இந்தியாவில் பயிரிடப்படும் பழப்பயிர்களில் வாழை ஒரு முக்கியமான பயிராகும்.
நம் நாட்டில் பயிரிடப்படும் பரப்பளவை பொறுத்து, மாவிற்கு அடுத்தபடியாக வாழை இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
உலகத்திலேயே இந்தியா தான் அதிகளவில் வாழையை உற்பத்தி செய்வதும், பயன்படுத்துவதும் ஆகும். உலகளவில் இந்தியா 16.80 மில்லியன் டன்கள் அளவு வாழையை உற்பத்தி செய்கிறது மற்றும் மொத்த பழ உற்பத்தியில் 33% அளவு இருக்கிறது.
உலக அளவில் விற்பனையாகும் வாழை அளவை வட இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாழை மட்டுமே 2.8 சதம் அளவிற்கு பங்கெடுத்துக் கொள்கிறது.
தாவர இனம் |
: |
பிளேன்டே |
பிரிவு |
: |
மேக்னோலியோபைட்டா |
தொகுப்பு |
: |
எபிகினே |
வகுப்பு |
: |
லில்லியோப்ஸிடா |
வரிசை |
: |
ஜிஞ்ஜிபெரேல்ஸ் |
குடும்பம் |
: |
மூசேசியே |
பேரினம் |
: |
மூசா |
சிற்றினம் |
: |
அக்குமினேட்டா பல்பிஸியானா |
பழத்தின் நடுவே விதைகள் காணப்படும். விதைகள் முதிர்ச்சி அடையாது. பொதுவாக அவை அடர்நிறப் புள்ளிகள் போன்று காணப்படும்.
சாகுபடி செய்யப்படும் இரகங்களில், விதைகள் இல்லாதது போன்று இருக்கும் அல்லது பழத்தின் நடுவில் மிகச்சிறிய கருப்பு நிறப் புள்ளிகள் போன்றும் காணப்படும்.
தரிசு நிலங்களில் விளையும் இரகங்களில், விதைகள் பெரியதாக, கெட்டியாக, அதிக எண்ணிக்கையில் காணப்படும்.
வாழையானது சல்லி வேர்கள் அல்லது முதன்மை தண்டு வேர்களை கொண்டிருக்கும்.
வேரானது கிழங்கின் நடு நீள உருளைப் பகுதியின் வெளிப்புறத்திலிருந்து தோன்றுகிறது.
வேரில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கிழங்கிற்கு இணையாக வளரக்கூடியவை. கிழங்கிற்கு இணையாக வளரக்கூடிய வேர்கள், எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.
வேர்கள் நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்சப் பயன்படுகின்றன. வாழைக்கு மண்ணில், பிடிமானமாக பயன்படுகின்றன. வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து, வாழை வளர்வதற்கு பயன்படுகிறது.
பொதுவாக வேர்கள், வாழை மரத்திலிருந்து ஐந்து மீட்டர் வரை பரவியிருந்தாலும், நிறைய வேர்கள் தண்டிலிருந்து 60 செ.மீ. சுற்றளவில் மண் காணப்படும்.
கடினமான மண் வகைகள் மற்றும் அதிக களிமண் உள்ள, நீர்பிடிப்பு அதிகமாக உள்ள மண்களில், வேர்களின் வளர்ச்சி குறையும் அல்ரது தடைபடும். ஆனால், பொலிவான மண் வகைகளில், வேரானது பக்கவாட்டில் 30 அடி வரை வளரக்கூடும்.
நல்ல ஆரோக்கியமான வேரானது முதலில் வெண்மையானவும், பின்பு தக்கை போன்றும் மாறுகின்றது.
உண்மையானத் தண்டு, பூமிக்கடியில் காணப்படும். அதை வேர்க்கிழங்கு என்போம்.
தரை மேல் உள்ள தண்டு பொய்த் தண்டாகும்.
இது இலையடி உறைகள் ஒன்றைச் சுற்றி ஒன்று சூழ்ந்து உருவாகிறது.
