||| | | | | |
அங்கக வேளாண்மை :: நோய் மேலாண்மை
tamil  english

அங்கக வேளாண்மை - நோய் மேலாண்மை:

 • வேளாண் பயிர்களின் நோய் மேலாண்மை
 • தோட்டக்கலை பயிர்களின் நோய் மேலாண்மை

1. வேளாண் பயிர்களின் நோய் மேலாண்மை
நெல்                           நிலக்கடலை                         பச்சைபயிறு
கரும்பு                        மக்காச்சோளம்                      கொண்டைக்கடலை
பருத்தி                       சோளம்                                 சோயா மொச்சை
சூரியகாந்தி                 எள்                                       புகையிலை

நெற்பயிரின் நோய்கள்:
நாற்றங்கால் நோய்கள்:
குலை நோய்: (பைரிகுலேரியா ஒரைசா)

அறிகுறிகள்:

 • பயிரின் எல்லா வளரும் நிலைகளிலும், எல்லாக் காற்றுவெளி பாகங்களையும் தாக்கும் தன்மையுடையது.
 • இலை மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் (கதிர் காம்பு) தாக்கம் அதிகமாக இருக்கும்.
 • இலைகளில் ஆங்காங்கே மேலெழுந்த புள்ளிகள் உருவாகும். அவை நாளடைவில் நூற்புக்கதிர் வடிவம் (மனிதனின் கண்போன்ற வடிவம்) பெறும்.
 • சிறுசிறு புள்ளிகள் தோன்றும் பின்னர் அவை ஒன்றிணைந்து வடிவம் பெறும்.
 • அதிகப்படியாக தண்டு சாய்தல் ஏற்படலாம்.

கதிர்க்காம்பு குலை நோய்:

 • கழுத்து (கதிர்க்காம்பு) கருமையடைந்து, சுருங்கிவிடும் கதிரின் காம்பு உடைந்து தொங்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

 • எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களான பென்னா, பிரபாட் டிக்கானா, ‚ரங்கா, சிம்மபுரி, பல்குணா, சுவர்ணமுகி, சுவாதி, ஐ.ஆர் - 36, எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1005, எம்.டி.யூ 7414.
 • அறுவடை செய்த பின்பு, அடித்தண்டு மற்றும் மீதமிருக்கும் வைக்கோல் புற்களை எரித்து விடவேண்டும்.

பாக்டீரியா ஏற்படுத்தும் இலை கருகல் நோய்:
அறிகுறிகள்:

 • நாற்று வாடல்.
 • மஞ்சள் நிற கோடுகள் இலைகளில் காணப்படும். அவை இலைக் காம்பிலிருந்து உள்நோக்கி வளரும்.
 • ஆரம்பத்தில் புள்ளிகளிலிருந்து அதிகாலையில், பால்போன்ற அல்லது நிறமற்ற திரவம் வெளியேறுவதைக் காணலாம்.
 • புள்ளிகள் மஞ்சள் நிறமாக மாறும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

 • நோயில்லா வித்துக்களை வாங்கவேண்டும்.
 • நாற்றங்காலினை தனி இடத்தில் வளர்க்க வேண்டும்.
 • வயலில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டவும்.
 • பாதிக்கப்பட்ட பயிர்கள் இருக்கும் இடத்திலிருந்து நீர் ஆரோக்கியமான பயிர்கள் உள்ள இடத்திற்கு நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிரை வளர்க்கவும் - சுவர்ணா, அஜயா, தீப்தி, பத்வா மசூரி, எம்.டி.யூ 9192.

கதிர் உறை அழுகல் நோய்:
அறிகுறிகள்:

 • ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும் அவற்றின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரங்கள் அரக்கு நிறத்துடனும் காணப்படும்.
 • இலையின் நிறம் மங்கிக் காணப்படும்.
 • புள்ளிகள் தோன்றி பின்னர் ஒன்றிணைந்து இலையின் பெரும்பகுதியை ஆட்க்கொள்ளும்.
 • முளைக்காத நெல் குருத்துகள் அழுகிக் காணப்படும்.
 • பூக்கள் அரக்கு சிவப்பாக மாறிவிடும்.
 • வெள்ளைநிற பொடி போன்று படர்தலைக் காணலாம்.
 • நெற்கதிர்கள் ஆம்பிப் போய் காணப்படும். நெல் மணிகள் ஆரோக்கியமாக இராது.

தடுப்பு:

 • பாதிக்கப்பட்ட பயிர்களை அழித்திடல் வேண்டும்.

செம்புள்ளி நோய்:
அறிகுறிகள்:

 • நாற்ற்ஙகால் மற்றும் பயிரைத் தாக்கும்.
 • நாற்றுகளில் குலைநோய் ஏற்படுத்திடும்.
 • இலைகளில் புள்ளிகளை ஏற்படுத்தும்.
 • வித்துக்களும் பாதிக்கப்படும்.
 • நெற்கதிரில் செம்மை நிறம் படரும்.
 • இந்நோய் 50 சதவிகித இழப்பை ஏற்படுத்தும்.

தடுப்பு முறை:

 • இந்த பூஞ்சானை அழிக்க 10-12 நிமிடத்திற்கு வெந்நீரில் வத்துகளை, 53-540 சி-யில், போட்டுவைத்து பின்னர் உபயோகிக்க வேண்டும்.

நெற்பழம் நோய்:
அறிகுறிகள்:

 • நெல் மணிகள் தாக்கப்பட்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும் அவற்றலிருந்து பூஞ்சான் வளரும்.
 • பட்டுபோன்ற வளர்ச்சி காணப்படும்.
 • முதிர் நிலையில் இந்த பூஞ்சானின் வித்துக்கள் மஞ்சளிலிருந்து பச்சைகருமை நிறமாக மாறிவிடும்.
 • கதிரில் சில நெல் மணிகள் மட்டுமே பாதிக்கப்படும் மற்றவை நன்றாக இருக்கும்.

தடுப்பு:

 • காய்ந்த பயிர் பாகம் மற்றும் அடிதண்டுகளை அழித்திட வேண்டும்.

நெல் துங்ரோ நச்சுயிரி:
அறிகுறிகள்:

 • வளர்ச்சி நின்று விடும். அதனால் கட்டுடையாக நெற்பயிர்கள் காணப்படும். கதிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
 • இலைகள், துரு நிறத்தில் காணப்படும்.
 • தாமதமாக பூ பூக்கும் கதிர்கள் சிறியதாக காணப்படும்.
 • நெல் மணிகள், கதிரில், குறைவாகக் காணப்படும்.

தடுப்பு:

 • தடுப்பு சக்தி கொண்ட பயிர்கள் - எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1002, எம்.டி.யூ 1005, சுரேகா, விக்ரமர்யா, பரணி, ஐ.அர்.36.
 • பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் விதைச் செடிகளை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.

கரும்பைத் தாக்கும் நோய்கள்:
செந்நிற அழுகுல் நோய்:

 • கரும்பில் இந்நோய் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்நோய் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

அறிகுறிகள்:

 • இளம் இலைகள் வெளிரிக் காணப்படும். இலைகளின் ஓரம் மற்றும் காம்பு சுருங்கிக் காணப்படும்.
 • இலைகள் உதிரும் உச்சியில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து பயிர் நான்கிலிருந்து எட்டு நாட்களில் இறந்துவிடும்.
 • நோய் பாதிக்கப்பட்ட கடைசி நிலையில், கரும்பின் நடுப்பகுதி அழுகி காணப்படும்.
 • கரும்பின் அடித்தண்டில் உள்ள திசுக்கள் அனைத்தும் செந்நிறமாக மாறி காட்சியளிக்கும்.
 • இடைக்கணு சுருங்கி காணப்படும். அவ்வாறு உள்ள கரும்புகளின் உள்பகுதி சுருங்கி, அரக்கு நிறத்திலிருக்கும்.
 • வெள்ளை நிற புஞ்சான வளர்ச்சி அரக்கு நிற திசுக்கள் இருக்கும் பகுதியில் காணலாம்.
 • செந்நிறமாகுதல் மற்ற நோய் தாக்குதலிலும் காணப்படும். ஆனால் செந்நிறத்தில் வெள்ளை பூஞ்சானின் வளர்ச்சி இந்நோய்க்கே உரிய அறிகுறியாகும்.
 • செந்நிற ஓரம், அரக்கு நிற நடுப்பகுதி என பிளவுபட்ட இடங்களில் காணலாம்.

தடுப்பு முறைகள்:

 • மழைப் பருவங்களில் இந்நோய் வேகமாக பரவும் கரும்பினை பாதியாக வெட்டி செந்நிற திசு மற்றும் வெள்நைிற கோடுகள் உள்ளனவோ என்று சோதித்து பின்னர் தடுப்பு முறைகளை பின்பற்றிடல் வேண்டும்.
 • எதிர்ப்பு சக்தி கொண்ட பயிரினை பயிரிடுதல் சிறந்த முறையாகும். நடவு செய்யும் நாற்று நோயற்றதாக இருத்தல் மிக முக்கியம். பயிர்தூய்மை மிக அவசியம்.
 • தோகை (சோகை) உரித்தல், அதிகப்படியான நீரை வடித்தல் நன்று.
 • நோய் பாதிக்கப்பட்ட வயல்களில், கட்டைப்பயிர் வளர்த்தலை தவிர்க்கவும்.
 • பயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்.
 • பயிரிடுவதற்கு முன் விதை நேர்த்தி சிகிச்சையை 520 சி.யில் முப்பது நிமிடத்திற்கு பின்பறிறிட வேண்டும்.
 • கரும்பில் இடைக் கலப்பு முறையை பின்பற்றிடல் வேண்டும். இதன்மூலம் அந்தந்த இடத்திற்கு ஏற்ப, திறன் கொண்ட பயிர்களை வளர்க்க முடியும்

எதிர்ப்பு திறன் கொண்ட கரும்பு பயிர்கள்:

 • கோ 8321, கோ85019, கோ 86010, கோ 86032, கோ 86249, கோ 93009, கோ 99004, கோ 99006 ஆகியவை வெப்ப மண்டலம் சார்ந்த பகுதிகளில் எதிர்ப்புத்திறன் கொண்டவையாகும். கோ 91, கோ 89003, கோ 98015, கோ 99015, கோ 99016, கோ.எஸ் 96275, கோ.எஸ் 99259, கோ பான்ட் 90223, கோ பான்ட் 94211, ஆகியவை குறைந்த வெப்பப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடிய எதிர்ப்புசக்தி கொண்ட பயிர்களாகும்.

கரும்புக் கரணை அழுகல் நோய் / அன்னாசிபழ நோய்:
அறிகுறிகள்:

 • கரணைகளை அதிகம் தாக்கும்.
 • பாதிக்கப்பட்ட கரணைகளை விதைக்கப்பட்டால், அவை அழுகிவிடும் அல்லது அவை 6-12 அங்குலம் மட்டுமே வளரும்.
 • குட்டையாகுதல் மற்றும் வெளிரிக் காணப்படுதல்.
 • இலை உதிர்ந்து, தண்டு அழுகி விடும்.
 • பாதிக்கப்பட்ட கரணைகளின் நடுப்பகுதி செந்நிறமாக இருக்கும் அவை அழுகிக் காணப்படும்.
 • அன்னாசி பழ வாடை வீசும்.

தடுப்பு முறைகள்:

 • ஆரோக்கியமான கரணைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
 • அவ்வாறு தேர்வு செய்த கரணைகளை கரிம பாதரசம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இது வெட்டப்பட்ட ஓரங்களின் மூலம் பூஞ்சான் உள்ளே நுழையாமலிருக்க உதவும். பின்னர் கரணையை நடவு செய்யலாம்.
 • கரணைகளை வெந்நீர் கொண்டு முன் நேர்த்தி அளித்தல் மூலம் மொட்டுகள் முளைக்க அதிக வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதனால் நோய்கிருமியை எதிர்த்து மொட்டுகள் வேகமாக மலரும்.

அழுகல் நோய்:
அறிகுறிகள்:

 • இந்நோயின் அறிகுறி பியர் வளர்ந்த 4-5 மாதத்தில் தான தெரிய ஆரம்பிக்கும்.
 • இலைகள் உதிரும்.
 • பாதிக்கப்பட்ட கரும்பின் தக்கை (நடுப்பகுதி) ஊதா நிறத்தில் காணப்படும். அவற்றில் நீலவாட்டில் கோடுகள் காணப்படும்.
 • இலைகள் பழுப்பாகி உதிரும்.
 • பாதிக்கப்பட்ட கரும்பிலிருந்து நாற்றம் வெளிவரும்.
 • பருத்திப் பஞ்சு போல பூஞ்சான வளர்ச்சியை தக்கை (பித்) பகுதியில் காணலாம்.
 • பாக்டீரியா தாக்குதல் இந்நோயைப் பின்தொடரும்.

தடுப்பு முறைகள்:

 • நோயற்ற கரணை தேர்ந்தெடுத்தல்.
 • உவர் மண்ணில் இப்பயிர் வளர்ப்பதை தவிர்க்கவும்.
 • கோ 617, பி.பி 17 ஆகிய வகைகள் நல்ல எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களை வளர்த்தல் பலன் தரும்.

புல்தோகை நோய்:
அறிகுறிகள்:

 • இந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளின் அடிப்பகுதியில் உள்ள மொட்டுகளிலிருந்து ஒல்லியான புல் போன்ற இலைகள் தழையும். இது தழைப்பருவத்தில் ஏற்படும் நோய்.
 • இவ்வாறு தழையும் இலைகள் பழுப்புநிறத்தில் காணப்படும்.
 • இது போன்ற பாதிக்கப்பட்ட கரும்பின் தண்டு சரிவர வளராது. அவ்வாறே வளர்ந்தாலும் இடைக்கணுப் பகுதி மிக சிறியதாகக் காணப்படும்.
 • இந்நோயை உண்டாக்கும் நச்சுயிரி, தாவரச்சாறு மூலம் பரவுகிறது. கட்டைப்பயிர் வளர்த்தல் மூலமும் இந்நச்சுயிரி பரவுகிறது. அசுவுணி பூச்சியின் மூலம் இந்நோய் பரவுகிறது.

தடுப்பு முறைகள்:

 • நோய்பட்ட கரும்புச் செடிகளை அகற்றிட வேண்டும்.
 • முன் சிகிச்சையாக, கரணைகளை (ஆரோக்கியமானவை) வெந்நீரில் (520 செ) வைக்கலாம். இந்த முறையை நாற்று நடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு செய்தல் வேண்டும்.
 • அல்லது கரணைகளை 540 செ வெப்ப காற்றில் எட்டு மணி நேரம் வைத்து முன்சிகிச்சை செய்து, பின்னர் நட வேண்டும்.

மறுதாம்புக் குட்டை நோய்:

 • இந்நோயினால் பதிக்கப்பட்ட கரும்பு சரிவர வளராமல் குட்டையாக இருக்கும். கட்டைப்பயிர் (மறுதாம்பு) வனர்த்தலின் போது பாதிப்பு அதிகமாக இருக்கும்.
 • கரணை குறைப்பட்ட முளைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
 • தாவரச் சாற்றின் மூலம் பரவும்.

தடுப்பு முறைகள்:

 • ஆரோக்கியமாக கரணைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
 • முன் சிகிச்சையாக, கரணைகளை, 500 செ வெப்பமுள்ள வெந்நீரில் இரண்டு மணி நேரம் விடுதல் நூறு சதவிகிதம் நோய் கட்டுப்பாட்டை கொண்டு வர வல்லது

பல்வண்ணம் / தேமல் நோய்:
கட்டுப்பாட்டு முறைகள்:

 • எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகளை பயிரிட வேண்டும்.
 • பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு இந்நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்கலாம்.

பருத்தியை தாக்கும் நோய்கள்:
ஆல்டர்னேரியா இலைப்புள்ளிநோய் - அறிகுறிகள்:

 • சிறிய ஒழுங்கற்ற உருவம் கொண்ட திட்டுக்கள் (இலைப்புள்ளி) தோன்றும். அவற்றின் ஓரங்கள் அடர் அரக்கு நிறத்திலும் அதன் நடுப்பகுதி வெளிர் நிறத்தில் சருகு போல் ஆகி விடும்.
 • பாதிக்கப்பட்ட இலை காய்ந்து உதிரும்.
 • தண்டுகளில் மறு (பிளவை) தோன்றும்.
 • சில நாட்களில் காய்கள் பாதிக்கப்பட்டு உதிரும்.

பாதுகாப்பு முறை:

 • வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.
 • செடியின் காய்ந்த பாகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அடித் தண்டுகள் (அறுவடைக்குப் பின்பு) அகற்றப்பட வேண்டும்.

ஆன்தராக்நோஸ் (கொல்லடோடிரைக்கம்):
அறிகுறிகள்:

 • வித்திலைகளில் சிறிய சிவப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
 • தண்டுகளில் உள்ள புண்கள் மூலமாக நோய்க் கிருமிகள் செடிகளைத் தாக்கும்.
 • அனைத்து வளரும் நிலையில் உள்ள காய்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்
 • பூஞ்சான் பஞ்சு மற்றும் வித்துக்களில் ஊடுருவி விடும்
 • பூஞ்சான் பஞ்சு அரக்கு நிறத்தில் காணப்படும். இலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும்.
 • பருத்திக் காய்கள், சிறிய குழி போன்ற சிவப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.
 • நன்றாக பாதிக்கப்பட்ட வித்துக்கள்முளைக்கும் திறனை முழுவதுமாக இழந்துவிடும்.

தடுக்கும் முறைகள்:

 • நீர் தேக்கத்தை வயல்களில் தடுக்கவும்.
 • பாதிக்கப்பட்ட செடிகளின் மீதங்களை கண்டிப்பாக அகற்றிவிட வேண்டும்.

சாம்பல் நோய்:

 • முதிர் நிலையை அடைந்து கொண்டிருக்கும் செடிகளை இந்நோய் தாக்கும்.
 • முதிர் இலைகளில் ஒழுங்கற்ற சிறிய புள்ளிகள் தோன்றும்.

தவிர்ப்பு முறைகள்:

 • பாதிக்கப்பட்ட செடிகளை அழித்திடல் வேண்டும்.
 • தொடர்ச்சியாக பருத்தியை விதைக்கக் கூடாது.

வாடல் நோய் (ஃபுசேரியம் வேஸின்ஃபெக்டம்):
அறிகுறிகள்:

 • எல்லா வளர் நிலைகளிலும் இந்நோய் பாதிக்கும்.
 • வித்திலைகள் பழுப்பு / அரக்கு நிறத்தில் காணப்படும்.
 • இலைகள் நீர்ச்சத்தினை இழந்து வாடி பின் உதிரும்.
 • ஆணிவேர் குன்றிய வளர்ச்சி காண்பிக்கும். கிளை வேர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.
 • திசுக்கள் கருமையடையும்.
 • கரும்கோடுகள் காணப்படும்.
 • இலைகள் ஓரங்களிலிருந்து வெளிர ஆரம்பிக்கும்.
 • வாடல் முழுவதுமாக அல்லது பகுதியாக தோன்றும்.

கட்டுப்பாட்டு முறைகள்:

 • எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களை வளர்க்க வேண்டும்.
 • நிலத்தில் அதிகப்படியான நீரை வடித்திட வேண்டும்.
 • மூன்றிலிருந்து நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
 • பயிர் அறுவடைக்கு பின்பு பயிர் மீதங்களை அகற்றிட வேண்டும்.
 • பயிர் வரிசைகளில் 50 கிலோ தொழு உரத்தில் கலக்கப்பட்ட 2 கிலோ டிரைக்கோடெர்மா கலவையை இட வேண்டும். இது நோய் தடுப்பிற்கு உதவும்.
 • கலப்புப் பண்ணையம் செய்தல் இந்நோய் தாக்குதலைக் குறைக்கும்.
 • சாம்பல் சத்து உரமிடுதல் இந்நோயை தவிர்க்கும் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரம் அதிகமானால் இந்நோய் தாக்குதலை அதிகரிக்கும்.

