வாழையின் வாழ்க்கைச் சுழற்சிக்குத் தேவையான மொத்த நீர்த் தேவை 900-1200 மி.மீ. இது மழையின் வாயிலாகவோ அல்லது பாசனத்தின் மூலமோ பெறப்பட வேண்டும்.
வாழையின் சிறந்த வளர்ச்சிக்கும், நல்ல உற்பத்தித் திறனுக்கும் அதன் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் சரியான அளவு நீர் கிடைக்கப்பெறச் செய்வதோடு வேர்ப்பகுதியில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வெளியேற்ற முறையான வடிகால் வசதியும் இருப்பது அவசியம்.
பொதுவாக கோடைகாலங்களில் ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒருமுறையும், குளிர்க்காலங்களில் 7-8 நாட்களுக்கு ஒருமுறையும் நீர் பாய்ச்சுவது சிறந்தது.
வாழை பயிருக்குப் பல வழிகளில் நீர் பாய்ச்சப்படுகின்றது. ஒவ்வொரு முறையிலும் நன்மை, தீமைகள் உள்ளன.
அந்த முறைகளாவன: வெள்ள நீர்ப்பாய்ச்சல் அல்லது பாத்தி பாய்ச்சல், குழி பாசனமுறை, சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரப்பாசனம் ஆகும்.
தோட்ட நிலப்பகுதிளில் பொதுவாக வெள்ள/பாத்திப் பாசனம் செய்யப்படுகிறது. இம்முறையில் தேவைப்படும் நீரின் அளவு மற்றும் ஆட்கூலி செலவு அதிகம். அதோடு பாய்ச்சப்படும் நீரும், உரங்களும் சீராக பயிருக்குக் கிடைப்பதில்லை. இம்முறையில் நுாற்புழுக்கள் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது.
குழிப் பாசனமுறை சேற்று நிலங்களில் பின்பற்றப்படுகிறது. இம்முறையில் இரு வரிசைகளுக்கு இடையே தோண்டப்பட்டுள்ள குழிகளில் நீர் பாய்ச்சப்படுகிறது. இக்குழிகள் மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வழிந்தோட வடிகாலாகப் பயன்படுகிறது.
சொட்டு நீர்ப் பாசனம் என்பது குறிப்பிட்ட, சரியான அளவு நீரினை சீரான இடைவெளியில் பயிரின் வேர் மண்டலத்திற்கு அருகிலேயே அதன் தேவைக்கேற்ப அளிக்கும் முறையாகும். பயிர்க்காலம் முழுவதும் ஒரு குறித்த இடைவெளியில் குறைந்த அழுத்தம் கொண்ட பெரிய மற்றும் சிறிய, பக்கக் குழாய்களின் மூலம் நீர் சொட்டிகள் வழியே நீர் அளிக்கப்படுகின்றது. சிறப்பம்சங்கள்:
|
|
|
வடிகட்டிகள்:
1) சரளைப் படுகை/வலை வடிகட்டிகள்:உருளை வடிவத் தொட்டியில் கால்சியம் கார்பனேட் அற்ற கட்டிகள், சற்று பெரிய குறிப்பிட்ட அளவிலான (1.5-4 மி.மீ விட்ட அளவு) பொருட்களை வடிகட்ட இவை பயன்படுகின்றன. இவை ஆல்காக்கள் போன்ற எடை குறைந்த, நீரில் மிதக்கும் அங்ககப் பொருள்கள், கொழு மணல் மற்றும் சிறுகற்கள் ஆகியவற்றை வடிக்கக் கூடியவை. |
2) திரை வடிகட்டி:
|
3) மைய விலக்கு விசைக்குழாய் வடிகட்டிகள்:
|
4) வட்டத் தகடு வடிகட்டிகள்:
|
பிரதானக் குழாய்:
|
துணைக்குழாய்:
|
பக்கக்குழாய்:
|
சொட்டுவான்கள்:
|
வடிகட்டிகளைப் பொருத்தும்போது கீழ்க்கண்ட கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும்.
