Agriculture
 
வேளாண்மை :: எண்ணெய் வித்துக்கள் :: தென்னை
   

 

தென்னை

1. இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள்
அ. இரகங்கள்

  1. கிழக்குக் கடற்கரை நெட்டை
  2. மேற்குகடற்கறை நெட்டை
  3. வி.பி.எம் 3 (சாதாரண அந்தமான் நெட்டை இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது)
  4. ஏ.எல்இஆர். (சி.என்.1) (அரசம்பட்டி நெட்டை இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது)
  5. செளகாட் ஆரஞ்சு குட்டை (இளநீருக்காக மட்டும்)

ஆ. வீரிய ஒட்டு இரகங்கள்

(சிறந்த பராமரிப்பில் வளர்க்கப்பட்ட வேண்டியவை)
வி.எச்.சி 2 (இ.சி.டி ஒ எம்.ஒய்.டி)
வி.எச்.சி 3 (இ.சி.டி ஒ எம்.ஒ.டி)

இது தவிர இ.சி.டி டபுள்யூ சி.டி ஒ சி.ஓ.டி மற்றும் ள டபுள்யூ.சி.டி ஒ எம்.ஒய்.டி ஆகிய நெட்டை ஒ குட்டை ஒட்டு இரகங்களும் வேளாண் துறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. நல்ல நீர் வளம் உள்ள பகுதிகளில், சிறந்த பராமரிப்பில் பயிர் செய்ய ஏற்றதாக உள்ள குட்டை ஒ நெட்டை (சி.ஓ.டி ஒ டபுள்யூசி.டி) ஒட்டு இரகமும் வேளாண் துறையினரால் உற்பத்தி செய்யப்படுகிறது.

2. புதிய இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் பற்றிய விபரங்கள்

வ.
எண்

விபரம்

விஎச்சி 2 வீரிய ஒட்டு

விபிஎம் 3

விஎச்சி 3
வீரிய ஒட்டு

ஏ.எல்.ஆர் (சி.என்) 1

1.

வெளியான வருடம்

1988

1994

2000

2002

2.

பெற்றோர்

கிழக்கு கடற்கரை நெட்டை ஒ மலேசியா மஞ்சள் குட்டை

அந்தமான் சாதாரண நெட்டை இரகத்திலிருந்து தேர்வு

கிழக்கு கடற்கரை நெட்டை ஒ மலேசிய ஆரஞ்சு குட்டை

அரசம்பட்டி உயரம் இரகத்தில் இருந்து தேர்வு

3.

வயது

60

80

60

80

4.

முதல் பூத்தல்  (மாதங்கள்)

43

63

46

48

5.

காய் அளவு

நடுத்தரம் முதல் பெரியது நீள்வட்டமானது

நீள்வட்டம், அடிப்பகுதி பெரியது, பெரிய காய்கள்

நடுத்தரம் முதல் பெரியது நீள்வட்டமான

சிறியது முதல் நடுத்தரம் நீள்வட்டமான

6.

காய்களின் விளைச்சல், வருடம்

142

92

156

126

7.

கொப்பரை (கிராம், காய்)

152

176

162

131

8.

கொப்பரை மகசூல் (கி.மரம், வருடம்)

21.5

16.2

25.2

16.5

9.

எண்ணெய் சத்து

 

70.2

70.0

70.0

66.5

10.

சிறப்பு அம்சங்கள்

அதிக காய் மகசூல், அதிக எண்ணெய் சத்து

அதிக கொப்பரை அளவு, வறட்சி தாங்கும் திறன்.

அதிக காய் மகசூல், அதிக கொப்பரை மகசூல், அதிக எண்ணெய் சத்து

வறட்சி தாங்கும் திறன்

பயிர் நிர்வாகம்

1.மண் வகைகள்

செம்மண், வண்டல் மண், மணல் கலந்த செம்மண் மற்றும் அமிலத்தன்மை கொண்ட லேட்டரைட் எனப்படும் மண் வகை தென்னை சாகுபடிக்கு ஏற்றது. அதிக களிமண் மற்றும் வடிகாலில்லாத மண் வகைகள் தென்னை சாகுபடிக்கு ஏற்றதல்ல.

