|| | | ||||
 

வெற்றிக் கதைகள் :: தொழில் முனைவோர்கள்

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

ஆடுகளின் மூலம் குறைந்த செலவத்திட்டத்தில் ஒரு இயற்கை ஈடுபொருள்

குறைந்த முதலீட்டில் குணபஜலம் மீன் வளர்ச்சி ஊக்கி

பார்த்தேன்.. வளர்த்தேன்..மலைத்தேன் !தேனீ வளர்ப்பில் திகைப்பான லாபம் !

மண்புழு உரத்தால் அதிக விளைச்சல்

மதிப்பூட்டப்படாத பயிர் உற்பத்தி பயனற்ற உற்பத்தியாகும் 

ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடுகள்


ஆடுகளின் மூலம் குறைந்த செலவத்திட்டத்தில் ஒரு இயற்கை ஈடுபொருள்

இரசாயன பூச்சி கொல்லிகளின் விலையேற்றமும், உரகங்களின் பற்றாக்குறையும் உள்ள இச்சூழலில் அதிக மகசூல் பெறுவது, விவசாயிகளுக்கு எளிதான காரியமன்று. குறைந்த ஈடுபொருள் செலவுதரும் எந்தவொரு மாற்று திட்டத்தையும் ஏற்ற விவசாயிகள் தயாராக உள்ளனர். அதே சமயம் அத்திட்டம் அதிக மகசூல் தருவதாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறான கருத்து கொண்ட விவசாயிகளுக்கு, இயற்கை செய்முறை திட்டம் சரியாக பயனளிக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல விவசாயிகள், இயற்கை முறை சாகுபடித் திட்டத்திற்கு மாறி வருகின்றனர். இதன் காரணம். இயற்கை ஈடுபொருட்களை குறைந்த முதலீட்டில், மிகுந்த பயனளிக்க  கூடியதாகவும், தாங்களாகவே தயாரிக்க முடியும். என்பதாலாகும்.

ஆட்டோட்டம்:
பரவலாக, அனைத்து கிராமங்களிலும் ஆடுகளை காணலாம். பசுவைப் போல் ஆடுகளின் சாணம், சிறுநீர் மற்றும் பாலும் சிறந்த மதிப்புடையதாகும். ஆடுகளின் பால் மற்றும் கழிவுகளின் மூலம் தயாரிக்கப்படும் உரம் ஆட்டோட்டம் எனப்படும் என்று முனைவர். நம்மாழ்வார் கூறுகிறார்.
ஆட்டோட்டம் தயாரிப்பில் உள்ள திரு.வி.எஸ்.அருணாச்சலம் கூறுகையில்” நெல், காய்கறிகள், பருத்தி, மிளகாய், நிலக்கடலை, எள் மற்றும் மலர் செடிகள் ஆகியவற்றிக்கு உபயோகிக்கும் ஆட்டோட்டம், ஒரு சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும். இது செடி வளர்ச்சியை தூண்டுவதுடன், இலைகள் மற்றும் பழப் பிஞ்சுகள் உதிர்வதை தடுத்து, அதிக எடையுள்ள, சுவையான பொருட்களை தரும்.

ஆட்டோட்டம் செய்முறை:
சுமார் ஐந்து கிலோ தூய ஆட்டு புளுக்கை, மூன்று லிட்டர் ஆட்டுச் சிறுநீர், 1.5 கிலோ கிராம் சோயா அல்லது நிலக்கடலை புண்ணாக்கு அல்லது அரைத்த உளுந்து அல்லது பாசிப்பயிர், ஆகியவற்றை ஒர் இரவு தண்ணீரில் ஊரவிடவேண்டும்.
பின்னர் சுமார் இரண்டு லிட்டர் ஆட்டின் பால், தயிர், இளநீர், கள், கரும்புச்சாறு மற்றும் ஒரு டசன் (dozen)பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்க்கவும்.
கள்ளுக்கு பதிலாக 50 கிராம் ஈஸ்ட்டை 2 லிட்டர் சுடு தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். அதே போல், கரும்புச்சாறுக்கு பதிலாக, 1 கிலோ வெல்லத்தை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கூட்டுப் பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் உருளை (drum)யில் வைத்து நன்கு கலக்கவும். அதை பதினான்கு நாட்கள் (இரண்டு வாரம்) நிழலில் வைத்து, பின் அக்கலவையை உபயோகிக்கலாம்

கரைசலை கிளரும் முறை:
ஒரு நாளுக்கு இரண்டு முறை, வலது பக்கமாக 50 முறையும், இடது பக்கமாக 50 முறையும் கிளர வேண்டும். பின் அந்த பிளாஸ்டிக் உருளையை (drum) பூச்சிகளோ, புளுக்களே முட்டை இடாதவாறு நல்ல பருத்தித் துணியைக் கொண்டு மூடிவிடவேண்டும். இந்த கரைசலை மேற்கண்டவாறு நன்கு கலந்து, முறைபடி பாதுகாத்து வைத்தால் ஆறு மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.
மேலும், இந்த கரைசல் சற்று அதிகமான அடர்த்தியில் காணப்பட்டால், இளநீர் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளலாம்.

