வாழை ஒரு வெப்பமண்டல பயிராகும். இதற்கு வெதுவெதுப்பான, ஈரப்பதமுள்ள காலநிலை தேவை.
தமிழ்நாடு : வாழையை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் பயிரிடலாம். அட்சரேகை 10° வடக்கு முதல் 12° வடக்கு வரை.
கேரளா : வாழையை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் பயிரிடலாம். அட்சரேகை 10° வடக்கு முதல் 14° வடக்கு வரை.
கர்நாடகா : வாழையை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் பயிரிடலாம். கடற்கரை, தெற்கு மற்றம் வடக்கு பகுதிகளுக்கான அட்சரேகை 14° வடக்கு முதல் 28° வடக்கு வரை.
வாழை உற்பத்தியில் மிகக் குறைவான குளிர் வெப்பநிலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். வாழை பயிரிட போதுமான அளவு வெப்பநிலை நிலவவேண்டும்.
தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களில் புயல் காற்றினால் பாதிப்புகள் இருக்கும். ஆகவே, வாழை பயிரிட ஏற்ற பகுதிகளை தேர்வு செய்யும் போது வெப்பநிலை 25° செ. முதல் 30° செ. யும், சராசரி மழையளவு ஒரு மாதத்திற்கு 100 மி.மீ. அளவு இருக்கவேண்டும்.
வாழை பயிரிட சராசரியாக 1700 மி.மீ. அளவு மழை வருடம் முழுவதும் பொழிந்திருக்கவேண்டும்.
தோட்டங்களில் நீர் தேங்கி இருந்தாலும் பனாமா வாடல் நோய் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
உலகம் முழுவதும் வாழை உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கும் காற்றின் விளைவு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் வாழைத் தோட்டம் அதிக பாதிப்படையும்.
சில சமயங்களில், பூப்பருவத்திற்கு முந்தைய நிலையில் தண்டுகளை தரைக்கு சற்று மேலே வெட்டுவதால் அதிக காற்றினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.
இருந்தாலும், இந்த முறை புயல் ஏற்படும் பகுதிகளில் மட்டும் நடைமுறையில் உள்ளது.
இலை பரப்பு பிரிய மணிக்கு 18-30 கிலோ மீட்டர் அளவு காற்றின் வேகம் இருந்தால் போதுமானது.
மணிக்கு 54-72 கிலோ மீட்டர் அளவு காற்று வீசினால், வாழை மரங்கள் கீழே விழும். மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால், வாழைத் தோட்டங்கள் முழுவதும் அழிந்துவிடும்.
வாழை பயிரிடும் போது, ஈரப்பதத்தை அவ்வளவாக கருத்தில் கொள்ளவேண்டாம்.
50 சதம் அளவிற்காவது ஈரப்பதம்இருக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
வறண்ட காற்று வாழை இலைகளை சேதப்படுத்தும்.
குறிப்பாக ரோட்ரோங்களிலும், காடுகளின் ஓரங்களிலும் பகுதி நிழலாக இருந்தால் நல்லது. மிக அதிகப்படியான நிழல் காய் வளர்ச்சியடைய தடையாக இருக்கும். அதே போல், அதிகப்படியான சூரிய ஒளியால் அதிக நீர் பாய்ச்சவேன்டும். சூரிய ஒளி அதிகமாகவும், நல்ல வெளிச்சமும் இருந்தால் வாழை நன்றாக வளரும்.குறைந்தபட்சம் 12 மணி நேரம் இருக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.