வணிக மேலாண்மை


  • வாழைப் பழங்கள்  விரைவில் பழுத்து வீணாகிவிடும் ஆதலால் கூடிய விரைவில் விற்பனை செய்யப்பட வேண்டும்.

  • நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனை முறை விவசாயிகளுக்கு அதிக இலாபத்தைப் பெற்றுத் தரும்.

  • இவ்விற்பனை முறையானது சரியான நேரத்தில் வாழையினை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதாக இருக்க வேண்டும்.

  • இம்முறையின் மூலம் விற்பனையில் ஈடுபடும் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைக்க இயலும்.

  • அருகே உள்ள சந்தைகளில் தேவை அதிகரித்தால், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள்  தவிர ஏலமிடுபவர்களின் சேவையும் தேவைப்படும்.

  • வாழைக்குலைகளை அதிக தொலைவில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் போது, இந்த விற்பனை முறையில் ஈடுபடும் இடைத்தரகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

உள்ளூர் சந்தைகள்
ஏற்றுமதி
ஏற்றுமதி தரம்
சந்தைத் தகவல்கள்

உள்ளூர் சந்தைகள்

உற்பத்தி விநியோகம்

சந்தைப்படுத்தும் வழிமுறைகள்

தமிழ்நாட்டிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்

முக்கியச் சந்தைப் பகுதிகள்

இந்தியாவில் வாழை அதிகம் உற்பத்தியாகும் இடங்கள்


உள்ளூர் சந்தைகள்


உற்பத்தி விநியோகம்

  • குலைகளை முதல் நிலைச் சந்தையிலிருந்து இடைநிலைச் சந்தைக்குக் கொண்டு வருதல்:

  • வாழையானது தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் விளைவிக்கப்பட்டு பெங்களூர், மைசூர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகிறது.

  • மேலும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் விளையும் வட இந்திய வாழைகள் போபால், ஜெய்பூர், லக்னோ மற்றும் டெல்லி, சந்தைகளுக்கும் ஹிமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா போன்ற சந்தைகளுக்கும் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றன.

  • மேற்கு வங்காளம் மற்றும்  ஒரிஸாவில் உற்பத்தி செய்யப்பட்டு பாட்னா, ராஞ்சி, ராய்பூர், கோல்கத்தா, புவனேஸ்வர் போன்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றது.

  • வடகிழக்கு மாநிலங்களில் விளைவிக்கப்படும் வாழைகள் அந்தந்தப் பகுதிகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.


தமிழ்நாட்டின் சந்தைப்படுத்தும் வழிமுறைகள்

வழிமுறை I
வழிமுறை II

வழிமுறை III
வழிமுறை IV

 

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்


தமிழ்நாட்டிலுள்ள வாழைக்கான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்:

1

தொட்டியம்

தொட்டியம் - 621 215.

2

காட்டுப் புத்துார்

காட்டுப்புத்துார் - 621 207.

3

சோளக்காடு

சோளக்காடு, கொல்லிமலை, நாமக்கல் தாலுகா.

4

மேலுார்

திருச்சி ரோடு, உழவர் சந்தை வளாகம், மேலுார் - 625 106.

 

வாழை அதிகம் பயிரிடும் மாநிலங்களிலுள்ள முக்கியச் சந்தைப் பகுதிகள்:


 

மாநிலம்

மாவட்டம் (சந்தை)

தொகுதி

தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளி

துறையூர், தொட்டியம், முசிறி, மணச்சநல்லுார், லால்குடி, ஸ்ரீரங்கம்.

கோயம்புத்துார்

மேட்டுப்பாளையம்,அவினாசி, திருப்பூர்,பல்லடம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை.

தேனி

பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனுார், உத்தமபாளையம், கம்பம், மேகமலை, வடுகபட்டி.

கர்நாடகா

உத்தர்கன்னட்

மலியால்,முங்காடு, எல்லாபூர், சிர்சி, சித்தாபூர், பட்கல், அன்கோல்

உடுப்பி

குண்டபுரா, கொக்காரோனி, கார்கல், கோலீகுடிலேஜ், சித்துார், ஹர்ணம், சிவபுறா, கொட்லமேலி, எர்மல்

மஹாராஸ்டிரா

ஜால்கான்

சோப்டா, யாவல், ராவர், எடல்பட், பூஸ்வால், ஜாம்னா, பச்சோரா,பட்கான், சாலிஸ்கான், பரோலா, போரடி, அமைனிர்.

துாலி

சிர்பூர், சிந்கேடா, சக்ரி, நர்தனா, போரடி, சாங்வி.

புல்தானா

மல்காபூர், கம்கான், மேககர், சிக்லி.

ஆந்திரப்பிரதேசம்

குண்டூர்

தங்கேடா, பச்சபள்ளி, பிடுகுரல்லா, சட்டினப்பலீ, வின்கோடா, பொன்னுரு, பாப்டியா, நரசரோபேட், புர்தி, பிராட்டிபடு, பல்லபட்லா.

விஜயநகரம்

பார்வதிபுரம், போப்லி, கஜபதி நகரம், சிபுரபல்லா, சாலு.

பிரகாசம்

ஈரகோண்டபாலம், மார்கோபூர், கிடலுார், தார்லுபடு, பொடிலி, டர்சாய், பாலிபாலி, சுண்டி.

குஜராத்

சூரத்

மங்குரோல், உமர்வாடா, மாண்வி, வியாரா, வாலோட், மகுவா, பால்சானா, காம்ராஜ், ஓல்பாட், நிஷார், வடோலி, உனல்.

ஆனந்த்

சொஜித்ரா, சர்ஷா, சுனவ், உன்டேல், லுானாஜ், ராஸ், காந்தா, மொராய், வட்டா-1, போசாஸான், துவேன், கம்பத், ரோஹோனி, வட்கம்.

மத்தியப் பிரதேசம்

காந்வா

ஹர்சுத், பந்தனா, நேபாநகர், புர்ஹன்பூர்.

தார்

பட்னாவர், சர்தார்பூர், காந்த்வானி, மனாவர், குக்ஷி, தர்மபுரி.

பத்வானி

திக்ரி, ராஜ்பூர், நேவாளி, பன்சேமல், சேந்வா.

