பருவம் மற்றும் தட்பவெட்ப நிலை

இரகங்கள்

சாகுபடி முறைகள்

பாசன மேலாண்மை

ஊட்டச்சத்து மேலாண்மை

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

அறுவடைக்குப்பின் சார் தொழில்நுட்பங்கள்

வாழை பதப்படுத்துதல்



பருவம் மற்றும் தட்பவெட்ப நிலை


வாழை நடவுக் கன்றினை எவ்வாறு தயார் செய்வது?

இரண்டு வகைக் கன்றுகள் பொதுவாகக் காணப்படுகின்றன.

  • சாதாரண முறையில் நடுவதற்கு பக்கக் கன்றுகள் அல்லது கிழங்கு தேர்ந்தெடுக்கப்படும். கன்றாக இருப்பின் நீண்ட, குறுகிய இலைகள் மற்றும் 1.5 – 2 கி.கி எடை கொண்ட 3 – 4 மாத வயதுடைய ஈட்டி இலை கன்றினைத் தேர்வு செய்யவும். கிழங்காக இருப்பின் அனைத்தும் ஒரே சீரான அளவில், நோய்த் தாக்கமற்ற ஆரோக்கியமான தாய் மரத்திலிருந்து பெறப்பட வேண்டும்.

  • தற்போது திசு வளர்ப்பு வாழைகள் நோய்த்தாக்குதலற்றும், அதிக மகசூல் தருவதாகவும் இருப்பதால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நல்ல திசு வளர்ப்பு வாழையானது 30 செ.மீ உயரமும், 5-6 நன்கு வளர்ந்த இலைகளுடன் இருக்க வேண்டும். இலைகள் உருமாற்றம் அடையாமலும், வெளிறியக் கோடுகளோ இருத்தல் கூடாது.

கன்று நடும் சமயத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?

  • பக்கக்கன்று /கிழங்குகளை நடுவதாக இருந்தால் அதன் வேர்ப்பகுதியைச் சுற்றிலும் சீவி விடுவதால் நூற்புழுத் தாக்குதலைத் தவிர்க்கலாம். அதோடு அக்கிழங்குப் பகுதியை அடிப்பகுதி 0.5% மோனோகுரோட்டாபாஸ் கரைசலில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். அல்லது வேர்ப்பகுதியின் மீதும் 40 கி கார்போபியூரானை (மண்ணிலும்) நடும் சமயத்தில் இடவேண்டும்.

  • திசு வளர்ப்பு வாழைகளில் குறிப்பாக ரொபஸ்டா, கேவண்டிஷ் இரகங்களுக்கு 10 கி கார்போபியூரான் மற்றும் 0.1% எமிஸான் மருந்தில் நனைப்பது நூற்புழுக்கள், பாக்டீரிய அழுகல் நோய் போன்றவற்றைத் தவிர்க்க உதவும். இம்மருந்துகளை கன்று பாலித்தீன் பையில் இருக்கும்போதே இடவும்.

வாழை சாகுபடிக்கு உகந்த மண் வகை எது?

  • பசளைத் தன்மை கொண்ட குறைந்தது 2 மீ ஆழம் கொண்ட சரியான வடிகால் வசதி கொண்ட மண் வகை ஏற்றது.

  • நிலத்தின் சரிவு 1%க்கும் குறைவாக இருக்க வேண்டும். வயலில் சுண்ணாம்புத் தன்மை கொண்ட கடின கட்டிகள் இருக்கக் கூடாது.

  • சரளைக் கற்கள் 5% மேல் இருத்தல் கூடாது.

எந்த மண் வகை வாழை பயிரிட ஏற்றது?

நல்ல வடிகால் வசதியும், போதிய பாசனமும் கொண்ட மண்ணில் வாழை சாகுபடி செய்யலாம்.

குறைந்த வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

குறைந்த குளிர்கால வெப்பநிலை வாழையின் குலை உற்பத்தியைப் பாதிக்கும். அதோடு "தொண்டை (கழுத்து) அடைப்பு" "நவம்பர் டம்ப்" மற்றும் உறைபனி போன்ற பிரச்சனைகள் தோன்றக் கூடும்

சேற்று நிலங்களில் என்னென்ன இரகங்கள் வளர்க்கலாம்?

சேற்று நிலங்களில் வளர்க்க ஏற்ற இரகங்களாவன பூவன், இரஸ்தாளி, மொந்தன், கற்பாரவள்ளி, நெய்பூவன் போன்றவை பிப்ரவரி – ஏப்ரல் பருவத்திலும், நேந்திரன், ரொபஸ்டா ஆகியவை ஏப்ரல் – மே பருவத்திலும் பயிரிடலாம்.

தோட்ட நிலங்களில் பயிரிட ஏற்ற இரகங்கள் யாவை?

ரொபஸ்டா, நேந்திரன், குட்டை கேவன்டிஸ் போன்றவை ஜனவரி – பிப்ரவரி மற்றும் நவம்பர் – டிசம்பர் பயிரிட ஏற்றவை.

படுகை நிலங்களில் என்னென்ன இரகங்கள் பயிர் செய்யலாம்?

ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் – செப்டம்பர் பருவங்களில் அனைத்து இரகங்களும் பயிரிடலாம்.

மலைப் பகுதிகளில் பயிரிட ஏற்ற இரகங்கள் யாவை?

நமாரன், மனோரஞ்சிதம், சிறுமலை, விருப்பாச்சி ஆகியவை ஏப்ரல் – மே மற்றும் ஜீன் – ஆகஸ்ட் பருவங்களில் பயிரிட ஏற்றவை.

வாழை பயிரிட உகந்த பருவம் எது?

சேற்று நிலங்களில் பிப்ரவரி – ஏப்ரல், பூவன், இரஸ்தாளி, மொந்தன், நெய் பூவன், கற்பூரவள்ளி மற்றும் ஏப்ரல் – மே, நேந்திரன் மற்றும் ரொபஸ்டா.

தோட்டநிலங்கள் : ஜனவரி – பிப்ரவரி மற்றும் நவம்பர் – டிசம்பர்

படுகை நிலங்கள் : ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் – செப்டம்பர்

மலைப்பகுதிகள் : ஏப்ரல் – மே (கீழ் பழனி மலைகள்), ஜீன் – ஆகஸ்ட் (சிறு மலை)

வாழைப் பயிரில் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்கள் யாவை?

மணிக்கு50 கி.மீ-க்கு அதிகமான வேகம் கொண்ட காற்றினால் வாழையின் வளாச்சி மற்றும் மகசூலில் பெருத்த பாதிப்பு ஏற்படும். பூப்பதற்கு முன்னே வெளித்தண்டு பலத்த காற்றின் சேதத்தைத் தடுக்க கத்தரிக்கப்பட்டுவிடும். 18 -30 கி/மணி வேகம் கொண்ட காற்றினால் இலைப்பரப்புகள் கிழிந்துவிடும். 54 – 72 கி/மணி வேகம் கொண்ட காற்றானது வாழைத் தோட்டம் முழுவதையும் அழித்துவிடும்.

வாழை பயிரிடத் தகுந்த வெப்பநிலை எது?

வாழை மிதவெப்ப, ஈரம் விரும்பும் பயிராதலால் 10º முதல் 40º வரையிலான சராசரியாக 23º செல்சியஸ் வெப்பநிலை மிகவும் ஏற்றது. "

வாழைக் குலை சிறியதாக இருக்கக் காரணங்கள் யாவை?

நீட்டிக்கப்பட்ட குளிர்ந்த தட்பவெப்ப நிலையில், கன்று வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அதனால் குலை சிறுக்கலாம். 10º செ.க்கும் குறைவான வெப்பநிலை கழுத்துப்பகுதியில் அடைப்பு, பூத்தல் மற்றும் குலை உருவாக்கத்தைப் பாதிக்கும்.

குலை தள்ளும் பருவத்தில் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் ஏற்படும் பாதிப்புகள் யாவை?

குலை பிடிக்கும் பருவத்தில் குறைந்த வெப்பநிலை நிலவினால் மஞ்சரியானது வெளித்தண்டினைப் பார்த்து கொண்டு தோன்றும். குளிர் அதிகமானால் உருமாறிய காய்கள் (குலைகள்) உருவாகும்.

வாழையில் அதிக வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகள் யாவை?

வாழையில் அதிக வெப்பநிலையால் வளர்ச்சி தடைபடும்.

குறைந்த வெப்பநிலையைத் தாங்கி வளரும் இரகங்கள் யாவை?

பொதுவாக உயரம் அதிகம் கொண்ட இரகங்கள், உறைநிலையையும் தாங்கி வளரக் கூடியவை. மொந்தன், குட்டை கேவண்டிஷ், காஸடியா போன்றவை குறை வெப்பநிலையைத் தாங்கி வளர்பவை.

மேலே செல்க

இரகங்கள்


வாழை சாகுபடிக்கு உகந்த மண் வகை எது?

  • பசளைத் தன்மை கொண்ட குறைந்தது 2 மீ ஆழம் கொண்ட சரியான வடிகால் வசதி கொண்ட மண் வகை ஏற்றது.

  • நிலத்தின் சரிவு 1%க்கும் குறைவாக இருக்க வேண்டும். வயலில் சுண்ணாம்புத் தன்மை கொண்ட கடின கட்டிகள் இருக்கக் கூடாது.

  • சரளைக் கற்கள் 5% மேல் இருத்தல் கூடாது.

மறுதாம்புப் பயிருக்கு ஏற்ற இரக வாழைகள் யாவை?

பூவன்

வறட்சியைத் தாங்கி வளரும் வாழை இரகங்கள் யாவை?

மொந்தன், கற்பூரவள்ளி

பல்லாண்டுப் பயிர் செய்ய உகந்த வாழை இரகங்கள் யாவை?

விருப்பாச்சி, சிறுமலை போன்றவை பல்லாண்டு வளரும் தரமான வாழைகள் ஆகும்.

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட இரகங்கள் யாவை?

கோ1, எனும் கலப்பின வாழை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்துரில் உருவாக்கப்பட்டது. இதன் பயிர்க்காலம் 14 மாதங்கள். சராசரி குலை எடை 10 கி.கி.

சிகாடகா இலைப்புள்ளி நோயினைத் தாங்கி வளரம் இரகங்கள் யாவை?

நெய் பூவன், பச்சை நாடான், கற்பூரவள்ளி, ஃபியா 1 (கோல்டு ஃபிங்கர்), சன்னசெங்கதளி

பனாமா வாடல் நோயைத் தாங்கி வளரும் இரகங்கள் யாவை?

குட்டை கேவன்டிஷ், ரொபஸ்டா, ஃபியா (கோல்டு பிங்கர்), ஆனை கொம்பன், நிவேத்யா கதளி.

வாழை முடிக்கொத்து நோயினைத் தாங்கி வளரும் இரகங்கள் யாவை?

பூவன், பச்சநாடான்

வாழையில் அதிக மகசூல் தரும் இரகங்கள் யாவை?

குட்டை கேவன்டிஷ், ரொபஸ்டா

நாட்டு வாழையின் சிறப்பம்சங்கள் யாவை?

வாழைக் காய்கள் சமையலுக்கும், பழுத்த பழங்கள் நேரடியாக உண்ணவும் பயன்படுகின்றன.

தரமான கலப்பின வாழைகள் யாவை?

எச்1, எச்2, கோ -1, ஃபியா 1 (கோல்டு பிங்கர்), ஃபியா 3

தமிழ்நாட்டில் சாகுபடி செய்வதற்கேற்ற வாழை இரகங்கள் யாவை?

நேந்திரன், மொந்தன், பூவன், மட்டி, நாமரை

மலை வாழையின் சிறப்பம்சங்கள் யாவை?

