| | | Vidai Gramma Thittam|  |  |  |  |
 
மெகா விதைத்திட்டம்
   

 

மெகா விதைத்திட்டம்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் “மெகா விதைத் திட்டம்” தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விதை சேமிப்பு கிடங்கு, விதை சுத்திகரிப்பு நிலையம், விதை பரிசோதனை கூடம், கதிர் அடிக்கும் களம், பண்ணை வேலி, நீர்பாசன வசதி, நாற்றங்கால் வசதி, பயிற்சி வசதி போன்ற பல்வேறு வசதிகளை வெவ்வேறு விதை மையங்களிலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமல்லாமல் பல வகையான பண்ணை சாதனங்கள் மற்றும் கருவிகள் விதை சுத்திகரிப்பு கருவிகள், கதிரடிக்கும் கருவி, டிராக்டர், பவர் டில்லர், பம்பு செட்டுகள், போன்ற வகையான கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. விதை உற்பத்தியானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 20 நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

mega seed project

நிதி சுழற்சி

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் நிதி சுழற்சியானது 12 விதை உற்பத்தி மையங்களுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை விதை உற்பத்திக்காக வழங்கப்பட்டு வருகின்றது. விதை உற்பத்தி நிலையங்களில் தரமான விதைகள் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கு வழங்குதல் போன்ற பயிகளில் ஈடுபட்டு வருகின்றன.

 

 
 
 
 
 

| | | Vidai Gramma Thittam|  |  |  |  |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam