அரசு திட்டங்கள் & சேவைகள் :: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்


இந்திய பொருளாதாரத்தில், 1991 ஆம் அண்டிற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 1980 –களில் இருந்து ஆண்டு வேளாண்மை வளாச்சி விகிதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சீராக அதிகமடைந்து வருகிறது. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டகாலமான 1996 – 2001 ல் வேளாண்மை வளாச்சி விகிதத்தை 4 சதமாக உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதை அடைவதில் சற்று கடினநிலை உணரப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 50 சதத்திற்கும் மேலானோர்  தங்களது வாழ்வாதாரத் தொழிலாக வேளாண்மையையே நம்பியுள்ளனர். இருப்பினும், வேளாண்மை வளர்ச்சி விகித குறைவுக்கு காரணம் முதலீடுகள் குறைவாக இருப்பது என கண்டறியப்பட்டது. இதனை சரிபடுத்த, 2007, மே மாதம் 29ம் தேதி நடைபெற்ற தேசிய  வளர்ச்சி குழுக் கூட்டத்தில், மத்திய அரசு நிதி உதவியுடன் கூடிய புதிய கூடுதல்  சிறப்புத் திட்டம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் மத்திய வேளாண் அமைச்சகத்தின்  கட்டுப்பாட்டின் கீழ், மத்திய நிதி உதவியுடன்  கூடிய மாநில திட்டங்கள், செயலாக்கத்திட்டங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

மேலும், மத்திய நிதி உதவியுடன் கூடிய தேசிய வேளாண்மை வளாச்சித் திட்டமானது வேளாண்மைத் துறையின் பல்வேறு பிரிவுகள், வேளாண் வானிலை மண்டலங்கள், இயற்கை வள ஆதாரங்கள், கால்நடை, கோழி வளர்ப்பு, போன்ற அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வரப்படுகிறது. வேளாண்மைத் துறையும், திட்டக்குழுவும் ஒருங்கிணைந்து வேளாண் வளாச்சிக்கான திட்டங்களை தேர்வு செய்து, பரிந்துரைத்து, திட்ட செயலாக்கத்திற்கான வழிமுறைகளை நெறிப்படுத்தி வருகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் திட்டங்கள் ஆண்டு வாரியாக தொகுத்து தரப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்

  வருடம் 2013-14
  வருடம் 2012-13
  வருடம் 2011-12
  வருடம் 2010-11
  வருடம் 2009-10
  வருடம் 2008-09
  வருடம் 2007-08

Updated on : 30.06.2014

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014