| | | | | | | | | |
பயிர் சாகுபடியில் மண் போர்வை

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

பயிர் நன்றாக வளர்வதற்கு பயிரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகுந்த வேளாண் கழிவுகளைக் கொண்டு மண் மீது பரப்பவுது மண் போர்வை எனப்படும். இதன் மூலம் பயிர் வளர்ச்சிக்கும் , மண் ஈரப் பாதுகாப்புக்கும் ஏறற சாதகமான சூழ்நிலையை உருவாக்க இயலும். வேளாண் கழிவுப் கொருட்களான இயற்கையில் கிடைக்கக்கூடிய வைக்கோல், இராகித் தாள், வாழை மட்டை, தென்னை நார்க்கழிவு, சோளத்தட்டை தொன்று தொட்டு உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. சமீபகாலத்தில் செயற்கை இழை பொருட்களான நெகிழி (பாலித்தீன் தாள்) போன்றவை மண் போர்வையின் உபயோகத்தையும் பயனையும் முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது. மற்ற பொருட்களை விட பாலித்தீன் தாளை மண் போர்வையான உபயோகிப்பதால் நிலத்தின் மேல் தண்ணீர் ஓட்டத்தை முழுமையாக தவிர்ப்பதுடன், நீர் ஆவியாதலையும் கட்டுப்படுத்தி, அதன் மூலம் உப்பு மேல் நோக்கி வருவதையும் தடுக்க இயலும். இதனால் நீர் இழப்பைத் தவிர்க்கவும் மண் அரிப்பினைத் தடுக்கவும் முடிகிறது.

மண் போர்வை தோற்றமும்  வளர்ச்சியும்

  • முதன் முதலில் காகிதப் போர்வைகள் 1920 ஆம் ஆண்டில் பிரபலப்படுத்தப்பட்டன. ஆனால் காகிதத்தின் விலை, வேலைப்பளு மற்றும் இயந்திர மயம் போன்ற காரணங்களால் அதனை வியாபார ரீதியாக, காய்கறிப்பயிர்களுக்குப் பயன்படுத்த இயலவில்லை. 1960 ஆம் ஆண்டு துவக்கத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட காகிதப் போர்வகைளுடன், பாலி எத்திலீன் தாள்களும் பயன்படுத்தப்பட்டு, ஆய்வுகள் விவசாயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றிருக்கிறது.

நெகிழி மண் போர்வையின் நன்மைகள்

  • நீர் ஊடுருவதலை முழுவதுமாகத் தடுக்கிறது. அதனால் மண்ணிலுள்ள நீர் நேரடியாக ஆவியாகி வெளியேறுவது தடுக்கப்பட்டு மண் ஈரம் பாதுகாக்கப்படுகிறது.
  • நீராவிப் போக்கு கட்டுப்படுத்தப்படுவதால் மண்ணிலுள்ள உப்பு மேல் நோக்கி வருவதும் தடுக்கப்படுகிறது.
  • மண்ணில் இடக்கூடிய சத்துப்பொருட்கள் நீருடன் கலந்து பயிரின் வேருக்குக் கீழ் வெளியேறி செல்வது தடுக்கப்படுகிறது.
  • ஒளி ஊடுருவும் தன்மையில்லாத தாள்கள் நாட்பட்ட களைகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • மண் போர்வை தாள்கள் இரவு மற்றும்  குளிர் காலத்திலும் வட மண்ணில் வெப்பத்தை சீரான அளவில் நிலை நிறுத்தி பயிர் சிறந்து வளர்வதற்கும், விதைகளின் முளைவிடும் தன்மையை துரிதப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
  • நாற்றாங்கால் இடும் நிலங்களில் களைக்கட்டுப்படுத்தவும் பிளாஸ்டிக் தாள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • பிளாஸ்டிக் மண்போர்வைகளின் ஒட்டிய கீழ்பரப்பில் ஒரு நுண்ணிய தட்பவெப்ப சூழ்நிலை உருவாகிறது. இதனால் நுண்ணுயிரிகளின் விளைவால் கரியமில வாயு அதிகம் உற்பத்தி ஆவதால் தாவரங்களில் அதிக அளவில் ஒளிச்சேர்க்கை நடக்கிறது.
  • மண் முழுவதுமாக மூடப்படுவதால் மழைத்துளிகள் நேரடித் தாக்குதல் தவிர்க்கப்பட்டு மண் அரிப்பும் முழுவதுமாகத் தடுக்கப்படுகிறது.
  • மண்ணின் கட்டுமானத்  தன்மை முழுக்க முழுக்க பாதுகாக்கப்படுகிறது.
  • மற்ற பொருட்களைவிட பிளாஸ்டிக் மண் போர்வை நீண்ட நாட்களாக நீடித்த உழைக்கக்கூடியது.

