பூச்சி மேலாண்மை



அசுவிணிகள்


தாக்குதலின் தன்மை
  • இவை இலை மற்றும் வாழை மட்டைகளின் இடுக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன.

  • அசுவுணிகள் ஒரு வகை தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அதைச் சுற்றி எந்நேரமும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.

  • அசுவுணிகள் கும்பலாக வாழையின் மீது அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி பாதிக்கப் படுகின்றது.‌

  • இளம் பருவத்தில் நோய் தாக்கிய வாழைக்கன்றுகள் முட்டையாகவும், இலைகள் சிறுத்தும், இலை நரம்புகள் தடித்தும் காணப்படும்.

  • வா‌ழையில் அதிக அளவு சேதம் ஏற்படுத்தும் 'முடிக்கொத்து' நோயைப் பரப்பும் காரணிகளாக இவை இருக்கின்றன.

 

பூ‌‌‌‌‌‌‌‌‌‌‌ச்சியை கண்டறிதல்

முட்டைகள்: அசுவுணிகள் முட்டையிடுவது இல்லை நேரடியாகக் குஞ்சுகளை பொரிக்கின்றன.
இளம் குஞ்சுகள்: நீள்வட்ட வடிவில் சற்று நீண்டிருக்கும். செம்பழுப்பு நிறத்தில் ஆறு பிரிவுகளுடைய உணர் கொம்புகளைக் கொண்டிருக்கும்.
முதிர் பூச்சிகள்: சிறிய மற்றும் நடுத்தர அளவுடைய அசுவுணிகள் சிவப்‌பு முதல் அடர் பழுப்பு, பளபளப்புடன் சிலசமயங்களில் கருமை நிறத்தில் காணப்படும். இ‌‌வையும் ஆறு பிரிவுடைய உணர் கொம்புகளை‌யும், நன்கு தெரியக் கூடிய நரம்புகளையும் பெற்றிருக்கும்.
முதிர்ந்த பெண் பூச்சிகள் ஒவ்வொரு நாளும் (முதிர்ச்சியடைந்த பின்) குஞ்சு பொரிக்கின்றன. நாளொன்றுக்கு 4 என்ற விதம் இதன் வா‌‌‌‌ழ்நாளில் 14 நாட்கள் வரை ஒரு பெண் அசுவுணி உற்பத்தி செய்கின்றது.

 

கட்டுப்பாடு முறைகள்
உழவியல் முறைகள்
  • வயலைச் சுத்தமாகப் பராமரிக்க‌‌‌வும்.

  • ஆரோக்கியமான கன்றுகளைத் தேர்வு செய்து நடவும்.

  • தாக்கப்பட்டுள்ள வாழைகளை கண்ட தருணத்திலேயேய வயலிலிருந்து அகற்றி அழிக்கவும்.

  • இவ்வயல்களில் மறுதாம்பு விடுவது மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்தல் கூடாது.

  • நடவு செய்வதற்கு பூச்‌சித் தாக்குதலற்ற நல்ல பயிரிலிருந்து கன்று எடுக்கவும்.

  • வாழை இலை மற்றும் பூவினை 49 செ வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் அசுவுணிகள் இறந்துவிடும்.

இரசாயன முறைகள்
  • இளம் கன்றுகள், இலை, இலை காம்புகள், சுருண்ட இலை ஆகியவற்றின் மீது சோப்பு தண்ணீர் அல்லது பூச்சிக் ‌கொல்லிக‌ளுடன் சோப்புநீர் கலந்து தெளிக்கவும்.

  • டைமெத்தோயேட் (75மிலி/100லி) அல்லது டையசினோன் (1.5மி.லி/லி) அல்லது அசிப்பேட் (1.3கி/லி) பாதிக்கப்பட்ட பயிர் மற்றும் கன்றுகளின் மீது தெளிக்கவும்‌.

  • மெத்தில் டெமட்டான் 25 இ.சி 0.05.‌% அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ் எல் 0.072% தெளிக்கவும்.

  • மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்.எஸ்/ 1 மிலி/ வாழை (1 மிலி/4 மிலி நீரில் கலந்தது) ஊசி ‌‌மூலம் செலுத்தவும். வா‌‌‌‌ழையில் பூ வெளி வந்திருந்தால் ஊசி இடுவதைத் தவிர்க்கவும்.

‌உயிரியல் கட்டுப்பாடு
  • பிரக்கோனிட் குளவிகளான லைசிமெலிபிய‌ஸ் டெஸ்‌டாசெயிபஸ் என்ற ஒட்டுண்ணியை வயலில் விடவும்.

  • மேலும் பொறி வண்டுகள், கண்ணாடி இழை இறக்கைப் பூச்சி போன்றவை அசுவுணிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவை.

  • பூஞ்சான் வகையைச் சார்ந்த பிவே‌ரியா பேசியானாவையும் வாழை வயலில் விடலாம்.

மேலே செல்க


கிழங்குக் கூன் வண்டு


தாக்குதலின் தன்மை
  • புதிதாக நடவு செய்யப்பட்ட வயல்களில் இதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இவ்வண்டு இளம் மற்றும் வளர்ந்த மரங்களைத் தாக்கி பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும்.

  • தாய் வண்டு வாழைக்கிழங்கின் கழுத்துப்பகுதியில் உள்ள இலையுறையில் துளையிட்டு முட்டையைத் தனித்தனியாக இடும். வெளிவரும் புழுக்கள் கிழங்கை குடைந்து தின்னும்.

  • பின்பு இவை நடுத்தண்டில் சேதம் ஏற்படுத்தி, கிழங்கையும் தாக்குகின்றன. கிழங்கின் அடிப்பகுதியில் இவை வேர்வரை ‌செல்கின்றன.

  • கீ‌‌ழே விழுந்த தண்டினை வெட்டிப் பார்த்தால், அதன் முழு நீளத்திற்கும் புழு குடைந்து ‌சென்றிருப்பதை காணலாம்.

  • பாதிக்கப்பட்ட வாழையின் இலைகள் மஞ்சள் ‌நிறமாவதோடு, அவை விழுந்து, வளர்ச்சி குன்றுதல், ‌வே‌ர் பாதிக்கப்பட்ட, மகசூல் குறைகின்றது.

  • கூண் வண்டினால் பாதிக்கப்பட்ட கிழங்குகள் வள‌ர்ச்சி குன்றி பின்பு உதிர்ந்து விடும்.

  • இலேசாக காற்று வீசினாலும் மரம் சாய்ந்து விடும்.

  • இதன்பொருளாதார சேத நிலை. மரம்\கிழங்கை வெட்டி‌ப் பார்க்கும் போது 3 வண்டிற்கு அதிகமாக இருந்தால் உடனே கட்டுப்பாட்ட நடவடிக்கைக‌ளைத் ‌தொடங்கவேண்டும்.

  • இவை ரொபஸ்டா மற்றும் கற்பூரவள்ளி இரகங்களை அதிகம் தாக்குகின்றன.

 

‌‌‌பூச்சியை கண்டறிதல்

முட்டை: நீள்வட்ட வடிவில், 2‌-3 மி.மீ நீளத்தில் வெண்மை நிறமாக இருக்கும்.
தண்டின் அடிப்பகுதியில், தரைப் பகுதிக்கு சற்று மேலே பெண் வண்டுகள் குடைந்து, மென்று துப்பிய தண்டின் துளையினுள் முட்டைகள் காணப்படும். மேலும் கிழங்கின் மேல்பகுதி, வேருக்கு அருகில் மற்றும் வெட்டப்பட்ட தண்டு பகுதி போன்ற பகுதிகளிலும் முட்டைகளைக் காணலாம்
வெப்பநிலையைப் பொறுத்து 4 முதல் 36 நாட்கள் வரை முட்டை பருவம் இருக்கும்.
புழு: வெண்ணிற கால்களற்ற புழுக்கள், தடித்து, வளைந்த வடிவில் நடுபகுதி சற்று பருத்த நிலையில் காணப்படும்.
செம்பழுப்பு நிறத்தில் தலையுடனும், வலுவான வாய்ப் பகுதி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யுடனும் இருக்கும், வளர்ந்த புழுக்கள் 12 மி மீ நிளம் கொண்டவை.
புழுக்காலம் 20‌‌‌‌-25 நாட்கள்.
கூட்டுப்புழு: வெண்மை நிறத்தில், 12 மிமீ நீளத்துடன் இருக்கும் . வண்டுகளின் துளைகளில் இக்கூட்டுப் புழுக்களைக் காணலாம். காலம் 5‌‌-7 நாட்கள்.

முதிர்ந்த வண்டு: 10-16-மி‌மீ நீளம் உள்ளவை. கடின ஓடினால் மூ‌டப்பட்ட உடலில் ‌‌மூக்கு ‌‌‌‌நீண்டு வளைந்திருக்கும். இளம் வண்டுகள் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். பின்பு சில நாட்களிலேயே கருமை நிறமாக மாறிவிடும்.
பெரும்பாலும் இலைப்பரப்பு இடுக்குகளில் காணப்படும். இது, சில சமயங்களில் அடித்தண்டு மற்றும் பயிர்க் க‌ழிவுகளில் இருக்கும்.
இரண்டு வருடம் வரை உயிர் வாழும். இவ்வண்டுகள் உணவிண்றி 6 மாதங்கள் வரை வாழக் கூடியவை. ஆனால் வறண்ட வெப்ப நிலைகளில் 48 மணிநேரம் கூட வாழ இயலாது. இரவில் நன்கு செயல்புரிபவை.

 

கட்டுப்பாடு முறைகள்
உழவியல் முறைகள்
  • இறந்த மரங்களைக் கிழங்குடன் அகற்றி, அழித்து, வயலைச் சுத்தமாகப் பராமரிக்கவேண்டும்.
  • ஆரோக்கியமான, கிழங்குகளை சு‌த்தப்படுத்தி நுனிகளைச் சீவிப் பின் நடவு செய்ய‌வும்.
    தாக்கப்பட்ட வயலிலிருந்து கன்று தேர்வு செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
  • வாழை மரத்தின் தூர் பாகத்தினைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். 
  • தார் வெட்டிய பின்பு தாய் மரத்தினை வயலிலிருந்து அகற்றி, அழித்து விடுவதால் அவை வண்டுகள் தங்கிப் பெருக இடமளிப்பதைத் தவிர்க்கலாம்.
  • இவ்வண்டுகள் தங்க இயலாத நெல், கரும்பு போன்ற பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்யலாம்.
  • வண்டுப் பொறிகளைப் பயன்படுத்தலாம்.
  • தேவையான அளவு உரமிட்டு களைகளை அகற்றி வைக்க‌வும்.
  • வா‌‌ழையின் வேர்ப்பகுதியைச் சுற்றிலும் 60 செ.மீ சுற்றளவுக்கு மூடாக்குப் போடுவதைத் தவிர்க்கவும், இதனால் அப்பகுதியில் ஈரப்பதம் குறைவதால் வண்டுகள் இறந்து விடும்.
இரசாயன முறைகள்
  • கன்று நடுவதற்கு முன், கு‌‌‌‌ழி ஒன்றிற்கு பியூராடான் 3‌‌ ‌ஜி-20கி. அல்லது திம்மெட் 10‌ ஜி-12கி அல்லது வேப்பம் புண்ணாக்கு 1/2‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ கி.கி அள‌வு இடவும்.
  • இடைக் கன்றுகளை மோனோகுரோப்டோபா‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஸ் கரைசல் (14 மிலி 1 லி நீரில் கலந்து) 20 நிமிடங்கள் ஊற வைப்பதால் முட்டை மற்றும் ‌‌‌புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
  • அறுவடைக்குப் பின் தாய் மரங்களை வெட்டி அவற்றை (கு‌ழிகளை) கார்பரில் (1கி/லி)அல்லது குளோர்பை‌ரிபா‌‌ஸ் (2.5 மி‌.லி./லி)மருந்து கொண்டு நனைக்கவும்.
உயிரியல் முறை
  • பெருந்தலை கொண்ட ஊண் உண்ணி எறும்பு இனங்களான(‌பெய்டோல் மகொசெப்பாலா) மற்றும் டெட்ராமோரியம் ஸ்பீசிஸ் என்பவை முட்டைகள், புழுக்கள் போன்றவற்றை உண்ணக் கூடியவை.
  • பிவேரியா பேசியாயனா, மெட்டாரைசியம் அனிசோபிலே போன்ற பூச்சிக் கொ‌ல்லி பூ‌‌‌ஞ்சைகள் இக்கூண் வண்டினை 90 சதவீதம் அழிக்கின்றன.
  • ஸ்டெய்னெர்மா மற்றும் ‌ஹெட்டிரோராபிடிஸ் ஸ்பீசிஸ்  போ‌ன்ற நூற்புழுக்கள் கூண்‌‌ வண்டு மற்றும் அதன் புழுக்களையும் தாக்குகின்றன.
  • 60-100 கி வேப்பங்கொட்டைப் பொடி அல்லது வேப்பம் ‌புண்ணாக்கினை கிழங்குகளை நடும்போதும் பின்பு 4 மாதங்கள் க‌ழித்து ஒரு முறையும் இடுவதால் பூச்சித் தாக்குதல் குறைவதோடு, நல்ல மகசூல் பெறலாம். 100 கிராமிற்கு அதிகளவோ அல்லது வேப்ப எண்ணெய் இடுவதோ வாழைப் பயி‌ரினையே பாதிக்கக் கூடும்.
இயந்திர முறை
  • பிரமோனீ அல்லது இனக் கவர்ச்சிப் ‌பொறியினை எக்டருக்கு 25 என்ற எண்ணி‌க்கையில் வைக்கலாம்.
  • வட்ட வடிவ தண்டுப் பொறியில் தண்டிற்கு பதில் கிழங்கினை வெட்டி வைப்பதால் கூன் வண்டுகள் இவ்வாசனையால் கவரப்பட்டு முட்டையிடவும் உண்ணவும் அப்பகுதிக்கு வரும். இவ்வண்டுகளை சேகரித்து அ‌‌‌ழிக்கலாம். எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு பயன்மிக்கது.
  • வாழை நீளத்தண்டு கவர்ச்சிப் பொறியினை எக்டருக்கு 100 என்ற அளவில் பயன்படுத்தலாம்.

