|| | ||||
 

அறுவடைக்குப்பின் சார் தொழில் நுட்பம் :: முட்டை - மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்

 
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

பொறித்த முட்டை

  1. பொறித்த முட்டையின் வடிவமானது வெள்ளைக்கரவின் தடிமனைப் பொறுத்து அதன் வேகும் போது அதன் வெப்பநிலை பொறுத்தும் அமைகிறது. முட்டைப்  பொறிக்க தேவையான வெப்பநிலை 126-137 டிகிரி செ.

கஸ்டர்ட்

  • கஸ்டர்ட்டில் முட்டையானது கெட்டியாக்கும் முகவர் ஆக செயல்படுகிறது. உண்மையான கஸ்டர்டில் முட்டை, பால், சர்க்கரை மற்றும் மணமூட்டப்பட்ட கஸ்டர்ட்டில் இரண்டு வகையாக கலக்கக்கூடிய மென்மையான கஸ்டர்ட்.

முட்டை வெள்ளைக் கரு நுரை

  1. முட்டை வெள்ளைக் கரு நுரை முக்கியப் பங்கு வகிக்கின்றது. நிறைய உணவுகளில் ஏனென்றால் இது மென்மையான தன்மை கொண்டதாக மாற்ற உதவுகிறது.
  2. ஆம்லேட் முட்டைத்தோசை மற்றும் soffles.
  3. ஆம்லேட் நன்கு நுரை அல்லது சாதாரணமாக முழு முட்டை  மஞ்சள் கரு தனியாக பிரிக்காமல் செய்யப்படுவது நுரைக்கச் செய்த ஆம்லெட் மஞ்சள் கரு வெள்ளைக் கரு தனித்தனியாக அடித்து நுரையச் செய்து மெதுவான தீயில் முழுக்க வேக வைப்பது.

சபுள்ஸ்

இது நுரைக்க செய்த ஆம்லெட் போலவே ஆனால் தடிமனான வெள்ளை சாஸ் ஆம்லெட் கீழ்ப்புறம் வைத்து, அதனுடன் துருவிய காய்கறிக் கூழ், அல்லது அரைத்த மாமிசம் சேர்க்கப்படும். டெஸர்ட் சபுள்ஸ் இனிப்பு சுவையுடன் அதில் எலுமிச்சை, ஸ்ட்ராபெரி மற்றும் சபுள்ஸ் ஆவியில் வேக வைக்கப்பட்டு அடுமனை செய்யப்படும் கிரீம்ஸ் என்பது மெல்லிண வகை கேக்குகளில் அதிக அளவு முட்டை சேர்க்கப்படுகிறது. இதில் மீன், மாமிசம், கோழிக்கறி, பாலாடைக்கட்டி, காய் மற்றும் பழங்கள் வைத்து நிரப்பப்படுகிறது. கிரீப்ஸ் இனிப்புகளுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.

உடைத்த முட்டை
உணவு சமைப்பதற்கு மற்றும் பரிமாற ஒரே பாத்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. பாத்திரத்தில் வெண்ணெய் (அ) மார்க்கரைன் பயன்படுத்தி தடவி அதில் முட்டை உடைத்து, பாத்திரத்தை ஓவனில் வைத்து சமைக்கவும். முட்டை வேகும் வரை கவனமாக பாதுகாக்கவும்.

முட்டை பவுடர்
உலரவைத்தல் அதிகமாக பயன்படுத்தப்படும் முறையாகும். முட்டை வெள்ளைக்கரு மஞ்சள் கரு அல்லதுமுழு முட்டையை சுத்திகரிக்கப்பட்டு பிறகு உலர வைத்தல் முறைகளில் உலர்த்துவகைகள் பயன்படுத்தி உலர வைக்கப்படுகிறது. பொதுவாக ஸ்பேரேடிரையர் பயன்படுத்தி பவுடராக்கப்படுகிறது. திரவமாக உள்ள முட்டை ஆட்டோமைசர் வழியாகச் செலுத்தி மென்மையான துகள்களாக தூவச்செய்து அதில் சூடான காற்று செலுத்தப்பட்டு அவை உலர்ந்த துகள்களாக மாற்றப்படுகிறது. இவை ஆறவைத்து பேக் செய்யப்படுகிறது. வெள்ளைக் கருவில் சிறிதளவு குளுக்கோஸ், முட்டை பவுடர்  பொன்னிறமாவதைத் தடுக்க, ஈஸ்ட் சேர்த்து புளிக்க வைத்து உலர வைக்கப்படுகிறது.

முட்டை ஊறுகாய் தயாரிப்பு

முட்டைகள்

தண்ணீரில் கழுவுதல்

2 சதவீதம் சேர்த்து 2 சதவிகிதம் சோடியம் பைகார்பனேட் 20நிமிடம் 80
டிகிரி செ வெப்பநிலையில் வேகவைத்தல்

ஆறவைத்து தோலுரித்தல்

சுத்திகரிக்கப்பட்ட முள்கரண்டிக் கொண்டு + முட்டை சுத்தம் செய்த கத்தியால் வெட்டவும்.
(ஊறுகாய் கூட்டு சேர்க்கும் முன்)

சிறுதுளையிடுதல்

எண்ணெய் சூடு செய்யவும்

மற்ற பொருட்களைச் சேர்க்கவும் மற்றும் வறுக்கவும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் 0.1 சதவிகிதம்

சேமித்தல்

வினிகர்8 சதவிகிதம்

முட்டை ஊறுகாய்

தேவையான பொருட்கள் தேவையான அளவு
கோழி முட்டை காடை முட்டை
முட்டை 2 எண்ணிக்கை 6 எண்ணிக்கை
மிளகாய்த்தூள் 7 கிராம் 7 கிராம்
இஞ்சி 2 கிராம் 2 கிராம்
பூண்டு 2 கிராம் 2 கிராம்
மிளகு 2 கிராம் 2 கிராம்
கடுகுப் பொடி 1 கிராம் 1 கிராம்
பட்டை 1 கிராம் 1 கிராம்
உப்பு 5 கிராம் 5 கிராம்
எண்ணெய் 15 கிராம் 15 கிராம்

செய்முறை

  • முட்டையை தண்ணீரில் கழுவி 2 சதவிகிதம் உப்பு மற்றும் சோடியம் பை கார்பனேட் சேர்த்து 80 டிகிரி செ வெப்பநிலையில் 20 நிமிடம் வேக வைத்து தோல் உரிக்கவும்.
  • காடை முட்டையை சுத்திகரிக்கப்பட்ட  முள்கரண்டி கொண்டு சிறுதுளையிடவும். கோழி முட்டைகளை கத்தியால் வெட்டவும்.
  • எண்ணெய் சூடு செய்து அதில் மசாலா வகைகளைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • வேக வைத்த முட்டைகளை இதனுடன் சேர்க்கவும்.
  • பாதுகாப்பான் சேர்த்து பாட்டிலில் போட்டு மூடவும்.

முட்டை புட்டிங்ஸ்

தேவையான பொருட்கள் தேவையான அளவு
கோழி முட்டை காடை முட்டை
முட்டை 2 எண்ணிக்கை 8 எண்ணிக்கை
பால் 2 கப் 2 கப்
சர்க்கரை 10 டீஸ்பூன் 10 டீஸ்பூன்
வெண்ணிலா மணமூட்டி சிறு துளிகள் சிறு துளிகள்

செய்முறை

  1. பால் சூடு செய்து சர்க்கரை சேர்த்து ஆற வைக்கவும்.
  2. முட்டையுடன் எஸன்ஸ் சேர்த்து அடித்து நுரைய வைக்கவும்.
  3. இதனுடன் குளிர்ந்த பால் சேர்க்கவும்.
  4. புட்டிங் அச்சுக்கள்(மோல்ட்) ஊற்றவும்.
  5. 30 நிமிடம் ஆவயில் வேக வைக்கவும் (பிரஷர் குக்கர்) பின்பு ஆறவிடவும்.
  6. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரவைக்கவும்.

முட்டை கஸ்டர்டு

தேவையான பொருட்கள் தேவையான அளவு
கோழி முட்டை காடை முட்டை
முட்டை 2 எண்ணிக்கை 8 எண்ணிக்கை
பால் 2 கப் 2 கப்
சர்க்கரை 10 கிராம் 10 கிராம்
உப்பு சுவைக்கேற்ப சுவைக்கேற்ப
வெண்ணிலா மணமூட்டி சிறிதளவு சிறிதளவு

செய்முறை

  1. சுடு தண்ணீர் பாத்திரத்தின் உள்ளே பால் காய வைக்கவும்.
  2. எஸன்ஸ் சேர்த்து முட்டையை அடிக்கவம். உப்பு மற்றும் சர்க்கலை சேர்க்கவும்.
  3. முட்டைக் கலவையுடன் பாலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கலக்கவும்.
  4. இந்தக்கலவையை கஸ்டர்ட் கப்பில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும்.