அளவு முறை:
ஒரு ஏக்கர் நிலத்திற்கு, சுமார் இரண்டு லிட்டர் ஆட்டோட்டத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களுக்கு தெளிக்கவும். இக்கரைசலை தெளிக்க பயன்படுத்தும் முன், வடிகட்டி விட்டு பின் பயன்படுத்தலாம், இது தெளிப்பானின் ஒட்டைகளில் தடை இல்லாமல் தெளிக்க உதவும். மேலும், நல்ல விளைவு கிடைக்க, பூ பூக்கும் நேரத்திற்கும் காய் பிடிக்கும் நேரத்திற்கும் முன்னதாக பயன்படுத்தவும்.

தொடர்புக்கு:
திரு.வி.எஸ்.அருணாசலம்
இளகதிர் பண்ணை
P.வேளாவிபாளையம் அஞ்சல்
கோபிச் செட்டிபாளையம் வட்டம்
ஈரோடு 638 476
மின்னஞ்சல்: elunkathir@gmail.com
அலைபேசி: 9443346323
9487546323


குறைந்த முதலீட்டில் குணபஜலம் மீன் வளர்ச்சி ஊக்கி

கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் பல தீவிர மாற்றத்துற்Ì உள்ளாகியுள்ளது. சாகுபடியை பெருக்கும் எண்ணத்தில், அறிவற்று இராசயன உரங்களையும், பூச்சிகொல்லி தெளிப்பான்களையும் உபயோகித்து, விவசாயத்தை ஒரு வியாபார ரீதியான நடைமுறையாக மாற்றியுள்ளது.

கேள்விக்குறிய உண்மை:
இராசயனங்கள் அதிக மகசூல் தர உதவுகிறது எனில், விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் விரக்தியால் தங்கள் விளை நிலங்களை விற்பதும் ஏன், என்று கேட்கிறார், முனைவர் கமலாசனம் பிள்ளை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர், UK-NARDEP கன்னியாகுமரி, தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம், கோழிக்கொட்டுபோதையின் பெண் விவசாயியான திருமதி.தங்கம் கூறுகையில், முதலீட்டை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக லாபம் தரும் ஒரே தொழில் வேளாண்மையாகும் என்கிறார். மேலும் நெல், காய்கறி, பழவகைகள் என எவ்வகையினை விவசாயம் செய்தாலும், அவற்றை குறைந்த ஈடுபொருட்களை கொண்டு சிறந்த முறையில் பராமரித்தோம் எனில், அதிக லாபம் தரும்.

பல விவசாயிகள் காலங்காலமாக அங்கீகரிக்கப்பட்டு, பாரம்பரியம் செயல்முறை பருத்திவந்த பயிற்சிகளை மறந்துவிட்டனர். இரசாயனங்கள் அதிக மகசூல் தருவதைவிட, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகிறது என்பதை ஒவ்வொரு விவசாயியும் உணர்ந்த பின், மெதுவாக பாரம்பரிய இயற்கை விவசாய முறையற்று மாறி வருகின்றனர் என்று விவசாயியான மாணிக்கவாசகர் கூறுகிறார். கூடுதலாக, நிலம், நீர், காற்று ஆகியவற்றில் தீங்கு விளைவிக்காத, சில செய்முறைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, மீன் குணாபஜலம் அல்லது மீன் வளர்ச்சி ஊக்கி, திருமதி. தங்கம் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல விவசாயிகள் இப்பாரம்பரிய முறையை பயன்படுத்துகின்றனர். ரோஜா, மிளகாய் மற்றும் நெற்பயிர் வளர்ச்சிக்கு இதனை உபயோகிக்கின்றனர். மீன் வளர்ச்சி ஊக்கியின் தயாரிப்பு முறை: சுமார் ஒரு கிலோ மீன் வேஸ்ட் (மீன் சுத்தம் செய்த பின் கிடைக்கும் வீணான பாகங்கள்) மற்றும் ஒரு கிலோ பிளாஸ்டிக் டிராம்மில் வைக்கவும். இதனை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு நன்கு கலக்கி, நிலவின் வைக்கவும்.
பதினைந்து நாட்களுக்கு பின், இதை வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம் (ஒரு லிட்டர் ஏக்கர் நிலத்திற்கு 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் விகிதம் மீன் ஊக்கியை கலந்து கொள்ளவும்).