தமிழ்நாட்டில் பயிரிடும் மலை வாழையின் நறுமணமும், நீண்ட சேமிப்புக் காலமும் தனிச்சிறப்புப் பெற்றது. நல்ல தரம் கொண்ட இது பல்லாண்டு வாழக் கூடியது. இதில் சிறுமலை, விருப்பாச்சி என இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. சிறுமலையின் பழங்கள் விருப்பாச்சியை விடச் சுவை மிக்கவை. மலை வாழைகளை சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் போது அதன் தரம் குறைவாகவே இருக்கும்.

நேந்திரன் இரக வாழையின் பண்புகள் யாவை?

சிப்ஸ் போன்ற பொருட்கள் தயாரிப்பதோடு இதனைத் தனியாகவும் உண்ணலாம். ஒவ்வொரு குலையிலும் குறைந்தது 12 – 25 கி.கி கொண்ட 5 சீப்புகள் இருக்கும். இது ஓணம் பண்டிகையை (ஆகஸ்ட் /செப்டம்பர்) ஒட்டி அறுவடை செய்யப்படும்.

மேலே செல்க

சாகுபடி முறைகள்


திசு வளர்ப்பு முறைக் கன்றுகள் பக்கக் கன்றுகளை விடச் சிறந்தவையா?

ஆம், திசு வளர்ப்பு வாழைகள் நோயற்ற, அதிக மகசூல் தரும் தாய் மரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் நச்சுயிர்களின் தாக்கமின்றி இருக்கும். அதோடு மண் வழியே பரவும் பூச்சி மற்றும் நோய்களான வாடல், எர்வீனியா அழுகல் நோய் மற்றும் நூற்புழுக்களிலிருந்து இக்கன்றுகள் நடும்போது தாக்குதலின்றி ஆரோக்கியமாக இருக்கும்.

திசு வளர்ப்பு வாழைகளில் மறுதாம்பு விடலாமா?

ஆம், திசு வளர்ப்பு வாழைகளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு நல்ல மகசூல் பெறலாம்.

திசு வளர்ப்பு வாழைகளிலிருந்து உருவான பக்கக் கன்றுகள் தாயைப்போல தன்மையுடையவையாக இருக்குமா?

ஆம், அவை தயர்மரங்களைப் போலவே அதிக மகசூல் தருபவை. எனினும் அவை மண் வழித் தாக்கும் நோய்களின்றி இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திலிருந்து 1 ஏக்கர் அல்லது அதற்கும் அதிகமான பரப்பளவிற்கு நடவு செய்ய திசு வளர்ப்பு வாழைகள் கிடைக்குமா?

  • முடியாது, ஏனெனில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் திசு வளர்ப்பு முறை வணிக ரீதியாக செய்யப்படுவதில்லை.

  • அவர்கள் விருப்பமுள்ள விவசாயிகளுக்கு சில மாதிரிகளை இலவசமாகவும், தாய்க்கன்றுகளை நிறுவனங்களுக்குக் குறைந்த விலையிலும் கையிருப்பினைப் பொறுத்து அளித்து வருகின்றனர்.

சிலசமயங்களில் திசுவளர்ப்பு வாழைகள் பூக்காமல் போகக் காரணம் என்ன?

  • இனப்பெருக்க சமயத்தில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனில் திசு வளர்ப்புக் கன்றுகள் திடீர் மாற்றத்திற்கு உள்ளாகி உற்பத்தி செய்ய இயலாத கன்றுகளே உருவாகும்.

  • உயிர்த்தொழில் நுட்பவியல் துறையில் கூற்றின்படி 1% வரை மட்டுமே இவ்வாறு உற்பத்தி பொய்க்கும் கன்றுகள் இருக்கலாம். எனவே நடவுக் கன்றுகளை சரியான நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறவேண்டும்.

ஏதேனும் புதிய நடவு முறை உள்ளனவா?

  • ஆம், இரண்டு வித அடர் நடவு முறைகள் உள்ளன.

  • ஒன்று 1.8x3.6 மீ (4500 கன்றுகள்/எக்டர்) என்ற இடைவெளியில் குழி ஒன்றுக்கு 3 கன்றுகள் நடுவது ரொபஸ்டா, நேந்திரன் இரகங்கள் மற்ற நெட்டை இரகங்களான பூவன், இரஸ்தாளி, நெய் பூவன் போன்றவற்றிற்கு 2x4 மீ (3750 கன்றுகள்/எக்டர்)இடைவெளியிலும் நடலாம்.

  • மற்றோர் முறையான இரட்டை வரிசை முறையில், 1.2x1.2x2 மீ இடைவெளியில் 5200 கன்றுகள் /எக்டர் என்ற அளவில் நடலாம்.

அடர் நடவு முறையின் நன்மைகள் யாவை?

அடர் நடவு முறையில் ஓரலகுப் பரப்பில் 50 - 100% வரை அதிகரிக்க முடியும், நீர் மற்றும் உரப்பயன்பாடு 25 - 30% குறையும். 30 -40% சாகுபடிச் செலவு குறையும் மேலும் பரப்பிற்கு 30-40% மகசூல் அதிகரிக்கும்.

வாழையில் மண் அனைத்தல் என்றால் என்ன?

மழைக்காலங்களில் சரியான வடிகால் வசதி அமைக்கவும், நீர் தேங்காமல் இருக்கவும் மண் அணைத்தல் செய்யப்படுகிறது. கோடை மற்றும் குளிர் காலங்களில் வாழை பாத்தியிலும், மழைக்காலங்களில் பாரின் மீதும் அமைந்திருக்குமாறு மண் அணைப்பு செய்ய வேண்டும்.

இடைவெளிகளை நிரப்புதல் என்றால் என்ன? அதை எப்போது செய்ய வேண்டும்?

  • நடவு செய்த 10-15 நாட்களில் கன்றுகள் வேர் விடத் துவங்கும் 15 நாட்களுக்குப் பிறகும் கன்றிலிருந்து வேர் உருவாகவில்லையெனில் அது மடிந்திருக்கலாம்.

  • அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் சில சமயங்களில் கன்று முளைக்காமல் போகலாம். சரியாக நடப்படாததாலோ, கன்றுப் பிரச்சனையாகவோ அல்லது சரியாக நீர்ப்பாசனம் இல்லாததாலோ அவ்வாறு நடக்கலாம். எனவே நடவு செய்த 15 நாட்கள் கழித்து ஒரு முறை தோட்டத்தை நன்கு கவனித்தல் அவசியம்.

  • இவ்வாறு கன்றுகள் இல்லாத இடங்களில் புதிய ஈட்டி இலைக்கன்றுகளைக் கொண்டு நிரப்பவும், வயலில் சரியான எண்ணிக்கையில் கன்றுகள் இருந்தால் மட்டுமே நல்ல மகசூல் பெற இயலும்.

  • எனவே 20 நாட்களுக்குள் கன்றுகள் இல்லாத இடங்களை நிரப்புவதால், வயலில் சீரான வளர்ச்சி இருக்கும்.

திசு வளர்ப்பு வாழை முறையில் உள்ள வளர்ச்சிநிலைகள் யாவை?

  • தொடக்க நிலை.
  • பெருக்க நிலை.
  • முளைவிடும் மற்றும் வேர்விடும் நிலை.
  • கடினப்படுத்தும் நிலை.

திசு வளர்ப்பு வாழையின் துவக்க நிலையில் என்ன நிகழும்?

  • மேற்பகுதி கிருமி நீக்கம் செய்யப்பட்ட வாழையிலிருந்து திசுப்பகுதி எடுக்கப்பட்டு வளர் தளத்தில் இடப்படுகிறது.

  • இவ்வளர்தளத்தில் திண்ம அகாருடன் பெரும மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களுடன், தாதுக்கள், அமினோ அமிலங்கள், வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் போன்றவை அடங்கி இருக்கும்.

திசு வளர்ப்பு முறையில் பெருக்க நிலையில் என்ன நிகழும்?

  • திசு வளர ஆரம்பிதத முதல் நிலையில் தளிர் உருவாகும்போது அது வளர் ஊக்கிகள் கொண்ட மற்றொரு (செல் பிரிதலை அதிகரிக்க) ஊடகத்திற்கு மாற்றப்படுகிறது.

  • தளிர் வளர்ந்து 3 -4 இலைகளுடன் வெளிவரும். இவை நன்கு வளர்ந்த பின் வேர் மற்றும் தண்டு வளர்ச்சிக்காக மற்றொரு ஊடகத்திற்கு மாற்றப்படும்.

வாழை திசு வளர்ப்பு முறையில் வேர் மற்றும் தண்டு வளர்ச்சியில் என்ன நிகழும்?

வளர்ச்சியடைந்த தளிர்களை ஒவ்வொரு கற்றாக வேர் மற்றும் குருத்து வளாச்சிக்கான வளர் தளத்தில் வைக்கப்படுகிறது. இந்நிலையில் சில சமயம் ஹார்மோன்களின் தேவை இன்றி இருக்கலாம்.

வாழை திசு வளர்ப்பு முறையில் கடினப்படுத்துதலில் என்ன நிகழும்?

  • இந்நிலையில் பசுமைக் குடிலில் புட்டிகளில் வளர்க்கப்பட்ட கன்றுகள் இயற்கைச் சூழ்நிலையை ஏற்கப் பழக்கப்படுத்தப்படுகின்றன.

  • புட்டிகளில் உள்ள கன்றினை வெளியே எடுத்து அதன் வேரில் ஒட்டியுள்ள வளர் ஊடகப் பொருட்களைப் பிரிக்க நன்கு கழுவப்படுகின்றது.

  • பின்பு அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்து குழித்தட்டுகளில் குழிக்கு ஒன்றாக நடப்படுகின்றது. இக்குழிகளில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட மண் நிரப்பப்பட்டிருக்கும். (தென்னை நார் மட்கு).

  • இக்குழித்தட்டுகள் இரு வாரங்களுக்கு அதிக ஈரப்பதத்தில் வைக்கப்பட்டிருக்கும். பின் இவற்றை திறந்த பசுமைக் குடிலில் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கொண்ட பகுதிக்கு மாற்றப்படுகிறது

  • இவ்வாறு 6 வார காலத்திற்குக் கன்றுகள் கடினப்படுத்தப்படுகின்றன. ஆரோக்கியமான கன்றுகளாக வளர்க்க உரிய நேரங்களில் பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன.

வாழையில் ஊடுபயிர் சாகுபடி செய்வது என்பது என்ன?

  • வாழை போன்ற ஓராண்டுப் பயிரில் ஊடுபயிர் சாகுபடி செய்வது சிறந்தது. ஒரு பயிரை மட்டுமே நம்பி வாழும் ஆபத்தினைத் தவிர்க்க அதனுடன் பிற பயிர்களை ஊடுபயிராக இடலாம். இதனால் ஒரு வருமானம் கிடைப்பதுடன் நல்ல ஊட்டச்சத்து உணவுக்கும் வழிவகுக்கிறது.

  • வாழை பெரும்பாலும் 1 எக்டருக்கும் குறைவான நிலம் கொண்ட குறு மற்றும் சிறு நில விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. அவர்கள் இந்த ஒரு பயிரை மட்டுமே நம்பி இருப்பது இயலாதது.

  • எனவே வாழையின் ஆரம்பகால வளர்ச்சி நிலையில் ஊடுபயிரிடுவது எளிது. முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், மிளகாய், கத்திரி, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வெண்டை, பேஸலா, டயுஸ்கோரியா, கீரை, பூசணி வகைகள், செண்டு மல்லி, பியூம்ரோஸ் (மரமல்லி) போன்றவை ஊடுபயிராக வாழையுடன் வளர்க்கப்படுகின்றன.

  • தென்னிந்தியாவில், பாக்கு, தென்னை மரங்களுடன் வாழை பல பயிர் சாகுபடி முறையும் பின்பற்றப்படுகின்றது. பழ வகைகளுக்கு வளரும் இளம் பருவத்தில் வாழை நிழல் தரு மரமாகப் பயரிடப்படும்.

