கட்டைக் கரும்புப் பயிர் மேலாண்மை
கரும்பு உற்பத்தித் திறன் அதன் வளர்ச்சிப் போக்கைக் காண்பிக்கிறது . சாத்தியமான (போட்டிப் பயிர்கள்) மற்றும் நிலவுகின்ற (வணிப் பாத்திகள்) உற்பத்தித் திறனுக்கிடையே அகன்ற இடைவெளி நிலவுகின்றது . கரும்பு மற்றும் கட்டைப் பயிர் உற்பத்தித் திறனின் மொத்த பரப்பில் 50 சதவிகிதம் கட்டைப் பயிர் வளர்ச்சி ஆகும் . இவை முதல் கரும்புப் பயிர் வளர்ச்சிக்கு முன்னரே முதிர்ச்சி அடைந்து விடும் . கட்டைப் பயிர் உற்பத்தித்திறனை முறையான மேலாண்மை முறைகளான தகுந்த காலத்தில் வேளாண்மை முறைகளைச் செயல்படுத்தல், முறையான ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் மற்றும் போதுமான பயிர்த் எண்ணிக்கை தொகையை பாதுகாத்தல் ஆகிய செயல்களின் மூலம் அதிகப்படுத்தலாம் என்பதை நிரூபித்துள்ளது |
சிறந்த கட்டைப்பயிருக்கான மேலாண்மை முறைகள்
1.தகுந்த இரகங்களை தேர்வுசெய்தல்:
-
சிறந்த கட்டைப் பயிர்த் தன்மையைக் கொண்ட தகுந்த கரும்பு இரகங்களைத் தேர்வுசெய்தல்
-
சில கரும்பு இரகங்கள் கட்டைப்பயிருக்கு சிறந்ததாக உள்ளது என்பது அறியப்பட்டுள்ளது . அவற்றுள் கோ 8013, கோ 6907, கோ 8014, 85A261, 87A298, 90A272, 92A123, 81V48, 91V83, 93V297, 97V60, மற்றும் 83R23, ஆகிய இரகங்கள் முன் பருவ வகுப்பிலும் 83V18, 89V74, 93A145, 94A109, கோ7219, கோ 7805 கோ 7706, மற்றும் கோ 86032 ஆகிய மத்திய பின் பருவ வகை இரகங்களும் பயிர் சாகுபடிக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படுகிறது .
2.பயிர் சாகுபடி முறைகள்:
|
3.இடைவெளி / சந்து நிரப்புதல்:
முதல் கரும்புப் பயிர் அறுவடையின் போது, அறுவடை செய்பவர்களின் இடப்பெயர்ச்சியால், கட்டைப் பயிரில் அதிக இடைவெளி /சந்துகள் ஏற்படுகின்றன. எனவே, கட்டைப் பயிரிலும் அதிக கரும்பு உருவாகுவதற்கு இந்த இடைவெளி /சந்துகளை நிரப்புவது மிக அவசியம். இடைவெளி நிரப்புதல் பின்வரும் வழிகளின் மூலம் மேற்கொள்ளலாம் .
-
கரணையைக் கொண்டு : ஒன்று/இரண்டு/மூன்று அரும்புகளுடைய கரணைகளை இடைவெளில் வைத்தல் .
-
“பாலிதீன் பை முறை” மூலம் கரணைகளை முன்னரே முளைக்க வைத்தல்
-
அடர்த்தியான எண்ணிக்கையுடைய இடத்திலிருந்து அகற்றி, இடைவெளி இருக்கும் இடத்தை நிரப்புதல்
4.பாலீதின் பை முறை விதை நாற்றங்கால்:
-
ஒரு அரும்புடைய கரணைகளை பாதுகாப்பாக வெட்ட வேண்டும் .
-
பாலிதீன் பையில் நடும்போது மொட்டு /அரம்பு மேல்நோக்கிய திசையில் இருக்குமாறு கவனமாய் நடவேண்டும்.
-
கரணையின் அரும்பின் மேல் மெல்லிய மண் படலம் இருக்க வேண்டும் .
-
பாலிதீன் பைகளை வரிசைகளாக வைக்க வேண்டும் .
-
பூவாளியைப் பயன்படுத்தி நீர் தெளிப்பதற்காக, ஒவ்வொரு ஆறு வரிசைகளுக்கிடையே நடக்க பாதை விட வேண்டும் .
-
சுற்றுப்புற நிலைமையின் அடிப்படையைக் கொண்டு நீர் தெளிக்கும் எண்ணிக்கை வேறுபடும் .
-
பாலிதீன் பைகளை நிழலுக்குக் கீழ் வைக்க வேண்டும் .
-
10-12 வது நாட்களுக்குப் பிறகு மொட்டுக்கள் /அரும்புகள் முளைப்புவிடத் தொடங்கிவிடும் .
-
பொதுவாக 35-40 நாட்களான கரணைகளையே நடுதலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் .
-
நடவின் போது, பாலிதீன் பையில் உள்ள மண்ணுக்கு சேதம் ஏற்படாதவாறு கவனம் செலுத்த வேண்டும் .
