| பயிர்  மேலாண்மை
 1.நிலம்  தயாரித்தல்இரும்பு கலப்பை கொண்டு இருமுறையும், கொக்கி  கலப்பைக் கொண்டு இரண்டு முதல் மூன்று முறை நன்றாக உழுதல் வேண்டும்.
 2.  எரு இடுதல்மக்கிய தொழு உரம் எக்டருக்கு 12.5 டன் என்ற  அளவில் இடவேண்டும்.
 3.  பூஞ்சாணக் கொல்லியால் விதைநேர்த்திவிதைப்பிற்கு 25 மணிநேரம் முன்னர், ஒரு கிலோ  விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது திரம் என்ற அளவில் விதைநேர்த்தி  செய்யவேண்டும்.
 4.  பாத்திகள் அமைத்தல்பாத்திகளை 10 அல்லது 20 சதுரமீட்டர் என்ற அளவில்  அமைக்கவேண்டும். போதுமான பாசன வாய்க்கால்களை அமைத்திடல்  வேண்டும்.
 5.  உரம் இடுதல்மண் பரிசோதனை பரிந்துரைக்கேற்ப உரமிடுதல்  வேண்டும் அல்லது பொது பரிந்துரையான எக்டருக்கு 80, 40, 40 கிலோ தழை, மணி,  சாம்பல்ச் சத்துக்களை இடவேண்டும். தழைச்சத்தில் பாதியளவும், மணி மற்றும் சாம்பல்  சத்துக்களில் முழுப்பகுதியும் அடியுரமாக இடவேண்டும்.
 
 6.  விதைப்புபாத்திகளில் அடியுரம் இட்ட பின்னர் 20 செ.மீ  இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை 5 செ.மீ ஆழத்தில் தொடர்ந்து  விதைக்கவேண்டும். ஆழமாக விதைப்பதை தவிர்ப்பது நல்லது.
 7.  களைக் கட்டுப்பாடு விதைத்த 3 நாட்களுக்கு பின்னர் எக்டருக்கு 800  கிராம் என்ற அளவில் ஐசோபுரோட்டுரான் என்ற களைக்கொல்லி மருந்தினை  தெளிக்கவேண்டும். விதைத்த 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்கவேண்டும்.  களைக்கொல்லியை தெளிக்கவில்லையெனில் விதைத்த 20வது மற்றும் 35வது நாட்களில் இரண்டு  கைக்களை எடுக்கவேண்டும்.
 8.  நீர் நிர்வாகம்நிலத்தின் தன்மை மற்றும் மழையைப் பொறுத்து  நான்கு முதல் ஆறு முறை நீர் கட்டவேண்டும். கோதுமை பயிருக்கு கீழ்க்கண்ட 5  நிலைகளில் நீர்ப்பாசனம் தருவது அவசியம்.
 நீர் கட்டவேண்டிய முக்கிய நிலைகள்
 
            
              
                | விதைத்த    பின் |   |  
                | வேர்    பிடிக்கும் நிலை | 15-20    நாட்கள் |  
                | தூர்    பிடித்தல் | 35-40    நாட்கள் |  
                | பூக்கும்    நிலை | 50-55    நாட்கள் |  
                | மணி    பிடிக்கும் நிலை | 70-75    நாட்கள் |  கோதுமையை பொறுத்தவரை வேர்பிடிக்கும் மற்றும்  பூக்கும் தருணத்தில் நீர் கட்டுதல் மிக அவசியமாகும். முளைவிடும் தருணத்தில்  தண்ணீர் தேங்கக்கூடாது. 9.  மேலுரம் இடுதல்வேர் பிடிக்கும் நிலையில் (15-20 நாட்கள்)  மீதியுள்ள பாதியளவு தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.
 10.  அறுவடைதானியங்கள் முற்றிய பிறகு மற்றும் தட்டை காய்ந்த  பின்னர் அறுவடை செய்யவேண்டும். தானியங்களை பிரித்து தூற்றவேண்டும். செலவினை  குறைக்க கதிரப்பானை தானியங்களை பிரிக்க மற்றம் சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.
 
 
 |