2. நடவு பருவங்கள்

ஆடி மற்றும் மார்கழி மாதங்கள், பாசன மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் மற்ற மாதங்களிலும் நடலாம்.

3. நடவு இடைவெளி

25 அடிக்கு 25 அடி (7.5 ஒ 7.5 மீ) என்ற கணக்கில் நடவு செய்யலாம். இதனால் ஒரு எக்டர் நிலப்பரப்பில் 175 தென்னங்கன்றுகள் நடலாம். ஓரக்கால்களில் நடவு செய்ய 20 அடி இடைவெளி போதுமானதாகும்.

4. நடவு முறை

3 அடி நீள, அகல, ஆழ குழிகள் தோண்டி அதிலே 1.3 சதவீதம் லிண்டேன் தூள்களை தூவிவிடவேண்டும். அந்தக்குழியை 2 அடி உயரத்திற்கு (60 செ.மீ) மக்கிய தொழு உரம் செம்மண் மற்றம் மணல் ஆகியவற்றை சமமாகக் கலந்து நிரப்பவேண்டும்.  வெளித்தோன்றும் வேர்கள் அனைத்தும் நீக்கப்பட்ட தென்னங்கன்றுகளை குழியின் நடுவே மண் கலவையை எடுத்து விட்டு நடவு செய்யவேண்டும். நாற்றையும் அதனுடன் கூடிய  தேங்காயையும் மண் அணைப்பு செய்து சுற்றிலும் அழுத்திவிடவேண்டும். நட்ட கன்றுகளுக்கு பின்னிய தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு நிழல் அமைத்துத் தரவேண்டும். தென்னங்கன்றுகளைச் சுற்றி சேரும் மண்ணை அடிக்கடி அப்புறப்படுத்தவேண்டும். வருடாவருடம் வட்டப்பாத்தியை அகலப்படுத்தவேண்டும்.

5. நீர் மேலாண்மை

ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியதாலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம் அல்லது வட்டப்பாத்தி பாசனம் மூலம் கடைப்பிடிக்கலாம்.

தமிழகத்தின் மேற்குப்பகுதியில் தென்னை மரங்களுக்கத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்)

மாதங்கள்

நீர் நிறைந்த பகுதிகள்

நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள்

வறட்சியான பகுதிகள்

அ. சொட்டு நீர்ப்பாசனம்

 

 

 

பிப்ரவரி - மே

65

45

22

ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்

55

35

18

ஜூன்மற்றும் ஜூலை ,அக்டோபர் முதல் டிசம்பர் வரை

45

30

15

ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசனம்

 

 

 

பிப்ரவரி - மே

410 லிட்டர், 6 நாள்

 

 

ஜனவரி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்

410 லிட்டர், 7 நாள்

 

 

ஜூன்மற்றும் ஜூலை , அக்டோபர் - டிசம்பர்

410 லிட்டர், 9 நாள்

 

 

தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்).


மாதங்கள்

நீர் நிறைந்த பகுதிகள்

நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள்

வறட்சியான பகுதிகள்

அ. சொட்டு நீர்ப்பாசனம்

 

 

 

மார்ச் - செப்டம்பர்

80

55

27

அக்டோபர் - பிப்ரவரி

50

35

18

ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசன முறை

 

 

 

மார்ச் - செப்டம்பர்

410 லிட்டர், 5 நாள்

 

 

அக்டோபர் - பிப்ரவரி

410 லிட்டர், 8 நாள்

 

 

வட்டப்பாத்தியில் நீர் பாய்ச்சும்போது மேலே கொடுக்கப்பட்ட நீரின் அளவுடன் 35 முதல் 40 சதவிகிதம் (135 - 160 லிட்டர்) அதிகப்படுத்தி வாய்க்கால்களின் பாய்ச்சும்போது குறையும் நீரின் ஈடுகட்டவேண்டும்.
தென்னை நார்க்கழிவால் நிரப்பப்பட்ட ஒர அடி நீள, ஆழ குழிகள் அமைத்து குழிக்குள் 16 மி.மீ விட்டமுடைய வி.வி.சி குழாய்களை சாய்வாக வைத்து அதில் சொட்டு நீர் விழும்படி அமைக்கவேண்டும். இக்குழிகள் மரத்திலிருந்து 1 மீட்டர் தூரத்தில் நான்கு பக்கமும் அமைக்கப்படவேண்டும்.