மேலே செல்க


நூற்புழுக்கள்


தாக்குதலின் தன்மை:
  • நூற்புழக்களால் தாக்கப்பட்ட வாழை வளர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

  • முதிர்ச்சியடையாத இலைகள் உதிரத் தொடங்குதல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வது தடைபடுவதால் சிறிய காய்கள் (குலைகள் சிறுத்துப் போதல்) உருவாதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
  • வேர் மற்றும் கிழங்குளில் வட்ட வடிவ  மேடு பள்ளம் போன்ற அறிகுறிகள் இளம் வா‌ழைகளில் காணப்படுகின்றன
  • அதிகளவு பாதிக்கப்பட்ட கன்றுகளை நடும்போது, அதன் வேர்ப்பகுதி முழுவதும் தாக்கப் படுவதால் இவை வளர்ச்‌சியடைவது இல்லை
  • தாக்குதல் அதிகரிக்கும் போது வாழையின் அடிப்பகுதி இலைகள் உலர்ந்து விடும்
  • ஈரப்பதமான காற்று  வீசும் தட்ப வெப்ப நிலைகளில் சரியான வேர்ப்பிடிப்பு இல்லாததால், வாழை மரத்தின் தண்டுப்பகுதி (நுனி) சாய்ந்து விடும்.
  • இவை வாழையின் வேர்களுக்குள் நுழைந்து சாற்றை உறிஞ்சி விடுவதால், வேர்கள் பழுபபு நிறமாக மாறியும், வேரினை ஒடித்து பார்த்தால் அதனுள் செம்பழுப்பு நிறக்கோடுகள் இருப்பதையும் காணலாம். 
பூஞ்சையை கண்டறிதல்
  • நூற்புழுக்களின் தாக்கமானது, வாழை சாகுபடி செய்யக்கூடிய அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. இதன் தீவிரமானது, பயிர் சுழற்சி, சாகுபடி செய்யக்கூடிய ரகங்கள் மற்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்த கையாளுகின்ற முறைகள் ஆகியவற்றை பொருத்ததாகும். பொதுவாக 33 இனங்களை சேர்ந்த 71 வகையான நூற்புழுக்கள், வாழையைத் தாக்குவதாக கண்டறியப்பட்டாலும், இதில் மிக முக்கியமானதாக கருதப்படுபவை ஐந்து நூற்புழுக்கள் மட்டும் தான். அவை
  • வேர்குடையும் நூற்புழு – ரேடோபோலஸ் சிமிலிஸ்
  •  வேர் அழுகல் நூற்புழு – பிராட்டிலென்கஸ் காப்பியே
  • வேர்முடிச்சு நூற்புழு – மெலைடோகைன்   இன்காக்னிடா
  • சுருள் வடிவ நூற்புழு – ஹெலிக்கோடைலன்கஸ் மல்டிசிங்டஸ்
  • முட்டைகூடு நூற்புழு – ஹெட்டிரோடிரா ஒரைஸிகோலா

1.வேர்குடையும் நூற்புழுரேடோபோலஸ் சிமிலிஸ்
வாழையைத் தாக்கும் நூற்புழுக்களில் இது மிகவும் முக்கியமான நூற்புழுவாகும். உலகில் அதிகமாக விற்பனை செய்யக்கூடிய பச்சை வாழை ரகமான கேவண்டிஷ் இனத்தை இந்நூற்புழு மிக அதிக அளவில் தாக்குகிறது. இது வாழையைத் தவிர மிளகு, தென்னை, கடுகு, இஞ்சி, மஞ்சள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கரும்பு, நிலக்கடலை, ஜாதிக்காய், தேயிலை, காப்பி, ஏலக்காய் ஆகிய பயிர்களையும் தாக்கும் வல்லமை கொண்டது. கேரளா மாநிலத்தில், பாலக்காடு பகுதியில் 1966 ஆம் ஆண்டு வாழையில் கண்டறியப்பட்டது. பின்பு இந்நோய் மற்ற மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார், கோவா, வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கும் பரவி, அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நூற்புழுவினால் வாழையில் மகசூல் இழப்பு 41 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.

அறிகுறிகள்:

  • மண்ணில் வாழக்கூடிய இந்த நூற்புழு, வாழையின் வேரினுள் நுழைந்து வேரின் கார்டிகல் செல் பகுதியை உண்பதால், நீண்ட மற்றும் குறுகிய பள்ளங்களும், குழிகளும், கார்டிகல் பகுதியில் ஏற்படுகின்றன.
  • பாதிக்கப்பட்ட வேரை நீள்வாக்கில் இரண்டாக பிளந்தால், கார்டிகல் பகுதியில் செம்பழுப்பு நிறத்தில் காயங்கள் இருப்பதை காணலாம். இந்நூற்புழுவானது வேரின் நடுப்பகுதி அல்லது சாற்றுக்கற்றைப் பகுதியை முதலில் தாக்குவதில்லை என்றாலும், நாளடைவில் பூஞ்சாணங்கள் இந்நூற்புழு ஏற்படுத்திய காயங்களின் வழியாக வேரினுள் உட்செல்வதால், வெள்ளை நிற சாற்று கற்றை பகுதி, பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் மாறி, வேரைச் செயலிழக்கச் செய்கிறது. வேரிலிருந்து இந்த நூற்புழுவானது கிழங்கிற்கு சென்று அங்கு சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் காயங்களை ஏற்படுத்தி, நீண்ட மற்றும் குறுகிய பள்ளங்களையும் குழிகளையும், கிழங்கினுள் ஏற்படுத்துகிறது. இதை கிழங்கின் மேற்பரப்பை சீவும் பொழுது எளிதாக காணலாம்.

இந்த வேர்குடையும் நூற்புழுக்களின் தாக்கத்தினால், வேர்கள் சேதமடைவதால் வாழை மரம் வேரின் ஆதாரம் இழந்து, லேசான காற்றில் கூட, மரம் சாய்ந்து விடுகின்றது. மேலும் இந்நூற்புழு தாக்கத்தின் ஆரம்ப நிலையில்,  பாதிக்கப்பட்ட மரத்தின் வளர்ச்சி தடைபடுவதால், இலைகள் வெளுத்துக் காணப்படும். இதனால், மிகச் சிறிய தாரை கொடுப்பதால், காய்கள் வளர்ச்சியடையாமல், மகசூலும் வெகுவாக குறைகிறது.


பரவும் விதம்:

இந்த வேர்குடையும் நூற்புழு, மண்ணில் 13 மாத காலம் உயிருடன் வாழக்கூடியது. இது தண்ணீர், மண் மற்றும் நடவிற்கு பயன்படுத்தும் நோயுள்ள கிழங்கு அல்லது கன்றுகள் ஆகியவற்றின் மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது.
பாதிப்புக்குள்ளாகும் இரகங்கள்:
பொதுவாக கேவண்டிஷ் வகையைச் சார்ந்த இரகங்களான ரொபஸ்டா, பஸ்ராய் மறறும் பல இந்நூற்புழுக்களால் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஆனால், நெய் பூவன், சீனிசம்பா, தூத்சாகர், குள்ளன், வென்னீட்டுக்குள்ளன் மற்றும் கதலி ஆகியவை இந்நூற்புழுவின் தாக்கத்தை தாங்கி வளரக்கூடியவையாகும். சமீபத்தில் ஆந்திராவில், ரஸ்தாளி ரகத்தில் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.


2. வேர் அழுகல் நூற்புழு (பிராட்டிலென்கஸ் காப்பியே)


இந்த நூற்புழு மிக முக்கியமானதாகும். இது வாழையில் குறிப்பாக நேந்திரன் இரகத்தில், 45 சதவீதத்திற்கு மேலாக மகசூல் இழப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வாழை சாகுபடி செய்யும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், பீஹார், அஸ்ஸாம், மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதன் தாக்குதல்கள் காணப்படுகின்றன. இந்நூற்புழுவின் வாழ்நாள் 27 முதல் 32 நாட்களாகும்.
அறிகுறிகள்:
மிக அதிக அளவில் வேர்பகுதியில் காயத்தை உண்டுபண்ணி, வேரின் புற மற்றும் கார்டிகல் பகுதியில் உள்ள திசுக்களை அழித்து, கருஞ்சிவப்பு நிற திட்டுக்களை ஏற்படுத்தி வேரை கருமை நிறமாக்கி, கடைசியில் அழுகச் செய்கிறது. இந்நூற்புழு வேர்ப்பகுதி மட்டுமல்லாமல், கிழங்கிலும் வாயங்களை ஏற்படுத்தும். வேர் மற்றம் கிழங்குப் பகுதிகளில் ஏற்படும் காயங்களினால், வாழை மரத்தின் வளர்ச்சி குறைந்து, தார் வெளிவருவதும் தள்ளிப் போகும். மேலும், வாழைத்தாரின் எடை குறைகிறது. வேர் அழுகல் நூற்புழுக்களின் தாக்குதலினால், வேர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால், இந்நூற்புழுவின் தாக்குதலுக்குள்ளான வாழை மரம் அடியோடு சாய்ந்து விடுகிறது. மேலும் பியூசேரியம் வாடல் நோயின் தாக்கத்தை கூட, இந்நூற்புழு தீவிரப்படுத்தக் கூடிய தன்மை கொண்டது.


பரவும் விதம்:

நடவிற்கு பயன்படுத்தப்படும் பாதிக்கப்பட்ட நோயுள்ள கிழங்கு அல்லது வாழைக்கன்றுகளின் மூலமாகவும், தண்ணீர் மூலமாகவும், இந்நூற்புழு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது.
3. வேர்முடிச்சு நூற்புழு:
மிகப் பரவலாக காணப்படும் இந்நூற்புழுவானது, வெப்பமண்டல பிரதேசங்களில் வாழை உட்பட பல பயிர்களில் தாக்குதல்களை ஏற்படுத்துகிறது. பலதரப்பட்ட வகைள் இந்த நூற்புழு இனத்தில் இருந்தாலும், மெலாய்டோகைன் இன்காக்னிடா மற்றும் மெ. ஜவானிக்கா ஆகியவை. வாழை சாகுபடி செய்யும் இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இது குறிப்பாக பூவன் இரகத்தில், 31 சதவீத மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, பீஹார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இந்த நூற்புழுவின் தாக்குதல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


அறிகுறிகள்:

வேர்முடிச்சு நூற்புழுவின் தாக்குதலால், வேரின் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை சல்லி வேர்களில் முக்கியமாக வேரின் நுனிப்பகுதியில், சிறிதும் பெரிதுமாக முடிச்சுகள் காணப்படும். வேரிலிருந்து தண்டு, இலைகள் மற்றும் காய்களுக்கு, நீர் மற்றும் சத்துக்கள் போவது தடைபடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மரத்தின் இலைகள் மிகச்சிறியதாகவும், இலைகளின் ஓரங்கள் காய்ந்தும் காணப்படுகின்றன. வாழை மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, பூ வெளிவருவதும் தடைபடுகிறது. மேலும், காய்களின் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்து, பெரும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட வேரை நீள்வாக்கில் பிளந்தால், முட்டை குவியல்கள் காணப்படும்.


பரவும் விதம்:

இந்நூற்புழுவானது நோயுள்ள கிழங்கு மற்றும் கன்றுகளை நடுவதன் மூலமாக பரவுகின்றது. தனது மொத்த வாழ்நாட்களான 24லிருந்து 30 நாட்களை, இந்நூற்புழு வேரில் இருந்து கொண்டு தான் கழிக்கிறது. ஒரு பெண் புழு, சாதாரணமாக சுமார் 300 முட்டைகளை, கூட்டாக வேரின் கார்டெக்ஸ் பகுதியில் இடுகின்றன. இந்த முட்டைகளிலிருந்து புழுக்கள் வெளிவருகின்றன. அதில் இரண்டாம் இளநிலை பருவபுழுக்கள் மட்டுமே வாழையின் வேரைத் தாக்கி, வேரினுள் புகுந்து, முதிர்ச்சி அடைந்து, பின்பு இனச்சேர்க்கை செய்து இனப்பெருக்கம் அடைகின்றன. இந்த நூற்புழுவும் பியூசேரியம் வாடல் நோயின் தாக்கத்தை தீவிரப்படுத்துகின்றது.


பாதிப்புக்குள்ளாகும் இரகங்கள்:

மட்டி, நெய்பூவன், ரொபஸ்டா, அம்ரித்ஸாஹர், பஸ்ராய்,குட்டை கேவண்டிஷ், மனோரஞ்சிதம், பூவன், இரஸ்தாளி, கற்பூரவள்ளி, மொந்தன், நேந்திரன் முதலிய இரகங்கள் வேர்முடிச்சு நூற்புழுவினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஆனால் விருப்பாட்சி, பச்சநாடன், லகாடான் முதலிய இரகங்கள், இந்த நூற்புழுக்களின் தாக்குதல்களை தாங்கி வளரக்கூடியவை.


4. சுருள் வடிவ நூற்புழு:


ஹெலிக்கோடைலங்கஸ் மல்டிசிங்டஸ் மற்றும் ஹெ. டைஹிஸ்டீரா என்ற இரண்டு சுருள் வடிவ இன நூற்புழுவானது, கேரளா, தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், வாழையை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நூற்புழு, வாழை குலைத்தள்ளும் காலத்தை 3 முதல் 4 மாத காலம் தாமதமாக்குவதோடு, சுமார் 34 சதவீதம் மகசூல் இழப்பையும் ஏற்படுத்தக்கூடியது. வேரில் மிக ஆழமான காயங்களை ஏற்படுத்துவதால், இந்நூற்புழு தாக்கப்பட்ட வாழை மரம், எளிதில் சாய்ந்து கீழே விழுந்துவிடும். இது மற்ற நூற்புழுக்களான, வேர்குடையும் மற்றும் வேர்காய் நுாற்புழுக்களைப் போல கார்டிகல் பகுதியை தாக்குவதில்லை. மாறாக, வேரின் மேற்புற பகுதியை தாக்குவதால், பாதிக்கப்பட்ட வேர்கள் முற்றிலும் அழுகி இறந்துவிடுகின்றன. இந்நூற்புழு தாக்கப்பட்ட வாழை மரம், வளர்ச்சி குன்றியும், இளம் இலைகள் மஞ்சளாகவும், பிறகு கருகியும் காணப்படும்.


வாழ்க்கை சுழற்சி:


மண்ணில் 32 முதல் 37 நாட்களே உயிர் வாழும் இந்த நூற்புழுவானது, குளிர் பகுதியில் அதிகமாக காணப்படும். எங்கெல்லாம் வேர் குடையும் நூற்புழு அதிகமாக காணப்படுகிறதோ, அங்கெல்லாம் இந்த நூற்புழு இருப்பதில்லை. முட்டை பருவம் தவிர மற்ற அனைத்து பருவங்களும் வேரினுள் காணப்படுகின்றன.


பாதிப்புக்குள்ளாகும் இரகங்கள்:


இரஸ்தாளி, கிருஷ்ணவாழை, பேயன், சிறுமலை, பச்சை வாழை (ரொபஸ்டா) கற்பூரவள்ளி போன்ற இரகங்கள் இந்த நூற்புழுவின் தாக்குதலை தாங்கி வளரக்கூடியவையாகும்.
பரவும் விதம்:
மற்ற நூற்புழுக்களைப் போல் இதுவும், நடவிற்கு பயன்படுத்தப்படும் நோயுள்ள கிழங்குகள் அல்லது கன்றுகள் மூலமாகவும், மண்ணின் மூலமாகவும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது.