நெகிழி மண் போர்வையின் தீமைகள்

  • வேளர் கழிவுப் பொருட்களை விட பிளாஸ்டிக் மண் போர்வைகள் மிக அதிக விலையுடையவை.
  • கறுப்பு தாள்களை உபயோகிக்கும் போத இளஞ்செடிகள் அதிக வெப்பத்தினால் வெம்பிப் போகும். கருகிப் போகும் வாய்ப்பு உள்ளது.
  • மேல் உரம் இடுவது போர்வை இரு்பபதால் சிரமமாக உள்ளது.
  • சில பகுதிகளில் எலி, நாய் போன்ற பிராணிகளால் தொந்தரவும் அதிகம். இன்னும் வேறு சில பகுதிகளில், பாம்புகளின் தொல்லையும் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மண் போர்வை பயன்கள்

  • மானாவாரி நிலங்களில் மண் ஈரத்தைக் காத்தல்
  • பாசன நிலங்களில் பாசன நிலையை பயிர்களுக்கு ஏற்றவாறு குறைத்தல்
  • மண்ணின் தட்பவெப்பநிலையைப் பயிர்களுக்கு ஏற்றவாறு மாற்றுதல்
  • களைகளைக் கட்டுப்படுத்துதல்
  • தரமான விளைச்சல்  செறுதல்
  • மண் அரிமானத்தைத் தடுத்தல்
  • மண் மூலம் பரவும் நோய்களை மண்ணை அதிகப்படியாக வெப்பப்படுத்துதல் மூலம் கட்டுப்படுத்துதல்
  • மகசூலை அதிகரித்தல்

மண் போர்வையின் வகைகள்

  • பலவகைப்பட்ட பிளாஸ்டிக் தாள்கள் 1960 ஆம் ஆண்டு முதல் மண் போர்வைக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை குறைந்த அடர்வு கொண்ட பாலி எத்திலீன் மற்றும் அதிக அடர்வு கொண்ட பாலி எத்திலீன் தாள்கள் ஆகும். பாலி எத்திலீன் சூரிய கதிர்களை ஈர்த்து வெப்பமடைந்து அதிக அலை நீளமுள்ள கதிர்களை வெளியேற்றுகிறது. இதனால் மண்ணில் வெப்பம் தங்கி பயிர் வளர்வதற்கேற்ற சூழல் உருவாகிறது. இன்று பெரும்பாலும் குறைந்த அடர்வு பாலித்தீன் தாள்களே உபயோகிக்கப்படுகின்றன.