வேர் அழுகல் நோய்: (ரைசாக் போனியா படாடிகோலா):
அறிகுறிகள்:

 • செடிகள் திடீரென வாடிவிடும்.
 • இலைகள் பழுத்து, காய்ந்து விடும்.
 • பாதிக்கப்பட்ட செடிகளை சுலபமாக பிடுங்கி விடலாம்.
 • ஆணிவேர் அழுகிவிடும். சில கிளைவேர்கள் மட்டுமே செடியைத் தாங்கும். இதனால் செடிகளை சுலபமாக பிடுங்கி விடலாம்.
 • வேர் நுணிகள் வழவழப்புடன் காணப்படும்.

தடுப்பு முறைகள்:

 • பருத்தி செடிகளுக்கு, கல்லுப்பயிறு (நரிப்பயிறு) எனும் ஊடுபயிரை பயன்படுத்தலாம். இப்பயிர் நிழலைத் தந்து அதிக ஈரப் பதத்தைத் தக்க வைக்கும். தட்பவெப்ப நிலையைக் குறைக்கும். இது நோய் தாக்குதலை மட்டுப்படுத்தும்.
 • தட்பவெப்ப நிலை மிதமாக இருக்கும் பொழுது விதைக்க வேண்டும்.
 • தொழுவுரத்தில் (50கிலோ) டிரைக்கோடெர்மாவினைக் (2கிலோ) கலந்து பயிர் வரிசைகளில் இடவும்.

சூரியகாந்தி பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் அதன் மேலாண்மை:
அடிச்சாம்பல் நோய்: (பிலாஸ்போஃபோரா ஷீலியாந்தி):

 • ஈரத்தினால் அழுகல், உள்பரவிய பாதிப்புகள், இலைகளில் புள்ளிகள், வேர்களிலும், தண்டிலும் மறு கொப்புளம் / முடிச்சு தோன்றல் - இவையாவும் அடிச்சாம்பல் நோய் அறிகுறிகள்.
 • முளைக்காம்பில் உள்ள இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
 • செடிக் குட்டைப் படுதல், இலைகள் பழுத்தல், ஊடுருவிய / உட்பிரவிய பாதிப்புகள் காணப்படும்.
 • பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில் பச்சை மற்றும் மஞ்சள் பலவண்ண புள்ளியமைவு ஏற்படும்.
 • தண்டு எளிதில் உடைந்து விடும்.
 • இளம் நாற்றுகளில் வெள்ளை பூஞ்சான் பரவும் (அதிக ஈரப்பதம் கொண்ட நாட்களில் காணலாம்).
 • கிளைவேர்கள் குறையும்.
 • பூக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத் தன்மையடைந்துவிடும்.
 • முதிர் செடிகளில் இந்நோய் அறிகுறி, பூக்கள் பூத்தபின்பு தான் தோன்றும்.
 • கீழ் பகுதிகளில் பூஞ்சான் வளர்ச்சி காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

 • எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களை தேர்ந்தெடுத்து நடவேண்டும்.
 • பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் அதன் பாகங்கள் இல்லாத பாதுகாப்பான இடத்தில் பயிரிடுதல் நன்று.

ஆல்ட்டர்நேரியா கருகல் நோய்:
அறிகுறிகள்:

 • அடர் அரக்கு / கருப்பு நிறத்து நீள் வட்ட வடிவமுடைய புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
 • புள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்படும். சாம்பல் நிற நடுப்பகுதி தோன்றும்.
 • இலைகளில் தோன்றிய புள்ளிகள் தண்டு, பூக்கள் மற்றும் காம்புகளுக்குப் பரவும்.

தடுப்பு முறைகள்:

 • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைகள் - இ.சி. 132846, இ.சி. 132847, இ.சி.132361, இ.சி.126184.
 • பயிர் விதைக்கும் நேரம், இடம், காலம் ஆகியவற்றை கவனமாக தேர்ந்தெடுத்தால் இந்நோயைத் தவிர்க்கலாம்.

சாம்பல் நோய்: (எரிசிஃபே சிக்கோரேசியம்):
அறிகுறிகள்:

 • பூவடிச் சிற்றிலை மற்றும் தண்டுகளில் இதன் அறிகுறிகள் காணப்படும்.
 • சாம்பல் / வெள்ளை நிற புள்ளிகள் அதிகரிக்கும்.
 • கறுப்பு நிற ஊசி முனை போன்ற பூஞ்சான் வளர்ச்சி, சாம்பல் நிற புள்ளிகளிலிருந்து தோன்றும்.
 • இந்நோய் அதிக இழப்பை ஏற்படுத்தாது.

தடுப்புமுறை:

 • பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் பிற பயிர் கழிவுகளை அகற்றிடல் வேண்டும்.

ரைசோஃபஸ் தலைப்பாக அழுகல் நோய்:
அறிகுறிகள்:

 • மலர் முதிர்ச்சியடையும் பொழுது, சிறிய அழுகல் போன்ற புள்ளிகள், மலரின் பின்புறம், தண்டுவடத்திற்குப் பக்கத்தில் தோன்றும்
 • இப்புள்ளிகள் பெரிதாகி, மென் அழுகல் ஏற்படும் அவ்விடத்திலிருந்து பூஞசான் வளர்ச்சி காணப்படும்
 • பின்னர் மலர் தண்டு அழுகி, பூவின் தலை தொங்கி விடும்
 • இவ்வாறு பாதிக்கப்பட்ட மலரிலிருந்து எடுக்கப்படும் வித்துக்கள் கசப்பு சுவையுடன் இருக்கும்

தடுப்பு முறைகள்:

 • பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சான் கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
 • பூவில் காணம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சூரிய காந்தியின் நச்சுயிரி நோய்கள்:
சூரியகாந்தி பல்வண்ண (தேமல்) நச்சுயிரி:

 • பழுப்பு நிற தேமல் வட்ட வடிவில் காணப்படும்.
 • செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் பூக்கள் உருக்குலைந்தும் விதைகள் சிறுத்தும் காணப்படும்.
 • தாவரச் சாற்றின் மூலமாகவும் அசுவுணிப்பூச்சி மூலமாகவும் இந்நச்சுயிரி பரவுகிறது.
 • இலைகள் சுருங்கி சிறிய குவளை போன்று உருமாறும்.
 • முக்கிய நோய் பரப்பும் உயிரிகள் - ஏஃபிஸ் கோசிப்பி, ஏஃபிஸ் மால்வே.

மஞ்சள் தேமல் நோய்:

 • மஞ்சள் நிற வளையம் போன்ற வடிவ தேமல் இலைகளில் தோன்றும்.
 • தாவரச் சாறு ஒட்டுக்கட்டுதல் போன்றவற்றால் இந்நச்சுயிரி பரவும்.

மஞ்சள் நிற பொட்டு நோய்:

 • மஞ்சள் நிற கொப்புளம / பொட்டு போன்று இலைகளில் தோன்றும்.
 • இலைகள் சுருக்கத்துடன் காணப்படும்.
 • இலைகளில் 1-3 செ.மீ அளவு மஞ்சள் நிற வட்டங்கள் காணப்படும்.
 • இலைநரம்புகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
 • இளம் இலைகள், சிறுத்து சுருங்கிக் காணப்படும்.

இலை சுருங்கும் நோய்:

 • சுருங்கிய இலைகளில் மஞ்சள் நிற கொப்புளம் / பொட்டு போன்று அறிகுறிகள் தோன்றும்.

நச்சுயிரி நோய்களின் மேலாண்மை முறைகள்:

 • சூரியகாந்தி பயிரில் நச்சுயிரிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த நேர் வழிமுறைகள் குறைவே.
 • பயிர் நடுதலுக்கு முன்பு களைச் செடி மற்றும் முந்தய அறுவடையின் மீதங்களை அகற்ற வேண்டும்.
 • நோய் பரப்பும் அசுவுணிப் பூச்சியை, பூச்சிக்கொல்லி கொண்டு அழிக்கலாம்.

பாரம்பரிய முறை:

 • உழுதல், நிலத்தை கலப்பை கொண்டு கிளருதல், வித்திடும் நேரம், நிலத்தில் உள்ள ஊட்டச்சத்து மேலாண்மை, நீர் பாய்ச்சல் இவையனைத்தும் நல்ல முறையில் பின்பற்றினால் நோய் பரவாமல் தடுக்கலாம்.
 • பயிர்சுழற்சி பின்பற்ற வேண்டும்.
 • சரியான நேரத்தில் விதைத்தல், பயிர்சுழற்சி, ஊடுபயிர் நடுதல், சரியான நீர் பாசனம் இவற்றை பின்பற்ற வேண்டும்.

உயிரியல் முறை:

 • டிரைக்கோடெர்மா, கிலோகிலேடியம் - இவை பூஞ்சான் தாக்குதலைக் குறைக்கும்.
 • வேம்பு எண்ணெய், வேப்பங்கொட்டைச் சாறு பயன்படுத்தலாம்.
 • ‘வாம்’ எனும் வெளி வேர் பூசணத்தை உபயோகிக்கலாம்.

நிலக்கடலையின் நோய்கள்:
இலைப்புள்ளி நோய்:

 • விதைத்த ஒரு மாதத்தில் இந்நோய்த் தாக்கம் ஏற்படலாம்.
 • சிறிய சோகை (பசுமை சோகை போன்ற புள்ளிகள் தோன்றி, பின்னர் அவற்றின் நடுப்பகுதி கரும் நிறத்திற்கு மாறும்.
 • இலையின் அடிப்பகுதியில் அரக்கு நிறப்புள்ளிகளைக் காணலாம்.
 • இலை, காம்பு, தண்டு ஆகிய இடங்களில் இப்புள்ளி தேன்றும்.

பாரம்பரிய / சாகுபடி முறை:

 • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வளர்த்தல்.
 • ஊடுபயிராக சோளத்தை வளர்க்கலாம் (சோளம் 1 பகுதி, நிலக்கடலை 3 பகுதி).
 • பூச்சி மற்றும் நோய்க் கிருமிகளுக்கு மாற்று ஊணூட்டி அல்லாத பயிரை ஊடுபயிராக தேர்வு செய்யலாம். பயிறு வகை அதில் சிறந்தது.

இயந்திர முறை:

 • பயிர் மீதங்களை நிலத்தின் அடியில் புதைத்திட வேண்டும். நோய் தாக்கப்பட்ட பயிர்களை அகற்ற வேண்டும்.

உயிரியல் முறை:

 • இலைகளில் படும்படி வேப்ப இலை சாற்றை (2-5%) தெளிக்க வேண்டும். விதைத்த நான்காம் வாரத்திலிருந்து மூன்று முறை (2 வார இடைவெளியில்) தெளிக்க வேண்டும்.

பின்பருவ இலைப்புள்ளி நோய்:

 • வித்திட்ட 55-57ஆம் நாளில் இந்நோய் தாக்குதல் வரலாம்.
 • கருமை நிற வட்ட புள்ளிகள் இலைகளில் தோன்றும்.

பாரம்பரிய கட்டுப்பாட்டு முறை:

 • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை நட வேண்டும்.
 • சோளம்/கம்பு 1 பங்கு, நிலக்கடலை 3 பகுதி என ஊடு பயிர்களை பயிரிடலாம்.
 • பயிர் சுழற்சி பயிறு வகை சிறந்தது.

இயந்திர கட்டுப்பாட்டு முறை:
உயிரியல் கட்டுப்பாட்டு முறை:
துரு நோய் (பக்சினியா அராக்கிடிஸ்):

 • ஆரஞ்சு (அரக்கு) நிறத்தில் சிறிய துரு புள்ளிகள் மேலெழுந்தவாறு தோன்றும். இவை இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். துருப்புள்ளிகளில் பொடி போன்ற பூஞ்சானைக் காணலாம்.

பண்பாட்டுமுறையில் நோய் கட்டுப்பாடு:

 • பயிர்சுழற்சி மற்றும் வயல் வரப்புகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
 • சான்றிதல் பெற்ற வித்துக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 • ஜீன் மாதம் முதல் வாரத்திலேயே வித்துக்களை விதைக்க வேண்டும். இது நோய் தாக்குதலை குறைக்கும்.
 • ஊடுபயிரான் சோளம் 1 பகுதி நிலக்கடலை 3 பகுதி என பயிரடலாம்.

இயந்திர முறை:
உயிரியல் முறை:
உச்சி அழுகல் நோய்:
அறிகுறிகள்:

 • வித்துக்கள் மொட்டு மலரும் முன்னரே அழிந்து/சிதைந்து விடும்.
 • பூக்கள் மலர்ந்த பின்பு இந்நோய் தாக்கினாலும் விதைகள் அழுகி விடும்.
 • மலரின் கீத்துப் பகுதி அழுகி காணப்படும்.
 • முதிர் பயிர்களில் அழுகல் அடி தண்டிலிருந்து ஆரம்பித்து பின்னர் தலைவரை பரவி, பயிரை அழித்து விடும்.

தடுப்பு முறை:

 • பயிர் சுழற்சி.
 • தாவரக் கூளங்களை அகற்றிடல் வேண்டும்.
 • ஆழமாக உழுவதன் மூலம், மேல் உள்ள மட்கும் குப்பைகளை நிலத்தினும் புதைக்கலாம்.
 • 1 கிலோ வித்துடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடே / டிரைக்கோடெர்மா ஹாரிசானம் எனும் நுண்ணுயிரியை கலந்து பின்னர் விதைக்கலாம். அவற்றை 25-62.5 கிலோ என்ற அளவில் ஒரு எக்டர் வயலில் இடலாம். அவ்வாறு வயலில் டிரைக்கோடெர்மாவை இடும்பொழுது ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை அவற்றுடன் பயன்படுத்த வேண்டும்.

மொட்டு சோகை நோய்:

 • வெளிப்பச்சைப்பட்டை இலைகளில் தோன்றும்.
 • நுனிமொட்டு காய்ந்து வாடிவிடும்.

தடுப்பு முறைகள்:

 • முன் விதைத்தல் பலன் தரும்.
 • எதிர்ப்பு சக்தி கொண்ட வளர்க்கலாம்.
 • களைச் செடிகளை அகற்றி விட வேண்டும்.
 • கம்பு போன்ற ஊடுபயிர்களை பயன்படுத்த வேண்டும் (7 பங்கு நிலக்கடலை; 1 பங்கு கம்பு).

கலஹஸ்தி மலடி நோய்:

 • பாதிக்கப்பட்ட செடிகள், குன்றிய வளர்ச்சி மற்றும் அதிக பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும்.
 • இளம் காய்கலில் சிறிய மேலெழுந்த புள்ளிகள் காணப்படும். .
 • பின்னர் இப்புள்ளிகள் ஒன்றிணைந்து காயின் மொத்த உருவையும் மாற்றும்.

தடுப்பு முறைகள்:

 • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிரை வளர்க்கவும் - திருப்பதி 3, திருப்பதி 2.
 • நெல் விதைத்த பின்னர் நிலக்கடலையைப் பயிரிடவும். இது நோய் தாக்கத்தைக் குறைக்கும்.

விதைப்புள்ளி (பரவைக் கண்) நோய்:

 • சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் கீழுள்ள இலையில் தோன்றும் அவை இலை முழுதும் பரவும்.
 • முற்றிய நிலையில் இது முழு இலையையும் வாடியது போலாக்கிவிடும்.

தடுப்பு முறைகள்:

 • வெயில் காலத்தில் ஆழமாக உழுதல்.
 • நல்ல தரமான, சான்றிதழ் பெற்ற வித்தினை பயன்படுத்துதல்.
 • செடி கூளங்களை அகற்றல்.

மக்காச்சாளத்தின் நோய்கள்:
மேடிஸ் இலைக்கருகல் நோய்:

 • ஆரம்ப நிலையில் (தேமல்) சிறியதாக இருக்கும். இவை பரவி ஒன்றிணைந்து பெரும்பாலான இலைகளை கருக்கிவிடும்
 • நோய் அறிகுறி மற்றும் தாக்கம், பயிர் வகையினைப் பொறுத்து மாறுபடும்

தடுப்புமுறைகள்:

 • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகள் - டெக்கான், வி.எல. 42, பிரபாட், கே.ஹ - 5901, ப்ரோ - 324, ப்ரோ - 339, ஐசிஐ - 701, எஃப் - 7013, சர்டஜ், டெக்கான் 109
 • கேப்டாஃபாலினை இரண்டு முறை வயலில் தெளிக்கலாம்

சோளம் அடிசாம்பல் நோய்:

 • இலையின் அடிபாகம் வெளிப்பச்சை (வெளிர் பச்சை) அறிகுறி காண்பிக்கும்
 • வெள்ளைநிற பூஞ்சான வளர்ச்சி இலைகளில் காணப்படும் மகரந்தக்குஞ்சம் பூவிலை நோய் அறிகுறி காண்பிக்கும்
 • நோயின் தாக்கத்தை தாங்கிக்கொள்ளும். பயிர்வகைகள் அறிகுறிகளைக் காண்பித்தாலும் வித்துகள் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது

தடுப்புமுறை:

 • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர்கள் - ஈ.எச் - 43861, ஏ9, இன்டிமிட் - 345

செங்கோடு சாம்பல் நோய்:

 • கீழ் உள்ள இலைகளில் பழுப்புநிற தேமல்/கோடு தோன்றும். அவை இலை நரம்பின் இடைப்பகுதியில் சீராக பரவும்
 • கோடுகள் செந்நிறமாக மாறும்
 • விதை (சோள மணி) சரியாக வளராது. பயிர் பூக்கும் நிலையை அடையும் முன்னரே இறக்கும் வாய்ப்புண்டு
 • பூஞ்சான், இலைகளில், பஞ்சு போன்று வளரும்
 • பூ மற்றும் இலை பகுதிகள் எவ்வித அறிகுறிகளையும் காண்பிக்காது

தடுப்பு முறை:

 • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர்கள் - சோஹினூர், பரபாட், ஐ.சி.ஐ - 703, பி.ஏ.சி - 9401, சீட்டெக் - 2331, பையோ - 9681

செம்புள்ளி (பழுப்பு புள்ளி) நோய்:

 • இந்நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள் பசுமை சோகை புள்ளி அறிகுறி காண்பிக்கும்
 • உயர் தட்பவெப்ப நிலை, உபரிநீர் - இவை இரண்டும் இந்நோய் பரவுதலை அதிகப்படுத்தும்
 • கணு மற்றும் இடைக்கணும் பகுதிகளில் அரக்கு நிற நைவுப்புண் காணப்படும்
 • மையநரம்பிலும் அரக்கு நிற புள்ளிகள் இருக்கும்
 • முற்றிய நிலையில் அழுகல் மற்றும் தண்டு காய்தல் ஏற்படும்

கட்டுப்பாட்டு முறைகள்:

 • முன் விதைத்தல் நோய் தாக்குதலைக் குறைக்கும்
 • பயிரை சுற்றி புல் வளர்தலைத் தவிக்கவும்
 • ஊடுருவும் பூஞ்சான்கொல்லியான ‘மெட்டாலாக்ஸில்’ லினை பயன்படுத்தவும்
 • எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களான - கங்கா 11, டெக்கான், டெக்கான் 103, கம்போசிட் சுவான் 1, எஃப் - 9572, ஜே.எம்.எச் - 178 - 4

பித்தியம் தண்டு அழுகல்நோய் (பித்தியம் அஃபானிடெர்மேட்டம்):

 • அடித்தண்டில் உள்ள இடைக்கணு, அழுகி காணப்படும்
 • சாய்தல் ஏற்படலாம்
 • அழுகிய இடைக்கணு திருகி இருக்கும்
 • எர்வினியா அழுகல் நோயிலிருந்து வேறுபடுத்த அருகிலுள்ள ஆய்வுக் கூட நிபுணர்களின் உதவியை நாடலாம். உறுதி செய்த பின்னர் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றவும்

கட்டுப்பாட்டு முறை:

 • சரியாக நீர் வடித்தல் வேண்டும்
 • முன் அறுவடையின் பயிர் களங்களை அகற்ற வேண்டும்
 • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் - கங்கா, சஃபேத் - 2,
 • சரியான எண்ணிக்கை - 50,000 / எக்டர்

பாக்டீரியல் தண்டு அழுகல் நோய் (எர்வினியா கிரிஸான்திமி):

 • செந்நிற அழுகல் (நீர்கோத்தது, வழவழப்பாக இருக்கும்) அடித்தண்டில் ஏற்படும் சுலபமாக உடைந்து விடும்
 • அழுகிய தண்டிலிருந்து துர்நாற்றம் வீசும்
 • பாதிக்கப்பட்ட செடிகள் சீக்கிரம் இறந்து விடும்