வாழை வளர்கின்ற பொழுது, முதிர்ந்த இலை உறைகள், வளர்கின்ற இளம் இலைகளால் அதனுள்ளே வெளித் தள்ளப்படுவதால் வழவழப்பான வாளிப்பான பொய்த் தண்டு உருவாகிறது.
வாழை இலையில் இலை உறை, இலைக்காம்பு மற்றும் இலை ஆகியவை உள்ளன. பொதுவாக வாழை இலையானது பச்சை நிறத்தில் காணப்படும். ஆனால் நேந்திரன், ரஸ்தாளி, செவ்வாழை, பூவன், கேவண்டிஷ் (பச்சை வாழை), பச்சநாடன் மற்றும் பிற ரகங்களின் நடுநரம்பு மற்றும் இலைகளில் ஊதா நிறத்தில் பட்டைகள் குறிப்பாக இளம் பருவத்தில் அதாவது கன்று நட்ட 3 முதல் 4 மாதங்களில் காணப்படும்.
இலைகள் சிறகு இணைப்போக்கு நரம்பமைப்புடையது. சுழல் முறையில் காணப்படுகிறது.
பருவ நிலைகள் மற்றம் காலங்களைப் பொருத்து இலைகள் உருவாகும் விகிதம் மாறுபடும்.
சராசரியாக ஒரு இலை வெளிவருவதற்கு 6 முதல் 8 நாட்கள் தேவைப்படும். வாழையில் நல்ல மகசூல் எடுப்பதற்கு, சராசரியாக குறைந்தது 10 முதல் 12 நோயில்லாத பச்சை இலைகள், வாழை பூக்கும் தருணத்தில் இருக்கவேண்டும்.
வாழை ரகங்களைப் பொருத்து 30 முதல் 40 இலைகள் வரை இருக்கும். குலை தள்ளிய பின்பு இலைகள் வருவது நின்று விடும்.
கண்ணாடி இலைகளையும் சேர்த்து, அனைத்து இலைகளும் வெளிவந்த பின்பு, தண்டின் மேல்பகுதியில் வாழை பூ வெளிவருகிறது.
இந்த பூவானது சாகுபடி செய்யும் ரகங்களில், வளைந்து பூமியை நோக்கி தொங்கும். ஆனால் காட்டு வாழையின் சில வகைகளில், இவை விறைப்பாக இருக்கும்.
மஞ்சரியானது பூக்களைக் கொண்டிருக்கும் இந்த பூக்களானது கொத்தாக இரண்டு வரிசைகளில், பூக்காம்பு பகுதிகளில் அமைந்திருக்கும்.
இந்த பூக்களை தடித்த மெழுகுத்தன்மையுள்ள பூ மடல்கள் மூடியிருக்கும். இது ஈட்டி நுனி வடிவம் அல்லது முட்டை வடிவம் கொண்டிருக்கும்.
ஒரே மரத்தில் இரு வகை பூக்களும் இருக்கும். பூக்கள் விரியும் போது, பூ மடல்கள் பின் பக்கமாக சுருண்டு, முடிவில் கீழே உதிர்ந்துவிடும்.
கன்று நடவு செய்த 6 முதல் 8 மாதங்களில், பூவானது கிழங்கிலிருந்து உற்பத்தியாகத் தொடங்குகிறது. இந்த பூவின் தண்டானது, வாழைத் தண்டின் நடுப்பகுதி வழியாக மேல்நோக்கி வளரும்.
பூ மடல்களின் நுனியில் பூக்கள் இரு வரிசைகளில் அமைந்திருக்கும். ஒரு கணுவிற்கு 12 முதல் 20 என்ற எண்ணிக்கையில் இருக்கும். பூவின் அடியில் உள்ள பூக்கள் பெண் மலராகவும், நுனியில் உள்ள பூக்கள் ஆண் மலராகவும் இருக்கும்.
பெண் பூவில் மேலே உள்ள மகரந்தமானது மலட்டுத் தன்மை கொண்டதாகும். ஆனாலும், சில ரகங்களில் பூக்கள் மற்றும் பூ மடல்கள் கீழே விழாமல் அதிலேயே இருக்கும்.
பூவானது பொவாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக, இரண்டு வரிசைகளில் பூங்கொத்து திரளாக காணப்படும்.
