முக்கிய பகுதிகள்
மீன் வளம் :: கடல் முகத்துரை மீன் வளர்ப்பு
 
   

கடல் முகத்துரை மீன் வளர்ப்பு

பெரும்பாலான நீர் நிலைகள் ஆறுகள் இறுதியில் கடலில் சென்றுதான் கலக்கின்றன. சிற்றாறுகள், அருவி போன்ற சிலவற்றைத் தவிர மற்ற அனைத்து (எளிதில் வற்றிவறண்டுபோகிற) நீர்ப்போக்குகளும் கடலில் சென்று கலந்துவிடும். கடற்கரை ஓரங்களில் பல இடங்களில் ஆறுகள், நீரோடைகள், சிற்றருவிகள் வந்து கலப்பதைக் காணலாம். ஆறுகள் வந்து கலக்குமிடங்களில் நன்னீர் மற்றும் உவர்நீர் கலந்த ஒரு புதிய நீர்ச் சூழல் உருவாகும். இதை அமில செறிவு மாறா மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. கடல் முகத்துரை என்பது கடல்நீர் நன்னீர் கலக்கப்பட்டு அதன் உப்புத்தன்மை நீர்க்கப்படும் இடம் ஆகும்.

கடல்முகத்துரையின் பண்புகள்


பெரும்பாலான கடல் முகத்துறைகளில் இயற்பியல், வேதியியல், மற்றும் உயிரியல் பண்புகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

  • வேகமாக வரும் ஆறுகளின் ஓட்டத்தின் வீதமும் அதன் அலைகளின் கொந்தளிப்பும் இங்கு கடல் நீருடன் சேரும்போது குறைந்து விடுகிறது
  • இக்கடல் முகத்துறைகளில் அகலமும் ஆழமும் சற்று அதிகமாக இருக்கும்
  • ஓட்டத்தின் வேகம் குறைவதால் மிதக்கும் துகள்கள் படிந்துவிடுமாதலால், நீர் தெளிவாக இருக்கும்
  • ஆறுகள் கொண்டுவரும் பொருட்கள், தூசுகள் படிவதால் இவ்விடத்தில் அதிக மண் குவிய வாய்ப்புள்ளது
  • நீரினுள் ஒளி உட்புகுதல், வெப்பநிலை போன்றவை ஆற்றில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கும்
  • ஒரே கடல் முகத்துறையின் பண்புகள் காலத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் தகுந்தாற்போல் மாறுபடும் அதாவது மழைக்காலங்களில் நன்னீர் பண்புகள் அத்தமாகவும் மற்ற கோடைகாலங்களில் உவர்நீர் பண்புகள் அதிகமாகவும் இருக்கும்
  • அலையின் கொந்தளிப்பும் வேகமும் கூட இதன் தன்மையை மாற்றக் கூடும். கடலின் அலையின் வேகமும், உயரமும் அதிகமாக இருந்தால் நன்னீரினுள் இவை அதிகமாகக் கலந்துவிடும். அவ்வாறன்றி அலை இல்லாத பகுதியாக இருப்பின் நன்னீர் அதிக அளவு கடலில் புகுந்து விடும்
  • இப்பகுதியில் அதிக உப்பைத் தாங்கும் திறன் கொண்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் மட்டுமே வளர முடியும். அமிலச் செறிவு மாறாத் தளத்தில் உப்புத் தன்மையை சகித்துக் கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே வாழ இயலும்
  • கடல் முகத்துறையில் நன்னீர் உயிரினங்களும் வாழ முடியும். ஏனெனில் கடல் முகத்துறையின் ஆரம்பத்தில் நன்னீரின் தன்மையும் முடிவில் கடல்நீர் தன்மையும் இரண்டும் கலக்குமிடத்தில் குறைந்த உப்புத் தன்மையும் இருக்கும். எனவே இங்கு நீரின் தன்மைக் கேற்ப உவர்நீர் கடல்நீர் மற்றும் நன்னீர் இன உயிரினங்கள் அனைத்தும் வாழ இயலும்
  • கடல் முகத்துறையில் கடலடி உயிரினங்கள் கூட காணப்படுவதால் அதிக உற்பத்தித் திறன் கொண்ட நீர்ப்பகுதியாகக் கருதப்படுகின்றது
  • ஓட்டுடயிகள், துடுப்பு மீன்கள் போன்ற மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலை இங்கு நிலவுகிறது. அதோடு நன்னீர் தன்மை கலந்து இருப்பதால் பல மிதவைத் தாவரங்கள் விலங்குகள் வாழ்கின்றன. இவை குஞ்சு மீன்களுக்கு ஏற்ற உணவு ஆகையால் இத் துடுப்பு மீன் மற்றும் ஓட்டுடலி மீன்கள் இனப்பெருக்கத்திற்கு இதுபோன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கின்றன
  • மேலும் இப்பகுதிகள் படகு, கப்பல்களை நிறுத்தி வைக்கும் இடமாகவும் பயன்படுகிறது