முதலாம்  ஆண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாளும், இரண்டாம் ஆண்டு முதல் காய் பிடிக்கும் வரை வாரம் இருமுறையும் தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் சிறந்தது.

வறட்சி மேலாண்மை மற்றும் நீர் வள பாதுகாப்பு

அ. தென்னை மட்டைகள் ஓலைகள் தென்னை நார்க்கழிவு கொண்டு மூடாக்கு போடுதல். குறிப்பாக கோடைக் காலங்களில் 1.8 மீட்டர் ஆரம் கொண்டு வட்டப்பாத்திகளில் குவி வட்டப்பகுதி மேல் நோக்கியவாறு 100 தென்னை மட்டைகளை அல்லது 15 காய்ந்த தென்னை ஓலைகளை அல்லது 10 செ.மீ உயரத்திற்கு தென்னை நார்க்கழிவு பரப்பி மண் நீர்வளத்தைப் பாதுகாக்கலாம்.

ஆ. தென்னை மட்டைகள் அல்லது தென்னை நார்க்கழிவு புதைத்தல்

தேங்காய் மட்டைகளை குழிந்த பகுதி மேல் நோக்கிய வண்ணம் வட்டப்பாத்திகளிலோ அல்லது இரு தென்னை வரிசைகளுக்கு இடைவெளிகளிலோ புதைத்து வறட்சிகளை தாங்க ஏற்பாடு செய்யலாம். 100 தேங்காய் மட்டைகள் நார்ப்பகுதி மேல்நோக்கி இருக்குமாறு அல்லது 25 கிலோ தென்னை நார்க்கழிவை 1.5 மீட்டர் ஆரம் தூரத்தில் 30 செ.மீ அகலமும், 60 செ.மீ ஆழமும் கொண்ட குழிகளில் இடவேண்டும். இந்த மட்டைகளை தென்னை மரத்திலிருந்து 3 மீட்டர் தள்ளி நீண்ட குழிகளில் 150 செ.மீ (5 அடி) அகலத்தில் 1.5 அடி ஆழத்தில் இந்த மட்டைகளை போட்டு மூடி வைக்கலாம். இதன் மூலம் ளபரவ மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்க முடியும்.

6. உரமிடல்

ஐந்தாம் ஆண்டு முதல் தென்னை மரங்களுக்கு 50 கிலோ தொழு உரம் அல்லது மக்கிய உரம் அல்லது பசுந்தாள் உரமிடவேண்டும். மேலும்  தென்னையின் அடிப்பாகத்தில் இருந்து 1.8 மீட்டர் ஆரத்தில் உள்ள வட்டப்பாத்தி முழுவதும் கீழ்க்காணும் உரங்களான
யூரியா                                        - 1.3 கிலோ (தழைச்சத்து 560 கிராம்)
சூப்பர் பாஸ்பேட்                         - 2.0 கிலோ (மணிச்சத்து 320 கிராம்)
மியூரியேட் ஆப் பொட்டாஷ்          - 2.0 கிலோ (சாம்பல் சத்து 1200 கிராம்)

என்ற கணக்கில் இட்டு கொத்தியபின் நீர்ப் பாய்ச்சவேண்டும். உரமிடும்போது மண்ணில் தகுந்த ஈரம் இருக்கவேண்டியதும் அவசியமாகிறது. மேலே கூறியுள்ள உர அளவை இரண்டாகப் பிரித்து ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் இடலாம். இரண்டு,  மூன்று, மற்றும் நான்காம் ஆண்டுகளில் தென்னங்கன்றுகளுக்கு முறையே பகுதி அளவில் மேலே கூறப்பட்ட உரத்தை இடவேண்டும். மேலே பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் 75 சதவிகிதத்தை ஒவ்வொரு மாதமும் தென்னைக்குப் பாயும் நீரில் கலந்து விடலாம். பாஸ்பரஸ் உரத்தை மட்டும் பாஸ்பேட்டாக வட்டப்பாத்திகளில் இடலாம். அல்லது நல்ல நீர் கிடைக்குமாயின் டி.ஏ.பியாக சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகவும் இடலாம்.

தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழக தென்னை ஊக்க உரம்

காய்க்கும் மரங்களுக்கு, வேர்மூலமாக தென்னை ஊக்க உரத்தை ஒரு மரத்திற்கு 200 மில்லி லிட்டர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும்.

தென்னைக்கு நுண்ணுயிர் உர பரிந்துரைகள்

50 கிராம் அஸோஸ்பைரில்லம் ரூ. 50 கிராம் பாஸ்போபாக்டீரியா அல்லது 100 கிராம் அஸோபாஸ் உடன் 50 கிராம் வேர் உட்பூசணத்தை தேவையான அளவு கம்போஸ்ட் அல்லது தொழு உரத்துடன் கலந்து இளம் வேர்களில் மற்றும் உரங்களோடு உயிர் உரங்களை கலக்கக்கூடாது.

அங்கக கழிவு சுழற்சி

சணப்பு, அவுரி, கலப்பகோனியம், தக்கைப்பூண்டு ஆகிய ஏதாவது ஒரு பசுந்தாள் உரத்தை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் உழவு செய்துவிடவேண்டும். சணப்பையை ஒரு வட்டப்பாத்திக்கு 50 கிராம் என்ற அளவில் விதைத்து பூக்கும் தருணத்தில் கொத்தி மண்ணோடு கலந்துவிடவேண்டும். மேலும் தென்னை நார்க்கழிவு அல்லது தென்னை மட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட மண்புழு உரம் மற்றும் மற்ற மக்கிய கழிவுகளையும் இட்டு சுழற்சி செய்யலாம்.

7. பயிர் இடைநேர்த்தி மற்றும் களை நிர்வாகம்

தென்னந்தோப்புகளில் வருடம் இரண்டு முறை அதாவது ஆடி மாதத்தில் ஒரு முறையும் மற்றும் மார்கழி மாதத்தில் ஒரு முறையும் உழவு செய்வதன் மூலம் களைகளை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கலாம். மேலும் இது வேர்களில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, புதிய வேர்கள் விட தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது.

இராசயன களைக் கட்டுப்பாடு

இருவிதை இலைகள் நிறைந்த தோப்புகளில் களை முளைப்பதற்கு முன் அட்ரசின் களைக்கொல்லியை செயல்படும் இராசயனமாக ஒரு கிலோ அளவில் ஒரு எக்டருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம். புல் வகை மற்றும் கோரை வகை களைச் செடிகள் உள்ள தோப்புகளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி கிளைபோசேட் என்னும் களைக்கொல்லி மற்றும் 20 கிராாம் அம்மோனியம் சல்பேட் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

8. ஊடுபயிர் சாகுபடி

தென்னந்தோப்பில் சாகுபடி செய்ய ஊடு பயிரைத் தேர்வு செய்யும்போது அந்தப்பகுதி தட்பவெப்பநிலை, மண் மற்றும் அந்த விளைப்பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் தென்னை மரங்களின் இலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அ. ஏழு ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடைய மரங்கள்

அந்தந்தப் பருவநிலை, மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப ஐந்தாண்டுகள் வரை, ஒரு பருவப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை பயிர் செய்யலாம். கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

ஆ. 7-20 ஆண்டுகள் வயதுள்ள தோப்புகள்

இந்தக் காலக்கட்டத்தில் பசுந்தாள் உரம் மற்றும் தீவனப்பயிர்களை (நேப்பியர் மற்றும் கினியா புல்) பயிர் செய்யலாம்.