    முட்டை கூடு நூற்புழு:

நேந்திரன், நெய்பூவன் மற்றும் பச்சை வாழை ஆகிய இரகங்களை தாக்கும் இந்த நூற்புழுவானது, 20 முதல் 57 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்நூற்புழு, இளம் வேர்களை தாக்குவதால், நீர் மற்றும் சத்துக்களை கடத்தும் திறன் மட்டுபடுகிறது. இதனால், வாழை மரத்தின் வளர்ச்சி குன்றி, மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த புழுவின் மொத்த வாழ்நாள் 25 நாட்களாகும்.

 

கட்டுப்பாடு முறைகள்:
உழவியல் முறைகள்
  • அறுவடை முடிந்த பின் 3 மாதங்கள் வயலை எந்த பயிரும் செய்யாம் விடுவதால் துளைக்கும் புழுக்களின் எண்ணிக்கை குறையும். மேலும் 5 மாதங்களுக்கு நீர் பாய்ச்சிப் பின் நிலத்தை விட்டுவிடுவதால் துளைக்கும் புழு, புஸேரியம் வாடல் நோயைத் தோற்றுவிக்கும். உயிரிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும்.

  • நெல், கரும்பு, பச்சைப் பயறு, பருத்தி போன்ற பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்தால், நூற்புழுத் தாக்கம் குறைந்து வா‌‌‌ழையில் மக‌சூல் அதிரிக்கும்.

  • வா‌ழையுடன் ஊடுபயிராக சணப்பை (குரோட்டலேரியா ஜங்சியா) பயிரிடுவது நூற்புழு எண்ணிக்கையைக் குறைக்கும்.

  • மண்ணி‌‌னை கறுமை நிற பாலித்தின், கரும்பு சோகைகள், வா‌‌ழைச் சருகுகளைக் கொண்டு மூடலாம்.

  • கன்று நடும் போது வேப்பம் புண்ணாக்கு இடுதல், துலுக்க மல்லி, முள்ள‌ங்கி, சணப்பை, அவரை போன்றவற்றுடன் ஊடு பயிர் செய்வது நல்ல பயனைத் தரும்.

  • சாராய ஆலை கழிவு 2.5 கி கி + மண்புழு உரம் 1 கி கி + வேப்பம் புண்ணாக்கு 1 கி கி + கோழிக்குப்பை 2.5 கிகி கலவையை, நடவு செய்த 3, 5, 7 மாதங்களில் இடலாம்.

  • வேம்பு அல்லது ‌நீம் கோல்டு அல்லது நிம்பிசிடின் ஏதேனும் ஒரு மருந்தினை 30 மி லி மரமொன்றுக்கு இடலாம்.

  • கிழங்கின் நுனியினை ‌சீ‌வுதல் அல்லது 50 செ. வெந்நீரில் 20 நிமிடங்களூக்கு வைத்து நேர்த்தி செய்யலாம்.

உயிரியல் கட்டுப்பாடு

  • மரமொன்றுக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 20 கி நடும்போதும், 3 மாதங்கள் கழித்து ஒரு முறையும் இடலாம்.
  • சூடோமோனஸ்‌ புளூரோசென்ஸ், பேசிலோமைசீஸ் லிலாசினஸ் 20 கி போன்ற உயிரியல் கட்டுப்பாடு மருந்துகளைப் பயன்படுத்தலாம்
  • கிழங்கின் நுனியினை ‌சீ‌வுதல் அல்லது 50 செ. வெந்நீரில் 20 நிமிடங்களூக்கு வைத்து நேர்த்தி செய்யலாம்.

இரசாயன முறைகள்
  • கார்போபியூரா‌ன் 50கி/ மரம் நடும்போதும், பின்பு 3 மாதங்கள் ‌இடை‌வெளியில் இரு முறையும் இடவும்.

  • நூற்புழுக் கொல்லிகளான ரக்பி 10 ‌ஜி-10கி/மரம் அல்லது கால்பால் 4ஜி-10கி/மரம் 3 மாத இடைவெளியில் மீண்டும் ஒரு முறை அளிப்பதால் ‌வேரழுகல் மற்றும் வேர்முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப் படுத்தலாம்.

  • கன்றுகளை நிம்பிசிடின் 15 மி.லி கலவையின் அல்லது ஜட்கன் 15 மி.லி/லி அல்லது நீவின் 15 மி.லி/லி மருந்தில் 30 நிமிடங்களுக்கு நனைத்துப் பின் நடவும்.

    ஒருங்கிணைந்த நூற்புழு கட்டுப்பாடு முறைகள்:
              அனைத்து நூற்புழுக்களும், மண்ணின் மூலமாகவும், நடவிற்கு பயன்படுத்தக்கூடிய நோயுள்ள கன்றுகளின் மூலமாக பரவி, மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமாக மண் மற்றும் கிழங்கிலுள்ள நூற்புழுக்களை அழிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம், நூற்புழுக்களின் தாக்குதலிருந்து வாழையை காப்பாற்றி அதிக மகசூல் பெறலாம்.
    கட்டுப்பாடு முறைகள்:

    1. வாழை நடவு செய்வதற்கு முன்போ அல்லது பின்போ, நெல், கரும்பு, பச்சைப்பயிறு, சணப்பை, பருத்தி, மஞ்சள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாகுபடி செய்து, பின்பு 3 மாகாலம் எந்த பயிரும்  சாகுபடி செய்யாமல் நிலத்தை அப்படியே வைத்திருந்து, பின் வாழை நடவு செய்தால், மண்ணில் உள்ள நூற்புழுக்கள் வெகுவாக குறைகிறது.
    2. சணப்பை பயிரை, வாழை சாகுபடி செய்யும் முன் பயிர் செய்து, அவற்றை நிலத்தில் அப்படியே மடக்கி உழுது, பின்பு வாழை நடவு செய்யவேண்டும். மேலும் வாழை நட்ட 15 நாட்கள் கழித்து, ஊடுபயிராக சணப்பை பயிர் செய்து, பின்பு பூ பூப்பதற்கு முன், சணப்பை பயிரை பிடுங்கி, வாழைக் கன்றை சுற்றி கிண்ணம் பறித்து அவற்றில் இந்த சணப்பை பயிரை  இட்டு, பின்பு மண்ணால் மூடி நீர் பாய்ச்ச வேண்டும்.
    3. சாமந்தி பூவை ஊடுபயிராக பயிர் செய்வதால், நூற்புழுக்கள் கட்டுப்படுவதோடு, பியூரடான் குருணை மருந்து செலவும் மிச்சமாகிறது. இந்த சாகுபடி முறையில், களைகள் வளர்வது தடுக்கப்படுவதால், களைகள் எடுப்பதற்கான செலவும் குறைகிறது. மேலும் சாமந்திப்பூவை விற்பதால், ஏக்கருக்கு 5000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை வருமானமும் பெறலாம். கடைசியாக, சாமந்தி பூச்செடியை பிடுங்கி, மண்ணில் இடுவதால், தழைச்சத்தும் மண்ணில் சேர்வதோடு, மண் வளமும் மேம்படுகிறது.
    4. மக்கிய தொழு உரம், சர்க்கரை ஆலைக்கழிவு, நெல் உமிச் சாம்பல் ஆகியவற்றை, முடிந்த வரை அதிகமாக மண்ணில் இட்டு, வாழை நடவு செய்வது நல்லது.
    5. கன்று நேர்த்தி:

    நோய்கள் தாக்காத வாழைத்தோட்டங்களிலிருந்து அல்லது தாய்மரத்திலிருந்து 15 முதல் 2 கிலோ எடையுள்ள கிழங்குகளை தேர்ந்தெடுப்பது அவசியம். பின்பு கிழங்கின் மேற்பரப்பிலுள்ள தோலை கத்தி கொண்டு சீவேண்டும். இப்படி சீவிய கிழங்கை களிமண் கரைசலில் மூழ்கி எடுத்த பின்பு, சீராக 40 கிராம் கார்போபியுரான் குருணை மருந்தை அதன் மேல் தூவி, நிழலில் காய வைத்து, நடவு செய்யவேண்டும். இந்த முறைக்கு பதிலாக, மேற்தோல் சீவிய கிழங்கு பகுதியை, மோனோகுரோட்டாபாஸ் (ஒரு விட்டர் நீரில் 14 மில்லி மருந்து என்ற அளவில் கலந்து) மருந்து கலவையில் கிழங்குப் பாகத்தை 30 நிமிட நேரம் மூழ்க வைத்து, பின்பு நடவு செய்ய வேண்டும்
    திசு வளர்ப்பு கன்றுகளை நடவு செய்வதாக இருந்தால், நடவு செய்வதற்கு 5 நாட்களுக்கு முன்னர், பாலித்தீன் பையில் 10 கிராம் பியுரடான் குருணை மருந்தை இட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு 5 நாட்கள் கழித்து, திசு வளர்ப்பு கன்றுகளை குழியில் நடவு செய்து, நீர் பாய்ச்சவேண்டும். மேலும், கன்று நட்ட 3 மற்றும் 5 மாங்களில், ஒரு வாழை மரத்திய்கு 40 கிராம் பியுரடான் மருந்து என்ற அளவில், மருந்தை சுற்றி 1 அடி தள்ளி, மண்ணில் கிண்ணம் பறித்து இட்டு, பின்பு இம்மருந்து கரையளவிற்கு உடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும். இதனால் நூற்புழுக்கள் அனைத்தும் கட்டுபடுத்தப்படுகின்றன.

      • வேப்பம் புண்ணாக்கை மரத்திற்கு 500 கிராம் என்ற அளவில், கன்று நட்ட 3 மற்றும் 5 வது மாதத்தில், கன்றை சுற்றி மண்ணில் இட்டால், அனைத்து நூற்புழுக்களும் சாகடிக்கப்பட்டு  மகசூல் அதிகமாகிறது.
      • எதிர் உயிர் கொல்லிகளான ட்ரைகோடெர்மா விவரிடி, சூடோமோனாஸ் ப்ளூரெஸன்ஸ், பேசில்லோமைசஸ் லிலாசினஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை, ஒரு மரத்திற்கு 25 கிராம் என்ற அளவிலும், க்ளோமஸ் மோஸே என்ற உள்வேர் பூஞ்சாணத்தை, ஒரு மரத்திற்கு 25-50 கிராம் என்ற அளவிலும் இடுவதால், நூற்புழுக்கள் மிக எளிதாக அழிக்கப்படுகின்றன.

மேலே செல்க


தண்டுக்கூன் வண்டு


தாக்குதலின் தன்மை‌
  • இவ்வண்டு 5வது மாத வாழை மரங்களிலிருந்தே தாக்கத் தொடங்கும். கன்றுகளை இது தாக்குவதில்லை.

  • தனது கூர்மையான மூக்கினால் தண்டின் மீது சிறிய குண்டூசி அளவு துளைகளை ஏற்படுத்துகிறது.

  • இத்துளையிலிருந்து பழுப்பு நிற பிசுபிசுப்பான பிசின் போன்ற திரவம் வெளிவந்து கொண்டிருக்கும். இலையுறையின் அடிப்பகுதியிலிருந்து நார் போன்ற கழிவுகள் வெளிப்படும்.

  • புழுக்கள் தண்டுப்பகுதியை குடைந்து சென்று திசுக்களை உண்ணுகின்றன. பாதிக்கப்பட்ட தண்டினை பிளந்து பார்த்தால் திசுக்கள் நீண்ட அளவில் குடைந்து காணப்படும். இவ்வண்டுகளின் அதிகளவு தாக்குதலால் தண்டுப் பகுதி அழுகி, துர்நாற்றம் வீசும்.

  • இதன் தாக்குதலால் பூ வெளிவருவது மற்றும் காய்கள் முதிர்ச்சியடைவது தடைபட்டு, மகசூல் இழப்பு அதிகளவில் ஏற்படுகின்றது.

  • இத்தகைய மரங்களிலிருந்து பெரும்பாலும் குலைகள் தோன்றுவது இல்லை. ஒரு வேளை தோன்றினாலும் குலைகள் சிறுத்தும், காய்கள் சிறுத்து எண்ணிக்கையில் குறைந்தும் காணப்படும். 

  • இவ்வண்டின் தாக்குதல் நேந்திரன், செவ்வாழை, ரொபஸ்டா மற்றும் மொந்தன் போன்ற இரகங்களில் அதிகமாக காணப்படும். இதன் தாக்குதல் வருட முழுவதும் காணப்பட்டாலும் கோடை மாதங்களில் அதிகமாக இருக்கும்.

பூச்சியை கண்டறிதல்


முட்டை: உருளை வடிவில் வெள்ளை நிறத்தில், தட்டையான நுனி பாகத்தை கொண்டிருக்கும். இதன் அடைகாக்கும் காலம் 3-8 நாட்கள்.

புழு: புழு மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், பழுப்பு நிறத் தலையுடன், கால்கள் இல்லாகலும் காணப்படும். இவை தண்டுகளை துளைத்துக் குடைந்து கொண்டே சென்று நடுத்தண்டைத் தாக்குகின்றது.
கூட்டுப்புழு: தண்டினுள்ளேயே, இவை நார் போன்ற கூடை கட்டி கூட்டுப்புழுவாக மாறுகின்றன. இவை கூட்டுக்குள்ளேயே வளர்கின்றன.
முதிர் பூச்சி: முதிர்ச்சியடைந்த கூண் வண்டானது கருமை நிறத்தில் 23-37 மி.மீ. அளவு இருக்கும். இவை நடுத்தண்டின் அழுகிய பாகங்களுக்குள் காணப்படும். இவ்வண்டுகள் 1 வருடம் வரை வாழ்கின்றன.

கட்டுப்பாட்டு முறைகள்
உழவியல் முறைகள்
  • பாதிக்கப்பட்ட வயலிலருந்து ஒரு போதும் விதைக் கிழங்களை நடுவதற்காக எடுக்கக்கூடாது.

  • வயலில் தாக்குதல் அதிகமாக உள்ள மரங்களை முற்றிலுமாக பிடுங்கி எரித்து விடவேண்டும். இதன் மூலம் வண்டுகளின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.

  • தாக்குதல் அதிகம் இருக்கும் பகுதிகளில், அறுவடைக்கு பின் இலைகளை உரமாக வயலில் இடும் முறையினை தவிர்க்கலாம்.

இராசயன முறைகள்
  • 150 மி.லி. மோனோகுரோட்டாபாஸ் மருந்தை 350 மி.லி. நீரில் கலந்து ஊசி மூலம் தரையிலிருந்து 2 (அ) 4 அடி உயரத்தில் 2 மி.லி. மருந்துக் கலவையை 30° கோணத்தில் செலுத்தவேண்டும். அதற்கு எதிர்புறத்தில் 150 செ.மீ. உயரத்தில் 2 மி.லி. மருந்துக் கலவையைச் செலுத்தவேண்டும். ஒரு மரத்திற்கு ஒரு மறை 4 மி.லி. மருந்துக்கலவையை செலுத்தவேண்டும். இம்மருந்துக் கரைசலை மரத்திற்கு 6-8 மாதம் வரை ஒவ்வொரு மாதமும் ஊசி மூலம் செலுத்துவதன் மூலம் வண்டின் தாக்குதலை தவிர்க்கலாம்.