|
|
|
ஜூன் |
5-6 |
அக்டோபர் |
4-6 |
ஜூலை |
4-5 |
நவம்பர் |
4-6 |
ஆகஸ்ட் |
5-6 |
டிசம்பர் |
4-6 |
செப்டம்பர் |
6-8 |
ஜனவரி |
8-10 |
அக்டோபர் |
10-12 |
பிப்ரவரி |
10-12 |
நவம்பர் |
8-10 |
மார்ச் |
16-18 |
டிசம்பர் |
6-8 |
ஏப்ரல் |
18-20 |
ஜனவரி |
10-12 |
மே |
20-22 |
பிப்ரவரி |
12-14 |
ஜூன் |
20-22 |
மார்ச் |
16-18 |
ஜூலை |
10-12 |
ஏப்ரல் |
20-22 |
ஆகஸ்ட் |
12-14 |
மே |
25-30 |
செப்டம்பர் |
14-16 |
பரப்பு |
1 எக்டர், அமைக்கும் இடைவெளி 2மீ X 2 மீ |
சொட்டு நீர் அமைப்புக்கான நிரந்தர செலவு |
ரூ.60,700 |
பரப்பு வட்டி வீதம் |
10.5% |
செயல்படும் காலம் |
7.5 ஆண்டுகள் |
ஒராண்டிற்கான செலவு (சொட்டு நீர் அமைப்பு) |
ரூ.17,456 |
பயிரிட ஆகும் செலவு |
ரூ.30,000 |
எதிர்பார்க்கும் மகசூல் |
47 டன்கள்/எக்டர் |
எதிர்பார்க்கும் வரவு செலவு விகிதம் |
4.5 |
12 மி.மீ பக்கக்குழாய் - ரூ.3.75 மீ |
டம்மி - ஒவ்வொன்றும் ரூ.0.30 |
வ.எண் |
பிரச்சினைகள் |
காரணங்கள் |
தீர்வுகள் |
1. |
துணைக்குழாய் மற்றும் பக்கக்குழாயின் இணைப்பில் நீர் கசிதல். |
இணைப்பு சேதமடைந்து இருத்தல். |
சேதத்தினை சரிப்படுத்துதல். |
2. |
பாலித்தீன் குழாயில் கசிவு இருத்தல். |
எலி/சாகுபடி முறைகளால் குழாய் பாதிக்கப்படுதல். |
பாலித்தீன் குழாயின் ஓட்டையை அடைத்தல். பாலி இணைப்பானை வெட்டப்பட்ட இடங்களில் பயன்படுத்துதல். |
3. |
பக்கக்குழாயின் முடிவு வரை நீர் செல்லாமல் இருத்தல். |
பக்கக்குழாயில் ஏதேனும் துளைகளோ, வெட்டுகளோ, வளைவோ இருக்கலாம். |
துளை மற்றும் வெட்டுபட்டிருப்பதை அடைத்தல். மடிப்பினை எடுத்துவிடுதல். |
4. |
நுனி அடைப்பை எடுத்து விடும்போது வெள்ளை நிறக்கலவை வெளிவருதல். |
நீரில் காரத்தன்மை (உவர்) அதிகமிருத்தல். சுத்தம் செய்யப்படாத பக்கக்குழாய். |
நுனியில் திறந்துவிட்டு பக்கக்குழாய்களை 15 நாட்களுக்கொருமுறை சுத்தம் செய்தல். |
5. |
பக்கக்குழாய்களிலிருந்து மிகக் குறைவாகவோ அல்லது அதிமாகவோ நீர் பாய்தல். |
சொட்டுவான்களில் அடைப்பு, ஏற்படுதல், குழாயின் நுனி மூடாமல் விடப்படுதல். |
மணல் திரைவடிகட்டியை சுத்தம் செய்தல், குழாய் நுனிக்கு மூடி இட்டு அடைத்தல். |
6. |
பக்கக் குழாயின் நுனிமூடியைத் திறக்கும்போது எண்ணெய் கலந்த பிசின் போன்ற பொருள் வெளிவருதல். |
நீரில் அதிக ஆல்காக்கள் மற்றும் இரும்பு பொருட்கள் இருத்தல். |
பக்கக்குழாயினை நீர் கொண்டு சுத்தம் செய்தல் அல்லது இரசாயனம் கொண்டு நேர்த்தி செய்தல். |
7. |
வடிகட்டிகளில் அதிக அழுத்தத் துளிகள் இருத்தல். |
வடிகட்டிகளில் அழுக்கு/துாசி படிதல். |
தினமும் 5 நிமிடம் பின்புறம் நீர் விட்டுக் கழுவுதல். வாரம் ஒரு முறைவடிகட்டியை சுத்தம் செய்தல். |
8. |
அழுத்தமானி வேலை செய்யாமல் இருத்தல். |