மண் போர்வைக்கு இருக்கவேண்டிய குணங்கள்

  • காற்று புகாத தன்மை நீராவியாதலின் மூலம் நீர் வெளியேறக்கூடாது.
  • வெப்பத்தை பாதுகாக்கும் தன்மை மற்றும் நீராவிப் போக்கைத் தடுக்கும் தன்மை
  • பயிரின் சாகுபடிக்கு கால அளவுக்கு உழைக்கக்கூடிய தன்மை, தரம்
  • சராசரியான விலைத்தன்மை

பிளாஸ்டிக் போர்வையின் முக்கியத் தன்மைகள்

  • தடிமன் நெகிழித் (பிளாஸ்டிக்) தாளின் எடையைப் பொறுத்து தாளின் விலை மாறுபடுவதால் மெலிதான தன்மையுடைய பிளாஸ்டிக் தாளையே விவசாயத்திற்கப் பயன்படுத்தவேண்டும். அதே சமயம் அவை நன்கு உழைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். ஆரம்பக் காலங்களில் 60.76 மைக்ரான் (240, 300 காஸ்) தடிமனுள்ள பயன்படுத்தப்பட்டன. இதன் விலை மிகவும் தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியால் 10 மைக்ரான் அளவுக்கு தடிமான தாள்களும் கூட தயாரிக்கப்படுகின்றன. இதனால் விலை பல மடங்கு குறைகிறது. ஆனால் இவை வெகு எளிதாக கிழிந்த விடும் தன்மையுடையவை. அதனால், பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
  • அகலம் பயிர்களின் வரிசை இடைவெளியைப் பொறுத்து இது அமையும். சாதாரணமாக ஒன்றிலிருந்து ஒன்றரை மீட்டர் அகலமுள்ள தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அகலம் அதிகம் தேவைப்பட்டால், தாளினை சூடாக்குதல் மூலமாக தேவைப்பட்ட அளவு அகலப்படுத்திக் கொள்ள முடியும்.
  • துளைகள் – சூழ்நிலைக்கேற்ப துளை உள்ள பாலித்தீன்  தாளையோ அல்லது துளையில்லாத தாளையோ தேர்ந்தெடுத்தல் அவசியம். தாள்களில் நுண்துளையில்லாமலிருந்தால் தண்ணீர் தேங்குதல் குறைவாகவும் உரம் பரவுதலும் சீராக இருக்கும். பயிர்களின் வேர்ப்பாகத்தில் நீர்த் தேங்குவமால் நுண் துளையுள்ள பாலித்தீன் தாளை உபயோகித்தல் வேண்டும்.
  • நிறம் - பிளாஸ்டிக் தாளின் நிறமானது, மண்ணின் வெப்பநிலை பயிர்களைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை மற்றும் மண்ணின் உப்புத் தன்மை ஆகியவற்றை பெருமளவில் பாதிக்கவல்லது. கறுப்பு நிறத்தாள் தண்ணீர் கடத்துதலையும், உப்பு மேல் நோக்கி நகர்வதையும் தடுக்கும். களைக் கட்டுப்பாட்டிற்கும் உகந்தது. தங்கம் அல்லது  வெளிர் மஞ்சள் நிறமுடைய தாள் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் தன்மையுடையது.
பிளாஸ்டிக் தாள் தேர்ந்தெடுத்தல்
  • பயிர்களின் தேவை மற்றும் உபயோகிக்கும் பருவம், மண் போர்வை உபயோகப்படுத்துதலின் நோக்கம்  ஆகியவற்றைப் பொறுத்து தக்க பிளாஸ்டிக் தாள்கள் தேர்வு செய்யப்படவேண்டும். கிழ்க்கண்டவாறு தாள்களைத் தேர்வு செய்யலாம்.
மழைக்காலம் (அதிக மழை பெய்யும் இடங்கள்) - நுண்ணிய துளைகளிடப்பட்ட தாள்
பழப்பயிர்கள் மற்றும் காபி, தேயிலை போன்ற பயிர் - அதிகத் தடிமனுள்ள தாள்
நிலத்தை சூடாக்கி நூற்புழு போன்றவைகளையும், களை விதைகளையும் அழிக்க, கட்டுப்படுத்த களைக் கட்டுப்பாட்டிற்கும் மணற்பாங்கான நிலங்களுக்கும் மற்றும் உப்பு நீலை உபயோகிக்கும் நிலங்களுக்கும் - கறுப்பு நிறத் தாள்
பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த - மஞ்சள் அல்லது பொன்நிறத்தாள்
விதை முளைவிடும் திறனை துரிதப்படுத்த - மெலிதான தாள்
கோடைக்காலப் பயிர்சாகுபடி நிலங்களுக்கு - வெள்ளைத்தாள்
மண்போர்வை இடும் முறைகள்
  • அதிகக் காற்றில்லாத நேரங்களில் தாள்கள் நிலத்தின் மீது பரப்பப்படவேண்டும்.
  • தாள் அதிக தொய்வோ, சுருக்கங்களோ இன்றி நிலத்தில் ஒட்டியவாறு இடப்படவேண்டும்.
  • தாளின் ஓரங்கள் 7-10 செ.மீ ஆழத்தில் 45 டிகிரி கோணத்தில் இடப்பட்ட சிறு சால்களில் நன்கு பதிக்கப்படவேண்டும்.
  • பயிர் நடவிற்கு முன் மண்போர்வை இடுவதாயிருந்தால், தாளில் பயிரின் இடைவெளிக்கேற்ப நாற்றுக்களையோ அந்தத் துளைகளில் நடமுடியும். நட்ட பின் தாளின் ஓரங்களை மேற்குறிப்பிட்ட நிலத்தில் 10 செ.மீ அழுத்திற்கு புதைத்து விடல் வேண்டும்.