  • குழி ஒன்றும்மு நடவு சமயத்தில், ப்யூராடான் 3G 20 கி. (அ) திமெட் 10G 12கி. (அ) வேப்பம் புண்ணாக்கு ½ கிலோ என்ற அளவில் இடவும்.

  • வெட்டப்பட்ட இலைக்காம்பினை குளோர்பைரிபாஸ் (2.5லி) + 1மி.லி. ஒட்டும் திரவத்தில் கலந்த கலவை கொண்டு நனைக்கவேண்டும்.

  • வாழைக் கலையினை அறுவடை செய்த பின், வாழை மரத்தினை வெட்டிய அடிப்பகுதியில் 100 மி.லி. கார்பரில்(2 கி/லி) அல்லது பிவேரியா பேசியானா 10 கி. என்ற அளவில் மருந்தினை இடவும்.

உயிரியல் முறை
  • நீளவாக்கில் வெட்டப்பட்ட பகுதியின் மீது 20 கி. பிவேரியா பேசியானா பூஞ்சை (அ) ஹெப்பிடிரா ரேப்டிடிஸ் இண்டிகா எனுத் நூற்புழுவினை கொண்டு தடவினால் இவ்வண்டுகள் நோய் வாய்ப்பட்டு இறந்து விடும்.

இயந்திர முறை
  • நீளவாக்கில் வெட்டப்பட்ட தண்டுப் பொறிகளை பயன்படுத்தவும். தண்டுகளை நீளவாக்கில் துண்டு துண்டாக வெட்டி வயலில் ஆங்காங்கே ஏக்கருக்கு 25 என்ற வீதத்தில் வைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.

மேலே செல்க


இலைப்பேன்கள்


தாக்குதலின் தன்‌‌மை:
  • முதலில் காய்களின் தோலில் நீ‌ரில் நனைத்த புள்ளிகள் போ‌ன்று ஆங்காங்கு தோன்றும். இப்பேன்கள் இரண்டு ஒட்டிய காய்களுக்கு இடையே இருந்து கொண்டு சாற்றை உருஞ்சும். பின்பு இவை காய்களில் துருப்போன்ற செந்நிற, பழுப்பு நிறத்தில் சொரசொரப்பான கோடுகளாக மாறும்.

  • இத்துருப் போன்ற கோடுகள் மேலும் அதிக‌ரிப்பதோடு, இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.

  • தோலின் உள்ளே உள்ள சதையின் சுவை மற்றும் தன்மை மாறாது. எனினும் இந்த துருப்போன்ற நிறத்தால் சந்தையில் விலை மிகவும் குறையும். 

  • பேன்களின் தாக்குதல் முற்றும் போது, காய்களில் ‌வெடிப்புகள் ‌தோன்றும்.

பூச்சியை கண்டறிதல்:

முட்டை: முட்டைகள் சாதாரணமாக கண்ணுக்குப் புலப்படுவதில்லை. தண்டின் மேற்பகுதி அல்லது காய்களுக்கு அடியிலோ இடப்படுகின்றன. கோடையில் முட்டைகள் 8 நாட்களில் பொரிந்து விடும்.
புழுக்கள்: இறக்கைகள் அற்ற வெண்மை நிற சிறிய புழுக்கள் பெரிய பேன்களைப் போன்ற அதே வடிவத்தைக் கொண்டிருக்கும். புழுக்காலம் 8-10 நாட்கள் ஆகும்.
கூட்டுப்புழு: வெண்மை நிற புழுக்களைப் போன்ற நகரக் கூடிய இவை 1 மி.மீ நீளமுடையவை.
முதிர்பூச்சி: இவை 1.5 மி.மீ. நீளத்தில் மெல்லிய உடலுடன் மஞ்சள் முதல் தங்கப் பழுப்பு நிறத்தில் இறகு போன்ற இறக்கைகளை கொண்டுள்ளன. இறக்கையின் முன் பகுதி கருமை நிற முடிகளால் மென்மையாகக் காணப்படும். இவை முதிர்ந்த பேன்களுக்கு நடு வயிற்றுப் பகுதியில் நீண்ட கரு நிற தன்மையைக் ‌‌கொடுக்கின்றது. பேன்களின் இறக்கையின் அடிப்பகுதியில் இரு கண் போன்ற புள்ளிகள் காணப்படும். இதன் மூலம் பூக்களைத் தாக்கும் சிறு ஆண் பேன்களிலிருந்து, துருக்காய் பேன்களை பிரித்தறிய ஏதுவாகும்.

கட்டுப்பாடு:
உழவியல் முறைகள்:
  • பேன்களின் தாக்குதலற்ற திசு வளர்ப்பு வா‌‌‌ழைகளைப் பயன்படுத்தவும். முடிந்தால் நடவு செய்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யும் முன் வெந்நீரில் கிழங்குகளை நேர்த்தி செய்து நடவும்.

  • பேன்கள் தங்கி‌ வாழும் பிற பயிர்களிருந்தால் அதனை அழித்து விடவும்.

  • பாலித்தீன் அல்லது துணிப் பைகளை கொண்டு, தாரினை முழுவதும் மூடி, காய்களை காய்ப் பேன் தாக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

  • காய்களை தினசரி கவனித்து வருவது அதிக இழப்பு ஏற்படாமல் தடுக்க உதவும்

உயிரியல் முறைகள்:
  • கண்ணாடி இறக்கை பூச்சி, பொறி வண்டு போன்ற காக்சினெலட் உண்ணிகளை வயலில் விடுவதன் முலம், துருக்காய் பேன்களை கட்டுப் படுத்தலாம். எறும்புகள் கூட மண்ணிலிருந்து கூட்டுப்புழுக்களை அகற்றுவதில் உதவி செய்கின்றன.

இரசாயன முறைகள்:
  • குலைகள், தண்டு மற்றும் கன்றுகளில் குளோர்பைரிபா‌‌‌‌‌‌‌ஸ் மருந்தினைத் தெளிக்கலாம்.

  • பிப்ரோனில் மற்றும் பைன்பென்திரான் மருந்தினை மண்ணில் இடலாம்.

 

மேலே செல்க


கண்ணாடி இறக்கைப்பூச்சி்



  • உடல் வெளிர் மஞசள் நிறமாகவும், இறக்கை கண்ணாடி போன்று மெல்லியதாகவும் உள்ள, மிகச்சிறிய இந்த கண்ணாடி இறக்கை பூச்சி, இலையின் அடிப்பகுதியில் கூட்டம் கூட்டமாக அருந்து, இலையின் சாற்றை உறிஞ்சுகின்றன.

  • இதனால், இலையின் மேற்பரப்பில் வெளிர் திட்டுக்கள் காணப்படும். தாக்குதல் அதிகமாகும் பொழுது, இலை முதலில் மஞ்சள் நிறமாகவும், பின்பு பழுப்பு நிறமாக மாறி, வாழையின் வளர்ச்சியை பாதித்து, மகசூல் இழப்பை எற்படுத்துகிறது.

  • இந்த பூச்சியானது தென்னை, ஏலக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் இலைகளிலும் வாழ்கின்றன.

  • இது  பூவன், கற்பூரவள்ளி, ரொபஸ்டா, மொந்தன் போன்ற இரகங்களில், அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

கட்டுப்பாடு:
  • இந்த பூச்சியினை கட்டுப்படுத்த, பாதித்த இலையினை அவ்வப்பொழுது அகற்றி, தீ வைத்து அழித்துவிடவேண்டும்.

  • தாக்கம் அதிகமாக இருந்தால், மோனோகுரோட்டோபாஸ் (1.5 மில்லி/ஒரு லிட்டர் தண்ணீர்) டைமீத்தோயேட் ( 2 மில்லி/ஒரு லிட்டர் தண்ணீர்) மித்தைல் டெமட்டான் ( 2 மில்லி/ஒரு லிட்டர் தண்ணீர்) மருந்தில் ஏதாவது ஒன்றை, டீப்பால் அல்லது சேன்டோவிட் (0.5 மில்லி/ஒரு லிட்டர் தண்ணீர்) போன்ற ஒட்டுந்திரவத்துடன் கலந்து, இலையின் இரண்டு பக்கங்களும் நனையுமாறு தெளிக்கவேண்டும்.

மேலே செல்க


மாவுப்பூச்சி



  • இந்த பூச்சி இனத்தில், சக்கேரோகாக்கஸ் சக்காரி மற்றும் பிளானோகாக்கஸ் சிட்ரை என்ற இரண்டு வகை மாவுப்பூச்சிகள், வாழையை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

  • இவை கூட்டம் கூட்டமாக, வாழையின் வேர், இலை, காய்கள், தாரின் தண்டு அல்லது கொண்ணை பகுதியில் இருந்து கொண்டு, சாற்றை உறிஞ்சுவதால், வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, காய்களின் அளவு சிறுத்தும், தரம் குறைந்தும் காணப்படும்.

கட்டுப்பாடு:
  • இதளை உயிரியல் முறைப்படி கட்டுப்படுத்த, கைலோகோரஸ் நைக்ரிடஸ் எனும் பொறி வண்டு மற்றும் கிரிப்டோலேமஸ் கார்னியஸ் எனும் ஒட்டுண்ணி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

  • தாக்குதல் அதிகமாக காணப்பட்டால், மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி மருந்தினை 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் ஒட்டுந்திரவத்துடன் கலந்து, வாழையின் மேல் தெளிக்கலாம்.

மேலே செல்க


இலைப் புழு



  • வாழை நடவு செய்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், ஸ்போடாப்டிரா லிட்டூரா என்றழைக்கப்படும் இந்த இலை தின்னும் புழு, வாழை இலையின் அடிப்பகுதி இலைக்குருத்து ஆகிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு, வாழை இலையை சுரண்டி உண்பதால், வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இந்த புழு, வாழையின் மேற்பகுதியையும் உண்டாகின்றன. இப்புழு தாக்கிய குருத்துப் பகுதி விரிவடைந்த பின்பு, இலைகளில் ஓட்டைகள் காணப்படும்.

  • தாய் அந்துப்பூச்சி, இலையின் அடிப்பாகத்தில் முட்டைகளை குவியல் குவியலாக இடுகின்றன. பின்பு, முட்டையிட்ட 5 நாட்களில், ஏராளமான இளம்புழுக்கள், இம்முட்டை குவியலிலிருந்து வெளிவருகின்றன. 12 நாட்களில் இளம்புழுக்கள் கூட்டுப்புழுவாகி, பிறகு 5 நாட்களில் அந்துப்பூச்சியாக வெளிவருகிறது.

கட்டுப்பாடு:
  • கன்று  நட்டு இலை வந்தவுடன், அவ்வப்பொழுது இலைகளின் அடிப்பகுதியில் முட்டை குவியல் அல்லது புழுக்கள் இருக்கிறதா என்று கண்காணித்து, அப்படி இருந்தால், உடனடியாக நிலைமைக்கு ஏற்ப, புழுக்களை சேகரித்து அல்லது புழுக்கள் பாதித்த இலையை அறுத்து, அழித்து விடவேண்டும்.

  • புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால், எண்டோசல்பான் (1.5 மில்லி/லிட்டர் தண்ணீர்) அல்லது குளோர்பைரிபாஸ் (2.5 மில்லி/லிட்டர் தண்ணீர்) மருந்தினை, ஒட்டுந்திரவத்துடன் கலந்து, இலைகளின் அடிப்பகுதியும் நனையுமாறு தெளித்து, புழுவை அழிக்கலாம்

  • இலைத் தின்னும் புழுவுக்கென்றே கண்டறியப்பட்ட இனக்கவர்ச்சி பொறியை, ஏக்கருக்கு 5 என்ற விகிதத்தில், தரைக்கு மேல் 3 அடி உயரத்தில் வைத்து, ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்திழுப்பதன் மூலம், இனச்சேர்க்கையை தவிர்த்து, இப்புழுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

  • உயிரியல் பூச்சிக்கொல்லிகளான பேசில்லஸ் துரியன்ஜியன்ஸிஸ் (ஒரு லிட்டர் நீரில் 1 கிராம் என்ற அளவில்) அல்லது என்.பி.வி. நச்சுரியை, ஏக்கருக்கு 250 புழுக்களின் சமனளவில், மாலை நேரங்களில், இலைகளின் அடிப்புறம் நன்கு நனையுமாறு தெளிக்கவேண்டும்.

மேலே செல்க

நோய் மேலாண்மை



இளம்பிள்ளை நோய்/பறவைக் கண் நோய்: கிளியோஸ்போரியம் முசேரம்


தாக்குதலின் தன்மை
  • இளம் வாழைக் காய்களை அதன் நுனியில் தாக்குகின்றது.

  • ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறிய வட்டவடிவ கருநிறப் புள்ளிகள் தோன்றுகின்றன. இவை பெரிதாகி புள்ளிகளின் நிறங்கள் பழுப்பு நிறமாக மாறும்.

  • இப்புள்ளிகளில் ஆரஞ்சு அல்லது செங்கல் தூள் நிறத்தில் இந்நோயை உண்டு பண்ணக் கூடிய பூஞ்சாண வித்துக்கள் தோன்றி, புள்ளிகள் முழுதும் பரவிக் காணப்படும். எல்லாத் தனித்தனிப் புள்ளிகளும் ஒன்று சேர்ந்து பழங்கள் அழுகி சீப்பிலிருந்து தனியே விழுந்து விடும்.

  • சில சமயங்களில் குலையின் கொண்னை கூட பாதிக்கப்படும். தாக்கப்பட்ட பழுங்கள் அழுகி கருமை நிறமாக மாறிவிடும்.

  • வாழைக்குலையில் இளங்காய்கள் வாறு அழந்து கருகி சிறுத்து சூம்பி காணப்படும். வெயில் அதிகம் படும் இடங்களில் இந்நோய் முதலில் ஆரம்பமாகிறது.

நோய்க்காரணியை கண்டறிதல்
  • இவ்வுயிரியின் வித்துப்பையான அசர்வுளை பொதுவாக வட்டவடிவில் அல்லது நீண்டோ காணப்படும்.

  • கொனிடியந் தாங்கிகள் உருளை வடிவில் முனையை நோக்கி குறுகியும், நிறமற்றதாக இழைகளைக் கொண்டிருக்கும். சற்று‌ கிளைகளுடன், அடிப்பகுதியில் நிறமுடையது. ஒவ்வொன்றும் ஒரு முனையில் பையலிடிக் அமைப்பைக் கொண்டது.

  • கொனிடியாக்கள் நிறமற்றவை, தடுப்புப் பூசண இழை அற்றது. நீள்வட்ட அல்லது நீண்ட உருளை வடிவம் கொண்டது, தட்டையானது.

  • இவ்வுயிரி காற்றின் மூலமும், வாழைப் பூவின் தேனிற்காகவும் வரும் பல பூச்சிகளாலும் எளிதில் பரவுகின்றது.