 

இந்தியாவில் வாழை அதிகம் உற்பத்தியாகும் இடங்கள்:


மாநிலம்

மாவட்டங்கள்

தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளி, தேனி, கோயம்புத்துார், ஈரோடு, புதுக்கோட்டை, வேலுார், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், நாமக்கல், மதுரை.

கர்நாடகா

ஷிமோகா, தக்ஷின் கன்னடா, டும்கூர், பெங்களூர், உடுப்பி, உத்தர்கன்னடா, பேல்கம், சிக்மங்களூர், ஹசான், மாண்டியா.

மஹாராஷ்டிரா

ஜால்கன், துலே, புல்தானா.

ஆந்திரப்பிரதேசம்

Cகடப்பா, குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விஜயநகரம், விசாகப்பட்டினம், கர்னுால், கிருஷ்ணா, பிரகாசம்.

அஸ்ஸாம்

பார்பேடா, கம்ரப், நால்பேரி, நாகன், சோனிட்பூர்.

குஜராத்

சூரத், ஆனந்த், புருச், நர்மதா, வடோதரா.

 

மேலே செல்க

ஏற்றுமதி

தமிழ்நாடு

கர்நாடகா

கேரளா


ஏற்றுமதி தரம்

1.பிரிவுகள்

வாழை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

முதல் தரப் பிரிவு

பிரிவு l     

பிரிவு ll     

முதல் தரப் பிரிவு:
  • இவ்பிரிவிலுள்ள வாழைக்காய்கள் முதல் தரமானவை. இவை இரகம் அல்லது வணிக ரீதியான பயன்பாட்டிற்குரிய பண்புகளைப் பெற்று இருக்கும்.

  • இக்காய்கள் எந்த ஒரு குறைபாடுமின்றி, அதன் தன்மையில் சிறிது வேறுபாடு இருந்தாலும், அவை வெளித்தோற்றத்தில் தெரியாத வண்ணம் வாளிப்பான தோற்றம் கொண்டிருக்கும். இதன் தோற்றம் தவிர, தரமானதாக, பெட்டியில் சீராக அடுக்கப்பட்டிருப்பதோடு, சேமிப்புக் காலமும் அதிகம்.


பிரிவு l
  • இந்த வகுப்பில் இடம்பெறும் காய்களும் நன்கு தரமானவை. இவை இரகத்தின் தனிப் பண்பாகும்.

  • காய்களில் சிறிய அளவில் குறைபாடுகள் இருப்பது அனுமதிக்கப்பட்டாலும், அவற்றினால் குலையின் தரம், பெட்டியில் அடுக்குதல் மற்றும் சேமிப்புக்காலம் பாதிக்கப்படாதவாறு தேர்வு செய்யப்படும். இதன் வடிவம் மற்றும் நிறத்தில் சிறு அளவில் வேறுபாடு தோன்றும். உராய்வினால் தோலில் சிறிது காயம்படல் போன்ற குறைபாடுகள் மொத்தப்பரப்பில் 2 செ.மீ ற்கு அதிகமாக இருத்தல் கூடாது.

பிரிவு ll
  • இவ்பிரிவில் உயர்தர வகுப்பில் புறக்கணிக்கப்பட்ட எனினும் பிரிவு 2 -ல் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற காய்கள் அடங்கும். முக்கியப் பண்புகளான தரம், பெட்டிகளில் சீராக அடுக்குதல் மற்றும் சேமிப்புக்காலம் தவிர கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள குறைபாடுகள் கொண்ட வாழைகள் இப்பிரிவில் அடங்கும்.

  • வடிவம் மற்றும் நிறம் போன்றவற்றில் சிறிய குறைபாடுகள் இருந்தாலும் வாழைக்குரிய பண்புகள் இருக்க வேண்டும்.

  • வாழைக் காய்களின் தோலில் தழும்பு, உராய்வு, தேய்வு, கறை மற்றும் பிற குறைபாடுகள் மொத்தப்பரப்பில் 4 செ.மீ அளவிற்குள் இருக்கலாம். ஆனால் இக்குறைகள் காயின் சதைப்பகுதியினை எந்த நிலையிலும் பாதிக்கக் கூடாது.

2.மாசுப் படுத்துபவை மற்றும் சுகாதாரம்


மாசுபடுத்துபவை
கன உலோகங்கள்:

வாழைக்கென கோடக்ஸ் அலிமென்டாரிஸ் கமிஷன் (சர்வதேச உணவுப்பொருள் தொகுப்பு ஆணைக்குழு) வினால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு மிகாமல் இருப்பது அவசியம் ஆகும்.

பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மை :

வாழைக்கென சர்வதேச உணவுப்பொருள் தொகுப்பானைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு மிகாமல் இருப்பது அவசியம்.

சுகாதாரம்
  • உணவுப் பொருள் சுகாதார பொதுக் கொள்கைகள் (சிஏசி/ஆர்சிபி 1 -1969, ரிவி-4-2003)-இன், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான சுகாதார அளவுகள் (சிஏசி/ஆர் சி பி 53-2003) மற்றும் இது போன்ற சர்வதேச அளவிலான சுகாதார அளவீடுகள் அவற்றின் பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளப்படி வாழைக்காய்கள் தரத்துடன் கையாளப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

  • உணவுப் பொருள்களுக்கான நுண்ணுயிரி அளவு நிறுவுதல் போன்றவற்றின் கொள்கைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு வாழையில் நுண்ணுயிரிகளின் அளவு குறிப்பிட்ட விகிதத்தில் பேணப்பட வேண்டும். (சிஏசி/ஜி எல் 21-1997).