பிளாஸ்டிக் போர்வை இடும்போது கவனிக்க வேண்டியவை

  • தாளை நிலத்தில் மிகவும் இறக்கமாக இருக்குமாறு அமைப்பது கூடாது. வெப்பத்தினாலும, சாகுபடி முறைகளாலும் ஏற்படக்கூடிய சுருக்க. விரிவுகளை ஏற்கும் வண்ணம் தொய்வாக தாள் இடப்படவேண்டும்.
  • கருப்பு நிறத்தாளில் தொய்வு அதிகமாக இருக்கவேண்டும். ஏனெனில், இதன் சுருங்கி விரியும் தன்மை அதிகமாக இருக்கும்.
  • அதிக வெப்பநிலை நிலவும் பொது தாள் விரிந்த நிலையில் இருக்கும். இந்தத் தருணத்தில் தாளை நிலத்தில் போர்த்தக்கூடாது.

பருத்தி

  • மானாவாரிப் பயிரக்கு 15(அ) 25 மைக்ரான் தடிமனுள்ள பிளாஸ்டிக்  நிலப்போர்வை அமைப்பதால் மண் ஈரப்பதம் நெடுநாட்க்ள குறையாமல் முளைப்புத்திறன் துரிதமாகவும், சிறந்த பயிர் வளர்ச்சியும்  மற்றும் அதிக மகசூலும் (46 சதவீதம்) கிடைக்கப் பெறலாம்.

கத்தரி

  • மண்ணின் ஈரத்தன்மை, பிளாஸ்டிக் நிலப்போர்வை இடுவதன் மூலமும் முறையே 28.4 சதவிகிதம் மற்றும 16.6 சதவீதம் அதிகரிக்கிறது.
  • களை வளர்வதும் குறைவதனால் (57 சதவீதம்) பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலும் நன்கு கிடைக்கப் பெறுகிறது. (15.827 கி எக்டர் சாதாரண நிலப்போர்வையில்லாததை விட 30 சதவீத மகசூல் அதிகரிப்பாகும்).

