|| | | ||||
 

பயிர் காப்பீட்டுதிட்டம் :: தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்

gg gg

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

திட்டத்தின் குறிக்கோள்கள்

  • புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும் போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி அளித்தல்.
  • விவசாயத்தில் முற்போக்கான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் வழிமுறைகள் மற்றும் அதிக விலையுள்ள இடு பொருட்கள் உபயோகப்படுத்த ஊக்கமளித்தல்.
  • பண்ணை வருமானத்தை நிலைப்படுத்துதல் (பொதுவாக பெரும் பயிர் சேதம் ஏற்படும் வருடங்களில் பண்ணை வருமானத்தை உறுதிப்படுத்துதல்).
  • உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை பெருக்குதல் மற்றும் ஊக்கமளித்தல்.

திட்டத்தின் முக்கிய விவரங்கள்:

1. காப்பீடு செய்யப்படும் பயிர்கள்:
  • நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயிறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை.
  • இதர வருடாந்திர தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் மூன்று வருடத்திற்குள்ளாக இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்.

2.     திட்டத்தில் சேர்க்கப்படும் விவசாயிகள்:

  • காப்பீடு செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் (குத்தகைக்கு பயிரிடுவோர் உட்பட) இத்திட்டத்தில் சேரலாம்.
  • பயிர்க்கடன் பெறுபவர்கள் - கட்டாயத்தின்  அடிப்படையில்(Compulsory Basis)
  • பயிர்க்கடன் பெறாதவர்கள் - விருப்பத்தின் அடிப்படையில் (Voluntary Basis)

3.  காப்பீடு செய்யப்படும் இழப்புகள்/சேதங்கள்:

  • புயல், வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, பூச்சி, நோய், இயற்கைத் தீ, மின்னல்

4. காப்பீடு செய்யப்படும் தொகை (Sun Insured)

  • பயிர்க் கடன் வரை குறைந்தபட்ச காப்பீடு
  • கடன் பெறுபவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் உத்திரவாத மகசூலின் மதிப்பிÞ வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரிலும் கூடுதலாக காப்பீட்டுத் தொகை (Actuarial Premium) செலுத்தி சராசரி மகசூலின் 150% மதிப்பு வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • உத்திரவாத மகசூல் அளவை விட கூடுதலாக காப்பீடு செய்யப்படும் தொகையை அதிகரிக்க விரும்புவோர் அதற்காக அதிகப்படியான காப்பீட்டுக் கட்டணத்தை (Extra Premium at Actuarial rates) பெறா விவசாயிகளுக்கான கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும்.

5. காரீப், ராபி பருவ காலத்திற்கு பயிர்களுக்கு ஏற்ப கட்டண விகிதம் மாறுபடும்:
          வருடாந்திர தோட்டக் கலை மற்றும் பணப்பயிர்கள், இன்சூரன்ஸ் தொழில் நுட்ப   முறைப்படி கணிக்கப்பட்ட காப்பீட்டுக் கட்டணம் (Actuarial rates) வசூலிக்கப்படும்.

6. காப்பீட்டுத் தொகை மானியம்:

  • விவசாயிகளுக்கு காப்பீட்டு கட்டணத் தொகையில் வழங்கப்படும் அரசு மானியம் அவ்வப்பொழுது அறிவிக்கப்படும்.

7.         திட்டம் செயல்படும் முறை:
(அ) பரவலான பாதிப்புகள்:

  • பரவலான பாதிப்புகளுக்கு இத்திட்டம் பகுதிவாரி (Area Approach) அடிப்படையில் செயல்படுகிறது.
  • ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் இத்திட்டம் செயல்படும்.
  • வரையறுக்கப்பட்ட பகுதியானது கிராம பஞ்சாயத்து அல்லது பிர்கா அல்லது தாலுக்கா அல்லது கோட்டம் என்று மாநில அரசால் தீர்மானிக்கப்படும். தற்போது இத்திட்டமானது கோட்ட (Block) அளவில் செயல்படவுள்ளது.

8. உத்திரவாத மகசூல் (Threshold yield)

  • ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தின் சராசரி மகசூலை உறுதியளிக்கப்பட்டு நஷ்டஈட்டு விகிதத்தோடு (60%, 80%, 90%) பெருக்கும் போது கிடைக்கும் மகசூலின் அளவாகும்.
  • உத்திரவாத் மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிர்களும் ஐந்து வருட சராசரி மகசூலும் எடுத்துக் கொள்ளப்படும்.