இ. 20 ஆண்டுகளுக்கு மேலான வயதுடைய மரங்கள் உள்ள தோப்புகளில்

கீழ்க்காணும் பயிர்களை சாகுபடி செய்யலாம். (ஊடுபயிர் செய்ய தோப்புக்குள் சூரிய ஒளி 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கவேண்டும்)

  1. ஒரு பருவப்பயிர் நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைக் கிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
  2. இருபருவப் பயிர் வாழையில் பூவன் மற்றும் மொந்தன் இரகங்கள் ஏற்றவைகளாகும்.
  3. பல ஆண்டு பயிர்கள் கோகோ, மிளகு (பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா) ஜாதிக்காய் மற்றம் வனிலா.

இதில் கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவை பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு ஏற்றவை. வனிலா பயிரிட, நோய் தாக்குதல் இல்லாத நடவு தண்டைப் பயன்படுத்தவேண்டும். மேலும் நட்டபின் நோய் தாக்குதல் வராமல் பாதுகாக்கவேண்டும்.

பல பயிர் அமைப்பு

  1. தென்னை ரூ வாழை ரூ சிறுகிழங்கு ரூ வெண்டை ஆகியவை கிழக்குப் பகுதிகளுக்கு ஏற்றவை.
  2. தென்னையுடன் வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவற்றை மேற்குப் பகுதியில் பயிர் ிடலாம்.

மேலே கூறிய பயிரமைப்புகளில் ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு உரம் மற்றும் நீர்ப்பாசனத்தைக் கடைபிடிக்கவேண்டும்.

தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்

1. வளர்ந்த தென்னந்தோப்புகளை புதுப்பித்தல்

பெரும்பான்மையான தோப்புகளின் குறைந்த மகசூலுக்கான காரணங்கள் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் மற்றும் உரம், நீர் ஆகியன சரிவர கிடைக்கப்பெறாததேயாகும். இந்தத் தோப்புகளை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேம்படுத்தலாம்.

அ) அடர்ந்த தோப்புகளில் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல்

அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தில் பல மரங்கள் வருடத்திற்கு இருபதிற்கும் குறைவான காய்களையே தருகின்றன. இவ்வகை மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். குறைந்த மகசூல் கொடுக்கும் மரங்களை அப்புறப்படுத்துவதோடு நிகர இலாபத்தையும் அதிகரிக்கலாம். குறைந்த மகசூல் கொடுக்கும் மரங்களை அப்புறப்படுத்தியபின் ஒரு எக்டருக்கு 175 மரங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆ. போதுமான அளவு உரம் மற்றும் நீர் அளித்தல்

பரிந்துரை செய்யப்பட்ட உரம் ரூ. உரம் நீர் ரூ. சாகுபடி முறைகளை பின்பற்றுவதன் மூலம் தென்னந்தோப்புகளில் மகசூலை அதிகரிக்கலாம்.

2. பென்சில் முனை குறைபாடு

நுண்ணூட்டசத்து குறைபாட்டின் காரணமாக நுனிப்பகுதி சூம்பிப் போய் இலைகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும். இலையின் அளவும் பெருமளவில் குறைந்து இலைகள் வெளுத்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களோடு போராக்ஸ், துத்தநாக சல்பேட், மெக்னீசியம் சல்பேட், இரும்பு சல்பேட், தாமில சல்பேட் ஆகிய ஒவ்வொன்றும் 225 கிராம் அளவும் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் அளவும் எடுத்து 10 லிட்டர் நீரில் கரைத்து 1.8 மீட்டர் அரை வட்டப்பாத்திகளில் ஊற்றவேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் இந்தக்குறைபாட்டை சரி செய்துவிடலாம். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் புதிய நாற்றுக்களை நடவு  செய்யலாம்.

3. குரும்பை உதிர்தல்

குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.