  • குச்சி கிழங்கு/வாழை பயிரிடும் முறை முக்கியமான ஒன்றாகும். தனியே வாழை பயிரிடுவதை விட வெண்டையுடன் சேர்த்துப் பயிரிடுவது மிக அதிக இலாபத்தையும், வெண்டையைத் தொடர்ந்து, கொத்தவரை, அவரை போன்றவை நல்ல இலாபம் தரும் ஊடுபயிர்களாகும்.

வாழை பழுத்தல் என்றால் என்ன?

  • பொதுவாக வாழை மரத்தில் குலை பழுக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளும். அதோடு தோல் வெடித்து, சீரான நிறம் மற்றும் அதன் மணம் கிடைக்காமல் போகலாம். இதனால் குலையின் விற்பனை பாதிப்பதால் வாழை மரத்தினில் தானாகப் பழுக்க விடப்படுவதில்லை. ஆகவேதான் வாழைக் காய்கள் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுகின்றது.

  • வெப்பமண்டலப் பகுதிகளில், உள்ளூர் விற்பனைக்கான குலைகள் அறுவடை செய்யப்பட்டு நிழலில் தொங்கவிடப்படுகின்றன. • சிலர் 300º செல்சியஸ்க்கும் கீழே வாழைக் குலையைப் பழுக்க வைக்க நான்கு முக்கிய (என்ஸைம்) நொதிகள் வினையூக்கியாகச் செயல்படுவதாகக் கருதுகின்றனர்.

  • வாழையில் அதிகம் நிறைந்துள்ள சத்தான கார்போஹைட்ரேட் என்பது ஸ்டார்ச் (மாவுப்பொருளே) ஆகும். இது பழுக்கும் போது சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆக மாறுகிறது.

  • புகையூட்டுவதன் மூலம் குலைகளை 3 நாட்களில் பழுக்க வைக்கலாம். குலைகளை சணல் பையில் மூட்டையாகக் கட்டி வைப்பதன் மூலமும் பழுக்க வைக்கப்படுகிறது.

  • எத்திரைல், எத்திலீன் மற்றும் அதிக வெப்பநிலையினால் புழுங்குதல் போன்றவைகளாலும் காய்கள் பழுத்துவிடும்.ஆயிரத்தில் 1 பங்கு அடர்வில் எத்திலீன் பயன்படுத்தும்போது வாழை பழுக்கத் தொடங்கிவிடும்.

  • வியாபார நோக்கத்தில் பல இரசாயன மருந்துகள் பழுக்கவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 2,4 – டி, 2,4,5 – டி, 5 – டி, ஐ.ஏ.ஏ மற்றம் டி.பி.இஷட் போன்றவைகளும் உபயோகிக்கப்படுகின்றன. • 2,4 –டி என்பதே மலிவான சிறந்த மருந்தாகும் 1000 பி.பி.எம் 2,4, டியில் 30 வினாடிகள் வைத்திருப்பதே போதும்.

வாழையில் துத்தநாகச் சத்து கிடைக்க என்ன நுண்ணூட்டம் இடலாம்?

  • பொதுவாக துத்தநாகச் சத்து அற்ற மண்ணில் பயிரிடும் போதுதான் இப்பற்றாக்குறை ஏற்படும். குறுகிய, மஞ்சள் நிற, இலைகளுடன் கூடிய, மற்றும் உச்சிக் கொத்து தாக்குதல் கொண்ட மரங்களில் துத்தநாகப் பற்றாக்குறை இருக்கலாம்.

  • கன்று நடவின் போது 50 கி/கன்று துத்தநாக சல்பேட் இடலாம். அல்லது 3 கி/1 லி நீரில்+யூரியா (5கி/லி)+10 மி.லி அயனிகளற்ற ஒட்டுத் திரவக்கலவையை 20 லி நீரில் கலந்து தெளிக்கலாம். இதனை கன்ற நட்ட 45 மற்றும் 60 நாட்களுக்குப் பிறகு தெளிக்கலாம்.

  • மறுதாம்புப் பயிராக இருப்பின் தாய்மரம் வெட்டிய 45 நாட்களுக்குப் பிறகு தெளிக்கவும்.

போரான் சத்துப் பற்றாக்குறையை எவ்வாறு போக்கலாம்?

  • போரான் சத்துப் பற்றாக்குறையால் குலை எடை இழப்பு, காய் அளவு குறைதல், காய்கள் சரியாக நிரப்பப் படாமல் இருத்தல் போன்ற குறைபாடுகள் தோன்றும்.

  • இதற்கு நடவின்போது கன்று ஒன்றிற்கு 20 கி/லி அளவில் இடவும் அல்லது நட்ட 4 வது, 5வது மாதத்தில் 10.2% போரிக் அமிலம் தெளிக்கவும்.

இரும்புச் சத்துக் குறைபாட்டினை வாழையில் எவ்வாறு போக்கலாம்?

  • இரும்புச் சத்துக் குறைபாடு காரத்தன்மையுடைய மண்ணில் அதிகம் காணப்படுகிறது. இலையின் நரம்பிடைப்பகுதி மஞ்சள் நிறமாதல் இதன் அறிகுறியாகும்.

  • பெர்ரஸ் சல்பேட் 2 கி/லி அளவில் இடலாம்.

மெக்னீசியம் சத்துப் பற்றாக்குறையினை எவ்வாறு சரிசெய்வது?

நடு நரம்பை அடுத்தும், விளிம்புகளிலும் மற்றும் பச்சை நிற வரிகள் தென்படுவது இதன் அறிகுறியாகும்.மெக்னீசியம் சல்பேட் 2 கி/லி நீரில் கலந்து தெளிப்பது சிறந்தது.

வாழையில் என்னென்ன கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன?

  • வாழைக்கன்று வரிசைகளுக்கிடையே 3-4 முறை இடை உழவு செய்தல் அவசியம் .

  • போதுமான அளவு மழைப் பொழிவு /பாசன வசதியுள்ள இடங்களில் 2.4 டி சோடியம் உப்பினை எக்டருக்கு 0.75 கி.கி செயல்படு பொருள்(a.i) எனும் முளைத்த களைகளைக் கட்டுப்படுத்தும் மருந்தினை நடவு செய்த 20-25 நாட்கள் கழித்துத் தெளிக்கலாம்.

  • களை முளைக்கும் முன் கட்டுப்படுத்தும் ஐசோபுரொட்ரான் மருந்தினை 0.5 a.i எக்டருக்கு இடுவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

  • இடை உழவு செய்ய முடியாத நிலையில் அகண்ட இலைக் களைகளை இரு கைக்களை எடுப்பதன் மூலமும் அகற்றலாம்.

வாழையுடன் பயிர் சுழற்சி செய்யக் கூடிய பயிர்கள் யாவை?

  • பச்சைப் பயிறு, உளுந்து, சோயா மொச்சை, கொள்ளு, அவரை, நிலக்கடலை போன்ற பயிறு வகைகளை சுழற்சி முறையில் பயிரிடுவதால் இரசாயன உரங்களின் அளவைக் குறைப்பதோடு தென் மாவட்டங்களில் மகசூல் அதிகரிக்கிறது.

  • வாழை – மக்காச் சோளம் (2 ஆண்டு பயிர் சுழற்சி) செய்வது வாழை-வாழை பயிர் முறையை விட அதிக மகசூல் தரும்.

வாழையுடன் ஊடுபயிர் செய்யக்கூடிய பயிர்கள் யாவை?

  • அவரை, துவரை, தட்டைப்பயிறு, பேய் எள்ளு, ஆமணக்கு, நிலக்கடலை மற்றும் பயறு வகைகள், நிலக்கடலையுடன், வாழை பயிரிடும்போது, வாழை ஊடுபயிராக பயிரிடப்படும். மலைப்பகுதிகளில் வாழை சோயா மொச்சையுடன் சேர்த்து சாகுபடி செய்யப்படும்.

  • சில சமயங்களில் வாழையுடன் கடுகு சாகுபடி செய்யப்படும். இம்முறையில் வாழையின் வளாச்சிப் பருவத்தில் கடுகுப் பயிர் பூ பூத்து விடுவதால், பொறிவண்டுகள் அதனால் கவரப்பட்டு வாழைத்தோட்டத்தை அடையும். இவை வாழையைத் தாக்கும் அசுவினி போன்ற பூச்சிகளை உண்டுவிடும். ஒரு வேளை வானம் பொய்த்து விட்டால் கடுகு ஓரளவு வருமானமும் அளிக்கும்.

மேலே செல்க

பாசன மேலாண்மை


உரப்பாசனம் என்றால் என்ன?

தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை தேவைக்கேற்ற அளவில் சிறிது சிறிதாக தினசரி அல்லது வாராவாரம் சொட்டு நீர்ப் பாசனம் வழியே பயிருக்கு அளிப்பதே உரப்பாசனம் ஆகும். சொட்டுநீர்/உரப்பாசனத்துடன் கூடிய அடர் நடவு முறை சாகுபடிச் செலவினைக் குறைப்பதுடன் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கிறது.

உரப்பாசனம் எத்தனை நாளுக்கொருமுறை செய்யலாம்?

ஒரு வாழைக்கு 16 -20 லி நீர் தேவை.பயிருக்குத் தேவையான நீரில் கரையும் உரங்களை தினசரி சிறிதளவோ, அல்லது வாரம் ஒரு முறை என சொட்டு நீரின் வழியே அளிப்பதால் பயிரின் உர பயன்பாட்டுத்திறன் அதிகரிக்கும். உரங்களை சிறிது சிறிதாகப் பிரித்து பயிரின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப நுண்ணூட்டச் சத்துக்களைக் கலந்து அளிப்பது உரப்பாசனத்தில் சாத்தியமாகும்.

பாசன அட்டவணை என்பது என்ன?

  • கன்றினை நடவு செய்த உடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவும், பின்பு வாரம் ஒரு முறை என 35- 40 முறை தண்ணீர் பயாச்ச வேண்டும்.

  • வாழை வளர்க்க சுமார் 1500 – 2000 மி.மீ மழைப்பொழிவு இருக்க வேண்டும் கோடைக் காலங்களில் ஒவ்வொரு 5-10 நாட்களுக்கொரு முறை மண் வகையைப் பொருத்து நீர்ப் பாய்ச்சவும்.

  • சொட்டு நீர்ப்பாசன முறையில் குலை விரைவில் உருவாவதுடன், 40-45% நீர் சேமிக்கப்படுகிறது. சொட்டு நீர் அமைப்பு தினசரி 2 -3½ மணி நேரம் செயல்பட வேண்டும்.

  • சரியாக நீர்ப்பாய்ச்சாமல், தாமதமானால் குலை உருவாதல் தாமதமாவதுடன் காய்கள் முதிர்ச்சியடைவதும், அதன் தரமும் பாதிக்கப்படும்.

சொட்டுநீர்ப் பாசன முறையின் நன்மைகள் யாவை?

  • சொட்டு நீர்ப்பாசன முறையில் நீர் பயன்படுதிறன் அதிகரிக்கிறது. (அதாவது, 95% அளவு நீர் வீணாகாமல் பயன்படுத்தப்படுகிறது.)

  • நீர் பாய்ச்சும் பகுதியை தேவைக்கேற்ப சரிசெய்து கொள்ளலாம் பல வகையான சொட்டுவான்களை அதனுடைய வகை, நீர் வெளியேற்றும் திறன், அமைந்துள்ள இடத்தை பொறுத்து தேர்வு செய்யலாம் களை வளருவது முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.சாகுபடியின் போது குறைந்த இடர்பாடே ஏற்படும். ப

  • பகலிலும், இரவிலும் பாசனம் செய்யலாம் இலைகள் தொடந்து ஈரமாக இருப்பதை தடுக்கலாம் 30-70 சதவீத அளவு நீர் சேமிக்கப்படுகிறது.

  • 50 சதவீதம் வரை மின் சக்தி மற்றும் வேலையாட்களுக்கு ஆகும் செலவும் குறைகிறது.

