தோட்டக்கலைப்பயிர்கள் :: காபி 

காப்பி

காப்பி வறுக்கப்பட்ட காப்பி கொட்டைகளிலிருந்து வடிகட்டப்படும் பானமாகும். காப்பிக் கொட்டைகள் காபியா எனும் பசுமை மாறாப் புதிர்களிலிருந்து பெறப்படுகிறது. உலகின் புகழ் பெற்ற பானமான காப்பி சிறிது அமிலத்தன்மை (PH 5.0-5.1) உடையது. காப்பியில் உள்ள கபெய்ன் அருந்தும் போது புத்துணர்ச்சி அளிக்கும். முக்கியமான காப்பி வகைகள்-காப்பி அரேபிகா, காப்பி லைபரிகா மற்றும் காப்பி ரொபஸ்டா ஆகும். முதன்மையான காப்பி உற்பத்தி செய்யும் நாடுகள் தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஆப்ரிக்காவைச் சார்ந்த- கென்யா, எத்தியோப்பியா, மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த – கோஸ்டாரிகா, ஜமைக்கா, மெக்சிகோ, ஆசியாவைச் சேர்ந்த – இந்தியா, இந்தோனேசியா ஆகும்.

காப்பி உற்பத்தி

  • காப்பி உற்பத்தி - உலர வைத்து வறுத்துப் பொடித்த காப்பிக்கொட்டை காப்பி உற்பத்திக்குப் பயன்படுகிறது. பதப்படுத்தப்படாத கொட்டைகள் விதைக்கப்பட்டு காப்பி மரமாக வளர்க்கப்படுகிறது.

  • அறுவடை - காப்பி செடியின் வகையைப் பொறுத்து 3 முதல் 4 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி விடும். காப்பி பழம், காப்பி செர்ரி என்று பொதுவாகக் குறிப்பிடப்படும். இது அடர்ந்த சிகப்பு நிறத்தில் இருக்கும். இது கை அல்லது கருவி மூலமாக அறுவடை செய்யப்படும்.

  • பதப்படுத்துதல் - அறுவடை செய்தவுடன் உடனடியாகக் காப்பிக்கொட்டைகள் பதப்படுத்துவதன் மூலம் அவை கெட்டுப்போவதைத் தடுக்கலாம். காப்பிக்கொட்டைகள் இடம் மற்றும் வசதிகளைப் பொறுத்து 2 வகையாகப் பதப்படுத்தப்படுகிறது.

உலர்ந்தமுறை - பண்டை காலத்திலிருந்து பல நாடுகளில் இம்முறை நீர் ஆதாரம் குறைந்த இடங்களில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. புதிதாகப் பறிக்கப்பட்ட பழங்கள் பரப்பப்பட்டு சூரிய வெளிச்சத்தில் உலர வைக்கப்படுகிறது.

ஈரமுறை: - இந்த முறையில் காபி செர்ரியிலிருந்து சதைப்பகுதி நீக்கப்பட்டு, கொட்டைகள் தோல் பகுதியுடன் மட்டும் காய வைக்கப்படும்.

காப்பி தயாரிக்கும் முறைகள் வணிக முறையிலான காப்பி வகைகள்

ஆதாரம்:

http://www.slideshare.net/muditgrover1/coffee-different-kinds-of-coffee-styles-of-coffee?qid=2f292b8e-fb7d-4f53-a39d-cfbd67f7a404&v=qf1&b=&from_search=3

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015