தெளிக்கும் நேரம்:
அதிக பூச்சி தாக்குதல் உள்ள காலை அல்லது மாலை நேரத்தில் இதை தெளிக்கலாம். நெற் பயிர்களுக்கு இதை தெளிக்கவும் செய்யலாம் அல்லது அரிசி அல்லது கோதுமை உமி அல்லது மண்புழு உரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து நிலங்களுக்கு போடலாம்.
மேலும் ஒரு செய்முறையானது, அரிவாள் மனை பூண்டு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை தயாரிக்க அரிவாள் மனை பூண்டுயை சிறு துண்டுகளாக வெட்டி, 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இத்தண்ணீர் ஒரு லிட்டர் வரை நன்கு கொதிக்க விட்டு, அதில் சுமார் 5 கிராம் பெருங்காயம் நன்கு கரையும் வரை கலக்கவும்.
இக்கரைசல் குளிர்ந்தவுடன், அதை வடிகட்டி பின் தெளிக்க பயன்படுத்தலாம்
ஒரு ஏக்கர் நிலத்திற்கு, நூறு லிட்டர்  தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் விகிதம் நன்கு கலந்து, தெளிக்கவும். இக்கரைசலை தயாரிக்க 10 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இராசயன உரங்களை உபயோகித்தால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 1500 முதல் 2000 ரூபாய் வரை செலவிடவேண்டும். மாறாக மேற்குரிய இயற்கை கரைசல்களை உபயோகித்தல் ஒரு ஏக்கர்க்கு சுமார் 100 ரூபாய் மட்டுமே செலவாகும். “இதை உணர்த்து விவசாயின் குறைந்த செலவுத்திட்டத்திலான இயற்கை இடுபொருட்களை உபயோகிக்கலாம்” என்று திரு மாணிக்கவாசகம் கூறுகிறார்.

தொடர்புக்கு: திருமதி.எம்.தங்கம்
கோழிக்கொட்டுபொதை
குமாரப்புரம் தோப்பு அஞ்சல்
கன்னியகுமரி மாவட்டம் , தமிழ்நாடு
அலைபேசி: 9952607450 மேலும்
முனைவர்.கமலாசனம் பிள்ளை
உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர்
UK - NARDEP
விவேகனாந்தபுரம் , கன்னியாகுமரி 629 702, தமிழ்நாடு
மின்னஞ்சல்: azollapillai@gmail.com
தொலைபேசி: 9387212005


பார்த்தேன்.. வளர்த்தேன்..மலைத்தேன் !தேனீ வளர்ப்பில் திகைப்பான லாபம் !

 

honeybee

அது விளைச்சலைக் கூட்டும். ஆனால், அதற்காக நீங்கள் பெரிதாக செலவு செய்யத் தேவையில்லை. அதே சமயம், அதன் மூலமும் ஒரு வருமானம் நிச்சயமாக உண்டு.

     இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தும் அவை. தேனீக்கள் தான்! அந்த அற்புத ஜீவன்களைப் பற்றி நிச்சயமாக நம் விவசாயிகள் தெரிந்து  கொள்ள வேண்டாமா .. அதைப்பற்றி பயிற்சி அளிக்க வந்தார் மருரையைச் சேர்ந்த ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி. “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பயிற்சியில் தான் தேனீ வளர்ப்புப் பற்றி நாள் தெரிந்து கொண்டேன். தேனீ வளர்ப்பில் என்னைக் கவர்ந்த விஷயம் பெரிதாக முதலீடு உழைப்பு எதுவுமே இல்லாமல் எளிதாக வருமானம் பார்க்க முடியும் என்பது தான் !

 ஆரம்பத்தில் நாம் போடும் முதலீடு மட்டுமே போதும். அதன் பிறகு ஞாயிற்றுக் கிழமை மட்டும் அரைமணி நேரம் தேன் சேகரிக்கும் வேலைப் பார்த்தால் போதும்.. செலவே இல்லாமல் வருமானத்தை வழங்கிக்கொண்டே இருக்கும். இந்த ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டதும் தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக தேனீக்களைப் போலவே பல இடங்களைச் சுற்றிச் சுற்றி வந்தேன். சேகரித்த தகவல்களை வைத்துக் கொண்டு தொழிலில் இறங்கலாம் என்று தன்னம்பிக்கை ஏற்பட்டவுடன் சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியில் உள்ள எங்கள் பண்ணையில் 10 தேனீப் பெட்டிகளுடன் தொழிலைத் தொடங்கினேன். இந்த நான்கு ஆண்டுகளில் 500 தேனீப் பெட்டிகளாக அவை பெருகியுள்ளன என்று ஜோஸ்பின் நிறுத்த.. ஆச்சர்யத்தில் மூழ்கினர் எதிரே நின்றிருந்த விவசாயிகள்.