  • 1200- 1500 கிலோ வாட்/எக்டர் மின்சக்தி. 95 சதவீத அளவு உரங்களின் பயன்பாட்டுத் திறனும் மேம்படுகிறது. பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலும் 30-50% வரை அதிகமாகிறது. வேறுபட்ட நில அமைப்பு கொண்ட நிலைகளிலும் பாசனம் செய்யலாம்.

சொட்டு நீர் பாசனம் முறை என்றால் என்ன?

சொட்டு நீர்ப்பாசன முறையானது பயிருக்குத் தேவையான நீரை குறைவான வீதத்தில் நீண்ட நேரம், மண்ணின் தன்மைக்கேற்ப பிளாஸ்டிக் சொட்டுவான்கள் மூலம் நேரடியாகப் பயிரின் வேர்ப்பகுதிக்கு நாள்தோறும் செலுத்தும் முறையாகும். இம்முறையில் கிணற்றிலிருந்து பயிருக்கு, குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதால் நீர்ச்சேதம் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில் பாசன நீர் கிடைப்பதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கிறது.

சொட்டு நீர் பாசனம் முறை ஏன் பயன்படுத்தப்படுகிறது?

பயிர் வளர்ச்சியின் முக்கியமான நிலைகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையின்றி வளரவும். நிலையான மகசூல் கிடைக்கவும். பழத்தின் தரத்தை ஒரே மாதிரியாக வைத்திருக்கவும். உர மேலாண்மையை எளிதாக்கவும். குளிர் கால சேதத்தை தடுக்கவும். நுண்ணீர் பாசனத்தால் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும்.

சொட்டுநீர்ப் பாசன முறையில் பயன்படுத்தும் முறைகள் யாவை?

இருவகை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒற்றை வரிசை முறை இரட்டை வரிசை முறை

ஒற்றை வரிசை முறை என்றால் என்ன?

பயிர்களுக்கிடையே இடைவெளி 1.5x1.5மீ ஒவ்வொரு மரத்திற்கும் /பக்கக் குழாய் மற்றும் ஒரு சொட்டுவான் (சொட்டி) அமைக்கப்பட்டிருப்பதே ஒரு வரிசை முறையாகும்.

இரட்டை வரிசை முறை என்றால் என்ன?

இரு வாழைகளுக்கிடையே இடைவெளி 1.5 மீட்டர் மற்றும் இரு இரட்டை வரிசைகளுக்கிடையே 1.8 மீட்டர் ஒவ்வொன்றும், இரு வாழைகளுக்கு ஒரு பக்கக் குழாய் மற்றும் ஒரு சொட்டுவான் அமைக்கப்பட்டிருக்கும். இரு வரிசைகளுக்கிடையே இடைவெளி 2.1x2.4மீ இருக்கலாம்.

வாழைக்கு சுமார் எவ்வளவு நீர் தேவைப்படும்?

சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் நீரின் அளவு 1841மி.மீ முதல் 2150 மி.மீ வரை வேறுபடும். ஒரு நாளைக்கு 4.81 முதல் 6.11 மி.மீ வரை தேவைப்படும்.

வாழைக்கு அளிக்க வேண்டிய பாசன அட்டவணையைத் தரவும்?

கன்று நட்ட உடன் ஒரு முறை பாசனம் செய்யவும். 4 நாட்கள் கழித்து ஒரு உயிர்ப்பாசனம் செய்யவும். பின்பு தோட்ட நிலங்களில் வாரத்திற்கொரு முறையும், சேற்று நிலங்களில் 10-15 நாட்களுக்கொரு முறையும் நீர்பாய்ச்சவும். ஒவ்வொரு முறை உரமிட்ட பின்பும் முறையாக தண்ணீர் பாய்ச்சவும். நட்டதிலிருந்து 4 வது மாதம் வரை, சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை ஒன்றுக்கு 15 லிட்டர் நீர் தினசரியும், 5 வது மாதம் முதல் குலை தள்ளும் வரை வாழை ஒன்றுக்கு 25 லிட்டர் நீரும், குலை தள்ளிய பின் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பு வரையும் நீர்ப்பாய்ச்சவும்.

வாழையில் நீர்ப்யன்பாட்டுத் திறனை எவ்வாறு அதிகரிப்பது?

சாதாரண பாத்திப் பாசனத்தைக் காட்டிலும் சொட்டு நீர்ப் பாசன முறையில் 50% வரை நீர் சேமிக்கப்படுகிறது. இம்முறையில் மகசூலும் அதிகரிக்கிறது. மூடாக்கு போடுவதன் மூலமும் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் செய்யலாம்.

மானாவாரி வாழை சாகுபடி முறையில் தேவையான நீரின் அளவு என்ன?

மானாவாரி வாழை சாகுபடி முறையில் சராசரியாக 2000 – 2500 மி.மீ பரவலான மழைப்பொழிவு அவசியம். எனினும் வாழை மானாவாரியில் அதிகம் சாகுபடி செய்யப்படுவதில்லை.

வாழைத் தோட்டத்தில் ஈரப்பதத்தை பாதுகாப்பது எவ்வாறு?

எக்டருக்கு 5- 6 டன்கள் கரும்பு சோகையைப் பரப்பி மூடாக்கு போடலாம் அல்லது பாலித்தீன் விரிப்பைப் பயன்படுத்துவதும் சிறந்த முறையாகும்.

வாழை சாகுபடிக்கு ஏற்ற பாசன முறை எது?

சொட்டு நீர் பாசன முறை தான் மற்ற முறைகளை காட்டிலும் சிறந்த முறையாகும். சொட்டு நீர் பாசனம் மூலம் 50 சதவீத அளவு நீர் பயன்பாட்டு திறன் அதிகரிக்கிறது.

வாழையில் தவறாமல் பாசனம் அளிக்க வேண்டிய முக்கிய வளர்ச்சி நிலைகள் யாவை?

உடல் வளர்ச்சி நிலை பூப்பருவம்/குலை தள்ளும் பருவம, ஆகியவையாகும். வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க காலங்களில் ஈரப்பதம் மிக அவசியம்.

சரியாக நீர்ப்பாய்ச்சாவிடில் அது எவ்வாறு மகசூலை பாதிக்கும்?

சரியாக நீர்ப்பாய்ச்சாவிடில் வாழையில் பூப்பருவம், குலை உருவாதல் தாமதமாதல், காய்கள் சரியாக முதிர்ச்சியடையாமல் சிறுத்தல், சேமிப்புக் காலம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மேலே செல்க

ஊட்டச்சத்து மேலாண்மை


திசு வளர்ப்பு வாழைகளுக்கு ஏதேனும் தனி ஊட்டச்சத்து உரங்கள் உள்ளனவா?

  • திசு வளர்ப்பு வாழைகள் அதிக வேர்விடும் தன்மை மற்றும் வேகமாக வளரும் தன்மை பெற்றிருப்பதால், அவற்றிற்கு 50% அதிக உரங்கள் தேவைபடுகின்றன.

  • சாதாரண முறையில் 3 பாகங்களாகப் பிரித்து வழங்குவது போலன்றி திசு வளர்ப்பு முறையில் 3-7 முறையில் 3 பாகங்களாகப் பிரித்து 30 – 45 நாட்கள் இடைவெளியில் அளிக்கலாம்.

வாழைக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவு என்ன?

  • வாழைக்கு 200 கி தழைச் சத்தும், 30-50 கி மணிச்சத்தும் (P), 300-450 கி சாம்பல் சத்தும் 3 -5 பாகங்களாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

வாழைக்கு ஏற்ற உரங்கள் யாவை?

யூரியா, அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட், டைஅம்மோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் குளோரைடு (மியூரேட் ஆப் பொட்டாஷ்) மற்றும் பொட்டாசியம் சல்பேட்( சல்பேட் ஆப் பொட்டாஷ்)

வாழைக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு யாது?

பெரும்பாலும் வாழையில் துத்தநாகம் மற்றும் போரான் சத்துக் குறைபாடுகளே தோன்றும். இதனைச் சரிசெய்ய வாழை ஒன்றிற்கு, 25 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 5 கிராம் என்ற அளவில் போராக்ஸினை மண்ணில் இடலாம் அல்லது கன்று நட்ட 3 -5 மாதங்களுக்குப் பின் 0.5% துத்தநாக சல்பேட் மற்றும் 0.05% போரான் தெளிக்கலாம்.

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழைக்கு ஏதேனும் நுண்ணூட்ட கலவை கிடைக்குமா?

ஆம், "வாழை சக்தி" எனும் நுண்ணூட்டச் சத்துக் கலவை ரூ.100/கி.கி என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வாழை (பனானா) சக்தி யில் அடங்கியுள்ள சத்துக்கள் யாவை?

வாழை சக்தியில் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு மற்றும் போரான் போன்றவை சரியான விகிதத்தில் கலக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

வாழை சக்தியை வாழை ஒன்றுக்கு எவ்வளவு இடவேண்டும்?

வாழை சக்தியை வாழை ஒன்றுக்கு 10 கி என்ற வீதம் இடவும். இது மறைமுகமாக பேரூட்டச் சத்தினை பயன்படுத்தும் திறனையும் அதிகரிக்கிறது.

வாழை சக்தி – மகசூலை அதிகரிக்குமா?

ஆம், இது மகசூலை அதிகரிப்பதால் எக்டருக்கு ரூ.10000 முதல் 15000 வரை இலாபம் கிடைக்கிறது.

வாழை சக்தியை தெளிப்பு முறையில் இடலாமா?

ஆம், வாழைசக்தியானது தெளிப்பு முறை மற்றும் மண்ணில்இடும் முறை இரண்டிற்கும் ஏற்றது. அமில காரத்தன்மை அதிகம் கொண்ட மண்ணில் இம்மருந்தினை 2% கலவையைத் தெளிப்பதால் நுண்ணூட்டச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துவதைத் தடுக்கிறது.

வாழை பயிரிடக்கூடிய மண் வகைகளில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு தோன்றுமா?

ஆம், நுண்ணூட்டச்சத்துக் ( நுண்ணூட்டச் சத்து) குறைபாடு பெரும்பாலும் மணல் வகைகளில், நுண்ணூட்டசத்து எளிதில் இழக்கப்படும் மண்ணில் காணப்படும். அமில காரத் தன்மை அதிகம் கொண்ட களிமண் வகைகளில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அவை பயிருக்கு அளிக்கப்படுவதில்லை. இவ்வகை மண்ணில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அதிகம் காணப்படும்.

வாழையில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டினை எவ்வாறு சரிசெய்வது?

பொதுவாக அமில காரத் தன்மை 8.5 க்கும் குறைவாக உள்ள மண்ணில் நுண்ணூட்டச் சத்து கலவையை மண்ணிலேயே இடலாம். அமில காரத் தன்மை 8.5க்கும் அதிகமாக உள்ள மண்ணில் தெளிப்பு முறையில் நுண்ணூட்டச் சத்து கலவையை வழங்கவும். மண்ணிலிடும் முறையில் வாழை ஒன்றுக்கு 10 கிராம் 'வாழை சக்தி' மருந்தினை நட்ட நான்கு மாதங்களுக்குப் பின் அளிக்கலாம்.தெளிப்பு முறையில் 2% வாழை சக்தியுடன், ஒட்டுந்திரவத்தைக் கலந்து கன்று நட்ட 4-5 மற்றும் 6வது மாதங்களில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும்.

வாழையை காரத்தன்மை / உவர் தன்மை கொண்ட நிலங்களில் எவ்வாறு பயிரிடலாம்?