  1. அதிக கார அல்லது அமில நிலை
  2. வடிகால் வசதி இல்லாமை
  3. கடும் வறட்சி
  4. மரபியல் காரணங்கள்
  5. ஊட்டச்சத்து குறைபாடு
  6. மகரந்தச் சேர்க்கை இல்லாமை
  7. உறார்மேன் குறைபாடு
  8. பூச்சிகள்
  9. நோய்கள்

இவற்றை சரிசெய்யும் வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

அ) மண்ணின் கார அமிலத்தன்மையை சரிசெய்தல்

மண்ணின் அதிகப்படியான கார அல்லது அமிலத்தன்மை குரும்பை உதிர்வதற்கான காரணமாக இருக்கலாம். மண்ணின் கார அமில நிலை 5.5க்கும் குறைவாக இருப்பது அதிக அமில நிலைக்கான அறிகுறியாகும். இதனை சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம். கார அமில நிலை 8.0க்கும் அதிகமாக இருப்பது மண்ணில் அதிகமான காரத்தன்மையைக் குறிக்கும். இதனை ஜிப்சம் சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம்.

ஆ) போதுமான வடிகால் வசதி அமைத்தல்

தென்னை மரங்களில் நீர் வடிகால் வசதி இல்லாவிட்டால், அதன் வேர்கள் காற்றில்லாமல் மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் குரும்பைகள் உதிரும். உரிய இடங்களில் வடிகால் வாய்க்கால்களை அமைத்து மழைக்காலத்தில் எஞ்சிய நீலை வெளியேற்றவேண்டும்.

இ) நீர் தேங்கி நிற்கும் இளந்தென்னந்தோப்புகளில் மேலாண்மை

  1. இளந்தென்னங்கன்றுகள் நடப்பட்ட இரு வரிசைகளுக்கிடையே பருவமழை தொடங்கும் பருவத்தில் ஒரு நீண்ட குழி அமைக்கவேண்டும். குழியின் அளவு மூன்று மீட்டர் அகலமும், 30-45 செ.மீ ஆழமும் உள்ளபடி வயலின் முழு நீளத்திற்கு அமைக்கவேண்டும். இதிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை கன்றுகள் நட்பபட்ட வரிசைகளிலே ஒரு மேடான பாத்தி உருவாகும்படி போடவேண்டும்.
  2. இளங்கன்றுகளை சுற்றிலும் 1.2 மீட்டர் அகலமும் 30-45 லிட்டர் உயரமும் கொண்ட மணற்குன்றுகளை அமைக்கவேண்டும்.

ஈ) மரபியல் காரணங்கள்

சில மரங்களில் போதுமான உர, நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தபோதிலும் குரும்பை உதிர்வது தொடர்ந்து கொண்டிருக்கும்.இது விதைத் தேங்காய் எடுக்கப்பட்ட விதை மரத்தின் வழியே வந்த குறைபாட்டின் அறிகுறியாகும். ஒன்று போல நல்ல மகசூலை தரும் மரங்கள் கிடைக்க விதைக்காய்களுக்கு தரமான விதை மரத்தை தெரிவு செய்யவேண்டும் என்ற தேவையை இது உணர்த்தும்.

உ) ஊட்டசத்து குறைபாடு

முற்றிலுமாகவோ அல்லது போதுமான அளவிலோ உரமிடாலிருப்பதால் குரும்பைகள் உதிரும். பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை குறித்த காலத்தில் இடுவது குரும்பைகள் உதிர்வதைக் குறைப்பதற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. தென்னையில் ஒல்லிக்காய்களை சரிசெய்ய பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுவதுடன் மரத்திற்கு 2 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் மற்றும் 200 கிராம் போராக்ஸ் கூடுதலாக இடவேண்டும்.

ஊ) மகரந்த சேர்க்கை இல்லாமை

மகரந்து சேர்க்கை இல்லாததாலும் குரும்பைகள் மற்றும் தோப்பில் எக்டருக்கு பதினைந்து என்ற கணக்கில் தேனீ கூடுகளை ஏற்படுத்துவதால் கலப்பின சேர்க்கை அதிகரிக்கும். மேலும் தேனினால் கிடைக்கப்பெறும் கூடுதல் வருவாயினால் குறிப்பிட்ட பரப்பளவிற்குரிய நிகர லாபமும் அதிகரிக்கும்.