மழைநீர் உள்ளே புகுந்திருக்கலாம். அழுத்தமானியில் தேய்மானம் ஏற்பட்டிருக்கலாம். |
பிளாஸ்டிக் கொண்டு மூடவும். அழுத்த மானியை சரியாகப் பொருத்தவும். |
9. |
அழுத்தம் குறைதல். |
திறந்த பிரதானக் குழாயில் கசிவு இருத்தல். கிணற்றில் நீர் குறைவாக இருத்தல். |
திறப்பினை சரிசெய்து கசிவினைத் தடுத்தல். கிணறின் நீரளவுக்கு ஏற்றவாறு குழாயினை இறக்கி வைத்தல். |
10. |
மணல் வடிகட்டியின் நுழைவில் அதிக அழுத்தம் இருத்தல். |
மாற்றுவழி இல்லாதிருத்தல் அல்லது அடைத்திருத்தல். வடிகட்டியை மாற்றி அமைத்தல். வடிகட்டியில் குறைந்தளவு மணல் இருத்தல். |
வடிகட்டியை சரியாகப் பொருத்துதல். போதுமான அளவு மணலை நிரப்பவும். |
11. |
இரசாயன நேர்த்தி மற்றும் உரப்பாசனத்தின் போதும் வெஞ்சுரி சரியாக வேலை செய்யாதிருத்தல். |
வடிகட்டியில் அழுத்தம் அதிகமாக இருத்தல். வெஞ்சுரி அமைப்பு சரியாக பொருத்தப்படாமலிருத்தல். |
அழுத்தத்தைக் குறைக்க நீரினை வேறு மாற்று வழியே செலுத்திவிட்டு வெஞ்சுரி அமைப்பைச் சரிசெய்தல். |
12. |
திரை வடிகட்டியில் மணல் மற்றும் கழிவுகள் சேர்ந்திருத்தல். |
மாற்றுவழி இல்லாதிருத்தல் அல்லது அடைத்திருத்தல். வடிகட்டியை மாற்றி அமைத்தல். வடிகட்டியில் குறைந்தளவு மணல் இருத்தல். |
வடிகட்டியை சரியாகப் பொருத்துதல். போதுமான அளவு மணலை நிரப்பவும். |
13. |
காற்று வெளியேறும் வால்விலுருந்து நீர் கசிதல். |
காற்று வெளியேறும் வால்வு சேதமடைந்திருத்தல். |
சேதமடைந்த வால்வினை மாற்றிப் புதிய வால்வினைப் பொறுத்துதல். |
பயன்கள்:
|
குறைபாடுகள்: 1. சொட்டுவான்கள் அடைத்துக் கொள்ளுதல் |
|
இவை நீரில் நன்கு கரையக்கூடிய, குறைந்த உப்புத்தன்மையும், அதிக ஊட்டச்சத்துக்களும் கொண்ட திண்ம நிலை உரங்களாகும். இவை இரண்டாம் நிலை/நுண்ணுாட்டச் சத்துக்களைக் கொண்டோ, அல்லது அவை இன்றியோ இருக்கலாம். இவ்வுரங்கள் துல்லிய பண்ணைய முறையில் தெளிப்பு உரங்களாகவும், உரப்பாசனத்திற்கும் பயன்படுகின்றன. |
ஊட்டச்சத்து |
உரங்கள் |
கவனிக்க வேண்டியவை |
தழைச்சத்து |
நீர்ம அம்மோனியம் நைட்ரேட் |
ஏதுமில்லை |
அம்மோனியம் சல்பேட் |
70 பி.பி.எம்மிற்கு அதிகமான கால்சியம் உள்ள மண்ணில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். |
|
யூரியா |
ஏதுமில்லை |
|
மணிச்சத்து |
சூப்பர் பாஸ்பேட் |
நீரில் உள்ள திடப்பொருள்கள் நன்கு வடிக்கப்படவேண்டும். நீரின் அமில காரத் தன்மை சரியான அளவு இருப்பது அவசியம். |
பாஸ்போரிக் அமிலம் |
நீர்மத் தன்மை மிகுந்தது. அமில காரத் தன்மை சரிசெய்யப்பட்டது. மண்ணில் நுண்ணுாட்டச் சத்துப் பற்றாக்குறையைப் போக்க உதவும். |
|
சாம்பல்சத்து |
நீர்ம பொட்டாசியம் நைட்ரேட் |
ஏதுமில்லை |
|
நீர்ம பொட்டாசியம் குளோரைட் |