தடுப்பு முறைகள்:

 • வரப்புகளில் உள்ள களைச் செடிகளை அகற்றவேண்டும்
 • நீர்த்தேக்கத்தைத் தவிர்க்கவும்

ரியழுகல் நோய்: (கேக்ரோஃபோமினா ஃபாசியேலினா):

 • பூப்பூத்த 1-2 வாரங்களில் நோய் அறிகுறிகள் காணப்படும்
 • தக்கைப் பகுதி (உட்சோறு) அழுகி விடும்
 • இந்நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரி, நாற்றுகளின் வேரில் உட்புகும் பூப்பூத்த பின்னர் நோய் அறிகுறி காணப்படும்
 • தண்டு உள்பகுதி கருமை நிற அழுகல் போல் தோற்றமளிக்கும் நீர் செல்லும் திசுக்கள் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் பயிர்கள் உயிரிழக்கும்
 • பாதிக்கப்பட்ட அடித்தண்டு இடைக்கணு பகுதிகளில் சிறிய தகடு போன்ற வளர்ச்சியைக் காணலாம். அவை அடுத்த விதைத்தலின் போது முளைத்து பயிர்களை தாக்கும். தகடுகள், இந்நச்சுயிரிகளின் விதைகளாகும்
 • பாதிக்கப்பட்ட சோகைகள் கருமை நிறத்திலிருக்கும்
 • அதிக தட்பவெப்ப நிலையிலும் (30-420 செ) மற்றும் குறைவான ஈரப் பதத்திலும் இந்நோய் வேகமாக பரவும்

கட்டுப்பாடு:

 • பூ மலரும் பருவத்தில் நீர் நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
 • நூறு கிலோ தொழுவுரத்துடன் ஒரு கிலோ ‘டிரைக்கோடெர்மாவைக்’ கலந்து பத்து நாட்களுக்கு வைக்கவும். பின்னர் அவற்றை வயல்களில் இடலாம்

ஃபுசேரியம் தண்டு அழுகல் நோய்: (ஃபுகேரியம் மொனலிஃபார்மே):

 • பாதிக்கப்பட்ட பயிர்களின் பச்சை நிறம் மங்கிவிடும். கீழ்தண்டுகள் பழுப்பு நிறம் அடையும்
 • பாதிக்கப்பட்டு தண்டின் உள்புறத்தில் சிவப்பு நிற அழுகிய தக்கை காணப்படும்
 • சாற்றுக் குலாய் (நீர் கடத்தும் செல்கள்) தவிர மற்ற திசுக்கள் பூஞ்சானின் அழுகலால் பாதிக்கப்படும்

தடுப்பு முறை:

 • பயிர்சுழற்சி கடைபிடிக்க வேண்டும்
 • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை வளர்க்கவும் - ரஞ்சித், கங்கா 5
 • பாதிக்கப்பட்ட பயிர்களின் வித்துக்களை பயன்படுத்தலாம்
 • ஒற்றைக் கலப்பு - சி.எம் 103 x சி.எம் 104,

         சி.எம் 400 x சி.எம் 300

சோளத்தின் நோய்கள்:
கதிர் கரிப்பூட்டை நோய்:

 • பெரிய வெள்ளை கட்டி போன்ற வளர்ச்சி கதிர்களில் ஏற்படும்
 • எதிர்ப்புத் திறன் கொண்ட வகையை பயிரிடுதல் நன்று
 • மாற்று ஊணூட்டிச் செடிகளை அகற்றவும்

கரிப்பூட்டை நோய்:

 • இந்நோய் ஏற்படுத்தும் பூஞ்சான்கள் - ஸ்ஃபாசிலோதீக்கா, பாலிஸ்போரியம். இவை பூசணவித்துக்களின் உருவம் மற்றும் அமைப்புமுறை கொண்டு வேறு படுத்தப் படுகிறது
 • இந்நோய் தடுப்பிற்கு பயிர் சுழற்சி முறை, கட்டைப்பயிர் தவிர்த்தல், பயிர் கூலம் மற்றும் அடித்தண்டு கூளங்களை வயலில் இருந்து மொத்தமாக ஆற்றல் போன்ற வழக்கங்களை பின்பற்ற வேண்டும்

அடிசாம்பல் நோய்:

 • வெள்ளை பூஞ்சான் வளர்ச்சி அடித்தண்டினில் குறிப்பாக ஈரப்பதமான பருவ நாட்களில் தோன்றும்

தடுப்பு முறை:

 • ஆழ் உழுதல், எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் நடுதல் மற்றும் வயல் சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும்

பறவை புள்ளி / சிவப்பு அழுகல் நோய்: (கொல்லடோடிரைக்கும் கிராமினிக்கோலா):

 • தேமல் அருகருகே தோன்றி மொத்த இலையையும் ஆட்கொண்டு விடும்
 • பாதிக்கப் பட்ட தண்டுகளில் பிளவு ஏற்படும்
 • பிளவு பட்ட இடங்கள் மங்கிய நிறத்திலிருக்கும்

தடுப்பு:

 • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிரினை நடலாம்

எள் செடியைத் தாக்கும் நோய்கள்:
ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோய்:

 • பயிரின் எல்லா வளர்ச்சி நிலையிலும், எல்லா பாகங்களையும் இந்நோய் தாக்கும்
 • ஈரப்பதமுள்ள தட்பவெப்ப நிலையில் இலைகளில் வட்டமாக செம்புள்ளிகள் தோன்றி வேகமாக பரவும்
 • தேமல் எல்லா பாகங்களுக்கு பரவும்

கட்டுப்பாட்டு முறைகள்:

 • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகையினை (கிருஷ்ணா) வளர்க்கவும்
 • பயிர் கூளங்களை அழித்திட வேண்டும்
 • முன்விதைத்தல்
 • ஊடு பயிர் வளர்த்தல் (எள் : சூரியகாந்தி - 3:1)

பாக்டீரியல் கருகல் நோய்:

  • இலைகளில் சிறிய புள்ளிகள் தோன்றி, பாதக வானிலைகளில் பழுப்பு நிறம் அடையும்
  • பயிரின் எல்லா நிலைகளிலும் பாதிப்பு ஏற்படும்
  • இலைகள் கருகி, உடையும் முற்றிய நிலையில் உதிரும்

  தடுப்பு:

  • பயிர் சுழற்சி
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் - டி 58
  • முன் விதைத்தல் மழைப்பருவம் ஆரம்பம் ஆனவுடன் விதைக்க வேண்டும்
  • பயிர் கூளங்களை அகற்ற வேண்டும்
  • வெந்நீரில் (520 செ) பத்து நிமிடம் விதை நேர்த்தி செய்யவும்

  பாக்டீரியல் இலைப்புள்ளி நோய்:

  • இலை நரம்புகளில் சிறிய இளம் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். புள்ளிகளைச் சுற்றி அடர்பமுப்பு நிற எல்லைக்கோடு இருக்கும்
  • இலை உதிர்தல், தண்டு பாதித்தல் முற்றிய நிலையில் பயிர் இழப்பு ஏற்படும்
  • குழி போன்ற புள்ளிகள் காய்களில் தோன்றும்

  பாதுகாப்பு முறைகள்:

  • முன்பருவ வகைகளை பயன்படுத்தவும்
  • பயிர்சுழற்சி செய்தல்
  • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர்களைப் பயன்படுத்தல்
  • பயிர் கூளங்களை ஆற்றல்
  • வெந்நீரில் (520 செ) பத்து நிமிடம் பயிர் நேர்த்தி செய்தல்

  செர்கோஸ்போரா இலைப் புள்ளி நோய் / வெள்ளைப் புள்ளி நோய்: (செர்கோஸ்போரா செசமிகோலா):

  • இலைகளில் சிறிய பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும் அவைகளின் ஓரங்கள் அடர்நிறத்திலும் நடுப்பகுதி வெள்ளை / சாம்பல் நிறத்திலும் காணப்படும்
  • இலை உதிர்தல் ஏற்படும்
  • நல்ல தட்பவெப்ப நிலையில் இந்நோய் வேகமாக பரவும். காய், இலை, தண்டு பாகங்களில் நீலவாக்கில் தேமல் ஏற்படும்

  தடுப்பு முறைகள்:

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் (டி.கே.ஜி - 21) வளர்க்க வேண்டும்
  • முன் விதைத்தல்
  • ஊடுபயிர் வளர்த்தல் - எள் + கம்பு (3:1)
  • பயிர் கூளங்களை அகற்றல்

  கொரைனிஸ்போரா கருகல் நோய்:

  • இலைகளில் பழுப்பு நிற கொப்புளம் போன்ற புள்ளிகள் தோன்றும்
  • இலைகள் சுருங்கி பின்னர் உதிரும்
  • தண்டுகளில் நீள் வாக்கில் தேமல் தோன்றும்

  தடுப்பு முறைகள்:

  • களை மற்றும் கூளங்களை அகற்றல்
  • முன் விதைத்தல்
  • ஊடுபயிரிடுதல் - எள் : கம்பு (3:1) விகிதத்தில் பயிரிடவும்

  நாற்றழுகல் (ஈரமுக்க நோய்) / வேர் அழுகல் நோய்: (மேக்ரோஃபோமினா ஃபாசியோலினா):

  • இந்நோய் ஏற்படுத்தும் பூஞ்சான், நாற்றுச் செடிகளைத் தாக்கும் தண்டுவடம் அழுகி, நாற்று சாய்தலை ஏற்படுத்தும்
  • முற்றிய நாற்று / செடிகளில், கருமை / பழுப்பு நிற தேமல் ஏற்படும். அவை செடி முழுவதும் பரவி பயிரிழப்பை ஏற்படுத்தும் 

  தடுப்பு முறைகள்:

  • பயிர் சுழற்சி
  • நீர் வடித்தல் பயிர் கூளங்களை அகற்றல்
  • பின் விதைத்தல்
  • கல்லுப்பயிறு / நரிப்பயிறு எனும் ஊடுபயிரினை உபயோகிக்கலாம் (எள் : கல்லுப்பயிறு - 1:1 / 2:1)

  கருகல் நோய் (ஃபைட்டோஃப்தோரா பாராசைட்டிக்கா):

  • எல்லா வளர்நிலையிலும் நோய் தாக்கம் ஏற்படும்.
  • அழுகல் புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
  • புள்ளிகள் ஆரம்பத்தில் அடர் பழுப்பிலும், பின்னர் கருமை நிறத்திலும் இருக்கும்.
  • பிஞ்சு நிலையில் இலைகள் உதிரும்.
  • ஈரப்பதமான தட்ப வெப்ப நிலையில் நோய் முற்றும்.
  • ஆணிவேர் அழுகிவிடும். பயிரை மெதுவாக இழுத்தாலே அடிவேருடன் வெளிவந்து விடும்.

  தடுப்பு முறைகள்:

  • இரண்டுவருட பயிர்சுழற்சி முறையை பின்பற்றவும்.
  • ஆழ் உழுதல் (வெயில் காலங்களில் செய்தல் நன்று).
  • நல்ல நீர் வடியும் வடிவமைப்பு ஏற்படுத்துதல்.
  • பின்பருவ விதைத்தல்
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வளர்த்தல் - டி.கே.ஜி - 22, டி.கே.ஜி - 55, ஜே.டி.எஸ் - பி
  • எள் : கம்பு - 3:1 என்ற விகிதத்தில் ஊடு பயிரிடுதல்
  • டிரைக்கோடெர்மா ஹாரிஸானம், டிரைக்கோடெர்மா விரிடே போன்ற நுண்ணுயிரியை வயலில் இடலாம். அல்லது அவற்றை விதை நேர்த்திக்கும் பயன்படுத்தலாம். பேசில்லஸ் சப்டிலிஸ் எனும் நுண்ணுயிரையும் விதை நேர்த்திக்கும் சிறந்தது

  சாம்பல் நோய்: (ஓய்டியம் ஸ்ஃபீரோதீக்கா):

  • சிறிய பூஞ்சான் இழை போன்ற புள்ளிகள் தோன்றும். அவை இலை முழுவதும் பரவும்
  • இலை உதிர்தல் தீவிரமடையும்

  எள் பச்சைப் பூ நோய் (ஃபைட்டோபிளாஸ்மா போன்ற உயிரி):

  • பூப்பகுதிகள் அனைத்தும் பச்சை நிறமடையும். அவை இலை போன்று காட்சியளிக்கும்.
  • முற்றிய நிலையில் மொத்த பூத்திரள் / மலர் கொத்தும் சிறிய இலை போன்று ஆகிவிடும். சிறிய இடைக்கணு நெருங்கி அடுக்கப்பட்டிருக்கும் வலைந்து நெலிந்த இலைகள் இதன் முக்கிய அறிகுறியாகும்.

  தடுப்பு முறைகள்:

  • பருவ காலம் ஆரம்பித்த மூன்றாம் வாரத்தில் விதைத்தல் நன்று.
  • ஊடுபயிர் விதைத்தல் (எள் : துவரை - 1:1).
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் விதைத்தல் பயிர் கூளம் அகற்றல்.
  • நல்ல பயிர் இடைவெளி அமைத்தல்.

  தண்டு அழுகிய மற்றும் வேர் அழுகல் நோய் (ரைசோக்டோனியா படாடிகோலா):

  • இலை உதிர்தல் ஏற்படும்.
  • அடிதண்டு கருமை நிறமடையும் மேல் தண்டிற்கும் பரவும் .
  • தண்டில் கரும்புள்ளிகள் தோன்றும்.
  • செடியினை சுலபமாக பிடுங்கி விடலாம். பிடுங்கிய செடிகளின் வேர்கள் கரிய நிறத்துடன் காட்சியளிக்கும். அவற்றில் பூஞ்சான் வித்துக்கள், கரித்துண்டுகள் போன்று ஒட்டடியிருக்கும்.
  • வேர்கள் பிடிப்பிழக்கும், விதைகள் பிஞ்சிலேயே உதிரும்.

  தடுப்பு :

  • ஆழ் உழுதல்.
  • நல்ல நீர் வடியும் படி நிலத்தை வடிவமைக்க வேண்டும்.
  • பின் விதைத்தல்.
  • இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பயிர் சுழற்சி பின்பற்றுதல்.
  • ஊடுபயிர் நடுதல் (எள் : கல்லுப்பயிறு - 1:1 / 2:1).
  • நீர் தட்டுப்பாட்டினை தவிர்க்கவும். தேவையான நீர்பாசனம் செய்யவேண்டும். தட்டுப்பாட்டின் போது தான் பூஞ்சான் வித்துக்கள் அதிகமாக உருவாகும். பின்னர் நல்ல பருவநிலை வந்தவுடன் அவை முளைக்கும். பூஞ்சான் வித்துக்களைக் கட்டுப்படுத்துவது கடினம்.
  • இரண்டாம் முறை எள் விதைக்கும் பொழுது வேறு இடத்தில் விதைக்கலாம்.
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வளர்க்கலாம்.
  • பயிர் கூளங்களை அகற்றி அழித்தல்.
  • நிலத்தில் டிரைக்கோடெர்மா ஹாரிசானம், டி.விரிடே இடலாம்.
  • பேசில்லஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா ஹாரிசானம், டி.விரிடே போன்ற நுண்ணுயிரிகளை விதைநேர்த்திக்குப் பயன்படுத்தலாம்.

  பச்சைப்பயிறு செடியைத்தாக்கும் நோய்கள்
  ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோய்

  • இந்நோய் வெகுவாக பச்சைப்பயிறு செடிகளைத் தாக்குவதில்லை
  • இலைகளில் சிறிய வட்ட வடிவ பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்
  • முதிர் நிலையில் பெரிய வட்டங்களாகத் தோன்றும்

  தடுப்பு

  • பண்ணை சுகாதாரம் கடைபிடிக்க வேண்டும்

  பறவைப்புள்ளி நோய் (கொல்லட்டோ டிரைக்கம் லின்டேமியூத்தியம்)

  • இலைகளிலும், காய்களிலும், சிறிய வட்டமான கரும்புள்ளிகள் தோன்றும் கரும்புள்ளிகளைச் சுற்றி ஆரஞ்சு நிற எல்லை இருக்கும்
  • முற்றிய நிலையில் பாதிக்கப்பட்டபாகங்கள் உதிரும்
  • இந்நோய் கிருமிகள் கொண்ட விதைகளிலிருந்து முளைத்த நாற்று கருகல் அறிகுறிகள் காண்பிக்கும்

  கட்டுப்பாட்டு முறை

  • வித்துக்களை வெந்நீர் (540 செ) நேர்த்தி மூலம் சுத்தப்படுத்தலாம் பத்து நிமிடத்திற்கு நேர்த்தி அளிக்கவும்
  • சான்றிதழ் பெற்ற விதைகளைப் பயன்படுத்தவும்
  • பயிர் சுழற்சி பின்பற்றவும்

  பாக்டீரியல் இலைப்புள்ளி நோய் (சாந்தோமோனாஸ் ஃபேசியோலி):

  • இலைகளில் பழுப்புநிறப் புள்ளிகள் சற்று மேலெழுந்தவாறு காணப்படும்
  • நோய் தாக்கம் அதிகரிக்கும் பொழுது இலைகள் பழுப்பு நிறமாகி உதிரும்
  • இலையின் அடிப்பாகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் காணப்படும்

  தடுப்பு முறை

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வளர்க்கவும்
  • சான்றிதழ் பெற்ற / நோயற்ற விதைகளைப் பயன்படுத்தவும்
  • பயிர் கூளங்களை அகற்றவும்

  சொர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய் (சொர்கோஸ்போரா கேனசென்ஸ்)

  • இந்நோய் பச்சைப் பயிறு வகையைத் தாக்கும் முக்கிய நோய் மற்றும் இது அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்
  • சிறிய புள்ளிகள் இலைகளில் தோன்றும் பழுப்புநிற நடுப்பகுதியும் அடர் சிவப்பு நிற ஓரங்களுடன் இப்புள்ளி இருக்கும். காய்களிலும், தண்டுகளிலும் .ப்புள்ளிகள் தோன்றும்
  • நல்ல தட்பவெட்ப நிலையில் பூ மற்றும் காய் உருவாகும் பொழுது இந்நோய் தீவிரமடைந்து அதீத இலைப்புள்ளி இலையுதிர்தல் ஏற்படுத்தும்

  தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிரினை தேர்ந்தெடுக்கவும்
  • உயரமாக வளரும் பயிறு மற்றும் தானியப் பயிர் வகைகளை ஊடுபயிராக தேர்ந்தெடுக்க வேண்டும்
  • பண்ணை சுகாதாரம் கடைபிடிக்கவும்
  • நோயற்ற வித்துக்களை பயன்படுத்தவும்
  • குறைவான பயிர் அடர்த்தி இருக்க வேண்டும்
  • பூண்டு, வேம்பு, இஞ்சி, மரவள்ளி கிழங்கு இலை, இவற்றின் சாறு கொண்டு நோய் கட்டுப்பாட்டைக் கொண்டுவரலாம்
  • நிலப் போர்வை நோய் வரவை குறைக்கும்

  இலைச் சுருக்கு நோய்

  • தழையும் இளம் இலைகளில் வெளிப்பச்சைப் பட்டை தோன்றும்
  • இலை ஓரங்களில் சுருக்கி ஏற்படும் சில இலைகள் கோணலாக திருகி நிற்கும்
  • இலை நரம்புகள் சிவப்பு நிறத்திலிருக்கும்
  • இந்நோய் அறிகுறிகள் காண்பிக்கும் பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். சில வாரங்களில் பயிரிழப்பு ஏற்படும்

  கட்டுப்பாட்டு முறைகள்

  • உரிய நேரத்தில் விதைத்தல்
  • பயிர் மற்றும் பண்ணை சுகாதாரம்
  • இலைப்பேன் பூச்சியை கட்டுப்பாட்டில் வைக்கவும்

  இலை வலை கருகல் நோய் (ரைசாக்டோனியா சொலானி)