வாழையை காரத்தன்மை / உவர் தன்மை கொண்ட நிலங்களில் அதிகளவு (15-20 கி.கி (கன்று ஒன்றுக்கு என்றளவில்) அங்கக உரங்களை இடவும். பொதுவாக வாழையின் வேர்கள் மண்ணிலிருந்து காரத்தன்மை ஊடுருவதைத் தடுக்கும் தன்மை பெற்றுள்ளன. இதற்கு வாழைக்கு சரியான அளவு பொட்டாசியம் கிடைப்பது அவசியம். எனவே 20-30% மற்ற மண்வகைகளில் இடுவதைவிட உவர் மண்ணில் அதிக பொட்டாஷ் உரமிடுவது சிறந்தது.

வாழை சாகுபடியில் உவர்/காரத்தன்மையை எவ்வாறு சரிசெய்வது?

வாழை பயிரிடும் முன் 5-7 டன் ஜிப்சத்தினை (கால்சியம் சல்பேட்) / எக்டர் என்றளவில் இட்டு, உழவு செய்யவும். வயலில் நீர் பாய்ச்சி ஒரு வாரத்திற்கு தேங்கவிட்டுப் பின் வடிப்பதால் வடிகால் வசதி மேம்படுத்தப்படும். கன்று நட்ட 60 வது நாட்களில் 2 கி.கி ஜிப்சம் / வாழை இட்டு, பின் பிற உரங்கள் இடுமுன் நீர்ப்பாய்ச்சி வடித்துவிட வேண்டும். வாழை பயிரிடும் மண்ணில் எப்போதும் 2 1/2 : 1 கி.கி பொட்டாசியம் சோடியம் முறையே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உவர் மண்ணில் வாழை பயிரிடும் போது இலையின் விளிம்புகள் கருகியது போல் இருக்கக் காரணம் என்ன?

மண்ணில் மிக அதிக காரத்தன்மை இருப்பதாலும், இலைகளில் சோடியம் அயனிகள் இலையின் ஓரங்களில் சென்று சேருவதாலும் இலை விளிம்புகள் மஞ்சள் நிறமடைந்து பின் காய்கின்றன. இதைச் சரிசெய்ய கன்று ஒன்றுக்கு 2 கி.கி ஜிப்சம் இட்டு சரியாக நீர்ப்பாய்ச்சவும் 20% பொட்டாசியம் அதிகமாக இடவும். 2% பொட்டாசியம் சல்பேட்டுடன் ஒட்டுந்திரவம் கலந்து தெளிக்கவும்.

அமிலத்தன்மையுள்ள மண்ணை வாழைச் சாகுபடிக்கேற்ப சரிசெய்வது எவ்வாறு?

அமிலத்தன்மையுள்ள மண்ணில் வாழைச் சாகுபடி செய்யும் போது கன்று ஒன்றிற்கு 100 கிராம் கால்சியம் கார்பனேட் அல்லது 100 கிராம் டோலமைட் இடலாம். மேலும் அமோனியம் குளோரைடு, அமோனியம் சல்பேட் போன்ற அமிலத்தன்மையுள்ள உரங்கள் இடுவதைத் தடுக்கவும். ஒற்றை சூப்பர் பாஸ்பேட் / ராக் பாஸ்பேட் போன்ற பாஸ்பேட் உரங்களைத் தேர்ந்தெடுக்கவும். சிலிகான் மிகுந்த, எளிதில் கிடைக்கக்கூடிய நிலக்கரிச் சாம்பல், உமிச் சாம்பல், மட்கிய கரும்புச் சோகை அல்லது வைக்கோல் போன்றவற்றை கன்றிற்கு 10 கிலோ வீதம் இடுவதன் மூலம் வாழையின் வளர்ச்சிக்கு அவசியமான பாஸ்பேட் சத்துக்கள் கிடைக்கும்.

அமிலத் தன்மையை சரிசெய்ய ஏதேனும் உயிர் உரங்கள் உள்ளதா?

ஆம், பயிரொன்றிற்கு 25 கிராம் வேம் வெஸிகுலார் அர்பஸ்குலார் மைக்கோரைசா மற்றும் 25 கிராம் பாஸ்போ பாக்டீரியா இடுவதன் மூலம் அமில மண்ணில் உள்ள பாஸ்பரஸினை (கரைக்க இயலாத) பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது. பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட் போன்ற உரங்களை சிறிது சிறிதாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். அவ்வப்போது மண் பரிசோதனை மூலம் கால்சியம் மெக்னீசியம், பொட்டாசியம் சத்துக்கள் முறையே 10:5:1 என்ற விகிதத்தில் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வாழையை இயற்கை முறையில் சாகுபடி செய்ய இயலுமா?

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழையை அங்கக உரங்கள், உயிர் பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகள் மூலம் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட வாழைகளுக்கு அதிக ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் அதிகம். நல்ல அங்கக சத்து நிறைந்த மண்ணில் இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யலாம்.

வாழை சாகுபடியில் மண்புழு இடம் இடுவது நல்ல பலன் தருமா?

வாழை சாகுபடியில் மண்புழு இடம் இடுவது மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றது. விவசாயிகள் தம் சொந்த மண்ணைக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது இலாபம் தருவதாக இருக்கும்.

வாழைக்கு ஏற்ற அங்கக உரங்கள் யாவை?

தொழு உரம், மண்புழு உரம், கோழிக்குப்பை, பன்றிக் கழிவுகள், புண்ணாக்குகள், தென்னை நார்க் கழிவு, ஆட்டுக் குப்பை, எலும்புத் துகள், இரத்தத்துகள், கொம்பு மற்றும் குதிரைக் குளம்புகள் போன்றவை வாழைக்கு இடக் கூடிய அங்கக உரங்களாகும்.

மானாவாரிப் பயிருக்கேற்ற உயிர் உரப் பரிந்துரை அளவு என்ன?

கன்றின் கிழங்குப் பகுதியை அஸோஸ்பைரில்லம் பிராஸிலென்ஸி (நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியா) மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் அவாமோரி (பாஸ்பரஸை கரைக்கும் பூஞ்சை) உயிர் உரங்களை 25 கி / விதை இடுவது சிறந்தது.

மானாவாரி வாழை விதையில் இரசாயனம் மற்றும் உயிர் உர நேர்த்தி செய்வது எவ்வாறு?

எப்போதும் விதை நேர்த்தி செய்யும் போது, முதலில் ரசாயன நேர்த்தி செய்து பின் விதைக்கும் முன் உயிர் உரத்தினை கலந்து விதைக்கவும்

மானாவாரி வாழைக்கான உயிர் உரங்களை இடுவதற்கான செய்முறைகள என்னென்ன?

  • படி 1: உயிர் உரக் கலவை 25 கி./ கி.கி விதை என்ற அளவில் எடுத்துக் கொள்ளவும்.

  • படி 2: விதையுடன் உரம் நன்கு கலக்க ஒட்டுந் திரவம் மிக அவசியம். இதற்கு 25 கி வெல்லத்தினை / சர்க்கரையை 250 மி.லி. நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து தயாரிக்கலாம். பின்பு இதனை ஆற வைத்துப் பயன்படுத்தலாம்.

  • படி 3: விதையினை ஒட்டுந் திரவத்துடன் நன்கு கலக்கவும். பின் உரக் கலவையை அதனுடன் கலந்து விதையைச் சுற்றிலும் ஒட்டுமாறு நன்கு கலக்கவும்.

  • படி 4: விதையினை நிழலில் உலர வைக்கவும். இதனால் விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

  • • படி 5: பின்பு விதையை விதைக்கவும்.

வாழைப் பழத்தில் உள்ள பாஸ்பரஸ் சத்தின் அளவு என்ன?

283 மி.கி /100 கி (பழம்).

வாழைப் பழத்தில் உள்ள புரதச்சத்தின் அளவு என்ன?

7.3 கி /100 கி (பழம்).

வாழைப் பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டின் அளவு என்ன?

72 கி /100 கி (பழம்)

வாழைப் பழத்தில் உள்ள கொழுப்பு சத்தின் அளவு என்ன?

1.3 கி /100 கி (பழம்)

வாழைப் பழத்தில் உள்ள நார்ச்சத்தின் அளவு என்ன?

3.6 கி /100 கி (பழம்)

வாழைப் பழத்தில் உள்ள தாதுக்களின் அளவு என்ன?

2.7 கி /100 கி (பழம்)

வாழைப் பழத்தில் உள்ள கால்சியத்தின் அளவு என்ன?

344 மி.கி /100 கி (பழம்) (இதுதான் தானியங்களில் உள்ள அதிகபட்ச கால்சிய அளவாகும்).

வாழைப் பழத்தில் உள்ள செரிக்கும் தன்மை (TD) எவ்வளவு?

82%

வாழைப் பழத்தில் உள்ள உயிர்தன்மை (BU) மதிப்பு என்ன?

73.8%.

வாழைப் பழத்தில் உள்ள நிகர புரதம் பயன்படுத்திறன் (NPU) எவ்வளவு?

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை


வாழையில் அதிக சேதம் விளைவிக்கும் பூச்சிகள் ஏதும் உள்ளனவா?

தண்டுத்துளைப்பான் நேந்திரன், கற்பூர வள்ளி, ரொபஸ்டா, ரஸ்தாளி போன்ற இரகங்களை அதிகம் பாதிக்கிறது. 5வது மாதத்திற்குப் பின்பு தான் இத்தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சியினை 90 செ.மீ நீளமுள்ள அல்லது வட்ட வடிவ பொறியினை எக்டருக்கு 100 என்று வைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வாழையின் தண்டுக்குள் வண்டுத் தாக்குதலை எவ்வாறு கண்டறியலாம்?

தண்டிலிருந்து ஜெல்லி (பிசின்) போன்ற திரவம் வெளிவருவது இதன் ஆரம்ப அறிகுறியாகும்.

வாழைத் தண்டின் கூண் வண்டைக் கட்டப்படுத்த ஏதேனும் இரசாயன முறை உள்ளதா?

2.5 மி.லி / லி குளோர்பைரிபாஸ் உடன் 1 மி.லி/ லி ஒட்டுந்திரவம் கலந்து தண்டு மீது தடவலாம். பிசின் போன்ற திரவ வெளிப்பாடு காணப்பட்டால் உடனே 2 மிலி மோனோகுரோட்டாபாஸ் (350 மி.லி- 150 லி நீரில் கரைத்தது) கரைசலை தண்டில் ஊசி மூலம் செலுத்தலாம். பூப்பருவம் வரை தரையிலிருந்து 2 அடி மற்றும் 4 அடி உயரத்தில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு இடும் ஊசி இரண்டு அல்லது மூன்று இலையுறைக்குள் மட்டுமே செலுத்த வேண்டும். நடுத்தண்டில் மருந்திடக் கூடாது.

பூச்சியினைக் கட்டுப்படுத்தும் உயிர் கட்டுப்பாடு மருந்துகள் ஏதேனும் உள்ளனவா?

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இத்தகு தாய் மருந்துகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறது. இம்மருந்தை வாங்கி வந்து விவசாயிகள் தாமே உற்பத்தி செய்து கொள்ளலாம்.

5. தண்டுக் கூண் வண்டுப் பொறியினை எவ்வாறு தயாரிப்பது?

90 செ.மீ நீளத்தில் தண்டினை எடுத்து அதை இரண்டாக பிளக்கவும். துண்டு துண்டாக வெட்டி ஒவ்வொன்றையும் மரத்திற்குக் கீழே பொறியாக வைத்து விடவும். இவ்வாறு எக்டருக்கு 100 பொறிகள் தேவைப்படும். சிக்கும் வண்டுகளைச் சேகரித்துக் கொல்லவும்.

தண்டுக் கூன் வண்டினை கட்டுப்படுத்த ஏதேனும் உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள் உள்ளதா?

ஆம், என்டமோபேத்தோஜெனிக் பூஞ்சையான பிவேரியாபேசியானா மற்றும் ஹெட்டிரோரேப்டிடிஸ் இன்டிகா மருந்தினை தண்டுப் பொறியில் தூவி தோட்டத்தில் வைக்கவும். பொறியில் சிக்கும் வண்டுகள் தாமே அழிந்துவிடும். நாம் சேகரித்துக் கொல்ல வேண்டியதில்லை.