அதிகமான 300 பி.பி.எம் குளோரைடு கொண்ட நீரில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். |
இரும்பு,துத்தநாகம் |
கலவை |
ஏதுமில்லை |
|
|
|
|
கன்று நட்ட பின்பு வாரங்கள் |
யூரியா |
மொத்தம் (கி/வாழை) |
மியூரேட் ஆஃப் பொட்டாசியம் |
மொத்தம் (கி/வாழை) |
9-18 வது வாரம் வரை (10 வாரங்கள்) |
15 |
150 |
8.0 |
80 |
19 முதல் 30 வது வாரம் வரை (12 வாரங்கள்) |
10 |
120 |
10 |
120 |
31 முதல் 40 வது வாரம் வரை (10 வாரங்கள்) |
7.0 |
70 |
12 |
120 |
41 முதல் 46 வது வாரம் வரை (5 வாரங்கள்) |
--- |
--- |
10 |
50 |
மொத்தம் |
---- |
340 |
---- |
375 |
யூரியா |
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
431 |
375 |
415 |
625 |
545 |
602 |
கன்று நட்ட நாட்கள் |
ஆதாரம் |
அளவு (கி/வாழை) |
அடி உரம் |
ஒற்றை சூப்பர் பாஸ்பேட்/மூரேட் ஆப் பொட்டாசியம் |
125/105 |
30 நாட்கள் |
யூரியா |
62 |
75 நாட்கள் |
யூரியா/ ஒற்றை சூப்பர் பாஸ்பேட் |
62\125 |
125 நாட்கள் |
யூரியா/ ஒற்றை சூப்பர் பாஸ்பேட் |
62\125 |
165 நாட்கள் |
யூரியா/ மூரேட் ஆப் பொட்டாசியம் |
62\105 |
210 நாட்கள் |
யூரியா |
62 |
255 நாட்கள் |
யூரியா/ மூரேட் ஆப் பொட்டாசியம் |
62\105 |
300 நாட்கள் |
யூரியா/ மூரேட் ஆப் பொட்டாசியம் |
62\105 |
நீரில் கரையும் திட உரங்கள்:
உரங்கள்/கலவை
அளவு கி.கி/ஏக்கர்
19 : 19 : 19
192
00 : 52 : 34
59
13 : 00 : 46
458
யூரியா
337
நீரில் கரையும் திட உரங்களுக்கான அட்டவணை:
காலம் தரம்/கலவை மொத்த அளவு(கி.கி) கி.கி/நாள்/ஏக்கர் 1-90 நாட்கள் 19 : 19 : 19
192
2.13
13 : 00 : 46
93
1.033
யூரியா
70
0.777
91-150 நாட்கள் 00 : 52 : 34
59
0.983
13 : 00 : 46
82.5
1.376
யூரியா
117.5
1.958
151-300 நாட்கள் 13 : 00 : 46
282.5
1.884
யூரியா
150
1.000
கிராண்ட் நைன் இரக வாழைக்கான உரப்பாசன அட்டவணை:
பரிந்துரைக்கப்பட்ட அளவு: 200:35:300 கி தழை, மணி, சாம்பல்/வாழை
எக்டருக்கு 100 சதவீத மொத்த பரிந்துரை அளவையும், நீரில் கரையும் உரங்களாக 635:111.13:953 கி.கி தழை:மணி:சாம்பல் உரங்களையும் அளிக்கவும்.
இடைவெளி 1.5 X 2.1 மீ (3175 வாழைகள்/எக்டர்)
வ.எண் |
பயிர் நிலை |
காலம் |
உரக்கலவை |
மொத்த உரம் |
1 |
வேர்விடும் (துளிர்விடும்) பருவம் |
9-18 வது வாரம் (10 வாரங்கள்) |
13-0-45 |
423.13 |
2 |
வளர்ச்சிப் பருவம் |
19-30 வது வாரம் (12 வாரங்கள்) |
13-0-45 |
846.26 |
3 |
குலை தள்ளும் பருவம் |
31-42 வது வாரம் (12 வாரங்கள்) |
யூரியா |
275.60 |
4 |
காய் வளர்ச்சி மற்றும் அறுவடைப் பருவம் |
43-45 வது வாரம் (3 வாரங்கள்) |
0:0:50 |
152.48 |
கன்று நட்டு இரண்டாவது மாதத்தில் பாஸ்பரஸ்-எஸ்.எஸ்.பி யாக 111.13 x 6.25 = 695 கி.கி/எக்டர் இடப்படுகிறது.