  • சிறிய இளம் பச்சை அழுகல் புள்ளிகள் இலைகளில் தோன்றும்
  • முதிர் இலைகளில் புள்ளிகள் அதிகரிக்கும். இப்புள்ளிகள் சிவப்பு நிறமாக மாறும்
  • பூஞ்சான வலையில் வெள்ளை பூஞ்சான் வித்துக்களைக் காணலாம்
  • கிலைகளின் எண்ணிக்கை குறையும் மகசூல் பாதிக்கப்படும்

  கட்டுப்பாட்டு முறைகள்

  • பயிர் சுழற்சி
  • பயிரின் பருவகாலம் முழுக்க மழைக் காலத்துடன் ஒன்றி வராதவாறு பார்த்து வயலில் பச்சைப் பயிறுவை விதைக்கவும்
  • களை அகற்றல்
  • வயலில் நல்ல நீர் வடியும் வடிவமைப்பு
  • பயிர் கூளங்களை அழித்தல்
  • டிரைக்கோடெர்மா விரிடே எனும் நுண்ணுயிரியை நோய்தடுப்பிற்குப் பயன்படுத்தலாம்

  மேக்ரோஃபோமினா கருகல் நோய்

  • அடித்தண்டுகளில் சிறிய வெள்ளை சொறி போன்ற வளர்ச்சி ஏற்படும்
  • அவை பழுப்புநிற கோடுகளாக மாறி மேல் தண்டு மற்றும் இலைகளுக்குப் பரவும்
  • பயிரின் வளர்ச்சி நின்றுவிடும் இலைகள் அடர் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் பயிரில் வளர்ச்சி இராது
  • பூ மலர்தல் மற்றும் காய்காய்த்தல் வெகுவாக குறையும்
  • இச்செடிகளில் பாதிக்கப்பட்ட தண்டின் அடிப்பகுதியை நேர்வாக்கில் வெட்டிப் பார்த்தோமேயானால் உட்புறத் தீசுக்கள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்

  கட்டுப்பாட்டு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிரைத் தேர்ந்தெடுத்தல்
  • வெயில் காலத்தில் ஆழ் உழுதல்
  • மண் வெப்பலூட்டம்
  • பயிர் சுழற்சி
  • தொழு உரமிடுதல்
  • பயிர் கூளம் அகற்றல்

  மஞ்சள் தேமல் நோய்

  • பச்சைப்பயிறு செடிகளை இந்நோய் அதிகமாக தாக்கும்
  • இளம் இலைகளில் சிறிய புள்ளியாகத் தோன்றி பின் பெரியதாகி இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறும்
  • வளர்ச்சி நின்றுவிடும் மிக குறைவான பூ மற்றும் காய் காய்க்கும்

  கட்டுப்பாட்டு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் - பி.டி.எம் - 139, பூசா போல்ட் 1, பூசா போல்ட் 2, கே 1284, எச்.யூ.எம் 8
  • உரிய நேரத்தில் பயிரிட வேண்டும்
  • வரிசைகளுக்கு இடையில் 30-40 செ.மீ இடைவெளிவிட வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட விதைகளை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்
  • களைச் செடிகளை அகற்ற வேண்டும்
  • நோய்பரப்பும் பூச்சி மற்றும் நூற்புழுக்களை பூச்சிக்கொல்லி கொண்டு அழிக்க வேண்டும்
  • இலைப்பேன், அசுவிணி - இவைஇரண்டும் நச்சுயிரி நோய் பரப்பும் பூச்சிகள் இவற்றைக் கட்டுப்படுத்துதல் அவசியம்
  • பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றிட வேண்டும்

  சாம்பல் நோய் (எரிசிஃபே பாலிகானி)

  • இலைகளில் சிறிய வெள்ளை பொடி போன்ற புள்ளிகள் ஆரம்ப நிலையில் தோன்றும்.
  • நாட்கள் சென்றபின் இப்புள்ளிகள் நிறம் மங்கி பெரிய வெள்ளை பட்டை போல படரும்
  • இலையின் அடிப்பகுதியிலும் வெள்ளைப் பூஞ்சான் வளர்ச்சி தோன்றும் முற்றிய நிலையில் இலைகள் மொத்தமாக மூடப்படும்
  • இலையுதிர்தல் பிஞ்சிலேயே பழுத்து உதிர்தல் போன்றவை ஏற்படும்

  கட்டுப்பாட்டு முறை

  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகையை தேர்ந்தெடுக்கவும்
  • ஜீன் மாதத்தில் விதைத்தல் நோய் வரவை தவிர்க்கும்

  வேர் அழுகல் மற்றும் இலைக் கருகல் நோய்: (ரைசாக்டோனியா சொலானி)

  • இந்நச்சுயிரி, விதை அழுகல், நாற்றழுகல், நாற்று கருகல், தண்டு சொறி நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்
  • இந்நோய் காய்க்கும் வளர் நிலையில் பயிரினைத் தாக்கும்
  • ஆரம்ப நிலையில் விதையழுகல் நாற்றழுகல் வேர் அழுகல் ஏற்படும்
  • இலைகளில் பழுப்பு நிற தேமல் ஏற்படும். வளர்த்து இலையுதிர்வை ஏற்படுத்தும்
  • ஆணி வேரினை வெட்டிப் பார்த்தால் உள்ளே சிவப்பு நிற திசுக்களைக் காணலாம்

  தடுப்பு முறை

  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
  • காய்காய்க்கும் தருணத்தில் நீர் தடுப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • டிரைக்கோடெர்மா விரிடே வைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்

  துரு நோய் (யூரோமைசஸ் ஃபேசியோலி)

  • இலைகளின் அடிப்பகுதியில் சிறிய வட்டமான சிவப்புப்புள்ளிகள் தோன்றும்
  • முதிர் நிலையில் இப்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இலையில் மேல் பாகத்திலும் புள்ளிகள் பெருகும்

  கட்டுப்பாட்டு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகளை தேர்வு செய்து நடலாம்

  விதை மற்றும் நாற்றழுகல் நோய் (ரைசாக்டோனியா, பித்தியம் அஃபானிடெர்மேட்டா, மேக்ரோஃபோமிளா)

  • விதையில் / வித்துக்களில் மேற்கூறப்பட்ட பூஞ்சான் வளர்ச்சியினால் முளைக்கும் திறன் தடுக்கப்படுகிறது
  • பாதிக்கப்பட்ட செடியின் இலைகள் உதிர்ந்து பயிரிழப்பை ஏற்படும்
  • கீழ் தண்டுகள் பழுப்பு நிறத்துடன் காட்சியளிக்கும்

  கட்டுப்பாட்டு முறைகள்:

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிரினை வளர்க்கவும் - பி.எஸ் - 16, பூசா சொக்கி
  • விதை நேர்த்தி செய்த பின் விதைக்கவும்

  கொண்டைக்கடலையின் நோய்கள்
  ஆல்டர்நேரியா இலைப்புள்ளி நோய்

  • பூக்கும் பருவத்தின் போது இந்நோய் தாக்கும்
  • இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுவது இலைகளே. இலையுதிர்தல் அறிகுறி அதிகமாக இருக்கும்
  • பாதிக்கப்பட்ட காய்கள் கருத்து காணப்படும்

  கட்டுப்பாட்டு முறைகள்

  • அதிக இடைவெளி விட்டு விதை விதைத்திட வேண்டும்
  • செடிவளர்ச்சியை கட்டுப்படுத்தி வைக்கவும்
  • அளிவிதைச் செடியினை ஊடுபயிராக பயன்படுத்தலாம்

  ஆஸ்கோகைட்டா கருகல் நோய் (ஆஸ்கோகைட்டா ரேபி)

  • பயிரின் எல்லா பாகங்களும் பாதிக்கப்படும்
  • சிறிய பழுப்பு நிற புள்ளிகள் இலைகளில் தோன்றும்
  • சாதகமான தட்பவெப்ப நிலை அடையும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து இலை மற்றும் மொட்டுகளை கருகச்செய்யும்

  கட்டுப்பாட்டு முறைகள்

  • நோயற்ற வித்துக்களைப் பயன்படுத்தவும்
  • பயிர் சுழற்சி
  • அழ் விதைத்தல் (15 செ மீ)
  • பார்லி, கடுகு, கோதுமை, ஆகியவற்றை ஊடுபயிராக பயன்படுத்துதல்
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகை தேர்வு செய்ய வேண்டும்

  பாட்ரிட்டிஸ் சாம்பல் பூசணம்

  • காய் காய்த்தல் இல்லாமை இந்நோயின் முதல் அறிகுறி
  • பூசண வித்துக்கள் மூடப்பட்ட இலை மற்றும் மலர் உதிர்வதைக் காணலாம்
  • தண்டுகளில் சிறிய தேமல் தோன்றி பின் எல்லா இடங்களுக்கும் பரவும்
  • சாம்பல் பூசணம் இளம் தண்டுகளில் அழுகல் ஏற்படுத்தும் அழுகிய தண்டுகள் காய்ந்து உதிரும் / உடையும்
  • மலர்கள் அழுகிவிடும்

  கட்டுப்பாட்டு முறைகள்

  • ஆளி விதைச் செடியை ஊடுபியராக பயன்படுத்தலாம்
  • அளவான நீர் பாசணம் செய்ய வேண்டும்
  • வெயில் காலத்தில் ஆழ் உழவு முறையை பின்பற்றவும் இது நோய்க் கிருமிகளை அழிக்க உதவும்
  • ‘டிரைக்கோடெர்மா’வை கட்டுப்பாட்டு காரணி நுண்ணுயிரியாகப் பயன்படுத்தலாம்

  அடித்தண்டு அழுகல் நோய்

  • விதை விதைத்த ஆறாம் வாரத்தில் இந்நோய் தாக்குதல் ஏற்படலாம்
  • இலைகள் பழுத்து உதிரும்
  • பாதிக்கப்பட்ட நாற்று நிறம் இழக்கும்
  • அடித்தண்டு சுருங்கி அழுக ஆரம்பிக்கும் பாதிக்கப்பட்ட பகுதிகள் பழுப்பு நிறமாகும்

  தடுப்பு முறை

  • வெயில் காலங்களில் ஆழ் உழுதல் செய்திடவேண்டும்
  • விதை விதைக்கும் நேரத்தில் அதிக ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும்
  • அதிக ஈரப்பதத்திலிருந்து நாற்றுகளைப் பாதுகாக்க வேண்டும்
  • முன் அறுவடை செய்த பயிர்க் கூளங்களை அகற்றிட வேண்டும்

  உலர்ந்த வேர் அழுகல் நோய்: (ரைசாக்டோனியா படாட்டிகோலா)

  • மலரும் / காய்க்கும் பருவத்தில் இந்நோய் தாக்கும். ஆங்காங்கே வாடிய செடிகள் தென்படும்

  தடுப்பு முறை

  • வெயில் காலத்தில் ஆழ் உழுதல்
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வளர்த்தல்
  • நீர் பற்றாக்குறை வராமல் பாதுகாக்க வேண்டும்
  • பரிந்துரை செய்யப்பட்ட நேரத்தில் விதைக்க வேண்டும்
  • அதிக வெப்பத்திலிருந்து இளம் நாற்றுகளைப் பாதுகாக்க வேண்டும்

  ஃபியுசேரியம் (fusarium) வாடல் நோய்

  • எல்லா வளர்நிலைகளிலும் இந்நோய் தாக்குதல் ஏற்படும்
  • வயலில் உள்ள நாற்று / பயிர் வாடி இறக்கும்
  • சுருங்கிய தண்டு, நிறமிழக்கும் இலைகள் இவ்வறிகுறிகள் நாற்றுச் செடிகளைத் தாக்கும் குறிப்பாக விதைத்த 3-5 ஆம் வாரம் இந்நோய்த் தாக்கும்
  • தண்டு உள்பகுதியில் அடர் பழுப்பு நிறம் காணப்படும்
  • முதிர் நிலையில் சில பகுதிகளோ அல்லது மொத்த பயிருமே வாடிய நிலையில் காணப்படும்

  தடுப்பு முறை

  • வெயில் காலத்தில் ஆழ் உழுதல்
  • வாடல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகையை தேர்வு செய்து வளர்க்க வேண்டும்
  • மண் வெப்பலூட்டம் செய்திடலாம்
  • பயிர் சுழற்சி முறையைக் கடைபிடிக்க வேண்டும்
  • அதிக வெப்பமான தட்பவெப்பத்தில் விதைப்பதைத் தவிர்க்கவும்
  • சோளத்தைக் கொண்டு 6 வருட பயிர் சுழற்சி செய்திட வேண்டும்
  • தொழு உரம் (10-15 வண்டி / எக்டர்) இடலாம்
  • ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா எனும் கணக்கில் இடலாம்

  சாம்பல் நோய்: (ஓய்டியோப்சிஸ் பாரிக்கா)

  • இலைகளில் வெள்ளை பொடி போன்ற வளர்ச்சியினைக் காணலாம்
  • இலைகளின் மேல் மற்றும் அடிப் பகுதியில் வெள்ளை பொடி போன்ற பூஞ்சானைக் காணலாம்
  • பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும்

  ஸ்கிலிரோட்டினியா அழுகல் நோய்

  • பயிரின் எல்லா வளர் நிலைகளிலும் இந்நோய் தாக்கும்
  • வயலில் ஆங்காங்கே வாடிய பயிர்ச் செடிகளைக் காணலாம்
  • செடியின் கிளைகளில் வெள்ளை / பழுப்புநிற பூஞ்சான் வித்துக்கள் காணப்படும்

  தடுப்பு முறை

  • வெயில் காலத்தில் ஆழ் உழுதல் செய்திட வேண்டும்
  • அதிக நீர்ப்பாசனம் / அதிக செடி வளர்ச்சியினைத் தவிர்க்க வேண்டும்
  • வயலில் உள்ள பயிர்க் கூளங்களை அகற்றவும்

  சோயா மொச்சையின் நோய்கள்
  ஆல்ட்டர்நேரியா இலைப்புள்ளி நோய்

  • வித்துக்கள் சுருங்கி சிறியதாக்க காணப்படும்
  • பழுப்பு நிற வளையங்கள் இலைகளில் தோன்றும்.
  • இலைகள் முதிர்வடையும் முன்னரே பழுத்து உதிரும்

  தடுப்பு முறை

  • சான்றிதழ் பெற்ற ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்தவும்
  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்தலாம்
  • பயிர்க் கூளங்களை அகற்ற வேண்டும்

  பறவைக் கண்நோய் / காய் கருகல் நோய்: (கொல்லட்டோ டிரைக்கம் டிரங்கேட்டம்)

  • பாதிக்கப்பட்ட வித்துக்கள் சிறுத்து பூசணம் பூத்து, பழுப்பு நிறத்தில் காணப்படும்
  • ஒழுங்கற்ற பழுப்பு நிற புள்ளிகள், இலை, காய் மற்றும் தண்டுகுளில் காணப்படும்
  • முதிர்நிலையில் பாதிக்கப்பட்ட திசுக்கள் கருப்பு நிற விதைப்பை கொண்ட பூஞ்சான் வளர்ச்சியைக் காணலாம்
  • அதிக ஈரப்பதம் கொண்ட நாட்களின் போது இந்நோயின் அறிகுறிகள் அதிகமாகும். இலைச்சுருட்டு தண்டுகளில் சொறி போன்ற படலம், பிஞ்சு நிலையிலேயே இலை உதிர்தல் தோன்றும்

  தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகையைத் தேர்வு செய்தல்
  • சான்றிதழ் பெற்ற வித்துக்களை உபயோகித்தல்
  • சோயா மொச்சையுடன் பயிறுவகைகளை பயிர் சுழற்சி முறைக்கு உபயோகிக்கலாம்
  • பயிர்க்கூளங்களை அகற்றவும்
  • வயலில் நீர் தேக்கம் இல்லாமல் இருத்தல் வேண்டும்

  பாக்டீரியல் கருகல் நோய்: (சூடோமோனாஸ் சிரிஞ்சே)

  • வித்துக்களில் மேலெழுந்த / உள் அழுந்திய புள்ளிகள் தோன்றும். விதை சிறுத்து விடும்
  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி குன்றி காணப்படும்
  • புள்ளிகள் ஒன்றிணைந்து கருகல் அறிகுறி காண்பிக்கும்
  • இளம் பருவத்தில் இலைகள் உதிரும்
  • தண்டுகளில் பெரிய புள்ளிகள் உருவாகும்

  தடுப்புமுறை

  • வெயில் காலத்தில் ஆழ் உழுதல்
  • சான்றிதழ் பெற்ற விதைகளை உபயோகிக்கவும்
  • பயிர் கூளங்களை அகற்றவும்
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகையை தேர்ந்து எடுக்கவும்

  புகையிலை வளையப்புள்ளி நோய் (வளையப்புள்ளி வைரஸ்)

  • பாதிக்கப்பட்ட பயிர் வளர்ச்சி குன்றி நிற்கும்
  • நுனிமொட்டு கொக்கி போன்று வளைந்து நிற்கும்
  • மற்ற மொட்டுக்கள் பழுப்பு நிறமாகி வாடி உடையும்
  • தண்டு பழுப்பு நிறமடையும்
  • இலை மற்றும் காய்களும் பாதிக்கப்படும்

  தடுப்பு முறை

  • வைரஸ் பாதிக்காத சான்றிதழ் பெற்ற சோயா மொச்சை வித்துக்களை பயன்படுத்தவும்
  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகையை பயன்படுத்தவும்
  • பயிர் கூளங்களை அகற்றவும்

  கரி அழுகுல் / உலர் வேர் அழுகல் நோய் (மேக்ரோஃபோமினா ஃபேசியோலினா)

  • நீர் பற்றாக்குறை / ஈரப்பற்றாக்குறை / நூற்புழு தாக்குதலினால் இந்நோய் ஏற்படலாம்
  • அடி தண்டு மற்றும் வேர் பாதிக்கப்படும்
  • கீழாக உள்ள இலைகள் பழுத்து காய்ந்து உதிரும் பாதிக்கப்பட்ட இடங்கள் சாம்பல் நிறமாக மாறும்
  • பூஞ்சான் வித்துக்கள் கருப்பு நிற பொடி போன்று காட்சியளிக்கும்
  • வேர்கள் கருத்து உடையும்

  தடுப்பு முறை
   ஆழ் உழுதல்

  • எதிர்ப்புத்திறன் கொண்டவகை உபயோகித்தல்
  • பயிறு வகை கொண்டு பயிர்சுழற்சி அளித்தல்
  • நீர்த்தேக்கத்தை வயலில் தவிர்த்தல்
  • டிரைக்கோடெர்மா (5கிராம் / கிலோ விதை) கொண்டு விதைநேர்த்தி செய்தல்
  • பயிர் கூளம் அகற்றல்

  தண்டு அழுகல் / ஸ்கிலிரோசியல் கருகல்

  • நோய் தாக்குதல் மண்ணின் அடிப்பகுதியிலிருந்து ஆரம்பமாகும்
  • பயிர் இலைகள் மிக குறுகிய காலத்தில் பழுத்து உதிரும்
  • பழுப்புநிற புள்ளிகள் தோன்றும் அவை தண்டு முழுவதையும் ஆக்கிரமிக்கும்
  • வாடிய தண்டில் பழுத்து காய்ந்த இலைகள் ஒட்டிக்கொண்டிருக்கும்

  பாதுகாப்பு முறை

  • வயலில் நீர்த்தேக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
  • பயிர் சுழற்சியினை கடைபிடிக்கவும்
  • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைளை தேர்வு செய்யவும்
  • டிரைக்கோடெர்மா ஹாரிசானம் (5கிராம் / கிலோ விதை) எனும் நுண்ணுயிரியை விதை நேர்த்திக்குப் பயன்படுத்தலாம்

  தவளைக்கண் இலைப்புள்ளிநோய் (செர்க்கோஸ்போரா சோஜினா)

  • விதைகளில் பழுப்பு / சாம்பல் நிற கொப்புளம் போன்ற மேலெழுந்த புள்ளிகள் தோன்றும்
  • இநடநோய் இலைகளைத் தாக்கும். தண்டு, காய், விதைகளும் அறிகுறிகள் காண்பிக்கலாம்
  • புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய புள்ளிகளாக மாறும்
  • காய்களில் புள்ளிகள் நீள்வட்ட வடிவாக இருக்கும் சுற்று குழி போன்று பழுப்பு நிறத்தில் தோன்றும்