இந்தியாவின் முக்கிய கடல் முகத்துறைகள்

  • இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் ஆறுகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதா, தபதி, மற்றும் கங்கா, பிரம்மபுத்திரா, கோவா, கேரளா, கர்நாடகாவின் சிற்றாறுகள் இவை அனைத்தும் பல கடலமுகத்துறைகளை உருவாக்குகின்றன. இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு கனக்கெடுப்பின்படி உவர்நீர் வளங்கள் 2 மில்லியன் ஹெக்டர். அது 2002 ஆம் ஆண்டில் 1.44 மில்லியன் ஹெக்டர் ஆக குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரிஸா, குஜராத், கேரளா, மேற்கு வங்கம், போன்ற மாநிலங்களில் அதிக அளவு உவர்நீர் வளங்கள் காணப்படுகின்றன

மாநிலம்

பரப்பளவு (லச்சம் ஹெக்டேர்)

பரப்பளவு (ஹெக்டேர்)

மேற்கு கடல்கரை
         குஜராத்
         மகாராஷ்டிரா
         கர்நாடக
         கேரளா
கிழக்கு கடல்கரை
        தமிழ் நாடு
        அந்தர பிரதேஷ்
        ஒரிசா
       மேற்கு வங்கம்
       புதுச்சேரி
      அந்தமான் நிகோபார் தீவு


                 3.76
                 0.10
                 0.08
                 2.43

                 0.56
                 0.79
                 4.17
                 2.10
                 0.01
                 0.37

                 
30,000
                        -
                        -
                  50,000

                        -
                  18,000
                  30,000
                802,900
                         -
                         -

 

கடல்முகத்துறை - கடல்வாழ் உயிரினங்களின் (மற்றுமோர்) உறைவிடம்:

கடல் முகத்துறையில் உற்பத்தித்திறன் அதிகமாக இருப்பதால் பல கடல் வாழ் தாவர விலங்கு உயிரினங்கள் இங்கு வகிக்கின்றன. அதோடு கறுப்பு வால் கொண்ட கடல்பறவையும் இப்பகுதியில் காணப்படுகிறது.
இதில் இதில் இரண்டு முக்கியப் பிரச்சனைகள் உள்ளன. ஒன்று உப்புத் தன்மை மற்றொன்று வீழ்படிவு (வண்டல்) பல மீன் இனங்கள் இப்பிரச்சனைகளைச் சமாளித்துக் கொள்ளும். இதில் உப்புத்தன்மைக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளும் ‘ஊடமைவுத்’ திறன் பெற்றுள்ளன. சில உயிரினங்கள் வண்டலுக்குள் புதைந்து உப்புத் தன்மையிலிருந்து சமாளித்துக் கொள்கின்றன. பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் வண்டலினுள் புதைந்து காணப்படுகிறது. இங்கு ஆக்ஸிஜன் அளவு குறைவு இவ்வுயிரிகள் சுவாசிப்பதால் ஆக்ஸிஜன் தீர்ந்து ஆக்ஸிஜனற்ற சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.

கடல் முகத்துறை உயிரிகளுக்கு தாவர மிதவைகளே முக்கிய உணவாகும். அவை நீருடன் சேர்த்து அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். இதன் உற்பத்தி நீரின் கலங்கல் தன்மையைப் பொறுத்து இருக்கும். வண்டலில் இருகூற்று நுண்பாசி, இருகசை உயிரிகள் போன்ற மிதவைத் தாவரங்கள் அதிகம் இருக்கும்.

