|  |  |  |      
 ஆமணக்குபருவம் மற்றும் இரகங்கள்
 
        
          
            | 1.
 | மானாவாரி (ஜ¥ன் -    ஜ¥லை) | இரகங்கள் டி.எம்.வி    5, டி.எம்.வி 6 |  
            | 2. | தோட்டங்களில்    வரப்பு பயிர் | கோ 1 |  ஆமணக்கு இரகங்கள் 
        
          
            | பண்புகள் |   |  
            | பெற்றோர் | ஆனைமலையில் இருந்து    தனிவழித்தேர்வு |  
            | வயது (மாதங்கள்) | பல்லாண்டு பயிர் |  
            | விளைச்சல் கி.ஹெ | 2.5 கிலோ, மரம்,    வருடம் |  
            | எண்ணெய் சத்து  | 57 |  
            | சிறப்பு அம்சங்கள் |   |  
            | தண்டின் நிறம் | வெளிறிய சிவப்பு    கலந்த பச்சை |  
            | சாம்பல் உறை | இல்லை |  
            | மஞ்சள், காய்கள் | பெரியது, தனித்தது,    வெடிக்காதது |  
            | பயிரிட உகந்த முறை | வரப்போரங்களிலும்,    தரிசு நிலங்களிலும் பயிரிட ஏற்றது. |  
          
            | பண்புகள் | டி.எம்.வி.    5 | டி.எம்.வி.    6 | டி.எம்.வி.சி.எச்.    1 |  
            | பெற்றோர் | எஸ்.ஏ    ஒ எஸ் 248.2 | விபி    1 ஒ ஆர்சி 962 | எல்.ஆர்.இ.எஸ்    17 ஒ டி.எம்.வி.5 |  
            | வயது (மாதங்கள்) | 4 | 5 | 5 |  
            | விளைச்சல் கி.ஹெ |   |   |   |  
            | தனிப்பயிர் | 850 | 950 | 1300 |  
            | கலப்புப் பயிர் | - | 500 | 600 |  
            | எண்ணெய் சத்து | 50 | 51.9 | 51.7 |  
            | சிறப்பு அம்சங்கள் |   |   |   |  
            | தண்டின் நிறம் | வெளிரிய    சிவப்பு | சிவப்பு | சிவப்பு |  
            | சாம்பல் உறை | மூன்று | இரண்டு | மூன்று |  
            | மஞ்சரி, காய்கள் | முள்    உடையது வெடிக்காதது, தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் | நடுத்தர    நீளம், முட்கள் கொண்ட காய்கள் | முட்கள்    கொண்ட காய்கள் |  
            | பயிரிட உகந்த முறை | தனிப்பயிர்    மற்றும் கலப்புப் பயிர் | தனி    மற்றும் கலப்புப் பயிர் | தனி    மற்றும் கலப்புப் பயிர் |  
 நிலம்   தயாரித்தல்
 அமில  நிலங்களைத்  தவிர பிற நிலங்களில்  பயிரிடலாம். நாட்டுக் கலப்பையினால் இரண்டு மூன்று தடவை உழவேண்டும். விதையும் விதைப்பும்
 இடைவெளி
 
        
          
            | நீண்ட    கால இரகம் | டி.    எம் .வி .6, டி .எம் .வி .சி .எச் 1 | 90    ஒ 90 செ.மீ |  
            | குறுகிய    கால இரகம் | டி    . எம் . வி 5 | 60    ஒ 30 செ.மீ |  தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்தல் : சிறந்த தரமான  விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்கள் தாக்கிய  மற்றும் உடைந்த விதைகளை நீக்கி விடவேண்டும்.விதைநேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம்  திரம் அல்லது கார்பென்டாசிம் கலந்து 4 மணி நேரம் வைத்திருந்து விதைப்பு செய்யவும்.
 விதைப்பு : விதைகளை சிபாரிசு இடைவெளியில்  விதைக்கவும். விதைகளை 4-6 செ.மீ ஆழத்தில் விதைப்பு செய்யவும். ஒரு குழிக்கு ஒரு  விதை போதுமானது.
 பயிர்கலைப்பு மற்றும் விதைத்தல் : விதைகளை  விதைக்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் விதைப்பு செய்யவும்.
 
 ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைஉரமிடுதல்
 
 உழவு  செய்யப்படாத நிலத்தில் 12.5 டன், எக்டர் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு பரப்பி  உழவேண்டும். மண் பரிசோதனைப் படி உரங்கள் இடவேண்டும். மண்பரிசோதனை செய்யாவிட்டால்  கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவேண்டும். 
        
          
            | ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ) |  
            | தழை | மணி | சாம்பல் |  
            | 29 | 15 | 15 |  களை நிர்வாகம் : விதைத்த 20 மற்றும் 40 ஆம்  நாட்களில் களைக் கொத்து கொண்டு களையெடுப்பது அவசியம்.
 அறுவடைபயிரின் வயதினைக் கணக்கில் கொண்ட அறுவடை  மேற்கொள்ளவேண்டும்.
 
        
          ஒன்று அல்லது       அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம்.முற்றிய விதைக்       காத்தை இதர கொத்துக்களைப் பாதிக்காதவாறு அறுவடை செய்யவும்.விதைகளை       நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்தவும்.காய்ந்த       கொத்தை குச்சி கொண்டு, அடித்து விதை முத்துக்களை பிரித்தெடுத்து, காற்றில்       இட்டு தூசியை நீக்கவும் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவி கொண்டு       விதைகளைப் பிரித்தெடுக்கவும்.     |  | 
      தாவர ஊட்டச்சத்துதாவர வளர்ச்சி ஊக்கிகள்
 மகசூலை அதிகரிக்கும்
 வழிமுறைகள்
 |