  தடுப்பு முறை

  • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகையைப் பயன்படுத்தவும்
  • சான்றிதழ் பெற்ற விதைகளை உபயோகிக்கவும்
  • பயிறு வகை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்
  • சென்ற அறுவடையின் பயிர்க் கூளங்களை அகற்றவும்

  சாம்பல் நோய் (மைக்ரோஸ்ஃபீரா டிஃப்யூசா)

  • இலைகளின் மேல் வெள்ளைப் படலம் / பட்டை போன்று தோன்றும்


  தடுப்பு முறை

  • வெயில் காலத்தில் ஆழ் உழுதல்
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வளர்த்தல்
  • பயிர் கூளங்களை அகற்ற வேண்டும்

  ரைசாக் டோனியா கருகல் / வலை கருகல் நோய்

  • பாதிக்கப்பட்ட விதைகள் ஒழுங்கற்ற உருவகத்தில் காணப்படும். பழுப்புநிற கருகல் படர்ந்திருக்கும்
  • இலைகள் வாடி உதிரும்
  • மழை பொழிந்தால் இந்நோய் தாக்கிய பயிரின் இலைகளில் பூஞ்சான் வளர்ச்சியைக் காணலாம்

  தடுப்பு முறை
  துரு நோய்

  • இலைகளின் அடிப்பகுதியில் துருப் பிடித்தது போன்ற புள்ளிகள் தோன்றும் அவை பழுப்பு / கருகல் நிறத்துடன் இருக்கும்
  • புள்ளிகள், தண்டு, காய் மற்றும் இலைக் காம்புகளிலும் தோன்றும். முதிர் நிலையில் பயிர் வாடி இறக்கும்

  தடுப்பு முறை

  • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைகள் அன்கூர், ஜே.எஸ். 80-21, பி.கே - 1024, பி.கே 1029
  • பயிர்க்கூளங்களை அகற்றவும்
  • வெயில் காலத்தில் ஆழ் உழுதல்

  மஞ்சள் தேமல் நோய்

  • இலைகள் அடர் மஞ்சள் தேமலுடன் காணப்படும்
  • தேமல் இலைகளிலும் இலை நரம்பிலும் காணப்படும்

  தடுப்பு முறை

  • எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகை தேர்வு செய்யவும்
  • உரிய நேரத்தில் விதைத்தல்
  • களைகள் அகற்றப்பட வேண்டும்
  • பயிர்க்கூளங்களை அகற்றவும்

  சோயா மொச்சை தேமல் நோய்

  • மங்கிய பச்சைநிற தேமல் இலைகளில் காணப்படும்
  • பாதிக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்
  • விதைகள் சிறுத்துப் போகும்
  • விதைகள் முளைக்கும் திறனை இழக்கும்

  தடுப்பு முறை

  • வெயில் காலத்தில் ஆழ் உழுதல்
  • சான்றிதழ் பெற்ற விதை உபயோகித்தல்
  • களைகளற்று வயலை சுத்தமாக வைக்கவும்
  • பயிர்க்கூளங்களை அகற்றவும்

  புகையிலை பயிரின் நோய்கள்:
  நாற்றழுகல் நோய் (பித்தியம் அஃபேனிடெர்மேட்டம், பித்தியம் டிபேரியானம்):

   • நாற்றழுகல் நோய் கடினமான களிமண் மற்றும் லேசான மணல் கலந்த மண்ணில் வளரும்.
   • புகையிலை நாற்றுகளை தாக்கும் ஒரு ஆபத்தான பிரச்சனையாகும்.
   • மண்ணில் வளரும் நிறைய பூச்சிகளில் முக்கியமான பித்தியம் அஃபேனிடெர்மேட்டம், பித்தியம் டிபேரியானம், பைட்டோப்தோரா வகைகள், சில சமயங்களில் ரைசோக்டோனியா பூஞ்சையும் இந்த பயிரை தாக்குவதற்கு காரணமாக  இருக்கிறது.
   • இந்த நோய் நாற்றுகளுடைய எந்தவொரு நிலையிலும் தோன்றும். ஆனால் 5 முதல் 6 வாரம் கழித்த விதைப்பிற்கு பின் அதிகளவில் தாக்கும்.

   அறிகுறிகள்:
               இந்த நோய் இரண்டு நிலைகளில் தோன்றும், முறையே

   • முளை முன் நாற்றழுகல் நோய்
   • முளை பின் நாற்றழுகல் நோய்
   • முளைமுன் நாற்றழுகல் நோய்:
   • நாற்றழுகல் மண்ணிலிருந்து முளைப்பதற்கு முன்பே இந்த நோய் தாக்கப்படுவதால் பலவீனமாக நிற்கக்கூட இயலாத நாற்றுகளாக மாறுகின்றன.
   • முளைபின் நாற்றழுகல் நோய்:
   • இது மிக உயர்ந்த அளவு அழிக்கக்கூடிய நிலையாகும்.
   • ஈரமான அழுகக்கூடிய தண்டுகளினாலும், நாற்றுக்களின் நிற்கும் திறன் தினமும் குறைவதாலும் மிகச் சிறிய இரண்டு இலைகளையுடைய நாற்றுக்களாக தோன்றும்.
   • பொதுவாக இந்த நோய் ஒரு பகுதி நிலத்தில் தோன்றும். ஒரு வேளை நாம் கவனிக்கத் தவறினால் இந்த நோய் மிக வேகமாக பரவி நாற்றுக்களை முழுவதுமாக அழித்துவிடும்.
   • முதிர்ந்த நாற்றுக்கள் காய்ந்து தோற்றமளிக்கும். மண்ணிற்கு அருகிலுள்ள தண்டுகள் பழுப்பு நிறமாக மாறும். ஈரமான மண் இருக்கக்கூடிய நிலைமையில் நாற்றுக்கள் அழுக ஆரம்பிக்கும்.
   • நாற்றுக்கள் காய்ந்து கீழே விழுவதால் மண்ணில் பழுப்புநிற தோல் போர்த்தியது போல் தோற்றமளிக்கும்.
   • ஈர அழுகல் மற்றும் நாற்றுக்கள் ஒரு பகுதி நிலத்தில் கீழே விழுவதாலும், ஈரமான வானிலைக் காலங்களில் விதைப்படுக்கை முழுவதும் பரவுவதாலும் மொத்தமாக அழிவு ஏற்படுகிறது.

   கட்டுப்படுத்தும் முறைகள்:

   • வெயில் காலங்களில் ஆழமான உழவு செய்ய வேண்டும்.
   • விதைப் படுக்கைகளை 15 செ.மீ. உயரத்துடன் உருவாக்க வேண்டும் .
   • சுற்றியும் கால்வாய் வெட்டுவதால் வடிகால் வசதி ஏற்படுத்த முடியும்
   • விதைப்பதற்கு முன், பண்ணை கழிவுப் பொருட்களான நெல் உமி, புகையிலை பயிரின் அறுக்கப்பட்ட அடித் தாள், வேண்டாத புல், பனைமர இலைகளைக் கொண்டு விதைப்படுக்கையை சரி செய்ய வேண்டும்.
   • ஒரு எக்டருக்கு 3 கிலோ அளவு விதையை உபயோகிக்க வேண்டும். இதனால் நாற்றுக்களின் அதிக கூட்டத்தை தவிர்க்கலாம்.
   • சீரான முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதனால் விதைப்படுக்கையின் மேல் அதிகமான ஈரப்பதத்தை தடுக்கலாம்.

   பூஞ்சான கொல்லியைப் பயன்படுத்தும் முறைகள்:

   • விதை விதைத்துஒரு வாரம் கழித்து பூஞ்சான் கொல்லியைப் பயன்படுத்த வேண்டும்.
   • வானிலை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, நல்ல சூரிய ஒளி படும் காலங்களில் 4 நாட்கள் இடைவெளி விட்டும், வானம் மேகமூட்ட நிலையில் இருக்கும் பொழுது, 2 நாட்கள் இடைவெளி விட்டும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு தடவை மழை பெய்த பின்பும் பூஞ்சான கொல்லியை திரும்ப பயன்படுத்த வேண்டும்.
   • தோராயமாக, 40 லிட்டர் பூஞ்சான கொல்லியை 40 மீட்டர் 2 விதைப் படுக்கையின் மீது பூவாளியை கொண்டு தெளிக்க வேண்டும் அல்லது 20 லிட்டர் பூஞ்சான் கொல்லியை காற்றழுத்த முறையில் இயங்கும் முதுகில் சுமக்கும் தெளிப்பான் கொண்டு ஒவ்வொரு முறையும் தெளிக்க வேண்டும்.

   ஆன்தராக்ஸ்நோய் (கொல்லடோடிரைக்கம் டபேக்கம்):

   • 0.5 மி.மீ அளவுள்ள பழுப்புநிற வட்ட வடிவ புள்ளிகள் (நடுவில் அழுத்தமாகவும் அதைச் சுற்றி அடர்ந்த பழுபு்பு நிறத்துடன்) கீழே உள்ள இலைகளில் ஆரம்பத்தில் தோன்றும்.
   • இலைப்புள்ளிகள் சிறியதாகவும், நடுவில் வெள்ளை நிறத்துடனும் அல்லது புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய காய்ந்த புள்ளிகளாகத் தோன்றும்.
   • தொடர்ந்த ஈரமான கால நிலைகளில், நீளமான காய்ந்த புள்ளிகள் நடுநரம்பு, இலைக்காம்பு மற்றும் தண்டுப் பகுதிகளில் தோன்றும். இதனால் இலைக் காம்பு, தண்டுப் பகுதி அழுகிவிடும்.
   • முந்தைய பருவத்தில் பயிரிட்ட பயிரின் தாக்கப்பட்ட பகுதிகள் நிலத்தில் இருந்தாலும் நோய் தாக்குதல் இருக்கும்.
   • இந்த நோய்க் காரணி விதையுடன் இணைந்த நோய் அல்ல. ஆனால் மண்ணிலுள்ள காய்ந்த பயிரின் குப்பைகளில் நிலைத்திருக்கும்.

   கட்டுப்பாடு:

   • விதைப்படுக்கையை பண்ணை கழிவுப் பொருட்களுடன் சேர்ந்து தயார் செய்ய வேண்டும். இதனால் ஆரம்பகாலத் தாக்குதலைத் தடுக்கலாம்.
   • தாக்கப்பட்ட பகுதிகளின் குப்பைகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • நோய் தாக்கப்பட்ட நாற்றுக்களை அப்புறப்படுத்த வேண்டும்.

   ருந்தண்டு நோய் (பைட்டோப்தோரா பாராஸ்டிகா வகை நிக்கோட்டியானே)
   அறிகுறிகள்:

   • நாற்றுக்களின் வேர் மற்றும் அடித்தண்டு பகுதிகள் கருப்பு நிறத்தில் தோற்றமளிக்கும்.
   • ஈரமான சூழ்நிலையில், இலைகளுக்கும் பரவும்.
   •  இலைகளில் நீரில் ஊறிய மாதிரி புள்ளிகள் தோன்றி, பின் இலை கருக ஆரம்பித்து முடிவில் அழிந்துவிடும்.
   • இலை கருகல் நிலை அரிதாகத் தோன்றும். ஆனால் ஈரமான சூழ்நிலையில் வேகமாகப் பரவி அதிகமான விளைவைத் தரும்.
   • பெரிய வட்டமான கருப்பு அல்லது பழுப்பு நிற நீரில் ஊறிய புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
   • பயிரின் கழுத்துப் பகுதியில் கருப்பாக மாற ஆரம்பிக்கும். பின் மேல்புறமும் கீழ்ப்புறமும் பரவ ஆரம்பிக்கும். முடிவில் தண்டுப்பகுதி இலைகள் அழுகி காய்ந்துவிடும்.
   • இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். தீடீரென வாட ஆரம்பிக்கும். பின் வெப்பான சூழ்நிலையில் அழிந்துவிடும்.
   • நடவு வயலில் எல்லா இடங்களிலும் கண்டபடி தோன்றும்.
   • தண்டுப் பகுதியை அறுத்துப் பார்த்தால், பழுப்பு மற்றும் கருப்பு நிறத்திட்டுக்கள் தெரியும்.

   கட்டுப்பாடு:

   • நாற்றங்காலில் விதைப் படுக்கையை சுத்தம் செய்ய வேண்டும்.
   • நாற்று நடும்போது பாதிக்கப்பட்ட நாற்றுக்களை அகற்ற வேண்டும்.
   • மிதமான நோய் எதிர்ப்பு இரகங்கள் ‘பெயின்கார்ட் 1000-1’, ‘லட 2326’, பீடி இரகமான ‘K 20’, குஜராத் மாநில சூழ்நிலைக்கு ஏற்றது.

   சாம்பல் நோய் (எரிசிப்பே சிக்கோராசியேரம் வகை நிக்கோட்டியானா):
   அறிகுறிகள்:

   • சாம்பல் கலந்த வெள்ளை நிறப் புள்ளிகள் (0.5-1 செ.மீ) இலைகளின் கீழ்ப்புறத்தில் முதிலில் தோன்றும்.
   • சாதகமான தட்ப வெப்பநிலை (160 - 230  செல்சியஸ்), அதிகமான ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வேகமாகப் பரவும்.
   • இலைகள் காய்ந்து, பழுப்பு நிறமாகத் தோன்றுவதால் விற்பனை  செய்வதற்கு தகுதி இல்லாமல் போகிறது.
   • சில சமயங்களில் ஆரம்ப நிலை பாதிப்புகள் கூட இலைகளின் வர்த்தக மதிப்பைக் குறைத்துவிடும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட இலைகளை அகற்ற வேண்டும்.
   • முதிர்ச்சி அடையும் போது நிலவும் குளிர்ந்த தட்பவெப்ப நிலையை தவிர்க்க, முன் பருவத்திலேயே நடவு செய்ய வேண்டும்.
   • நோய் எதிர்ப்பு இரகங்களான ஸ்வர்ணா அல்லது லைன் 2359ஐ பயன்படுத்த வேண்டும்,

   தவளைக் கண் நோய் (செர்கோஸ்போரா நிக்கோடியானே):

   • விதைப் படுக்கையிலும், நடவு வயலிலும் தோன்றும்.
   • புகை மூலம் பதப்படுத்தக் கூடிய இலைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

   அறிகுறிகள்:

   • முக்கியமாக அடி இலைகளில் தோன்றும்.
   • வட்டமாக, பழுப்பு அல்லது சாம்பல் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு தவளையின் கண் போல் தோற்றமளிக்கும்.
   • ஈரமான சூழ்நிலையில் நடுவுில் இருக்கக்கூடிய வெள்ளை நிறப்புள்ளி இருக்காது அல்லது 0.25-1.5 செ.மீ அளவுக்கு பெரிதாகக் காணப்படும்.
   • மழை பெய்யும் பருவத்தில் இலை முழுவதும் காய்ந்து காணப்படும்.
   • கோடைக்காலத்தில் தவளைக் கண் புள்ளி மிகச் சிறியதாக இருக்கும்.
   • புகை மூலம் பதப்படுத்தும் புகையிலையில் அறுவடை காலத்தில் இதன் பாதிப்பு இருக்கும். அடர்ந்த பழுப்பு மற்றும் கருப்பு நிறம் புள்ளிகளான ஒரு தானியக் களஞ்சியப் புள்ளிகள் தோன்றும்.

   கட்டுப்பாடு:

   • நாற்றங்கால் கண்டிப்பாக தானியக் களஞ்சியத்திலிருந்து தள்ளி இருக்க வேண்டும்.
   • பாதிக்கப்பட்ட பயிரின் குப்பைகளை சுத்தமாக அகற்றி, அழிக்க வேண்டும்.
   • தழைச்சத்து உரம் அதிகளவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
   • பக்குவ நிலை அடைந்த இலைகளை உடனடியாக பறிக்க வேண்டும்.

   செம்புள்ளி (ஆல்டர்னேரியா லாங்கிப்ஸ்):
   அறிகுறிகள்:

   • முதலில் அடி மற்றும் முதிர்ந்த இலைகளில் வட்ட வடிவ பழுப்பு நிறப் புள்ளிகளாகத் தோன்றும். பின் இது மேல் இலைகள், இலைகாம்பு, காம்பு, வெடிகனிக்கும் பரவும்
   • அதிகமான ஈரப்பதம், சூடான வானிலையில் (300  செ) இலைப்புள்ளிகள் 1-3 செ.மீ அளவு பெரிதாகும்.
   •  புள்ளியின் நடுவில் காய்ந்து தோன்றும். அதைச் சுற்றி பழுப்புநிறத்திலும் காணப்படும்.
   • அதிக தாக்குதலின் போது இந்தப் புள்ளிகள் பெரிதாகி இலை முழுவதும் பழுப்பு நிறமாகி விடும்.
   • முதிர்ச்சி அடையும் நிலையில் ‘அல்டரினன்’ என்ற நஞ்சு உற்பத்தியாவதால் இலைப்புள்ளிளைச் சுற்றி அடர்ந்த மஞ்சள் வளையம் தோன்றும்.
   • அதிகளவில் நஞ்சு உற்பத்தியாகும் போது பாதிக்கப்படாத பகுதியும் சேர்த்து கருப்பு நிறத்தில் காய்ந்த இலை போன்று தோன்றும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பயிரின் குப்பைகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • தொடர்ந்து புகையிலையைப் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.

   புகையிலை தேமல் நச்சுயிரி (டி.எம்.வி):
   அறிகுறிகள்:

   • பச்சை நிறத் தேமல் இலைகளில் தோன்றும்.
   • புதிதாக உருவாகும் இலைகளில் பச்சை நிறத் தேமலும், நரம்பு வெளுத்தும் காணப்படும்.
   • அடர்ந்த பச்சை நிறக் கொப்பளம், சில சமயங்களில் புற வளர்ச்சி இலையின் மேல் புறத்தில் தோன்றும்.
   • இளம் இலைகள் பலதரப்பட்ட மஞ்சள் மற்றும் பச்சை நிறமாகவும் தோன்றும்.
   • அதிக தாக்குதலின் போது அடர்ந்த பழுப்பு நிறக் காய்ந்த புள்ளிகள் தோன்றும். சூடான தட்ப வெப்ப நிலை நிலவும் போது இலைகளில் ‘தேமல் வாட்டம்’ அல்லது ‘தேமல் சுட்டபுண்’ போன்று தோற்றமளிக்கும்.
   • நோய் தாக்கப்பட்ட இலைகளில் தோன்றும் பச்சைப் புள்ளிகளால் விற்பனைத் தரம் குறையும்.
   • இந்த நச்சுயிரி பூச்சியினால் கடத்தக் கூடியதல்ல. அசுவிணி (மைசஸ் பெர்ஸ்கே) புகையிலை செடியில் இருந்தாலும் இந்த நச்சுயிரியை வேறு செடிக்கு கடத்த முடியாது.

   கட்டுப்பாடு:

   • தேமல் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
   • தொடர்ந்த கண்காணிப்பு நாற்றுகள் நடுவதிலிருந்து அறுவடை வரை இருக்க வேண்டும்.
   • பாதிக்கப்பட்ட நாற்றுக்களை சுத்தமாக அகற்றி, அழிக்க வேண்டும்.
   • பணியாட்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி விட்டு பயிர் சாகுபடி வேலைகளை செய்ய வேண்டும். வேலை நேரத்தில் புகையிலை பிடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது.
   • எளிதாக நச்சுயிரியால் பாதிக்கப்படுகிற களைகள் (சொலானம் நைக்ரம்), பயிர்களை (கத்திரி, தக்காளி, மிளகாய்) அழிக்க வேண்டும்.
   • அதிக பாதிப்புள்ள வயல்களில் சுழற்சி முறையை 2 வருடத்திற்கு பின்பற்ற வேண்டும்.
   • முதல் இடை உழவிற்கு முன்னால் பாதிக்கப்பட்ட வேண்டாத செடிகளை நீக்குதல் வேண்டும்.
   • நோய் எதிர்ப்பு இரகங்கள் - டி.எம்.வி.ஆர்.ஆர் -2, டி.எம்.வி.ஆர்.ஆர் - 29, டி.எம்.வி.ஆர்.ஆர் – 3.
   • பேசில்லா அல்பா, போகன்வில்லா இலை வடிச்சாறு (1 லிட்டர் வடிச்சாற்றை 100-15- லிட்டர் தண்ணீரில் கரைக்கவும்) நாற்று நட்ட 30, 40, 50 வது நாட்களில் தெளிக்க வேண்டும்.