பூவன், ரொபஸ்டா, குட்டை கேவண்டிஸ் இரகங்களுக்கான உரப்பாசன அட்டவணை:
பரிந்துரைக்கப்பட்ட அளவு: 100:35:330 கி தழை:மணி:சாம்பல்/வாழை
100% பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் நீரில் கரையும் உரங்கள் 317.5:1047.75 கி.கி நைட்ரஜன்: பொட்டாஷ்/எக்டர் இடலாம்.
இடைவெளி 1.5 X 2.1 மீ (3175 வாழைகள்/எக்டர்)
வ.எண் |
பயிர் நிலை |
காலம் |
உரக்கலவை |
மொத்த உரம் (கி.கி/எக்டர்) |
1 |
வேர்விடும் (துளிர்விடும்) பருவம் |
9-18வது வாரம் (10 வாரங்கள்) |
13- 0- 45 |
465.20 |
2 |
வளர்ச்சிப் பருவம் |
19-30வது வாரம் (12 வாரங்கள்) |
13- 0- 45 |
930.40 |
3 |
குலை தள்ளும் பருவம் |
31-42வது வாரம் (12 வாரங்கள்) |
யூரியா |
137.80 |
4 |
காய் வளர்ச்சி மற்றும் அறுவடைப் பருவம் |
43-45வது வாரம் (3 வாரங்கள்) |
0:0:50 |
167.64 |
‘பாஸ்பரஸ் உரம் எஸ்.எஸ்.பியாக கன்று நட்ட 2 வது மாதத்தில் 111.13 x 6.25 = 695 கி.கி/எக்டர் என்ற அளவில் இடவேண்டும்.
நேந்திரன் இரக வாழைக்கான உரப்பாசன அட்டவணை:
பரிந்துரைக்கப்பட்ட அளவு: 150:90:300 கி தழை:மணி:சாம்பல்/வாழை
100% பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் 476.25:953 கி நைட்ரஜன்:பொட்டாஷ் நீரில் கரையும் உரங்களை எக்டருக்கு இடலாம்.
இடைவெளி:1.5 X 2.1 மீ (3175 வாழைகள்/எக்டர்)
வ.எண் |
பயிர் நிலை |
காலம் |
உரக்கலவை |
மொத்த உரம் (கி.கி/எக்டர்) |
1 |
வேர்விடும் (துளிர்விடும்) பருவம் |
9-18வது வாரம் (10 வாரங்கள்) |
13 -0- 45 |
423.13 |
2 |
வளர்ச்சிப் பருவம் |
19-30வது வாரம் (12 வாரங்கள்) |
13- 0- 45 |
846.26 |
3 |
குலை தள்ளும் பருவம் |
31-42வது வாரம் (12 வாரங்கள்) |
யூரியா |
609.92 |
4 |
காய் வளர்ச்சி மற்றும் அறுவடைப் பருவம் |
43-45வது வாரம் (3 வாரங்கள்) |
0:0:50 |
152.48 |
‘பாஸ்பரஸினை எஸ்.எஸ்.பி உரமாக கன்று நட்ட இரண்டாவது மாதத்தில் 90 X3.17 X 6.25 = 1785.94 கி.கி/எக்டர் என்ற அளவில் இடவும்.
உரப்பாசன முறைகள்
உரப்பாசன முறைகள்:
உரங்கள், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்ற வேளாண் இரசாயனங்களை சொட்டு நீர்ப் பாசன அமைப்பினுள் கீழ்க்கண்ட வழிகளில் செலுத்தலாம்.