முட்டை  சாப்ஸ்

தேவையான பொருட்கள் தேவையான அளவு
கோழி முட்டை காடை முட்டை
முட்டை 2 எண்ணிக்கை 12 எண்ணிக்கை
பெரியவெங்காயம் 2 எண்ணிக்கை 2 எண்ணிக்கை
பச்சை மிளகாய் 2 எண்ணிக்கை 2 எண்ணிக்கை
தக்காளி 3 எண்ணிக்கை 3 எண்ணிக்கை
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் அரை டீஸ்பூன்
கடலை எண்ணெய் 50 மிலி 50 மிலி
கடுகு தாளிக்க தாளிக்க

செய்முறை

  1. முட்டையை வேகவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
  2. தக்காளி, மிளகாய், வெங்காயம் சிறுதுண்டுகளாக்கவும்.
  3. எண்ணெய் சூடு செய்து தாளிக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
  5. 2 நிமிடம் வேகவைத்து அதனுடன் முட்டைத் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும்.

முட்டை போண்டா

தேவையான பொருட்கள் தேவையான அளவு
கோழி முட்டை காடை முட்டை
முட்டை 2 எண்ணிக்கை 12 எண்ணிக்கை
கடலை மாவு 100 கி 100 கி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி 1 தேக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப சுவைக்கேற்ப
எண்ணெய் பொரிக்க பொரிக்க

செய்முறை

  1. முட்டையை வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
  2. கடலைமாவு சலித்து உப்பு மற்றும் மிளகாய்த்தூள் அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். உரித்த முட்டையை மாவினுள் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

முட்டை கட்லெட்

தேவையான பொருட்கள் தேவையான அளவு
கோழி முட்டை காடை முட்டை
முட்டை 3 எண்ணிக்கை 12 எண்ணிக்கை
கொத்தமல்லி தழை 2 எண்ணிக்கை 2 எண்ணிக்கை
பொடியாக நறுக்கிய வெங்காயம் 5 கிராம் 5 கிராம்
உப்பு மற்றும மிளகு அரைத் தேக்கரண்டி அரைத் தேக்கரண்டி
பச்சை மிளகாய் நறுக்கியது 1 எண்ணிக்கை 1 எண்ணிக்கை
எண்ணெய்  பொரித்தெடுக்க பொரித்தெடுக்க

செய்முறை

  1. முட்டையை வேகவைத்து இரண்டாக வெட்டவும்.
  2. உருளைக்கிழங்கு வேகவைத்து மாவு போல் பிசையவும்.
  3. தாளிப்பதற்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் நறுக்கிய மிளகாய், கொத்தமல்லி, மிளகு மற்றும் உப்பு சேர்த்து மாவுப்போல பிசையவும்.
  4. முட்டையை சுற்றிலும் உருளைக்கிழங்கு மாவு பூசினாற்போல செய்து அடித்து வைத்த  முட்டையில் முக்கி பிரட் தூள் பிரட்டி எடுத்து தோசைக்கல்லில் சுடவும்.

முட்டை குழம்பு

தேவையான பொருட்கள் தேவையான அளவு
கோழி முட்டை காடை முட்டை
முட்டை 3 எண்ணிக்கை 12 எண்ணிக்கை
வெங்காயம் 2 எண்ணிக்கை 2 எண்ணிக்கை
தக்காளி 5  எண்ணிக்கை 5  எண்ணிக்கை
பூண்டு 2 எண்ணிக்கை 2 எண்ணிக்கை
இஞ்சி சிறுதுண்டு சிறுதுண்டு
பட்டை சிறுதுண்டு சிறுதுண்டு
கடுகு அரைத் தேக்கரண்டி அரைத் தேக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப சுவைக்கேற்ப
எண்ணெய் 25 மிலி 25 மிலி

செய்முறை

  1. தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து ஊற்றும் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  2. எண்ணெய் சூடு செய்து தாளிக்க, வெங்காயம் சேர்க்கவும்.
  3. தக்காளி சூப் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
  4. முட்டையைச் சேர்த்து குழம்புடன் 5 நிமிடம் வேக வைக்கவும்.