   இலைச்சுருக்கு நோய்:
   அறிகுறிகள்:

   • இலையின் அடிப்பரப்பில் உள்ள நரம்பில் இலை வடிவ வெளி வளர்ச்சி (எனேஸன்ஸ்) காணப்படும்.
   • குட்டையான வளர்ச்சியும், இலைகள் சுருண்டும் காணப்படும்.
   • நோயின் தாக்கம் சுற்றுப்புற சூழல் மற்றும் புகையிலை இரகங்களைப் பொறுத்து மாறும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட நாற்றுகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • அந்த இடத்தில் நல்ல நாற்றுக்களை நாட்கள் அதிகமாகாமல் இருந்தால் நடலாம்
   • வெள்ளை ஈக்கான மாற்றுகளை ஒம்புயிரிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • நிரந்திர நோய் இருக்கும் பகுதிகளில் செஸ்பேனியா வகைகளை புகையிலை பயிரின் வயல்களைச் சுற்றி தடைப்பயிராக வளர்க்கலாம்.

   புகையிலை உருத்திரிந்த நச்சுயிரி:
   அறிகுறிகள்:

   • மிகவும் குட்டையான வளர்ச்சி முறை தவறிய குருத்துக்கள், இலையின் நுனிகள் எலியின் வால் போன்று மாறியிருக்கும்.
   • இலைகள் வித்தியாசமான தேமல் பலவாண இலையாகவும், சுருங்கியும், உருமாறியும் இருக்கும்.
   • நோய் அதிகம் தாக்கப்பட்ட பகுதிகளில் நடுதரம்பு மட்டும் விட்டு மற்ற இலைப் பரப்பு அழுங்கி வேறு வடிவங்களில் தோன்றும்.

   கட்டுப்பாடு:

   • விதைக் கருவூலத்தை இந்த நோய் தாக்குதலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
   • சி.டி.ஆர்.ஐ, இராஜமுந்திரி - ல் உருவாக்கப்பட்ட டி.எம்.வி. நோய் எதிர்ப்பு வரிசையில் டி.எம்.வி.ஆர்.ஆர் - 1 ஐத் தவிர மற்ற 23 மரபியல் வகைகள் (15 தாயகம் சாராதது மற்றும் தாயகம் சார்ந்த காற்று வழி பதப்படுத்தப்பட்ட வகைகள்) நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவை.
   • டி.ஜி.3 (டெஸி குண்டூர்) என்ற நாட்டு புகையிலை இரகத்தைப் பயிரிடலாம்.

   புகையிலைக் காளான்:

   • ‘பேய்க் காளான்’ என்று ஆங்கில மொழி பேசும் நாடுகளிலும், ‘டோக்ரா’ என்று வட இந்தியாவிலும், ‘வகும்பா’ என்று குஜராத்திலும், ‘பாம்பாக்கு’ என்று மகாராஷ்டிராவிலும், ‘புகையிலைக் காளான்’ என்று தமிழ்நாட்டிலும், ‘போடு’ அல்லது ‘மல்லே’ என்று ஆந்திரப் பிரதேசத்திலும் அழைக்கப்படுகிறது.
   • பூக்கும் ஒட்டுண்ணியாக புகையிலைப் பயிரின் வேர்களில் இருக்கும். இந்தியாவின் அனைத்து புகையிலைப் பயிரிடும் பகுதிகளிலும் காணப்படும்.
   • இது ஒரு முழு ஒட்டுண்ணி. இதற்கு தேவையான உணவை புகையிலைப் பயிரின் வேரிலிருந்து உறிஞ்சுறுப்புக்கள் மூலம் எடுத்துக் கொள்கிறது.
   • விளைச்சலில் இழப்பு இலையின் தரம் 30-70 சதவீதம் தமிழ்நாட்டிலும், 10-50 சதவீதமாக மாற்ற மாநிலங்களிலும் இருக்கிறது
   • சி.டி.ஆர்.ஐ. ராஜமுத்திரியில் நடத்தப்பட்ட சோதனையில் தாக்கத்தின் காலம் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 20-50 சதவீதம் விளைச்சல் இழப்பு ஏற்படும் என்று அறியப்பட்டுள்ளது.

   அறிகுறிகள்:

   • ஆரம்ப காலத் தாக்குதலில், இலைகள் வாடி, தலைகுனிந்து நிற்கும்.
   • 5 முதல் 6 வார காலப் பயிர்களில், இந்தக் காளான் புகையிலைப் பயிரின் அடிப்பகுதியிலிருந்து வெளிவர ஆரம்பிக்கும் .
   • எண்ணற்ற காளான் குருத்துக்கள் பயிரைச் சுற்றித் தோன்றும்.
   • குட்டையான வளர்ச்சியுடன், இலைகள் வாட ஆரம்பிக்கும். பயிரின் கடைசி பருவத்தில் தாக்குதல் இருந்தால் அறிகுறிகள் தெரியாது. ஆனால் விளைச்சல் மற்றும் இலையின் தரம் குறைந்து காணப்படும்.
   • 15-45 செ.மீ உயரத்துடன், வெளிர் பழுப்பு அல்லது ஊதா நிறத்துடன் கொத்தாகத் தோன்றும்.
   • 10 முதல் 15 குருத்துக்கள் ஒரு ஊன் வழங்கியின் வேரைச் சுற்றி இருக்கும்.
   • இந்தியாவில் 2 வகைகள் உள்ளன. முறையே ஒரபாங்கி செர்னூவா, ஒரபாங்கி இண்டிகா.
   • ஒரபாங்கி செர்னூவா மிகவும் மோசமான ஒட்டுண்ணி, சொலானே சியஸ் பயிர்களை மட்டும் தாக்கும்.
   • இந்த குடும்பத்திலுள்ள மற்ற ஒம்புயிரிகள் - உதாரணமாக, கன்னாபின்னாஸியே, கம்போஸிட்டே, யூஃபோர்பியேஸே, டில்லியஸியே.
   • கேப்ஸிகப் ஆனம் (மிளகாய்), டிரைடாக்ஸ் புரொகம்பன்ஸ் இந்த காளான் விதைகளின் முளைப்பை ஒட்டுண்ணியாக இல்லாமலேயே ஊக்குவிக்கிறது.

   கட்டுப்பாடு:

   • நோய்க்கிருமி உண்டாவதற்கான சாத்தியத்தைத் தடுக்க வேண்டும்.
   • இளம் காளான் குருத்துக்களை விதை வருவதற்கு முன்பே, வாரம் ஒரு முறை கைகளால் பிடுங்கி விட வேண்டும்.
   • இவ்வாறு செய்வதால் இதன் அடர்த்தி 2 வருடத்தில் 85 சதவீதமும், 4 வருடத்தில் 96 சதவீதமும் குறைக்கப்படுகிறது.
   • அவ்வப்போது வெளிவருகிற காளான்களை கைகளால் பிடுஞ்கி விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு விவசாயியும் குறைந்தது 4 வருடத்திற்கு செய்யும் போது இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
   • புகையிலைப் பயிரைத் தொடர்ந்து சோளம் அல்லது எள் பயிரை காரிப் பருவத்தில் பயிரிட வேண்டும்
   • ஆனால் மிளகாய் வலைப் பயிராக இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஸினாபிஸால்பாவை புகையிலைப் பயிர்க்கு முன் பயிரிடுவதால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.
   • காலம் தள்ளி பயிரிடுவதாலும் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் மண்ணின் ஈரப்பதம் குறைவதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கும்.

   தோட்டப் பயிர்களின் நோய்கள்:


   பழப்பயிர்கள்

   காய்கறி
   பயிர்கள்     

   நறுமணப்
   பயிர்கள்

   தோட்டப்பயிர்கள்

   பூப்பயிர்கள்

   மா

        தக்காளி

     மிளகு

   பாக்கு        

   ரோஜா

   நாரத்தை

       கத்திரி

     ஏலக்காய்    

    

     மல்லிகை

   கொய்யா

   பூசணி        

       இஞ்சி   

    

   சாமந்தி

   ஆப்பிள்      

   கொத்தவரை

      

    

   கார்னேசன்

    

       காரட்

    

    

   ஜெர்பரா

    

       கோஸ் வகைகள்

    

    

    

    

   வெங்காயம்

    

    

    

    

   பூண்டு

    

    

    

    

   மரவள்ளி கிழங்கு

    

    

    

    

   சர்க்கரைவள்ளிக் கிழங்கு

    

    

    

   பழப்பயிர்கள்:
   மாவின் நோய்கள்:
   ஆந்தராக்நோஸ் (கொல்லடோடிரைக்கம் கிலியோஸ்போரிடிஸ்):
   அறிகுறிகள்:

   • இலைப் புள்ளிகள் தோன்றுதல், பூ மஞ்சரி கருகுதல், நுனி வாடல், கிளைகள் கருகுதல், மற்றும் பழங்கள் அழுகிவிடும்.
   • இலை மற்றும் சிறு கிளைகளில் கொப்புளம் போன்ற புள்ளிகள் தோன்றும்.
   • இளம் இலைகள் வாடி காய்ந்து விடும்.
   • இளம் கிளைகள் வாடி, பின்நோக்கி காயும்.
   • நோய் தாக்கப்பட்ட கிளைகள் முடிவில் காய்ந்துவிடும்.
   • கருப்புப் புள்ளிகள் பழங்களில் தோன்றும்.
   • பழத்தின் சதைப்பான பாகத்தில் கடினமாக வெடிப்புகள் இருக்கும். பழுக்கும் நேரத்தில் அழுகிவிடும்.
   • பாதிக்கப்பட்ட பழங்கள் உதிர்ந்து விடும்.

   வாழும் முறை மற்றும் பரவுதல்:

   • காய்ந்த இலைகள், கீழே உதிர்ந்த கிளைகள் மற்றும் பூக்களில் இருக்கும்.
   • பழங்களை எடுத்துச் செல்லுதல் மற்றும் சேமித்தலின் போது இந்த நோய் பரவும்.
   • காற்றுவழி உற்பத்தியாகும் கொனிடியா மூலமும் பரவும்.

   சாதகமான சூழ்நிலை:

   • தட்ப வெப்ப நிலை 250 செல்சியஸ் மற்றும் ஒப்பு ஈரப்பதம் 95 - 97 சதவீதம்

   கட்டுப்பாடு:

   • சேமிக்கும் முன், சூடான தண்ணீரில் (50 -550 செல்சியஸ்)15 நிமிடத்துக்கு வைக்க வேண்டும்

   மா உருமாற்றம் (புசேரியம் மொல்லிபார்மே வகை ஸப்குளுட்னான்ஸ்):
   அறிகுறிகள்:

   • மூன்று வகையான அறிகுறிகள் உள்ளன
   • முடிக்கொத்து நிலை
   • பூக்கள் உருமாற்றம்
   • வளர்ச்சி உருமாற்றம்
   • முடிக்கொத்து நிலையில் பண்ணையில் வளர்க்கப்படும் செடிகளில் இளம் கிளைகள் கொத்தாக மிகச் சிறிய இலைகளுடன் காணப்படும். இலைகள் குட்டையான வளர்ச்சியுடன் பார்ப்பதற்கு முடிக் கொத்தாக இருக்கும்.
   • வளர்ச்சி உருமாற்ற நிலையில் அதிக படியான கிளைகள் இளம் செடிகளில் வளர்ந்து இருக்கும்.
   • கிளைகள் தடித்து சிறிய கணுக்களுடன் கொத்தாக உருமாறி செடிகளின் மேல் பகுதியில் பார்ப்பதற்கு முடிக் கொத்தாக இருக்கும்.
   • பூங்கொத்து உருமாற்ற நிலையில் பல்விதமான மாற்றங்களை காண்பிக்கும்.
   • உருமாற்றமான பூங்கொத்து கருப்பு நிற கூட்டமாக நெடுநாள் நிலைத்திருக்கும்.

   பரவும் முறை:

   • நோயுடன் கூடிய செடியைப் பெருக்க செய்யும் பொருட்களின் மூலம் பரவும்.

   கட்டுப்பாடு:

   • தாக்கப்பட்ட செடிகளை அழிக்க வேண்டும்.
   • நோய் இல்லாத செடியை வளர்க்கக் கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
   • நோய் தாக்கப்பட்ட கிளையை 15 - 20 செ.மீ அளவுக்கு ஒடித்து விட வேண்டும்.

   சாம்பல் நிறக் கருகல் (பெஸ்டோலோடியா மேங்கிஃபெரே):
   அறிகுறிகள்:

   • இலையின் விளிம்பு மற்றும் ஓரங்களில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் பெரிதாகி அடர்ந்த பழுப்பு நிறமாக மாறும். கருப்பு திட்டுக்கள் இந்தப் புள்ளிகளில் தோன்றும்.

   வாழும் மற்றும் பரவும் முறை:

   • மாவிலைகளில் ஒரு வருடம் வரை உயிர் வாழும்.
   • காற்று வழி உருவாகும் கொனிடியா மூலம் பரவும்.

   சாதகமான நிலை:

   • தட்ப வெப்ப நிலை 20 - 250 செல்சியஸ், அதிக ஈரப்பதம், மற்றும் பருவ மழையின் போது அதிக தாக்கம் இருக்கும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.

   கரும்புகைப் பூசணம் (கேப்னோடியம் மேங்கிஃபெரே):
   அறிகுறிகள்:

   • அதிக ஈரப்பதம் மற்றும் அதிக ஆழமில்லாத இடங்களில் பூசண இலைகள் தோன்றும்.
   • தத்துப்பூச்சிகளின் சர்க்கரை போன்ற சுரப்பை வைத்து அறிந்து கொள்ளலாம்.
   • கருப்பு நிறப் படிவு தோன்றும்.

   சாதகமான நிலை:

   • தத்துப்பூச்சி, அசுவிணி, செதில் பூச்சிகளின் சர்க்கரை போன்ற சுரப்பினால் இந்த பூஞ்சை வளரும்.

   கட்டுப்பாடு:

   • பூஞ்சை மற்றும் பூச்சிகளை ஒரே சமயத்தில் கட்டுப்படுத்த வேண்டும்.
   • பூஞ்சையின் சதைப் பகுதி காய்ந்து வெளிவருவதை அகற்ற வேண்டும்.

   நாரத்தையின் (எலுமிச்சை) நோய்கள்:
   பிசின் வடிதல் (பைட்டோப்தோரா பாராஸ்டிக்கா, பைட்டோப்தோரா பாமிவோரா, பைட்டோப்தோரா ஸிட்ரோப்தோரா):
   அறிகுறிகள்:

   • மரப்பட்டைகளில் அடர்த்தியான கறை இருக்கும்.
   • மரத்தின் அடியில் இருக்கும் பட்டைகள் அழிந்து மரத்தைச் சூழ்ந்து இருக்கும்.
   • பாதிக்கப்பட்ட மரப்பட்டைகள் காய்ந்து, சுருங்கி, வெடிப்புகளுடன் இருக்கும். நீளவாக்கில் பிளவு பட்டு இருக்கும்.
   • அளவுக்கதிகமான பிசின் மரத்தின் பட்டையிலிருந்து வெளிவரும்.
   • தாக்குதல் வேர்ப்பகுதி வரை பரவும்.

   சாதகமான நிலை:

   • தொடர்ந்து தண்ணீருடன் அடிமரம் தொட்டுக் கொண்டிருத்தல்.
   • தண்ணீர் வடியாத இடங்கள், கடினமான மண்ணில் இருக்கும்.

   வாழும் மற்றும் பரவும் முறை:

   • மண்ணில் இந்த பூஞ்சை வாழும்.
   • மழை நீர், நீர்ப்பாசனம் மற்றும் காற்றின் மூலம் வித்துக்கள் பரவும்.

   கட்டுப்பாடு:

   • சாகுபடி செய்யும் போது வேர்களுக்கோ, தண்டின் அடிப்பாகமோ ஏதும் வெட்டு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
   • நோய் தாக்கப்பட்ட பட்டையை ½ இன்ச் அளவுக்கு அகற்றி விட வேண்டும்.

   சொறி அல்லது பிளவை நோய் (சேந்தோமோனஸ் கம்பஸ்டிரிஸ் வகை சிட்ரி):
   அறிகுறிகள்:

   • எலுமிச்சை, நாரத்தை, மலைப் பம்பளிமாஸ் வகைகள் அதிகம் தாக்கப்படுகுிறது. அரிதாக ஆரஞ்சு மற்றும் பிற நாரத்தை வகைகளும் தாக்கப்படுகிறது.
   • இலை, கிளை, பழங்கள் தாக்கப்படுகிறது.
   • வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் இலையின் இரண்டு பக்கமும் தோன்றும். அதிகமாக எலுமிச்சையில் இருக்கும்.
   • கிளைகளில் தோன்றும் புள்ளிகள் ஒன்று சேர்ந்து முடிவில் அழிந்துவிடும்.
   • பழங்களில் வரும் சொறி புள்ளிகளால் விற்பனை மதிப்பு குறையும்.

   சாதகமான நிலை:

   • ஈரப்பதம் இல்லாமல் தொடர்ந்து 20 - 300 செல்சியஸ் தட்ப வெப்ப நிலை நீடித்தால் நோயின் தாக்கம் இருக்கும்.

   வாழும் மற்றும் பரவும் முறை:

   • மழை மற்றும் காற்று வேகமாக அடிக்கும் போது பரவும்.
   • 6 மாதத்திற்கு தொடர்ந்து தாக்கப்பட்ட இலைகளில் நிலைத்திருக்கும்.
   • இலைத் துளைக்கும் புழுவின் தாக்குதலால் இதன் பாக்டீரியம் பரவும்.

   கட்டுப்பாடு:

   • இலைத் துளைக்கும் புழுவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
   • தாக்கப்பட்ட கிளைகளை பருவமழைக்கு முன்னரே வெட்டிவிட வேண்டும்.

   டிரிட்டிஸா அல்லது உடன் அழிதல் (நச்சுயிரி):
   அறிகுறிகள்:

   • எலுமிச்சை நாற்றுக்கள் எளிதாக தாக்கும்.
   • நோய் தாங்கும் சக்தியுடைய வகைகள்: நாரத்தை, ஆரஞ்சு, ரங்பூர் எலுமிச்சை நாற்றுக்கள்.
   • எளிதாக தாக்கக்கூடிய வகைகள்: மலைப்பம்பளிமாஸ், புளிப்பு ஆரஞ்சு
   • இலைகள் உதிர்ந்துவிடும்.
   • வேர்கள் அழுகும். சிறு கிளைகள் பின்னோக்கி காயும். பழம் உருவாதல் குறையும்.
   • ஆரஞ்சு நாற்றுக்களின் பட்டைகளின் உள்ளே அரித்திருக்கும்.
   • பம்பளிபாஸ், எலுமிச்சை எளிதாகத் தாக்கக்கூடும்.
   • மரங்கள் குட்டையான வளர்ச்சியுடன் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்படும். பழங்கள் சிறியதாக இருக்கும்.

   பரவும் முறை:

   • நோய் தாக்கப்பட்ட நாற்றுக்கள் அல்லது குச்சிகள், அசுவிணி பூச்சியின் மூலம் பரவும்.

   கட்டுப்பாடு:

   • எளிதாகத் தாக்கக்கூடிய வேர்க் குச்சிகளை இனிப்பு ஆரஞ்சு, நாரத்தையில் பயன்படுத்தக்கூடாது.
   • எலுமிச்சையில் நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள நாற்றுக்களைப் பயன்படுத்த வேண்டும்.