எ) உறார்மேன் பற்றாக்குறை

இனச்சேர்க்கை முடிந்த நிலையில் உள்ள பெண்பூக்கள், அதாவது குரும்பைகள், சில சமயங்களில் உதிரும். பாளை வெடித்த ஒரு மாதத்தில் மலர் கொத்தின் மீது 30 (அ) 20 (ஒரு லிட்டர் நீரில் 30 அல்லது 20) தெளிப்பதன் மூலம் காய்க்கும் சதவீதத்தை அதிகரிக்கலாம்.

ஏ) பூச்சிகள்

நாவாய்ப்பூச்சி தாக்குவதால் குரும்பைகள் உதிரலாம். இதனை மீதைல் டெமட்டான் 0.025 சதம் (1 மிலி லிட்டர் தண்ணீர்) அல்லது டைமெதோயேட் 0.03 ( 1 மில்லி லிட்டர் தண்ணீர்) சதம் போன்ற ஊடுருவி பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதன் மூலம் குறைக்கலாம்.

தென்னை விதை மரத்தை தேர்வு செய்தல் நாற்றாங்கால் மேலாண்மை

தென்னை போன்ற பல வருடப் பயிரில், அதிக மகசூல் தென்னை மரத்திலிருந்து விதைக் காய்களைத் தேர்ந்தெடுப்பதன் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கீழ்க்கண்ட குறிப்புகளை நினைவில் கொள்க.

தென்னை விதை மரத்தேர்வு

  • அதிக மகசூல் தரும் மரங்களை பெருமளவில் கொண்டுள்ள, மற்றும் ஒன்றுபோல காய்க்கும் தன்மையுடைய தோப்புகளை விதைக் காய்க்காக தெரிவு செய்யவேண்டும். வீட்டுப்பக்கம் மாட்டுத் தொழுவம், உரக்குழிகளில் மிக நல்ல சூழ்நிலையில் வளரும் மரங்களைத் தவிர்க்கவேண்டும்.
  • வருடத்திற்கு நூறு காய்களுக்குக் குறையாமல் அதிக மகசூல் கொடுக்கும் மரங்களையே விதைக்காய்களுக்காக தெரிவு செய்யவேண்டும். அடுத்தடுத்து அதிகமாகவும், குறைவாகவும் காய்க்கும் மரங்களைத் தவிர்க்கவேண்டும். நடுத்தர வயதுடைய அதாவது 25 முதல் 10 வயதுடைய மரங்களையே தெரிவு செய்யவேண்டும். பதினைந்து வயது மரங்களையும், அவை நிலையான நல்ல மகசூலை தருமாயின் தெரிவு செய்யலாம்.
  • விதைக்காய் மரங்கள் நேரான தண்டு, அதிகப்படியான இலை மற்றும் பாளை, சிறிய, பருத்த தண்டு, அதிகப்படியான காய்பிடிக்கும் தன்மை (சதவிகிதம்) நடுத்தர காய்கள், அதிக பருப்பு, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருத்தல்வேண்டும். நல்ல, தொடர்ந்து காய்க்கும் ஒரு விதை மரமானது சராசரியாக மாதத்திற்கு ஒரு இலை மற்றும் ஒரு பாளையை, இலையும் தண்டுப்பகுதியும் சேரும் இடத்தில் உற்பத்தி செய்யும் எந்த ஒரு சமயத்திலும் ஒரு மரத்தில் பன்னிரெண்டு குலைகள் பல்வேறு  முதிர்ச்சியடைந்த நிலைகளில் காணப்படும்.
  • நல்ல தரமான கன்றுகள் கிடைக்க விதைக்காய்களை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் அறுவடை செய்யவேண்டும். அறுவடை செய்யப்படவுள்ள விதைக்காய் குலைகளை ஒரு கயிற்றின் மூலம் கட்டி காய்கள் சேதமடையாதவாறு கீழே இறக்கவேண்டும்.
  • விதைக்காய்கள் உருண்டை வடிவிலும், விரலால் தட்டினால் உலோக சத்தம் கொடுப்பவைகளாகவும் இருக்கவேண்டும். மகரந்தச் சேர்க்கை முடிந்து 12 மரத்தில் முழுமையாக முற்றிய காய்கள் உருவாகிவிடும்.
  • நல்ல தரமான கன்றுகளைப் பெறுவதற்கு நெட்டை ம்றறம் வீரிய ஒட்டு இரக விதைக்காய்களை காற்றுபடும்படி ஒர மாதத்திற்கு தொடர்ந்த இரண்டு மாதத்திற்கு மணல் பதனத்திலும் வைத்திருக்கவேண்டும். குட்டை இரகங்கள் ஒரு மாதத்திற்கு குறைவாக காற்றுபடும்படி வைத்தபின் இரண்டு மாதங்கள் மணலில் வைக்கலாம்.