3.ஏற்றுமதி செய்யத் தேவைப்படும் ஆவணங்கள்


a)விளைபொருள் பற்றிய ஆவணங்கள்
a) விலைப்பட்டியல் b) பெட்டிகளின் பட்டியல் c) ஏற்றுமதி செய்யும் பொருளின் ஆதார இடம் பற்றிய சான்றிதழ்

b)சரக்கேற்றுதல் பற்றிய ஆவணங்கள்
a) சரக்கு ஏற்றிய இரசீது b) இரகத்தின் பெற்றோர் பற்றிய இரசீது c) கையாளுவதற்கான தொகை செலுத்திய இரசீது

d) விமான தொகை செலுத்திய இரசீது

c)தொகை செலுத்தியதற்கான ஆவணங்கள்
a) கடன் சான்று b) பரிமாற்ற இரசீது

d)விளைபொருளின் தரம் பற்றிய ஆவணங்கள்
a) பைட்டோ சானிடரி சான்றிதழ் b) ஏற்றுமதி செய்யும் தொலைவு (குளோபல் கேப்- Global Gap)சான்றிதழ்

c) சுகாதார சான்றிதழ்
e) அங்ககச் சான்றிதழ்

  • ஏற்றுமதி செய்யும் வாழையானது அங்கக முறையில் விளைவிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் அவசியமாகும்.

f) அந்நிய செலாவணி பற்றிய ஆவணங்கள்
ஜி.ஆர் (GR) படிவம்: இந்திய ரிசர்வ் வங்கிக்கு பொருளை வாங்குபவருக்கு 180 நாட்ளில் (கடலில் சரக்கு ஏற்றிய) சென்று அடைந்துவிடும் என்பதை உறுதிப்படுத்தும் படிவம் ஒன்றினை வழங்கவேண்டும்.

g) பிற ஆவணங்கள்
வங்கி உணர்தல் சான்றிதழ் (BRC): இது பரிமாற்றம் செய்யும் வெளிநாட்டு வங்கிக்கு பொருளை இறக்குமதி செய்வோர் பணம் செலுத்திய உடன் வங்கியினால் அளிக்கப்படும் சான்றிதழ் ஆகும்.

4.ஏற்றுமதிக்குத் தகுந்த வாழை இரகங்கள்


குழு

துணைக்குழு

முக்கிய இரகம்

AA

இனிப்பு-பிக்

இனிப்பு பிக்,பிசாங் மாஸ்,அமாஸ் டேட்,பொகாடிலோ.

AB

நெய் பூவன்

நெய் பூவன், சபட் வேல்சி

 

AAA

கேவண்டிஷ்

குட்டை கேவண்டிஷ், பெரிய கேவண்டிஷ், லகேடன், போயோ(ரொபஸ்டா), வில்லியம்ஸ், அமெரிக்கானி, வேலரி, அர்விஸ்.

கிராஸ் மைக்கேல்

கிராஸ் மைக்கேல், ஹைகேட்

பிங்க் பிக்(இளஞ்சிவப்பு)

பிங்க் பிக், பச்சை இளஞ்சிவப்பு பிக்

போட்டா

 

 

AAB

ஆப்பிள் பிக்

ஆப்பிள் சிக், சில்க்

மாதுளை

பாகோவன், பராட்டா ஆனா

மைசூர்

மைசூர், பிசாங் ஷைலான், கோரோலோ

5.குறியிடுதல்/பெயரிடுதல்


நுகர்வோர்க்கான பாக்கெட்டுகள்:
  • தொகுப்பாணையத்தின் அடைத்து வைத்து விற்கும் பொருள்களுக்கான குறியிடுதல் பற்றிய தர விதிகள் தவிர கீழ்க்காண்பவைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

விளைபொருளின் தன்மை :
  • பொருட்கள்(காய்கள்) வெளியில் தெரியாத வண்ணம் அடைக்கப்பட்டிருக்குமானால் பாக்கெட்/பெட்டியின் மீது பொருளின் பெயர் மற்றும் இரகம் போன்றவையும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மொத்த விற்பனைப் பெட்டி/கன்டெய்னர்கள் :
  • ஒவ்வொரு பெட்டியிலும் அல்லது சரக்கு ஏற்றும் தாளில் ஒரே பக்கத்தில் நன்கு வெளியில் தெளிவாகத் தெரியுமாறு, எளிதில் அழியாவண்ணம், பொருள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அடையாளமிடுதல் :
  • ஏற்றுமதியாளரின் பெயர், முகவரி, பெட்டி கட்டியவர் அல்லது/மற்றும் எடுத்துச் சென்று சேர்ப்பவரின் விபரங்கள் அடையாளக் குறிகளாக இணைக்கப்பட வேண்டும்.
விளைபொருள் தோற்றம்   :
  • அப்பொருள் விளைவிக்கப்பட்ட நாடு, மாவட்டம் மற்றும் இடம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
வணிக/வர்த்தக அடையாளம்  :
  • வாழைகள் காய்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் (சரியான அளவில்);
  • வகுப்பு;
  • நிகர எடை(தேவைப்படின்);
  • அலுவலக சோதனை முத்திரை (தேவைப்படின்)

6.ஏற்றுமதிக்கு காய்களைத் தயார் செய்வது பற்றிய குறிப்புகள்


சீராகக் காய்களைத் தேர்ந்தெடுத்தல்

ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த, ஒரே இரக வாழைகள் சீராக அடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலே தெரியுமாறு வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் உள்ளே உள்ள அனைத்திற்கும் மாதிரியாகத் திகழ வேண்டும்.

பெட்டிகளில் அடுக்குதல்
  • வாழைப்பழங்கள் /காய்கள் பேக் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் புதியதாக, சுத்தமானதாவும் காய்களின் தரத்திற்கு ஊறு விளைவிக்காதவாறு இருப்பது அவசியம். மேலும் பேக் செய்யும் பொருட்கள் காய்களின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ சேதம் ஏற்படுத்தா வண்ணம் பேக் செய்யப்பட வேண்டும். ஏற்றுமதி பற்றிய தகவல்கள் குறிப்பிட்ட வகை பேப்பரிலோ அல்லது ஸ்டாம்பு கொண்ட பேப்பரிலோ எழுதப்பட்டிருக்கலாம். எனினும் இவ்வாறு அச்சிடப்பயன்படுத்தும் மை அல்லது அச்சுப் பொருட்கள் விஷத்தன்மை அற்று இருக்க வேண்டும்.

  • வாழையினை சர்வதேச தர பழங்கள் மற்றும் காய்கறிகள் பேக் செய்யும் விதிமுறைகளின் பரிந்துரைப்படி மட்டுமே பேக் செய்யப்பட வேண்டும்.

கன்டெய்னர்கள் பற்றிய விவரம்

  • வாழையினை பேக் செய்ய பயன்படுத்தும் கன்டெய்னர்கள் (பெட்டிகள்) சரியான அளவு காற்றோட்டமும், நல்ல தரத்துடனும் வாழையை பதப்படுத்தி வைக்கக் கூடியவாறு சுகாதாரமான முறையில் சரக்கு ஏற்றும்போது கையாளப்பட வேண்டும். இதில் எந்தவொரு துர்நாற்றமோ, பிற பொருட்களோ இருத்தல் கூடாது.