9.         சாகுபடி செய்யும் பயிர்களை எவ்வாறு காப்பீடு செய்யலாம்?

  • காப்பீடு செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்வதற்காக பயிர்கடன் விவசாயிகள் (Loanee Farmers) தாங்கள் கடன் வாங்கும் வங்கியிலேயே கட்டயமாக பயிர்காப்பீடு செய்யப்படுவர்.
  • பயிர்கடன் வாங்காத ஏனைய விவசாயிகள் (Non Loanee Farmers)  வங்கிகளில் தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.

10.       இழப்பீடு கணித்தல் மற்றும் இழப்புத் தொகை வழங்குதல்:
(Loss Assessment and Payment of Indenmity)

  • பரவலான பாதிப்புகள்: ஒரு குறிப்பிடப்பட்ட பகுதியில் ( தற்போது வட்டாரம் - Block) காப்பீடு செய்யப்பட்ட பயிரின் மகசூல் (அதாவது மாநில அரசு நடத்தும் பயிர் அறுவடை சோதனைகளின் மூலம் கணிக்கப்பட்ட மகசூல்) உத்திரவாத மகசூலின் அளவை காட்டிலும் குறைவாக இருந்தால் அப்பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பு ஏற்பட்டதாக கருதப்பட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்.
  • உத்திரவாத மகசூலை ஒப்பிடும் போது நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி நஷ்டஈடு வழங்கப்படும்.

11.     திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம்:

  • பயிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அதன் மூலமாக பயிர் உற்பத்தியை அதிகப்படுத்துதல்.
  • விவசாயிகளை முற்போக்கான சாகுபடி முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்த ஊக்குவித்தல்.
  • விவசாய கடன் வழங்கும் முறையினை தடையின்றி வைத்திருக்க உதவுதல்.
  • காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சமுதாயம் முழுவதற்கும் பயன் ஏற்படும் படி செய்தல். இத்திட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்தல், வேலை வாய்ப்பு பெருகுதல், அங்காடி வரி மற்றும் இதர வரிகளின் மூலம் அரசுக்கு வருமானம் முதலியவை ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி காண உதவுதல்.

12.     திட்டத்தினால் ஏற்படும் பயன்கள்

  • பயிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அதன் மூலமாக பயிர் உற்பத்தியை அதிகப்படுத்துதல்.
  • விவசாயிகளை முற்போக்கான சாகுபடி முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்த ஊக்குவித்தல்.
  • விவசாய கடன் வழங்கும் முறையினை தடையின்றி வைத்திருக்க உதவுதல்.
  • காப்பீடு செய்த் விவசாயிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சமுதாயம் முழுவதற்கும் பயன் ஏற்படும்படி செய்தல். இத்திட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்தல், வேலை வாய்ப்பு பெருகுதல், அங்காடி வரி மற்றும் இதர வரிகளின் மூலம் அரசுக்கு வருமானம் முதலியவை ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி காண உதவுதல்.

13.     இத்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இதரதுறைகள்
          மத்திய அரசு - (வேளாண் மற்றும் கூட்டுறவு துறை), மாநில அரசு - (வேளாண் துறை புள்ளியியல், கூட்டுறவு, தோட்டக்கலைத்துறை), வங்கிகள் - (ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி, வர்த்தக மற்றும் கிராம வங்கிகள்).

முக்கிய குறிப்பு
கடன் பெறா விவசாயிகளின் விண்ணப்பம் வங்கிகளில் நிராகரிக்கப்பட்டால் உடன் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவிலான பயிர் காப்பீட்டு கண்காணிப்புக்குழு/ வேளாண்துறை இணை இயக்குநர் அவர்களுக்கு தெரிவிக்கவும்.

விவசாயிகளின் நலனை நாடும்
மண்டல மேலாளர்
அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட்.,
(பழைய எண். 156), புதிய எண். 323, ஆந்திரா இன்சூரன்ஸ் பில்டிங்
முதல் தளம், தம்புசெட்டி தெரு, பாரிமுனை, சென்னை - 600 001
Phone : 044 - 42053303 / 42051349 / 42051350
E-mail : Chennai.ro@aicofindia.org Website : www.aicofindia.org

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008