்.
-
மஸ்லின் துணி கொண்டு வடிகட்டுவதன் மூலம் கசடுகளை நீக்கவும்.
-
8 லி சாறில் 1 கி மெட்டாசல்ஃபேட் சேர்க்க வேண்டும்.
-
இச்சாறினை சுடுநீரில் சுத்தம் செய்யப்பட்ட புட்டிகளில் அடைத்து, கார்க் அடைப்பான் கொண்டு இறுக மூடிவிட வேண்டும்.
-
குளிர்ந்த பின் உபயோகிக்கலாம்.
-
இதனை 6-8 வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
-
இதனை புட்டிகளில் அடைக்க சிறிது செலவாகலாம். நாளொன்றுக்கு சுமார் 500 புட்டில்கள் நிரப்பலாம்.
-
மொத்தம் ரூ.10,000/- (புட்டிகள், இரும்புப் பாத்திரங்கள், மின்சார சூடாக்கிகள், சுடுநீரில் சுத்தப்படுத்தும் பண்ணை, கார்க் மூடிகள் போன்றவற்றிற்கு ஆகும் செலவு சாறு பிழிவதைத் தவிர)
மறுதாம்புப் பயிர் மேலாண்மை
கட்டைப் பயிரிடுதலின் நன்மைகள் யாவை?
விதைக்கு ஆகும் செலவு, விதைப்படுக்கை தயார் செய்தல், நடவு செய்தல் செலவும் குறைகிறது.
-
முந்தைய பயிரின் ஊட்டச்சத்து வளத்தையே பயன்படுத்திக் கொள்கிறது
-
முந்தைய பயிரின் கரும்பு தரத்தை விட இந்த கட்டைப்பயிரில் தரம் நன்றாக இருக்கும்.
கட்டைப் பயிரிடுதலின் குறைகள் யாவை?
-
கட்டை பயிரானது பூச்சி, நோய் மற்றும் இதர பூச்சிகளால் அதிகம் தாக்கப்படுகிறது. அதனால் விளைச்சல் மிகவும் குறைவு.
-
2 வருடங்களுக்கு மேல் கட்டைப் பயிரிடும் போது மண் வளத்தன்மையை இழந்துவிடுகிறது.
கட்டை பயிருக்கான மேலாண்மை பற்றி கூறுக?
-
கட்டை பயிரிட்ட பிறகு 5-7 நாட்களில் 25% தழைச்சத்தை கூடுதலாக அளிக்க வேண்டும்
-
இரும்பு சல்பேட் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ என்ற வீதத்தில் கட்டை பயிரிட்ட 15 வது நாளில் தெளிக்க வேண்டும். வெளிரிய நிலை தொடர்ந்தால், 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவும். கடைசி தெளிப்பில் ஒரு எக்டருக்கு 2.5 கிலோ யூரியாவை சேர்க்க வேண்டும்.
-
20,40,50 வது நாட்களில் களையெடுக்க வேண்டும்.
-
25 வது நாள் முதல் மேலுரம், 45,50 வது நாளில் இரண்டாவது மேலுரமும் இடவேண்டும்
-
70-75 நாட்களில் கடைசி முறை உரமிடவேண்டும்
-
120-180 வது நாளில் சோகை உரிக்க வேண்டும்.
கட்டை பயிரிலிருந்து குறிப்பிட்ட அளவு கரும்பை கரும்பு ஆலைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற முறை எது?
கரும்பை இரட்டை வரிசை முறையில் நடவு செய்யும்பொழுது (30:120 செ.மீ) அதிக மகசூல் கிடைக்கும். 20% அதிக விதையளவு மற்றும் முதல் பாசனத்தின்போது இடைவெளி செய்ய வேண்டும். கட்டைப்பயிரில் இடைவெளி நிரப்புதல் செயல்முறை தடைபடுகிறது.
இடைவெளி நிரப்ப உதவும் தகுந்த பொருள் எது? கட்டைப் பயிரில் எப்பொழுது இடைவெளி நிரப்ப வேண்டும்?
இடைவெளி நிரப்ப 30-35 நாட்கள் பாலித்தீன் பையில் வளர்க்கப்பட்ட விதைக் கரணைகளைப் பயன்படுத்தலாம். கட்டைப் பயிர் வளர ஆரம்பித்தவுடன் 30 நாட்களுக்குள் 60 செ.மி.க்கும் அதிகமாக உள்ள இடைவெளிகள் நிரப்பப்படவேண்டும்.