வெண்டைக்காய்

  • வெண்டைப் பயிரில் நிலப்போர்வையை வெவ்வேறான அளவுகளில் நீர்ப்பாசனம் செய்வதால் ஒட்டு  மொத்த நீராவிப் போக்கின் அளவு நீர்ப்பாய்ச்சும் அளவில் 60 விழுக்காடு ஆக இருக்கும் போது அதிக மகசூல் 9825 கி.எக்டர் கிடைக்கப் பெறுகிறது. வெண்டைப் பயிரில் வாழை இலைகளில் நிலப்போர்வை அமைப்பதன் மூலம் (10 டன் எக்டர்) 12 சதவீத அதிக மகசூலும் பிளாஸ்டிக் நிலப்போர்வை (25 மைக்ரான்) அமைப்பதன் மூலம் 50 சதவீத அதிக மகசூலும் கிடைக்கப் பெறுகிறது. இதன் மூலம் வருமானம் 9770 ரூ எக்டர் அதிக்கபடியாகக் கிடைக்கிறது. இதனால் முதலீட்டிற்கான லாப விகிதம் 1.77 ஆகும்.

தக்காளி

  • நீர்ப்பாசன அளவு ஒட்டு மொதம் நீராவிக் போக்கில் 80 விழுக்காடு ஆக இருக்கும் போது அதிகப்படியான மகசூல் கிடைக்கிறது. பிளாஸ்டிக் நிலப்போர்வை உபயோகத்தினால் மகசூல் (12735 கி.எக்டர்) அதாவது 28.4 சதவீதம் அதிகப்படியான மகசூல் கிடைக்கிறது. அங்கக நிலப்போர்வையினால் 14.2 சதவிகிதம் அதிக மகசூல் கிடைக்கிறது. தக்காளியில் நீர்ப்பாசனம் ஒட்டுமொத்த நீராவியாதல் 80 விழுக்காடு ஆகவும் மற்றும் பிளாஸ்டிக் நிலப்போர்வையும் உபயோகிப்பதன் மூலம் அதிக மகசூலாக 13427 கிலோ எக்டர் கிடைக்கப் பெறுகிறது. இதனால் கிடைக்கப் பெறும் லாபம் ரூ. 5602 எக்டர் ஆகும்.

மிளகாய்

  • பிளாஸ்டிக் நிலப்போர்வையுடன், நீர்ப்பாசனம் ஒட்டு மொத்த நீராவியில் 60 விழுக்காடு இருக்கையில் அதிக மகசூலும் (54754 கிலோ எக்டர்) அதிக நீளமும் சுற்றளவும் கொண்ட மிளகாய் கிடைக்கப் பெறுகிறது. நிலப்போர்வையில் முதலீட்டிற்கான லாப விகிதம் 2.28 ஆகவும் 65.78 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டு அதிகப்படியாக 19 மகசூல் கிடைக்கப் பெறுகிறது.

சொட்டு நீர்ப்பாசனம் போர்வை

தென்னை

  • தென்னைக்கு நாள் ஒன்றுக்கு 50-60 லிட்டர் தண்ணீர் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் அளிக்கலாம். பிளாஸ்டிக் நிலப்போர்வை (25 மைக்ரான்) மற்றும் சொட்டு நீர் உபயோகிப்பதன் மூலம் மண்ணின் ஈரத்தன்மை காப்பதுடன் முதலீட்டிற்கான லாப விகிதம் 2.48 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4 லிட்டர் சொட்டக்கூடிய 4 சொட்டுவான்களை 4 மணி நேரத்திற்கு உபயோகிதது நல்ல பயனைத் தரும்.

பப்பாளி

  • சொட்டு நீர்ப்பாசனம் (8 லிட்டர் நாள்) மற்றம் பிளாஸ்டிக் நிலப்போர்வை உபயோகிப்பதன் மூலம் அதிகப்படியான மகசூல் (83 பழங்கள்) மற்றும் பழத்தின் எடையானது 1.8-3.2 கிலோவாகவும் கிடைக்கிறது. மொத்த சர்க்கரை அளவு (13.7 – 15.3 பிரிக்ஸ்) ஆகவம் பாலின் அளவு ஒரு கிலோவிற்கு 32.78 கிராமாகவும் கிடைக்கிறது.

