| ||||||||||
வேளாண்மை :: இயற்கை சீற்ற மேலாண்மை :: நிலச்சரிவை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
|
||||||||||
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் முக்கிய தடுப்பு நடவடிக்கைகளாவன
பலமான மழை பொழியும் போது மழைநீர் அதிகளவில் மண்ணில் புகுந்து, மண்ணை இழுத்துக் கொண்டு ஓர் இடத்தில் அதிகப்படியாக படிந்து விடும். இதனால் மண்ணின் அடிப்பகுதி இளகி அழமான சரிவை நோக்கி விழும். இதைத் தடுப்பதற்கு மண்ணில் நீர் உட்புகும் திறனை குறைக்க வேண்டும். மற்றும் அதிகப்படியான மழைநீரை எந்தத் தடங்கலுமின்றி கீழே செல்லுமாறு செய்ய வேண்டும். நிலச்சரிவை தடுக்க மேற்கொள்ளும் முதல் நடவடிக்கையானது வடிகால்களை சீர்படுத்துதல். அதிகப்படியனா சரிவுகளில் சிறிய அல்லது பெரிய அளவு வடிகால் வாய்க்கால்களை ஏற்படுத்தி பராமரிக்கலாம். சமஉயர வரப்பு அமைத்தல் மண் அதிகளவில் சரிந்து படிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை ஒதுக்கி விட்டு, அவற்றில் நிரந்தரமாக பயிர் செய்வதற்கான நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும். மேற்பகுதியில் உள்ள நிரந்தமற்ற பகுதிகளில் அதிகளவில் மரங்கள் அழிந்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் உடனடியாக மரம் வளர்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலச்சரிவை தாங்கி நிற்கும் இரகங்களைத் தேர்வு செய்து நட வேண்டும்.
இருக்கை அடுக்குத் தளம்
|
||||||||||
விவசாயிகளின் கூட்டமைப்பு |
||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 | ||||||||||