அடுக்கும் முறை
  • வாழைக் காய்கள் சீப்புளாகவோ அல்லது சில பழங்களைச் சேர்த்து (சீப்பின் ஒரு பகுதி) குறைந்தது சீப்பு ஒன்றிற்கு நான்கு பழங்கள் இருக்குமாறு வைக்கலாம். அல்லது ஒவ்வொரு காயாக தனித்தனியாகவும் அடுக்கலாம்.

  • இரண்டுக்கும் குறைவான பழங்கள் உள்ள சீப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. காம்புகளை வெட்டும்போது மற்ற காய்களை பாதிக்கா வண்ணம் சுத்தமாக வெட்ட வேண்டும்.

  • ஒரு வரிசையில் சீரான அளவு கொண்ட 3 பழங்கள் கொண்ட ஒரு குழு (சீப்பு) மட்டுமே வைக்கப்பட வேண்டும்.

7.வாழையின் தரம் பற்றிய ஏற்பாடுகள்


ஒவ்வொரு வகுப்பிலும் வாழைகளை அதற்குரிய தனிப்பட்ட தன்மைகளுக்கேற்பவும்,தாங்கும் தன்மைக்கேற்பவும் வாழைகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

  • முழு பழமாக இருக்க வேண்டும்.;

  • அழுகிய, கெட்டுப்போன பழங்களைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

  • எந்த ஒரு பொருள் பழங்களுடன் கலந்திருந்தாலும் அவற்றை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.

  • காய்களின் வெளித் தோற்றத்தைப் பாதிக்கும் பூச்சிகள் நீக்கப்பட வேண்டும்.

  • பூச்சித் தாக்கிய காய்களை நீக்கிவிடவும்.

  • குளிர்பதனக் கிடங்குகள் போன்றவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த காய்களின் அதிக ஈரப்பதத்தை நீக்கி மிதமான வெப்பநிலையில் பேக் செய்வது அவசியம்.

  • காய் தவிர பிற பொருட்களின் மணம் அல்லது சுவை இருத்தல் கூடாது

  • காய்கள் மென் தன்மையுடன் இருக்க வேண்டும்.

  • குறைந்த வெப்பநிலையில் பாதிக்கப்பட்ட பழங்களை நீக்கவும்.காய்ந்த நுனிகளை அகற்றி விடவும்.

  • அதிகம் வளைந்த, உருமாறிய காய்கள் இருத்தல் கூடாது.பிஸ்டில்களை நீக்கவும்.

  • காம்புகள் நீண்ட, வளைவற்ற, பூஞ்சை தாக்கிய போன்ற குறைபாடுகளையுடைய காய்களை நீக்கவும்.

கீழ்க்கண்ட காய்கள் மற்றும் சீப்புகள் அவசியம் சேர்க்கப்பட வேண்டும்.

  • சராசரி நிறம் கொண்ட, வாளிப்பான, பூஞ்சான் தாக்குதலற்ற காய்கள்.

  • அடிபடாத காம்பு பிளவுபடாத அதிகம் வளைவற்ற காய்கள் வாழையின் வளர்ச்சி மற்றும் தன்மை அந்தந்த இரகங்களுக்குரிய நேரத்தில், சரியான அளவில் முதிர்ச்சியடைந்த பழங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

  • ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும்போதும் வாகனங்களில் ஏற்றி இறக்கும்போதும் காய்கள் நுகர்வோரைச் சென்று சேரும் வரை அடிபடாமலும், பழுத்து விடாமலும் இருப்பது அவசியம்.

8.காய்களின் அளவு பற்றிய ஏற்பாடுகள் :


கிராஸ் மைக்கேல் மற்றும் கேவண்டிஷ் துணைக் குழுக்களைச் சார்ந்த இரகங்களில் நீளம் அளவிடும்போது பூ நுனியிலிருந்து காம்பு நுனி வரை அதாவது உண்ணக் கூடிய சதைப்பகுதி முழுவதும் கணக்கிடப்படுகிறது. மேலும் அதன் தடிமனை அளவிட அதன் குறுக்கு வெட்டுத் தோற்ற அளவுகள் பக்கங்களிடையே அளவிடப்படுகின்றன.

  • பழத்தின் நீளம் மற்றும் தரத்திற்கு மாதிரி தேர்வு செய்யும்போது சீப்பின் வெளி வரிசையில் நடுவே அமைந்த பழத்தினைத் தேர்வு செய்யலாம்.

  • ஒரு கொத்தாக இருந்தால் சீப்பின் வெட்டப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள பழத்தினைத் தேர்வு செய்யவும் பழங்கள் குறைந்தபட்சம் 14 செ.மீ நீளமும், 2.7செ.மீ குறுக்களவும் கொண்டதாக இருக்க வேண்டும்.

9.ஏற்புத்தன்மை ஏற்பாடுகள்:


நல்ல தரமும், அளவும் உடைய காய்களை அவற்றின் ஏற்புத் தன்மைக்காக தேர்வு செய்யலாம்.


சந்தைத் தகவல்கள்

முன்னுரை

சந்தைத் தகவலானது விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்வதில் உதவுகின்றது. சந்தை வாரியங்கள் ஒவ்வொன்றும் தத்தம் சந்தைகள் பற்றி மட்டுமே செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஒரு விளைபொருளின் எல்லா சந்தைகளின் விலை நிலவரங்கள் தெரிய வாய்ப்பில்லை. எனவே அவர்கள் அருகில் உள்ள சந்தைகளில் விலை குறைவாக இருந்தாலும் விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகையால் பொருள்களைச் சந்தைப்படுத்துவது பற்றி முடிவெடுக்க அதன் அனைத்து சந்தைகள் பற்றிய நிலவரங்கள் தேவைப்படுகின்றது.

நம் நாட்டின் தற்போதைய சந்தைத் தகவல் முறையை மேம்படுத்த வேளாண்மை அமைச்சகத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் 'அக்மார்க் நெட்' எனும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டம் தேசத்தின் அனைத்து முக்கிய வேளாண் விளைபொருட்களின் சந்தையை இணைக்கிறது. இதனை மாநில வேளாண் சந்தை வாரியங்கள் மற்றும் இயக்குநரகங்கள், சந்தைப்படுத்துதல் - கண்காணிப்பு இயக்குநரகம் சந்தைகளிடையே தகவல்களைப் பரப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த 'அக்மார்க் நெட்' திட்டமானது சந்தை தகவல்களை சேகரிப்பது மற்றும் பரப்புவது முக்கிய சந்தை தகவல்களான விலை நிலவரம், கட்டணம் போன்றவற்றை கணிணியில் பதிவு செய்தல், இப்புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி அதை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் வேளாண் சந்தைகளின் துல்லியத்தன்மையை அதிகரிப்பதற்கென தேசிய அளவில் தகவல் முறையைத் திறம்பட செயல்படுத்தி வருகிறது.