நாற்றாங்கால் மேலாண்மை

  1. நாற்றாங்காலுக்கு தேர்ந்தெடுக்கும் பகுதி நல்ல வடிகால் வசதியுள்ள இடமான இருக்கவேண்டும். நாற்றாங்கால் திறந்த வெளியிலோ அல்லது நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளிலோ அமைக்கவேண்டும்.

 

  1. விதைக்காய்களை நீளமாக, அகலம் குறைவான பாத்திகளில் ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளிவிட்டு நடவேண்டும். ஒரு வரிசைக்கு ஐம்பது காய்கள் வீதம் நேராகவோ அல்லது சாய்வாகவோ ஒரு பாத்திகளில் ஐந்து வரிசைகள் நடவேண்டும்.
  1. நாற்றாங்கால் பாத்திகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

 

  1. தென்னை நாற்றாங்காலில் களைகளை கட்டுப்படுத்த சணப்பு இருமுறை பயிரிடுவதும் (ஒவ்வொன்றையும் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யவும்) தொடர்ந்து ஆறாவது மாதத்தில் ஒரு கைக்கிளையெடுப்பதும் மிகவும் உகந்ததாக உள்ளது. அதோடு சணப்பு, வளர்ந்த தென்னை மரங்களுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது.
  1. பாத்தி ஓரங்களில் அகத்தி அல்லது குபாபுல் ஆகியவற்றை நட்டு நாற்றாங்காலுக்கு நிழல் உண்டாக்கவேண்டும்.

 

  1. விதைக்காய்கள் நட்ட ஆறு முதல் எட்டு வாரங்களில் முளைக்க ஆரம்பித்து, ஆறு மாதங்கள் வரை முளைப்புத் தன்மை தொடர்கிறது. நட்ட ஐந்து மாதங்களுக்குள் முளைத்த கன்றுகளையே தேர்வு செய்யவேண்டும். முளைக்காத விதைக்காய்களை தோண்டி எடுத்துவிடவேண்டும்.
  1. நாற்றாங்காலில் பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் கண்காணிக்கவேண்டும்.

 

  1. நடவுக்குப்பின், ஒன்பது முதல் பன்னிரெண்டு மாதங்கள் ஆன கன்றுகளை தேர்வு செய்யவேண்டும். விரைவில் முளைப்பிற்கு வந்த கன்றுகள், கழுத்துப்பகுதி நன்கு பருமனாக உள்ள கன்றுகள் மற்றும் விரைவில் இலை துணுக்குகள் பிரிந்து கன்றுகளையே தேர்வு செய்யவேண்டும். காக்காய் மூக்கு பிள்ளை கன்றுகளை (அதாவது அப்போது தான் முளைவிட்டுள்ள விதைக்காய்கள்) தேர்வு செய்யக்கூடாது.
  1. நாற்றாங்காலிலிருந்து நாற்றுக்களை மண்வெட்டியால் தோண்டி எடுக்கவேண்டும். இலைகளையோ, தண்டையோ பிடித்து நாற்றுக்களை வெளியே இழுக்கக்கூடாது.

 

  1. தேர்ந்தெடுக்கும் தென்னை நாற்றுக்களில் 6 இலைகளும், கழுத்துப்பகுதி சுற்றளவு 10 செ.மீ ஆகவும் இருக்கவேண்டும்.

 

 
 
 
 
 
 
 
     
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013

Fodder Cholam