   பச்சையாதல் (லிப்ரோபேக்டர் ஏசியாடிக்கம்) (புளோயம் லிமிட் பேக்டிரியா போன்ற உயிரி):
   அறிகுறிகள்:

   • அனைத்து எலுமிச்சை வகைகளையும் தாக்கும்.
   • இலைகள் வளர்ச்சி குன்றும். குறைவான இலைகள், வளர்ந்திருக்கும் கிளைகள் பின்னோக்கிக் காயும்.
   • குறைவான வளர்ச்சியுடன் தரமில்லாத பழங்களை உண்டாக்கும்.
   • சில சமயங்களில் மரத்தின் ஒரு பகுதி மட்டும் தாக்கப்படும் இலைகள் மட்டும் வெளிறியிருக்கும்.
   • துத்தநாகக் குறைபாடு மாதிரி நிறம் மாறியிருக்கும்.
   • இளம் இலைகள் சருகு போல் மாறும். நரம்புகள் மட்டும் பச்சை நிறத்தில் இருக்கும். வட்டமான பச்சைப் புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
   • கிளைகள் மேல் நோக்கி சிறிய இலைகள் தோன்றும்.
   • பழங்கள் சிறியதாக, பிளவுபட்டு, வளைந்து காணப்படும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் ஆரஞ்சு நிறமாகவும், மற்றப் பகுதிகள் பச்சை நிறத்திலும் இருக்கும்.
   • பழச்சாறு குறைவாக புளிப்பாகவும் இருக்கும். பதன் செய்வதற்கு தகுதி இல்லாமல் போகிறது.
   • விதைகள் மோசமான வளர்ச்சி அடைந்து அடர்ந்த நிறத்தில் இருக்கும்.

   பரவும் முறை:

   • இளந்தளிர்களை தாக்கும்.
   • சாறு உறிஞ்சும் அசுவிணியின் (டையகோர்னியா சிட்ரி) மூலம் பரவும்.

   கட்டுப்பாடு:

   • சாறு உறிஞ்சும் அசுவிணியை கட்டுப்படுத்த வேண்டும்.
   • நோய் தாக்காத இளந்தளிர்களை பயன்படுத்த வேண்டும்.

   கொய்யாவின் நோய்கள்:
   ஆந்தராக்நோஸ் (கொல்லடோடிரைக்கம் கிளியோஸ்போரியாடிஸ்):
   அறிகுறிகள்:

   • முதிர்ந்த பழங்களில் அமுங்கிய, அடர்ந்த நிறமுடைய காய்ந்த புள்ளிகள் தோன்றும்.
   • ஈரப்பதமான சூழ்நிலையில் காய்ந்த பகுதி முழுவதும் பூசண வித்துக்களால் சூழ்ந்திருக்கும்.
   • நோயின் தாக்கம் அதிகமாகும் போது, சிறிய அமுங்கிய புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய காய்ந்த திட்டுக்களாகத் தோன்றும்.

   கட்டுப்பாடு:

   • நோய் எதிர்ப்பு சக்தியுள்ள நாற்றுக்களைப் பயன்படுத்த வேண்டும்.

   கொய்யா சொரி (பக்சினியா சிடி):
   அறிகுறிகள்:

   • இலைகள், இளம் கிளைகள், பூ மஞ்சரி மற்றும் பழங்களைத் தாக்கும்.
   • உருமாற்றம், இலைகள் உதிர்தல், குறைவான வளர்ச்சி, நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது இறந்துவிடும்.
   • இலைகளில், பழுப்பு நிறப்புள்ளிகள் சுற்றி மஞ்சள் நிற வளையத்துடன் தோன்றும்.

   பூஞ்சான் வகையைச் சாராத நோயைக் கடத்தும் உயிரிகள் (செப்லேயூரஸ் வைரஸன்ஸ்):
   பாசி இலைப்புள்ளி:
   அறிகுறிகள்:

   • இலையின் இரண்டு பக்கமும் ஆரஞ்சு நிறத்துடன் அடர்த்தியான மிருதுவான முடிக் கொத்துடன் காணப்படும்.
   • சாம்பல் கலந்த வெள்ளை காய்ந்த ஓடு போன்ற புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
   • கிளைகளும் தாக்கப்படும் மரப்பட்டையில் வெடிப்பு ஏற்படும்.

   கட்டுப்பாடு:

   • முறையான சாகுபடி முறையைக் கையாள வேண்டும்.
   • முறையாக இலை, கிளைகளை வெட்டி விட வேண்டும்.
   • களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
   • அகலமான இடைவெளி உள்ள மரங்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
   • பூச்சி, கரையான், மற்ற இலை நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

   ஆப்பிளின் நோய்கள்:
   கருந்தழும்பு நோய் (வெஞ்சுரியா இன்அக்யூவாலிஸ்):
   அறிகுறிகள்:

   • இலை, பழங்களில் அறிகுறிகள் காணப்படும்.
   • இலையின் அடிப்பக்கத்தில் அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
   • இளம் இலைகளில், புள்ளிகள் பிரகாசமாக, சருகு போன்ற ஓரங்களுடன் இருக்கும். முதிர்ந்த இலைகளில் புள்ளிகள் தெளிவாக இருக்கும்.
   • புள்ளிகள் வெளிப்பக்கத்திலிருந்து உள்பக்கமாக குவிந்து காணப்படும்.
   • நோயின் தாக்குதல் அதிகமாகும் போது, இலைப்பரப்பு வளைந்து, குட்டையாக உருமாறியிருக்கும்.
   • பழங்கள் சிறியதாக கடினமாக கருப்பு நிறப் புள்ளிகளுடன் இருக்கும்.
   • முதிர்ச்சியான பழங்களில், புள்ளிகளின் நடுவில் தக்கைப் போன்று மஞ்சள் வளையம் புள்ளியைச் சுற்றி இருக்கும்.

   வாழும் மற்றும் பரவும் முறை:

   • முதலில் பூசண வித்துக்கள் மூலமும், பின் காற்று வழி பரவும். காளான் வித்து மூலமும் பரவும்.
   • சாதகமான சூழ்நிலையின் மூலம் பரவும்.
   • குளிர்ந்த ஈரப்பதம் உள்ள காலங்களில் பரவும்.

   கட்டுப்பாடு:

   • முறையான பயிர் வளர்ப்பு.
   • நோய் தாக்கப்பட்ட இலைகளை அகற்றி, அழிக்க வேண்டும்.

   தீக்கருகல் நோய் (எர்வினியா அமைலோவோரா):

   • பூக்கள் நீரில் ஊறியது போன்று முதலில் தோன்றும். பின் காய்ந்து, பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும். முடிவில் மரத்திலிருந்து உதிர்ந்துவிடும்
   • இலை, கிளைகளுக்குப் பரவும். நுனியிலுள்ள கிளைகள் வாட ஆரம்பிக்கும். பின் மற்ற கிளைகளுக்கும் பரவும்.
   • பழங்கள் நீரில் ஊறியது போன்று பழுப்பு நிறமாக மாறும். பின் காய்ந்து கருப்பு நிறமாக மாறும்.
   • தாக்கப்பட்ட பகுதியிலிருந்து கசிய ஆரம்பிக்கும்.

   வாழும் மற்றும் பரவும் முறை:

   • தாக்கப்பட்ட கிளைகள், கொம்புகளில் நிலைத்திருக்கும்.
   • பூச்சிகள் மூலமும், மழைக் காலங்களிலும் பரவும்.

   சாதகமான நிலை:

   • தட்ப வெப்ப நிலை 240 செல்சியஸ், கன மழை

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
   • கருகிய கொம்புகள் வெயில் காலத்தில் முளைத்த வேர்களை வெட்டி விட வேண்டும்

   மென்மையழுகல் நோய் (பெனிசிலியம் எக்ஸ்பேன்ஸம்):
   அறிகுறிகள்:

   • பழுப்பு நிற நீர் போன்ற புள்ளிகள் பழங்களில் தோன்றும்
   • பழங்கள் முதிர்ச்சியடையும் போது அழுக ஆரம்பிக்கும்
   • பழங்களின் தோல் சுருங்கிக் காணப்படும்
   • அருவருக்கத்தக்க வாசனை வெளிவரும்
   • ஈரப்பதம் உள்ள நிலையில் நிலம் கலந்த பச்சை நிற வெளி வளர்ச்சி தோன்றும்

   வாழும் மற்றும் பரவும் முறை:

   • பூச்சிகளால் தாக்கப்பட்ட பழத் தோலிலிருந்து பரவும்
   • சேமிப்பு, போக்குவரத்தின் மூலம் பரவும்

   கட்டுப்பாடு:

   • பழங்களை எந்த விதமான காயம் ஏற்படாமல் பயன்படுத்த வேண்டும்

   காய்கறிப் பயிர்களின் நோய்கள்:
   தக்காளிப் பயிரின் நோய்கள்:
   நாற்றழுகல் நோய் (பித்தியம் அஃபேனிடெர்மேட்டம்):
   அறிகுறிகள்:

   • நாற்றங்காலில் தாக்கக்கூடிய மோசமான நோயாகும்
   • நாற்றழுகல் 2 நிலைகளில் தோன்றும், முறையே முளைமுன் நிலை, முளைபின் நிலை.
   • முளைமுன் நிலையில் நாற்றுக்கள் வெளிவருவதற்கு முன்பே அழிந்துவிடும்.
   • முளைவேர் முளைகுருத்து அழிந்து, நாற்றுக்கள் முழுவதுமாக அழுகிவிடும்.
   • முளைபின் நிலையில், கழுத்துப் பகுதியிலுள்ளஇளம் திசுக்கள் தாக்கப்படும்.
   • தாக்கப்பட்ட திசுக்கள் மிருதுவாக நீரில் ஊறியது போன்று இருக்கும்.
   • நாற்றுக்கள் ஒடிந்து அழிந்துவிடும்.

   கட்டுப்பாடு:

   • பூசண சீரிய வளர்ப்பு டிரைக்கோடெர்மா விரிடியுடன் (4கி / கிலோ விதை) விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

   முன்பருவ இலைக்கருகல் நோய் (அல்டர்நேரியா சொலானி):
   அறிகுறிகள்:

   • வளர்ச்சியின் எந்த நிலையிலுள்ள தழைப் பகுதிகளைத் தாக்கும்.
   • இலைப்புள்ளி கருகல் இருக்கும். சிறிய கருப்பு புள்ளிகள் முதிர்ந்த இலைகளில் காணப்படும்.
   • புள்ளிகள் பெரிதாகி மாட்டின் கண் போன்று பெரிய வளையம் தோன்றும்.
   • புள்ளியைச் சுற்றியுள்ள திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதிக தட்பவெப்பநிலை ஈரப்பதம் உள்ள நிலையில், தழைப்பகுதி அழிந்துவிடும்.
   • தண்டுப் பகுதியிலும் இந்தப் புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் பிளவுபட்டு இருக்கும்.
   • பழங்களையும் பாதிக்கும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • பயிர் சுழற்சி முறை மூலம் கட்டுப்படுத்தலாம்.

   புசேரியம் வாடல் (புசேரியம் ஆக்ஸிபோரம், புசேரியம் வகை லைக்கோபெர்ஸி):
   அறிகுறிகள்:

   • நாற்றங்காலில் வரக்கூடிய மோசமான நோயாகும்.
   • நரம்புகள் தனியாகித் தெரியும். இலைகள் பசுமை சோகையாகும்.
   • இளம் இலைகள் தொடர்ந்து மடியும். முடிவில் முழுச் செடியும் வாடி மடிந்துவிடும்.
   • இலைகள் தொங்கி பின் வாடும்.
   • நடவு வயலில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பின் வாடி மடிந்துவிடும்.
   • காற்று குழாய்  சார்ந்த திசுக்கள் பழுப்பு நிறமாக மாறும்.
   • செடிகள் குட்டையான வளர்ச்சியுடன் காணப்படும்.

   கட்டுப்பாடு:

   • நாற்றங்காலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
   • தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • நடவு செய்வதற்கு முன், கார்பண்டசிம் (0.1 சதவீதம்) மண்ணில் முழுவதுமாக கலந்து விடவும்.
   • விதைகளை திரம் (Thiram) ஒரு எக்டருக்கு 2.5 கிலோ உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
   • பயிர் சுழற்சி முறையை தொடர வேண்டும்.

    

   செப்டோரியா இலைப்புள்ளி (செப்டோரியா லைக்கோபெர்சிஸ்):
   அறிகுறிகள்:

   • செடியின் எந்த நிலையையும் தாக்கும்.
   • எண்ணற்ற சிறிய சாம்பல் நிற வட்டமான இலைப் புள்ளிகள் காணப்படும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.

   நுண்ணுயிர் வாடல் (சேந்தோமோனஸ் கம்பஸ்டிரிஸ் வகை வெஸிக்க டோரியா):
   அறிகுறிகள்:

   • அதிக ஈரப்பதம், அதிக வெப்ப நிலை தாக்கம் அதிகமாக இருக்கும்.
   • மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்.
   • செடிகள் முழுவதும் வாடும்.
   • முதலில் கீழ் இலைகள் தொங்கி வாடும்.
   • நுண்ணுயரி காற்று குழாய்  சார்ந்த திசுக்களில் இருக்கும்.
   • அதிக தாக்கத்தின் போது தண்டுப் பகுதி முழுவதையும் துளைத்து, மஞ்சள் கலந்த பழுப்பு நிறத் திசுக்களாக மாறும்.
   • தாக்கப்பட்ட பகுதிகளை வெட்டினால் வெள்ளை நிறக் கசிவு வெட்டப்பட்ட இடத்திலிருந்து வரும்.

   கட்டுப்பாடு:

   • பயிர் சுழற்சி முறை, முறையே தட்டைப்பயிறு - மக்காச்சோளம் - முட்டைக்கோஸ், வெண்டை - தட்டைப்பயிறு - மக்காச்சோளம், மக்காச்சோளம் - தட்டைப்பயிறு - மக்காச்சோளம், ராகி - கத்திரி
   • நாற்றுக்களை ஸ்ட்ப்ரோசைக்ளின் (1கி / 40 லிட்டர் தண்ணீர்) திரவத்தில் 30 நிமிடங்களுக்கு நனைத்து பின் நட வேண்டும்.

   நுண்ணுயிர் இலைப்புள்ளி (சேந்தோமோனஸ் கம்பஸ்டிரிஸ் வகை வெஸிக்கடோரஜயா):
   அறிகுறிகள்:

   • ஈரப்பதம், மழைப் பருவம் சாதகமாக இருக்கும்.
   • இலைகளில் சிறிய பழுப்பு நிற, தண்ணீரில் ஊறிய, வட்டவடிவ புள்ளிகளை சுற்றி மஞ்சள் வளையத்துடன் இருக்கும்,
   • முதிர்ந்த செடிகளில் அதிகமான தாக்கத்தால் இலைகள் உதிரும்,
   • முதிராத பழங்களில் சிறிய பழுப்பு நிற தண்ணீரில் ஊறிய புள்ளிகள் முதலில் தோன்றும். பின் பெரிதாகி கரடு முரடான சொரியாக மாறும்,
   • முதிர்ந்த பழங்களை எளிதில் தாக்காது,
   • விதையின் மேற்புறம் நுண்ணுயிரியுடன் கலந்து சிறிது நாள் நிலைத்திருக்கும்,
   • மற்ற மாற்று ஒம்புயிரிகளிலும் செடியின் குப்பைகளிலும் வாழும்,

   கட்டுப்பாடு:

   • வயலில் தோன்ற ஆரம்பித்தவுடன் கட்டுப்படுத்துவது கடினம்.
   • நோயில்லாத விதை மற்றும் நாற்றுகளை பயன்படுத்த வேண்டும்.
   • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.
   • அக்ரிமைசின் - 100 (100 பிபிஎம்) 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

   தக்காளி தேமல் நோய் (டி எம் வி):
   அறிகுறிகள்:

   • இலைகள் பலவர்ண பச்சை நிறமாக இருக்கும்.
   • இளம் இலைகள் வாடல்.
   • இலைப்பரப்பு உருமாறி, கொத்தாக, சிறியதாக இருக்கும் ‘பெர்ன் இலை’ போன்று இருக்கும்.
   • குட்டையான வளர்ச்சி லேசான பச்சை நிறத்துடன் சுருண்டு காணப்படும்.
   • உடைகள், பணியாட்களின் கைகளுடன் தொடர்பு நோய் தாக்கப்பட்ட செடிகளைத் தொடுவதால் செடிகளின் குப்பைகள் மற்றும் கருவிகளின் மூலம் இந்த நச்சுயிரி பரவும்.

   கட்டுப்பாடு:

   • நோயில்லாத விதைகளை விதைப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.
   • விதைகளை சுத்தமாக கழுவி நிழலில் உலர்த்த வேண்டும்.
   • நாற்றங்காலில் நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • பயிர் சுழற்சி முறையை (புகையிலை, உருளைக்கிழங்கு, மிளகாய், கத்திரியைத் தவிர மேற்கொள்ள வேண்டும்.

   தக்காளி இலைச் சுருக்கு நச்சுயிரி (டி.எல்.சி.வி):
   அறிகுறிகள்:

   • வெள்ளை ஈ (பெமிசியா டேபேசி) மூலம் பரவும்.
   • தக்காளிச் செடியை அழிக்கக்கூடிய முக்கியமான நோயாகும்.
   • குட்டையான வளர்ச்சியுடைய செடிகள் இலைகள் கீழ்ப்புறமாக வளைந்து உடையும்.
   • புது இலைகளில் மஞ்சள் நிற மாற்றம் பின் சுருள ஆரம்பிக்கும்.
   • முதிர்ந்த இலைகள் சருகு போல மாறி உடையும்.
   • கணுக்கள் இடைக்கணுக்கள் சிறியதாகும்.
   • செடிகள் லேசான மஞ்சள் நிறத்துடன் நிறைய கிளைகளுடன் பார்ப்பதற்கு புதர் போன்று இருக்கும்.
   • செடிகள் குட்டையான வளர்ச்சியுடன் இருக்கும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • மாற்று ஒம்புயிரி செடிகளை களை எடுக்கும் போது அல்லது மண் அனைத்துக் கொடுக்கும் போது அழித்து விட வேண்டும்.
   • வெள்ளை ஈயை கட்டுப்படுத்த வேண்டும்.

   தக்காளி இலைப்புள்ளி கருகல் நச்சுயிரி நோய்:
   அறிகுறிகள்:

   • இலைப்பேன் (திரிப்ஸ் டேபேஸி, ஃபிரேங்கினில்லா ஸ்கல்சி, ஃபிரேங்கினில்லா ஆக்ஸிடென்டாலிஸ்)
   • நீளமான புள்ளி இலைகள், தண்டுகள், பழங்களில் தோன்றும்.
   • எண்ணற்ற சிறிய அடர்ந்த வட்ட வடிவ புள்ளிகள் இளம் இலைகளில் காணப்படும்.
   • இலைகள் சாம்பல் நிறத்துடன் தோற்றமளிக்கும். பின் பழுப்பு நிறமாக மாறி வாடும்.
   • பழங்களில் எண்ணற்ற புள்ளிகள் அடர்ந்த திட்டுக்களாக இருக்கும்.
   • முதிர்ச்சியான பழங்களில் சிவப்பு, மஞ்சள் நிற வளையம் போன்று மாறி மாறித் தெரியும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • மாற்று ஒம்புயிரி பயிர்களை களை எடுக்கும் போது அல்லது மண் அனைக்கும் போது அகற்ற வேண்டும்.

   கத்திரியின் நோய்கள்:
   நுண்ணுயிர் வாடல் நோய் (சூடோமோனாஸ் சொலோனேஸியேரம்):
   அறிகுறிகள்:

   • இலைகள் வாடல், குட்டை வளர்ச்சி, இலைப்பரப்பு மஞ்சளாதல், முடிவில் செடி முழுவதும் வாடிவிடும்.
   • முதலில் அடி இலைகள் தொங்கி, வாட ஆரம்பிக்கும்.
   • காற்று குழாய் சார்ந்த திசுக்கள் பழுப்பு நிறமாக மாறும்.
   • தாக்கப்பட்ட பகுதிகளில் நுண்ணுயிரின் கசிவு வெளிவரும்.
   • பகல் நேரங்களில் செடிகள் வாடியும், இரவு நேரங்களில் நன்றாக இருக்கும். ஆனால் முடிவில் மடிந்துவிடும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாங்கக் கூடிய இரகம் - பந்த் சாம்ராட்
   • பயிர் சுழற்சி முறை.
   • தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • வேர் முடிச்சு நூற்புழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

   செர்கோஸ்போரா இலைப்புள்ளி (செர்கோஸ்போரா சொலானி - மெலான்ஜினா, செர்கோஸ்போரா சொலானி):
   அறிகுறிகள்:

   • பச்சை நிறமிழந்த புள்ளிகள் பலவிதமான வடிவங்களில் இலைகளில் தோன்றும். பின் சாம்பல் கலந்த பழுப்பு நிறப்புள்ளிகளாகத் தோன்றும்.
   • நோய் அதிகம் தாக்கப்பட்ட நிலையில் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து, காயின் விளைச்சலைக் குறைக்கும்.