சந்தைப்படுத்துதலில் சேவை புரியும் நிறுவனங்கள்

  1. அக்மார்க் நெட்
  2. தினசரி சந்தை நிலவரம் (DMI)
  3. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அப்பிடா -APEDA)
  4. தேசிய வேளாண் கூட்டுறவு வணிகக் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFFED)
  5. தேசிய தோட்டக்கலை வாரியம் (NHB)
  6. சஃபல் சந்தை
  7. வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநர் (DGFT)
  8. வர்த்தகப் புலனாய்வு மற்றும் புள்ளியியல் பொது இயக்குநர் (AGCIS)
  9. தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC)

அக்மார்க் நெட்

  • சந்தைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் 9 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் என்.ஐ.சி நெட் (NIC NIT) சார்ந்த "வேளாண் சந்தைத் தகவல் அமைப்பு முறை (வலையம்) (அக்மார்க் நெட்) என்பதை நாட்டின் அனைத்து முக்கிய ஏ.பி.எம்.சிஸ் (வேளாண் பொருள் சந்தை மாநில வேளாண் சந்தை வாரியங்கள்/நாடெங்கிலும் உள்ள இயக்குநரகங்கள், உள்ளூர் அலுவலகங்கள் போன்றவற்றை நல்ல தகவல் தொடர்பு பெறும் வகையில் (சந்தை விலை) என்.ஐ.சி போன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது ஒரு திருப்பு முனையாகும்.

  • இந்த அக்மார்க் நெட் திட்டத்தின் மூலம் 2000-02 -ம் ஆண்டில் 75 மாநில வேளாண் சந்தை வாரியங்கள், 735 வேளாண் பொருள் மொத்த விலை விற்பனைக் கூடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தவிர 10 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2002-2007) மேலும் 2000 சந்தைகளை இணைக்கத் திட்டமிடப்பட்டது.

செயல்பாடுகள்:

  • அக்மார்க் நெட் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு சந்தையில் உரிய விலையில் விளைபொருட்களை விற்கலாம்.

  • மொத்த விலைப் பொருட்களுக்கான தேசிய அளவிலான சந்தைத் தகவல்.

  • இத்திட்டம் மாநில வேளாண் சந்தை வாரியங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

  • இத்தகவல்களை இணையதளம் வழியே காணலாம்.

  • தகவல்கள் அந்தந்த மாநில மொழிகளிலேயே வழங்கப்படுகின்றது.

  • சந்தைகளில் கணினி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • தினசரி சந்தை விலைகளை அறியும் மென்பொருட்கள் பதவிறக்கம் செய்யப்படுகின்றன.

  • பல்வேறு சந்தைகளிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

  • வாரச்சந்தை பற்றிய தகவல்கள்.

  • வங்கிக்கடன், அரசுத் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைச் செயல்பாடுகள் பற்றிய செய்திகளும் வழங்கப்படுகின்றன.

  • இடைத்தரகர்கள் பற்றிய தகவல்கள்.

  • அரசு சாரா நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் (SHG), வேளாண் அறிவியல் நிலையங்கள் (KVKS), ஜிஸ்டின்.ஐ.சி (GISTWIC), கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவற்றின் மூலமும் தகவல்கள் விவசாயிகளுக்குப் பரிமாறப்படுகின்றன.

முகவரி:

அக்மார்க்நெட் திட்ட இயக்குநரகம்,
வேளாண் தகவல் பிரிவு,
தேசிய தகவல் மையம்,
ஏ-பிளாக், சி.ஜி,ஓ (CGO) காம்ப்ளக்ஸ். புதுதில்லி- 110 003
தொலைபேசி: +91-11-24367712, 24305669, 24305763,24305692,0129-2415954

இணையதளம்:http://www.agmantnet.nic.in


தினசரி சந்தை நிலவரம்

இச்சேவை, விவசாயிகள் மற்றும் வேளாண் விளைபொருள் விற்பனையாளர்களுக்கென சந்தை நிலவரங்களை தினசரி துல்லியமாக வழங்கி வருகின்றது.
தினசரி சந்தை நிலவரம் என்பது கோயம்புத்துாரில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக் கழகமும் (TNAU), ஹைதராபாத்தில், உள்ள இந்திய மேம்பாட்டு நுழைவாயில் (INDG) இணைந்து தமிழ்நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சந்தைகளில் எளிதில் அழுகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரங்களை வழங்கி வருகிறது.

  • 160 விளைபொருள்களுக்கான (68 வகைக் காய்கறிகள், 36 பழங்கள் (வாழை), 37 பூக்கள், 11 நறுமணப்பயிர்கள், 8 மலைத் தோட்டப் பயிர்கள்) தினசரி சில்லறை மற்றும் மொத்த விலை நிலவரங்கள் தரப்படுகின்றன.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட 13 சந்தைகளுக்கும் தனித்தனி தகவல் தளங்கள் உரிய புகைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

  • விவசாயி சங்கங்கள், கூட்டமைப்புகளின் முகவரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், குறைந்தபட்ச ஆதார விலை, வெற்றி பெற்ற விவசாயிகளின் செயல்முறைகள் போன்றவை இத்தளங்களில் தரப்பட்டுள்ளன.

  • சந்தை விலை நிலவரங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கென முந்தைய நாட்கள்/வாரங்கள்/மாதங்களின் விலை நிலவரங்களையும் பார்க்குமாறு வசதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

விரிவாக்கக் கல்வி இயக்குநரகம் ,தமிழ்நாடு வேளாண் பல்லைக் கழகம்
கோயம்புத்துார் - 641 003. தொலைபேசி: 0422 – 6611383  

மின்னஞ்சல்: portal@tnau.ac.in
மேலும் தகவல் பெற: http://agritech.tnau.ac.in


 

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்: (APEDA)

இவ்வாணையம் இந்திய அரசால் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச்சட்டம் 1985-ல் டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு,அதன்கீழ் உருவாக்கப்பட்டது.