உழவனின் தேவதைகள்
தொடர்ந்து பேசியவர், “பொதுவாக விவசாயிகளின் வீடுகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் ஒன்றிரண்டாவது இருக்கும். அதே போல தேனீக்களையும் நாம் நிச்சயமாக வளர்க்கவேண்டும். ஆடு, மாடுகளுக்காவது தீவனம் மற்ற பராமரிப்பு பணிகளை நாம்  தான் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தேனீக்களுக்காக நாம் அப்படி எதுவும் கஷ்டப்படத் தேவையில்லை. அவற்றை முறையாக பாதுகாத்து வந்தாலே.. தங்களை தாங்களே பார்த்துக் கொண்டு, உங்களுக்கு வருமானத்தை மட்டும் கொட்டும். உங்கள் வயலின் விளைச்சலையும் தேனீக்கள் கூட்டுவதால்.. வழக்கத்தைவிட மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.

தேனீ வளர்ப்பதற்கு என்று தனியாக இடம் தேடி அலைய வேண்டாம். மரத்தடி, வரப்பு ஓரம், வீட்டுத் தோட்டங்கள், மொட்டை மாடி என்று கிடைக்கும் இடத்தைக் கொடுத்தால் போதும். தேனீக்கள் அதிலேயே தங்கிக் கொண்டு.. தாங்களும் வாழ்ந்து.. நம்மையும் வாழ வைக்கும்.

தேன், ஓர் அற்புத உணவு. நோயை விரட்டும் சக்தி கொண்டது. இந்த உலகத்தில் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கக்கூடிய ஓர் உணவுப் பொருள் உண்டு என்றால் அது தேனாகத்தான் இருக்க முடியும். மண்புழு, ‘உழவனின் நண்பன்’ என்ற சொல்லப்படுகிறது. தேனீக்களும் உழவர்களுக்கு உற்ற நண்பன் தான் சொல்லப்போனால், அவற்றை உழவனின் தேவதை என்றும் அழைக்கலாம். காற்று வெளியில் பறந்து பறந்து சென்று, எந்தவித கைமாறும் எதிர்பாராமல் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் உதவி வருகின்றன தேனீக்கள்.

3 ஆயிரம் கோடி மகசூல் இழப்பு !
தேனீக்கள் தங்களது உணவுக்காக மலர்களில் இருந்து மதுரத்தை சேகரிக்கின்றன. அப்போது, தேனீக்களின் உடலில் மகரந்தத்தூள் ஒட்டிக்கொள்கிறது. பின்பு புதிதாக ஒரு மலருக்கு மதுரத்தைத் தேடிச் செல்லும் போது, முந்தைய மலரின் மகரந்தத்தூள், புதிய மலரின் சூல் முடியை அடைந்து கருவுறச் செய்கிறது. விதைப் போடுவது.. தண்ணீர் பாய்ச்சுவது.. உரம் கொடுப்பது இது மட்டும் தான் விவசாயம் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். இவற்றை செய்து விட்டாலே விளைந்து குவிந்து விடும் என்று பேசிக்கொள்கிறோம். ஆனால், இந்தியாவில் நாம் பயிரிடும் மூன்றில் ஒரு பங்குப் பயிர்கள் தேனீக்களை நம்பித்தான் இருக்கின்றன. அவை மட்டும் இல்லையென்றால், நாம் என்ன தான் பாடுபட்டாலும் அந்த மூன்றில் ஒரு பங்குப் பயிர்களின் மூலம் காய், கனிகள் நமக்குக் கிடைக்காது. தேனீக்களின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடந்தால் தான் நமக்கு மகசூல் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டால், தேனீக்களின் மீது மரியாதை கூடிவிடும்.

      தேனீக்களின் மூலம் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கையினால் பழப்பயிர்களில் 50 சதவிகிதம் மகசூல் அதிகரிக்கிறது. எண்ணெய் வித்துப் பயிர்களில் 80 சதவிகிதம் வரையிலும், விளைச்சல் கூடுதலாக கிடைக்கின்றன. மேலும் காய்கறி, பருத்தி, சூரியகாந்தி, எள், கம்பு, சோளம் மற்றும் பயறு வகைப் பயிர்களில் இரட்டிப்பு மகசூல் கிடைக்கிறது. தேனீ வளர்ப்பதால் தேன் மட்டுமல்லாமல் தேனி விஷம் என்று பலப்பொருட்கள் கிடைக்கின்றன. இப்படி தேனீக்கள் எத்தனையோ வழிகளில் நமக்கு உதவி வந்தாலும், அவற்றை பெரும்பாலும் நாம் மதிப்பதில்லை. இதன் காரணமாக அவற்றின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை, தேனீக்களின் எண்ணிக்கைக் குறைவதன் காரணமாக ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மகசூல் இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள். தேனீக்களைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் என்று விவரிதத ஜோஸ்பின், தேனீ வளர்ப்பு மூலம் தான் பெற்ற அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார்.