வாழை தண்டுக் கூன் வண்டினை பொறியினை உயிரியல் கட்டுப்பாடு மருந்துகளுடன் சேர்த்து எவ்வாறு தயாரிப்பது?

நீளவாக்கில் வெட்டி பிளக்கப்பட்ட பொறியின் வெட்டுண்ட பகுதியில் பிவேரியா பேசியானா மருந்தினை 25 கி (1X 109 சிட்யூ / கி) அல்லது ஹெட்டிரோரேப்டிடிஸ் இண்டிகா 1X108 ஐ.ஜே / மி.லி கொண்ட 25 கி மருந்தினைத் தடவி இப்பொறி தயாரிக்கப்படுகிறது. வாழை மரங்களின் அடியில் இப்பொறியினை வைக்கவும்.

தண்டில் செலுத்தும் ஊசி எங்கு கிடைக்கும்?

வாழை தண்டு ஊசியை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அல்லது திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள வானொலி உழவர் சேவை மையத்தில் வாங்கலாம்.

வாழை இலை உண்ணும் புழுவினை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ் 2 கி/லி உடன் 1 மி.லி ஒட்டுந் திரவம் கலந்து தெளிக்கவும். இனக்கவர்ச்சிப் பொறியினை எக்டருக்கு 10 என்ற வீதம் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் தொங்கவிடவும். 2.5 மி.லி/லி குளோர்பைரிபாஸினை ஒட்டுந்திரவத்துடன் கலந்து தெளிக்கவும்.

வறட்சியான தட்ப வெப்ப நிலையில் வாழையைத் தாக்கும் பூச்சிகள் யாவை?

இலைப்பேன் (ஹெலினேதிரிப்ஸ் கடஸிபைலஸ்), பறக்கும் உண்ணி (டெட்ராநைகஸ் ஸ்பிஸிஸ்) மற்றும் யுடெட்ராநைகஸ் லுரிபெப்பன்டலிஸ் போன்றவை வறண்ட சூழ்நிலையில் அதிகம் தாக்கும். 1.5 மி.லி் டைமெத்தோயேட் மருந்தினை ஒட்டுந் திரவத்துடன் கலந்து தெளிப்பதால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

வாழை மரம் ஒடிந்துவிடுவதன் காரணம் என்ன?

நூற்புழு அதிகம் தாக்குவதால் வேர் பாதிக்கப்பட்டு நங்கூரமின்றி மரம் சாயலாம். வாழையை 5 முக்கிய நூற்புழுக்கள் அதிகம் தாக்குகின்றன. கன்று நடவின் போதும் பின் 5 மாதங்கள் கழித்து ஒரு முறையும் 40 கி கார்போபியூரான் பொடியை இடுவதன் மூலம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

நூற்புழுக்கள் என்றால் என்ன? அதை எவ்வாறு பார்க்கலாம்?

நூற்புழுக்கள் என்பவை புழு போன்று வேரினைத் தாக்கி பயிருக்கு சேதம் விளைவிப்பவை. இதனை நம் கண்களால் காண இயலாது. நுண்ணோக்கி கொண்டு மட்டுமே காண முடியும்.

நூற்புழுக்கள் எவ்வாறு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது?

நூற்புழுக்கள் தமது மெல்லிய நீண்ட கூர் பகுதியின் வழியே வேரினைத் துளைத்து அதன் செல்களைத் தின்றுவிடுகின்றன. இந்நூற்புழு துளையிட்ட வழியே பூஞ்சை, பாக்டீரியா போன்றவை நுழைவதாலேயே சேதம் அதிகரிக்கிறது.

வாழையை அதிகம் தாக்கும் நூற்புழுக்கள் யாவை? அதனால் எவ்வளவு சேதம் ஏற்படுகிறது?

பெரும்பாலான மண்ணில் வாடும் அனைத்து வகை நூற்புழுக்களும் வாழையைத் தாக்குகின்றன. 1) துளைக்கும் நூற்புழு - ரடோபோலஸ் போசிமிலி‌ஸ் 2) வேர்முடிச்சு நூற்புழு - மெலய்டோகைன் இன்கா‌க்னிட்டா 3) வேரழுகல் நூற்புழு - பிராட்டிலென்கஸ் காப்பியே 4) சுருள் நூற்புழு- வெறலிகாட்டிலென்கஸ் மல்டிசின்க்டஸ் வாழையைத் தாக்கும் முக்கிய பூச்சி வகை நூற்புழுக்களாகும். இதனால் 20% சேதம் ஏற்படுகிறது.

வாழை மரங்கள் நூற்புழுக்களால் தாக்கப்பட்டுள்ளதை எவ்வாறு தடுக்கலாம்?

நூற்புழுக்களால் தாக்கப்பட்ட வாழைகள் சரியாக வளர்ச்சியடையாமல் மெல்லிய தண்டுடன் வாடிக் காணப்படும். குலைகள் சிறுத்திருக்கும். எனினும் கிழங்கு மற்றும் வேரில் காணப்படும் அறிகுறிகளே முக்கியமானவை. வேரழுகல் நூற்புழுவானது வாழையின் இளம் வேர்களில் சிறிய வட்ட வடிவ குழி போன்ற அழுகலை ஏற்படுத்தும். அப்பகுதி வெள்ளை முதல் ஆரஞ்சு நிறம் வரை இருக்கும். முதிர்ந்த வேர்களில் வெடிப்புகள் இருக்கும். அவற்றில் செம்பழுப்பு நிற அழுகலை குறுக்குவாட்டில் வெட்டும்போது காணலாம். செல்கள் அழுகி, மடிந்துப் போகக் காரணமாகின்றன. நூற்புழுக்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பயிர் எளிதில் வேரோடு சாய்ந்துவிடும்.

வாழையில் நூற்புழு தாக்கத்தால் பூஞ்சாண நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா?

ஆம், வாழையைத் தாக்கி பெருமளவு சேதம் விளைவிக்கும் புஸேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை கியூபென்ஸ் என்ற பூஞ்சையானது நூற்புழுக்களுடன் அதாவது வேர் குடையும் புழு, வேரழுகல் புழு, வேர் முடிச்சுப் புழு போன்றவற்றுடன் இணைந்து தாக்கும். பூஞ்சை நூற்புழு தாக்குதலுக்குப் பின்போ அல்லது அதனுடன் இணைந்து தாக்குவது அதிக சேதத்தை விளைவிக்கும்.

பலவித நூற்புழுக்களால் தாக்கப்பட்ட வாழையைக் காப்பாற்ற முடியுமா?

ஆம், 50 கி / வாழை கார்போபியூரன் இரு முறையும் இடுவதன் மூலம் வேரழுகல் நூற்புழுவினைக் கட்டுப்படுத்தலாம். கார்போபியூரான் இட்ட வயல்களில் தாக்குதல் குறைவதுடன் மகசூலும் அதிகரிக்கிறது.

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த இரசாயனம் அல்லாத மருந்துகள் ஏதேனும் உள்ளனவா?

இரசாயன மருந்துகளின் விஷத்தன்மை மற்றும் பாதிப்பால் தற்போது பல்வேறு இரசாயனமற்ற முறைகள் நூற்புழுவைக் கட்டுப்படுத்த கையாளப்படுகின்றன. வாழைத் தோட்டத்தில் இடைஇடையே செண்டுமல்லி (டேஜிட்டஸ் ஸ்பீயிஸ்) வளர்ப்பதால் நூற்புழு குறைவதோடு, 25% மகசூல் அதிகரிக்கிறது. நெல், கரும்பு, பச்சைபயறு, சணப்பை ((குரோடீலேரியா ஜங்சியா) போன்ற பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்யலாம். நூற்புழு எண்ணிக்கையைக் குறைக்க சணப்பைப் பயிரை வாழை பயிரிடும் முன் விதைப்பது சிறந்தது.

நூற்புழு தாக்கமற்ற நடவுக் கன்றினை எவ்வாறு பெறுவது?

பக்கக் கன்றுகளை நூற்புழு தாக்கமற்ற பயிரிலிருந்து தேர்ந்தெடுக்கவும் அல்லது கன்றின் கிழங்குகளில் வேர்ப் பகுதியைச் சீவி விட்டு அவற்றை 50-55 டிகிரி செ. வெப்பநிலை கொண்ட நீரில் 20 நிமிடங்கள் வைக்கவும் அல்லது கன்றுகளை 0.1% மோனோகுரோட்டோபாஸ் கரைசலில் 30 நிமிடங்கள் ஊற வைத்துப் பின் நடவும்.

நூற்புழுவைக் கட்டுப்படுத்த மலிவான சிறந்த முறை எது?

புதிய நூற்புழுக் கொல்லியான ரக்பை 10 ஜி மருந்தினை கன்று ஒன்றிற்கு 5 கிராம் வீதம் 3 வது, 5வது மாதங்களில் இடுவது நூற்புழுவைக் கட்டுப்படுத்தவதோடு மகசூலை அதிகரிக்கும். இதன் விலை மிகவும் குறைவு. எக்கோநீம் எனும் வேப்ப எண்ணெய் மருந்து நல்ல பலன் தரும்.

நூற்புழுவைக் கட்டுப்படுத்தும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் யாவை?

பேசிலோமைசிஸ் லிலேசினஸ், வெர்டிசிலியம் கிளாமிடோஸ்போரியஞ்வெ. லெக்கானி, பாஸ்சூரியா பெனட்ரன்ஸ், பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் வெஸிகுலார் மைக்கோரைஸா (வேம்) குளோமஸ் மோஸி போன்றவை நூற்புழுவைக் கட்டப்படுத்தும் உயிர் காரணிகளாகும்.

வைரஸ் நோய்களை எவ்வாறு கண்டறிந்து, கட்டுப்படுத்துவது?

நச்சுயிரின் பாதிப்புப் பண்புகளைக் கொண்டோ, அதற்குரிய சோதனைக் கருவிகள் மூலமாகவோ நச்சுயிரி நோய்களைக் கண்டறியலாம்.

வாடல் நோயினால் எளிதில் பாதிக்கப்படும் இரகங்கள் யாவை?

நெய் பூவன், ரஸ்தாளி, விருப்பாச்சி, சக்கியா, மொந்தன், செவ்வாழை மற்றும் நாடன் போன்றவை.

24. இலைப் புள்ளி நோயினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

0.1% புரப்பிகோனஸோல் மருந்தினை 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும். தெளிக்கும் முன் தொங்கிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட முதிர்ந்த இலைகளை அகற்றவும். 3-4 தெளிப்புகள் தரலாம். ஒரே பூஞ்சாணக் கொல்லியைப் பயன்படுத்தாமல் கார்பன்டஸிம் (0.1%), கால்சியம் (0.2%), மேன்கோஸெம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைட் (0.25%) போன்ற ஏதேனும் ஒரு மருந்தினை ஒட்டுத் திரவத்துடன் கலந்து இலையின் அடிப்பகுதியில் தெளிப்பது சிறந்தது.

தண்டு பிளப்பது வாடல் நோயினால் ஏற்படுகின்றதா?

ஆம், புஸேரியம் ஆக்ஸிஸ்போரம் க்யூபென்ஸ் பூஞ்சையானது தண்டுப் பிளக்கக் காரணமாக அமையும். எனினும் எர்வீனியா அழுகல் நோயிலும் இந்த அறிகுறி காணப்படுகிறது.

வாடல் நோயை வாழையில் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

நோய்க்கிருமி தாக்கமற்ற கன்றுகளை, கிழங்கு சீவப்பட்டு அதில் பியூரடான் மற்றும் 0.1% பெவிஸ்டின் மருந்திடப்பட்ட கன்றுகளை நடவுக்குப் பயன்படுத்தவும். திசு வளர்ப்புக் கன்றுகளை உபயோகிக்கலாம். 2% பெவிஸ்டின் மருந்தினை (3 மி.லி / கன்று) வேரில் ஊற்றவோ, ஊசி மூலம் செலுத்துவதோ நோயினைக் கட்டுப்படுத்த உதவும்.

மேலே செல்க

அறுவடைக்குப்பின் சார் தொழில்நுட்பங்கள்


மானாவாரி வாழையில் அறுவடை செய்ய உகந்த சமயம் எது?

வாழையானது தட்பவெப்ப நிலை, இரகம் மற்றும் மண் தன்மையைப் பொறுத்து குலை தள்ளிய 3-5 மாதங்களில் முதிர்ந்து விடும்.

வாழை அறுவடை செய்ய சரியான தருணம் எது?

குலையின் வயதைப் பொறுத்தும், பூ பூத்ததற்கும் அறுவடைக்கும் உள்ள இடைவெளி, காய்கள் பருத்தல், காய்களின் தோல் மற்றும் சதையின் நிறம் ஆகியவற்றைப் பொறுத்தே அறுவடை செய்யப்படுகிறது. பெரும்பாலும் காய்கள் முதிர்ந்த பின்பே அறுவடை செய்யப்படுகிறது. பூப்பூத்தபின் 100 – 150 நாட்களில் குலை அறுவடைக்கு வந்துவிடும். கிராண்ட் நைன் இரகத்தில் முதல் அறுவடை நட்ட 11 மாதங்களுக்குள்ளும், மறுதாம்பில் அறுவடை 10 மாதங்களிலும், இரண்டாவது மறுதாம்பில் நட்ட 9 மாதங்களிலும் செய்துவிடலாம். ஆக, சரியாக பராமரித்தால் 30 மாதங்களில் 3 முறை அறுவடை செய்து விடலாம்.

நடவு செய்து 70 நாட்களுக்கு பிறகு ரொபஸ்டா இரகத்தில் மகசூல் அளவைக் காட்டும் குறியீடுகள் எவை?

இலைகளின் எண்ணிக்கை குறைந்தது எட்டாகவும், தண்டின் தடிமன் ( 88%), சுமார் 15.07 செ.மீ இருந்தால் பயிர் நல்ல மகசூல் அடைந்ததை குறிக்கும் குறியீடுகள் ஆகும்.

நடவு செய்து 126 நாட்களுக்கு பிறகு ரொபஸ்டா இரகத்தில் மகசூலைக் காட்டும் குறியீடுகள் யாவை?

தண்டின் சுற்றளவு மற்றும் இலைகளின் எண்ணிக்கைகள் முறையே 34.5 செ.மீ மற்றும் 12 இருப்பது நல்ல மகசூலைக் குறிக்கும்.

நடவு செய்து 185 நாட்களுக்கு பிறகு ரொபஸ்டா இரகத்தில் நல்ல மகசுலைக் காட்டும் குறியீடுகள் யாவை?

தண்டின் சுற்றளவு மற்றும் நீளம் முறையே 138.9 செ.மீ மற்றும் 127.3 செ.மீ இருக்க வேண்டும்.

நடவு செய்து 250 நாட்களுக்கு பிறகு ரொபஸ்டா இரகத்தில் நல்ல மகசூலைக் காட்டும் குறியீடுகள் யாவை?

மரத்தின் உயரம் மற்றும் சுற்றளவில் சராசரி மதிப்பு முறையே 159.21 செ.மீ மற்றும் 67.8 செ.மீ (தீர்மான அளவு R2 90%)

நடவு செய்து 315 நாட்களுக்கு பிறகு ரொபஸ்டா இரகத்தில் நல்ல மகசூலைக் குறிக்கும் குறியீடுகள் யாவை?

இலை அகலம் மற்றும் இலை நீளம் ( 81%) ஆகியவற்றின் சராசரி மதிப்பு 67.2 செ.மீ மற்றும் 164.1 செ.மீ இருக்க வேண்டும்.

நடவு செய்து 375 நாட்களுக்கு பிறகு ரொபஸ்டா இரகத்தில் நல்ல மகசூலைக் குறிக்கும் குறியீடுகள் யாவை?

காய்களின் எண்ணிக்கை /குலை மற்றம் சீப்புகளின் எண்ணிக்கை போன்றவை முறையே 26 காய்கள் /குலை 13 சீப்புகள் /குலை என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

அறுவடை செய்த வாழைக் காய்களை எவ்வாறு சேமித்து வைக்க வேண்டும்?

ஈரப்பதம் குறைந்த பகுதிகளில் சில நாட்கள் சேமித்து வைக்க காடா துணியினைக் கொண்டு மூடவும். ஈரப்பதமான பகுதிகளில் நீண்டநாள் சேமிப்பிற்கு 700 காஜ் தடிமன் உள்ள பாலித்தீன் விரிப்புகளிலோ, உலோக டின்களிலோ/சணல் பைகளிலோ வைக்கலாம். கர்நாடகாவில் நிலத்திற்கடியில் 'ஹக்கீவு' எனப்படும் பகுதியில் சேமிப்பர். இந்தியாவில் பொதுவாக பானை போன்ற வாய் குறுகிய பொருட்களில் சேமித்து வைக்கப்படுகிறது. வாழை விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சானத் தாக்குதலை எதிர்த்து வாழக் கூடியது. எனினும் விதையை சேமித்து பையினை லிண்டேன் கொண்டு சுத்தம் செய்யவும்.

வாழையை எவ்வாறு அரைப்பது?

வாழை ஈரமாக இருக்கும் போதே அரைக்கப்பட வேண்டும். இது ஆவயில் செலுத்திப் பின், சம்மட்டி அல்லது உருளை வழியே செலுத்தப்பட்டு காய் அரைக்கப்படுகிறது.

சீப்பு வெட்டுதல் என்றால் என்ன?

குலையினை மரத்திலிருந்து வெட்டி எடுத்த பின்ப, கூரிய, சுத்தமான வாழைக்காய் வெட்டும், கத்தி கொண்டு கொண்ணை (தண்டு) யினை ஒட்டி சீப்புகளை நறுக்கி எடுக்க வேண்டும். சீப்புகளை வெட்டியவுடன் அவற்றின் நீர் (பால்) வடிவதற்காக இலைகளைப் பரப்பி சீப்பின் உச்சி கீழே பார்த்த வண்ணம் வைக்க வேண்டும். உச்சிக் குலைநோய் தாக்காமல் இருக்க, சீப்புகளை 0.1% பென்லேட் அல்லது தயபென்டஸோல் கரைசலில் நனைத்து எடுக்க வேண்டும்.

குளிர்வித்தல் என்றால் என்ன?

அதிக தூரம் எடுத்துச் செல்லக் கூடிய மற்றும் ஏற்றுமதித்தர வாழைக்காய்களை அதன் சேமிப்புக்காலத்தை அதிகரிக்க குளிர்வித்தல் வேண்டும். குலையினை அறுவடை செய்த 10 -12 மணி நேரத்தில் குளிர்விக்க வேண்டும். பெட்டிகளில் அடைக்கப்பட்ட காய்களை 13º செல்சியஸ் வெப்பநிலையும் 85 -90% ஈரப்பதம் கொண்ட காற்றை வேகமாகச் செலுத்துவதன் மூலம் குளிர்விக்கலாம். வயல் வெப்பநிலையான 30º முதல் 35º செ வெப்பநிலையிலிருந்து 13º செ குளிர்விக்கும் வெப்பநிலைக்கு வாழைக் காய்களைக் கொண்டுவர குறைந்தது 6-8 மணி நேரம் ஆகும். பேக் செய்யப்பட்ட பெட்டிகள் உடனே சேமித்த வைக்கவென குளிர்விக்கும் அறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மெழுகு பூசுதல் /மெருகேற்றுதல் என்றால் என்ன?

காய்களின் சேமிப்புக் காலத்தை அதிகரிக்க இது செய்யப்படுகிறது. வாழைக்காய் சீப்புகள் 6% மெழுகுக் கரைசலில் 30-60 வினாடிகள் மூழ்க வைத்துப் பின் பெறப்படுகின்றன. இது காய் பழுப்பதை தாமதப்படுத்தும். மேலும் இது பழத்தின் சுவை மற்றும் மணத்தினை அதிகரிக்கும். 12% மெழுகுக் கரைசலில் 1 வினாடி நனைத்து எடுப்பதன் மூலம் காயின் சேமிப்புக் காலம் 5 வாரம் வரை அதிகரிக்கப்படுகிறது.

வாழையில் காய்கள் முதிர்ச்சியடைந்ததைக் கண்டறியும் அறிகுறிகள் யாவை?

மேற்புற இலைகள் காய ஆரம்பிக்கும் போதே குலை அறுவடை செய்யப்படுகிறது. அடர்பச்சை நிறமான காய்களின் நிறம் வெளிர்பச்சையாக மாறும் இலேசாகத் தொடும்போதே நுனியில் காய்ந்து ஒட்டியுள்ள பூக்கள் விழுந்துவிடும். காய்களின் வளைவு குறைந்து, கோணத்திலிருந்து வட்டவடிவமாக மாறுகிறது.

மேலே செல்க

வாழை பதப்படுத்துதல்


வாழைப்பழம் அரிசியை விட ஏழைகளுக்குச் சிறந்த உணவா?

வாழைப்பழத்தில் அரிசி மற்றும் பிற தானியங்களில் அடங்கியுள்ளதை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குச்சிக்கிழங்கு, பாலிஸ் செய்யப்பட்ட அரிசி, மக்காச் சோளம் போன்ற பல கோடி ஏழைகளின் உணவுகளில் இல்லாத அமினோ அமிலமான மெத்தியோனைன் வாழையில் அடங்கியுள்ளது.

பழங்களின் சேமிப்புக் காலத்தை அதிகரிக்க உதவும் சிறந்த முறை எது?

குளிர்பதன நிலையில் சேமித்து வைப்பதே நீண்ட காலச் சேமிப்புக்கு ஏற்ற முறை எனினும், மெழுகுக் கரைசலில் நனைத்தல், வளையக் கூடிய மென் நிழற்படங்களில் பேக் செய்து வைத்தல், எத்திலின் பயன்படுத்துதல் போன்றவை அறை வெப்பநிலையில் குறுகிய காலச் சேமிப்பிற்கு ஏற்ற முறைகளாகும்.

கோதுமை உமி போல் வாழைப்பழ உமியிலும் ஏதேனும் சத்துக்கள் நிறைந்துள்ளனவா?

வாழைப்பழ எடையில் 5.6% அதன் உமியாகும். இதில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு போன்றவை நிறைந்துள்ளன. கால்சியச் சத்து தானியங்கள் மற்றும் சிறுதானியங்களில் இருப்பதைவிட இதில் அதிகளவு உள்ளது. இதில் உள்ள புரதங்களான புரோலமின்ஸ் மற்றும் குளுட்டெனில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. முளைகட்டப்பட்ட சிறுதானியப்பயிரிலிருந்து குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கலாம்.

வாழைப் பழத்திலிருந்து உணவாக என்னென்ன பொருட்கள் தயாரிக்கலாம்?

வாழைப்பழம் வாழைப்பழ தோசை, வாழைப்பழ உருண்டை, பேன் கேக், சேமியா, குழந்தை உணவுகள், பிஸ்கட், பீர், அப்பளம், தானியக் கலவை, ரொட்டி, பிரட் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பழத்திலிருந்து நொதிக்கவைத்த பானங்களான பீர் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் திருவிழா சமயங்களில் நறுமண பானம் செய்யப்படுகின்றது. இதன் கழிவுகள் கறவை மற்றும் பிற கால்நடைகளுக்கும் தீவனமாக உபயோகிக்கப் படுகின்றது.

வாழையிலுள்ள மருத்துவ குணங்கள் என்ன?

வாழை கல்லீரல் நோய்கள், நிமோனியா, சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதில் அதிகளவு கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியச் சத்து அதிகம் தேவையான வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இது தேவைப்படுகிறது.