முட்டை ஸ்பான்ஞ்கேக்

தேவையான பொருட்கள்

தேவையான அளவு

கோழி முட்டை காடை முட்டை
முட்டை 3 எண்ணிக்கை 12 எண்ணிக்கை
சர்க்கரை 120 கிராம் 120 கிராம்
வெண்ணெய் 60 கிராம் 60 கிராம்
மைதா 120 கிராம் 120 கிராம்
பேக்கிங்பவுடர் சிறுதுளி சிறுதுளி
சுடுநீர் தேவைக்கேற்ப தேவைக்கேற்ப
மணமூட்டி சிறுதுளி சிறுதுளி

செய்முறை

  • முட்டையை நன்கு அடித்து மணமூட்டி சேர்க்கவும்.
  • மைதாவுடன் உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலிக்கவும்.
  • மாவு தயார் செய்ய வெண்ணெய், சர்க்கரை, மைதா மற்றும் நீர் மற்றும் அடித்த முட்டை ஆகியவற்றை சேர்க்கவும்.
  • இக்கலவையை கேக் அச்சுகளில் ஊற்றி, 167-190 டிகிரி செ வெப்பநிலையில் அடுமனையில் 20 நிமிடம் சூடு செய்யவும்.
  • சவ்வூடு பரவல் முறையில் இலந்தைப் பழம்  உலர வைத்தல்
  • இலந்தைப்பழம் உலரவைத்தல்
  • சவ்வூடு பரவல் முறையில் இலந்தைப்பழம் உலரவைத்தல்

இலந்தைப் பழம் கழுவுதல்

கண்காணித்தல்

எடை போடுதல்

முன்னெச்சரிக்கை முறைகள்

வேகவைத்தல் மற்றும் துளையிடுதல் ( 3 நிமிடம் கொதிநீரில் போட்டு 2 மிமீ அளவில் முன் கரண்டியால் துளையிடுதல்) 14 துளை 1 பழத்தில்

 கந்தகத்தில் மூழ்கவைத்தல் 3 கி கந்தகம் / கிலோ பழம் 30 நிமிடம்

 லைபீலிங் (தோலுரித்தல்) 5 சதவிகிதம் காஸ்டிக் சோடாவில் 2 நிமிடம் வைத்து 0.1 சதவிகிதம் சிட்ரிக் அமிலத்தில் கழுவவும்.


சவ்வூடு பரவல்

70 டிகிரி பிரிக்ஸ் 50 டிகிரி செ வெப்பநிலையில் 70 மணி நேரம் ஊறவைத்தல், வடிகட்டி, கழுவி, உலரவைத்தல்
எடை போடுதல்

கேபினட் உலர்த்துவானில் உலர்த்துதல்

50 டிகிரி செ வெப்பநிலையில் 15 மணி நேரம்

ஆறவைத்து, பாலித்தீன் பைகளில் அடைத்தல்

இலந்தைப் பழம் உலரவைத்தல்

இலந்தைப்பழம்கழுவுதல்

கண்காணித்தல் (அ) பரிசோதித்தல்

எடைபோடுதல்

முன்னெச்சரிக்கையாக முறைகள் கையாளுதல்
வேகவைத்து துளையிடுதல் ( 3 நிமிடம் கொதிநீரில் போட்டு 2 மிலி அளவுள்ள 16 துளைகள் இடுதல் சவ்வூடு பரவல் லைபீலிங் தோலிரித்தல் (5 சதவிகிதம் ஜாஸ்டிக் சோடாவில் 2 நிமிடம் போட்டு 0.1 சதவிகிதம்


70 டிகிரி பிரிக்ஸ் 50 டிகிரி வெப்பநிலையில் 70 மணி நேரம்

வடிகட்டி, கழுவுதல் மற்றும் மேல்புறம் உலரவைத்தல்

எடை போடுதல்

உலர்த்துவானில் உலர்த்துதல் (50 டிகிரி செ வெப்பநிலையில் 15 மணி நேரம்)

பாலித்தீன் பைகளில் போட்டு மூடுதல்

சேமித்தல்

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்