  • ‌மிகுதியான வெப்பமும், அதிக ஈரப்பதமும் இந்நோயினை தீவிரப் படுத்துகின்றன. சில இரகங்கள் எளிதில் இந்நோய்க்கு ஆளாகும்.

கட்டுப்பாடு
உழவியல் முறைகள்
  • பாதிக்கப்பட்ட பகுதிகளை எரித்து விடவும்.

  • வயலைச் சுத்தமாக, நீர் தேங்காமல் பராமரிக்கவும்.

  • நெல், கரும்பு போன்ற பயிர்களுடன் பயிர் சுழுற்சி செய்யவும்.

  • பழங்கள் நோய் தாக்கா வண்ணம் எடுத்துச் சென்று பராமரிக்கவேண்டும்.

  • காய்கள் நன்கு முற்றி, சரியான சமயத்தில் தாரினை அறுவடை செய்யவேண்டும்.

  • சரியான அள‌வு ஊட்டச்சத்து அளிப்பதும் நோயினைத் தடு‌க்க உதவும்.

இரசாயன முறைகள்
  • காய்கள் முற்றும் முன்பு போர்டியாக்ஸ் 1% கலவையைத் தெளிக்கவும்.

  • அறுவடைக்கு முன்‌பு புரோக்குளோரோஸ் 0.2% அல்லது கார்பன்டஸிம் 0 .1% அல்லது குளோரோதலானில் 0.2% 4 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது சிறந்த பலன் தரும்.

  • குலையினை அறுவடை செய்த பின்பு காய்களை மைகோஸ்டேட்டின் 440 பி.பி.எம் அல்லது ஆரியோபஞ்சிசால் 100 பி-பி-எம் அல்லது கார்பென்டசிம் 400 பி.பி.எம் அல்லது பெனோமைல் 1000 பி.பி.எம் மருந்தினில் நனைத்து எடுத்தால் இந்நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இயந்திர முறை
  • நோய்த் தொற்றினைத் தவிர்க்க காய்கள் விரிந்தவுடன் நுனியில் இருக்கும் பூக்களை நீக்கி விடவும்.

  • தாரினை அறுவடை செய்யும் போது காய்களில் காயங்கள் ஏற்படாதவாறு எடுத்துச் சென்று கிடங்கில் வைக்கவும். மேலும் காய்களை குளிர்சாதனப் பெட்டியில் 7-10° செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கும்போது இந்நோய் தாக்குவ‌தில்லை.

  • காய்களை ஒரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போதும் பழுக்க வைக்கும்போதும் ஏதும் பாதிப்பு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும்.

மேலே செல்க


பூவிதழ் தேமல் நோய்‌‌


தாக்குதலின் தன்மை
  • முதலில் தண்டின் அடிப்பாகம், இலைக்காம்பு, முழுத்தண்டு,  நடுநரம்பு ஆகிய பகுதிகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய கோடுகள் தோன்றுவது இந்நோயின் முக்கிய அறிகுறி ஆகும். பின்பு இக்கோடுகளின் நிறம் கரும் இளஞ்சிவப்பு நிறமாக மாறி, தண்டின் மேற்பகுதிக்குப் பரவுகிறது. இதனால் தண்டானது  இளஞ்சிவப்பு நிறத்தில் தேமல் போன்று காணப்படுகிறது.

  • பூமடல், காய்கள், பூங்கொத்துத் தண்டு ஆகியவற்றிலும் தேமல் போன்ற இலேசான வெளிறிய கோடுகள் தென்படும்.

  • பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் வழக்கத்திற்கு மாறாகத் தண்டிலிருந்து பிரிந்து காணப்படுவதால் மரங்கள் மிகவும் நலிவடைந்து, ஒல்லயாகக் காணப்படும். இந்த அறிகுறியானது வாழை நடவு செய்த ஆறு மாதத்திற்குள்ளாக தென்படுகிறது.

  • தண்டின் உச்சிப்பகுதி தட்டையாகி இப்பகுதிகளின் இரண்டு பக்கங்களிலும் இலைகள் வரிசையாக மேல் நோக்கிக் காணப்படுவதால் பாதிப்பிற்துள்ளான மரமானது விசிறி வாழை போன்று தோற்றமளிக்கிறது. தாரின் தண்டுப்பகுதி வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிறயதாகவோ அல்லது மிகவும் நீளமாகவோ காணப்படும். ஆண் பூவின் இதழ்களில் பழுப்பு அல்லது சிவப்பு நிறக் கோடுகள் தோன்றி பூவிதழ் தேமல் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

  • வாழைத்தாரின் அளவு, காய்களின் எண்ணிக்கை மற்றும் எடை குறைகின்றன. மேலும் கர்கள் வெளிறி கருங்கோடுகளுடன் உருவம் மாறி காணப்படுகின்றன.

  • கேரளாவில் நேந்திரன் மற்றும் பூவன் வாழை இரகங்களிலும், தமிழ்நாட்டில் நேந்திரன், ரெதபஸ்டா, நெய்ப்பூவன், இரஸ்தாளி, கற்பூரவள்ளி, செவ்வாழை, பூவன் மற்றும் மொந்தன்  இரகங்களிலும் அதிகம் காணப்படும்.

நச்சுயிரியை இனம் காணுதல்
  • இந்நோய் போட்டி நச்சுயிரி (poty virus) வகையைச் சார்ந்த, வாழைப் பூமடல் தேமல் நச்சுயிரியினால் ஏற்படுகின்றது.  இதன் வைரான்கள் எளிதில் நகரக் கூடியதாகவும், அதிக முடிகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

  • ஏபிஸ் காஸிபி, பென்டலோனியா நைக்ரோநெர்வோஸி,  ரபோ லோசிபம் மெய்டிஸ்‌  போன்ற அசுவினிகள் மூலமாக இந்நோய் பரவுகின்றது. மேலும் நடவிற்குத் தேர்வு செய்யும் கிழங்கு மற்றும் கன்றுகள் மூலமும் பரவும்.

கட்டுப்பாடு
உழவியல் முறைகள்
  • நோய் தாக்கிய கன்றுகளை உடனே அகற்றவேண்டும்.

  • நோய் பாதிப்பற்ற, ஈட்டி இலைக் கண்றுகளை தேர்வு செய்து நடவேண்டும்.

  • களைகளை நீக்கி வயலைச் சுத்தமாக வைக்கவும்.

  • வயலில் எதுவும் பயிரிடப்படவில்லை எனினும் சுற்றியுள்ள களைகளில் நச்சுயிரிகள் தங்கியிருக்கும். ஆதலால் வயலைச் சுற்றிலும் எங்கும் களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

  • அடிக்கடி தோட்டத்திற்குச் சென்று இந்நோய் பாதிக்கப்பட்ட வாழைக் கன்றுகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து விடவேண்டும்.

இரசாயன முறைகள்
  • நோய் பரவுவதற்கு காரணமானஅசுவுணிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த  பாஸ்போமிடான் 1 மி.லி/லி அல்லது மெத்தில் டெமட்டான் 2 மி.லி/லி அல்லது மோனோகுராப்டோபாஸ் 1 மி.லி/லி போன்ற மருந்துகளை தண்ணீர் மற்றும் ஒட்டுந் திரவத்துடன் கலந்து மரத்தின் மீது விசைத் தெளிப்பான் மூலமாகத் தெளிக்கவும்.  

மேலே செல்க


முடிக்கொத்து ‌‌நோய்


தாக்குதலின் தன்மை
  • இந்நோய் பாதித்த மரத்தின் இலை நரம்புகள், நடுநரம்பு இலைக்காம்பு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியற்ற கரும்பச்சை நிறக்கோடுகள் காணப்படும்.

  • இலைகள் சிறியதாகவும், ஓரங்கள் வெளுத்தும், வளைந்தும் காணப்படு‌ம். இரண்டாம் நிலை நரம்புகளுக்கு இணையாக ‌வெளிறிய வெள்ளை நிறக் கோடுகள் தென்படும்.

  • நோய் தாக்கிய மரங்களின் இளம் இலைகள் விரியாமல், சற்று குறுகி, தட்டையாக இல்லாமல், மஞ்சள் நிற விளிம்புகள் வெளுத்தும் காணப்படும்.

  • இலைகள் சிறுத்து, விறைப்பாக, இலைக் காம்பு‌கள் நீண்டு மரத்தின் உச்சியில் கொத்தாகக் காணப்படுவதால் இந்நோய் முடிக்கொத்து நோய் என்றழைக்கப்படுகிறது.

  • நோய்த் தாக்கம் முற்றிய மரங்கள் பொதுவாகக் காய்ப்பதில்லை குலை தள்ளினாலும் குலைகள் சிறுத்தும், கோணலாகவும் காணப்படும். தாக்கப்பட்ட வாழையின் பழங்கள் உண்ணும் தரமற்றவையாக இருக்கும்.

  • இந்நோய் அனைத்து வாழை வகைகளையும் தாக்கும். எனினும் நேந்திரன், செவ்வாழை, மட்டி, பச்சை வாழை மற்றும் மலை வாழை வகைகள் அதிகத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
நச்சுயிரியை கண்டறிதல்
  • சுற்றளவில் 20 நானோ மீட்டர் மட்டுமே கொண்டது. ஒற்றை இழை டி.என்.ஏ-வினால் ஆனது.

  • இது நானோ விரிடே குடும்பத்தையும் வைரஸ் பேரினத்தையும் சார்ந்தது.

  • இது பல்தொகுப்பு‌ ‌‌‌‌ஜீனோமினைப் பெற்றுள்ளது.

  • 6 ஒற்றை இழை வட்ட வடிவ ஜீனோம் அறியப்பட்டுள்ளன.

  • இந்த வைரஸரனது புளோயம் குழாயில் அதிகளவில் காணப்படும்.

  • பாதிக்கப்பட்ட கன்றுகளை நடுதல் மற்றும் வாழை அசுவினிகளாலும் இந்நோய் பரவுகிறது.

கட்டுப்பாடு
உழவியல் முறைகள்
  • வைரஸ் தாக்கமற்ற, ஆரோக்கியமான கன்றுகளை நடவும்.

  • நோய் தாக்கிய மரங்களை வயலிலிருந்து உடன‌டியாக அகற்றவும்.

  • அகற்றிய மரத்தினை வெட்டி நன்கு உலர வைத்துப்பின் ‌புதைக்கவும்

  • வயலைக் களைகளின்றிச் சுத்தமாகப் பராம‌ரிக்கவும்

  • கரும்‌பு மற்றும் கொடி வகை குடும்பப் பயிர்கள் பயிரிடும் பகுதிகளில் அவற்றைத் தாக்கும் தேமல் நச்சுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளதால் வாழை பயிரிடுவதைத் தவிர்க்கவும்

இரசாயன முறைகள்
  • 4 மிலி பெர்னோக்யன் கரைசலை (50கி/400மி.லி நீர்) நோய் தாக்கிய மரங்களுக்கு ஊசி மூலம் செலுத்தவும்.

  • பெர்னோக்ஸன் மாத்திரைகளை (200-400மி-கி மருந்து மாத்திரை ஒன்றுக்கு) ஊசி அல்லது  மாத்திரை இடும் துளையிட்டு போடவும்.

  • நோயினால் தாக்கப்பட்ட மரத்திலும் அதனைச் சுற்றியுள்ள மரங்களிலும் டைமீத்தோயேட் 3 மி.லி. (அ) மீத்தைல் டெமட்டான் 3 மி.லி. (அ) மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி. ஒரு லிடடர் நீரில் கலந்து தெளித்து நோயினைப் பரப்பும் அசுவுணிகளை அழிக்கலாம்.

  • நடவு செய்யும் முன் கிழங்கினை சேற்றினில் மூழ்க வைத்து அதன் மீது கார்போபியூரான் குருணை மருந்தினை 40 கிராம் அளவில் தூவவேண்டும்.

மேலே செல்க


சிகார் நுனி அழுகல் நோய் – வெர்ட்டிசிலியம் தியோபுரோமே


தாக்குதலின் தன்மை
  • இளம் காய்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது.  பூங்கொத்துத் தண்டின் மேற்பகுதி சூரிய ஒளியினாலும், கோடை வெப்பத்தாலும் பாதிக்கப்படுகின்றது. இதனால் வளர்ச்சி குன்றிக் காணப்படும்‌.

  • இந்நோய் முதலில் பூவிதழ் வட்டத்தை தாக்கிப் பின் காய்களின் தோலை கருமை நிறமாக மாற்றி, திசுக்களை சுருங்கவும், மடங்கவும் செய்வதால் காய் சிறுத்து விடுகின்றது.

  • சில சமயங்களில் இந்த அழுகல் பகுதி, ஈரத்துடன் இல்லாமல் சதைப்பகுதி கடினமாகவும் காய்ந்தும், நார் நாராகவும் இருக்கும்.

  • பூஞ்சானங்க‌ளின் வித்துத் தாங்கி மற்றும் சாம்பல் நிறமுடைய வித்துகள் காய்களின் நுனியை மூடியிருப்பதாலும், இது சிகரெட்டின் நுனிப்பகுதியி‌‌லுள்ள சாம்பல் போன்று காட்சியளிக்கும்.

  • மிதமான வெப்பமும், காற்றின் ஈரப்பதம் அதிகமாகவும் உள்ள சூழ்நிலையில் இந்நோய் வர வாய்ப்புள்ளது. பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ள வாழைத் தோட்டங்களில் இந்நோய் வேகமாக பரவுகிறது. 

நச்சுயிரியை கண்டறிதல்
  • கொனிடியா தாங்கிகள் குழுக்களாகவோ, தனியாகவோ காணப்படும்.

  • கொனிடியாக்கள் நிறமற்றவை. உருளை வடிவமானவை. அவை பையலைட்ஸின் நுனியில் தோன்றும். வட்ட வடிவில் ஒருங்கிணைந்து, கண்ணாடி போன்ற தலையினைக் கொண்டது.

     

கட்டுப்பாடு
உழவியல் முறைகள்
  • பூ வெளிவந்து, காய்கள் உருவாகிய‌வுடன் அதற்கு சரியான ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கக் செய்ய,  காய்களின் நுனியில் ஒட்‌‌டியுள்ள பூக்களை அகற்ற வேண்டும்.

  • மரங்களுக்குள் போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.

  • சரியான வடிகால் வசதி நோய்த் தாக்கத்தைக் குறைக்கும்.

  • குலை தள்ளுவதற்கு முன்பே பாலித்தின் பைகளைக் கொண்டு நடுத்தண்டுக் கொண்ணையினை முடி வைக்கலாம்.

இரசாயன முறைகள்
  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 % சதத்துடன் ஒட்டுந்திரவம் 0.5-1.0 மிலி கலந்து குலைகளின் மிது தெளிக்கவும்.

  • பூவிதழ் மீது 0.1.சதம் கார்பன்டஸிம் அல்லது டயத்தேன் எம்-45 0.1 சதம், அது வெளிவந்த‌வுடன் தெளிக்கவும்.