   கட்டுப்பாடு:

   • நோய் எதிர்ப்பு இரகம் - பந்த் சாம்ராட்
   • நோய் எதிர்ப்பு இரகங்களை வளர்ப்பதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

   புகையிலைத் தேமல் நச்சுயிரி (டி.எம்.வி):
   அறிகுறிகள்:

   • இலைகளில் பல்வண்ணத் தேமல் தோன்றும்.
   • செடிகள் குட்டை வளர்ச்சி.
   • இலைகள் உருமாறி, சிறியதாக இறகு போன்று இருக்கும்.
   • குறைந்த அளவில் காய்கள் உற்பத்தியாகும்.
   • இலைகள் பல வண்ணங்களில் மாறி தெளிவாகத் தெரியும்.
   • நோய் அதிகம் தாக்கிய நிலையில் இலைகளில் கொப்புளம் போன்று தோன்றும். இலைகள் சிறியதாக மாறும் செடிகள் குட்டை வளர்ச்சியுடன் இருக்கும்.
   • இந்த நச்சுயிரி சாறு மூலம் பரவும்.
   • அசுவிணி (ஏபிஸ் காஸப்பி, மைசஸ் பெர்சிகே) மூலம் பரவும்.
   • களை ஒம்புயிர்களான சொலானம் நைகரம், சொ. சேந்தோகார்பம் செடிகளில் இந்த நச்சுயிரி நிலைத்திருக்கும்
   • சாறு, சுத்தமில்லாத கருவிகள், துணிகள், மண் கழிவுகள், பணியாட்களின் கைகளின் மூலம் பரவும்.
   • பூசணி வகைக் கொடிகள், பருப்பு வகைகள், மிளகு, புகையிலை, தக்காளி மற்றும் களை ஒம்புயிரிகள் இந்த நச்சுயிரி நிலைத்திருக்கும்.

   கட்டுப்பாடு:

   • களைச் செடிகளை அழிக்க வேண்டும்.
   • வெள்ளரி, மிளகு, புகையிலை, தக்காளி பயிர்களை தக்காளி பயிர்களை கத்தரி விதைப் படுக்கைக்கு அருகில் பயிரிடக்கூடாது.
   • கத்திரி நாற்றுக்களை நடுபவர்கள் புகையிலை சாப்பிடுவதோ, புகைப்பிடிப்பதோ கூடாது.

   கழுத்தழுகல் நோய் (ஸ்கிளோரசியம் ரால்ப்சி):

   • நோயின் தாக்கம் தற்காலிகமாகத் தோன்றும்.

   அறிகுறிகள்:

   • மண்ணில் உருவாகும் பூசண வித்துக்களால் தண்டின் அடிப்பகுதி தாக்கப்படும்.
   • தண்டின் பட்டை உரிதல்.
   • திசுக்கள் வெளி தெரிவதாலும், காய்வதாலும் செடிகள் அழிந்துவிடும்.
   • செடியின் நிற்கும் திறன் குறைதல், தண்டைச் சுற்றி நீர் சூழந்திருத்தல், கருவிகள் மூலம் காயம் ஏற்படுதல் மூலம் நோய் பரவும்.

   கட்டுப்பாடு:

   • டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோவுக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி அழிக்க வேண்டும்.

   பூசணி வகைகளின் நோய்கள்:
   தர்பூசணியின் புசேரியம் வாடல் நோய் (புசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை நிவேயம்),
   முலாம்பழம் - புசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை, மெலானிஸ்
   அறிகுறிகள்:

   • செடியின் எல்லா நிலைகளையும் தாக்கும்.
   • இளம் நாற்றுக்கள் அழுகி, அழிந்துவிடும்.
   • வளர்ந்த செடிகள் வாடி, பத்து நாட்களுக்குள் மடிந்து விடும்.
   • வாஸ்குலர் திசுக்கள் நிறம் மாறியிருக்கும். மழைக் காலங்களில், ரோஸ் அல்லது வெள்ளை நிற பூசண வளர்ச்சி தண்டுப் பகுதியில் காணப்படும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • டிரைக்கோடெர்மா விரிடி அல்லது ப. ப்ளரோஸ்ன்ஸ் உடன் விதை நேர்த்தி மற்றும் மண் மூலமும் அளிக்கலாம்
   • நோய் தாக்காத விதைகளை பயன்படுத்த வேண்டும். முலாம்பழத்தின் வேர் அழுகல் நோய் (பித்தியம் அஃபெனிடெர்மேட்டம்), பூசணி, சீமைப் பூசணியின் வேர் அழுகல் (புசேரியம் சொலானி வகை குக்கர்பிட்டே), தர்பூசணி, வெள்ளரியின் வேர் அழுகல் (பித்தியம் இர்ரெகுலேரே, பித்தியம் அல்டிமம்)

   அறிகுறிகள்:

   • நீரில் ஊறிய, அழுங்கிய அடர்ந்த இந்தப் புள்ளிகள் தோன்றும்.
   • செடியின் மேல்பகுதி பிளவுப்பட்டு, இறுதியில் மடிந்துவிடும்.
   • பழங்கள் அழுக ஆரம்பித்துவிடும்.

   கட்டுப்பாடு:

   • வாடல் நோய்க்கான கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்த வேண்டும்.

   ஆந்தராக்நோஸ் (கொல்லட்டோ டிரைக்கம் லேகினேரியம்):
   அறிகுறிகள்:

   • சிறிய மஞ்சள்நிற அல்லது நீரில் ஊறிய புள்ளிகள் இலைகளில் தோன்றும். பின் பழுப்பு நிறமாக பூசணியிலும், கருப்பு நிறமாக தர்பூசணியிலும் மாறும்.
   • மரப்பட்டை உரிதல், இலைகள் காய்தல்.
   • கொடி முழுவதும் அழிந்துவிடும்.
   • பழங்கள் சுருங்கி, வாடிவிடும்.
   • பழங்களில் வட்டமான கருப்பு நிற சொற்கள் தோன்றும்.
   • கருப்பு நிறப் புள்ளிகளில், பூசண வித்துக்கள் இருக்கும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.

   ஆல்டர்னேரியா இலைப்புள்ளி / மேக்ரோஸ்போரியம் கொப்புளம் (ஆலடர்னேரியா குக்குமெரினா, மேக்ரோஸ்போரியம் குக்குமெரினம்):
   அறிகுறிகள்:

   • சிறிய, வட்டவடிவ புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
   • புள்ளிகள் பெரிதாகி, அடர்ந்த வளையங்கள் தோன்றும்.
   • பழங்கள் அழுகும்.

   கட்டுப்பாடு:

   • நோயில்லாத விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

   வெர்ட்டிஸிலியம் வாடல் நோய் (வெர்ட்டிஸிலியம் அல்லோட்ரம்):
   அறிகுறிகள்:

   • இலைகள் மஞ்சள் நிறமாதல். செடிகள் வாடல்.
   • தண்டின் உட்புறம் பழுப்பு நிறமாக மாறியிருக்கும்.

   செர்கோஸ்போரா இலைப்புள்ளி (செர்கோஸ்போரா ஸிட்ரிலினா):
   அறிகுறிகள்:

   • சிறிய கருப்பு நிறப் புள்ளிகள், சாம்பல் நிறத்தில் நடுவிலும் இலைகளில் தோன்றும்.
   • நோய் அதிகமுள்ள நிலையில், இலைகள் உதிர்ந்துவிடும்.
   • பழங்களின் அளவு குறைந்துவிடும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்.

   அடிச்சாம்பல் நோய் (சூடோபெரினோஸ்போரா குபென்ஸிஸ்):
   அறிகுறிகள்:

   • தேமல் நோயின் அறிகுறிகள் போலவே இருக்கும்.
   • லேசான பச்சை நிறமாக இலையின் மேல்புறத்தில் காணப்படும்.
   • ஈரமாக இருக்கும் காலங்களில் இலையின் கீழ்ப்பகுதி பூசண வித்துக்களால் நிறைந்திருக்கும்.
   • இலைகள் வாடி விரைவில் உதிர்ந்துவிடும்.

   கட்டுப்பாடு:

   • அகலமான இடைவெளி, நல்ல வடிகால் வசதி, சூரிய ஒளி படும்படி செடிகள் இருக்க வேண்டும்.

   கோண வடிவ இலைப்புள்ளி நோய் (சூடோமோனஸ் ஸிரின்ஜ் வகை லேக்ரிமேன்ஸ்):
   அறிகுறிகள்:

   • நீரில் ஊறிய புள்ளிகள் இலைகளில் தோன்றும். பின் சாம்பல் நிறமாகி மாறி இலையின் கீழ்ப்புறத்தில் கசிய ஆரம்பிக்கும்.
   • புள்ளிகள் உள்ள இடங்கள் உதிர்ந்து விடும்.
   • பழங்கள் பழுப்பு நிற வட்ட வடிவில் அழுக ஆரம்பிக்கும்.
   • பழத்தின் சதைப்பகுதி வரை அழுகும்.

   கட்டுப்பாடு:

   • நோயில்லாத விதையை பயன்படுத்த வேண்டும்.
   • பயிர் சுழற்சி முறையை கையாளவேண்டும்.

   பழ அழுகல் நோய் (பித்தியம் அஃபெனிடெர்மேட்டம்):
   அறிகுறிகள்:

   • ஆரம்பத்தில் பழங்களின் தோல் மிருதுவாகும். அடர் பச்சை நீரில் ஊறிய புள்ளிகள் தோன்றி அழுகும்.
   • மண்ணுக்கு அருகிலுள்ள பழங்கள் விரைவாக தாக்கும்.

   கட்டுப்பாடு:

   • பழங்கள் மண்ணைத் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

   தர்பூசணியின் மற்ற அழுகல் நோய்கள்:

   • அஸ்பர்ஜில்லஸ் பழ அழுகல் - அஸ்பர்ஜில்லஸ் பிளேவஸ்
   • கர்வேலரியா பழ அழுகல் - கர்வேலரியா ஒவாய்டே
   • மைரோதிஸியம் பழ அழுகல் - மைரோதிஸியம் ரோரிடம்
   • ரைசோபஸ் பழ அழுகல் - ரைசோபஸ் ஒரைசே
   • டிப்ளோடியா பழ அழுகல் - டிப்ளோடியா நேட்டலென்சிஸ் (வெள்ளரியையும் தாக்கும்)

   நச்சுயிரி நோய்:

   • வெள்ளரி தேமல் நச்சுயிரி - நோய் பரப்பும் உயிரி - அசுவிணி (ஏபிஸ் க்ரேஸிவோரா, மைசஸ் பெர்சிகே)

   அறிகுறிகள்:

   • பல்வண்ணத் தேமல்
   • இலைகள் உருமாற்றம்
   • செடிகள் குட்டை வளர்ச்சி
   • குட்டையான இடைக்கணுக்கள், இலைக் காம்புகள்
   • குறைவான எண்ணிக்கையில் பூக்கள்
   • பழங்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தேமலுடன் காணப்படும்

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • களை ஒப்புயிரிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

   மற்ற நச்சுயிரி நோய்கள்:

   • தர்பூசணி தேமல் நச்சுயிரி - தர்பூசணி, முலாம்பழம்
   • சீமைப்பூசணித் தேமல் நோய் - சீமைப்பூசணி, பூசணி
   • தேமல் நோய் - சுரை, புடலை, சீமைப்பூசணி, பீர்க்கன்கொடி

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • களை ஒம்புயரிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

   பச்சைப் பூ நோய் - பைட்டோப்ளாஸ்மா (நோய்ப்பரப்பும் உயிரி - இலை தத்துப்பூச்சி):

   • பாகற்காய், புடலை, வெள்ளரி, சுரை, பீர்க்கன் கொடிகளைத் தாக்கும்.
   • குட்டையான இடைக் கணுக்கள், பச்சைப் பூக்கள் தோன்றும்.
   • அல்ல வட்டம், மகரந்தப் பகுதி, சூல் பகுதி முழுவதும் பச்சைநிற அமைப்பாக மாறியிருக்கும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
   • களைகள் இல்லாத சுத்தமான சாகுபடி முறையை கையாள வேண்டும்.

   சீமைக் கொத்தவரையின் நோய்கள்:
   ஆந்த்ராக்நோஸ்:
   அறிகுறிகள்:

   • நோய் இல்லாத விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

   கோணவடிவ இலைப்புள்ளி:
   அறிகுறிகள்:

   • இலைகளில் பழுப்பு நிற கோண வடிவப் புள்ளிகள் தோன்றும்.

   கட்டுப்பாடு:

   • நோய் இல்லாத நல்ல விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
   • 2 ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.

   பொதுத் தேமல் நோய்:
   அறிகுறிகள்:

   • இலைகள் பச்சையம் அற்ற வளர்ச்சியுடன், வளைந்து, காயத் தொடங்கும்.
   • குறைவான வெடிகனிகள் விதைகள் இருக்கும்.

   கட்டுப்பாடு:

   • நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இரகங்களை (கன்டன்டர் இரகம்) பயிரிட வேண்டும்.

   காரட் பயிரின் நோய்கள்:
   கருப்பு வேர் அழுகல் நோய் (தியனேவியோப்ஸிஸ் பேஸிக்கலோ):

   • அதிக அங்கக மண்ணில் பயிரிடும் போது தாக்கும்.
   • கருப்பு நிறப்புள்ளிகள் ஆங்காங்கேத் தோன்றும்.

   கட்டுப்பாடு:

   • வேர்கள் காயப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
   • அதிக வெப்ப நிலையில் சேமித்தல் கூடாது.

   உட்குடைவு புள்ளி நோய் (பித்தியம் வகை):
   அறிகுறிகள்:

   • குழிவுப் புள்ளிகள் தோன்றும்.
   • பயிரின் எடையளவு குறையாது. ஆனால் குழிவுகள் ஏற்படுவதால் விற்பனை பண்ண முடியாமல் போகும்.
   • அங்கக அல்லது கனிம நிலங்களில் தோன்றும்.

   கட்டுப்பாடு:

   • நோய் இல்லாமல் நிலத்தை வைத்திருக்க வேண்டும். மற்ற படி தனியான கட்டுப்பாடு முறைகள் இல்லை.

   கருந்தழும்பு நோய் (ஸ்ட்ப்ரோமைசிஸ் ஸ்கேபிஸ்):
   அறிகுறிகள்:

   • உருளை மற்ற வேர் பயிர்களின் தாக்குதல் போலவே இருக்கும்.
   • காரத் தன்மையுள்ள மண், அங்கக மண் உள்ள நிலங்கள் சாதகமாக இருக்கும்.
   • கேரட்டின் மேல் பகுதியில் கடுத்தமும் பின் புள்ளிகள் இருக்கும்.

   கட்டுப்பாடு:

   • உருளைக் கிழங்கு பயிரிட்ட நிலத்தை தவிர்க்க வேண்டும்.
   • மண்ணின் காரத்தன்மையை குறைக்க வேண்டும்.

   செர்கோஸ்போரா இலைப்புள்ளி (செர்கோஸ்போரா கரோட்டே):
   அறிகுறிகள்:

   • மண் மற்றும் எஞ்சிய பகுதியின் வழி பரவும்.
   • இளம் இலைகள் அதிகளவில் தாக்கும்.

   கட்டுப்பாடு:

   • பயிரின் எஞ்சிய பகுதிகளுடன் சேர்த்து உழவு செய்ய வேண்டும்.
   • பயிர் சுழற்சி முறை
   • இலை சார்ந்த பூஞ்சான் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.

   ஸ்கிளிரோடினியா அழுகல் - வெள்ளை பூஞ்சை (ஸ்கிளிரோடினியா ஸ்கிளிரோடியோரம்):
   அறிகுறிகள்:

   • பூசண வித்துக்கள் எண்ணற்ற அளவில் இருப்பதால் நோயின் தாக்கத்தை அதிகிரக்கும்.
   • காரட் குறைவான அளவில் அல்லது எந்த விதமான அறிகுறியும் வயலில் தென்படாது. சேமித்து வைக்கும் போது வெள்ளை பூஞ்சான் தாக்கம் வேர்களில் காணப்படும்.
   • ஆரம்பத்தில் வேர்களில் குறைவான தாக்கமும் பின் அதிவேகமாக எல்லாப் பயிர்களுக்கும் பரவும்.
   • சேமிப்பு கலம் முழுவதும் வெள்ளைப் பூஞ்சான் மற்றும் கருப்பு பூசண வித்துக்கள் ஒவ்வொரு கேரட்டைச் சுற்றி இருக்கும்.

   கட்டுப்பாடு:

   • சேமிப்புக் கலங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
   • குறைந்த தட்பவெப்ப நிலை நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

   நுண்ணுயிரி இலைக் கருகல் நோய் (சேந்தோமோனாஸ் கம்பஸ்டிரிஸ் வகை கிரோட்டை):

   • மண் வழி பரவும் நுண்ணுயிரி நோய்
   • செர்கோஸ்போரா, ஆல்டர்னேரியா கருகல் நோய் போலவே இலைப் புள்ளிகள் தோன்றும்.

   முட்டைக்கோஸ் இனவகையின் நோய்கள்:
   முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், பிரக்கோலி - முக்கியமான பயிர்கள்.
   வேர் முடிச்சு நோய் (பிளாஸ்மோடியாபோரா பிரேஸிக்கே)

   • இலைகள் மஞ்சள் நிறமாதல், குட்டை வளர்ச்சி, முடிவில் மடிந்துவிடும்.
   • இளம் செடிகள் விரைவில் மடிந்துவிடும். முதிர்ந்த செடிகள் விற்பனைத் தரம் குறைந்த காய்களைத் தரும்.
   • வேர்களில் சுருள் வடிவில், அடர்த்தியாக நடுவிலும், நுனி கூராக பார்ப்பதற்கு குண்டாந்தடி வடிவம் போன்று உருமாறியிருக்கும்.
   • முடிச்சு வடிவ உயிரிகள் செடியுடன் ஒட்டி, நச்சுககள் உற்பத்தியாகி செடிகளை அழிக்கும்.

   கட்டுப்பாடு:

   • நோய் தாக்கிய வயல்களை தவிர்க்க வேண்டும்.

   கருப்பு அழுகல் நோய் (சேந்தோமோனாஸ் கம்பஸ்டிரிஸ் வகை கம்பஸ்டிரிஸ்):

   • ‘V’ வடிவ வெளிர் பச்சையிலிருந்து மஞ்சள் நிறப் புள்ளிகள் இலை விளிம்புகளில் தோன்றும். பின் கருப்பு நிறமாக மாறும் இலை நரம்புகளும் கருப்பாக மாறும்
   • காற்று குழாய்  சார்ந்த திசுக்கள் கருப்பாக மாறும்.
   • முட்டைக்கோஸ், காலிஃபிளவரின் முதிர்ந்த பகுதிகள் நிறம் மாறி இருக்கும்.

   கட்டுப்பாடு:

   • தேவையில்லாத விதைகளை பயன்படுத்த வேண்டும்.
   • அக்ரிமைசின் 200 பி.பி.எம் தெளிக்க வேண்டும்.

   ஆல்டர்னேரியா இலைப்புள்ளி / கரும்புள்ளி / பழுப்புநிறப் புள்ளி நோய் (ஆல்டர்னேரியா பிரேஸிகோலா):

   • சிறிய, அடர் நிறப் புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
   • இலைப் புள்ளிகளில் பூசண வித்துக்கள் அடர்ந்த வளையங்களாகத் தோன்றும்.
   • இலைக் காம்பு, தண்டுகள், விதை கனிகளில் புள்ளிகள் காணப்படும்.
   • காலிஃபிளவர் உண்ணும் பகுதி பழுப்பு நிறமாக மாறும்.

   சாதகமான சூழ்நிலை:

   • 5000 செல்சியஸ், 30 நிமிடத்திற்கு வெந்நீரில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
   • பயிர் சுழற்சி முறை, அளவுக்கதிகமாக நீர்ப் பாய்ச்சுதலைத் தடுக்க வேண்டும்.