உலகின் 32 மிகப்பெரிய நகரங்களில் 22 நகரங்கள் கடல் முகத்துறையை ஒட்டியே அமைந்துள்ளன. உாரணமாக நியூ யார்க் நகரம் ஹட்சன் ஆற்றின் கடல் முகத்துறையில் அமைந்துள்ளது.

இக்கடல் முகத்துறைகளில் மனித குடியேற்றத்தால் மாசுபடுதல், அதிக மீன்பிடிப்பால் வளம் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றது. அத்துடன் மனிதக் கழிவுகள் வெளியேற்றம், கடலோர குடியேற்றம் மரங்களை வெட்டி காடுகளை அழித்தல் போன்ற மனித நடவடிக்கைகளால் இது மிகவும் பாதிக்கப்படுகிறது. நிலத்தின் கழிவுநீர், தொழிற்சாலை மற்றும் வேளாண் கழிவுகள் போன்றவை ஆற்றில் கலந்து கடல்முகத்துறை வழியே கடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த கலப்பிடங்கள் எளிதில் சரி செய்யப்பட இயலாது. அதிலும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகள், பூச்சிக் கொல்லிகள், பீனால், கன உலோகங்கள் போன்ற எளிதில் மட்காத பொருட்கள் கலப்பதால் இவை மிகுந்த பாதிப்பை கடல்வாழ் உயிரினங்களிடையே ஏற்படுத்துகின்றன.

estuary1
நகரக்களால் சூழப்பட்டுள்ள கடல்முகத்துரை

இத்தகைய விஷப் பொருட்கள் கடல் வாழ் உயிரிகளின் உடலில் உணவாகச் சென்று சேதாரத்தை ஏற்படுத்துகின்றன.

சீனா மற்றும் ரஷ்யாவின் ஃபீனால், தொழிற்சாலைக் கழிவுகள் அமூர் ஆறுகளில் கலந்து மீன்களையும், கடல் முகத்துறையின் மண்ணின் தன்மையையும் பாழ்படுத்திவிட்டன.

கடல் முகத்துறைகளில் நீர் வந்து கொண்டே இருப்பதால் உற்பத்திச் செழிப்பு அதிகம் இருக்கும். இதனுடன் வேதிக்கழிவுகளான உரங்கள், மனித மற்றும் கால்நடைக் கழிவுகள் கலப்பதால் மாசுபாடு அடைவதோடு மேலும் உணவுத்தன்மை நிறைவு அதிகரிக்கிறது. இந்த மாசுபாடு நீரின் ஆக்ஸிஜன் அளைவைக் குறைப்பதால் உயிரினங்கள் இறக்க நேரிடுகின்றது. இது மீன் மற்றும் நீரின் தரம், பிற உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

அதிகளவு மீன் பிடிப்பதால் மீன் வளம் குறைகிறது. வட அமெரிக்காவின் மிகப்பெரிய செஸ்பீக் விரிகுடா கடல்முகத்துறையில் முன்பு இறால்கள் அதிகமாக இருந்தன. ஆனால் தற்போதோ முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. காலங்காலமாக இவ்விறால்கள் அங்குள்ள மிதவை உணவுகளை 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை உண்டு தீர்த்துவிடும். ஆனால் தற்போது மிதவைகளை குறைக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த இறால்கள் மாசு விளைவிக்கும் பொருட்களை உட்கொண்டு செரித்து விடும். அல்லது வண்டலினுள் கொண்டு சென்று மாசு ஏற்படுத்தா வண்ணம் புதைத்துவிடும். எனவே கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை காக்கப்பட வேண்டும்.

nith
நித் ஆற்றின் கடல்துரைமுகம்
mouth amazon

தகவல்:

  • www.wikipedia.com
  • மீன் வள மற்றும் கடல்வள கையேடுகள் - 2006
   
மேலாண்மை
   
   
இதரவகை
   

தீவு வகை மீன்வளர்ப்பு
கடல்முகத்துரை மீன் வளர்ப்பு
நீர் மாசுபடுதல் மீன் வளர்ப்பு
கட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு முறை
கேள்வி-பதில்

   
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008