செயல்பாடுகள்

  • தொழிற்சாலைகளின் மேம்பாடு, கணக்கெடுப்பு மற்றும் கூட்டு நிறுவனங்களின் நிதி மேலாண்மைப் பங்கு, பிற மானியத் திட்டங்கள்.

  • குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை ஏற்றுமதி செய்யும் நபர்ளை உரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு அங்கீகரித்தல்.

  • ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும்  பொருட்களின் தரத்தினையும் பண்புகளையும் நிர்ணயித்தல்.

  • கறி மற்றும் கறி சார்ந்த ஏற்றுமதிப் பொருட்களை அவை தயாரிக்கப்படும்  இறைச்சிக் கூடங்கள், பதப்படுத்தும் இடங்கள், தொகுத்து வைக்கும் பகுதிகள், அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்தும் பட்டைகள் போன்றவை சுகாதாரமாகக் கையாளப்படுகிறதா எனப் பரிசோதிக்கப்பட வேண்டும்.

  • ஏற்றுமதி செய்யும் பொருட்களின் பேக் செய்யும் (பொதிந்து வைத்தல்) முறையைக் கண்காணித்தல்.

  • வெளிநாட்டில் இந்தியப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை அதிகரித்தல்.

  • ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தினை உயர்த்துதல்.

  • ஏற்றுமதியாளர்களின் தொழிற்சாலைகளில் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக் செய்தல், சந்தைப்படுத்துல் அல்லது ஏற்றுமதி போன்றவற்றின் புள்ளி விவரங்களைச் சேகரித்தல் மேலும் அப்பொருட்கள் பற்றிய பிற உற்பத்தியாளர்களிடமும் விவரங்களைச் சேகரித்து வெளியிடுதல் அவசியம்.

  • தொழிலகங்களின் பொருட்களின் ஏற்றுமதித் தரத்தினை உயர்த்த உரிய பயிற்சி அளித்தல் அவசியம்.

அப்பிடா(APEDA) வானது கீழ்கண்ட பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

  • பழங்கள், காய்கறிகள் மற்றும் அதன் பொருட்கள்,

  • கறி மற்றும் அதனால் செய்யப்படும் பொருட்கள்,

  • கோழி மற்றும் அதன் பொருட்கள்,

  • பால் பொருட்கள்

  • பிஸ்கட்டுகள், பேக்கரி பொருள்கள், பிற திண்பண்டங்கள்,

  • தேன், வெல்லம் மற்றும் சர்க்கரைப் பொருட்கள்,

  • கோகோ மற்றும் அதன் பொருட்கள், அனைத்து வகை சாக்லேட்டுகள்,

  • ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அற்ற குளிர்பானங்கள்,

  • தானிய வகைகள், அதனால் செய்யப்படும் பொருட்கள்,

  • நிலக்கடலை, பட்டாணி மற்றும் வால்நட் (அக்ரோட்),

  • ஊறுகாய், அப்பளம் மற்றும் சட்டினி வகைகள்,

  • பசைகள்

  • மலர்கள், அதைச்சார்ந்த பொருட்கள்,

  • மூலிகை மற்றும் மருத்துவச் செடிகள்.

தொடர்புக்கு

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (வணிகம் - தொழிற்துறை அமைச்சகம், இந்திய அரசு),

என்.சி.யூ.ஐ (ழிசிஹிமி) கட்டிடம், 3 சிரி தொழிற்சாலைப் பகுதி,நியூ  தில்லி - 10 016
தொலைபேசி : 91-11-26513204, 26514572, 26534186

தொலை பிரதி: 91-11-26526187
http://www.apeda.gov.in


தேசிய வேளாண் கூட்டுறவு வணிகக் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFED)

இது 1958 ஆம் ஆண்டு காந்தி பிறந்த நன்னாளில் அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்பட்டது. இது அனைத்து மாநில கூட்டுறவு சங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது விவசாயிகள் பயனடைவதற்கென வேளாண் விளைபொருட்களின் கூட்டுறவுச் சந்தையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இக் கூட்டமைப்பின் பொதுக்குழுவில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் விவசாயிகளுக்கு மட்டுமே உண்டு.

செயல்பாடுகள்

  • தேசிய அளவிலான விவசாய கூட்டுறவுச் சந்தை நிறுவனம்,

  • விவசாயிகளின் பொருட்களுக்கு சரியான விலையை உரிய நேரத்தில் அளிக்கிறது.

  • வேளாண் பொருட்களின் கூட்டுறவுச் சந்தையை மேம்படுத்துதல்,

  • உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரிடையே உள்ள இடைவெளியைப் போக்குகின்றது.

  • முக்கிய விளைபொருட்களின் விலையை நிலைநிறுத்துகிறது.

  • வேளாண் விளைபொருட்களைச் சேமித்து வைத்து உரிய விலை கிடைக்கும்போது அவற்றை எடுத்துச் சென்று வெளிச்சந்தைகளில் விற்க உதவுதல்,

  • நன்கு செயல்படும் கூட்டுறவுச் சந்தைகள் வழியே முட்டைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றைச் சேகரித்து நல்ல விலை கிடைக்கும் சந்தைகளில் விற்பனை செய்ய உதவுகிறது.

தொடர்புக்கு

தேசிய வேளாண் கூட்டுறவு வணிகக் கூட்டமைப்பு இந்திய லிமிடெட்(NAFED)

நஃபட் ஹவுஸ், சித்தார்த் என்கிளேங் ரிங் ரோடு ஆஸ்ரமம்,

சி ஹாக், புதுத் தில்லி -110 014.

தொலைபேசி: 011-26340019, 26341810

இணைதளம்: http://www.nafed.india.com


தேசிய தோட்டக்கலை வாரியம்

தேசிய தோட்டக்கலை வாரியமானது இந்திய அரசினால் ஒரு தனி சங்கமாக சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 ன் கீழ் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  இதன் தலைமை இடம் நிறுவனப் பகுதி, பகுதி 18, கர்கியான் (ஹரியானா) ல் அமைந்துள்ளது.