6 புல்லி இதழ்கள் இரண்டு வட்டங்களில், வரிசைக்கு மூன்றாக, தனித்தனியாக (அ) இணைந்து அமைந்திருக்கும்.
மூசா வகையில், வெளி வட்டத்தில் 3 புல்லி இதழ்களும், உள் வட்டத்தில் 2 புல்லி இதழ்களும் ஒன்றாக இணைந்து, 5 சொர சொரப்பான குழரய் போன்ற அமைப்பை உருவாக்குகின்றன.
உள் வட்டத்தில் கடைசில் உள்ள புல்லி இதழ் தனியாக இருக்கும்.
இது அகலமாக, கண்ணாடி போன்று இருக்கும்.
6 மகரந்த கேசரங்கள், இரண்டு வரிசைகளில், வரிசைக்கு மூன்றாக, புல்லி இதழ்களுக்கு எதிராக அமைந்திருக்கும்.
5 மகரந்த கேசரங்கள் செயலாற்றும் தன்மை கொண்டவை. உள்ளே உள்ள ஆறாவது மகரந்தகேசரம் இருக்காது அல்லது ஸ்டேமினேட் (ஆண்) மலர்கள் என்று குறிப்பிடுகிறோம்.
சிதைவுற்ற சூலகம், மூன்று சூலக இழைகள், மூன்று அறைகள், எண்ணற்ற சூல்கள்கொண்டிருக்கும்.
சூல் தண்டு தனித்து, நூல் வடிவத்தில் இருக்கும். சூல் முடி மூன்று அறைகளை உடையது.
பொதுவாக வாழையில், ஆண் பெண் பூக்கள் இரண்டுமே இருந்தாலும், இதில் சேர்க்கை நிகழ்வது இல்லை. பெண் பூவில் சூல் பையும், சூல் முடியும் இருந்தாலும், அதில் கருத்தரிப்பது இல்லை. மகரந்த சேர்க்கை இல்லாமலேயே வாழைக்காய்கள் உற்பத்தியாகின்றன. இந்த நிகழ்ச்சி 'பார்த்தினோ கார்பி' என்று அழைக்கப்படுகிறது.
வாழைக்காயானது, பூ வெளிவந்த 90 முதல் 120 நாட்களில் முதிர்ச்சியடைகிறது. குலையில் உள்ள ஒவ்வொரு தொகுப்பையும் சீப்பு என்கிறோம். ஒவ்வொரு தாரிலும் உள்ள சீப்புகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது. ஒவ்வொரு சீப்புகளிலும் இரண்டு வரிசையில் காய்கள் அமைந்திருக்கும்.
காயானது சதைப்பற்றுள்ள பழ வகையைச் சேர்ந்தது. மெல்லிய வெளித்தோலைக் கொண்டிருக்கும். சற்று நார் போன்ற நடுப்பகுதியையும், சதைப்புள்ள உள் பகுதியையும் கொண்டிருக்கும்.
ஈரப்பதம் (%) |
70.1 |
தாதுப்பொருட்கள் (மி.கி./100கி.) |
ஊட்டச்சத்து (மி.கி./100கி.) |
||||
புரோட்டீன் (%) |
1.2 |
பாஸ்பரஸ் |
36 |
தாமிரம் |
0.16 |
கரோட்டீன் |
78 |
கார்போஹைட்டிரேட் (%) |
27.2 |
பொட்டாசியம் |
88 |
மாங்கனீசு |
0.2 |
தையமின் |
0.05 |
கொழுப்பு (%) |
0.3 |
கால்சியம் |
17 |
துத்தநாகம் |
0.15 |
ரிபோபிலேவின் |
0.08 |
தாதுப் பொருள் (%) |
0.8 |
மக்னீசியம் |
41 |
கந்தகம் |
7 |
நியாசின் |
0.5 |
நார்ச்சத்து (%) |
0.3 |
இரும்பு |
0.36 |
குளோரின் |
8 |
விட்டமின் C |
7 |
கலோரிகள்(கி. கலோரி) |
116 |
சோடியம் |
36.6 |
குரோமியம் |
0.004 |
|
|