ஏக்கருக்கு இரண்டு முதல் ஐம்பது வரை !
“ஆரம்பத்தில் 10 பெட்டிகளுடன் நான் தேனீ வளர்ப்பில் இறங்கியது. மா மரங்கள் பூ பூக்கும் பருவத்தில் தான் பெட்டியை வைத்தவுடன் தேனீக்கள் களத்தில் இறங்கிவிட்டன. அந்த ஆண்டு அக்கம் பக்கத்து தோட்டங்களில் மா விளைச்சல்  குறைந்து  போனது. ஆனால், எங்கள் தோட்டத்தில் கூடுதல் மகசூல் கிடைத்ததுடன், அல்போன்சா மாம்பழங்கள் சுவையாகவும் இருந்தன. முதல் முறையிலுயே வெற்றிக் கனியை பறித்து விட்டதால் தேனீயைக் கூட்டினேன். இதன் மூலம் பல அனுபவங்கள் கிடைத்தன.

 ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் உள்ள பயிர்களின் விளைச்சலைக் கூட்ட ஏக்கருக்கு இரண்டு தேனீப் பெட்டிகள் வைக்கலாம். தேனீ வளர்ப்பை முழு நேரத்தொழிலாக செய்ய விரும்புபவர்கள் ஏக்கருக்கு 50 பெட்டிகள் வரை வைத்து வளர்க்கலாம். தேனீ வளர்ப்பதற்கு முன்பு சரியான இனத்தைத் தேர்வு செய்யவேண்டும். இத்தாலியத் தேனீ சூரியகாந்தி, கம்பு, சோளம் போன்ற மதுரம் அதிகம் கிடைக்கும் பயிர்கள் உள்ள இடங்களில் மட்டுமே  வளர்க்க ஏற்றது. இந்தத் தேனீ 20 நாட்களுக்கு ஒரு முறை இடம் விட்டு இடம்  செல்லும் எனவே இதை நகரும் தேனீ என்று சொல்கிறார்கள். வழக்கமாக இதை வைத்துச் சமாளிப்பது சற்று சிரமம். ஆனால், நமது இந்தியத் தேனீ அடக்கமானது, எல்லாவித சூழ்நிலையிலும் வாழும். பூக்கள் குறைவாக இருந்தால் கூட தாக்குப் பிடிக்கும்.
பொதுவாக தேனீக்களுக்கு ஏற்ற மாதம் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள ஐந்து மாதங்கள் தான். காரணம், இந்த மாதங்களில் பூக்கள் அதிகமாக பூக்கும். அதனால் தான் ‘மார்கழி மாதத்தில் புல்லும் பூக்கும்’ என்று சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். தேனீக்கள் தங்களால் முடிந்த அளவு மதுரத்தைச் சேகரித்து வந்து அதை தேனாக மாற்றும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டும் தேன் சேகரிப்பு மிகவும் குறைவாக இருக்கும். தீபாவளி நேரத்தில் அடைமழை பெய்யும் போது தேனீக்களுக்கு உணவு கிடைக்காது. அந்தச் சமயத்தில் ஒரு பங்கு சர்க்கலைரை இரண்டு பங்கு தண்ணீரில் கலந்து ஒரு கொட்டாங்குச்சியில் வைத்தால் அதை உண்டு கொள்ளும். பின்பு வானம் வெளிவாங்கியவுடன் தேனீக்கள் உணவு தேடிச்செல்லும் என்று சொன்ன ஜோஸ்பின் வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பட்டியலிட்டார் (பார்க்கப் பெட்டிச் செய்தி).

      தேனீ வளர்ப்பில் இறங்கும் முன்பாக ஏற்கெனவே தேனீ வளர்த்து வருவோரின் பண்ணைக்குச் சென்று சில வேலைகள் செய்து பழகிக் கொள்வது நல்லது. இதன் மூலம், ‘தேனீக்கள் கொட்டிவிடும்’ என்ற பயம் தெளிவதோடு, உணர்வுப் பூர்வமாக அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