            இதன் மேலாண்மை இயக்குனரே பல்வேறு திட்டங்களை பிற இயக்குநர்களின் உதவி மற்றும் ஆலோசனையோடு செயல்படுத்தி வருகிறார்.  மேலும் இந்திய அரசின் வேளாண் அமைச்சகம், வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறையும் இவருக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

குறிக்கோள் மற்றும் நோக்கங்கள் :

  1. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அதி நவீன தோட்டக்கலை நுட்பங்களை உபயோகித்தல்.

  1. பகுதி விரிவாக்கத் திட்ட ஒருங்கிணைப்பில் அல்லது சில குழுத் திட்டங்களில் நவீன அறுவடைப் பின்சார் மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துதல்.

  1. சந்தைத் தகவல் முறை மற்றும் தோட்டக்கலை பற்றிய புள்ளி விபரங்களை வலுப்படுத்துதல்.

  1. அறுவடை செய்த தோட்டக்கலைப் பொருட்களைச் சேமித்து வைக்கவென ஒருங்கிணைந்த ஆற்றல் மிக்க குளிரூட்டப்பட்ட அமைப்புகளை மேம்படுத்துதல்.

  2. தொழில் நுட்ப தேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியபின், கண்டறியப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள்/கருவிகள்/முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துச் சென்று, அவர்களைப் பின்பற்றச் செய்யவேண்டும்.

  3. அறுவடை செய்த தோட்டக்கலைப் பொருட்களின் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல்.

  4. உற்பத்தியாளர்கள்/விவசாயிகள் மற்றும் சேவையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களையும், தோட்டக்கலைப் பயிர்களுக்கான அறுவடைப் பின்சார் மேலாண்மை முறைகளைப் பரப்புதல்.

  5. தோட்டக்கலைப் பயிர் விளைபொருள்கள் , அதனால் செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்தல்.

  6.  வேளாண்-ஏற்றுமதி மண்டலங்கள் மற்றும் தோட்டக்கலைப் பூங்காக்களில் பொதுவசதி அமைத்துக் கொடுத்தல்.

  7. விவசாயிகள், பதப்படுத்தும் தொழிற்சாலை ஊழியர்களுக்கென பயிற்சி மற்றும் கல்வி முகாம் நடத்துதல்.

தொடர்புக்கு

தேசிய தோட்டக்கலை வாரியம்
வேளாண் அமைச்சகம், இந்திய அரசு,

85,நிறுவனப்பகுதி, பிரிவு-18, கர்கியான்- 122 015 (ஹரியானா)

தொலைபேசி: 0124-2342992, 2347441, 2342989-90

தொலைப் பிரதி: 2342991

இணையதளம்:http;//www.nhb.gov.in


சஃபல் சந்தை

இந்திய அரசின் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத் துறையின் வேண்டுதலின்படியும், தேசிய கறவை மேம்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்துதலின் படியும் தோட்டக்கலைப் பொருட்களின் சந்தைப்படுத்துதல், சேகரித்தல் போன்றவை நவீனப்படுத்தப்பட்டது. வேளாண் பொருட்களின் சந்தைச் செயற்குழுவின் சந்தைப்படுத்தும் முயற்சிகளைப் போல், தேசிய கறவை மேம்பாட்டு வாரியமும் பெங்களூரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தில் இதுவரை ரூ.150 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

செயல்பாடுகள்

  • இது ஏலமிடும் விற்பனை முறையின் மூலம் உற்பத்தியாளரையும், வாங்குபவரையும் இணைக்கிறது. 

  • உற்பத்தியாளரையும், சில்லறை வியபாரிகளையும் விற்பனைச் சங்கிலிக்குள் கொண்டுவந்து ஒருங்கிணைக்கின்றது.

  • இதன் விற்பனை கொள்ளளவு நாளொன்றுக்கு 1600 டன்கள்.  தற்போது 300 டன்கள் வரை விற்பனை நடைபெறுகிறது.

  • 10,000 மெட்ரிக் டன்கள் கொள்ளளவு கொண்ட வர்த்தக குளிர் சாதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • வாழைக்கென பழம் பழுக்க வைக்கும் அறை வசதி.

  • விற்பனையாளருக்கென இட வசதியுடன் கூடிய நன்கு வடிவமைக்கப்பட்ட 100 கடைகள் உள்ளன.

  • சஃபல் (மார்க்கெட்டானது) சந்தையானது விவசாயிகளை தனியார் வியபாரிகள் பாதிக்கா வண்ணம் அவர்களுக்கு சரியான விலை கிடைக்க உதவி புரிகிறது.

  • நிர்ணயிக்கப்பட்ட விலையானது விவசாயச் சங்கங்கள் அனைத்திற்கும் அனுப்பப்படுகிறது.  விற்ற பொருட்களுக்கான தொகையானது, 3 நாட்களுக்கு ஒருமுறை விவசாயக் குழுக்களுக்கு காசோலையாக எடுத்து அனுப்பப்படுகிறது.

  • இச்சந்தை மொத்தப் பரிமாற்றத் தொகையில் 3.5% சேவைக் கட்டணமாக விவசாயச் சங்கங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.  இச்சங்கங்கள் விவசாயிகளிடம் 1.5% சேவைக் கட்டணமாகக் பெறுகின்றன.

  • இதுவே தனியார் சந்தைகள் தவறான எடையளவு, குறைந்த விலை பொருட்களை எடுத்துச் செல்லுவது போன்ற பிரச்சனைகள் தவிரவும் 10% சேவைக்கட்டணமாக வசூலிக்கின்றன.

  • இங்கு 3 வித சந்தைப்படுத்தும் முறைகள் உள்ளன.
  1. மின்சார முறையில் ஏலமிடும் அறை: இங்கு ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் விற்பதும், வாங்குவதும் ஏலமிடப்படும். இதில் மொத்த மற்றும் சில்லறை என அனைத்து வகை வியாபாரிகளும் பங்கேற்று பட்டன் அழுத்தி ஏலமிடுவதன் மூலம் பொருட்ளை பரிமாறிக் கொள்வர்.

  2. சஃபல் தினசரிச் சந்தை: பெங்களூரில் வாங்குபவர்கள் நேரடியாகப் பொருட்களைப் பெறுவதற்கென 7 கடைகள் இயங்குகின்றன.

  3. கடையில் விற்பனை செய்தல்.