மண் போர்வையினை நீக்குதல்

  • பிளாஸ்டிக் போர்வையினை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்து, அறுவடை செய்த பின்னர், போர்வையினை நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல், குறிப்பாக மிக அதிக பரப்பளவில் மண் போர்வை பயன்படுத்தும் போது பெரும் பிரச்சினையாக உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இதனை பல முறைகளில் கையாளுகின்றனர். போர்வையினை நீக்கும் முறை ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைக்கேற்ப அமைதல் வேண்டும். ஒரு சில இராசயனப் பொருட்களை மூலப் பொருளான பிளாஸ்டிக்குடன் முறைப்படி கலந்து தாள்கள் தயாரிப்பதன் மூலம் குறிப்பிடட காலத்தில் அதாவது (60,90, 120 அல்லது 150 நாட்களில்) சூரிய ஒளியில் இருந்த பின்னர், அவை தானே கிழிந்து, அழிந்து விடக்கூடிய தன்மையை ஏற்படுத்த இயலும். எனினும், மண்ணில் புதைக்கப்பட்ட தாள்களின் ஓரங்கள், அறுவடைக்குப் பின்னர் உழவு மேற்கொள்ளும் பொழுது, மேலே வந்து சில பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இன்று இப்பிர்ச்சினைக்குத் தீர்வு காண பலவிதமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண் பாதுகாப்பு மற்றும் பயிரின் வளர்ச்சியில் மண் போர்வை ஏற்படுத்தும் வியத்தகு

விளைவுகள்

மண்ணின் வெப்பநிலை ஈரப்பதம். களைக் கட்டுப்பாடு. கரியமிலவாயு அதிகரிப்பு, பயிரின் வேர்களின் வளர்ச்சி நுண்ணுயிரிகளின் செயல்பாடு போன்ற காரணிகளில் பிளாஸ்டிக் போர்வைகள் பல நல்ல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மண்வெப்பநிலை

ஒளி ஊடுருவக்கூடிய மெல்ிய தாள்களின் கீழ் மண்ணின் வெப்பநிலை சூரிய ஒளிககம்,மண் நீர் இருப்புக்கும் ஏற்ப சுமார் 2 டிகிரியிலிருந்த 10 டிகிரி வரை அதிகரிக்கின்றது. இரவில், மண் போர்வையிடப்படாத நிலத்தில் இருப்பதை விட 2லிருந்து 4 டிகிரி அளவே மண் போர்வையினுள் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. கறுப்புத் தாளின் கீழுள்ள மண்ணின் வெப்பநிலை வெளியிலுள்ள மண் வெப்பநிலையை விட பகலில், பொதுவாக அதிகமாகவே இருப்பினும் சில இடங்கிளல் இந்த அளவு குறைவாகவும் காணப்படுகிறது. ஆனால் இரவில் 0.5-4 சென்டிகிரேட் அளவு அதிகமாகவே உள்ளது.

அதே சமயம் வெள்ளை நிறத்தாளின் கீழ், வெப்பம் வெளியிலுள்ளதை விட சற்றக் குறைவாகவே இருக்கிறது. ஆகையால், மிக அதிக வெப்பமுள்ள இடத்தில், மண் வெப்பநிலையை குறைக்கவும் அல்லது குறைந்த சூரிய ஒளி பரவும் இடத்தில் ஒளியினைப் பிரதிவலித்து கீழ் மற்றும் இடையிலுள்ள இலைகளுக்கு கிடைக்கச் செய்யவும் வெள்ளை நிறத்தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாம்பல் நிறமுடைய தாள்களையும் மண் போர்வையாக உபயோகிக்கலாம். இதன் தன்மைகள் கறுப்பு மற்றும் வெளிர் நிற தாள்களுக்கு இடைப்பட்டதாக காணப்படுகிறது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப வாயு-
உற்பத்தி சாதனங்கள்

உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு &
மழை நீர் சேகரிப்பு

பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்

மதிப்பூட்டுதல்