      ‘தேனீக்கள், மனிதர்களைக் கொட்டினால் நல்லது’ என்ற தகவல் பலருக்கும் தெரியாது. முடக்கு வாதம், நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பல நோய்கள் இதன் மூலம் குணமடைவமதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் நாம் சிறிதளவு தேன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.  இருமல், சளி, ரத்தசோகை போன்றவை ஏற்படாது. இதயத்துக்கு வலிமை தரும். நினைவாற்றல் பெருகும். பற்களையும், எலும்புகளையும் வலுப்படுத்தும். மூல நோயைக் குணமாக்கும். முதுமையைத் தள்ளிப்போடும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், தேன், மனிதர்களுக்குக் கிடைத்த மாமருந்து !
தேனிலும் விஷம்
அதே சமயம், இப்போதெல்லாம் தேனில் கூட விஷம் கலந்து விடுகிறது. இதற்குக் காரணம் அளவுக்கு மீறி நம் வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் பூச்சி மருந்துகளைத் தெளிப்பதால் மதுரம் சேகரிப்பதற்காக மலர்களைத் தேடிச் செல்லும் தேனீக்கள், விஷத்தையும் சேர்த்து உண்ணுகின்றன. இதனால் தேன்கூடு வரை அந்த நஞ்சு வந்து சேர்ந்து, ஒட்டு மொத்த தேனீ குடும்பமும் அழிந்து போகிறது. முன்பு பரவலாக தோட்டங்கள் தோறும் இயற்கையாகவே தேன்கூடுகள் இருக்கும்.  இப்போது இயற்கையாக தேன்கூடுகளைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. இப்போது எங்காவது ஒரு தோட்டத்தில் தேன்கூடு இருந்தால், அந்தத் தோட்டத்தில் விஷம் தெளிக்காமல், இயற்கையைச் சிதைக்காமல் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம் என்று சரியாகச் சுட்டிக்காட்டிய ஜோஸ்பின்.

 “இயற்கை விவசாயம் செய்பவர்களின் தோட்டத்தில் அமுதக்கரைசல், பஞ்சகாவ்யா.. போன்றவை இருப்பது போல இரண்டு தேனீப் பெட்டிகளும் இருப்பது நல்லது. அது தான் அவர் முழுமையான இயற்கை விவசாயி என்பதை யாரும் சொல்லாமலே எடுத்துக் காட்டும்” என்று வளமான எதிர்காலத்துக்கும்.. அத்தோடு வருமானத்துக்கும் வழிகாட்டி அமர்ந்தார்.

 மூன்று நாட்களாக நடந்து வந்த பயிற்சியின் நிறைவுக்கட்டம், நிறைவுரையாற்ற நம்மாழ்வார் எழுந்த போது, ஈர விழிகளோடு உற்று நோக்கினார்கள் விவசாயிகள்!

மாதம் தோறும் 17 ஆயிரம் ரூபாய்
‘ஒரு பெட்டியில் இருந்து மாதம் தோறும் சராசரியாக இரண்டரை கிலோ தேன் கிடைக்கும். ஒரு ஏக்கரில் உள்ள 50 பெட்டிகளில் இருந்து சராசரியாக 100 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் இன்றைய விலைப்படி கிலோ ரூ. 170க்கு விற்பனையாகிறது. இதன்படி 17 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். நான் லாபம் என்று சொல்வதற்கு காரணம் தேனீ வளர்க்க ஆரம்பத்தில் பெட்டி வாங்க மட்டும் தான் நாம் முதலீடு செய்ய வேண்டியது வரும். பிறகு வாழ்நாள் முழுவதும் தேனீக்கள் லாபம் கொடுத்துக்  கொண்டே இருக்கும். இதற்காக நாம் எந்த இடுபொருட்களும் வாங்கவேண்டாம். வேலை செய்ய ஆள் கிடைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் அரை மணி நேரம் தேனை சேகரிக்க ஒரு ஆள் இருந்தால் போதும்.. மற்ற நேரங்களில் எறும்பு, கரப்பான், அந்துப்பூச்சிகள் தேனீப் பெட்டிக்குள் புகுந்து விடாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்து வைக்கவேண்டும்.. அவ்வளவு தான் !

      தேனீப் பெட்டி ஒன்றின் விரை ரூ. 850. தேன் எடுக்கும் இயந்திரத்தின் விலை ரூ. 800. தேனீக்களை விரட்டப் பயன்படும் புகைப்பான் ரூ. 150 எத்தனை பெட்டிகள் இருந்தாலும் தேன் எடுக்கும் இயந்திரம் மற்றும் புகைப்பான் ஆகியவை ஒவ்வொன்றும் இருந்தாலே போதுமானது.
வகை வகையாக
உலகம் முழுவதும் பலவகைத் தேனீக்கள் உள்ளன. இந்தியாவில் மலைத்தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ, இத்தாலியத் தேனீ என ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. இதில் இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ மட்டுமே மனிதர்களால் பராமரித்து வளர்க்கப்படக் கூடியவை.

 ஒரு தேனீ குடும்பத்தில் ஒரு ராணித் தேனீயும், நூற்றுக்கணக்கான ஆண் தேனீயும், ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும். இதில் ராணித தேனீதான் கூட்டுக்குத் தலைவி. இது மூன்று ஆண்டுகள் வரை வாழும். முட்டை இடுவது மட்டும் தான் இதன் முக்கிய வேலை. இனப்பெருக்கம் செய்வதுதான் ஆண் தேனீக்களுக்கு முக்கிய வேலை. இதன் வாழ்நாள் இரண்டு மாதங்கள். வேலைக்காரத் தேனீக்கள் அயராமல் பாடுபட்டுக்கொண்டே இருக்கும். இவையும் இரண்டு மாதங்கள் தான் வாழும். தேன் சேகரித்து வருதல், கூட்டைப் பராமரித்தல், இளம் தேனீக்களுக்கு உணவு ஊட்டுதல் என அத்தனை வேலைகளையும் இந்த  வேலைக்காரத் தேனீக்கள் தான் செய்யும்.  உணவைச் சேகரிப்பதற்காக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை இவை செல்லும்.