வாழைப்பழ நூடுல்ஸ் எவ்வாறு தயாரிப்பது?

70 கிராம் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவினையும், 30 கிராம் வாழைப்பழ மாவையும் (பி.எஸ். கலப்பு) 60 சல்லடை கொண்டு சளிக்கவும். 5 நிமிடம் சளித்த மாவின் மீது ஆவியைச் செலுத்தி, ஆறவைத்துப் பின் மீண்டும் சளிக்கவும். பாஸ்தா தயார் செய்யும் இயந்திரத்தில் கொட்டி அதனுடன் 30 மி.லி நீர், 2 கிராம் உப்பு சேர்த்து நன்கு கலக்கி, வெளியே எடுக்கவும். இந்த நூடுல்ஸ் 5 நிமிடம் ஆவியில் வைக்கவும். பின்பு அறை வெப்பநிலையில 8 மணி நேரம் வைக்கவும். 60º செ உலர்வு வெப்பநிலையில் 6 மணி நேரம் வைத்துப் பின் பயன்படுத்தலாம்.

வாழை சேமியா எவ்வாறு தயாரிப்பது?

வாழைப்பழ சேமியா, நூடுல்ஸைப் போலவே தயார் செய்யப்படுகிறது. மாவுக்கலப்பு விகிதம் மற்றும் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும். சுத்திகரிக்கபட்ட கோதுமை மாவு – 30 கி. முழு (சுத்திகரிக்கப்பட்ட) கோதுமை மாவு – 40 .கி. இதனுடன் வாழைப்பழ மாவினைக் கலக்கி பாஸ்தா போல் செய்து, சேமியா போல் பிழிந்து, ஆவியில் வைத்துப் பின் உலர்த்தவும்.

வாழைப்பழ இடியாப்பம் எவ்வாறு செய்வது?

வாழைப்பழ இடியாப்பமும், நூடுல்ஸ் போலவே தயாரிக்கலாம். மாவுக் கலப்பு விகிதம் மட்டும் கீழ்க்கண்டவாறு மாறுபடும். * அரிசிமாவு - 80 கி * வாழை மாவு – 30 கி நன்கு கலக்கி, பாஸ்தா தயாரிப்பு இயந்திரத்தில் இட்டு, இடியாப்பம் பிழிந்து, ஆவியில் காட்டிப் பின் உலர்த்தவும்.

வாழைப் பழ மட்டி என்பது என்ன? அதை எவ்வாறு தயாரிப்பது?

வாழைப்பழ மட்டி என்பது இந்தியாவில் கர்நாடகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக வாழைப்பழ பலகாரம் ஆகும். இது வாழைப்பழ மாவினை கொதிக்கும் நீரில் சிறிது உப்புடன் சேர்த்துக் கொட்டித் தயாரிக்கப்படுகிறது. பின் இதனை பரோட்டா மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும். இப்பதமான மாவு டென்னிங் பந்து அளவில் உருண்டையாக உருட்டி சூடாக பரிமாறப்படுகிறது. இது நெய் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது.

வாழைப்பழ மட்டி, அரிசி சேர்த்து எவ்வாறு தயாரிப்பது?

4 கப் தண்ணீருடன் ஒரு கைப்பிடி அளவு அரிசியை எடுத்து, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து அரிசி நன்கு வேகும் வரை விட்டு பின் அதில் வாழை மாவினைச் சேர்க்கவும். இப்போது கலக்கக் கூடாது. இவ்வாறு கிராமங்களில் சமைப்பர். மூடியின் மீது சிறிது தனலை வைத்து ஆவி மூடியைத் தூக்கும் வரை தம் கட்டச் செய்வர். ஒரு மரத்தலான மத்து வைத்து கட்டி பிடிக்கா வண்ணம் வேகமாகக் கடையவும். அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து 15 நிமிடம் ஆவிபிடிக்க வைக்கவும். ஆற வைத்து கையினால் அல்லது ஐஸ்கிரீம் கரண்டியில் பந்து போல் செய்யவும். இதனை கிண்ணத்தல் வைத்து சாம்பாரை அதன் மீது ஊற்றவும். நெய் தெளித்து, சிறிது சூடாகப் பரிமாறவும்.

வாழைப்பழ சத்துமாவு கஞ்சி எவ்வாறு தயாரிப்பது?

ஒரு கப் வாழைப்பழ மாவினை எடுத்து சிறிது சிறிதாக அரை டம்ளர் நீருடன் சேர்த்துக் கலக்கவும். கொதிநீரில் மாவினை நேரடியாகக் கலக்கக் கூடாது. கட்டி பிடித்துவிடும். ஒரு பாத்திரத்தில் நீரை இலேசாக சுடவைத்து மாவுக் கரைசலை அதற்குள் ஊற்றவும். இக்கலவை கொதிக்கும் வரை கட்டி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் கொஞ்சம் ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். தீயினை குறைத்து வைத்து கஞ்சியை 5 நிமிடம் வைத்துக் கிளறி, பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்துப் பரிமாறவும்.

வாழைப்பழ அல்வா எவ்வாறு தயாரிப்பது?

அடிப்பாகம் கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு வாழைப்பழ மாவினை நன்கு வறுத்துக் கொள்ளவும். இம்மாவுடன் தேங்காய்ப் பால் பவுடர் சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். இது கெட்டிப்படும் போது 100 கிராம் சர்க்கரை சேர்க்கவும். இது அல்வா பதத்திற்கு வந்ததும் 50 கிராம் நெய் சேர்த்து நன்கு கிளறவும். அல்வா பதத்திற்கு வந்ததும் 50 கிராம் நெய் சேர்த்து நன்கு கிளறவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறவும். சிறிது முந்திரி, திராட்சை சேர்த்துப் பின் ஆறிய பின் சாப்பிடவும்

வாழைப்பழ பானம் எவ்வாறு தயாரிப்பது?

வாழைப் பழத்தை சுத்தம் செய்து 12 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின் 48 மணி நேரம் வைத்து முளைவிட வைக்கவேண்டும். 24 மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்தவும். தொடர்ந்து 700- 750° செ. வெப்பநிலையில் வைத்து சூடுபடுத்தவும். பின் மாவு மில்லில் அரைத்தெடுத்து, சல்லடையில் சலிக்கவும். பானப் பொடி தயாரிக்க பால் பொடி, தூள் சர்க்கரை (அ) கரும்பு சர்க்கரை சேர்த்து, மிதமான ஈரப்பதத்துடன் டின்னில் அடைத்து வைக்கவும்.

வாழைப்பழத்திலிருந்து தயாரிக்கக் கூடிய பொருட்கள் யாவை?

  • வாழைப்பழ சிப்ஸ்.

  • வாழைப் பழப்பானம்.

  • வாழைப் பழச்சாறு (ஜீஸ்).

  • பல பழங்கள் கலந்த ஜாம்.

வாழையிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களின் சேமிப்புக் காலம் எவ்வளவு?

சரியான சேமிப்பு வெப்பநிலையில் இப்பொருட்கள் 6 மாதங்கள் வரை கெடாது. டின்களில் அடைக்கப்பட்ட பொருட்கள் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன வெப்பநிலையில் இவற்றின் சேமிப்புக் காலம் இருமடங்கு ஆகும்.

ஜாம் மற்றும் ஜெல்லிக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

ஜாம் பழங்களின் சதைப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் ஜெல்லியோ பழங்களின் சதைப்பகுதியிலிருந்து பிரித்தெடுத்த சாற்றிலிருந்து செய்யப்படுகிறது. மேலும் ஜெல்லி சற்று கண்ணாடி போன்று ஒளி ஊடுருவக் கூடியதாக இருக்கும்.

வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

சிப்ஸ் தயாரிக்க, நேந்திரன் இரகம் மிகவும் ஏற்றதாகும். மொந்தன், சான்ஸிபார் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணமுடைய இரகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

தயாரிக்கும் முறை

வாழைக்காய்களின் தோலை உரித்துவிட்டு, 1 சதவீத பொட்டாசியம் மெட்டாசல்பைட்டுடன் சேர்த்து, பிறகு 2 முதல் 3 மி.மீ தடிமனுள்ள சீவலாக சீவி, தேங்காய் எண்ணெய் அல்லது பாமாயிலில் மொறுமொறுப்பாக மற்றும் மஞ்சள் நிறமாக இவை மாறும் வரை பொரித்தெடுக்கப்படுகின்றன. நன்கு பொரிந்தவுடன் உப்பு கலந்த நீரை, அரிக்கரண்டியில் இருக்கும் போதே தெளித்து பாத்திரத்தில் இடவேண்டும் தேவைப்பட்டால் சிறிது மிளகாய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். சூடு ஆறியபின், ஈரம் இல்லாத, காற்று புகாத பைகளிலோ, டப்பாக்களிலோ சேமித்து வைக்கப்படுகின்றன. இது 30 முதல் 35 நாட்கள் வரை நமுத்துப் போகாமல் இருக்கும்.

வாழைப்பழ பிழச்சாறு தயாரிப்பது எப்படி?

பாலிலிருந்து தயாரிக்கப்படும் கட்டித்தயிர், மில்க்ஷேக், ஐஸ்கிரீம், ரொட்டி, கேக், வாழை மணமூட்டப்பட்ட பானங்கள், சாஸ் மற்றும் குழந்தைகளுக்கான உணவு ஆகியவை தயாரிக்க வாழைப்பழ பிழச்சாறு பயன்படுகிறது. வாழைக் குலைகளை அறுவடை செய்தபின், எத்திலீன் வாயு நிரப்பப்பட்ட மூடிய அறையில் 5-7 நாட்களக்கு வைத்து வாழைக்காய்களை பழுக்க வைக்கப்படுகின்றன. பழுத்த பின், 20 பிபிஎம் பிளீச்சிங் பவுடர் கரைசலில், 15 நிமிடங்கள் வைத்திருந்து கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. பின் தோல் உரிக்கப்பட்டு, பழங்கள் 'பல்ப்பர்' என்ற சாதனத்தில் இட்டு கூழாக்கப்படுகிறது. இக்கூழ், ஹோமோஜினைசரில் செலுத்தப்பட்டு, கட்டிகள் இல்லாதவாறு பொடியாக்கப்படுகிறது. பெரிய கட்டிகள் இருப்பின். டீகேன்டர் –ல் செலுத்தப்படும் போது அவை நீக்கப்படுகின்றன. பின் இக்கலவை, டீஅனியேட்டர் தொட்டி மற்றும் கான்சென்ரேட்டரில் இடப்பட்டு கெட்டிப்படுத்தப்படுகிறது. இறுதியாக, நுண்கிருமிகள் இல்லாத இயந்திரத்தின் மூலம் பீப்பாய்களில் அடைக்கப்படுகின்றன. இவ்வாறு, வாழைப்பழ கூழ், பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படுகிறது. இதனையே சிறுதொழில் நிறுவனங்களில், குறைந்த செலவிலும் தயாரிக்கலாம். இதற்கு முதலில் கழுவி சுத்தம் செய்யப்பட்ட பழங்கள் கூழாக்கியில் இட்டு கூழாக்கப்படுகிறது. பின் 85 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நுண்ணுயிரி வளர்ச்சி தடை செய்யப்படுகிறது. பின் 2000 பிபிஎம் பொட்டாசியம் மெட்டா பை சல்ஃபைட்டுடன் சேர்க்கப்பட்டு, தூய்மையான காற்று புகாத கேன்களில் அடைக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாழைப்பழ கூழை, அறை வெப்பநிலையில், மூன்று மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். அடைத்துவைக்கப்பட்டுள்ள வாழைப்பழ கூழை உபயோகிக்கும் முன், சிறிது சூடாக்க வேண்டும். இதனால் கூடுதலாக உருவாகிக் காணப்படும் கந்தக ஆக்சைடு தவிர்க்கப்படுகிறது.

மேலே செல்க