இயந்திர முறைகள்
  • பூ ‌வெளிவந்து, காய்கள் உருவானவுடன், காய் நுனியில் ஒட்டியுள்ள பூக்களை அகற்ற வேண்டும்.

  • குலை தள்ளிய 8‌‌‌-11 நாட்கள் க‌ழித்து பூக்களை அகற்றவும்.

மேலே செல்க


எர்வினியா அழு கல் நோய்/ கிழுங்கு அழுகல் நோய் - எர்வீனியா கரட்டோவோரா


தாக்குதலின் தன்மை
  • இந்நோய் இளம் கன்றுகளை அழுகச் செய்துவிடும்.  அதிலிருந்து கெட்ட வாடை வீசும்.

  • கழுத்துப் பகுதி அழுகுவது இதன் ஆரம்ப அறிகுறி. தொடர்ந்து இலைகள் உலர்வதால் மரம் திடீரென காய்ந்து காட்சியளிக்கும்.

  • தண்டைப் பிரித்து இலேசாக இழுத்தால் தண்டு மட்டும் அழுகிய அடித்தண்டு பகுதியோடு, கையோடு வந்துவிடும். கிழுங்கு மட்டும் மண்ணில் இருக்கும்.

  • ரொபஸ்டா, கிரான்ட் நைன் மற்றும் தெல்ல சக்கராலி இரகங்கள் சாகுபடியில்,  இந்நோய்த் தாக்கம் அதிகரிக்கும் போது வெளித்தண்டு வெடித்துக் காணப்படும்.

  • தாக்கப்பட்ட பயிரை கழுத்துப் பகுதியில் வெட்டித் திறந்து பார்த்தால் மஞ்சள் முதல் செந்நிற அழுகல் காணப்படும்.

  • ஆரம்பத்தில் கார்டெக்ஸ் பகுதியில் அடர் பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீர் தோய்த்தது போன்று காணப்படும்

  • பின்பு அழுகல் கிழங்கின் நடுப்பகுதிக்குப் பரவி, தண்டின் குருத்துக்கும் பரவி அழுகிய பகுதிகள் அடர் நிற பஞ்சு போன்று உருவாகும்.

  • இந்த மென் அழுகல் விரல் வடிவில் முன்னும் பின்னும் நகர்ந்து திசுப் பகுதி வரை வளர்ந்து காணப்படும். அழுகிய பகுதியிலிருந்து‌‌ ‌துர்நாற்றம் வீசும்.

நோய்க் காரணியை கண்டறிதல்
  • இந்த நோயினை உண்டாக்கும் நச்சுயிரியானது கிராம் நெகட்டிவ் வகையைச் சார்ந்த, சுற்றிலும் இழைகள் கொண்ட கண்ணாடித் தண்டு வடிவ பாக்டிரியம் ஆகும். இது தனியாகவோ, இரட்டை அல்லது கோர்வை அமைப்பில்  குழுவாகவோ காணப்படும்.

  • மண்ணில் வாழும் பாக்டிரியா கிழங்கின் காய்கள், இலைப் பரப்பு மற்றும் கன்றுகளின் மூலமும் பரவுகின்றது.

  • பாதிக்கப்பட்ட மரத்தின் பகுதிகள்,காயங்கள் மூலம் மற்ற வாழைகளுக்குப் பர‌வுகின்றது. சற்று சூ‌டான தட்பவெப்ப நிலை மற்றும் அதிக மழைப்பொழிவும் இந்நோய்‌த் தாக்கத்திற்கு வழிவகுக்கும். மண்ணிலிருக்கும் பாக்டிரியா பயிரில் ஊடுருவ நீர் தேவைப்படுகின்றது.

கட்டுப்பாடு
உழவியல் முறைகள்
  • முறையான வடிகால் வசதி, மண்ணினைக் கிளறி காற்றோட்டத்துடன் இருக்குமாறு செய்தல் அவசியம்.

  • ஆ‌ரோக்கியமான கன்றுகளை, நோய்ப் பாதிப்பற்ற தோட்டத்திலிருந்து தேர்வு செய்து நடவேண்டும்.

  • நோய்த் தாக்கிய பயிர்களை உடனடியாக நீக்கிவிடவும்.

  • அறுவடை முடிந்த‌வுடன் பயிர் பாகங்களை அகற்றவும்.

  • சோயாபீன், தீவனப் பருப்பு வகைகள், சிறு தானியங்கள் போன்ற பாக்டிரிய அழுகல் நோயினால் பாதிக்கப்படாத பயிர்க‌ளுடன் பயிர் சுழற்சி செய்யலாம். வெங்காயம் மற்றும் காய்கறிப் பயிர்களுடன் வாழையைப் பயிரிடுதல் கூடாது.

  • நூற்புழுக்கள் மற்றும் பிற பாக்டீரியங்களைக் கடத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.

  • நடுக்கணுக்கள் இறந்த, பக்கக் கணுக்கள் நன்கு வளரும் நிலையில் உள்ள கிழங்குகளை நடுவதால் இந்நோயினைத் தடுக்கலாம்.

  • மழைக் காலங்களில் பெரும் கன்றுகளை (500 கிராமிற்கு அதிகமான எடையுள்ள) நடுவதைத் தவிர்க்கவும்.

இரசாயன முறைகள்
  • மீத்தாக்ஸி எத்தில் மெர்குரிக் குளோரைடு (எமிஸான்‌-6) 0.1 அல்லது சோடியம் ஹைப்போ குளோரைட் 10 சதம் அல்லது பிளீச்சிங் பவுடர் 20கி/லி/மரம் என்ற அளவில் மருந்து கொண்டு நனைக்க‌வும்.

  • 2 % பீளிச்சிங் பவுடர் கரைசலை கன்றின் மிது நடும் போதும் மீண்டும் 3 மாதங்கள் கழித்து ஒரு முறையும் மண்ணிலும் ஊற்றுவதால் இப்பாக்டீரியாவினைக் கட்டுப்படுத்தலாம்.

மேலே செல்க


வெள்ளரி தேமல்


தாக்குதலின் தன்மை
  • தொடர்ச்சியான அல்லது தொடர்ச்சியற்ற வெளிறிய மஞ்சள் நிறக் கோடுகள், இலை நரம்புகளுக்கு இடையில் இலை விளிம்பிலிருந்து பரவிக் காணப்படும்.

  • இலைகள் கறுத்து, சுருண்டு, இலை விளிம்புகள் மடிந்து இலைகள் கொத்தாக உச்சிப்பகுதியில் நிமிர்ந்து காட்சியளிக்கும்.

  • கன்றுகள் காய்தல் அல்லது செத்து போவது நோய்த் தாக்குதல் முற்றி நடுத்தண்டு மற்றும் குறுத்து இலைகள் அழுகுவதைக் குறிக்கும்.

  • இந்நோயின் ஆரம்பத்தில் இலைப் பரப்புகள், இளம் கன்றுகளின் இலைகளிலும் மஞ்சள் நிற, வெளிறிய தேமல் போன்ற கோடுகள் ஆங்காங்கு தென்படும்.

  • இலைகள் வழக்கத்திற்கு மாறாக குறுகி, சிறியதாகவும் மரங்கள் வளர்ச்சியின்றி குட்டையாகவும்  இருக்கும். அதிகம் பாதிக்கப்பட்ட மரங்கள் குலை தள்ளாது. இவற்றில் நச்சுயிரிகள் அதிக எண்ணிக்கையில் வாழும்.

நச்சுயிரியை இனம்காணுதல்
  • இந்நோய் வெள்ளரி தேமல் நச்சுயிரியால் (CMV) பரவுகின்றது.  இந்நச்சுயிரியானது தனித்தது, ஒற்றை இழை ஆர் என். ஏ- வால் ஆனது தனித்த பகுதி அமைப்புக் கொண்ட 32 புரதக் கட்டமைப்பால் இதன் ஆர்.என்.ஏ சூழப்பட்டுள்ளது.

  • நோய் பாதித்த மரத்தின் கன்றுகளை நடுவதாலும், பூசணி வகைகளில் வாழும் அசுவினிகளான  ஏபிஸ் காஸிபி மற்றும் ஏபிஸ்‌  மெய்டிஸ் போன்றவற்றாலும் இந்நோய் பரவுகின்றது.

கட்டுப்பாடு  
உழவியல் முறைகள்
  • தோட்டத்தில் களைகளின்றி சுத்தமாகப் பராம‌ரிக்கவும்.

  • பாதிக்கப்பட்ட கன்றுகளை நடுதல் கூடாது.

  • வயல் அருகில் களைகள் இருந்தாலும் நச்சுயிரி அதில் தங்கி இருக்கும் ஆதலால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

  • பூசணி, வெள்ளரி மற்றும் பிற பூசணி வகைப் பயிர்களையும் வாழைத் தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடக் கூடாது.

  • வாழைக் கன்றுகளை 40° செ வெப்ப நிலையில் நாள் முழுவதும் வைத்திருப்பதால் இந்நச்சுயிரி கொல்லப்படும்.

  • தோட்டத்தை தினசரி கவனித்து நோய்த் தொற்றுள்ள வாழையினை உடனே அகற்றி, உரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.

  • 10 கி.கி தொழுஉரம் கன்று நடும்போதும், பின்பு 3 மாதங்களுக்கு ஒரு முறையும் இடுதல் 1 கி.கி வேப்பம் புண்ணாக்கு, சாம்பல்சத்து 200 கி தழைச்சத்து (நைட்ரஐன்), 40 கி மணிச்சத்து (பாஸ்பரஸ்), 200 கி பொட்டாசியம்/ வாழை என்ற அளவில் இடுதல் வேண்டும். இரண்டு மாத இடைவெளியில்  8 வது மாதம் வரை 4 முறை களை எடுத்தல் போன்ற ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து முறைப் பயிர் பாதுகாப்புக்கு சிறந்த பலனைத் தரும்.

இரசாயன முறை
  • டெமட்டான் 0.3மி.லி/லி, 3 அல்லது 4 வார இடைவெளியில் தெளிப்பதன் மூலம் நோய் பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

  • நுண்ணூட்டச் சத்துக்களான காப்பர் சல்பேட் 2 மி.லி/லி, பெர்ரஸ் சல்பேட் 2 மிலி/லி மற்றும் போரிக் அமிலம் 1மி.லி/லி.‌ ஜிங்க் சல்பேட் 5மி.லி./லி என்ற அளவில், கன்று நட்ட 3, 5 மற்றும் ஏழாம் மாதத்தில் காற்றுத்தெளிப்பான் கொண்டு  தெளிக்கவும். கிளைப்போஸேட் 2மிகி.கி/எக்டர் என்ற அளவில் தெளிப்பதால் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

  • அசுவினி பேன்ற ‌நோய்க் கடத்திக் காரணிகளை கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 1 மி.லி/லி அல்லது டெமட்டான் 2 மி.லி/லி அல்லது மோனோகுரோட்டோஃபாஸ் 1 மி.லி/லி, ஏதேனும் ஒரு மருந்தைத் தெளிக்கவும்.

மேலே செல்க


பனாமா வாடல் (ஃபுஸேரியம் வாடல்) நோய்


தாக்குதலின் தன்மை
  • முதலில், அடிப்புற இலைகளில் குறிப்பாக இலை ஓரங்களில், மஞ்சள் நிற மாற்றம் மற்றும் வாடிக் காணப்படும். பின்பு இந்த ம‌ஞ்சள் நிறம், இலையின் மையப்பகுதி வரை பரவி, ஓரங்கள் கா‌ய்ந்து போகும்.

  • தாக்குதல் அதிகரிக்கும் போது, மரத்தின் உச்சி இலைகள் விறைப்பாக மாறும். இது ஈட்டி போன்‌ற வடிவில் காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்புடன் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும். இது மரத்திற்கு பாவாடை கட்டியது போல் தோற்றமளிக்கும்.

  • உட்புற அறிகுறிகளில், அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால், நீர் மற்றும் சத்துக்களைக் கடத்தும் ஸைலம் குழாய்த் தொகுப்பு மஞ்சள் அல்லது செம்பழுப்பு நிறத்தில் மாறி இருக்கும். இத்திசுக்களில் பூஞ்சாணங்கள் வளர்ந்திருக்கும்.

  • குறுக்காக வெட்டிப் பார்க்கும் போது நிற மாற்றம் வட்டவடிவில் கிழங்கின் நடுப்பகுதியில் அதாவது சாற்றுக்குழாய் தொகுப்பில் தாக்கம் அதிகளவில் இருக்கும். தண்டினை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் இந்நிற மாற்றம் தெரி‌‌யும்.

  • செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் இரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. வாடல் நோயின் வித்துக்கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது.
  • பூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத. தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசனநீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்துப் பரவுகிறது. நூற்புழு இருக்கும் தோட்டத்தில் நோயின் அறிகுறிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
பூஞ்சையை கண்டறிதல்
  • இந்நோயை உண்டாக்கும் முக்கிய பூஞ்சை ஃபுஸேரியம் ஆக்ஸிஸ்போரம், ஃபுஸேரியம் பீசிஸ் கியூபென்ஸ்.

  • இப்பூஞ்சைகள் வெள்ளை முதல் இளஞ் சிவப்பு நிற மைசீலியத் தொகுப்புகளைக் கொண்டுள்ளன. தடுப்புப் பூச‌ண இழைகள் நிறமற்றவை. கொனிடாக்கள் சற்று சிறியவை. பெரு வித்துக்கள், நுண்வித்துக்கள் என இருவகை உண்டு.

  • பெருவித்துக்கள், அரிவாள் வடிவில், மெல்லிய சுவர்களைப் பெற்றிருப்பதோடு அதிகளவில் உற்பத்தி செய்யப்படும். மேலும் இவை பாத வடிவ அடிச் செல்களைக் கொண்டுள்ளன. 3 முதல் 5 தடுப்பு பூசண இழைகள் 23-54 * 3-4.5 மைக்ரோ மீட்டர் அளவில் இருக்கும்.

  • நுண் வித்துக்கள் நிறமுடையவை. உருளை முதல் வட்டவடிவம் வரை அதிக எண்ணிக்கையில் காணப்படும்‌. சிறிது வளைந்து 5-12 * 2.3- 3 5 மைக்ரோ மீட்டர் அளவில் சிறிய பொய்த் தலையைப்‌ பெற்றிருக்கும்‌.

  • இந்நோய் மண்ணின் மு‌‌‌லம் பரவுகின்றது. பூஞ்சையானது மெல்லிய சல்லி வேர்களின் வழியே உட் புகுகிறது. அமில மற்றும் வண்டல் மண் வகைகளில் நோய்த் தாக்கம் அதிகம்.

  • இப்பூஞ்சைகள், கன்றுகள், கிழுங்கு, வயலில் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள், பாசன நீர் போற்வற்றின் வழியே பரவுகின்றது.

கட்டுப்பாடு முறைகள்
உழவியல் முறைகள்
  • வயலில் க‌ளைகளின்றிச் சுத்தமாக வைக்க‌வும்.