மண்புழு உரத்தால் அதிக விளைச்சல்

 

vermicompost

சுபாஷ் பாலேக்கர் அவர்கள் கூறுகையில், மண்புழுக்கள், அள்ள அள்ளக் குறையாமல் மண்ணில் பொதிந்து கிடக்கும் சத்துக்களை வெளியே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்யும் ஆட்கள்  தான் இந்த மண்புழுக்கள்.
மண்புழுக்கள் இருட்டை விரும்பும். அதனால் தான் மண்ணின் அடி ஆழத்தில் சென்று வாழுகின்றன. மேல் மட்டத்தில் உணவும், வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையும் இல்லாத போது அவை மண்ணுக்குள் புகுந்து விடுகின்றன. மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் நாட்டு மாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு.
இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்து விட்டாலே போதும். நம் பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும். பொழிகின்ற மழை நீர், இதன் காரணமாக உங்கள் நிலத்தில் இறங்கி நீர்மட்டம் உயரும். பயிருக்கு வேண்டிய சத்தான உரத்தை ஒரு பக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல், நீர்ச்சேமிப்புக்கும் அவை உதவுகின்றன. மண்புழுக்களின் உடல் மீது நீர்ப்பட்டால் அதுவும் உரமாக மாறி விடும். இதை வெர்மி வாஷ் என்று சொல்கிறார்கள். பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் திறனும், அதிகமாக காய்ப்பிடிக்க வைக்கும் தன்மையும் இந்த வெர்மி வாஷீக்கு உண்டு.
மண்ணில் இயற்கையாகவே உள்ளச் சத்துக்களை மண்புழுக்கள் மேலே கொண்டு வந்து சேர்க்கின்றன. சுமார் 15 அடி ஆழம் வரை அவை சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன. 7 அடி ஆழத்தில் தழைச்சத்து உள்ளது. அடியில் பாஸ்பரஸ் இருக்கிறது. 11 அடியில் சாம்பல் சத்து இரும்பு, 10 அடியில் கந்தகம் எனச் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மேலேக் கொண்டு வந்து சேர்க்கின்ற உன்னதப் பணியினை இந்த மண்புழுக்கள் செய்கின்றன.
ஒரு சதுர அடி நிலத்தில் நான்கு மண்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கரில் 2 லட்சம் எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருக்கும். ஏக்கருக்கு 200 டன் கரும்பு, 120 குவிண்டால் நெல், 120 குவிண்டால் கோதுமை, 120 குவிண்டால் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்கள், 40 முதல் 80 டன் வரை காய்கறி, பழங்கள் என்ற எல்லாமும் விளைந்து கொழிக்கும்.
மண்புழுக்களை அதிகமாகப் பெருக்கவேண்டும் என்றால் நாட்டுப் பசுமாடு அவசியம். நாட்டு மாட்டுச் சாணத்தில் மட்டுமே மண்புழுக்கள் அதிக அளவில் பெருகும். நாட்டு மாடு நாள் ஒன்றுக்கு 11 கிலோ சாணம் கொடுக்கும். இதை வைத்து 30 ஏக்கர் நிலம் முழுக்க விவசாயம் செய்ய முடியும்.
மாட்டின் சிறுநீர், நாளாக நாளாகத்தான் அதிகப் பலன் கொடுக்கும். பொதுவாகச் சாணத்தை 7 நாட்களுக்குள் பயன்படுத்தினால் தான் பலன் உண்டு. ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 லிட்டர்ள கோமியம் இருந்தாலே போதுமானது.


மதிப்பூட்டப்படாத பயிர் உற்பத்தி பயனற்ற உற்பத்தியாகும் 

 

valueaddition

விவசாயிகள் வருவாயை அதிகப்படுத்தும் வழிகளை  தேடிக்கொண்டுள்ள சமயங்களில், பதட்டப்படாத மற்றும் இறுதி நிலை விவசாயிகளுக்கு, உள்ளூர் மதிப்பூட்டால் மற்றும் வேளான் உணவு உற்பத்தி முக்கியமானதாகும். இது விவசாயத்தின் எதிர்பலனை காட்டிலும் புதிய விற்பனை வழிகளை இம்மதிப்பூட்டுதல் ஏற்படுத்துவதுடன், விவசாயிகளுக்கு ஓர் அங்கீகாரத்தை பெற்று தருகிறது. மேலும் மதிப்பூட்டல் காரணமாக, வருடம் முழுவதும் அப்பொருட்களில் கிடைக்கும் தன்மை இருக்கிறது.