- புறவழி அழுத்தத் தொட்டி
- வெஞ்சுரி அமைப்பு மற்றும்
- நேரடியாகச் செலுத்தும் முறை
(i) புறவழி அழுத்தத் தொட்டி:
|
(ii) வெஞ்சுரி அமைப்பு/செலுத்துவான்:
|
(iii) நேரடியாகச் செலுத்தும் முறை:
|
உரப்பாசன உபகரணங்கள்
நீரில் கரையும் உரங்களைக் கீழ்கண்ட அமைப்புகளின் மூலம் செலுத்தலாம். அவை
வெஞ்சுரி உட்செலுத்தி
உரத்தொட்டி
உட்செலுத்தும் பம்பு
தானியங்கி உரப்பாசன கட்டுப்படுத்துவான்
வெளிப்புற விசை மூலம் உட்செலுத்தும் பம்பு
வெஞ்சுரி உட்செலுத்துவான்
இது ஒரு விலை மலிவான, எளிய கருவி. உரமானது இக்கருவியில் உருவாகும் பகுதி வெற்றிடத்தினுள் உறிஞ்சப்பட்டுப் பின் சுருங்கும்போது வெளிப்படும் அதிக அழுத்தத்தினால் பாசன நீரில் சொட்டு சொட்டாக விடப்படுகின்றது. இவ்வாறு வெண்சுரியின் வெற்றிடக் குழாயினால் உறிஞ்சப்பட்ட உரமானது பாசன நீரினுள் சொட்டு சொட்டாக வெளியிடப்படுகின்றது. இவ்வாறு வெண்சுரி அமைப்பு உரத்தொட்டியைக் காட்டிலும் சீராகச் செயல்பட்டாலும், அழுத்தம் அதிகரிக்கும்போதும், பாசன நீர் மற்றும் உரத்தின் கலப்பு விகிதம் வயலில் மாறுபடலாம். வெண்சுரியின் உறிஞ்சும் வீதம் மணிக்கு 30 முதல் 120 லிட்டர் உரக்கரைசல் ஆகும். |
உரத்தொட்டி
இம்முறையில் பாசன நீரானது பிரதானக் குழாயினை அடையும் முன்பே நீர்ம அல்லது கரையும் திட உரங்களைக் கொண்ட தொட்டியினுன் அனுப்பப்பட்டுப் பின்பு மீண்டும் பிரதானக் குழாயின் வழியே செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியிலும் பிரதானக் குழாயிலும் பொதுவாக அழுத்தம் ஒரே அளவு இருந்தாலும் தொட்டியின் உட்செல்லும் மற்றும் வெளிவரும் குழாய்களில் அழுத்தம் குறைக்கும் வால்வுகள் மூலம் அழுத்தமானது குறைக்கப்படுகிறது. இதனால் பிரதானக் குழாயிற்கு செல்லும் நீர் உரத்தொட்டியில் விழுமாறு செய்து, கரைக்கப்பட்ட உரக்கலவையை பாசன நீருடன் எடுத்துச் செல்லுமாறு செய்யப்பட்டுள்ளது. இம்முறையில் ஆரம்பத்தில் பாசன நீரில் உரக்கலவையின் செறிவு அதிகமாக இருக்கும். நேரம் செல்லச் செல்ல செறிவு குறையும். இதனால் வயலில் இடப்படும் உர அளவு சீராக இருப்பதில்லை. இவ்வுரத்தொட்டிகள் 90, 120 மற்றும் 160 லிட்டர் கொள்ளளவில் கிடைக்கின்றன. |
உரம் உட்செலுத்தும் பம்ப்
இவை பாசன நீரின் அழுத்தத்தினால் இயங்கும் பிஸ்டன் அல்லது டயப்ரம் பம்ப்புகள் இதன் உட்செலுத்தும் வீதம் பாசன நீரின் வேகத்திற்கு ஏற்றாற்போல் அமையும். உட்செலுத்தும் உரத்தின் அளவினை கூடுமானவரை கட்டுப்படுத்த இயலும். இதில் செலவு குறைவதோடு, அதிக இழப்பொன்றும் இல்லை. இதன் முக்கிய அம்சம் பாசனக் குழாயில் நீர் பாய்வது நின்றுவிட்டால் செலுத்தப்படும் உரமும் நின்றுவிடும். உரப்பாசனத்திற்கு இது ஒரு சிறந்த முறை. வெற்றுக்குழாயில் உறிஞ்சப்படும் உரக்கரைசலின் அளவு மணிக்கு 40 முதல் 160 லிட்டர் வரை ஆகும். |
தானியங்கி உரப்பாசனக் கட்டுப்படுத்தும் கருவி
இது சரியான உரப்பாசன அளவிற்காகப் பொருத்தப்பட்டுள்ளது. கீழ்கண்டவை இவ்வமைப்பின் பயன்பாடுகள் ஆகும்.
|
உரப்பாசனத்தில் பயன்படுத்தும் உரங்களின் தன்மைகள்
|
நன்மைகள்
|
குறைபாடுகள்
|