  • நோய் தாக்கிய கன்றுகளை நடுவதற்குப் பயன்படுத்தக் கூடாது.

  • வயலில் பயிர் இல்லாத போதும், களைகளில், இப்பூஞ்சைகள் வளரும் என்பதால் அருகில் எந்த களை‌யும் வளரா வண்ணம் பார்த்துக் கொள்ளவும்.

  • பூசணி ,வெள்ளரி போன்ற பயிர்களை ஊடுப்பயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்க‌வும்.

  • 40 செ உள்ள வெந்‌நீரில் கன்றினை ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால் இப்பயிர்கள் அ‌‌‌ழிந்து விடும்.

  • தினசரி கவனித்து, நோய்த் தாக்கம் இருப்பின், அவ்வாழையினை உடனடியாக அகற்றுதல் அவசியம்.

  • 10 கி.கி தொழு உரம், நடும்போதும், பின்பு 3 மாத இடை வெளிகளிலும் அளிக்க வேண்டும். 1 கி.கி வேப்பம்‌ புண்ணாக்கு, 200 கி தழைச்சத்து, 40 கி மணிச்சத்து, 200 கி சாம்பல் சத்து என்ற அளவில் மரமொன்றுக்கு அளித்தல், 2 மாத இடைவெளிகளில் 4 முறை களையெடுத்தல் (8வது மாதம்வரை) போன்றவை பின்பற்றப் படவேண்டும்.

  • நோய் தாக்கிய மரங்களை பிடுங்கி அழித்துவிடவேண்டும். அம்முழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.

இரசாயன முறை
  • மீத்தைல் டெமட்டான் 0‌.03 சதம் (0.03 மி‌.லி/1லி நீரில்) 3-4 வார இடைவெளியில் தெளிப்பது, நோய் பரப்பவும் கிருமிகளைக் கட்டுப் படுத்த உதவும்.

  • காப்பர் சல்பேட் (2மி.லி.), பெர்ரஸ் சல்பேட் (2மி‌.லி/லி), ஜிங்க் சல்பேட் (5மி.லி/லி) மற்றும் 0.1 % போரிக் அசிட் ‌போன்ற நுண்ணூட்டச் சத்துக் கலவையை 3, 5, 7 வது மாதங்களில் காற்றுத் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். மேலும் 2 கி.கி. கிளைப்பபோசட் எக்டருக்கு தெளிக்கலாம்.

  • பாஸ்போமிடான் 1 மி.லி./லி அல்லது மீத்தைல் டெமட்டான் 2 மி.லி./‌லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் (1மி‌.லி./லி) தெளிப்பதன் மூலம் இந்நோய்க் கிருமிகளைக் கடத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நோய் வருமுன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்
  • வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன், ரொபஸ்டா வாழைகளைப் பயிரிடலாம்

  • நோய் கண்ட நிலங்களில் பாற்றுப் பயிராக நெற்பயிரைப் பயிர் செய்த பின் வாழை பயிரிடலாம்.

  • வாழைக்கன்றுகளை நோய் மாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.

  • விதைக் கிழங்குகளை செந்நிறக் குழிகள் நீங்கும் வரை சீவவேண்டும். கிழங்குகளை நடுவதற்கு முன் காரபோபியூரான் குருணை மருந்தினை, தண் கரைசலில் நனைத்த கிழங்கின் மீது சீராகத் தூவவேண்டும்.

  • கார்பெண்டசிம் 2 சதக் கரைசலைக் கிழங்கில் செலுத்தவேண்டும்.

மேலே செல்க


மஞ்சள் இலைப்புள்ளி நோய் - மைக்கோஸ்போரெல்லா மியூசிகோலா


தாக்குதலின் தன்மை
  • ஆரம்பத்தில் இலையின் மேற்புறத்தில் சிறு சிறு வெளிர் மஞ்சள் நிற அல்லது பச்சை நிற புள்ளிகள் தோன்றும்.

  • இப்புள்ளிகள் பின்‌‌‌‌‌பு விரைந்து நீள் வடிவத்தில் பழுப்‌‌பு நிறப் பெரும் புள்ளிகளாக மாறுகின்றன.

  • பின்பு இப்புள்ளிகளின் மையப்பகுதி வெளிர் சாம்பல் நிறமும் அதைச் சுற்றிலும் மஞ்சள் நிற குழி‌ப்பகுதி‌யும் தோன்றும்.

  • இச்‌ சிறு சிறு புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின் இவை காய்ந்து இலை முழுவதும் வாடிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி பெரிதும் தடைபடுகிறது.

  • விரைவில் இலைகள் காய்தல் மற்றும் இலை உதிர்தல் இந்நோயின் முக்கிய அறிகுறி.

  • பொதுவாக குலை தள்ளும் சமயத்தில் 15-18 இலைகள் மரத்தில் இருப்பது அவசியம். ஆனால் இச்சிகாடகா இலைப்புள்ளி நோயின் விளைவாக வெறும் 15 இலைகள் இருப்பதே அரிதாகிவிடும்.

  • நோய்த்தாக்கம் அதிகம் இருப்‌பின் குலைகள் சிறுத்தும், கோணலாகவும் தென்படும்.இதனால் மரத்தில் காய் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது.

நச்சுயிரியை கண்டறிதல்
  • இந்நோய் மைக்கோஸ்போரைல்லா மியூசிக்கோலா எனும் பூஞ்சையின் கொனிடியா மற்றும் கொனிடய தாங்கிகளால் பரவுகிறது.

  • கொனிடய தாங்கிகள் பாட்டில் வடிவத்தில்‌ கொனிடியாக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும். கொனிடியாக்கள் பல தடுப்பு இழைகளைக் கொண்டதாக, குறுகியவையாக இருக்கும்.

  • வித்துக் க‌லவைகள் அடர்‌‌ ‌பழுப்பு நிறத்தில், கருமை நிறத்தில், துளைகளுடன் காணப்படும்.

  • அஸ்கோஸ்போர்கள் ஒற்றை இழைகளைக் கொண்டவை. நிறமற்றவை மேற்புற செல்கள் ‌சற்று அகலமாக, எலிப்சாய்டுடன் காணப்படும்.

  • இந்நோய் பரப்பும் கிருமியின் ‌கொனிடியாக்கள் காற்று நீர் மற்றும் உலர்ந்த நோய்த் தாக்கப்பட்ட இலைகளினால் பரவுகின்றது. 

  • இந்நோய் நிழற்பாங்கான பகுதிகளிலும், வளம் குன்றிய மண் வகைகளிலும் அதிகம் பரவுகின்றது.

  • நெருக்கமான நடவு, மண்ணில் அதிகக் களைகள் மற்றும் வடிகால் வசதியில்லாத மண் ஆகியவை இந்நோய்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தும். நோய்க்காரணிப் பூஞ்சாணம் இலையின் அடிப்பாகத்திலுள்ள நுண்ணிய துளைகளின் மூலம் பரவுகிறது.

கட்டுப்பாடு 
உழவியல் முறைகள்
  • நோய்த் தாக்கப்பட்ட இலைக‌ளை அகற்றி அழிக்கவும்.

  • இடைக்கன்றுகள், களைகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்கவும்.

  • நெருங்கிய இடைவெளி, குறைந்த நடவு முறையைத் தவிர்க்கவும்.

  • சரியான வடிகால் வசதி அமைப்பதால் வயலில் நீர்தேங்காமல் தடுக்கலாம்.

இரசாயன முறைகள்
  • போர்டக்ஸ் கலவை 1% + ஆலிவித்து எண்ணெய் 2 % சேர்த்துத் தெளிக்கவும்.

  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது ஜினப் மருந்தினை எரிபொருள் எண்ணெய் அல்லது வெள்ளை எண்ணெயுடன் சேர்த்து தெளிக்கவும்.

  • கார்பென்டஸிம் 0.1% அல்லது புரப்பிகோனஸோல் 0.1% அல்லது மேன்கோ‌‌‌‌ஷெப் 0.25% அல்லது காலிக்ஸின் 0.1% ஏதேனும் ஒரு மருந்துடன் ஒட்டுந் திரவமான டிப்பால் சேர்த்து 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து இலையின் அடிப்பகுதி‌யில் கரும்புள்ளிகள் தெரிந்த நாளிலிருந்து 3 முறை தெளித்து வரவேண்டும்.

மேலே செல்க


மோக்கோ அல்லது பாக்டீரியா வாடல் நோய், சூடோமோனஸ் சொலனேசியெரம்


தாக்குதலின் தன்மை
  • பெரும்பாலும் பூச்சிகள் அல்லது வேர்களில் ஏற்படும் காயங்கள் மூலமாக நோய் பரவுகிறது.

  • நோய் தாக்கிய வாழையில் இலைகள் உள் வட்டத்திலிருந்து வெளிவட்டம் நோக்கிக் காய்ந்துவிடும்.

  • கிழங்குப் பகுதி வெண்மை கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படுவதுடன் அழுக்கான பிசின் வடிந்து வரும். தாக்கப்பட்ட வாழையின் காய்களின் உட்புறம் கருத்துக் காணப்படும்.

மேலாண்மை முறைகள்
  • நோய் தாக்கிய இடங்களிலிருந்து கன்றுகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

  • பூச்சிகளை நாடும் வண்டுகளின் மூலம் பெரும்பாலும் இது பரவுகிறது. எனவே குலையில் கடைசி சீப்பு விலிந்து சுமார் ஒரு வார காலத்திற்குள் ஆண் பூவை அகற்றி விடுவது நல்லது.

  • கருவிகள் மூலம் காயங்கள் உண்டாவதைத் தவிர்க்கவும்.

  • வேர்களைச் சுற்றி 0.2 சத ஃபார்மால்திஹைடு கரைசலை மண்ணில் ஊற்றி நனைக்கவும்.


வாழை கருப்பு தீற்றல், பில்லோஸ்டிக்கடினா முசேரேம்


தாக்குதலின் தன்மை
  • இந்நோய்க்கும் ‘சிகட்டோகா’ இலைப்புள்ளி நோய்க்கும் தோற்றத்தில் ஒற்றுமை இருப்பதினால் வேறுபடுத்துவது சிறிது சிரமமாக இருக்கும்.

  • இருப்பினும் இந்நோயை இலைப்புள்ளி நோயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தன்மையில் வேறுபடுவதால் இதனைக் கண்டுபிடிக்கலாம்.

  • இந்நோய் ஆரம்ப நிலையில் இலையின் அடிப்பாகத்தில் தான் தென்படும். மேல் பகுதியில் பார்க்க முடியாது.

  • நோய் தாக்கியதிலிருந்து  மூன்றே வாரங்களில் இலை முழுவதும் கருகிவிடும். இலை முழுவதும் கருகிய நிலையில் ஊறினால் இலைகள் அழகின்றி கருமை நிறம் அடையும்.

கட்டுப்பாடு
  • பாதிக்கப்பட்ட இலைகளை முதலில் அழிக்கவேண்டும்.
  • எக்டருக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 2 கிலோ அல்லது கார்பெண்டசிம் 500 கிராம் அல்லது மேன்கோசெப் 1.25 கிலோ மருந்தினை ஒட்டும் திரவம் (10 லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி. என்ற அளவில்) சேர்த்துத் தெளித்துக் கட்டுபடுத்தலாம்.


வாழைக்காய் நுனிக் கருகல், ஹெல்மின்தோஸ்போரியம் டாருலோசம்


தாக்குதலின் தன்மை
  • இந்நோய் ‘சுருட்டு முனை நோய்’ என அழைக்கப்படுகியது. வாழைக்காய்களின் நுகிப் பாகத்திலிருந்து கீழ் நோக்கி சுருட்டு புகைந்து எரிந்தது போல் இந்நோய் தாக்கிய அறிகுறிகள் தெரியும்.

  • பச்சை வாழை வகைகளை இந்நோய் அதிகம் தாக்குகிறது. வாழைக்காயின் நுனியில் உள்ள காய்ந்த பூவிதழ் பகுதிகளை முதலில் இந்நோய் தாக்கி பின்னர் சிறிது சிறிதாகக் காயும் பாதிக்கப்படுகிறது.

  • பாதிக்கப்பட்ட காயின் நுனிப்பகுதி காய்ந்து எரிந்து சுருட்டு முனை போன்ற தோற்றம் பெறுகிறது. காயின் சதைப்பகுதி சாற்றையிழந்து ‘தக்கை’ போன்று ஆகிவிடும்

கட்டுப்பாடு
  • வாழைக்குலையில் கடைசி சீப்பு விரிந்த ஒரு வாரத்திற்குள் காயின் நுனியிலுள்ள பூவிதழ் பகுதிகளை அகற்றிவிடவேண்டும்
  • எக்டருக்குக் காப்பர் ஆக்சி குளோரைடு 2 கிலோ அல்லது கார்பெண்டசிம் 500 கிராம் அல்லது மேன்கோசெப் 1.25 கிலோ மருந்தினை ஒட்டும் திரவம் (10 லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி. என்ற அளவில்) சேர்த்து வாழை குலை தள்ளிய உடனேயே தெளிக்கவேண்டும்.

மேலே செல்க


துரு நோய்


தாக்குதலின் தன்மை
  • செம்பழுப்பு நிறத்தில் கொப்புளங்களாக இலைகளின் பரப்பில் முக்கியமாக மொந்தன் மற்றும் மலை வாழைகளில் இத்துரு நோய் ஏற்படுகிறது.

  • நாளடைவில் இந்நோய் பாதிக்கப்பட்ட இலைகள் கருகி காய்ந்துவிடுகின்றன.

  • இதனால் காய்கள் வளர்ச்சியடையாமல் மிகச் சிறியதாக காணப்பட்டு, மகசூல் இழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. 

கட்டுப்பாடு
  • இந்நோயை கட்டுப்டுத்த பாதிக்கப்பட்ட இலைகளை உடனுக்குடன் நீக்கி அழித்துவிட வேண்டும்.

  • பின் பிளாண்ட்வாக்ஸ் 0.2 % ஒட்டுந்திரவத்துடன் கலந்து இலைகளின் மேல் தெளிக்கவும்

மேலே செல்க


கொண்ணை அழுகல் நோய்


தாக்குதலின் தன்மை
  • இந் நோய் சூரிய வெப்பம் அதிகமாக உள்ள இடங்களிலும், இலைப் புள்ளி நோய் மிகத் தீவிரமாக பாதித்த இரகங்களிலும் அதிகமாக காணப்படும்.

  • சூரிய வெப்பம் நேரடியாக கொண்ணையின் மேற்பகுதியில் விழும் போது, அந்த இடம் வெம்பி, பின்பு பூஞ்சாணங்களால் தாக்கப்பட்டு, அழுகல் ஏற்படுகிறது.

  • இதனால் தார் வளர்ச்சியடையாமல், எடை குறைந்து, சிறிய காய்களாக இருப்பதால், இத்தாரை சந்தையில் விற்பது மிகவும் கடினமாகும்.