-
கத்தியைப் பயன்படுத்தி பாலிதீன் பையின் ஒரு பக்கத்தில் நீளவாக்கில் மெல்லிய வெட்டு கொடுத்து கவனமாக பையினை அகற்றி, பயிரிடும் நிலத்தில் அமைந்துள்ள சாலில் கரணைகளை வைக்க வேண்டும்
5.தோகை /சருகு நிலப்போர்வை:
வயலின் சால்களுக்கிடையே ஒரு எக்டருக்கு 3 டன்கள் சருகு என்ற அளவில் இட்டு பரப்பி விட வேண்டும் . இதன் நன்மைகள் பின்வறுமாறு:
|
6.ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:
செயற்கை உரங்கள்: பங்கீட்டு முறையின் போது கட்டைப்பயிருக்கு 3 பைகள் யூரியா, 5 பைபகள் சூப்பர் பாஸ்பேட் (உயர் எரிகை) மற்றும் 1.50 பை ம்யூரேட் ஆப் பொட்டாஷ் (சாம்புர பாசிசை) அளிக்க வேண்டும். பங்கீட்டு முறை அடுத்து 45 வது நாளில் இரண்டாம் அளவாக 3 பைகள் யூரியா அளிக்க வேண்டும் . இயற்கை உரங்கள்: அதிக மகசூல் மற்றும் நல்ல சர்க்கரை மீட்பு கிடைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 2 பைகள் உயிர் மக்கு எரு, 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபாக்டீரியா பரிந்துரைக்கப்பட்டுள்ளது . |
7. களை மேலாண்மை:
களை முளைக்குமுன் அளிக்கும் களைக்கொல்லி(அட்ரோஜின்) போன்றவை கட்டைப்பயிருக்கு அளிக்கக் கூடாது. களை முளைத்தபின் அளிக்கும் களைக்கொல்லிகளான கிராமோக்சோன் (4.50 லிட்டர்) மற்றும் ஃபிமோக்சோன் 2.50 கிலோ /எக்டர் என்ற அளவில் களைக்கட்டுப்பாட்டிற்கு அளிக்க வேண்டும் . தேவைப்பட்டால் ஒரு கைக்களையும் மேற்கொள்ளலாம் .
8.நீர் மேலாண்மை:
கட்டைப் பயிருக்கு அதன் வாழ்நாளில் மொத்தமாக 18-20 பாசனங்கள் தேவைப்படுகிறது . நீர் பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் சொட்டு நீர்ப் பாசனமும் பரிந்துரைக்கப்படுகிறது . சில வழக்கில், மாற்றுச்சால் முறையும் பரிந்துரைக்கப்படுகிறது . இருப்பினும், அதிகமாக நீர் கிட்டும் இடங்களில், பொதுவான பாசனங்கள், முறையான இடைவெளிகளில் அளித்து அதிக மகசூல் பெற வழிவகுக்கிறது .
9.கட்டைப்பயிர் அறுவடை:
முதன்மை கரும்புப் பயிரைவிட கட்டைப்பயிர் முன்பே முதிர்ச்சி (குறைந்தது ஒரு மாதம் முன்பே) அடைந்துவிடும் என்பது நிறுவப்பட்ட உண்மை. இதனால், குறித்த கரும்பு தொழிற்சாலைகளிலிருந்து கரும்பு வெட்டுவதற்கான ஆணைகளை முன்னரே பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் . இதனால் கரும்பு பிழிதல் தொடங்கும் பருவத்தில் கரும்புகளை திறந்த ஆலைக் கரும்பாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது . |
10. நன்மைகள் மற்றும் தீமைகள்:
நன்மைகள்
-
முன்னேற்பாட்டுச் சாகுபடி தேவையில்லை .
-
விதைபொருளின் செலவை மிச்சப்படுத்தலாம் .
-
கரும்பு விதைக்கரணை, சேகரிப்பு, கரணைகளை வெட்டுதல், மற்றும் நடுதல் ஆகிய பெரும்பாலான செயல்களை பங்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படுவதால், வேலையாட்களை மிச்சப்படுத்தலாம் .
-
விழுந்து கிடக்கும் இலைகள், சருகுகள் போன்று வயலில் விட்டுப்பட்டவை சில காலத்திற்குப் பிறகு அழுகல் ஏற்பட்டு இயற்கை உரமாக தானே மாறிக்கொள்கிறது .
-
முதன்மை கரும்புப் பயிரைவிட கட்டைப்பயிர் பொதுவாக ஒரு மாதத்திற்கு முன்பே முதிர்ச்சி நிலையை அடைந்து விடுகிறது.
-
முதன்மை கரும்புப் பயிரை விட கட்டைப்பயிருக்கு ஏற்படும் செலவினம் குறைவே .
தீமைகள்:
-
முதன்மை கரும்புப்பயிர் மகசூலை விட கட்டைப் பயிரின் மகசூல் குறைவானது .
-
தழைச்சத்து உரம் அதிகமாகத் தேவைப்படுகிறது .
-
பெரும்பாலான இடங்களில், கட்டைப்பயிர்கள் புறக்கணிக்கப்படுகிறது . இவ்வாறு கவனமில்லா சாகுபடியால் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன .
-
குறிப்பிட்ட சில இரகங்களில், சில சூழ்நிலைகளின் கீழ், பூத்தல் ஏற்படுகிறது . மேலும் அறுவடை தாமதமும் ஏற்படுகிறது . குறிப்பிட்ட நிலைகளில் நார் அளவு அதிகரித்து, சர்க்கரை மீட்பு அளவையே பாதிக்கிறது .