உள்ளூர் பொருளாதாரம் :
வழக்கமாக, மதிப்பூட்டலுக்கு தேவையான இருபொருட்கள், வேலை ஆட்கள் ஆகியவை உள்ளூரிலேயே பெறப்பட்டு, அப்பொருள் மதிப்பூட்டப்பட்ட பின் உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மூக்கியமாக இதில் பெறப்படும் வருவாய், உள்ளூர் பொருளாதார சூழ்நிலையிலேயே சுழன்று கொண்டு இருக்கும். உற்பத்தியில் வளர்ந்து வரும் பதப்படுத்தும் வசதியானது. பல இடுபொருட்களை குறைந்த விலையில் தருவதுடன், பல மக்களுக்கு வேலை வாய்ப்பையும் தருகிறது.

பதப்படுத்தும் மையங்கள் :
கிராமப்புறங்களில் அறுவடைக்கு பின் பதப்படுத்துதல் மற்றும் பிற பிரச்சனைகளின் காரணமாக, அறுவடைக்கு பின் பதப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்ந்த வேளான் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பின் சார் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகளும், பெங்கæர் காந்தி வேளான் அறிவியல் நிலையமும் இணைந்து கிராமப் புறங்களில் பின் சார் மையங்கள் அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
முனைவர். B. ரங்கண்ணா கூறகையில், பின் சார் தொழில்நுட்ப மையமே, “வேளான் - பதப்படுத்தும் மையங்கள் அமைத்ததில் நாட்டின் முன்னோடி” என்று கூறுகிறார்.
தெற்கு கர்நாடகத்தில் மட்டும் தற்போது 16 மையங்கள் நிறுவப்பட்டு, உற்பத்தி பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர பொண்கள் சமய உதவிக் குழுக்களின் மூலம் மேலும் 6 மையங்கள் நிர்வாகிக்கப்படுகிறது. இதில், அங்குள்ள கிராமங்களின் பயிரிடுகலுக்கு தகுந்தவாறு தேவையான பின் சார் பதப்படுத்தும் கருவிகள் உள்ளன. இவை அனைத்து மையங்களும் பல்வேறுபட்ட நிதிவுதவி மையங்களின் மூலமாக உதவி செய்யப்பட்டு விவசாய கூட்டுறவு சங்கம், கிராம பஞ்சாயத், இளைஞர் சங்கம் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது.

இறுதி நிலை இலாபம் :
இக்கருவிகளை வைக்க விவசாயிகளே ஓர் இடத்தை முடிவு செய்து, அதை வாடகைக்கு கொடுத்துள்ளனர். பொருட்களின் விலை பட்டியல், வரும் இலாபத்தை பொறுத்து விவசாயிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. இம்மையங்கள் வேலை வாய்ப்பு வழங்குவதுடன் வருடம் முழுவதும் லாபம் தரக்கூடியதாக இயங்குகிறது.
அங்குள்ள விவசாயிகளுக்கும், குழுக்களுக்கும், நமது அறிஞர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும் பெண்கள் குழுக்களுக்கு, மதிப்பூட்டல் குறித்த பல பயிற்சிகளை பல்வேறு பொருட்களுக்கு அழிக்கப்படுகிறது.
பெண்கள் சுய உதவிக் குழுகள் அனைத்தும் உள்ளூரில் கிடைக்க்கூடிய அடுபொருட்களை கொண்டு குறைந்த செலவில் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் மக்களின் புரத - கலோரிகள் அதிகரிக்க உதவுகின்றனர். இதற்கு ஒவ்வொரு குழுக்களுள் இருந்தும் ஒவ்வொருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மதிப்பூட்டல் பொருட்களின் பயிற்சியளிக்கப்படுகிறது.
மூலப் பொருட்கள் :
தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருளானது, அந்த இடத்தில் கிடைக்க கூடிய மூலப் பொருட்களை சார்ந்ததாகும். மேலும் அதை உபயோகிக்கும் மக்கள் மற்றும் அருகாமையில் உள்ள சந்தையை சார்ந்ததாகும்.

தொடர்புக்கு :
முனைவர். B. ரங்கண்ணா,
பேராசிரியர் மற்றும் பொறியியர் ஆராய்ச்சியாளர்,
அறுவடை பின் சார் தொழில்நுட்ப மையம்,
வேளான் அறிவியல் பல்கலைக்கழகம்.
GKVK,
பொங்கæர் - 560065.
மின்னஞ்சல் : rangannab @gmail.com
தெலைப்பேசி : 080 - 23330153345

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008