தொடர்புக்கு
டெல்லி
காய்கறி மற்றும் பழ விற்பனை மையம்
மதர் டெய்ரி புரூட் - வெஜிடபிள் பிரைவேட் லிமிடெட்
மங்கல்பூரி இன்டஸ்டிரியல் பகுதி, நிலை (பேஸ்)-மி
டெல்லி - 110083,
இந்தியா
தொலைபேசி:  91-11-27902222 (30 வரிசைகள்)
தொலைப்பிரதி : 91-11-27915816


வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநர் (DGFT):

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் இது ஒரு அரசு நிறுவனம்.  1991 ஆம் ஆண்டிற்கு முன்புவரை டி.ஜி.எஃப்.டி (DGFT) ஏற்றுமதி - இறக்குமதிக்கான முதன்மைக் கட்டுப்பாட்டு அலுவலகமாக (CCI&E) இருந்தது.

இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் நமது ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

செயல்பாடுகள்:

  • டி.ஜி.எஃப்.டி நிறுவனத்தின் நாடு முழுவதும் உள்ள அலுவலகக் கிளைகள் மூலம் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை அல்லது ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையினை பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிக்கைகள் மூலம் வழங்கி வருகிறது.

  • ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் அடையாளக் குறியீடு வழங்குதல்.  எந்த ஒரு வணிகரும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியோ அல்லது இங்கு இறக்குமதியோ செய்ய விரும்பினால் அதற்கு இந்நிறுவனத்திடமிருந்து 10 இலக்கக் குறியீடு தேவை.

  • இந்நிறுவனம் பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கும் பரிமாற்றம் செய்யப்படும் பொருட்களை ஒழுங்குபடுத்துல்/அனுமதிக்கிறது. 

  • பிற நாடுகளுடன் வர்த்தகத்தை ஊக்குவித்தல்

  • ஏற்றுமதிக் கொள்கை-அட்டவணை 2-ன் படி இலவச ஏற்றுமதியை அனுமதிக்கிறது.

  • மேலும் இது டி.ஈ.ப்பி.பி (DEPB) விலையினைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

  • உள்வரும், வெளிச்செல்லும் பொருட்களின் தரத்தினைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

  • ஐ.டி.சி-ஹெச்.எஸ் (மிஜிசி-பிஷி)-ன் அடையாளக் குறிகளில் ஏதேனும் மாற்றம் செய்தல், புதிய குறிகள் அளித்தல் போன்றவையும் டி.ஜி.எஃப்.டி யினால் செய்யப்படுகிறது.

  • இவை தவிர டி.ஜி.எஃப்.டி வர்த்தகத்தை துரிதப்படுத்தும் நிறுவனமாகவும் செயல்படுகிறது.  பரிமாற்றம் செய்யப்படும் பொருட்களில் ஏதேனும் தரக் குறைபாடு பற்றிய புகார்களை விசாரிக்கிறது.  மேலும் இது பிற பொருளாதார நிறுவனங்களான மத்திய வரி ஆணையம், சுங்க ஆணையம், வருமானவரித்துறை இயக்குநரகம் போன்றவற்றுடன் நெருக்கமான தொடர்புடையது.

மேலும் தகவல் பெற
வெளிநாட்டு வர்த்த பொது இயக்குநர் (DGPT)
உத்யோக் பவன், புதுதில்லி.
http://dgft.delhi.nic.in/


வர்த்தகப் புலனாய்வு மற்றும் புள்ளியியல் பொது இயக்குநர்(DGCIS) (டி.ஜி.சி.ஐ.எஸ்)

இந்திய அரசின், வணிக  அமைச்சரகத்தின் கீழ் கோல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விபரங்கள், மாநிலங்களிடையே உணவு தானிய பரிமாற்றம் போன்ற சந்தை தொடர்பான விபரங்களை சேகரித்துத் தொகுத்து வழங்கி வருகின்றது. 

            சுமார் 140 ஆண்டுகளாக இவ்வமைச்சகம் இந்தியாவின் வர்த்தகம் தொடர்பான தகவல்களை நாட்டிற்கு வழங்கி வரும் முக்கிய ஆணையம் ஆகும்.
இது தரும் தகவலின் தரமும், உரிய நேரத்தில் வழங்கும் விரைவுத் தன்மையும் இந்நிறுவனத்தை இந்தியாவில்  மட்டுமின்றி உலகளவிலும் ஒரு சிறந்த வர்த்தகப் புலனாய்வு அமைப்பாக ஆக்கியுள்ளது.

மேலும் தகவலுக்கு
வர்த்தகப் புலனாய்வு மற்றும் புள்ளியியல் பொது இயக்குநர்
1, கவுன்சில் ஹவுஸ் வீதி,
கோல்கத்தா - 700 001, இந்தியா
இணையதளம்: http://www.dgciskol.nic.in/


தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC)

சேவைகள்

  • புதிய பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுதல்.

  • ஏற்கனவே அமைந்துள்ள அமைப்புகளை விரிவுபடுத்துதல்/ நவீனமயமாக்குதல்/ புதுப்பித்தல்/மாற்றி அமைத்தல்.

  • பங்கு நிதியின் அடிப்படையை வலுப்படுத்துதல்.

  • நடப்பு மூலதனம்/சலுகை தொகை (மிகுதி தொகை) யினை விளைபொருள் சங்கங்களுக்கும், மாநில அளவிலான கூட்டமைப்புகளுக்கும் அவற்றினை விரிவாகப் பிரித்து அளித்தல்.

  • இது காய்கறி மற்றும் பழங்களின் சந்தை,, பதப்படுத்தும் சங்கங்களை ஊக்குவிக்கிறது.  கூட்டுறவுச் சங்கத்தின் வேளாண் தோட்டக்கலைப் பொருட்களை சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல், மற்றும் சேமித்து வைத்தல் போன்ற மேம்பாட்டு பணிகளை ஊக்குவிப்பதோடு, அதற்கான நிதி உதவியும் அளிக்கிறது.

  • இது அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்களுக்கான அனைத்துவித செயல்முறைகளுக்கும் நிதி உதவி அளிக்கிறது.

 

மேலும் தகவல் பெற:
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
4, சிரி நிறுவனப் பகுதி,
ஹாஸ் காஸ்,
புதுதில்லி- 110016
தொலைபேசி: 011-26962478, 26960796, 26962379, 26569246
தொலைப்பிரதி: 0111-26962370, 26516032
இணையதளம்: http://www.ncdc.in/

மேலே செல்க