நோயிற்கான காரணங்கள்
  • முதல் காரணம்: சூரிய வெப்பம் நேரடியாக கொண்ணையில் விழுவது.

  • இரண்டாவது காரணம்: கொலிட்டோட்ரைக்கம் கிளியோஸ்போரியாய்டஸ், போட்டிரியோடிப்ளோடியா தியோபுரோமே போன்ற பூஞ்சாணங்களின் தாக்குதலினால் பாதிப்பிற்குள்ளாகும் இரகங்கள்- கற்பூரவள்ளி, ரஸ்தாளி, பச்சநாடன், ரொபி்டா, குட்டை கேவண்டிஸ்.

கட்டுப்பாடு
  • இலைப்புள்ளி நோயினை கட்டுப்படுத்தி, வாழை மரத்தில் அதழகமான பச்சை இலைகள் (குறைந்தது 10 இலைகள் ) இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • தார் வெளி வந்த பின்பு, தாரின் கொண்ணை பகுதியில் கார்பென்டாசிம் 0.1% (ஒரு லிட்டர் நீரில் 1 கிராம்) மருந்தை, ஒட்டுந்திரவத்துடன் கலந்து தெளித்து, பின்பு கொண்ணையில் வெய்யில் படாதவாறு, காற்ந்த இலைகளைக் கொண்டு கொண்ணைப்பகுதியை மூடவேண்டும். இதனால் இந்நோயின் தாக்கம்  முற்றிலுமாகத் தடுக்கப்படுகிறது.

மேலே செல்க


  சீப் அழுகல் நோய்


  • பல பூஞ்சாணங்களின் தாக்குதலினால் ஏற்படக்கூடிய சீப் அழுகல் நோயானது, மிகத் தீவிரமாக, உலகில் உள்ள இனைத்து வாழை சாகுபடி செய்யும் இடங்களில் நோயை உண்டு பண்ணி, பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது.
  • எப்பொழுதெல்லாம் தாரிலிருந்து சீப் வெட்டுவதை சரியாக நாம் செய்யவில்லையோ, அப்பொழுதெல்லாம் இந்நோய் அதிகமாக காணப்படும்.
  • இந்நோய் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள பூஞ்சாணங்களால் உண்டாகின்றது.
  1. போடரியோடிப்ளோடியா தியோபுரோமே

  2. செராட்டோசிஸ்டிஸ் பேரடாக்ஸா

  3. வெர்டிசிலியம் தியோபுரோமே

  4. கொலிட்டோட்ரைக்கம் மியூஸே

  5. பியுசேரியம் வகைகளான மொனிலிபார்மே, பேஸிடோரோஸியம்

  6. நைக்ரோஸ்போரா ஸ்பீரியா

அறிகுறிகள்
  • தாரிலிருந்து சீப்புகளை வெட்டி பிரித்தெடுக்கப்படும் பொழுது, தார், சீப், காய்கள மற்றும் காய்களின் காம்பு பகுதியில் இருக்கும்.

  • மேற்குறிப்பிட்ட பூஞ்சாணங்களின் வித்துக்கள், சீப்புகளை வெட்டி பிரித்தெடுக்கும் பொழுது ஏற்படும் காயங்களின் மூலமாக உட்சென்று, சீப்புகளின் மேற்புறத்தை கருப்பு நிறமாக்கி, பின்பு அழுகச்செய்கின்றன.

  • இந்த அழுகல், கருப்பு நிறத்தில் காய்களின் காம்பு வழியாக காயை அடைந்து, பின்பு சதைப்பகுதிகளுக்கு செல்வதால், இந்நோய் பாதிக்கப்பட்ட காய்கள், எளிதில் சீப்புகளிலிருந்து பிரிந்து கீழே விழுந்து விடுவது மட்டுமல்லாமல், முழுக்காயும் அழுகிவிடுகின்றன.

  • இந்நோய், காய்கள் பழுக்கும் முன்போ அல்லது பழுத்த பின்போ ஏற்படலாம்.

  • இந்நோயினால், தொலைத்தூர சந்தைக்கு கொண்டு சென்று வாழைக்காய்களை விற்பனை செய்வது மிகப் பெரிய சவாலாகவே இருந்துவருகிறது.

  • மேற்குறிப்பிட்ட பூஞ்சாண வித்துக்கள், காற்று மற்றும் மழை ஆகியவற்றினால் பரவுகிறது.

  • அதே சமயத்தில் காற்றின ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சமயத்தில் இது மிக வேகமாக பரவி, அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.

கட்டுப்பாடு
  • சீப்புகளை பிரித்தெடுத்த பின்பு, சூடோமோனஸ் அல்லது ட்ரைகோடெர்மா கரைசலில் சிறிது நெரம் மூழ்க வைத்து, பின்பு உலர்த்தி, குளிர்சாதன பெட்டிகளில் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து பாதுகாத்தால் நீண்ட நாட்களுக்கு இந்நோய் வராமல் காய்களை பாதுகாக்கலாம்.

  • இதற்கு மாற்றாக, தயோபென்டசோல் 200 முதல் 400 பிபிஎம் என்ற அளவில் கரைசல் தயாரித்து, காய்களை இந்த மருந்துக்கலவையில் நனைத்து எடுத்து, பின்பு உலரவைத்து, குளிர்சாதன பெட்டிகளில் மேற்கூற்யது போன்று வைத்தும் இந்நோய் வருவதை தடுக்கலாம் .

மேலே செல்க

இயற்கை பயிர் எதிரிகள்


பெரிய ஆப்ரிக்கன் நத்தை (அகேன்டினா பலிகா பெளவிச்)

அறிகுறிகள்

ஆப்ரிக்கன் நத்தைகள் – வாழை இலைகளில் ஓட்டைகள் காணப்படும்.

இலைகளை உண்டு, ஓட்டைகளை ஏற்படுத்தும்.

நத்தைகள் வாழைத் தண்டு மற்றும் இலைக்காம்பை உண்ணும்.

  •  இலை தழைகள், பழங்களை வெளிப்புறத்திலிருந்து உண்ணுதல்.
  • தாக்கப்படும் நிலைகள்: நாற்று பருவம், வளர்ச்சி பருவம், குலை பருவம்.
  • தாக்கப்படும் பகுதிகள் இலைகள் மற்றும் பழங்கள்.
  • கேரளா மாநிலத்தில் 4 மாவட்டங்களில் 41 இடங்களில் இதனுடைய தாக்குதல் இருக்கிறது.
  • பாலக்காடு மாவட்டத்தில் 22 இடங்களில் இதனுடைய தாக்கம் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புதுநகரம், கொழும்பு, பெருவேம்பு, முண்டூர், புதுப்பாரியாரம், மருதா சாலை, கண்ணடி, கொடூவாயூர், சித்தூர் – தத்த மங்கலம், மாததூர், பிராயிரி, வடவன்னூர், தென்குரிசி போன்ற இடங்களில் இதனுடைய தாக்குதல் அதிகமாக உள்ளது.

பூச்சியின் விவரம்

நத்தை முட்டைகள்

வாழை ஆப்ரிக்கன் நத்தைகள்

வாழை ஆப்ரிக்கன் நத்தைகள்

 

  • இது குறுகலாக, கூம்பு போன்ற ஓட்டுடன், அகலத்தை விட நீளம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் வெளிரிய மஞ்சள் நிற நேரான குறிகளுடன் காணப்படும்.
  • வாழ்வுக் காலம் 5 (அ) 6 வருடங்கள். சில சமயங்களில் 10 வருடங்கள் வரை உயிர் வாழும். இரவில் நடமாட்டம் அதிகமாகவும், பகலில் நிலத்தில் புதைந்திருக்கும்.
  • இது இரு பாலினத்தைக் கொண்டது. வெளிப்புறத்தில் கருவுற்று முட்டை இட்டு தன் இனத்தைப் பெருக்குகின்றன.
  • முட்டைகள் 4.5-5.5 மி.மீ விட்டத்துடன், வெப்பநிலை 15 செ.க்கு மேல் இருந்தால் மட்டும் முட்டை இடும். நத்தைகள் ஆறு மாதத்திலிருந்து முட்டையிட ஆரம்பிக்கும். சுமாராக 400 நாட்கள் முட்டையிடும் தகுதி கொண்டது.
  • 100-400 முட்டைகளை தொகுதியாக இடும். முட்டைகள் நீள்வட்ட வடிவில், 5 மி.மீ விட்டத்துடன் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  • வெப்பநிலையைப் பொறுத்து, குஞ்சுகள் 5-21 நாட்களில் வெளி வரும். நத்தைகள் 5-15 மாதங்களில், வெப்பநிலையைப் பொறுத்து முதிர்ச்சியடையும்.
  • 6 வருடங்கள் வரை சாதகமாக நிலைகளில் உயிர் வாழும்.
  • அதிக எண்ணிக்கையில் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் அதிகமாக இருக்கும். குப்பைகள், நீர்த்தேங்கும் இடங்களில் உயிர் வாழும்.

மேலாண்மை

  • பயிர் சுழற்சி, மண் தரத்தை உயர்த்ததல், எதிர்ப்பு ரகங்களை தேர்வு செய்தல், நீர் மேலாண்மை, இயந்திர தடைகளை ஏற்படுத்துதல், அறுவடை பின் சார் நேர்த்தி செய்வதன் மூலம் கட்டுபடுத்தலாம்.
  • வயலை நல்ல சுகாதாரத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  • கால்சியம் அர்சினேட், மெட்டால்டிஸைடு போன்றவற்றை அதிக தாக்குதல் உள்ள பகுதிகளில் பயன்படுத்தவும்.
  • உப்பை பயன்படுத்துவதால் இந்த நத்தையை அழிக்கலாம்.
  • ஏனென்றால் உப்பு மண்ணின் கார அமிலத் தன்மையை மாற்றும். மழைக் காலங்களில் உப்பைப் பயன்படுத்தக் கூடாது.
  • நத்தைகளின் இறந்த உடலிலிருந்து கெட்ட துர்நாற்றம் வீசும்.
  • இரை விழுங்கி நத்தைகளான யூக்ளின்டினா ரோசேயோ, தட்டைப் புழுக்கள் (ப்ளேட்டிடிமஸ் மனோக்வாரி மற்றும் நோய் காரணிகளை வயலில் விடவும்.
  • உலோகம், உப்பு சேர்நத நத்தைக் கொல்லிகளை நத்தை இரைப்பொறியாக நத்தையை அழிக்க பயன்படுத்தலாம். இவை இரும்பு பாஸ்பேட், தாமிர சல்பேட், அலுமினியம் சல்பேட்டிலிருந்து பெறப்பட்டவை. இவை மனிதன் மற்றும் விலங்குகளுக்கு எந்த ஊறும் விளைவிக்காது.

மேலே செல்க

எலிகள் (ரோட்டஸ் எக்ஸ்யூலேன்ஸ்)

அறிகுறிகள்

எலி உண்டாக்கும் சேதம்

பழங்களின் மீது எலிகளால் உண்ட அறிகுறிகள் காணப்படும்.

வாழைக்குலைகளின் மீது எலி வலை காணப்படும்.

  • இளம் வாழைக் குலைகள் மற்றும் காய்களை கடித்து உண்ணும்.
  • பழங்கள் கீறியது போல் இருக்கும்.
  • பழக்குலைகளில் வலை ஏற்படுத்தியிருக்கும்.

பூச்சியல்லாத எதிரியின் விவரம்

பசிபிக் எலி டி வீய்டிச்

  • சிறிய அளவில் 4-5" நீளத்துடன் இருக்கும். வால் நீளமாக இருக்கும்.
  • உடல் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் உடலின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் முடிகள் சூழ்ந்திருக்கும். அடிப்பகுதி சாம்பல் நிறத்தில் காணப்படும்.
  • மூக்கு கூர்மையாக, காது சிறியதாக, கண்கள் நடுத்தர அளவுடன், பின் பாதத்தின் கீழ் அடர் நிறத்தில் இருக்கும். பெண் எலிக்கு 4 ஜோடி முளைக்காம்புகள் இருக்கும்.
  • குழிகள், பாறைக் குழிகள், பாறை சுவர்கள், தரிசு நிலங்கள், வயல்கள், வயல் ஓரங்களில் இருக்கும். இது கரும்பு, வாழை, அன்னாசி, தென்னை, காபி மற்றும் இதர பழங்கள், காய்கறிப் பயிர்களுக்கும் அதிக சேதம் ஏற்படுத்தும்.

மேலாண்மை

  • உணவு, நீர், உறைவிடம் எட்டதவாறு அகற்ற வேண்டும். எலிப் பொறிகள், பூனை மற்றும் நாய்களை வயலில் விடவும்.
  • எலி சேதம் ஏற்படுத்தும் முதல் அறிகுறியிலேயே அல்லது அதற்கு மன்பே குலைகளை அறுவடை செய்ய வேண்டும்.
  • எலிக் கொல்லிகளை பயன்படுத்தி எலிகளை அழிக்க வேண்டும்.

மேலே செல்க

எறும்புகள் (அனோபிலோவெப்பிஸ் வாங்கிபிஸ்)

அறிகுறிகள்

இளம் வாழைக் குலைகள் மற்றும் சீப்புகளில் பார்மிக் அமிலத்தால் ஏற்படும் சேதம்

எறும்புகள் உண்டாக்கும் சேதம்

எறும்புகள் உண்டாக்கும் சேதம் 

 

  • இளம் பழங்களில் சேதம் ஏற்படுத்தும். குறிப்பாக எறும்புக் கூட்டம் குலைகளில் இடர்பாட ஏற்படுத்தும் (அ) குலைகளில் பூச்சி மருந்து (அ) வளர்ச்சி ஊக்கித் தெளிக்கும் போதோ அவை அசைந்து பார்மிக் அமிலத்தை சுரக்கும்.
  • இந்த பார்மிக் அமிலம் (2-3 கார அமிலத் தன்மையுடன் இருக்கும்) வாழைக் காய்களின் தோலின் மீது படுவதால் தோல் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். ஒழுங்கற்ற முறையில், பழங்களின் மீது கருப்பு நிறப் படிவை ஏற்படுத்தும்.

பூச்சியில்லாத எதிரியின் விவரம்

வாழையுறைகளின் கீழே எறும்புகள் காணப்படுதல்

முட்டைகள்:

  • முட்டைகள் 18-20 நாட்களில் வெளிவரும்.

புழு:

  • 16-20 நாட்களில் புழு வளர்ச்சியடையும்

கூட்டுப்புழு

  • 30-34 நாட்களில் ராணி கூட்டுப்புழு வளர்ச்சியடையும். வேலைக் கூட்டுப்புழு 20 நாட்களில் வளர்ச்சியடையும்.

எறும்புகள்:

  • சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், நீளமான உடலுடன், வயிற்றுப் பகுதி அடர் நிறத்திலும் இருக்கும்.

மேலாண்மை

  • எறும்புக் கொல்லிகளை பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து தெளிக்கவும்.

மேலே செல்க