வாழை (மூசா இனங்கள்)
குடும்பம் : மூசேசியே

வாழை ஒரு பழமையான, மிக பிரபலமான பழமாகும். வாழை சொர்க்கத்தின் ஆப்பிள் என்று் அழைக்கப்படுகிறது. இதனுடைய பிறப்பிடம் இந்திய மலேயன் பகுதிகளில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. இது பரவலாக பழமாகவே உண்ணப்படுகிறது. தண்டின் நடுப்பகுதி காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், தண்டுப் பகுதி பேப்பர் மற்றும் கார்டுபோர்டு அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
உலகளவில் வாழை பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 4,90,700 எக்டர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது. இதிலிருந்து 168,13,500 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவிலான உற்பத்தியில் 17% அளவு உற்பத்தி இந்தியாவிலிருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவு பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.  
தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதில் திருச்சி, தூத்துக்குடி, கோயமுத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இது உயரமாக வளரும் ஒரு செடி வகையாகும். நிலத்தில் அடியில் உள்ள தண்டிலிருந்து உருவாகும் பொய்த்தண்டை சுற்றி இலையுறைகள் சூழ்ந்திருக்கும். பூங்கொத்து அல்லது மஞ்சரி தண்டின் முடிவில் தோன்றும். ஒவ்வொரு காம்பிலும் பெரிய மடல்கள் சுற்றியிருக்கும். மஞ்சரித் தண்டின் அடிப்பகுதியில் இருக்கும் பூக்கள் பெண் பூவாகவும், நுனியில் உள்ளவை ஆண் பூவாகவும் உள்ளன. பெண் பூவை அடுத்து உள்ள அச்சில் பொதுவாக ஒன்றும் இல்லாமல் இருக்கும் . சில வகைகளில் பூக்கள் மற்றும் பூவடிச் செதில்கள் மட்டும் இருக்கும். இதனுடைய பழம் பெர்ரி வகையை சார்ந்தது. உண்ணும் வகைகளில் கருச்சேர்க்கை நடைபெறாமல் கனி உருவாகும் தன்மையில் பழங்களை உருவாக்கும்.

மேலே செல்க